Monday, February 05, 2007

போப் யாரெனத் தெரியுமா ?

சென்னை - தாம்பரத்திலிருந்து செல்லும் ஒரு மின்சார ரயிலில்...

"டோண்டு சார்....என்னோட செல் போன் பேட்டரி தீரப்போகுது...நான் உங்களோட அப்புறம் பேசறேன்" என்று சொல்லி செல்லை அணைத்தேன்"

எதிரில் புன்னைகையுடன் ஒருவர் அமர்ந்திருந்தார்... நாகரீக நிமித்தம் ஒரு ஹலோவை உதிர்த்தேன். உடன் வந்தது வார்த்தை...

(பால் தினகரன் ஸ்டைலில்)

"எங்கள் தேவன் உங்களை விசேஷமானதொரு காரியத்துக்காக தேர்வு செய்து என்னை தூது அனுப்பியுள்ளார்..." என்றார்.

அக்கம் பக்கத்தில் இருந்தவர்களைப் பார்த்தால் "ஐயையோ இன்னைக்கு இவன் முறை போல " என்பது போல் என்னை பரிதாபத்துடன் பார்த்தனர். கைபேசியியில் பாட்டரி போய்விட்டால் என்ன இதோ....மொக்கை போட இன்னொருவர் கிடைத்துவிட்டாரே என சந்தோஷமாய் நானும் ஆரமித்தேன்.

"அப்படியா....எங்கிட்டையே நேரா சொல்லி இருக்கலாம். உங்க கிட்ட சொல்லி அனுப்பி இருக்கார்... இருந்தாலும் பரவாயில்லை. என்ன விசேஷமான வேலை அது என்றேன்.

அவரும்...கிறிஸ்துவின் அருமை பெருமை எல்லாம் ஆரம்பித்து நிறைய பேசினார். சரி பேசிவிட்டு போகட்டுமே என நானும் சும்ம இருந்தேன். திடீரென்று நடுவில் "உங்களை உங்கள் மதம் நல் வழிப் படுத்தவில்லை...படுத்தவும் முடியாது. தீய சக்திகளை தூர எறிந்து விட்டு தேவ தூதனை சரணடையுங்கள்" என்றார். அப்போது தான் எனக்கு ரொம்ப கோவம் வந்தது.

சார்...கொஞ்சமும் யோசிக்காமல் நாகரீகமின்றி இன்னொரு மதத்தினைப் பற்றி தவறான வார்த்தைகளைக் கூற வேண்டாம் என வேண்டினேன். அவர் விடுவதாகத் தெரியவில்லை. ஆகா என்னடா இது மதுரைக்கு வந்த சோதனைனு நினைத்துக் கொண்டே நான் ஒரு கேள்வி கேட்டேன்.

"கிறித்தவத்தைப் பற்றி இவ்வளவு பிரமாதமாய் பிரசங்கம் செய்து என்னை 10 நிமிடத்தில் கிறித்தவனாக்க முயலுகிறீர்களே....உங்கள் தற்போதைய போப்பின் இயற்பெயர் என்ன ? அவர் சூட்டிக் கொண்ட பெயர் என்ன ? அவர் வாடிகனின் எத்னையாவது போப் ?" என்று கேட்டேன்...

அப்படியே எதிர் பக்கம் பியூஸ் போய்விட்டது. பதில் சொல்லாது சமாளித்தார். ஒரு கட்டத்தில் ஏண்டா இவங்கிட்ட வந்தோம்னு ஆயிடிச்சி அவருக்கு. பக்கதுல உள்ளவங்க எல்லாம் சத்தமாய் சிரிக்கவும் மீனம்பாக்கம் வரவும் சரியாய் இருந்தது. நண்பர் இறங்கி எஸ்கேப் ஆகிவிட்டார்.

இதை விட காமெடி அங்கிருந்த இன்னொருவர் (அவரும் கிறித்தவ மதத்தினராம்)...

"ஒரு தூய்மையான கிறித்தவரை அவமதித்தன் மூலம் நீங்கள் பெரும் பாவியாகி விட்டீர்கள் ஏசு உங்களை ஒரு போதும் மன்னிக்க மாட்டர்..." என்று சாபம் விட்டார்.

இப்படி மதத்தினை பரப்ப விரும்பும் அன்பர்கள் தயவு செய்து உங்கள் மதம் பற்றிய முழு விபரங்களையும் தெரிந்து கொண்டு அதன் பின்னர் மற்றவரிடம் பேசப் போனால் நன்றாய் இருக்கும்.

45 comments:

dondu(#11168674346665545885) said...

"உங்கள் தற்போதைய போப்பின் இயற்பெயர் என்ன ? அவர் சூட்டிக் கொண்ட பெயர் என்ன ? அவர் வாடிகனின் எத்னையாவது போப் ?" என்று கேட்டேன்..."
உங்களுக்கு அந்த விடை தெரியாது கேட்டிருந்தால் பிரச்சினையாயிற்றே. மேலும் அவர் தான் பிராட்டஸ்டண்ட், கத்தோலிக்கர் இல்லை என்றால் என்ன செய்திருப்பீர்கள்? :)))

அன்புடன்,
டோண்டு ராகவன்

மதுசூதனன் said...

பேச ஆரம்பிக்கும் முன்னரே அவர் என் கையில் ஒரு பேப்பரை வைத்து அழுத்தினார். அதில் மிகவும் தெளிவாய் ஒரு கத்தோலிக்க் தேவாலயத்தின் பெயரினை அச்சிட்டிருந்தார்கள்.

போப் பற்றிய விபரங்கள் எனக்கு தெரியும். அதனால் தைரியமாய் கேட்டேன்.

dondu(#11168674346665545885) said...

:)))

அன்புடன்,
டோண்டு ராகவன்

சீனு said...

