Saturday, January 20, 2007

மரியாதை என்பது என்ன?

பொதுவா நாமெல்லாம் இந்த மரியாதைங்கிற விஷயத்தைப் பத்தி என்ன சொல்ல்லுவோம்? 

"அது கேட்டுப்  பெறபடுவதல்ல தானாய் கிடைப்பது...."

ஆனா இங்க நடந்த விஷயமே வேற...உங்களுக்கே புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்.

நம்ம தமிழகத்தின் ஒரு மான்புமிக்குக நடத்திய கூத்தைத் தானைய்யா சொல்லுகிறேன். வேலூரில் பல் வேறு பள்ளிகள் கலந்து கொண்ட ஒரு விழாவினை ஆம்பூர் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் கருணாநிதி தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார். அதில் அவர் கல்வித் துரைமுருகன் இயக்குனரையும் இன்னும் சில அந்தப் பகுதியைச் சேர்ந்த்த சட்ட சபை உறுப்பினர்களையும் இந்திரன் சந்திரன் என்று பேசியுள்ளார். இதைக் கேட்ட நம்ம துரைமுருகனுக்குக் கோபம் கொப்பளித்துக் கொண்டு வந்து விட்டது. அவரைப் பற்றி ஒண்ணும் பெருமையா பேசலையாம். அதனால அவருக்கு மரியாதைக் குறைவா போயிடிச்சாம்.

அட நம்ம துரைமுருகன் கருணாநிதியை கூப்பிட்டு கண்டிச்சதுல கூட பிரச்சினை இல்லை. அதை செஞ்ச இடமும் முறையும் தான் தவறு. 25 மாநில மாணவ மாணவிகளும், ஆசிரியர்களும் கலந்து கொண்டிருந்த ஒரு விழாவின் மேடையில் ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர்தனை, பல்லாயிரம் பேர் முன்னர் கடிந்து கொள்வது மட்டும் மரியாதைக்குரிய செயலா என்ன? இப்படி ஒரு செயலைச் செய்த துரைமுருகனுக்கு மரியாதை பற்றிப் பேச என்ன யோகியதை உள்ளது?

கஷ்டப் பட்டு படித்து, பல ஆண்டு காலம் போராடி உழைத்து ஒரு தலைமை ஆசிரியர் பொருப்பில் இருக்கும் ஒருவரை, நேற்று ஆட்சிக்கு வந்து நாளை காணாமல் போகப் போகும் ஒரு அமைச்சர் என்னவெல்லாம் செய்கிறார் எனப் பாருங்கள். இன்று இந்த ஆசிரியருக்கு நடந்தது நாளை எந்த ஒரு அரசு அதிகாரிக்கும் நடக்கலாம்.

மக்களாகிய நாம் இவற்றுக்கு எதிராய் என்ன செய்யப் போகிறோம்?

6 comments:

dondu(#4800161) said...

நச்-னு ஒரு கேள்வி கேட்டிருக்கிறீர்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

மதுசூதனன் said...

கேள்வி கேட்டாப்புல யாருக்கும் உரைக்கவா போகுது? அதென்னவோ கிடையாது. இந்த மாதிரி அழிச்சாட்டியமெல்லாம் என்னைக்குத் தான் ஓயுமோ.

இலவசக்கொத்தனார் said...

என்னதான் அவர் பல துறைகளுக்கு அமைச்சரா இருந்தாலும் அவர் துரைமுருகன் தாங்க! :)

மதுசூதனன் said...

கொத்தனாரே... நீங்க சொல்றது ஒண்ணும் வெளங்கலியே....

இலவசக்கொத்தனார் said...

மதுசூதனன்,

பதிவுல நீங்க எல்லா இடத்திலும் துறைமுருகன் என அமைச்சரின் பெயரைக் குறிப்பிட்டு இருக்கிறீர்கள். அதைத்தான் சுட்டிக்காட்ட முயன்றேன்.

துரைமுருகன் என நான் சொல்லி இருந்த பொழுது 'ரை' என்ற எழுத்தை போல்டில் போட்ட உடன் புரிந்து கொள்வீர்கள் என நினைத்தேன். :)

மதுசூதனன் said...

மன்னிக்கணும் கொத்தனாரே...எல்லா இடங்களிலும் மாற்றி விட்டேன்...