Sunday, January 21, 2007

மாநகராட்சித் தேர்தல் கூத்து

நடந்து முடிந்த உள்ளாட்ச்சித் தேர்தல் எந்த அழகில் நடந்தது என்பது நாடறிந்த ஒன்றே. சற்றே ஆறி பிசுபிசுத்துப் போனாலும் சமீபத்தில் சென்னை உயர் நீதி மன்றம் அளித்த ஒரு தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தீர்ப்பு விவகாரமும் எல்லாருக்கும் தெரிந்ததே:

சென்னை உயர் நீதிமன்ற நீதிமதி திரு. இப்ராகிம் கலிபுல்லா அவர்கள் தான் அளித்த தீர்ப்பில் மாநில தேர்தல் ஆணையத்தையும் காவல் துறைதனையும் மிகவும் சாடியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது; மாநகராட்ச்சியின் 99 வார்டுகளில் மறு தேர்தல் நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

திமுக நினைத்திருந்தால் இவ்வளவு வன்முறையும் அராஜகமுமின்றி நிச்சயம் தேர்தலில் வெற்றி கண்டிருக்க முடியும். ஆனால் ஏன் அவ்வாறு செய்யவில்லை என்பதை சற்று யோசித்துப் பார்க்க வேண்டும். என்னைக் கேட்டால் மக்களின் மீது அவர்கட்க்கு இன்னும் சற்று பயமிருப்பதாகவே நினைக்கிறேன். இந்தப்பக்கம் இலவசங்க்ளை வாங்கிக் கொண்டு இன்னொரு பக்கம் எதிர் கட்ச்சிக் காரர்களை உள்ளாட்ச்சியில் உட்க்கார வைத்துவிட்டால் என்ன செய்வது?  வசதியாய்  சுரண்ட முடியாதே  என்று பயந்திருக்க வேண்டும். அதன் விளைவுதான் நாம் கண்ட இந்த உள்ளாட்ச்சித் தேர்தல்கள்.

திரு. சோ. ராமசாமி சொன்னதுபோல் நாம் கண்ட இந்தத் தேர்தல்கள் நாளை வரும் சட்ட மன்ற மற்றும் நாடாளு மன்ற தேர்தல்களுக்கான ஒரு ஒத்திகையாய் இது ஏன் இருக்கக் கூடாது என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை.

எப்படி ஒரு மாநில அரசாங்கத்தை நிர்வகிக்கும் ஒரு முதல்வரால் இந்தத் தீர்ப்பு பற்றி ஏதும் சொல்லாமல் இருக்க இயலுகிறது. அப்படி அவர் மவுனம் காப்பாராயின் நடந்தது எல்லாவற்றையும் அவர் ஒப்புக் கொள்கிறார் என்பது அர்த்தமா? அப்படியாயின் உண்மையிலேயே அவர் கூறிக்கொள்வது போல் அவர் ஒரு நியாயமான மனிதராய் இருப்பின் அவர் இந்த நிகழ்வுகளுக்கு முழுப் பொறுபேற்று தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அமைச்சரவை தனையும் அல்லவா கலைத்திருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் நடைபெற வில்லை என்பது இங்கு எதைக் குறிக்கிறது? "இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்..." என்ற அவரின் மனப்பான்மையை தானே குறிக்கிறது.

இப்போது இந்த மறு தேர்தல் விவகாரத்தைப் பார்ப்போம்.

இப்படி ஒரு தீர்ப்பு வந்து சுமார் இரண்டு வாரங்கள் கழித்து 99 வார்டுகளிலும் எங்கள் கூட்டணியை சேர்ந்தவர்கள் ராஜினாமா செய்வர் என அற்வித்துள்ளார் நம் முதல்வர். இதில் வேடிக்கை என்னவென்றால் 99 பேர்களில் 98 பேர்கள் மட்டுமே ராஜினாமா செய்தனர். கூட்டணி அமைந்த நாள் முதலாய் கூட்டணியின் தர்மத்தை பாதுகாத்திருந்தால் எங்கள் கூட்டணியில் அனைவரும் ராஜினாமா செய்வர் எனக் கூறலாம். ஆனால் கூட்டணியின் தர்மத்தைக் காற்றில் பறக்க விட்டவர்கள் இதைப் போன்றதொரு அறிக்கை விடுவதெல்லாம் நம்ம வடிவேலு செய்யும் காமெடி போலுள்ளது.