இதை விட மோசமாகவெல்லாம் நான் பட்டிருக்கிறேன். :)

மதுசூதனன் said...

//இதை விட மோசமாகவெல்லாம் நான் பட்டிருக்கிறேன். :) //

கொஞ்சம் விளக்கமா சொல்லலாமில்ல சீனு...எல்லாரும் திரிஞ்சிக்கலாம்.

Hariharan # 03985177737685368452 said...

//"ஒரு தூய்மையான கிறித்தவரை அவமதித்தன் மூலம் நீங்கள் பெரும் பாவியாகி விட்டீர்கள் ஏசு உங்களை ஒரு போதும் மன்னிக்க மாட்டர்..." என்று சாபம் விட்டார்.//

நடந்த மெயின் காமெடியை விட இது பெரிய காமெடி... சர்ச்சில் பாவமன்னிப்புக்காக பாதிரிமார்கள் பொட்டிக்கு அப்பால் திரையினூடாகக் கேட்டு மன்னிப்புத் தருவது அப்போ பம்மாத்தா?

கிறித்துவரே இயேசுவுக்கு கருணை உள்ளம் இல்லை மதுசூதனனை மன்னிகவே மாட்டார்ன்னு ஒப்புதல் தந்தது எலக்டிரிக் காமெடி..

எனக்கும் நிறைய அனுபவம் உண்டு... ஒரு தென்மாவட்ட கிறித்துவர் வீட்டுக்கு அவரைத் தேடிப்போன போது அவர் வீட்டில் இல்லை (என் கெட்ட நேரம்) அவர் வீட்டம்மா உட்காரச் சொல்லிவிட்டு பைபிளை எடுத்தாந்து தந்து வாசிங்கன்னு வாசிங்கன்னு பக்கத்திலேயே பள்ளிக்கூட டீச்சர்மாதிரி... ஒரே நச்சரிப்பு.... பைபிளை கீழே நாற்காலியில் வைத்துவிட்டு... அவரை வெளியே பார்த்த்துக்கொள்கிறேன்னு வெளியே பாய்ந்தேன்...

அதிலிருந்து கொஞ்சம் கிலி... சிலுவையை எந்த வீட்டின் முன் பார்த்தாலும் நேரகாலம் தெரியாமல் பைபிள் வாசிக்கச்சொல்லி என்னைச் சிலுவையில் அறைந்து விடுவார்களோ என்று ஆழ்மனம் அபாயசங்கு ஊதும்
:-))

மதுசூதனன் said...

//அதிலிருந்து கொஞ்சம் கிலி... சிலுவையை எந்த வீட்டின் முன் பார்த்தாலும் நேரகாலம் தெரியாமல் பைபிள் வாசிக்கச்சொல்லி என்னைச் சிலுவையில் அறைந்து விடுவார்களோ என்று ஆழ்மனம் அபாயசங்கு ஊதும்//

ஆகா....... நீங்களும் அனுபவிச்சீகளா இதை... :))

ஜோ / Joe said...

//"எங்கள் தேவன் உங்களை விசேஷமானதொரு காரியத்துக்காக தேர்வு செய்து என்னை தூது அனுப்பியுள்ளார்..." என்றார். //

ஒரு கத்தோலிக்கர் இந்த மாதிரி ஒரு மொழியில் (தேவன் etc)பேசி நான் கேட்டதே இல்லை

//அதில் மிகவும் தெளிவாய் ஒரு கத்தோலிக்க் தேவாலயத்தின் பெயரினை அச்சிட்டிருந்தார்கள்.//

அது எந்த தேவாலயம் என்று கூற முடியுமா ஐயா?

Anonymous said...

Hi dude,
Use this from now and see the fun.

Who's That Knocking on the Door?

A Buddhist's Guide to Evangelical Christianity'
by Ven. S. Dhammika

Ven. Shravasti Dhammika, an Australian monk, is a regular contributor
to newspapers and journals with perceptive observations on matters
related to Buddhism, Buddhist culture and Buddhist practice. He is a
distinguished lecturer who has spoken on Buddhism and Asian religions
in universities and on television and radio in Australia and
throughout Asia.

He is widely known for his thought provoking analysis on a number of
issues. Ven Dhammika is the author of many popular books on Buddhism.

Ven. Dhammika's latest work is entitled ' Who's That Knocking on the
Door? A Buddhist's Guide to Evangelical Christianity '

The Buddhist Times ( Vol. 2 No. 8 Unduvap 2546 - December 2003
issue ) has published an extract from the forthcoming book Who's That
Knocking on the Door? A Buddhist's Guide to Evangelical Christianity.

We reproduce this extract below via courtesy of Buddhist Times:

" About six months ago there was a knock on my door and I opened it
to find two evangelicals Christians there. I knew they were
evangelicals because they had that fake friendly smile on their
faces, which all evangelicals have when they are trying to convert
someone.

This was the third time that month that evangelists had come knocking
on my door and disturbing me so I decided to teach them a
lesson. 'Good morning' they said. 'Good morning' I replied. 'Have you
heard about the Lord Jesus Christ'? They asked. 'I know something
about him but I am a Buddhist and I'm not really interested in knowing more' I said. But like all evangelists, they took no notice of my wishes and proceeded to talk about their beliefs.

So I said, 'I don't think you are qualified to speak to me about
Jesus'. They looked very astonished and asked, 'Why not'? 'Because',
I said, 'you have no faith'. 'Our faith in Jesus is as strong as a
rock' they insisted. 'I don't think it is' I said with a smile. 'Please open your Bible and read the Gospel of Mark, chapter 16, verse 16, 17 and 18' I said and while they flicked through their Bibles I went quickly inside and came out again.

