Tuesday, December 26, 2006

தஞ்சைகிஸ்தானும் பார்பன வெறியர்களும்

"பாகிஸ்தான் ஆகி வரும் தஞ்சைத் தமிழ் மண்???" என்ற பெயரில் ஜடாயு ஒரு பதிவிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து அசுரன் தன் பங்கிற்கு: இஸ்லாமியர்களை குறைகூறுகிறாயே, இவற்றுக்கு என்ன சொல்கிறாய் என்று அவர் "இந்து / பார்ப்னிய மத வெறியர்களே பதில் சொல்லுங்கள்!!!" என்று ஒரு பதிவிட்டார்.

இரண்டு பதிவிலும் பின்னூட்டமிட எண்ணி அவ்விரு பதிவுகளையும் பல முறை படித்தேன். தோணியவற்றை எல்லாம் எழுத எழுத அது என்னவென்றால் சீனப்  பெருஞ்சுவர் போல் நீண்டு கொண்டேபோயிற்று. சரி இதை ஒரு பதிவாகவே போட்டுவிடலாம் என்று எண்ணியதன் விளைவு தான் இந்தப் பதிவு.

இப்பதிவில் ஜடாயுவின் பதிவில் கூறியவற்றை ஆரஞ்சு நிறத்திலும், அசுரனின் பதிவில் கூறியவற்றை சிவப்பிலும் இவ்விரு கருத்துக்களைப் பற்றியும் நான் எழுதுவதை மஞ்சள் நிறத்திலும் எழுதியுள்ளேன்.

//என்னுடைய குடந்தையின் தமிழ்மணம் வீசிய கடைத்தெரு, கடைக்குக் கடை அதிகாலையிலேயே வாசலில் தண்ணீர் தெளித்து அரிசிமாக் கோலம் போட்டு தமிழ்க்கலாச்சாரத்தின் நுட்பத்தைக் காற்றிலே மிதக்கச் செய்தது. குடந்தையின் எனது சமீபத்திய அறிமுகத்தின் போது அதைக் காணாமல் காரணம் கேட்டேன். இன்று குடந்தையில் மட்டுமின்றிப் பொதுவாகத் தஞ்சை மாவட்டம் முழுவதுமே நூற்றுக்குத் தொண்ணூறு சதம் கடைகள் ஹிந்துக்கள் வசம் இல்லை என்றார்கள்...

தஞ்சையில் இன்று கிராமம் கிராமமாக ஹிந்துக் குடும்பங்களின் எண்ணிக்கை வற்றி, முகமதியக் குடும்பங்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது. அதிலும் ஊரூராய் முகமதியர் தமக்கென அமைத்துக் கொள்ளூம் ஜமாத்துகளில் வஹாபிய முகமதியத்தின் ஆதிக்கம் வேரூன்றி வருகிறது//

//உண்மையில் மத வேறுபாடின்றி சில்லறை வியாபாரிகளுக்கு ஆப்பு சில்லறை வியாபாரத்தில் பன்னாட்டு கம்பேனிகளை அனுமதிப்பதால் ஏற்ப்பட்டுள்ளது. ரிலையன்ஸ், வால்மார்ட் கும்பலின் சூறையாடலில்தான் இவர்களின் அழிவு உண்மையில் உள்ளது. சில்லறை வியாபாரத்தில் FDI யை அனுமதித்தது ஜடாயு கோஸ்டியும், காங்கிரஸ் கோடியும்தான். அதைக் குறித்து தமிழர்கள் மேல் அக்கறை கொண்ட ஜாடாயு பேசுவாரா?//

காங்கிஸ் சரி, அதென்ன ஜடாயு கோஷ்டி? இது தான் புரியலை. ஜடாயு என்ன எழுதி இருந்தார்? தன்ஞ்சையில் பெருகி வரும் இஸ்லாமியர்களைப் பற்றியும் அதனால் சிறு வியாபாரிகளுக்கு ஏற்பட்டுவரும் சில கஷ்டங்களையும் சொல்லியிருந்தார். நானும் தஞ்சைப் பகுதியை சார்ந்தவன் என்கிற முறையில் அங்கு நடப்பவை எனக்கும் ஓரளவிற்கு தெரியும். எனக்குத் தெரிந்த வரையில் திரு ஜடாயு சொன்ன விஷயம் தஞ்சையைச் சுற்றியுள்ள பல பகுதிகளின் நில அவர் சொன்னபடி தான் உள்ளது. அசுரன் மிகவும் கோபத்துடன் காங்கிஸ்ஸை குற்றம் சாட்டுவது சரி...ஆனால் அவர் குறிப்பிடும் ஜடாயு கோஷ்டி பற்றித் தான் ஒன்றும் தெரியவில்லை. இவ்வளவு கோபப்படும் அசுரனுக்கு சில கேள்விகள்:

  1. இவர் ஒரு கம்யூனிஸ்ட் தானெ?
  2. இவர் இடது சாரியாய் இருக்கும் பட்சத்தில் காங்கிரசுடன் மத்தியில் கூட்டணி அமைத்துக் கூத்தாடும் கம்யீனிஸ்டுகளின் மேல் ஏன் கோபப்படவில்லை?
  3. இவரும் ஒரு இடது சாரியாய்  இருக்கும்  பட்சத்தில்  இவரின் வாதம் தவறானதல்லவா?
  4. சிறு வியாபாரங்க்களில் பெரும் வர்த்தக நிறுவனங்களையும், அந்நிய முதலீட்டாளர்களையும் மத்திய அரசு அனுமதித்தபோது கம்யூனிஸ்டுகள் ஏன் மத்திய அரசுக்கு அவர்கள் அளித்த ஆதரவை  திரும்பப்பெறவில்லை?

//தொடக்க்கத்திலேயே உரிய கவனம் செலுத்த்வில்லையெனில் 'சோழவள நாடு சோறுடைத்து' என்ற பெயரை ஏற்கனவே இழக்கத் தொடங்கிவிட்ட தஞ்சை அதற்குப் பதிலாக 'சோழவளநாடு பள்ளிவாசல்களுடைத்து' என்கிற பெருமையை விரைவில் பெற்றுவிடும் எனலாம்..//

//தஞ்சை தமிழர்கள் விவாசாயத்தை விட்டு போண்டியாகி சென்னை தமிழராக அத்துக் கூலிக்கு வருவது ஏன் என்று ஜடாயு விளக்குவாரா? அவரது பதிவில் வாய் வைத்துச் சென்றுள்ள அனானிகள் அல்லது ஹரிஹரன், நீலகண்டன் கோஸ்டிகள் விளக்குவார்களா?

கடந்த ஏழு வருடத்தில் அரசு புள்ளி விவரத்தின் படியே 1 லட்சத்திற்க்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். எந்த இஸ்லாமிய ஆக்கிரமிப்பு இதற்க்குக் காரணம் என்று அதி அறிவு ஜீவி நேசகுமரோ அல்லது அறிவியல் விஞ்ஞானம் அனைத்தையும் கரைத்துக் குடித்து விட்டு எல்லாம் நாங்க வேதத்துல படிச்சதுதான் என்று பீலா விடும் நீலகண்டனோ விளக்கலாம்.

இதே ஜாடாயு இருக்கும் கர்நாடகாவில், 70000 சிறு தொழில்கள் மூடப்பட்டதற்க்கு எந்த இஸ்லாமிய ஆக்கிரமிப்பு என்று அவர் கூற கடமைப் பட்டுள்ளார்.//

விவசாயம் சரிவர நடக்காது போனதுக்கும் பார்ப்பனர்களே காரணம் என்னும் ஒரு புதிய பரிமாணத்தை அசுரன் கொண்டுவர முயற்சிக்கிறாறோ என்று எனக்கொரு ஐயம் எழுகிறது. சுதந்திரம் தொட்டு தமிழகத்தினை 17 ஆண்டு காலம் காங்கிரஸ் ஆண்டது. அதன் பின்னர் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இன்று வரை திமுகவும் அதிமுகவும் மாற்றி மாற்றி ஆண்டு வந்துள்ளது. இவர்கள் நினைத்திருந்தால் தமிழ்கத்தில நல்லதொரு விவசாய நிலைதனை ஏற்படுத்தி இருக்க முடியும். ஆனால் உண்மையில் நடந்ததென்ன? அண்டை மாநிலத்தவர் அனைவருடனும் தண்ணீர் பிரச்சினையை உருவாக்கியது தான் மிச்சம்.

பார்ப்பனர்களை இவ்வளவு வெறி கொண்டு எதிரிக்கும் அசுரன் போன்றவர்கள் எதிர்ப்பில் காட்டும் வீரத்தை வேலையில் காட்டாது போனது நிச்சயம் வருந்தத் தக்கது. இன்றைய தேதிக்கு காவிரி பிரச்சினை தனை மறைக்க நம் ஆட்சியாளர்களுக்கு புதியதொரு பிரச்சினை தேவபட்டது. அதற்கெனவே ஊதி ஊதி பெரிதாக்கப் பட்ட விஷயம் தான் இந்த முல்லை பெறியாரு விவகாரம். தமிழ்கத்தை ஆளும் திமுகவும், கேரளத்தை ஆளும் கம்யூனிஸ்டுகளும் மத்தியில் ஒரே கூட்டணியில் தான் உள்ளனர். ஆனால் அவர்களுக்குள் எந்த ஒரு கருத்திலும் உடன்பாடு இருப்பதாய் தெரியவில்லை. ஒருவேளை எந்த ஒரு உடன்பாட்டிற்கு இசைவது இவர்களின் நோக்கமாக இல்லாமல் இருக்க்வும் வாய்புண்டு. முன்னர் சொன்னது போல் காவிரியய் மறைக்க பெறியாரு, பின்னர் பெறியாரு தனை மறைக்க ஆந்திராவுடன் ஒரு கிருஷ்ணா பிரச்சினை. இதுதான் இவர்களின் மூல நோக்கம் என்று தோன்றுகிறது.

நான் மேற்சொன்ன வாதம் அசுரன் குறிப்பிடும் சிறுதொழில் பிரச்சினைக்கும் பொருந்தும் என நான் சொல்ல தேவையில்லை என எண்ணுகிறேன்.

//தமிழர்களின் பாண்பாடு பார்ப்னிய கலாச்சாரத்தால் அழிவது குறித்து இவர்கள் இப்படி பாசத் தோடு பேசுவதில்லையே??

இதே இந்து வெறியர்கள் நாட்டார் வழிபாட்டு தெய்வ முறைகள். தமிழரின் பிற கலாச்சார அடையாளங்கள், தமிழ் இசை இவற்றை பார்ப்பினிய மதம் விழுங்கி அழிப்பது குறித்து எதுவும் பேசுவதில்லை.

கலாச்சாரம் அழிகிறது என்ற இவர்களின் கவலையில் நேர்மை உண்டு எனில் அது எமது கலாச்சாரத்தை அழிக்கும் பார்ப்பினியத்திற்க்கு எதிரான போராட்டத்திற்க்கு குரல் கொடுப்பதின் மூலம் தெரியவரும். அவ்வாறு செய்வது சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்வது போல ஆகிவிடும்.//

அசுரனின் வேடிக்கைக்கு அளவே இல்லை போலும். இவருக்கு தமிழர் கலாச்சாரம், இஸ்லாமிய மேம்பாடு, திராவிட மேம்பாடு இப்படி எதிலும் உண்மையான அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை. பூணூல் போட்டவனை திட்ட இவருக்கு ஒரு காரணம் வேண்டும் அதற்காகத் தரப்படும் சப்பைகட்டுகள் தாம் இவை. அசுரன் அவர்களே முதலில் பார்ப்பனனும் இந்துதான் என்பதை புரிந்து கொள்ளுங்கள். பார்ப்பனர்களைக் காட்டிலும் பார்பனர் அல்லாத இந்துக்கள் பல கோடி பேர் உள்ளனர் என்பதை சற்று புரிந்து கொள்ளுங்கள்.

நான் மேற்சொன்ன விஷயங்களை அசுரன் மறுப்பாராயின் அவர் தம் வாதத்தினை இங்கு வைக்கட்டும். வாதாடுவோம். தெளிவோம்.

36 comments:

Anonymous said...

//இவர் இடது சாரியாய் இருக்கும் பட்சத்தில் காங்கிரசுடன் மத்தியில் கூட்டணி அமைத்துக் கூத்தாடும் கம்யீனிஸ்டுகளின் மேல் ஏன் கோபப்படவில்லை?//


ஓட்டு பொறுக்கிகள், உண்மையான கம்யூனிஸ்டுக்கள் இல்லை என்று தனது வழக்கமான ஜல்லியை வைப்பார் பாருங்கள்.

ஜடாயு said...

மது,

மலர்மன்னன் கட்டுரையை நான் பதிவில் குறிப்பிட்டதன் நோக்கம் உள்ள நிலவரத்தை உள்ளபடி சொல்லுவது தானே அன்றி சும்மா சண்டை மூட்டி விடுவதல்ல.

// அசுரன் அவர்களே முதலில் பார்ப்பனனும் இந்துதான் என்பதை புரிந்து கொள்ளுங்கள். பார்ப்பனர்களைக் காட்டிலும் பார்பனர் அல்லாத இந்துக்கள் பல கோடி பேர் உள்ளனர் என்பதை சற்று புரிந்து கொள்ளுங்கள். //

இடதுச் சாரிப் போலித்தனத்தை நன்றாகச் சாடியிருக்கிறீர்கள். இந்து, பார்ப்பன, பாசிஸ்ட் என்றெல்லாம் போதை அதிகமானால் திட்டுவார்கள் - இதற்கெல்லாம் அவர்களுக்கு அர்த்தம் தெரியாது!

என் நண்பர் அசுரனுக்கு அளித்த அமிலம் தோய்ந்த பதிலடியையும் படித்து ரசித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்:
http://jataayu.blogspot.com/2006/12/blog-post_22.html

இந்த விஷயம் பற்றிய சரியான பார்வைக்கு நன்றி.

Anonymous said...

பாருங்கள் நான் சொல்லி முடிக்கவில்லை அதற்குள் ஜல்லியை அடித்தாயிற்று.

அவர சொந்தமா தனி கம்யூனிஸ்ட் கட்சி நடத்திறாருங்கோ.