இந்த 99 வார்டுகளில் மறு தேர்தல் நடத்த பணம் செலவழிப்பது  யார்? மக்களின் வரிப் பணம் என்ன கலைஞரின் பரம்பரைச் சொத்தா அவர் விருப்பப் படி எடுத்துச் செலவழிக்க? இந்த மறு தேர்தலுக்கு ஆகும் செலவை அத்தேர்தலில் பங்கு கொள்ளும் அரசியல் கட்ச்சிகள் அவர் தாம் போட்டியிடும் வார்டுகளின் எண்ணிக்கைகு ஏற்ப அவர்களிடமிருந்தே வசூலிக்க வேண்டும். இந்தத் தேர்தல் மட்டுமின்றி இப்படி வன்முறை, கள்ள வோட்டு என நாட்டின் எந்த மூலையில் மறு வாக்கெடுப்பு நடந்தாலும் அதற்கான செலவை நான் மேலே சொன்னது போல் அந்தந்த கட்சிகளே ஏற்கவெண்டும். அப்படி அந்தக் கட்சிகள் ஏற்காத பட்ச்சத்தில் அடுத்த தேர்தலுக்கான சமயம் வரும் வரையில் ஆளுநர் ஆட்சி அமலில் இருக்க வேண்டு என்பதை சட்ட மாக்க வேண்டும்.

சட்டம் படித்த எவரேனும் உதவி செய்தால் நான் நிச்சயம் இதை வலியுறுத்தி நீதி மன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்வேன்.

இந்தப் பதிவைப் படிக்கும் அன்பர்களில் எவரேனும் இதற்கு உதவமுடியுமாயின் நான் பெரிதும் மகிழ்ச்சி அடைவேன்.

இந்தப் பதிவைப் பற்றி சில வரிகளை பின்னூட்டமிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

14 comments:

dondu(#4800161) said...

"அவர் இந்த நிகழ்வுகளுக்கு முழுப் பொறுபேற்று தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அமைச்சரவை தனையும் அல்லவா கலைத்திருக்க வேண்டும்."
அல்லது உள்ளாட்சி மந்திரியையாவது ராஜினாமா செய்ய சொல்லியிருக்க வேண்டும்.
:)))))))))))

அன்புடன்,
டோண்டு ராகவன்

Hariharan # 26491540 said...

அட நீங்கவேற கல(ழ)கக் காரனுங்க இவனுங்க அக்கப்போர்ல ஆட்களை இறக்கிவிட்டுட்டும், ஆட்களோடேயும் பஸ்ஸை எரிக்கிற கல(ழ)கக் கட்சிகள் பஸ் எரிப்புக்கான ஈட்டுத்தொகையைக் கட்டவேண்டும் என்கிற சட்டத்தை கருணாநிதிதானுங்க வித்டிரா செய்தது?

இந்தமாதிரி நபர் ராஜினாமா செய்வாரா?

கருணாநிதி தன் ராஜினாமாவுக்கு ராஜினாமா வேண்டுமானால் தருவார்.

சரி... ராஜினாமா எனும் வார்த்தை தமிழ் வார்த்தையா?

மதுசூதனன் said...

//கருணாநிதி தன் ராஜினாமாவுக்கு ராஜினாமா வேண்டுமானால் தருவார்.
//

நல்ல காமெடி... இந்த "ராஜினாமா" வார்த்தையைக் காட்டி புது சண்டையெல்லாம் ஆரமிக்காதீங்க. நமக்கு அவ்வளவா தமிழறிவெல்லாம் இல்லைங்க.

Thangam said...

நல்லா எழுதியிருக்கீங்க. சொன்ன வார்த்தையை காப்பாத்தி விட்டீங்க.

தங்கம்மா

மதுசூதனன் said...

வாங்க தங்கம்மா...

ஏதோ என்னால முடிஞ்சது. தொடர்ந்து வரணும்.

நாராயணன். said...

ஆஹா சூப்பர், மதுசூத்தனன் அண்ணே...
அருமையான கட்டுரை.

Anonymous said...

//சட்டம் படித்த எவரேனும் உதவி செய்தால் நான் நிச்சயம் இதை வலியுறுத்தி நீதி மன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்வேன்.//

செலக்டீவ் அம்னீசியா சொல்லின் சொந்தகார அம்மாவை ஆதரிக்கும் உம் போன்றவர்களுக்கு, வாஜ்பாயின் அரசுக்கு கொடுத்த ஆதரவை வாபஸ் பெற்று 13 வாராங்களில் மத்திய அரசுக்கு மறு தேர்தல் நடத்த வைத்த ஜெவை நியாபகம் வராதா ?மறந்துவிட்டீரோ ?. மத்திய அரசின் மறு தேர்தல் செலவு எவ்வளவு தெரியுமா ஓய் ? 1000 கொடி ! இது யார் அப்பன் வீட்டு சொத்து.

அது இராஜதந்திரமாக தெரிந்ததோ ?

அரசியலை முழுதாக படித்து வந்து எல்லாவற்றையும் கூடவே அம்மாவின் அற்புத ஆட்சியின் சாதனைகளையும் சேர்த்துச் சொன்னால் நான் கூட பொது நல வழக்கு போட உதவுவேன். அது உங்கள் நோக்கம் இல்லை என்பது இந்த பின்னூட்டம் படித்தவுடன் எல்லோருக்கும் புரியும்.

:)

மதுசூதனன் said...

முதலில் பெயர் வெளியிட விரும்பாத அனானிக்கு வணக்கம்.