One of them found the passage and I asked him to read it out loud. It
said, 'He who believes and is baptized will be saved but he who does
not believe shall be condemned. And these signs will follow those who
believe in my name. They shall cast out devils, they shall speak in
tongues, they will handle snakes and if they drink poison it will not
hurt them and they will lay hands on the sick and they will recover'.

When he finished I said, 'In that passage Jesus says that if you have
real faith you will be able to drink poison and not die'. I took a
bottle of Lankem from behind my back, held it up and said, 'Here is
some poison. Demonstrate to me the strength of your faith and I will
listen to anything you have to say about
Jesus'.

You should have seen the looks on their faces! They didn't know what
to say. 'What's the problem'? I asked. 'Is your faith not strong
enough'? They hesitated for a few moments and then one of them
replied, 'The Bible also says that we must not test God'. 'I'm not
testing God', I said, 'I'm testing you. You love to witness for Jesus
and now is your big opportunity'.

Finally one of them said, 'We will go and speak to our pastor about
this matter and come back and see you. 'Ill be waiting for you' I
said as they scurried away. Of course they never came back again.
Here is a bit of advice.

Keep a copy of this Bible reference and a bottle of Lankem ready and
every time the evangelists come to your door to harass you give them
this test. You might like to have a polanga ready as well.

Evangelical Christians are often predicting that the world is going
to end very soon and Jesus is going to come again. When I was 18, I
remember very distinctly that the Jehovah's Witnesses came to our
house and told me that the world was going to end in 1975. If you
find any old Watch Tower or Awake magazines from that period you will
see many articles about the world ending in 1975. Of course they were
wrong, just as they were wrong when they predicted that the world was
going to end in 1895 and again in 1914. In the 1990's many churches
were claiming that the world was going to end in 2000.

Some naive and impressionable people were frightened enough to
believe this nonsense and converted to Christianity.

In 1991 I was working in a particular place and every lunchtime, I
would go to the restaurant on the ground floor. One day I met three
young men who told me that they were doing part time work for a man
on the 5th floor. One day as we sat having lunch together the subject
got on to religion and they told me that their boss believed that the
world was going to end in 2000.

One of them was obviously a little frightened by this possibility and
asked me what I thought about it. 'It is complete nonsense' I
said. 'I don't believe it and I guarantee that your boss doesn't
really believe it either.' 'Oh but he does' the three boys said. They
told me that he had books on the subject and he had showed them
passages in the Bible proving that the world was going to end in nine
years. 'I tell you, your boss doesn't really believe that', I said.

'Do you mind if we tell him that' they said and I told them that I
didn't mind. The next day the man together with the three boys came
to see me. We had a friendly chat about Christianity and then we got
onto the subject of the end of the world. The man insisted that the
Bible clearly predicted that the world was going to end and that he
had utter faith in the Bible.

I laughed at him. 'You Christians are so confused and lacking in
awareness that you don't know what you believe' I said. 'You have no right to doubt the depth of my faith' the man said, now a little annoyed. I said, 'I can prove that you don't really believe the end of the world and Jesus' return. 'Prove it then'! he challenged.

The three boys were now listening to our discussion very
intently. 'Alright'! I said. 'Do you believe that the world is going
to come to a complete end in the year 2000'?

'Absolutely'! said the man. 'The Bible predicts it and I believe it
will happen'. 'Okay' I said. 'I have a friend who is a lawyer. I will
ask him to come here tomorrow and you and I will draw up a proper
legally binding contract in which you will agree to give me all your
property - your house, your business and all your assets - in the
year 2001. Do you agree to do that'?

The man was flabbergasted. He didn't know what to say. 'Come on', I
said. 'If you are right, and you insist you are, in 2001 I will be in
hell and you will be in heaven with Jesus where you wont need all
your worldly goods'. 'This is just silly' said the man now very
flustered.

Now one of the boys joined in. 'Its does not seem silly to me. It
seems like a good chance for you to prove you beliefs'. 'I agree' I
said. 'Now is your big chance to demonstrate how genuine you and
strong your faith is. These boys might be so impressed that they
might become Christians. Put your faith where your mouth is'.

The man became very angry, got up and walked away. The three boys
were smiling and the one who had been a little frightened about the
end of the world was smiling the most.

மதுசூதனன் said...

//அது எந்த தேவாலயம் என்று கூற முடியுமா ஐயா?//

கிழக்கு தாம்பரத்தில் உள்ளதென நினைக்கிறேன். பெயர் சரியாக நினைவில்லை.

ஜோ / Joe said...

//கிழக்கு தாம்பரத்தில் உள்ளதென நினைக்கிறேன். பெயர் சரியாக நினைவில்லை.//

இந்த டகாலகிடி வேலையெல்லாம் வேண்டாம்.

மதுசூதனன் said...

//இந்த டகாலகிடி வேலையெல்லாம் வேண்டாம்.//

இது டகால்டி வேலை இல்லைங்க... நாகரீகம். ஒருத்தரோட அணுகுமுறை சரி இல்லைங்கிற காரணத்துக்காக எல்லாரையும் தப்பு சொல்லக் கூடாதுன்கிற எண்ணம். ஆனால் நீங்க கேட்பதாய் இல்லை.

இதான் அந்த தேவாலயம். போய் விசாரிங்க
Fatima Rosery Church

ஜோ / Joe said...

fathima Rosery church-ல இருந்து ஒருத்தர் உங்க கிட்ட வந்து "எங்கள் தேவன் உங்களை விசேஷமானதொரு காரியத்துக்காக தேர்வு செய்து என்னை தூது அனுப்பியுள்ளார்..." -ன்னு சொன்னார் ..ஹி..ஹி..புளுகிறதுக்கு ஒரு அளவு வேணாமா! --- சொன்னாலும் கொஞ்சம் பொருந்துர மாத்ஹிரி சொல்லுங்கய்யா!

மதுசூதனன் said...

ஐயா ஜோ...

