Thursday, November 02, 2006

கேலிக் கூத்து !!!

கேட்டீங்களா நீங்க? நம்ம மருத்துவர் அய்யா சொல்றார் "இனிமேல் தமிழகத்தில் பாமக ஒரு பொருப்புள்ள எதிர் கட்ச்சியா செயல் படும்". அது எப்படினு கொஞம் யோசனை பண்ணி பாத்ததுல எனக்கு வந்த தலைவலி இந்தப் பதிவை படிக்கற மத்தவங்களுக்கும் வரட்டுமேன்ற ஒரு நல்லெண்ணத்துல (ஹிஹி...ரொம்பவே நல்ல எண்ணம் தான் இல்ல ?!?) உருவானது தான் இந்த இடுகை (அதாங்க post).

எனக்கு உள்ள சந்தேகம் என்னன்னா...

  1. பாமக சார்பா தேர்தல்ல நின்னு வெற்றி பெற்ற எல்லாரும் இப்போ திமுக அரசுக்கு வெளியில் இருந்து தரும் ஆதரவை விலக்கிப்பாங்களா ? (அட எதிர் கட்சினா அப்படித் தானுங்களே ?)
  2. மத்தியில் ஆளும் காங்கிரசுடன் கூட்டு வைத்திருக்கும் திமுக எம்பிக்கள் சிலரோடு சேர்த்து பாமகவினரும் தான மந்திரி பதவி வகிக்கராங்க. அப்ப பாமக காங்கிரஸ் கட்சிக்குத் தரும் ஆதரவு என்னாகும்? இப்போ மத்தியில மந்திரியா இருக்கும் பாமகவினர் பதவியை ராஜினாமா செய்வாங்களா?

எது எப்படியோ மேல சொன்னபடி நடந்தாத்தான் "பொறுப்புள்ள எதிர் கட்சி" அப்படினு அய்யா சொன்னதுக்கு ஒரு அர்த்தம் வரும்னு நினைக்கிறேன். அப்படி எதுவும் நடக்கலைனா அது கேலிக் கூத்து தான ? (யப்பா...ஒரு வழியா தலைப்புக்கும் எழுதின விஷயத்துக்கும் ஒரு சம்மந்ததை உண்டு பண்ணியாச்சுடா சாமி) இதைப் படிக்கிற நீங்க என்ன நினைக்கறீங்கனு பின்னுட்டம் போட்டு சொல்லுங்கள்...

14 comments:

Anonymous said...

idhu oru padhivu. idhukku pinnoottam oru kedu.

மதுசூதனன் said...

வாங்க அனானி...

துணிவோட உங்க வெறுப்பை காமிச்ச நீங்க, உங்க பெயரையும் போட்டிருந்தால் இன்னும் சந்தோஷமா இருந்திருப்பேன்.

லக்கிலுக் said...

மேலே சொன்ன அனானி சரியாகவே சொல்லியிருக்கிறார் என்று நினைக்கிறேன்.

துணிவுடன்
லக்கிலுக்

மதுசூதனன் said...

வாங்க லக்கி. உங்களோட பதிவுகளையுபம், பிற பதிவுகளில் நீங்கள் போட்ட பின்னூட்டங்களையும் நான் நிறைய படிச்சிருக்கேன். உண்மைய சொல்லணும்னா உங்களோட (உங்களோடது மட்டும் இல்லை) பதிவை எல்லாம் படிச்ச பின்னாடி தான், நம்மளும் ஒரு பதிவு எழுத ஆராமிக்கலாம் அப்படினு யோசிச்சேன்.

என்னோட பதிவுலை கருத்து சுதந்திரம் நிச்சயம் பாதுகாக்கப்படும். அதனால, எவ்வளவு சொல்ல முடியுமோ சொல்லுங்க...

பின்னூட்டத்திற்கு நன்றி.

சிநேகிதன் said...

//மேலே சொன்ன அனானி சரியாகவே சொல்லியிருக்கிறார் என்று நினைக்கிறேன்.

துணிவுடன்
லக்கிலுக்//

அப்பாவிகளின் அடிவயிற்றில் கைவைக்கும் திமுகவின் மடிப்பாக்கம்
பூத் ஏஜண்ட்
லக்கிலுக்

என்று சொல்லியிருந்தால் நன்றாக இருக்கும்.

Anonymous said...

//சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெரிய மனிதன் இல்லை//

பதிவை படிச்சாலே தெரியுது

மதுசூதனன் said...

