Tuesday, February 06, 2007

தாஜ் மகாலா அல்லது தேஜோ மஹாலயமா ?

கொஞ்ச நாளைக்கு முன்ன இணையத்துல இந்த விஷயம் கிடைச்சது. முழுசும் ஆங்கிலத்தில் இருந்ததால் மொழிபெயர்க்க கொஞ்சம் சோம்பேறித்தனம். ஆனால் இன்றைக்கு செய்து விடுவது என்று வரிந்து கட்டிக் கொண்டு இறங்கி விட்டேன்.

முன்கதை சுருக்கம் இது தாங்க...

தாஜ் மஹால் ஷாஜஹானால் கட்டப் பட்டது கிடையாது. அது அவர் ஒரு ராஜ்புட் அரசரிடமிருந்து (ஜெய் சிங்) பிடுங்கியது. மும்தாஜுக்காக ஷாஜஹான் தாஜ் மஹாலைக் கட்டியாதக் கூறப்படுவது உலக மஹா டகால்டி.

இப்ப விஷயத்துக்கு வருவோம்.

 நம்ம பள்ளிக்கூட காலத்துலேர்ந்து படித்துக் கொண்டு வருவது என்னவெனில்:

தாஜ் மகாலை கட்டியது ஷாஜஹான். அவரது மனைவி மும்தாஜின் நினைவாய் அவர் இதைக் கட்டினார். இதை வடிவமைத்தவர் இரான் நாட்டைச் சேர்ந்த உஸ்தாத் இசா என்பவர். தாஜ் மகாலை கட்ட 22 ஆண்டுகள் பிடித்தது. தாஜ் மஹால் கட்டப் பட்ட காலம் கிபி 1631 - 1653. சுமார் 20000 பேர் இதற்காக உழைத்தனர்.

இப்ப இதைக் கேளுங்க

பேராசிரியர் பி. என். ஓக் என்ன தன்னோட புத்தகம் "Taj Mahal : The True Story" தனில் என்ன சொல்றார்னா...

தாஜ் மஹால்ல் விஷயத்தில் உலகம் முழுவது ஏமாற்றப் பட்டுள்ளது. தாஜ் மஹால் மும்தாஜின் சமாதி அல்ல அது ஒரு புராதான சிவன் கோயில் என்று குறிப்பிடுகிறார். முன் காலத்தில் தாஜ் மஹால் "தேஜோ மஹாலயா" என்ற பெயரால் அழைக்கப் பெற்றது என்கிறார். நம்ம ஷாஜஹான் ராஜ்புட் அரசர் ஜெய் சிங் கிட்டேர்ந்து இந்த பெரிய பில்டிங்கை ஆட்டைய போட்டதா சொல்றார். அது மட்டுமின்றி ஷாஜஹான் தன் சொந்த குறிப்புகளில் (பாத்ஷாநாமா) "ஆக்ராவில் மிகவும் அழகான ஒரு மாளிகை தனை ஆட்டையைப் போட்ட விவரத்தைக் குறித்து வைத்துள்ளார்". எனினும் அது தான் தாஜ் மஹால் என அவர் எழுதவில்லை.

முன்னால் ஜெய்பூர் மஹா ராஜாவின் குறிப்புகளில் ஷாஜஹான் ராஜ்புட் மன்னன் ஜெய் சிங்கிற்கு இது குறித்து அனுப்பிய இரண்டு ஆணைகள் இன்னும் பத்திரமாய் உள்ளன என்றும் கூறியுள்ளார்.

முகலாயர்கள் ஆண்ட காலத்தில் கோயில்களைலும் பெரிய மாளிகைகளைலும் இறந்த முகலாய மன்னர்களையும் ராணிகளையும் புதைப்பதை வழக்கமாய் கொண்டிருந்தனர் என்பது எல்லோரும் அறிந்ததே. உதாரணம். ஹுமாயுன், அக்பர், எத்மத் உத் தவுலா, சப்தர்ஜங் இவர்கள் அனைவரும் புதைக்கப் பட்டுள்ள இடங்கள் பெரிய மாளிகைகளே என்பது குறிப்பிடத் தக்கது.

பேராசிரியர் ஓக் தன் விசாரணை தனை "தாஜ் மஹால்" எனும் பெயரிலிருந்து துவக்கினார். இது பற்றி அவர் "மஹால்" எனும் வார்த்தை அப்கானிஸ்தான் முதல் அல்ஜீரியா வரை எந்த ஒரு நாட்டிலும் வழக்கத்தில் இல்லை என்று குறிப்பிடுகிறார். வழக்கத்துக்கு மாறான இந்த "மஹால்" எனும் சொல் நிச்சயம் மும்தாஜ் மஹால் எனும் பெயரிலிருந்து வரவில்லை என்று உறுதியாய்க் கூறுகிறார். முதலாவதாய் மும்தாஜின் முழுப் பெயர் மும்தாஜ் உல் ஜமானி என்பதாகும். இரண்டாவதாய், "மும்தாஜ் என்ற பெயரின் முதல் மூன்று எழுத்துக்களை நீக்கி விட்டு "தாஜ்" என்ற பெயரைப் பெற்றிருப்பது சற்றே விசித்திரமானது என்றும் அவ்வாறு நடந்திருக்க வாய்ப்பில்லை என்றும் கூறுகிறார். மேலும் ஷாஜஹான் மும்தாஜின் காதல் கதை தாஜ் மஹால் விவகாரத்தை மறைக்க உருவாக்கப் பெற்ற ஒரு அம்புலிமாமா கதை என்கிறார்.

பல ஆண்டுகளுக்கு முன்னர் நியுயார்க்கை சேர்ந்த பேராசிரியர் மார்வின் மில்லர் தாஜ் மஹாலின் சில மாதிரிகளை எடுத்து கார்பன் டேட்டிங் முறைப் படி தாஜ் மஹாலின் ஆயுளை கணித்தார். அவர் கருத்துப் படி தாஜ் மஹாலின் வயது 300 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆல்பர்ட் மாண்டேஸ்லோ என்பவர் 1638ஆம் ஆண்டு (மும்தாஜ் இறந்து ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு), ஆக்ரா வந்த்துள்ளார். அவருடைய குறிப்புகளில் தாஜ் மஹால் கட்டப் படுவதற்கான எந்த ஒரு குறிப்பும் இல்லை. மேலும் பீட்டர் மண்டி என்ற ஒரு ஆங்கிலேயர் மும்தாஜ் இறந்து ஒரு ஆண்டுக்குள் ஆக்ரா வந்த போது தன் குறிப்புகளில் இன்றைய தாஜ் மஹாலின் கலை நயம் பற்றி மிகவும் புகழ்ந்து எழுதியுள்ளார். வரலாறின் படி தாஜ் மஹால் மும்தாஜ் இறந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு கட்டி முடிக்கப் பட்டது என்பது நினைவிருக்கட்டும்.

மேலும் பேராசிரியர் ஓக் அவர்கள் ஏகப்பட்ட கட்டிட நுணுக்கங்களை மையமாகக் கொண்டு அது ஒரு இந்துக் கோயில் என்று அடித்துக் கூறுகிறார். இன்றும் தாஜ் மஹாலின் பெரும் பகுதி பொது மக்களின் பார்வைக்கு திறந்து விடப்படுவதில்லை. அதன் காரணம் என்னவென்று கேட்ட எவருக்கும் கிடைக்கும் பதில் - "பாதுகாப்பு" எனும் ஒற்றை வார்த்தை தான். அது மட்டுமின்றி தாஜ் மஹாலினுள் தலையில்லாது ஒரு சிவன் சிலையும் இந்துக்கள் பூஜைக்குப் பயன் படுத்தும் பல பொருட்களும் உள்ளன என்றும் அவர் கூறுகிறார்.