என்னோட நோக்கம் என்னோட அனுபவத்தை எழுதுவது மட்டுமே. அது பொய் என நினைப்பது உமது சுதந்திரம் அதில் நான் தலையிட மாட்டேன். நம்புவது உங்கள் விருப்பம் சார்.

மதுசூதனன் said...

//சொன்னார் ..ஹி..ஹி..புளுகிறதுக்கு ஒரு அளவு வேணாமா! --- சொன்னாலும் கொஞ்சம் பொருந்துர மாத்ஹிரி சொல்லுங்கய்யா! //

ஏன் சொல்லியிருக்க முடியாது என கொஞ்சம் நியாயப்படுத்துங்கள் ஜோ...

ஜோ / Joe said...

மதுசூதனன்,
நீங்கள் ரயிலில் சுவிஷேசம் போதிக்கின்ற யாரையாவது பார்த்திருக்கலாம் .அவரும் இப்படி பேசியிருக்கலாம் .இது ஒன்றும் நடக்காத காரியமல்ல .ஆனால் நீங்கள் போப் பற்றி கேள்வி கேட்டதாகவும் ,அவர் விழித்துக் கொண்டு ஓடியதாகவும் சொல்வதும் ,அவர் கத்தோலிக்கர் என நிரூபிக்க உங்களுக்கு தெரிந்த கத்தோலிக்க கோவிலின் பெயரைச் சொல்வதும் சும்மா டுபாக்கூர் என்று நான் நம்புகிறேன்.

""எங்கள் தேவன் உங்களை விசேஷமானதொரு காரியத்துக்காக தேர்வு செய்து என்னை தூது அனுப்பியுள்ளார்..." -இப்படிப் பட்ட தொனியில் கத்தோலிக்கர்கள் பேசுவதில்லை .'தேவன்' 'விசேஷமானதொரு காரியம்' என்ற வசன வழக்குகள் கத்தோலிக்கரிடையே கிடையாது .பிற சபையினர் உபயோகிக்கும் பைபிள் தமிழ் மொழிபெயப்பில் தான் இந்த நடை இருக்கும் .கத்தோலிக்கர் உபயோகிக்கும் பைபிளில் 'தேவன்' என்றிருப்பதில்லை .'இறைவன்' அல்லது 'தந்தை' என்று தான் இருக்கும் .

இது ஒரு விளக்கமா ? என்று நீர் கேட்கலாம் .ஆனால் என்னைப் பொறுத்தவரை ,உங்கள் மேதாவித் தனத்தை காட்டிக்கொள்ள கொஞ்சம் உண்மை கலந்து எழுதியிருக்கிறீர்கள். ஆனால் ஒப்பேத்த தேரியவில்லை.

//இப்படி மதத்தினை பரப்ப விரும்பும் அன்பர்கள் தயவு செய்து உங்கள் மதம் பற்றிய முழு விபரங்களையும் தெரிந்து கொண்டு அதன் பின்னர் மற்றவரிடம் பேசப் போனால் நன்றாய் இருக்கும்.//

இதை நீங்களும் பின்பற்றவும் .மற்ற மதத்தை பற்றி குறை சொல்ல வருமுன் கொஞ்சமாவது தெரிந்து கொண்டு வரவும்.

மதுசூதனன் said...

//ஆனால் ஒப்பேத்த தேரியவில்லை.//

எனக்கு இதைச் செய்ய வேண்டிய தேவை இல்லை ஜோ.

//இதை நீங்களும் பின்பற்றவும் .மற்ற மதத்தை பற்றி குறை சொல்ல வருமுன் கொஞ்சமாவது தெரிந்து கொண்டு வரவும்.//

சற்றே உன்னிப்பாய் கவனித்திருந்தால் நான் கிறித்தவ மதத்தினை குறை கூறவில்லை என்பது விளங்கும். அதே சமயம்.......நான் எவரிடமும் சென்று ஐயப்பன் கூப்பிட்டர் முருகன் கூப்பிட்டார் என்றெல்லாம் பீலா விடவில்லை.

//இது ஒரு விளக்கமா ? என்று நீர் கேட்கலாம்//

கேட்கிறேன்... பதில் கூறுங்கள். என்னை மட்டம் தட்டுவதன் மூலம் உண்மை பொய்யாகிவிடாது ஜோ.

//""எங்கள் தேவன் உங்களை விசேஷமானதொரு காரியத்துக்காக தேர்வு செய்து என்னை தூது அனுப்பியுள்ளார்..." -இப்படிப் பட்ட தொனியில் கத்தோலிக்கர்கள் பேசுவதில்லை .'தேவன்' 'விசேஷமானதொரு காரியம்' என்ற வசன வழக்குகள் கத்தோலிக்கரிடையே கிடையாது .பிற சபையினர் உபயோகிக்கும் பைபிள் தமிழ் மொழிபெயப்பில் தான் இந்த நடை இருக்கும் .கத்தோலிக்கர் உபயோகிக்கும் பைபிளில் 'தேவன்' என்றிருப்பதில்லை .'இறைவன்' அல்லது 'தந்தை' என்று தான் இருக்கும்//

அவர் உபயோகித்தது என்னைப் பொறுத்தமட்டில் வெறும் தமிழ் மொழி தான். அது பைபிளா, கீதையா குரானொ என்பது எனக்குத் தேவை இல்லை. மேலும் தினந்தோறும் பால் தினகரன் போண்றோர் ஆற்றும் உரை தனை தொலைக்கட்சியில் பார்த்ததின் பாதிப்பாயும் இருக்கலாம். இதை உங்களால் மறுக்க இயலுமா? இயலும் எனில் ஆதாரத்துடன் மறுக்க வேண்டும்.

அதைவிடுத்து எனக்கு ஒப்பேற்றத் தெரியவில்லை எனக் கூறி நீங்க ஒப்பேற்றாதீர்கள் ஜோ. :)

Anonymous said...

