Thursday, November 02, 2006

கொள்ளை நோய்கள் - ஒரு ஹாலிவுட் தனமான பார்வை

சமீப காலமாக இந்தியா முழுவதும் டெங்கி, சிக்குன் குனியா போன்ற பலதரப்பட்ட நோய்கள் 3500க்கும் மேலான உயிர்களை பலி வாங்கியுள்ளது. இந்த ஆட்கொல்லிகளின் வெறியாட்டம் இன்னும் ஓய்ந்தபாடில்லை. இது இப்படி இருக்க, திடீரென்று என்னுள் இந்த சந்தேகம் எழுந்தது. இவையனைத்தும், ஏதேனும் ஒரு பயங்கரவாத அமைப்பின் சதியாக இருக்குமோ என்பது தான் அது. இன்றக்கு பல நாட்டு ராணுவங்களும் மிகுந்த ஆர்வத்துடன் ஆராயும் ஒரு விடயம் தான் உயிரியல் தாக்குதல் (ஆங்கிலத்தில் bio-warfare). இந்தியாவில் நடந்துவரும் இவ்வளவு கோரச்சாவுகளுக்கும் இந்த புதிய விதமான தாக்குதல் ஏன் ஒரு காரணமாக இருக்ககூடாது? என்னடா இவன் ஹாலிவுட் சினிமா பாணியில் ஏதோ கதை சொல்கிறானே என்று எண்ண வேண்டாம். இப்பட்யும் இருக்குமோ என்று ஒரு யூகம் தான். ஆனால் இத்தகைய யூகங்களும் கற்பனைகளும் தானே இன்று நாம் அனுபவிக்கும் பல சவுகரியங்களை நமக்கு உருவாக்கித் தந்துள்ளன.

இந்தக்கோணத்தில் நான் இதுவரை எந்த ஒரு செய்தியும் வெளியானதாக நான் கேள்விப்படவில்லை.

சற்றே சிந்திப்பார்களா சம்பந்தப்பட்டவர்கள்?!?!?

No comments: