Saturday, December 09, 2006

கேளிக்கை வரி விலக்கு - வேண்டுமா வேண்டாமா ?

நம்ம கலைஞர் ஆட்சிக்கு வந்ததும் வராததுமா, தமிழை வளர்கிறேன் பேர்வழி என்று தமிழில் பெயருள்ள திரைப் படங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு தருவதாய் அறிவித்தார். இவர் சொன்னது தான் தாமதம், திடீர்னு எல்லா படத்தோட பெயரும் மாறிப்போச்சுது.

இப்போ இங்க முக்கியமான கேள்வி என்னான்னா...இப்படி ஒரு வரி விலக்கு தேவையா இல்லையா என்பதுதான். நம்ம நாட்டுல எக்கச்சக்கமா பணம் பண்றவங்க பட்டியலை எடுத்துப் பார்த்தா அதுல சினிமா காரங்களுக்கு நிச்சயம் ஒரு தனி இடம் உண்டு. இதுல நடிகர்கள் மட்டும் இல்லை, இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள் என அத்தொழில் துறையினைச் சார்ந்த பலரும் அடக்கம். எனக்குத் தெரிந்த வரையில் இவர்களில் பெரும்பாலானோர் கோடீஸ்வரர்கள் தாம். அப்படி இருக்க, தமிழில் பெயர் வைத்தால் வரி விலக்கு என்பது சற்று அபத்தமாகவே தோன்றுகிறது. இந்த வரி விலக்கானது கோடம்பாக்கத்தில் ஒரு வேளை சோற்றுக்காக மிகவும் சிரமப்படுவோருக்கு இதனால யாதொரு நன்மையும் இருப்பதாய் தெரியவில்லை. அப்படியானால் இந்த வரி விலக்கு யாருக்காக?

இப்படி அனாமத்தாக பணம் வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கும் இவர்களுக்கு எதற்கு மேலும் மேலும் வரி விலக்கு எதற்கு என்று சுத்தமாக புரியவில்லை. இவர்களில் எத்த்னை பேர் ஒழுங்காக தங்கள் வருமான வரியை செலுத்துகின்றனர் ?இதைப் போன்ற வரி விலக்கிற்கு பதிலாக இதே துறையில் வறுமையில் வாடுவோருக்கு ஏதாவது செய்திருக்கலாமே?

என் கருத்தை நான் சொல்லி விட்டேன். உங்கள் கருத்தினை பின்னூட்டங்கள் வாயிலாக நீங்கள் சொல்லுங்கள்...

4 comments:

விடாது கருப்பு said...

எஸ்விசேகர் என்ற பாப்பான் சட்டசபையில் எங்க ஜாதியானுக்கு படம் எடுக்க உதவி வேண்டும்னு கேட்டது தப்பு தானே?

மதுசூதனன் said...

பெரியார் படத்துக்கு ஏன் வரி விலக்கு என்பது என் கேள்வி இல்லை. தமிழில் பெயர் வைத்தாலே வரி விலக்கு என்பது தேவையா இல்லையா என்பது தான். இதில் பார்பனன் எங்கிருந்து வந்தான் என்று எனக்கு புரியவில்லை. ஒரு சில பார்பனர்களால் நீங்கள் துன்ப்பப் பட்டிருக்கலாம் அதற்காக எங்கு பார்த்தாலும் பார்பனீயம் தானா ? அதை விடுத்து, பதிவில் சொன்ன கேட்ட கேள்விக்கு உங்கள் பதிலை கூறுங்கள்.

Anonymous said...

Yes, Tax-relief for films named in tamil is a very bad idea. Here we are taxing the poor people on their rice, tea etc but we give numerous exemptions and loop holes for the rich to exploit them. We should have a flat-tax for all and no tax for low-income people.

மாரி said...

நண்பரே! உங்களுக்கும் ரவிக்கும் (http://thamizhthendral.blogspot.com/2006/12/blog-post_116602261079016612.html
)பின்னூட்டம் போடுகிறேன் என்று கிளம்பி அதன் நீளத்தை பார்த்து, அந்த பின்னூட்டத்தை ஒரு பதிவாகவே போட்டு விட்டேன். பின்னூட்டத்தை பார்க்க உங்களை அலைய விடுவதற்கு மன்னிக்கவும்.

http://ennathannadakkum.blogspot.com/2006/12/blog-post.html