அரசியல் காரணங்களார் திரு ஓக் அவர்களின் புத்தகம் இந்தியாவில் இந்திரா காந்தியால் தடை செய்யப்பட்டது. அவர் கூறுவதை உறுதிப் படுத்திக்கொள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையில் ஒரு தொல் பொருள் ஆய்வுக் குழு ஒன்றை உருவாக்கி அவர்கள் தாஜ் மஹாலை ஆய்வு செய்ய வகை செய்ய வேண்டும் என்றும் கூறுகிறார்.

இந்த விஷயம் பற்றி மேலும் விபரங்களைத் தெரிந்து கொள்ளவும், இந்த சம்பந்தமான புகைப் படங்களைக் காணவும் இங்கே சொடுக்கவும்.

இதைப் படிச்ச எல்லாருக்கும் ஒரு  கேள்வி. இது எந்த அளவுக்கு உண்மையா / பொய்யா இருக்கும்னு நினைக்கறீங்க அப்படினு உங்க பின்னூட்டத்துல சொல்லுங்க.

குறிப்பு: இதில் எழுதப் பெற்றுள்ள யாவும் பேராசிரியர் ஓக் அவர்கள் குறிப்பிடுவதே. என் சொந்தக் கருத்துக்கள் அல்ல.

19 comments:

பங்காளி... said...

ஆச்சர்யமான தகவல்....காலப்போக்கில் வரலாற்று திரிபுகள் உருவாக்கப்படுவது ஆரிய காலந்தொட்டு நடந்து வருவதுதானே....

dondu(#11168674346665545885) said...

Quite interesting sir. I have already heard that story.

Quite another fact that cannot at all be challenged. Jahangir and Shajahan have Hindu mothers. Shajahan's son Dhara too was Hindu queen's son and was favored by Shahjahaan to succeed him but Aurangazeb had him assassinated.

Dondu N.Raghavan

மதுசூதனன் said...

டோண்டு & பங்காளி...

இந்த விஷயம் எவ்வளவு தூரம் உண்மையாகவோ அல்லது பொய்யாகவோ இருக்கும்னு கேட்டிருந்தேன். ஆனா அது பத்தி யாரும் எதுவ்வும் சொல்லலையே.

Hariharan # 03985177737685368452 said...

தாஜ்மஹால் என்பது சிவன் கோவில்தான் என்பதில் சந்தேகமே இல்லை எனக்கு.

ஸ்டீபன் நாப்-போட்டோவோடு ஆதாரத்தை வெளக்கியிருப்பது நம்ம மக்கள் வெள்ளைக்காரன் சொன்னால் உண்மையாக இருக்கும் எனும் பாரம்பரிய தன்னம்பிக்கை வரலாற்றுப்படி தாஜ்மஹாலின் உண்மையான வரலாற்றினை அறிய உதவும்!

காதல் மனைவி மும்தாஜுக்கு நினைவுச் சின்னமாய் தாஜ் மஹால் பிரிவுத்துயரால் இசுலாமிய அரசன் ஷாஜஹானால் கட்டப் பட்டது எனும் அபத்தம் அறிந்தால் சரி!

உண்மையான வரலாற்றைச் சரியாப் படிக்கணும் முதல்ல இந்தியர்கள் எல்லோரும்.

கொசுபுடுங்கி said...

டோண்டு முரளிமனோஹர் என்ற பெயரில் அசிங்க பின்னூட்டங்கள் போட்டது பற்றி ஒத்துக் கொண்டு இருக்காரே? அது பற்றிய உங்கள் கருத்து என்ன?

மதுசூதனன் said...

//டோண்டு முரளிமனோஹர் என்ற பெயரில் அசிங்க பின்னூட்டங்கள் போட்டது பற்றி ஒத்துக் கொண்டு இருக்காரே? அது பற்றிய உங்கள் கருத்து என்ன? //

இந்தக் கேள்வி இந்தப் பதிவிற்கு எந்த வகையிலும் சம்பந்தம் இல்லாத ஒன்று. இருந்தாலும் பதிலளிக்கிறேன்.

