Sunday, February 11, 2007

ஆற்று நீர் அரசியல்

காவிரி நீர் பங்கீடு பிரச்சினையில் சிகிச் சீரழிந்து பல கோடி மதிப்புள்ள பொருள் இழந்து, மதிப்பிட இயலாத பல உயிர்களையும் இழந்து ஒரு வழியாக 16 ஆண்டுகள் கழித்து காவிரி தீர்ப்பாயம் தமிழகத்துக்கு 186 டிஎம்சி தண்ணீர் தர வேண்டுமென தீர்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பு என்ன ஆகும் எனும் ஒரு கேள்வியை சமீபத்தில் நான் எழுதிய இந்தப் பதிவில் கேட்டிருந்தேன்.

இதற்கிடையில் கர்நாடகம் அனைத்து கட்சி கூட்டம் தனை கூட்டியதோடு மட்டுமின்றி, இந்த விஷய்த்தில் அனைத்து கட்சிகளும் என்ன முடிவெடுக்கின்றனவோ அதே மாநில அரசின் நிலைப்பாடாக இருக்குமென்று தெரிவித்துள்ளார். என்ன முடிவு வரும் என்பதை நம்ம ஊர் பால்வாடியில்  படிக்குக்ம் குழந்தை கூட தெளிவாய் சொல்லிவிடும்.

காவிரில தான் இந்த மாதிரி பிரச்சினை சரி நம்ம பெரியாத்துப் பக்கம் போய் பார்த்தா அங்கயும் ஒரு பிரச்சினை. பெரியாறு அணையோட உயரத்தை ஏத்தணும்னு நம்ம மக்கள் சொல்ல அது கூடாதுனு கேரள மக்கள் ஒரு பக்கம் குதிக்க அது இன்னொரு தலை வலி. அட சும்மா குதிச்சாலும் பரவாயில்லை. அவங்க என்னடான்னா ஹாலிவுட் ரேஞ்சுல அனிமேஷன் படமெல்லாம் தயார் பண்ண ஆரமிச்சுட்டாங்க.

இது ரெண்டும் போதாதுனு இப்ப பாலாத்துக்கு குறுக்க அணை கட்டப் போறதா ஆந்திராவுல அறிவிச்சு, வேலையும் கன ஜோர நடந்துகிட்டு வருது. முந்தைய ரெண்டு பிரச்சினையைக் காட்டிலும் இது ரொம்ப பெரிய காமெடியா இருக்கு. நம்ம அமைச்சர் துரைமுருகன் என்னடான்னா அப்படி அங்க கட்டுமானப் பணிகள் ஒண்ணும் ஆரமிக்கலைங்கிறார். ஆனா அவங்க கூட்டணிக் கட்சியான பாமாகவைச் சேர்ந்த கோ.க. மணி துரைமுருகன் தவறான தகவலைத் தருவதாய்க் குற்றம் சாட்டியுள்ளார். (இது தான் உள் கட்சி பூசல்ங்கிறதா ?)

ஆந்திர பொதுப்பணித் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் ஏற்கென்னவே நம் தமிழக முதல்வருக்கு கட்டுமானப் பணி குறித்த தகவல்களைத் தெரிவித்து விட்டதாய்க் கூறுகிறது. ஆனா நம்ம முதல்வர் அதைப் பற்றி எந்த ஒரு அறிக்கையிலும் எதுவும் குறிப்பிட்டதாய் தெரியவில்லை. ஒரு வேளை அவருக்கு வந்த கடிதத்தை அஞ்சலகத் துறையினர் சரியான நேரத்தில் அவரின் அலுவலகத்தில் தரவில்லையோ?

இதுல ஒரு போனஸ் செய்தி ஒண்ணு சொல்றேன் கேட்டுக்கோங்க. இந்த பாலாறு அணை கட்டுவதில், திமுகவோட ரரக்களுக்கு நிறைய டெண்டர்கள் கொடுக்கப் பட்டிருப்பதாகவும் அங்கங்கே செய்திகள் கசிந்த வண்ணம் உள்ளன.