இனிமே அதை அசுரன் கம்யூனிஸ்ட் என்று அழைக்கவும்.
இடதுசாரிகள் இதில் சேராது என்று அவரே சொல்லிவிட்டாருங்கோ.

மதுசூதனன் said...

வாங்க ஜடாயு. என்னோட நோக்கம் சாதி பேரைச் சொல்லி சண்டை போடுறதில்ல. ஆனால் சமூகத்தை வளர்க்கிறேன் பேர்வழினு இன்னிக்கு ரொம்ப பேர் இப்படித்தான் சொல்லிட்டு அலையராங்க. அவங்களுக்கு கொஞ்சம் உறைக்கிற மாதிரி சொல்லணும்னா இப்படித்தாங்க சொல்லணும். இதமா சொன்ன இந்த காலத்துல எவன் கேட்கிறான் சொல்லுங்கள்?

//ஓட்டு பொறுக்கிகள், உண்மையான கம்யூனிஸ்டுக்கள் இல்லை என்று தனது வழக்கமான ஜல்லியை வைப்பார் பாருங்கள்.//

இந்தப் பேச்செல்லாம் ரொம்ப நாளைக்கு போணியாகாது அனானி...

மதுசூதனன் said...

//பாருங்கள் நான் சொல்லி முடிக்கவில்லை அதற்குள் ஜல்லியை அடித்தாயிற்று.//

எங்க சொல்லியிருக்காரு? எனக் அந்த சுட்டிய கொஞ்சம் குடுங்களேன்.

Anonymous said...

இதுல கொடுமை என்னனா..

wethepeople ஒரு பதிவுல அவரு CPI,CPM நாடகத்த தோலுரிச்சதுக்கு அங்க போயி அவர CPI,CPM திட்டி wethepeople விளம்பரம் தேடிக்கிறாருனு பின்னூட்டமிட்டாரு.

ஆனா பாருங்க நம்ம தலைவர காந்தி,பாரதி,BJP,காங்கிரஸு, ரஜினி இப்படி எல்லாரோட முகத்திரைய கிழிச்சு நாட்டுக்கு விளம்பரம்மில்லாத சேவை செய்யிராரு. அவர போயி ..சே.. உங்களுக்கு மனசாட்சியே இல்லையா...

Anonymous said...

http://poar-parai.blogspot.com/2006/12/blog-post_21.html#116712732724258256

இதில இரண்டாவது பீயின்ட்.

மதுசூதனன் said...

அது என்னவோ தெரியலை அசுரன் இங்க எழுத மாட்டேகிறார்...இருந்தாலும் என் பதிவுக்கு அவர் சொன்ன பதில் இதோ

பதில் பின்னூட்டம் - அசுரனின் பதிவில்

அசுரன், நீங்க சொல்ற கம்யூனிசம் உங்களைப் போல இங்க உள்ள ஒரு சிறு பதிவர் வட்டத்தோட சரி. மத்தவங்களை செண்றடைவது கிடையாது. கொஞ்சம் கனவுகளை விட்டு வெளியில வந்து எதார்தத்தை பாருங்க. அப்புறம் பேசுங்க.

அதுமட்டுமில்லாம...அந்த மழை பேயர் விஷயத்துக்கு நீங்க ஒரு பதில் சொல்லியிருந்தீங்களே...அட அட..என்ன அமர்களமா இருந்தது...இன்னொரு வாட்டி படிச்சுப் பாருங்க...காமெடி புரியும்.. :)

bala said...

//அவர சொந்தமா தனி கம்யூனிஸ்ட் கட்சி நடத்திறாருங்கோ//

அனானி அய்யா,

சரியாக சொல்லியுள்ளீர்கள்.

என் கட்சியின் பெயர் புரட்சிகர கட்சி.தலைவர் எங்கள் அசுரன் அய்யா.அவர் கிட்ட என்ன ஸ்பெஷல்னாக்க அவர் எல்லா விதமினா கேள்விகளுக்கும் சமுகவியல்,இயக்கவியல் போன்ற அனைத்து இயல்களின் கூறுகளையும் உள்வாங்கி,செம்மையாக பதில் ஏற்கெனவே சொல்லியுள்ளார்.அதனால யாரும் அவர் கிட்ட கேள்வி கேட்க கூடாது.
நாங்க மட்டும் தான் உண்மையான கம்யூனிஸ்ட்கள் என்பதை பெருமையோடு சொல்லிகொள்கிறோம்.
நாங்க இந்திய இறையாண்மைக்கு விளக்கு பிடிக்கும் வேலையை செய்வது இல்லை. மாறாக இன்டர்நேஷனல் லெவெலில் சீனாவுக்கும்/பாகிஸ்தானுக்கும்,நேஷனல் லெவெலில் தி மு க விற்கும் பெருமையுடன் விளக்கு பிடிப்போம்.அஃப்ஸல் எங்களைப் பொருத்தவரை ஒரு மாபெரும் வீரர் மற்றும் தியாகி.அவர் அடி வருடாதவர் ஓட்டாண்டிகள் தான் என்பதை நாங்கள் கொள்கையாகவே வைத்திருக்கிறோம்.

