Sunday, February 18, 2007

30% Vs 70%

நேற்று நடந்து முடிந்த சென்னை மாநகராட்சியின் 67 வார்டுகளுக்கான மறு வாக்குப் பதிவில் மீண்டும் பலர் தன் திறமையை நிரூபித்துள்ளனர்! நேற்றைய வாக்குப் பதிவில் வெறும் 30% சதவிகித மக்கள் மட்டுமே வாக்களித்துள்ளதாகத் தெரிகிறது.

வன்முறைகள் இல்லாவிடினும் கள்ள ஓட்டு போடுதல் வெகு விமரிசையாக நடந்ததாகவே தெரிகிறது.  இதற்கிடையில் கள்ள ஓட்டு போட முயலுதல் குறித்து 38 புகார்கள் வந்ததாகவும் அதில் பெரும்பாலனவை அப்பட்டமான பொய் என்று கூறியுள்ளனர் நம்ம தேர்தல் பார்வையாளர்களும் காவல் துறையினரும். இந்த எதிர் கட்சி (?) காரங்களுக்கும் வேற வேலை இல்லைப்பா எப்ப பாரு சும்மா புகார் சொல்லிகிட்டே இருக்காங்க.

வெறு எந்தப் பத்திரிக்கையும் செய்யாத துணிகரமான செயல் ஒன்றை தினமலர் செய்துள்ளது. விஷமிகள் சிலர் பல முறை ஓட்டளிப்பதையும் இன்னும் சிலர் கள்ள ஓட்டு போடுவதையும் படங்களுடன் வெளியிட்டுள்ளது. அவற்றை இங்கே பார்க்கலாம். ஆனால் இச்செய்தியில் எவ்வளவு உண்மை என்பது கடவுளுக்கே வெளிச்சம். மேலும் இரு வார்டுகளில் விஷமிகள் சிலர் ஓட்டுச் சீட்டுகளை அள்ளிச் சென்றதாய் தேர்தல் அதிகாரிகளே (!) புகார் தெரிவித்துள்ளதால் அங்கே மறு தேர்தல் (வடிவேலு ஸ்டைலில் மறுபடியுமா...) நடத்த உத்தரவிடப் பட்டுள்ளது.

இந்த கள்ள ஓட்டு, இத்யாதி இத்யாதி இவற்றை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு பார்க்கவேண்டிய ஒரு முக்கியமான விஷயம் ஒன்று உள்ளது. அது தான் நான் தலைப்பில் சொன்ன 30% Vs 70%.

வெறும் 30% சதவிகித மக்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கும் பிரதிநிதிகளை ஏற்பது முறையா? 70% சதவிகித மக்கள் ஓட்டு போடக்கூட முன்வரவில்லை என்பதை நாம் இங்கு சற்று எண்ணிப் பார்க்கவேண்டும். இந்த 70% மக்களின் மனநிலை தனை கருத்தில் கொண்டு பார்க்கையில் திமுக தன் செல்வாக்கை இழந்துவிட்டது மிகவும் தெளிவாகத் தெரிகிறது. சரி மிச்சம் 70% மக்கள் அதிமுக ஆதரவாளர்களா என்று கேட்டால் அப்படியும் சொல்ல முடியாது. பொதுவாக 55%- 65% வாக்குப்பதிவு நடைபெறும் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி பார்த்தால் நம் ஊரில் உள்ள எந்த திராவிடக் கட்சிகளுக்கும் முழு ஆதரவு இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. இவற்றை கவனித்து நாம் மக்களின் தேவைக்கு ஏற்ப தேர்தல் சட்டங்களை மாற்றியமைத்தல் வேண்டும். என் மூளையில் இது குறித்து உதித்த சில யோசனைகள் இதோ கீழே:

  • ஒரு தேர்தலில் குறைந்தது 85% வாக்குப்பதிவு நடந்தால் மட்டுமே அது செல்லும் என அறிவித்தல் வேண்டும். அப்போது தான் யாருக்குப் பெரும்பான்மை என்று தெளிவாகத் தெரியும்.
  • எக்காரணம் கொண்டும் எந்த ஒரு தொகுதியிலும் மறு தேர்தல் நடத்தக் கூடாது. இதன் மூலம் பெருமளவு நேரமும் பொருளும் மிச்சப் படும்.
  • ஏதாவது ஒரு தொகுதியில் முறைகேடு நடந்திருப்பின் அந்தத் தொகுதியில் ஒரு எம்.எல்.ஏவுக்கு பதிலாய் அவரின் அத்தனை பொருப்புக் களையும் மாவட்ட கலெக்டர் அல்லது ஒரு சிறப்புக் குழுவோ பொருப்பேற்க வேண்டும்.
  • மொத்த தொகுதிகளில் 25% மேலாக தேர்தல் முறைகேடுகள் நடந்திருப்பின் எல்லா தொகுதிகளில் நடந்த தேர்தல் முழுதும் செல்லாது என அறிவித்தல் வேண்டும். அது மட்டுமின்றி அடுத்த தேர்தலுக்கான காலம் வரும்வரை (முழு 5 ஆண்டுகளும்) அங்கே குடியரசுத் தலைவர் ஆட்சி அமுலில் இருத்தல் வேண்டும்.
  • எந்த ஒரு கட்சியும் இலவசங்களை அள்ளி வழங்குவோம் என வாக்குறிதிகள் தருவதை அனுமதிக்கக் கூடாது. இந்த இலவசங்கள் அரசாங்க கஜானாவை காலி செய்வதோடு மட்டுமல்லாது நம்மை மேலும் கடனாளியாக்கவும் செய்கிறது. அது மட்டுமின்றி இத்தகைய இலவசங்கள் ஒரு குறிப்பிட்ட சாரருக்கு பெரும் வருமானம் தரும் விஷயங்களாய் அமைந்து விடுகின்றது.