ஜோ சொல்வதில் உள்ள உண்மையை உணர்வது கத்தொலிக்க ப்ரோட்டஸ்டண்ட் வித்தியாசங்களை நன்கு புரிந்தவர்களுக்கே சாத்தியம். பெரும்பாலும் கத்தோலிக்கர்கள் இது போன்று பொது இடங்களில் ஒருவரின் விருப்பமின்றி அறுவை போடுவதில்லை. இது போன்றநபர்கள் பேச ஆரம்பிக்கும் போதே விருப்பமில்லை என நாசூக்காகவும்,ந்ற்கவில்லை எனில் அழுத்தியும் சொல்லி விட வேண்டும். மற்றபடி ஜோ சொல்லியது 100% உண்மை. வார்த்தைகளில் இரண்டு பிரிவுகளுக்கும் உள்ள வித்தியாசங்களை புரிந்து கொள்ளுவது கிறிஸ்துவரல்லாதவருக்கு கடினம். (என் தந்தை கத்தோலிக்கர், தாய் ப்ரோட்டஸ்டண்ட்....நான் இறை மறுப்பாளன்)

மதுசூதனன் said...

//ஜோ சொல்வதில் உள்ள உண்மையை உணர்வது கத்தொலிக்க ப்ரோட்டஸ்டண்ட் வித்தியாசங்களை நன்கு புரிந்தவர்களுக்கே சாத்தியம்...//

ஒப்புக் கொள்கிறேன் அனானி. விஷயம் ரொம்ப சிம்பிள். நான் ப்ரோட்டஸ்டண்ட் அதனால் போப் யார் எனக் கூட தெரிந்து கொள்ளமாட்டேன் என்பது எவ்வளவு புத்திசாலித்தனம் ? தயவு செய்து ஒரு விஷய்ம் புரிந்து கொள்ளவும். என் நோக்கம் கிறித்தவத்தை அவமதிப்பதல்ல. என் நோக்கம் என் அனுபவத்தினை பகிர்ந்து கொள்வது மட்டுமே. இதில் ஒரு மதத்தின் சில பிரிவுகளையும், மற்ற மதங்களையும் இழுக்காது இருத்தலும் நன்று என்பது என் கருத்து.

//....நாசூக்காக .... அழுத்தமாக.. //

நிச்சயம் முயற்சித்தேன். ஆனாலும் மனிதர் நகருவதாய் தெரியவில்லை. எனவே தான் பதிவில் குறிப்பிட்ட அனைத்தும் நடந்தது.

கால்கரி சிவா said...

மதுசூதனன், உங்கள் அனுபவம் உண்மை என்பதில் எனக்கு கடுகளவும் ஐயமில்லை.

என் அனுபவம் இதோ:

போன வருடம். ஒரு சனிகிழமை. காலை மணி 10. கடும் குளிர். குளிர் என்றால் -35 டிகிரி சி.

நான் லுங்கி கட்டிக் கொண்டு சட்டை போடாமல் புத்தகம் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது என் வீட்டு அழைப்பு மணி அடித்தது. இங்கெல்லாம் இந்த மாதிரி அழைப்பு மணி அடிப்பவர்கள் பக்கத்து வீட்டுகாரர், அல்லது டொனேஷேன் கேட்கும் சமூக சேவகர் (நானும் வீடு வீடாய் போய் டயபடிஸ் பவுண்டேஷனுக்கு உண்டியல் குலுக்கியிருக்கிறேன்) அல்லது மத பிரசாகர் ஆக இருக்கவேண்டும். கதவு திறந்தால் கிறித்தவ மத பிரச்சாரம் செய்யும் ஒரு ஆடவரும் ஒரு பெண்மணியும்.தங்களை அறிமுகப் படுத்திக் கொண்டார்கள் அவர்களை உள்ளே அழைத்து அமரவைத்துவிட்டு உடை மாற்றி வருகிறேன் என உள்ளே போய் உடை மாற்றிக் கொண்டு வந்தேன்.

அவர்களிடம் தாங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் டீ/காபி/கோக் என கேட்டேன். அவர்கள் தயங்கியபடியே டீ கேட்க நானும் டீ போட்ட படி அந்த பெண்மணியிடம் பேசினேன். அந்த ஆடவர் மேஜை மேல் நான் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்தார்.

டீ போட்டுக் கொண்டு அமர்ந்ததும் அந்த ஆடவர் என்னிடம் நான் கிறித்தவர் என்று கேட்டார். நான் இல்லை என்றேன். பிறகு முஸ்லிமா என்றார் இல்லையென்றேன். புத்திஸ்ட்டா என்றார் இல்லையென்றேன். சீக்கியரா என்றார் இல்லையென்றேன். அப்படியென்றால் தாங்கள் யார் என்றார். நான் மனிதன் இந்து தர்மத்தை பின் பற்றுபவன். இந்து பிறரை அவர்கள் வீட்டில் விட மாட்டார்கள் என படித்திருக்கிறேன். தாங்கள் வீட்டிற்கு உள்ளே அழைத்து டீ தந்து உபசரிக்கிறீர்கள் ஆகையால் தாங்கள் இந்துவாக இருக்கமுடியாது என தீர்மானித்து விட்டேன் என்றார். எனக்கு சிறிது சூடு ஏறியது. ஐயா தாங்கள் கிறித்துவத்தை பரப்ப வந்திருக்கிறீர்கள் எனக்கு தெரியும். நான் உங்களிடம் இப்பவே சர்ச்சுக்கு வந்து உங்கள் இறைவனை என்னால் வணங்க முடியும். உங்களால் கோவிலுக்கு வேண்டாம் என் வீட்டில் இருக்கும் பூஜை அறைக்கு வந்து என் இறைவனை உங்களால் வணங்க முடியுமா என கேட்டேன். அவர் முழித்தார். அவரை மேலும் சங்கடத்தில் ஆழ்த்தாமல் என் மேஜையில் உள்ள புத்தகத்தை புரட்டிக் கொண்டிருந்தீர்களே அந்த புத்தகத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என கேட்டேன். அவர் யாரோ பெயர் தெரியாத எழுத்தாளர் என்னவோ உளறியிருக்கிறார் என்றார். ஐயா அவர் பெயர் தெரியாதவர் இல்லை நோபல் பரிசு பெற்றவர் என்றேன். அது சரி இந்துக்கள் வீட்டினுள் விடமாட்டார்கள் என யார் சொன்னார்கள் என்றேன். புத்தகத்தில் போட்டிருந்தது என்றார். ஐயா. புத்தகத்தில் இருக்கிறது புத்தகத்தில் இருக்கிறது உங்கள் மூளையை மழுங்கடித்து விட்டார்கள். உங்கள் கையில் உள்ள புத்தகத்தை தூக்கி எறியுங்கள். நேரடி அனுபவம் பெறுங்கள். நேரடியாக உங்களிள் உள்ள இறைவனை காணுங்கள் என நீண்ட லெக்சர் கொடுத்தேன். பாவம் ஒரு டீக்காக என் டார்ச்சரை தாங்கி கொண்டார்.