பாலா

Anonymous said...

//அதுமட்டுமில்லாம...அந்த மழை பேயர் விஷயத்துக்கு நீங்க ஒரு பதில் சொல்லியிருந்தீங்களே...அட அட..என்ன அமர்களமா இருந்தது...இன்னொரு வாட்டி படிச்சுப் பாருங்க...காமெடி புரியும்.. :)//

லிங்க் குடுத்தால் வசதியா இருக்கும்.

Hariharan # 26491540 said...

மதுசூதனன்,

எதை எதிர்க்கிறோம் என்பதில் தெளிவு வேண்டும் அவசியம். ஏனெனில் எதை எதிர்க்கிறோமோ அது தான் நமது இலக்கு (அட்லீஸ்ட் ஆரம்ப கால இலக்கு)என ஆகிறது!


வயல்காட்டில் உழவு, கதிரறுப்பு என்று உழைக்கும் பிராமண விவசாயிகள், தமிழகமெங்கும் (எங்கள் உறவினர்களிலும்) இருக்கின்றார்கள்!
இசுலாமிய விவசாயி என்பதே புதிய சொல்லாடல்! இசுலாமியர்கள் நானறிந்த வரையில் விவசாயம் தவிர்த்த தொழில்களில் தான் இருக்கின்றார்கள்!

ஹரிஹரன் கோஷ்டி விளக்குமா என்று கேட்டிருக்கிறார். என்னாலான விளக்கம்:

விவசாயிகளான தஞ்சைத்தமிழர்கள் விவசாயம் செய்ய முடியாமல் வெளியேறுவது பார்ப்பனரல்லாதவர்கள் ஆட்சியில் 40 ஆண்டுகளாக சுயமரியாதையோடும், பகுத்தறிவோடும் தமிழகத்தில் காவிரி நீர்ப்பங்கீட்டை, பெரியாற்று நீரை பகிர்வதில் கையாண்ட விதத்தில் மக்கள் நலம் தவிர்த்து தன்னலம் முன்னிலைப்படுத்தியதன் தாக்கம் எதிரொலிப்பதால் நீர் அற்று வறண்ட பூமியாக தஞ்சைச் சோழநாட்டை நவீன ராஜராஜ சோழன் கருணாநிதி சர்க்காரியா கமிஷனில் இருந்து வெளியேற காவிரிப் பிரச்சினையைப் பிணைவைத்ததால் தான் என்பதை தீவிர அரசியல் பேசும் அசுரன் அறிவார்!

ஈவெரா கொள்கையைப் பின்பற்றுபவர் எனில் நாட்டார் வழிபாடு என்ன வேதநெறி வழிபாடு என்ன? சாமியே இல்லை என்பவருக்கு ஆதிகேசவன் மோசம் அய்யனார் உசத்தி என்று ஏன் பேச வேண்டும்?

இந்து மதத்திலே பார்ப்பன மதம் என்று என்ன இருக்கிறது என்று விளங்கவில்லை எனக்கு? சரி காமடி என்று வைத்துக்கொள்வோம் :-))

பன்முகத்தன்மையோடும் சகிப்புத்தன்மையோடும் இருக்கும் மதம் இந்துமதம். வேதநெறி மாதிரி அல்டிமேட் டெமாக்ரடிக் வாழ்வியல் நெறி அதன் பன்முகத்தன்மையினால் நாட்டார் வழிபாடு என்பதை பித்ரு வழிபாடு என்கிற வேத நெறி கான்சப்டினால் உள்வாங்கிக் கொள்ளும் திறன் பெற்றிருப்பதாக அமைந்திருக்கிறது.

நாட்டார் வழிபாட்டை யார் தூற்றினார்கள், நசுக்கினார்கள்? இன்றைக்கும் அய்யனார், கருப்பசாமி, முனிசாமி, என்று எல்லோரும் இருந்து ரட்சிக்கிறார்கள். எல்லாம் சிவமயம் என்கிற மாக்ரோ தத்துவத்தில் உள்ளடங்கி முனீஸ்வரசாமி, என்று ஈஸ்வர அம்சமாகியிருப்பது தூற்றுவதா?


அசுரன் தானும் குழம்பி எல்லோரையும் குழப்பிவருகிறவர். குறிப்பாக பார்ப்பனரை தேவை ஏதும் இல்லாமலே வெறுப்புணர்வோடு மோசமாகத் தாக்கி எழுதுவதால் பயன் ஏதும் இல்லை!