டோண்டு அவர்கள் வேறு பெயர்களில் பின்னூட்டமிடுவதாய் கேள்விப் பட்டவுடன் எனக்கு நிச்சயம் ஒரு ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி இருந்தட்தென்னவோ உண்மை தான். ஆனால் இதற்கு அவர் கூறும் காரணங்கள்ளை முற்றிலும் அவர் நிலையில் இருந்து பார்த்தால் மட்டுமே விளங்கும். இந்த விஷயத்தில் அது எனக்கு சாத்தியப்படும் என்று தோன்றவில்லை. அப்படியே முடிந்தாலும் அது வெட்டி வேலை என்றே கருதுகிறேன்.

அந்தப் பெயர்கள் மூலம் அவர் ஆபாசத்தை எங்கேனும் தோற்றுவித்திருந்தால் அது நிச்சயம் கண்டனத்துக் குரியதே. அப்படி இல்லாது அவர் ஆபாசமின்றி தன் கருத்தை உரைத்திருந்தால் அது கண்டிக்கத் தக்கதல்ல மாறாக வரவேற்கத் தக்க ஒன்று.

மதுசூதனன் said...

கொசுபிடுங்கியின் கேள்விக்கு பதில்
பாகம் - 2

இதோ அவர் முரளி மனோஹர் என்ற பெயரில் இட்ட சில பின்னூட்டங்கள். இதில் ஆபாசம் என்பது எங்கும் காணக்கிடைக்கவில்லை. அதனால், அவ்வர் செய்ததில் தவறேதும் இருப்பதாய் தெரியவில்லை.


***********************************************
Anonymous said...
Dear Dondu,

This is what I commented in Luckylook's blog post. It is self-explanatory.

//Anonymous said...
//Anonymous said...
http://holyox.blogspot.com/2007/01/230out-sourcing.html
Better ask Chelvan to reveal the edited portion.
Anony//
Now go and see in the relevant Selvan's blog//

This is what Selvan's comment says.
//Anonymous said...
இந்த பதிவில் உள்ள முரளிமனோஹரின் முழு பின்னூட்டத்தையும் வெளியிட முடியுமா?அதில் என்ன எழுதப்பட்டிருந்தது?ஆபாசமாக ஏதேனும் இருந்ததா, ஏன் எடிட் செய்தீர்கள் என்று சொல்லும்படி கேட்டுகொள்கிறேன்

2/06/2007 09:15:00 PM
செல்வன் said...
அனானிமஸ்

முரளிமனோகரின் பின்னூட்டத்தில் இருந்தவை இந்த வரிகள் தான்.

"தோழர் வந்தார். "ஏய், அந்த ஆள் அமெரிக்கன். உன் உழைப்பை சுரண்டுகிறான். இனிமேல் அவனுக்கு நீ செருப்பு தைக்ககூடாது என்றார். தொழிலாளி விழிக்கிறான். "ஐயா அந்த ஆள் நான் கேட்ட கூலி கொடுத்தான். நான் தைக்க வில்லை என்றால் அந்த சப்பை மூக்கு தொழிலாளி தைத்துகொடுப்பான். நானும் புள்ளைகுட்டி காரனய்யா" என்றான்".

அடிமைபுத்தியுள்ள இந்தியர்களை திருத்தவே முடியாது என்று தனது சக தோழர் ராஜாவிடம் அசுரத்தனமாக புலம்பினார் இந்தத் தோழர். பிறகு தாங்கள் வேலை செய்யும் --- நிறுவனத்துக்கு சென்றனர் அவர்கள்.
அதானே, அவங்களும் பிழைக்கணும் இல்லே.

முரளி மனோஹர்

(மேலே கோடுபோட்ட இடத்தில் ஒரு கம்பனியின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. பதிவர்கள் வேலை செய்யும் கம்பனியின் தகவலை நான் வெளியிட முடியாது என்பதால் அனுமதிக்கவில்லை.இதை தவிர அந்த பின்னூட்டத்தில் வேறு எதுவும் இல்லை-selvan)

Congrats sir, you stand tall among all.

Anony

February
http://dondu.blogspot.com/2007/02/03022007.html
***********************************************

ஜடாயு said...

மது,

ஓக் கூறிய ஒரு சில விஷயங்கள் வரலாற்று உண்மைகள் என்பதில் சந்தேகமில்லை. பல கோவில் இடிப்புகளுக்கு (அயோத்தி, மதுரா, காசி .. ) முஸ்லீம் வரலாற்று ஆசிரியர்கள் அரபு, பாரசீக மொழிகளில் எழுதிய நூல்களீலேயே நிறைய ஆதாரங்கள் உள்ளன. இந்த விஷயத்தில் அவர் அப்படி ஆதாரம் ஒன்றும் காட்டியிருப்பதாக தெரியவில்லை.

மேலும் தன் கேசை ஸ்ட்ராங் ஆக்குவதற்காக வேறு சில இடங்களில் அவர் crack pot தியரிகள் உருவாக்கியிருக்கிறார். (உதாரணம், கலிபோர்னியா என்பது கபிலாரண்யா என்பதன் திரிபு, இன்றைய அமெரிக்கா அன்றைய பாதாள லோகம்.. இப்படிப் பல).

அதனால், அவர் பெயர் கேலிக்கூத்தாகி சில இடங்களில் அவர் உண்மைகளை எழுதியபோதும் கிண்டல் செய்யப் பட்டார்.

Anonymous said...

கொசு,

ஒருநாள், அல்லது இரண்டுநாட்களுக்கு டோண்டுவை ஓட்டியது சரி, அவர் பின்னூட்டமிட்டதற்காக சம்மந்தமில்லா பதிவிலும் வந்து அது பற்றி பேசுவது தங்களுக்கு அவரை எக்ஸ்போஸ் பண்ணுவது மட்டும் காரணமாக தோன்றவில்லை...ஏதோ அவரை எல்லோரும் நெக்லெக்ட் பண்ண வைக்கும் முயற்சியாகவே தெரிகிறது.

தங்களது இந்த பின்னூட்டத்தால் தாங்கள் என்ன அறிந்துகொள்ள முயற்சிக்கிறீர்கள் என்று கூற முடியுமா?.

மேலும் நீங்களூம் என் போன்ற அனானிதான், ஏனெனில் தங்களது விகாரமான படம், பெயர் ஒரிஜினலாக இல்லாதவரை, நீங்கள் இந்த கேள்வியினை எல்லா இடத்திலும் எழுப்ப தகுதியற்றவர் என்பது எனது எண்ணம்.

Anonymous said...

கொசு,

ஒருநாள், அல்லது இரண்டுநாட்களுக்கு டோண்டுவை ஓட்டியது சரி, அவர் பின்னூட்டமிட்டதற்காக சம்மந்தமில்லா பதிவிலும் வந்து அது பற்றி பேசுவது தங்களுக்கு அவரை எக்ஸ்போஸ் பண்ணுவது மட்டும் காரணமாக தோன்றவில்லை...ஏதோ அவரை எல்லோரும் நெக்லெக்ட் பண்ண வைக்கும் முயற்சியாகவே தெரிகிறது.

தங்களது இந்த பின்னூட்டத்தால் தாங்கள் என்ன அறிந்துகொள்ள முயற்சிக்கிறீர்கள் என்று கூற முடியுமா?.

மேலும் நீங்களூம் என் போன்ற அனானிதான், ஏனெனில் தங்களது விகாரமான படம், பெயர் ஒரிஜினலாக இல்லாதவரையில், நீங்கள் இந்த கேள்வியினை எல்லா இடத்திலும் எழுப்ப தகுதியற்றவர் என்பது எனது எண்ணம்.

மதுசூதனன் said...

//ஓக் கூறிய ஒரு சில விஷயங்கள் வரலாற்று உண்மைகள் என்பதில் சந்தேகமில்லை.....//

மேலும் விபரங்களை சேர்க்க முயன்று வருகிறேன். இருப்பினு வேலைப் பளு காரணமாய் முன் போல் இவற்றில் ஈடு பட முடியவில்லை. ஆனால் இந்த தாஜ் மஹால் விவகாரம் ஏனோ சற்று சந்தேகமாகவே உள்ளது. இந்த் தாஜ் மஹால் ஒரு சிவாலயமாக இருக்க நிறைய சாத்தியக் கூறுகள் இருப்பதாகவே தோன்றுகிறது.

மதுசூதனன் said...

//....நீங்கள் இந்த கேள்வியினை எல்லா இடத்திலும் எழுப்ப தகுதியற்றவர் என்பது எனது எண்ணம்.//

வெல் செட்! வரவேற்கிறேன் கொசு. :)

Muse (# 5279076) said...

அந்த புத்தகம் நானும் படித்தேன். ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்

திஜாவின் மோக முள் ஞானசேகரனால் படமெடுக்கப்பெற்றது போல இருக்கின்றது.


தாஜ் மஹாலைக் காட்டியவர் ஷாஜஹான் என்பதற்கு ஷாஜஹான் காலத்து ஆதாரங்கள் ஏதும் இல்லை என்பதும் உண்மைதான். சுல்தான் வெளியேற்றிய வளியைப்பற்றிக்கூட கட்டுரை எழுதிய வரலாற்று ஆர்வமுடைய மொகலாயர் இந்த மாபெரும் விஷயத்தைப் பற்றி எதுவும் எழுதவில்லை என்பது ஆச்சரியங்களில் ஒன்று.

வேறொரு ஆதாரபூர்வ விஷயம்.

குதுப்மினார் ஸ்தூபத்தை சுற்றி ஹிந்து மன்னர்களால் கட்டப்பெற்ற கட்டிடங்களைக் காணலாம். எந்த வரலாற்று ஆசிரியரும் தேவையின்றி தெளிவாக தெரியும் உண்மை இது ஹிந்து அரசர்களால் கட்டப்பெற்றது என்பது. மேலும் துருப்பிடிக்காத தூண் இருப்பதும் அங்கேதான்.

எந்த கலை நயமும் இல்லாமல் உயரத்தை மட்டும் பெருமையாய் காட்டும் குதுப்மினாரைப் பார்க்கவே இந்திய அரசாங்கத்தின் சுற்றுலாத் துறை விளம்பரங்கள் செய்துவருகின்றது.

இன்னும் ஒரு ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

பங்காளி... said...

நீங்கள் முன் வைக்கும் வாதத்தினை கொள்கையளவில் ஏற்றுக்கொள்கிறேன்.

இதே போன்றதொரு கருத்தினை நான் முன்வைத்தால் அதையும் இதே நேர்மையுடன் அலச எத்தனை பேர் தயாராயிருப்பர்....ஏனெனில் பின் வரும் கருத்துக்களை மறுக்க அது உணர்வோடு கலந்த விடயங்கள் என பூசி மெழுகவே முனைவீர்கள் என்பது என் எண்ணம்....

இனி என்னுடைய பார்வையி...

1. திருப்பதி, பழனி, சபரிமலை இவை மூன்றுமே சமண/பௌத்த மடாலயங்கள்....அங்கே மூலவராய் இருப்பது பௌத்த மத துறவிகளே....

2.வைணவமதத்திற்கென தனியாய் உருப்படியாய் எந்த கோட்பாடுகளும் இல்லை...அவை அனைத்துமே பௌத்த மதத்திலிருந்தே உருவப்பட்டு துடைத்து பக்திமார்கமாக அறியப்பட்டது.

3.சயனநிலை புத்தரே ....பள்ளிகொண்ட பெருமாளாக அறிவிக்கப்பட்டார்....

4.லக்ஷ்மி இந்து கடவுளே இல்லை....

இப்படியான தலைப்புகளில் நேர்மையாக விவாதிக்க எத்தனைபேர் தயாராக இருக்கிறீர்கள்....

போங்கப்பா.....

மதுசூதனன் said...

பங்காளி...

விஷயம் நேர்மையானதாய் இருக்குமாயின் நிச்சயம் வாதாடலாம். நான் ரெடி. நீங்க ரெடியா ?!?

மதுசூதனன் said...

//எந்த கலை நயமும் இல்லாமல் உயரத்தை மட்டும் பெருமையாய் காட்டும் குதுப்மினாரைப் பார்க்கவே இந்திய அரசாங்கத்தின் சுற்றுலாத் துறை விளம்பரங்கள் செய்துவருகின்றது.........//

கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை... :))

கொசுபுடுங்கி said...

இரண்டு நாளைக்கு முன்பு டோண்டு மாட்டியதற்கு பார்ப்பனர்களே காரணம்!

ஆமென்!

கொசுபுடுங்கி said...

மது,

செல்வன் பதிவிலே முரளிமனோஹர் என்ற பெயரில் டோண்டு இன்னொருவர் வேலை பார்க்கும் கம்பெனி முகவரியை எழுதினார். அந்த இன்னொருவர் ராஜாவனஜ் என்னும் பதிவர். இத்தனைக்கும் ராஜாவனஜ் டோண்டு வீடு வரை சென்று பேசிவிட்டு தான் வேலை பார்க்கும் நிறுவனத்தையும் சொல்லி இருக்கிறார். டோண்டுவை முழுதாக நம்பியதால்தான் ராஜாவனஜ் தான் வேலை பார்க்கும் இடத்தை சொன்னார்.

உடனே முரளி மனோஹர் என்ற பெயரில் வந்து அசுரனும் ராஜாவனஜும் ஒருவரே என்றும் மசுரு என்றும் அசிங்கமாக திட்டி எழுதி விட்டு ராஜாவனஜ் வேலை பார்க்கும் கம்பெனி பெயரையும் எழுதினார். அதனைத்தான் செல்வன் எடிட் செய்தார். மீண்டும் செல்வன் பதிவுக்கு சென்று படித்துப் பாருங்கள்.

ஜாதி பாசம் உங்கள் கண்களை மறைக்கிறது.

பைதபை நானும் உம்ம ஜாதிதான்!

ஆனால் கண்ணை மூடிக்கொண்டு ஜாதிவெறியர்களை ஆதரிக்க மாட்டேன்.

சர்வாண்டிஸ் என்ற பெயரில் டோண்டு எழுதிய பதிவுகளை படித்தது இல்லையா நீங்கள்?

dondu(#11168674346665545885) said...

See http://vanajaraj.blogspot.com/2006/12/blog-post_17.html
மசுருன்னு எழுதினது ராஜ்வனஜ்தான் நான் அல்ல.

செல்வன் பதிவில் முதலில் ஆபாசமாக எழுதினேன் என்றார்கள். பிறகு அவர் முழு பின்னூட்டத்தையும் வெளியிட்ட பிறகு இந்த ஒரு வார்த்தையில் தொங்குகிறார்கள். இதில் தமாஷ் என்னவென்றால் நான் சொன்ன நிறுவனத்தின் பெயர் அவர் வேலை செய்யும் நிறுவனத்தின் பெயர் அல்ல.

அதே சமயம் ஒவ்வொரு பதிவரின் முழு விஷயங்கள், போட்டோ, ஐ.பி. அட்ரஸ் எல்லாவற்றையும் தங்கள் பதிவுகளில் போடும் இவர்கள் இதற்கு வந்து குதிப்பது மிகவும் வேடிக்கையாக உள்ளது.

செர்வாண்டஸ் பதிவுகளை போய் பாருங்கள். அவர் என் நண்பர் அவ்வளவே.

என்ன, அந்த மனிதர் என்னுடைய ஸ்டைலில் எழுதியதால் சற்று குழப்பம் அவ்வளவே.

அப்படியே அவர் ஏதாவது ஆபாசமாக எழுதினாரா என்பதையும் பாருங்கள்.

நான் என்ன நினைக்கிறேன் என்றால், அப்பசமில்லாத, போலியின் திட்டுக்களை லட்சியம் செய்யாத பதிவுகள் என்றால் அது டோண்டு ராகவனது பினாமி பதிவு என்று முடிவு செய்கிறார்கள் போல.:)))

அன்புடன்,
டோண்டு ராகவன்