நம்ம அரசியல்வாதிகள் ஓட்டு போட வேட்பாளர்களை அணுகுவதைபோல் ஆன்மா அறுவடை செய்ய வருகின்றேனர் இந்த மத அரசியல் வாதிகள். இவர்களுக்கு செல்லா ஓட்டுதான் என்னிடமிருந்து கிடைக்கும்

பி.கு. அந்த புத்தகம் "Beyond Belief: Islamic Excursions Among the Converted Peoples by V.S. Naipaul"

கால்கரி சிவா said...

மது, வந்தவரிடம் கத்தோலிக்கரா, புராஸ்டண்டா என கேட்கவில்லை.

ஜோ / Joe said...

//நான் ப்ரோட்டஸ்டண்ட் அதனால் போப் யார் எனக் கூட தெரிந்து கொள்ளமாட்டேன் என்பது எவ்வளவு புத்திசாலித்தனம் ?//
கத்தோலிக்கம் என்பது தனி மதம் .அதற்கும் அதன் போப்புக்கும் மற்ற சபையினருக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை..அவர்களெல்லாம் போப் பற்றி தெரிந்து கொண்டிருக்க வேண்டும் என்பது என்னய்யா புத்திசாலித் தனம்?

//என் நோக்கம் என் அனுபவத்தினை பகிர்ந்து கொள்வது மட்டுமே. இதில் ஒரு மதத்தின் சில பிரிவுகளையும், மற்ற மதங்களையும் இழுக்காது இருத்தலும் நன்று என்பது என் கருத்து.//

நீர் தானய்யா ஒரு பிரிவினர் செய்த செயலுக்கு சம்பந்தம் இல்லாமல் இன்னொரு பிரிவினரை இழுத்தது. சம்பந்தம் இல்லாமல் இழுக்கலாம் என்கிறீர்களா?

மதுசூதனன் said...

ஜோ...
//கத்தோலிக்கம் என்பது தனி மதம் .அதற்கும் அதன் போப்புக்கும் மற்ற சபையினருக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை..//

அப்படியா!?!?

எனக்குத் தெரியாதுங்க. எனக்குத் தெரிஞ்சது இதுதான். கிறித்தவ மதம் மொத்தம் மூன்று வகையாக பிரிந்துள்ளது.

1. ரோமன் கத்தோலிசம்
2. கிழக்குக் கிறித்தவம்
3. ப்ரோடெஸ்டென்டிஸம்

என்னதான் மூன்று பிரிவுகள் இருப்பினும். மையக்கரு என்னவோ கிட்டத் தட்ட ஒன்று தானே சார்? ஏசு கிறிஸ்து இந்தப் பிரிவை ஏற்படுத்தித் தந்தாரா என்ன? இல்லையே...நாம் தானே ஏற்படுத்தினோம்??

என்னிடம் கிறித்தவம் பேச வந்தவர் ஆத்மார்த்தமாக மதம் பற்றி பிரச்சாரம் செய்யவில்லை. காசு கிடைக்கிறதே என்று டை கட்டிக்கொண்டு சோப்பு விற்பவரைப் போன்று தான் பேசினார்.

கால்கரி சிவா & ஜோ
//மது, வந்தவரிடம் கத்தோலிக்கரா, புராஸ்டண்டா என கேட்கவில்லை.//

கேட்க்கவேண்டிய தேவை இருந்ததாய்த் தெரியவில்லை.

dondu(#11168674346665545885) said...

ஏன் ஜோ அவர்களே, மதுவிடம் அவர் தான் ப்ராட்டஸ்டண்ட், போப் தெரியாது என்று ஏன் கூறவில்லை?

மது, நான் நினைக்கிறேன், வந்த ப்ராட்டஸ்டண்ட் கதோலிக்க சர்ச்சின் காகிதத்தை வேர்க்கடலை பொட்டலம் கட்டுவதற்காக வைத்திருக்க வேண்டும், ஞாபக மறதியாக உங்களிடம் கொடுத்து விட்டார் என நினைக்கிறேன். நல்ல வேளை நீங்கள் அயர்லாந்தில் இல்லை. இல்லையென்றால் அவர் உங்களை கத்தோலிக்கர் என நினைத்து கொன்றே போட்டிருப்பார். அவ்வளவு சகோதர பாசம் இரு பிரிவினருக்குமிடையில்.

பிராட்டஸ்டண்ட் என்று தெரிந்திருந்தால், நான் அங்கு இருந்திருந்தால் அவரை இக்கேள்வி கேட்டிருப்பேன். பிராட்டஸ்டண்ட் என்ற பெயர் எப்படி வந்தது? (விடை: கத்தோலிக்க போப்பிற்கு எதிராக ப்ரொட்டஸ்ட் செய்து வந்தது). ஆர்ச்பிஷப் ஆஃப் காண்டர்பரி கேட்டிருப்பேன்.

சங்கீதம் புத்தகத்தில் 23-ஆம் சங்கீதத்தை தமிழில் ஓதக் கேட்டிருப்பேன். ஓதிப் (ஸ்பெல்லிங் தவறு அல்ல) போயிருப்பார்கள். அதையெல்லாம் விட்டுவிட்டு இங்க வந்து, என்னமோ போங்க...

அன்புடன்,
டோண்டு ராகவன்

G.Ragavan said...

மதுசூதனன் எழுதியது உண்மையோ பொய்யோ எல்லது அவரது டெக்னிகல் புரியாமையோ என்பதைப் பற்றியெல்லாம் விவாதிக்காமல் ஒரு செய்தி மட்டும் சொல்லிச் செல்கிறேன்.

பெங்களூரில் ஒருமுறை இப்படித்தான் ஒருவர் வீட்டுக் கதவைத் தட்டினார். அவர் தேவனென்றெல்லாம் தொடங்கிவில்லை. ஆங்கிலத்தில்தான் உரையாடல். அதுவும் நாட்டு நடப்பின் பிரச்சனைகளைப் பற்றி. அவர் தன்னை ஒரு சர்வே எடுப்பவராக அடையாளப் படுத்திக் கொண்டார். ஆகையால் அவருடன் உரையாடினேன். (எந்த) மதம் தொடர்பானது என்றால் வேறு வேலை இருக்கிறது என்று சொல்லியிருப்பேன்.

எனக்குத் தோன்றிய விடைகளை நான் சொல்லிக் கொண்டு வந்தேன். ஆனால் அந்த விடைகளை அவரால் ஏற்க முடியவில்லை என்று நினைக்கிறேன். "நல்ல விடை. ஆனால் ஏன் இப்படி இருக்கக் கூடாது" என்று கேட்டார். பிறகு சில புத்தகங்களைக் கொடுத்துப் படிக்கச் சொன்னார். புரட்டிப் பார்த்ததும் உண்மை புரிந்தது. பொய் சொல்லி விட்டீரே என்று புத்தகங்களைத் திரும்பக் கொடுத்து விட்டேன். பிறகு மதம் தொடர்பாகப் பேச்சு திரும்பியது. ஒரு ஐந்து நிமிடம் போயிருக்கும். அவர் வருகிறேன் என்று சொல்லிக் கொண்டு கிளம்பினார். "ஏன்? பேச்சை ஒழுங்காக முடித்துக் கொள்ளலாமே. என்ன அவசரம். நமக்கு ஒரு தெளிவு கிடைக்குமே" என்றேன். "இல்லை.இல்லை. எனக்கு வேலை இருக்கிறது" என்று சொல்லி விட்டுப் போய் விட்டார்.

மதுசூதனன் said...

வாங்க ராகவன்...

உங்க பின்னூட்டத்துக்கு நன்றி.

ஜடாயு said...

மது,

இதில் எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது என்னவென்றால் அந்தப் பிரசாரகரை நீங்கள் முழுவதும் பேசவிட்டு, அவரது எனர்ஜி வீணானது.. கடைசியில் இப்படி ஒரு கேள்வி கேட்டு அவரைக் கடுப்படித்தது.

இப்படி ஒரு 25 பேர் செய்தால் போதும், இந்த மதமாற்ற வெறியர்கள் நொந்து நூலாவார்கள்.

மதுசூதனன் said...

வாங்க ஜடாயு என்ன ஸ்ரீஸ்ரீ மேட்டருக்கு அப்புறம் நம்ம பக்கம் வரவே இல்லை. இப்ப வந்தது சந்தோஷம்.

//....இப்படி ஒரு 25 பேர் செய்தால் போதும், இந்த மதமாற்ற வெறியர்கள் நொந்து நூலாவார்கள். .......//

நிச்சயம் கேட்போம் ஜடாயு.

இது கூட பரவாயில்லை. என்னை நக்கல் பண்ணி இதுக்கொரு பதிவு வேற போட்டிருக்காங்க பார்த்தீங்களா அதை ?

-L-L-D-a-s-u said...

நக்கலில்லை மதுசூதனன். உங்கள் பொய்யை அம்பலப்படுத்தும் பதிவு .

http://lldasu.blogspot.com/2007/02/blog-post.html

சிறில் அலெக்ஸ் said...

மது.
முன்பு ஒரு பின்னூட்டம் போட்டிருந்தேனே கிடைக்கவில்லையா?

ஜோ, மது சூதனனின் நோக்கம் சரியானதாகவே இருக்கிறது என நினைக்கிறேன் அவர் சொல்லியிருக்கும் தகவல்களில் பிழையிருக்கலாம்.

மது அடுத்தமுறை வருபவருக்கு இந்து மதக் கோட்பாடுகளை எடுத்துச் சொல்லுங்கள்.

திருந்திடுவார்.

மதுசூதனன் said...

-L-L-D-a-s-u

நான் வந்து படிச்சு பின்னூட்டம் போட்ட பதிவுக்கு (பல மணி நேரம் முன்பேபிரசுரமும் செய்தாகிவிட்டது) இப்ப வந்து சுட்டி குடுக்கறீங்களே! காமெடி பண்ணாதீங்க சார்.

ஆக பின்னூட்டம்னு எது வந்தாலும் பிரசுரம் பண்ணிடுவீங்க. யார் என்ன ஏதுனு ஒரு கேள்வியும் இல்லை போல. போலி டோண்டுனு ஒருத்தன் நம்ம குடும்பம் மொத்ததையும் கேவலப் படுத்தும்படி பின்னூட்டம் போடுவான். அதையும் இப்படி பிரசுரம் பண்ணி வெக்காதீங்க சார்.

மதுசூதனன் said...

//மது.
முன்பு ஒரு பின்னூட்டம் போட்டிருந்தேனே கிடைக்கவில்லையா?//

பின்னூட்டம் ஏதும் இல்லை அலெக்ஸ். இது தான் கிடைத்தது.

//மது அடுத்தமுறை வருபவருக்கு இந்து மதக் கோட்பாடுகளை எடுத்துச் சொல்லுங்கள்.//

அப்படிச் செய்தால் என்னை வலுக்கட்டாயமாய் மதமாற்றம் செய்யத் தூண்டுபவருக்கும் எனக்கும் என்ன வித்யாசம்? ஆகவே தேவையெனில் மட்டுமே அவற்றை பற்றி பேசுவேன்.

Muse (# 5279076) said...

இத்தகைய மதப் பிரச்சாரகர்களைவிட பைபிள் சொல்லும் நல்ல விஷயங்களைப் பின்பற்றும் கிருத்துவர்களே மக்களை கவர்கிறார்கள். அப்படி எத்தனையோ பேர் உண்டு. ஆனால் அவர்கள் நமது கண்களுக்குத் தட்டுப்படாதது கிருத்துவ இறையியலின் குறை இல்லை.

மதுசூதனன் said...

//இத்தகைய மதப் பிரச்சாரகர்களைவிட .......//

லென்ஸ் வெச்சி தேடினாலும் கிடைக்க மாட்டேங்கிறாங்கப்பா. இதுல வண்ணமா நான் பொய் சொல்றதா எதிர் பதிவு மட்டும் போடுறாங்க.

Anonymous said...

மதுசூதனன், உங்கள் அனுபவம் உண்மை என்பதில் எனக்கு கடுகளவும் ஐயமில்லை.

-L-L-D-a-s-u said...

அய்யா.. இங்கே என் பதிவின் லிங்க்கைக் கொடுத்தது நீர் 'நக்கல் பதிவு' என்று மட்டும் சொல்லி, பதிவின் லிங்கை கொடுக்காததினால் தான் . அய்யோ..

போலியால் பாதிக்கப்பட்ட மூன்றாவது நபர் நான் (2005 தொடக்கத்தில் என்று நினைக்கிறேன்) .. டோண்டுவிடம் கேளுங்கள் ..இப்போ டோண்டு.. இதெல்லாம் எனக்குத் தேவையா என்று இப்போது தோன்றுகிறது.

சிறில் , இவரிடம் வந்து போதனை செயததை நம்பாமல் இல்லை . போப் கேள்வி கேட்டதற்கு ஓடினார் என்பதை நம்ப முடியவில்லை . இதற்கெல்லாம் அசருபவர்களா அவர்கள் ..

மதுசூதனன் said...

புரியலையே....கொஞ்சம் விரிவா சொல்லுங்அ தாசு..

HosurOnline.Com said...

It shows clearly that the man who detailed you the religion and the man who gave you "chaabam" are the people who are there for wheat "kOthumai kiriththuvarkaL".

Cracks and mads are there in all the religions!!!

Anonymous said...

//

dondu said
நல்ல வேளை நீங்கள் அயர்லாந்தில் இல்லை. இல்லையென்றால் அவர் உங்களை கத்தோலிக்கர் என நினைத்து கொன்றே போட்டிருப்பார். அவ்வளவு சகோதர பாசம் இரு பிரிவினருக்குமிடையில்.

Misguiding information from dondu

Ireland is catholic majority country

http://en.wikipedia.org/wiki/Republic_of_Ireland

more over strongly I agree with Joe.

some gentlemen has written thier feelings of holy cross, I also had the same feeling by seeing Kalli temple and swords.

Anonymous said...

புளுகுவதற்கு பாப்பான்களுக்கு சொல்லி தரவா வேணும்?

மது மாமாவும், டோண்டு தாத்தாவும் போட்டு போட்டு புளுகுறானுங்க.

மதுசூதனன் / Madhusudhanan said...

பேர் சொல்லி பின்னூட்டம் போட தைரியமில்லாதவங்க எல்லாம் நாட்ல இவ்வளவு பேச ஆரமிச்ட்டீங்க. என்ன பண்றது. இந்தியாவோட கெட்ட காலம் உங்க வடிவத்துல வந்திருக்கு.

Anonymous said...

All pappans must be thrown from india

மதுசூதனன் / Madhusudhanan said...

//All pappans must be thrown from india//

உருப்படியாய் ஒன்றும் செய்வதாய் உத்தேசமே இல்லை போல... வாழ்க பாரதம்

Kasi Arumugam - காசி said...

சபாஷுடா தம்பி.
நெத்தியடி!

Doctor Bruno said...

//Cracks and mads are there in all the religions!!!//

வழி மொழிகிறேன்

//இத்தகைய மதப் பிரச்சாரகர்களைவிட பைபிள் சொல்லும் நல்ல விஷயங்களைப் பின்பற்றும் கிருத்துவர்களே மக்களை கவர்கிறார்கள். அப்படி எத்தனையோ பேர் உண்டு. ஆனால் அவர்கள் நமது கண்களுக்குத் தட்டுப்படாதது கிருத்துவ இறையியலின் குறை இல்லை.//

அவர்கள் உங்களிடம் வந்து "தேவன்", "பாவி" "பைபிள்" என்றெல்லாம் கூறி உங்களின் நேரம் மற்றும் அவர்களின் நேரம் இரண்டையும் வீணாக்க மாட்டார்கள் !!!