Thursday, December 14, 2006

சின்ன புள்ளைத் தனமாயில்ல இருக்கு !

நம்ம சிங்காரச் சென்னைல உள்ள கிண்டில ரயில்வே டேசனுக்கு பக்கத்துல ஒரு சுரங்கப் பாதை இருக்கு (அங்கன ஒண்ணும் செயிலெல்லாம் இல்ல). இது இருக்கறதால ஜனங்கல்லாம் ரோட்டுக்கு இங்கிட்டும் அங்கிட்டும் போக வர வசதியா இருந்திச்சி. இப்ப நம்ம டாணா காரங்க என்ன பண்றாங்களாம் ராவு 11 மணி ஆனா அந்தப் பாதைய மூடிட்றாங்களாம். என்னடானு விசாரிச்சா அதுக்குள்ள சட்ட விரோத காரியமெல்லாம் நடக்குதாம் அதனால தெனமும் ராத்திரி 11 மணிக்கு மூடிடுறாங்களாம். தப்பு நடக்காத பாத்துக்கிறதை விட்டு போட்டு இருக்குற இடத்தையெல்லாம் இப்படி அடைச்சு போட்டா என்ன அர்த்தம்னு கேக்கறேன். அப்போ நம்ம அசம்பிளி, பார்லிமெண்ட், அரசாங்க ஆபீஸ், போலீஸ் டேசன் இதெல்லாம் எப்ப மூடப்போறாங்களாம்?

சின்ன புள்ளைத் தனமாயில்ல இருக்கு !

No comments: