Tuesday, February 06, 2007

காவிரி - அரசு என்ன செய்யப் போகிறது?

காவிரி தீர்ப்பாயம் தன் இறுதித் தீர்ப்பினை வழங்கியுள்ளது. இந்தத் தீர்ப்பின் மூலம் தமிழகத்துக்கு நீதி கிடைத்துள்ளதாகக் கூறியுள்ளார் முதல்வர் திரு. கருணாநிதி. யோசிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் இந்தத் தீர்ப்பு செயல் படுத்தப் படுமா என்பதே. மேலும் இந்தத் தீர்ப்பினால் கர்நாடகத்தில் வாழும் தமிழர்களின் உயிருக்கும் உடமைக்கும் பாதிப்பு ஏதும் ஏற்படாது தடுக்க என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகின்றது அரசு? இத்தகைய நடவடிக்கைகளுக்கு கர்நாடக அரசின் ஒத்துழைப்பு எந்த அளவிற்கு கிடைக்கும் என்பது சற்று கேள்விக் குறியாகவே உள்ளது.

இந்த காவிரி விஷயத்தில் தமிழகத்திற்கு சாதகமாய் தீர்ப்புகள் வருவது ஒன்றும் புதிதல்ல. இதற்கு முன்னர் நீதி மன்றங்களில் இத்தகைய தீர்ப்பு வந்துள்ளது. அவை வெறும் காகிதங்களாகவே உள்ளன. ஏறக் குறைய 16 ஆண்டுகளுக்குப் பிறகு காவிரி நதி நீர் பங்கீடு விவகாரத்தில் வெளியாகியுள்ள இந்தத் தீர்ப்பு ஆண்டாண்டு காலமாய் அவதியுறும் தமிழக விவசாயிகளின் துயர் துடைக்குமா? தெரிந்து கொள்ளா ஆசைப்படுகிறேன்.

படிப்பதோடு நின்றுவிடாது உங்கள் கருத்துக்களைப் பின்னூட்டமிட்டு தெரிவிக்கவும்.

8 comments:

கென் said...

எல்லாத்தையும் இழந்து கடந்த 50 வருடங்களில் விவசாயம் பொய்த்ததால் ஓட்டாண்டியாய் போன காவிரிக்கரை விவசாயிகளுக்கு ஏதேனும் நிவாரணம் உண்டா??
தண்ணீர் தேவை என்கிற போது என்றாவது திறந்திருக்கிறார்களா?? அறுவடை சமயத்தில் வரும் தண்ணீர் இல்லாவிடில் உளுந்து பயிர் செய்கையில் நீர் வடியேற்றும் போது பெருக்கெடுத்து வரும்.
நான் வேண்டுவதெல்லாம் கொள்ளிடம் பெருக்கெடுக்கும் வெள்ள நீரை சேமிக்கும் வகையில் ஒரு அணைக்கட்டு, கடைமடை பகுதிகளான நாகை , திருவாரூர் பகுதிகளில் பெட் டேம் எனப்படும் சிறு அணைகள் .
தூர்ந்திட்ட தொலைந்திட்ட வாய்க்கால்கள் , குளங்கள் , ஏரிகள் மீண்டும் சரிசெய்தால் நீருக்கு எவனிடமும் கையேந்திட அவசியமற்றுப்போகும்

Anonymous said...

தமிழ்நட்டிற்கு தண்ணிர் கொடுப்பது அவ்வளவு எளிதில் நடக்காது மதுசூதனன்.இதில் அநாவசியமாக அரசியல்வாதிகள் புகுந்து விட்டனர்.திரும்பவும் அப்பீல்,நடுவர் மன்றம்,அந்த மன்றம் என்று பாவ்லா காட்டி,மழையால் வரும் நீரைத் தான் கொடுத்ததாய் தம்பட்டம் அடித்து,உருப்பட விடமட்டார்கள்.உபயோகிப்போர்-இரண்டு பக்கமும், கலந்து பேச வேண்டிய விஷயமிது.இவன் கேட்கிறான்;அவனுக்கு பயம்,கொடுத்தால் நாம் வரண்டு விடுவோம் என்று.அறிவு பூர்வமாக அணுக வேண்டிய ஒன்றை நம் அரசியல் வியாதிகள் உணர்ச்சிகளை கிளப்பி விவசாயிகளின் வயிற்றில் அடிக்கின்றனர்.எலிக்கறியும்,விவசாயி தற்கொலையும் ஒட்டு கொடுக்குமே!
ஒருவேளை இந்த நீருக்கும் சாய் பாபாதான் வர வேண்டுமோ என்னவோ!!
அன்புடன்
பசும்பொன் பாண்டியன்

மதுசூதனன் said...

இது ஒண்ணும் புதுசில்லையே... வழக்கமா இப்படித் தான் நடக்குது. இனி என்ன நடக்கும்னு பார்க்கலாம்.

Anonymous said...

வழக்கமா நடப்பதுதான் இப்பவும் நடக்கும்.பின்னால் மியுசிக் மட்டும் மாறும்.இது என்ன மாநகராட்சி தேர்தலா அடியால்(ள்) ஜெயிக்க!!கோர்டு அதையும் கவிழ்த்து விட்டது??!!வாழ்க எலிக்கறி.அதுதானே ஜெயிக்க வைக்கும்.
அன்புடன்
பசும்பொன் பாண்டியன்

மதுசூதனன் said...

பசும்பொன் பாண்டியன்...

மாநகராட்சி தேர்தல் குறித்த என் பதிவை பார்த்தீர்களா? இங்கே பாருங்கள்

dondu(#11168674346665545885) said...

நிலைமையை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

படித்தேன் மதுசூதனன்.தி மு கவை கூறினால் உடன் ஜெக்கு ஜே போடுவதாக வாந்தி எடுக்கும் அரை செரிமானங்கள்.
டோண்டு மேட்டரைப் பாருங்க.அதை வைத்தே இது வரை பல பதிவுகள்.ஒரு ஆள் வேறு மேட்டரே இல்லாமல் ரெண்டு தடவை வாந்திப் பதிவு போட்டாச்சு.
எலிக்கறி,சாதீயம்,இதில் கிடைக்கும் ஓட்டு,காவிரியை கொண்டு வருவதால் கிட்டுமா நண்பரே!வலையிலேயே பாருங்கள்.பின் மடல்கள்,அதிகம் காவிரிக்கா,சாதியத்துக்கா,டோண்டு மேட்டருக்கா!
அன்புடன்
பசும்பொன் பாண்டியன்

மதுசூதனன் said...

//வலையிலேயே பாருங்கள்.பின் மடல்கள்,அதிகம் காவிரிக்கா,சாதியத்துக்கா,டோண்டு மேட்டருக்கா!//

என்ன பண்றது பாண்டியன் ? மக்களுக்கு டோண்டு வேறு பெயரில் பின்னூட்டம் போடுவது தான் பெரிய விஷயம். காவிரியில் தண்ணீர் வந்தாலென்ன வராது போனால் என்ன.

டோண்டுவினைப் பார்த்து சாதி பேசுகிறாய் என்று சொல்பவர் பலர் தாமும் அதைக் கொண்டு தான் பிழைப்பு நடத்துகிறோம் என்பதனை மறந்து விடுகின்றனர்.