கர்நாடகா, கேரளா, ஆந்திரா இந்த மூன்று மாநிலங்களிலும் ஆள்வது என்னவோ திமுகவின் கூட்டணிக் கட்சிகள் தான். அப்படி இருந்தும் ஏன் திமுகவால் ஏதும் சாதிக்க முடியவில்லை எனும் கேள்விக்கு அவர்கள் என்ன பதிலளிக்க் உள்ளனர் ? இத்னை ஆண்டுகாலம் நதி நீர் பங்கீடு பிரச்சினைகளில் ஏன் எந்த ஒரு ஆட்சியாளராலும் தீர்வு காண முடியவில்லை ? ஒரு வேளை இவற்றை பற்றி பேசிப் பேசி ஓட்டு சேகரிப்பது மட்டுமே இவர்களது குறிக்கோளா ? இது நாள் வரை நடந்த நடக்கின்ற நிகழ்ச்சிகளைக் காணும் பொழுது நமக்கு இவ்வாறு தோன்றுவதில் தவறேதும் இருப்பதாய்த் தோன்றவில்லை.

ஒரு பக்கம் நம் முதல்வர் தன் குடும்ப வருமானத்தினை பல ஆயிரம் கோடிகளாய் பெருக்க வழி வகை செய்து கொண்டிருக்கிறார், இன்னொரு பக்கம் எதிர் கட்ச்சிகள் எதுவும் பொறுப்பாய் நடந்து கொள்வதாகவும் தோன்றவில்லை. அப்படியே ஒன்றிரண்டு எதிர் கட்சியினர் வாய் திறந்தாலும் ஆளும் கட்சியினர் அரசாங்கத்தின் அனைத்து இயந்திரங்களையும் எதிர்ப்போர் மீது ஏவியும், பல பொய் வழக்குகளை ஜோடித்து அவர்களை சிறையில் அடைப்பதையும் வாடிக்கையாய் கொண்டுள்ளது. நான் குறிப்பிட்ட இந்த ஒரு கருத்து, கட்சி  பேதமின்றி, இந்நாள் வரை ஆட்சி செய்த அனைவருக்கும் பொறுந்தும் எனக் கூறிக் கொள்கிறேன்.

இது போன்ற பொருப்பற்ற அரசியலவாதிகளால் பொது மக்களான நமக்குத் தான் நட்டம் அதிகம். அரசியல் வாதிகள் மேலும் மேலும் பணக்காரர்களாய் ஆகிக் கொண்டே போகின்றனர், ஏழைகள் மேலும் ஏழைகளாக ஆகிக் கொண்டே போகின்றனர்.

என்ன செய்யப் போகிறோம் நாமெல்லாம் ???

7 comments:

Hariharan # 03985177737685368452 said...

அக் மார்க், ISI, ISO 9000, BVQI போன்ற தரச்சான்றிதழ் பெற்ற அரசியல் திரா"விட" தமிழர்கள் சக சாதாரண விவசாய தமிழர்களை ஆண்டுதோறும் சதா ரணப்படுத்தும் ஆற்று நீர் அரசியல் செய்யலாம்.

அது அரசியல் திரா"விட"ர்களது வாழ்வுரிமை ஆகும்.

சாய்பாபா, அமிர்ந்தானந்தமயி, இன்னபிற இந்து நெறி பரப்பும் மடங்கள் / இயக்கங்கள் தான் கருணைகூர்ந்து தமிழகத்துக்கு காவிரி, பெரியாற்று நீர் உருப்படியாக கிடைக்க வருங்காலத்தில் ஆவன செய்ய வேண்டும்.

பகுத்தறிவு எப்போதுமே வற்றாத ஜீவநதியாகப் பெருக்கெடுத்து ஓடும் தமிழகத் தலைநகரம் சென்னையில் ஓடும் ஆறுகளான கூவத்தையும், அடையாற்றையும் , இரசாயன, மனிதக்கழிவுகள், பிணங்கள் மிதக்கும் சாக்கடை நதியாக்கியது அரசியல் திரா"விட" அக்மார்க் பகுத்தறிவுத் தமிழர்கள் 40 ஆண்டுகளில் நிகழ்த்திய சாதனை.