//பதிவை படிச்சாலே தெரியுது//

வளந்த நீங்க எல்லாம் வழி காமிச்சா நாங்களும் கொஞம் வளருவோம்லா...

மதுசூதனன் said...

//அப்பாவிகளின் அடிவயிற்றில் கைவைக்கும் திமுகவின் மடிப்பாக்கம்
பூத் ஏஜண்ட்
லக்கிலுக்

என்று சொல்லியிருந்தால் நன்றாக இருக்கும்.//

லக்கி / திமுக மேல உங்களுக்கு அப்படி என்ன கோவம் சிநேகிதரே? சொன்னா நாங்களும் கொஞம் தெரிஞ்சிக்குவோம்ல...

Hariharan # 26491540 said...

பொதுவாத் தேர்தல்னு போட்டிருக்கீங்க சட்டசபையில் 16/18 எம்.எல்.ஏ இருக்காங்க

நாடாளுமன்றத்தில் 6பேர் இருக்காங்கன்னு நினைக்கிறேன்.

அரசியல் கட்சிகளை விமர்சனம் செய்யும்போது கொஞ்சம் facts & details போட்டு முடிஞ்சா வெரிபை செஞ்சுட்டு பதிவு போடுங்க இல்லைன்னா டின்னு கட்டி கும்மிடுவாங்க!

திட்டு விழும்போது அரசியல் பேசுனா இதெல்லாம் சகஜம்னு எடுத்துக்குங்க!

எனது இலவச ரெண்டு டிப்பு

மதுசூதனன் said...

அதுல பாருங்க ஹரி, நமக்கு இந்த விஷயம் எல்லாம் கொஞ்சம் புதுசு. யார் என்ன வேணாலும் திட்டட்டும், அத பத்தி எனக்கு ஒண்ணும் கவலை இல்லை. என்னோட நோக்கம், நான் நினைக்கும் ஒரு விஷயத்தைப் பத்தி இங்க எழுதி மத்தவங்க என்ன நினைக்கறாங்க அப்படிங்கறதை தெரிஞ்சிக்கத் தான்.

உங்க யோசனைக்கு நன்றி, இனி நிச்சயம் அதை பின்பற்ற முயற்சி செய்கிறேன். பின்னுட்டத்திற்கு நன்றி ஹரி.

Hariharan # 26491540 said...

அதுவரையில் விமர்சனப்பதிவிடாமல் அரசியல் பதிவுகளை / விஷயங்களை படித்து சேகரியுங்கள்.

பின்னூட்டமிடுவதோடு லைட்டான சப்ஜக்டா தொட்டுப் பதிவு போடுங்கள்.

பாமகவுக்கு 16 ஆ இல்லை 18 எம்.எல்.ஏவான்னா சந்தேகம் கூடச் சரி. ஆனா எம்.எல்.ஏவே இருக்காங்களான்னு கேட்டுட்டு பாமகவை சாடிப் பதிவுபோடுவது விமர்சகனுக்கு வீக் பாயிண்ட் ஆக அமைகிறது என்பது எனது எண்ணம்.

கோவித்துக்கொள்ள மாட்டீர்கள் என நினைக்கிறேன்!

baratharasu said...

சீக்கிறம் உங்களை பாப்பான்னோ பாப்பர அடிவருடின்னோ கட்டம் கட்டிருவாங்க , ஏன்னா ராமதாஸயில்ல தாக்கிருக்கீங்க ,

பரதரசு

மதுசூதனன் said...

ஹரி,

நீங்க சொல்ற விஷயத்தை நான் அப்படியே ஏத்துக்கறேன். இதுல கோவப்பட எதுவுமே இல்லைனு தோணுது. உங்கள் அறிவுரைக்கு நன்றி.

மதுசூதனன் said...

//சீக்கிறம் உங்களை பாப்பான்னோ பாப்பர அடிவருடின்னோ கட்டம் கட்டிருவாங்க , ஏன்னா ராமதாஸயில்ல தாக்கிருக்கீங்க//

பரதராசு,

நியாயமான கேள்வி கேட்டா உடனே பாப்பார அடிவருடியா ? அப்படி தான் என்றால், இருந்துவிட்டு போகிறேனே. சொல்ப்வர் எதை வேண்டுமானாலும் சொல்லலாம், உண்மையில் நாம் யாரென நமக்குத் தெரியும். இதை மற்றவருக்குப் புரியவைக்க முற்படுகையில் தான் பிரச்சினைகள் உருவாகுகின்றன.