வெறுப்பு எதற்குமே தீர்வல்ல! வெறும் இன வெறுப்பால் அம்மாதிரி இன்னொரு வெறுப்பை விரைந்து வளர்க்கும்!

மதுசூதனன் said...

//லிங்க் குடுத்தால் வசதியா இருக்கும்//

நீங்க எனக்கு குடுத்த அதே சுட்டி தான். போய் தெளிவா படிங்களேன். உங்களுக்கும் புரியும். நான் என்ன எழுதி இருக்கேன். அவர் என்ன சொல்றாருனு கொஞ்சம் உத்து பாருங்க அனானி...அப்படியே உங்க பேரையும் சேர்த்துப் போட்டா வசதியா இருக்கும்.

Anonymous said...

தலைவரு ஆள் இல்லாத ஊருக்குதான் எப்பவும் வழிகாமிப்பாரூ.

மதுசூதனன் said...

//தலைவரு ஆள் இல்லாத ஊருக்குதான் எப்பவும் வழிகாமிப்பாரூ.//

யாரு தலைவரு எந்த ஊருக்கு இப்ப வழிகாட்டினாங்க?

மதுசூதனன் said...

//சாமியே இல்லை என்பவருக்கு ஆதிகேசவன் மோசம் அய்யனார் உசத்தி என்று ஏன் பேச வேண்டும்?//

நெத்தியடி ஹரி..!

Bagath said...

1. Most of the peoples in India has not included so-called Hindu Religion. It hasn't give the place to Dalits.

This Religion ignore the peoples' arts and Literature. Can you put atleast a thukkada for the instrument Parai in your (Barbanaas/Hindu !!!) Thiyagarayar Urchavam.

You and your colleaques from Neetzae or Manu/Chanakyaa didn't Understand the Society of Communism. Try to understand for the Cross-over.

CPM/CPI haven't the authorities for Communism in India. They hope within the Parliment type Democracy in this System of India. It is possible only in First world not for Third world. It is the part story ...


Before Russian Socialist Revolution, upto September 1917, Bolzhvics were minorities in Duma. Revolution hasn't depend on the strength for a occurrence only. It depends on the social factors. Hitler had trust the mass of illusion by their feelings of nationality. Remember History !!!

VAT, SEZ, .... all will be beaten by the proliterate peoples. Barbanaas will/was/is help them through as MS Swaminathan, Abroad IIT (RS. 25 lakhs given to everyone for his study from the taxes of BC Hindus/SC/Lower class Muslims) ambi, .... In 1799 as Poornayar in Thippu, as Thivan Ramasamy Iyer in Travangore .... for Chalukkayaas ... as Pushyamithran, as Chanakkyan against Bhudhism).

"matravargalukku kalviai maruththathan moolam thangalai arivali aakki kondavargal" -- K. Marx.

Against MAndal Commission Report- Yours followers prooved it by their cleaning struggle of the street.

Son of Manus. You and your arts/thoughts are danger to find the freedom. We have lot of experience from you and such Kapisthalam Vipeesnaas.

-aasath

மதுசூதனன் said...

//Can you put atleast a thukkada for the instrument Parai in your (Barbanaas/Hindu !!!) Thiyagarayar Urchavam//

இதுக்கும் நம்ம இப்ப பேசற விஷயத்துக்கும் என்ன சம்பந்தம்? ஆசாத்..உங்களுக்கு நிறைய விஷயம் தெரியுது..ஒதுக்கிறேன். ஆனா ஒண்ணோட இன்னொண்ணை இணைச்சு உண்மையை தெரிந்து கொள்ளவும் கொஞம் முயலுங்களேன்.. புரட்சிகரமா பேசணும்கிறதுக்காக எதாவது சொல்லாம பொறுத்தமா சொல்லுங்களேன். உங்களால நிச்சயம் முடியும் ஆசாத். ஒண்ணுமில்லை..கொஞ்சம் உணர்ச்சி வசப்படாம யோசனை சென்ஞ்சு எழுதுங்க. அது போதும்.

Anonymous said...

////யாரு தலைவரு எந்த ஊருக்கு இப்ப வழிகாட்டினாங்க?//

பீயிண்ட் நம்பர் 3.

//Before Russian Socialist Revolution, upto September 1917, Bolzhvics were minorities in Duma. Revolution hasn't depend on the strength for a occurrence only. It depends on the social factors. Hitler had trust the mass of illusion by their feelings of nationality. Remember History !!!//

அதான் ஸ்டாலின் பிணத்த அவசர அவசரமா புதைச்சாங்க. இல்லைனா ஏற்பட்ட புரட்சியில பிணத்த சுக்கு நூறா பிச்சு எறிசிருப்பாங்க.

:)))
சொல்லுராரு பாருங்கோ ரஷ்ய புரட்சி பத்தி....

அய்யா என் பேரே வேண்டாம்யா... எதே ஒரு பாவப்பட்ட இந்தியன் நான். என்னை இன்னும் இம்சிக்கனுமா..

கரு.மூர்த்தி said...

தொலிழாளர் சர்வாதிகார புர்ச்சி வெடிக்க இன்னும் 158775 நாட்களே பாக்கியுள்ள நிலையில்

அதற்க்கு தலைமை தாங்க பயிற்சி எடுக்கும் வண்ணம் , மாவோவின் தியாமென் போராட்ட வீடியோவை ( DVD தரம் ) பாக்க போயிருக்கும் எங்கள் புர்ச்சி வீரர் அசுரனை வம்புக்கிழுத்தால்

அப்புறம் நாங்க "கருப்பு கருப்பா" திட்டுவோம் பரவாயில்லயா ?

மதுசூதனன் said...

//அதான் ஸ்டாலின் பிணத்த அவசர அவசரமா புதைச்சாங்க. இல்லைனா ஏற்பட்ட புரட்சியில பிணத்த சுக்கு நூறா பிச்சு எறிசிருப்பாங்க//

அப்படி விளக்கமா சொன்னாத்தான தெரியும்.

Anonymous said...

//இதுக்கும் நம்ம இப்ப பேசற விஷயத்துக்கும் என்ன சம்பந்தம்? //

என்னங்க அடிப்படை கம்யுனிசமே தெரியாம இருக்கீங்க.

சம்பந்தத்த நாம தான் உண்டு பண்ணிகிறனும். அப்புறம் எப்படி அரசியல் நடத்திறது.

மதுசூதனன் said...

//இன்னும் 158775 நாட்களே பாக்கியுள்ள நிலையில்//

அதென்னங்க கணக்கு? கொஞ்சம் தெளிவா சொல்லுங்க....

கரு.மூர்த்தி said...

//இன்னும் 158775 நாட்களே பாக்கியுள்ள நிலையில்//

//அதென்னங்க கணக்கு? கொஞ்சம் தெளிவா சொல்லுங்க.... //

அதொன்னுமிலீங்க , 1940 ல இருந்து தொழிலாளர் வர்க்க சர்வாதிகாகாரப் புர்ச்சி வெடிக்கபோதுன்னும் அப்போ பொன்னுலகம் கிடைக்குமுன்னும் டுமீல் விட்டுகினு திரிஞ்சாங்க , ரஷ்யா காணாம போனவுடனே இந்த கோசம் காணாம போச்சு ,

ஆனா நம்ம அசுரர் அய்யா இன்னும் தொழிலாளர் வர்க்க சர்வாதிகாகாரப் புர்ச்சி வரும்ன்னு கனா கண்டுகினாரு , பாவம் அவரு மனசொடிஞ்சு போயிர கூடதுன்னு ஒரு 435 வருசத்துல புர்ச்சி வரும்ன்னு அவருக்கு ஒர் பூஸ்டு குடுக்கத்தான் 158775 நாட்கள்ன்னு சொன்னேன்.
( முதளாளி வர்க்க சர்வாதிகாகார பானமாச்சே பூஸ்ட்டு )

மதுசூதனன் said...

கரு.மூர்த்தி...

எனக்கென்னவோ அதெல்லாம் வரும்னு தோணலை...சும்மா ஒரு வெட்டி பந்தாவுக்கா வேணும்னா சொல்லிக்கலாம். சொல்லிட்டுப் போகட்டும் விடுங்க. அவங்க ஆசயை ஏன் கெடுப்பானேன்.

bala said...

//அதென்னங்க கணக்கு? கொஞ்சம் தெளிவா சொல்லுங்க//
மதுசூதனன் அய்யா,
எங்க அசுரன் அய்யா இந்த கேள்விக்கு ஏற்கெனவே செம்மையாக பதில் சொல்லியுள்ளார்.சமூகவியலின் கூறுகளை நீங்கள் ஆராய்ந்தால்,முதலாளித்துவம்,பிறகு தரகு முதலாளித்துவம்,அதன் பிறகு திராவிட தரகு முதலாளித்துவம்,பிறகு திராவிட/இஸ்லாமிய தரகு முதலாளித்துவம்,அதன் பிறகு எங்கள் புரட்சிகர கட்சியின் ஆட்சி என்ற முறையில் தான் இந்திய சமுதாய சமூக அமைப்பின் அடிப்படை விதிகள் எழுதப்பட்டிருக்கிறது.அதனால் தான் அவ்வளவு நாட்கள்னு கம்யூனிஸ பஞ்சாங்கத்தில் கணக்கு போட்டு வச்சிருக்காங்க.

பாலா

மதுசூதனன் said...

//எங்க அசுரன் அய்யா இந்த கேள்விக்கு ஏற்கெனவே செம்மையாக பதில் சொல்லியுள்ளார்...//

உங்களுக்கு எப்பவுமே விளையாட்டுதான் பாலா..

Bagath said...

i trust about your thought of productivity.