தலைநகர ஆறுகளில் கழிவதை 40 ஆண்டுகளாகப் பகுத்தறிவுடன் செய்துவிட்டு இப்போ சாய்பாபா இறங்கிச் சுத்தம் செய்து நல்லநீர் ஓடும் புண்ணியநதியாக்கணும் என்று கேட்டுக் கொண்டதைப் பார்க்கும்போது இவர்களுக்கு இருப்பது பகுத்தறிவா? புண்ணாக்கா? என்று வெளிச்சம்போடுகிறது.

நாமெல்லாம் என்ன செய்யணும்?

எருமை மாதிரி பொறுமையா இருந்தது போதும் என்று முடிவெடுத்து இந்தப் பகுத்தறிவுப் புண்ணாக்குகளை தின்று அசைபோடணும் அடுத்த தேர்தலிலாவது!

மதுசூதனன் said...

//இந்தப் பகுத்தறிவுப் புண்ணாக்குகளை தின்று அசைபோடணும் அடுத்த தேர்தலிலாவது! //

எப்படிச் செய்வது ஹரி? இந்த திராவிடக் கட்சிகள் தான் வேறு எவரையும் வரவிடுவதில்லையே. மன்னர் காலத்தில் நடந்தது போன்று ஒரு வாரிசு அரசியலை உருவாக்குவதில் அனைவரும் தீவிரமாயுள்ளனர். இதற்கு ஒரே வழி புதியவர்களை, இளைஞர்களை அரசியலுக்கு அழைத்து வரவேண்டும். தனியொரு மனிதனாய் அது மிகவும் கடினமான ஒரு செயல். இந்தச் சூழ்நிலையில் நீங்கள் என்ன சொல்லுவீர்கள் ஹரி ?

Hariharan # 03985177737685368452 said...

//இதற்கு ஒரே வழி புதியவர்களை, இளைஞர்களை அரசியலுக்கு அழைத்து வரவேண்டும். தனியொரு மனிதனாய் அது மிகவும் கடினமான ஒரு செயல். இந்தச் சூழ்நிலையில் நீங்கள் என்ன சொல்லுவீர்கள் ஹரி ? //

அரசியல் தயங்காது பேச வேண்டும்.

10-25% பார்ட் டைமாக அரசியல்/பொதுநல விஷயங்களில் பங்கெடுத்துச் செயலாற்ற, விழிப்பை ஏற்படுத்த வேண்டும் என்பது எனது கருத்து.

முதன்மையாக இளைய/ புதியவர்களிடையே கருத்தியல் விழிப்பை ஏற்படுத்த நமது பங்களிப்பைத் தவறாது செய்ய வேண்டும்.

மதுசூதனன் said...

//முதன்மையாக இளைய/ புதியவர்களிடையே கருத்தியல் விழிப்பை ஏற்படுத்த நமது பங்களிப்பைத் தவறாது செய்ய வேண்டும்....//

எப்படி செய்யலாம் எனக் கூறுங்கள் ஹரி ? என்னால் முடிந்த எல்லா உதவிகளையும் நிச்சயம் செய்வேன்.

dondu(#11168674346665545885) said...

The more there are changes, the more the things are the same. The Cauvery dispute has been there from time immemorial.

Even within the State of Tamil Nadu, people of certain districts are in disaccord with those in the upstream or downstream.

Regards,
Dondu N.Raghavan

Anonymous said...

இதற்கு முந்தைய பதிவில் மூர்த்தி என்று பெயர் வரும் எல்லா பின்னூட்டங்களையும் அழிக்கவும். அல்லது பெயரை எடிட் செய்யவும்.

மதுசூதனன் said...

//இதற்கு முந்தைய பதிவில் மூர்த்தி என்று பெயர் வரும் எல்லா பின்னூட்டங்களையும் அழிக்கவும். அல்லது பெயரை எடிட் செய்யவும். //

உங்கள் பெயர் வெளியாகியிருக்கும் பட்சத்தில் இத்தகைய வேண்டுகோளை விடுக்கவும். மூர்த்தி பற்றிய பின்னூட்டம் தனை நீக்க வேண்டுமெனில் மூர்த்தி எனும் பெயருடையவர் பின்னூட்டமிட வேண்டும்.