இப்படி இன்னும் பலவற்றை அடுக்கிக் கொண்டே போகலாம். இதேபோல யோசனைகள் உங்களுக்குத் தோணினால் அவற்றை பின்னூட்த்தில் தெரிவியுங்கள். நான் குறிப்பிட்ட யோசனைகள் உங்களுக்குத் தவறாய் தெரிந்தால் அதைப் பற்றியும் பேசலாம். வாழ்க ஜனநாயகம் ! ஆக மொத்தம் சந்திரசேகர் மறுபடியும் நடத்திக் காட்டிட்டார்! (இதையும் படிச்சுப் பாருங்க)

6 comments:

Anonymous said...

போட்ட்டோவுல நீங்க ரொம்ப அசிங்கமா இருக்கீங்க மது.

மதுசூதனன் said...

//போட்ட்டோவுல நீங்க ரொம்ப அசிங்கமா இருக்கீங்க மது.//

அதுக்கென்னங்க பண்றது? சட்டியில உள்ளது தான அகப்பைல வரும்.

dondu(#11168674346665545885) said...

கள்ள ஓட்டுக்கு என்ன அவசியம்? அதான் பழக்கதோஷம்னு சொல்லுவாங்களா, சரி, சரி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

மதுசூதனன் said...

// அதான் பழக்கதோஷம்னு சொல்லுவாங்களா, சரி, சரி. //

:)))

வடுவூர் குமார் said...

இங்கு சிங்கையில் வாக்குப்பதிவு கட்டாயம்.
அதை நம் ஊரில் அமல்படுத்துவதற்கு முன்பு நம் ஜனத்தொகையாவது நமக்கு ஒழுங்காக தெரியவேண்டும்.அதாவது எல்லாருக்கும் அடையாள அட்டை,கொடுக்கமுடியாத பட்சத்தில் வேறு ஏதாவது ஏற்கக்கூடிய அத்தாட்சியுடன் வோட்டு போட அனுமதிப்பது.
வாக்கு குத்துவதற்கு பதில் பொத்தானை அமுக்குவதாக இருக்கவேண்டும்.(தொழிற்நுட்பத்துக்காக)
இன்னும் பல இருக்கு,சொல்லி மாளாது.
குடியரசுத்தலைவர் ஆட்சி??- ஒன்றுமே சரிப்பட்டு வாராதபோது என்றால் சரி.
இப்போது இருக்கிற நிலைமையில் பல வருடங்கள் அவர் ஆட்சியிலேயே ஓடிவிடும்.
அரசியலுக்கு படித்த பண்பாளர்கள் வரவேண்டும்.
எல்லோருக்கும் கல்வி இலவசமாக கொடுக்கவேண்டும்.இதை மட்டுமாவது இலவசமாக கொடுக்கவேண்டும்.மத்ததெல்லாம் வோட்டுக்காகவே இருக்கும்.
வரும் காலத்தில் கொடுக்கப்போகும் இலவசங்களை யோசித்தாலே பயமாக இருக்கிறது.

மதுசூதனன் said...

//ஏதாவது ஏற்கக்கூடிய அத்தாட்சியுடன் வோட்டு போட அனுமதிப்பது//

அத்தாட்சி இருந்தாலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பதில்லை. அரசியல்வாதிகளுடன் கூட்டு சேர்ந்து கொண்டு பட்டியல் தயாரிப்பவர்களும் செயல்படுகிறார்கள்.

குமார் அவர்களே... இத்தகைய மனநிலை கொண்டோரை ஒருங்கிணைத்தால் நிச்சயம் ஏதேனும் செய்ய முடியும் என்று தோன்றுகிறது. நான் சமீபத்தில் ஆரம்பித்த புது யுகம் குழுவில் இத்தகைய கருத்துடையோரை ஒன்று சேர்க்க எண்ணுகிறேன். நீங்களும் இப்பணியில் இணைந்தீர்கள் என்றால் மகிழ்ச்சியடைவேன்..