இங்கே பிரச்சினை அம்மாவை ஆதரிப்பது பற்றியது அல்ல. சற்றே பதிவினைக் கூர்ந்து படித்திருந்தால் உங்களுக்குப் புரிந்திருக்கும். நான் கூறியிருந்தது அனைத்து கட்சிகளும் செலவில் பங்கேற்க்க வேண்டும் என்று தான். சரியாக படித்துவிட்டு பின்னூட்டமிடவும் அனானி.

நான எழுத ஆரமித்தது முதல் என் முன்னால் நடக்கும் தவறுகளைச் சாடுகிறேன்..அவ்வளவே.

நீங்கள் கூறுவாது எப்படி தெரியுமா உள்ளது ?

காந்தி நேரு ஆகியவர் காலத்தில் தான் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது. அவர்கள் யாவரும் திப்பு சுல்தானும் கட்ட பொம்மனும் கொல்லப்படுகையில் என்ன செய்தனர் என்பது போல உள்ளது உங்கள் கேள்வி. நீங்கள் குறிப்பிட்ட ஜெ விவகாரம் நிச்சயம் தண்டிக்கத் தக்கதே என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திமுகவை எதிர்த்தால் அதன் அர்த்தம் நான் அதிமுகவை ஆதரிக்கிறேன் என்பதல்ல. முதலில் இந்த அரைவேக்காட்டுத் தனமான யூகத்தை விடவும் அனானி.

முகில் said...

//எப்படி ஒரு மாநில அரசாங்கத்தை நிர்வகிக்கும் ஒரு முதல்வரால் இந்தத் தீர்ப்பு பற்றி ஏதும் சொல்லாமல் இருக்க இயலுகிறது?//

திருடருக்கு (முதல்வர் மூத்தவராதலால்) தேள்க் கொட்டினால் கத்தவா முடியும்?

ஆனாலும் அவர் பதில் சொன்னார்:
வீரபாண்டிய கட்டபொம்மன், சதாம் உசைன் என்றெல்லாம்........

நல்லவேளை, வடிவேலு பாணியில் "சண்டையில கிழியாத சட்டை எங்க இருக்கு"-னு சொல்லவில்லையே!.....

bala said...

//இது யார் அப்பன் வீட்டு சொத்து.//

அனானி அய்யா,

என்ன இப்படி கேக்கறீங்க?எல்லாமே ஸ்டாலின் அப்பன் வீட்டு சொத்து தான்.
ஏதோ இந்த சொத்துல மருத்துவர் அய்யா,சூரமணி அய்யா இவங்களுக்கு பங்கு கொடுத்து பெரியார்/அண்ணா வழியிலே நம்ம கருணாநிதி அய்யா நடக்கிறாரு.நடக்கட்டும்.

பாலா

Anonymous said...

ஜெயலலிதா கோடி கோடியாய் கொள்ளையடித்தபோதும், கராத்தேவை ஊர் ஊராய் துரத்தி துரத்தி கைது செய்ய நினைத்த போதும் உன் அம்மாவுக்கு சொறிந்து கொண்டா இருந்தாய் பாப்பானே?

மதுசூதனன் said...

//ஜெயலலிதா கோடி கோடியாய் கொள்ளையடித்தபோதும்...//

ஜெ கொள்ளையடித்த பணத்திற்காக இன்றும் கோர்ட் படிகள் ஏறிக் கொண்டுதான் உள்ளார் என்பதை பார்க்கத் தவறியது ஏன்?

காராத்தேவும் ஜெவும் தவறு செய்யவில்லை என்பது என் வாதமில்லை. இப்பொழுது தவறு செய்பவரைச் சாடுகிறேன் நான். அவ்வளவே.

உங்களுக்கு சற்றேனும் துணிவிருந்தால், மனசாட்ச்சியுடன் சொல்லுங்கள்... உள்ளாட்சித் தேர்தல்கள் நியாயமான முறையில்தான் நடந்தா? சும்மா எதுக்கெடுத்தாலும் பார்ப்பனனைக் குறை கூறுவதால் தவறு மறைந்து விடாது.

dondu(#11168674346665545885) said...

இப்போ 30% கூட ஓட்டு போடாத நிலையிலே கள்ள ஓட்டு ராச்சியம் தேவைல்ல்லாது மறுபடி வந்தது.

மறுபடியும் பிரும்மாஸ்திரத்துக்கு தாம்புக் கயிறா? திருந்த மாட்டார்களா நாட்டில்.

மறு தேர்தல் செலவுக்கு பணம் யார் கொடுப்பது? ஏது பணம்? எல்லாம் டி.வி. வாங்கி விட்டார்கள போலிருக்கிறது?

அன்புடன்,
டோண்டு ராகவன்

மதுசூதனன் said...

//மறு தேர்தல் செலவுக்கு பணம் யார் கொடுப்பது? ஏது பணம்? எல்லாம் டி.வி. வாங்கி விட்டார்கள போலிருக்கிறது?//

கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்த கதை தான்.