Saturday, December 09, 2006

கெளம்பிட்டாய்ங்கயா கெளம்பிட்டாய்ங்கயா...

இப்பத்தான் மகாராஷ்டிர மாநிலத்துல ஏகப்பட்ட வன்முறைகள் நடந்து ஓய்ஞ்சது. அதுக்குள்ள நம்ம ஊர் கார பயலுவ ஆரமிச்சிட்டாய்ங்க.

ஒரு பெரியார் சிலைய ஏதோ ஒரு மூதேவி உடைக்கப் போக இப்ப என்னடான்னா ஒவ்வொரு இடமா செலக்சன் பண்ணி ராமரையும், வினாயகரையும் வம்புக்கு இழுக்க ஆரமிச்சுட்டாணுவ. அட கருமம் சிலைய மட்டுமா உடைக்கராய்ங்க... அக்கம் பக்கம் எவனாச்சும் ஒரு குடிமி வெச்ச இளிச்சவாயன் கிடைச்சா அவன் மண்டையையும் சேர்த்தில்ல உடைக்கரான்.

எனக்கென்னவோ எந்த ஒரு சாதாரண பிராமணன் போய் பெரியார் சிலையய் உடைச்சதா தோணலை. அதே போல கீழ நான் சொல்லியிருக்குற கோயில் வன்முறைகளும் பெரியார பெரிசா மதிக்கிற யாரும் செஞ்சதா தெரியல...

நம்ம ஊர் துண்டு போட்ட அண்ணாச்சிங்க வேலைதான் இதுனு எனக்குத் தோணுது. உங்களுக்கு என்ன தோணுதுன்னு நீங்க சொல்லுங்களேன்...

இப்போ நடந்த ஒரு விஷயம்....

சென்னை அயோத்யா மண்டபத்தில ரெண்டு குண்டு, கூடவே ரெண்டு குடுமிக்காரன்...

ஈரோடு ராகவேந்திரர் கோவிலில் ராமர் சிலை உடைப்பால் பெரும் பதட்டம்...

7 comments:

Hariharan # 26491540 said...

கலவரங்களால பொழப்பு நடத்தும் கழகங்கள் தான் இந்தக் கலகங்களுக்கு முழுமுதல் காரணம்! எல்லாமே இவனுங்களே செஞ்சிக்குவானுங்க!

கல(ழ்)க களவாணிப்பயலுங்களோட வீச்சமெடுத்த செயல்களின் வீச்சுதான் இதெல்லாம்!ஆக்கங் கெட்ட வெட்டிப்பயலுங்க!

SK said...

//எனக்கென்னவோ எந்த ஒரு சாதாரண பிராமணன் போய் பெரியார் சிலையய் உடைச்சதா தோணலை. அதே போல கீழ நான் சொல்லியிருக்குற கோயில் வன்முறைகளும் பெரியார பெரிசா மதிக்கிற யாரும் செஞ்சதா தெரியல...

நம்ம ஊர் துண்டு போட்ட அண்ணாச்சிங்க வேலைதான் இதுனு எனக்குத் தோணுது. உங்களுக்கு என்ன தோணுதுன்னு நீங்க சொல்லுங்களேன்...//

100/100 அப்படியே ஒப்புக் கொள்கிறேன்.

ஒவ்வொரு முறை ஆட்சிக்கு வரும்போதும் நடத்திக் காட்டும் சில வித்தைக் காட்சிகளில் ஒன்று மீண்டும் அரங்கேறியிருக்கிறது.

வெட்கமளிக்கும், வேதனையான நிகழ்வு!

Thamizhan said...

Anti social elements are always looking for oppurtunities like this.I am glad so far Tamilnadu Police have made immediate arrests on lot of these and controlling well.This is an unwanted but a challenge to the police to establish their credibility.

மதுசூதனன் said...

தமிழன் அவர்கள் காவல் துறையின் நடவடிக்கை பற்றி தன் பின்னூட்டத்தில் கூறியுள்ளதற்கு இதை பதிலாகக் கூறவேண்டும் என நினைக்கிறேன்...

காவல் துறையோட இந்த நடவடிக்கை கலவரங்களைத் தடுக்கவா இல்லை கண் துடைப்பானு பொறுத்துத்தான் பார்க்கணும்னு நினைக்கிறேன்.

நம்ம உள்ளாட்ச்சி தேர்தல் எப்படி நடந்த லட்ச்சணம் எல்லாருக்கும் தெரிஞது தான? அப்பவும் இதே காவல் துறையும் இதே ஆணையரும்தான பொறுப்பில இருந்தாங்க? என்ன நடந்தது, எப்படி நடந்தது அப்படினு எல்லாருக்கும் தெள்ளத் தெளிவா தெரியும். இருந்தாலும் நம்ம சென்னைப் பெருநகர காவல் துறை ஆணையர் என்னனு பேட்டி குடுத்தாங்க?

ஒண்ணு ரெண்டு இடம் தவிர மத்தபடி தேர்தல் அமைதியாவே நடந்ததா சொன்னாங்க. இப்ப்டி ஆளுங்க பொறுப்பில இருந்தா என்ன ஆகும்னு கொஞம் யோசிங்க...

பங்காளி... said...

வினை விதைத்தவர்கள்...வினை அறுக்கிறார்கள்...அது யாராயிருந்தாலும் சரி....

இதில் வருத்தப்படவோ வேதனைப்படவோ ஏதுமில்லை....

மதுசூதனன் said...

அது சரி பங்காளி, இவெங்களுக்கு மத்தியில சிக்கி நாமல்ல சீரழியரோம். அதுக்கென்ன வழி?

Anonymous said...

உங்கள் கருத்து முற்றிலும் சரியே.

உதுகளை மதி கெட்ட மந்திக்கூட்டங்கள்
என்று சொல்லாமல் வெறு என்னத்தச் சொல்லுறது.