Russian Socialist Revolution is not the humor like your ARAttai ...

This is not my ground ...

Ok. If it (Revolution) shouldn't come by your research on the society, what is your plan to Kairanchi Victims, SEZ, VAT, Viodharbhas' Sicided Farmers, Unrightable IT white-colors ...


-from a INDIAN

மதுசூதனன் said...

//If it (Revolution) shouldn't come by your research on the society, what is your plan to Kairanchi Victims, SEZ, VAT, Viodharbhas' Sicided Farmers, Unrightable IT white-colors ...//

சுத்தி சுத்தி ஒரு வழியா விசத்தை புடிச்சிட்டீங்க. ஒரு வரில பதில் சொல்லணும்னா எல்லா ஊழல்ல் அரசியல் வாதியையும் லைன்ல நிக்க வெச்சு சுட்டுத் தள்ளிட்டு நேர்மையான சிந்தனை உள்ள இளைஞர்களை அமைச்சர்களாகவும், அவங்களுக்கு உதவியா நாணயமிக்க அதிகாரிகளையும் வேலைக்கு வெச்சா நீங்க கேட்ட கேள்விக்கெல்லாம் பதில் கிடைச்சிடும்.

கரு.மூர்த்தி said...

// இந்திய சமுதாய சமூக அமைப்பின் அடிப்படை விதிகள் எழுதப்பட்டிருக்கிறது.அதனால் தான் அவ்வளவு நாட்கள்னு கம்யூனிஸ பஞ்சாங்கத்தில் கணக்கு போட்டு வச்சிருக்காங்க//

அசுரன் அய்யா மொத்தமா என்ன சொல்ல வர்ராருன்னு உங்களுக்கு மட்டும்தாம் பிரிஞ்சிருக்கு பாலா . ( நானும் படிச்சு படிச்சு பாக்கறேன் , உலகத்து பிரட்சனைக்கெல்லாம் பொருளாதார குப்பிலயே மருந்து இருக்குன்னு அவரு சொல்றது என்க்கு பிரியவே மாட்டேங்குது , ஒரு வேளை "கருப்பு" கண்ணாடி போட்டா என்க்கு புரியுமோ ?

Anonymous said...

//Russian Socialist Revolution is not the humor like your ARAttai ...//

ஆமாங்கண்ணா அது லோக்கல் காமடி இல்லீங்கோ. வோர்ல்ட் லெவல் காமடிங்கோ..

bala said...

//ஒரு வேளை "கருப்பு" கண்ணாடி போட்டா என்க்கு புரியுமோ //

மூர்த்தி அய்யா,

அது மட்டும் போதாது.கருப்பு சட்டை,மஞ்ச துண்டு,சிவப்பு அண்டர்வேர்,பச்சை குல்லா எல்லாம் போட்டுக்கணும்.பளிச்சுனு சமூகவியல்,இயக்கவியல்,பாலியல்,மோரியல்,அவியல்னு எல்லா இயல்களின் கூறுகளையும் உள்வாங்கும் திறமை தானா வரும்.

பாலா

ஜெயதேவி said...

இஸ்லாமியர்களுக்கு வால் பிடிக்க ஒரு பதிவையே ஆரம்பித்துள்ள மதுசூதனாருக்கு பாராட்டுக்கள்! புதுவை சரவணன்(www.puduvaisaravanan.blogspot.com) என்ற பதிவில் இஸ்லாமிய மயமாகி வரும் தஞ்சை பற்றி பல கட்டுரைகள் உள்ளது. பார்த்தீர்களா?

மதுசூதனன் said...

//புதுவை சரவணன்(www.puduvaisaravanan.blogspot.com) என்ற பதிவில் இஸ்லாமிய மயமாகி வரும் தஞ்சை பற்றி பல கட்டுரைகள் உள்ளது. பார்த்தீர்களா?//

நிச்சயம் பார்க்கிறேன் ஜெயதேவி.

மதுசூதனன் said...

இங்கு ஒரு அனானியால் இடப்பட்ட பின்னூட்டமானது தனி மனித விமர்சனமாகக் கருதப்பட்டமையாலும், அதில் சற்றே கண்ணியக் குறைவான வார்தைகள் இருந்ததாலும் அவரது பின்னூட்டத்தை பிரசுரிக்க இயலவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

Anonymous said...

Both rivals (athuthane..Asuran and Jattayu) fights will have to last for long....so that Karunanidhi can become no.1 richest in India from present no.1 in TamilNadu..... Carry on your fights......we have to fight and kill each other...so that Karunanidhi can survive...... so keep going....

மதுசூதனன் said...

//Carry on your fights......we have to fight and kill each other...so that Karunanidhi can survive...... so keep going.... //

இது நடந்திடக் கூடாது. மக்களுக்கு உண்மை புரியணும்னுதானே இவ்வளவும்.