Monday, February 12, 2007

புயலுக்குப் பின் அமைதி

பல நாட்களாய் ஓயது பெரும் சப்தத்துடனும், ஆவேசத்துடனும் வீசிய புயல் ஒருவாராய் கரை தனைக் கடந்து பலவீனமடைந்தது. டோண்டுவின் ஆரவாரப் பேய்களெல்லாம் - டோண்டுவின் யோம்கிப்பூர் எனும் பதிவு அதற்கு வழிவகுத்தது என்றால் அது மிகையாகாது.

மேற்சொன்ன பதிவில் விழுந்த பின்னூட்டங்களைக் காணுகையில் அவற்றில் தெரியும் சமத்துவம் நிச்சயம் மெய் சிலிர்க்க வைக்கிறது. இந்த அமைதியான சூழல் பதிவுலகத்தில் நிச்சயம் நல்ல உறவுகளை ஏற்படுத்தும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. இந்த அமைதி தொடர ஆத்திகரின் சார்பில் எல்லாம் வல்ல இறைவனையும், நாத்திகன் சாரிபில் அன்பே சிவம் என்று கருதி அந்த அன்பையும் வேண்டிக் கொள்கிறேன். இந்த அமைதி நிலைக்கட்டும். நல்லதொரு உலகம் பிறக்கட்டும்.

வாழ்க தமிழ் ! வாழிய நம் பாரத நாடு !

11 comments:

dondu(#11168674346665545885) said...

நன்றி மதுசூதனன் அவர்களே.

எல்லாம் நல்லபடியாகவே நடக்க என் உள்ளங்கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகர நெடுங்குழைகாதன் அருள் புரிவான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

மதுசூதனன் said...

நல்ல வேண்டிக்கோங்க. இன்னொரு சண்டை வரக்கூடாதுனு.

நாமக்கல் சிபி said...

//நல்ல வேண்டிக்கோங்க. இன்னொரு சண்டை வரக்கூடாதுனு.
//

வழிமொழிகிறேன் மதுசூதனன்!

சொர்ணாக்கா said...

மதுசூதனன்! இதெல்லாம் அரம்பித்தது 2004 ஆம் வருடம். உண்மையைக் கூறினால் இதன் ஆரம்பம் "ஒரு சப்பை மேட்டர்".

ஒரு பதிவர் தனக்கு கமலஹாசனை மிகவும் பிடிக்கும் என்றார். அவரது வாரிசாக அரவிந்த் சுவாமி வருவார் என்று முதலில் அவர் நினைத்ததாகவும், பின்னர் மாதவனை அவரது வாரிசாக நினைத்துக் கொண்டு இருப்பதாகவும் கூறினார்.

உடனே அவர்கள் பார்பனர் என்பதால் தான் அவர்களை உங்களால் பாராட்ட முடிகிறது என்று எதிர்வினை கிளம்பியது.

அதனால் வெறுத்து போன டோண்டு ஏன் எதற்கெடுத்தாலும் ஜாதியை இழுக்கிறீர்கள். பார்பனர்கள் ஜாதியை பார்காமல் இருந்தாலும் நீங்கள் அதிகம் பார்க்கிறீர்கள் என்ற தோணியில் ஒரு பதிவு எழுதினார். அது ஒரு வகையில் உண்மையும் கூடத்தான், பார்பனர்கள் தீண்டாமைக் கொடுமை செய்தார்கள் என்று கூறிக் கூறியே,அவர்களுக்கு எதிராக "Reverse Discrimination" செய்து கொண்டு இருக்கிறார்கள். இனையத்தில் அது மிகவும் மோசம். ஆனாலும் அத்துடன் அவர் நிறுத்தி இருக்கலாம். தான் வடகலை ஐயங்கார் ஜாதியில் பிறந்ததாகவும், அதற்கு பெருமை படுவதாகவும் கூறிவிட்டார்.

உடனே ஆரம்பித்தது தலை வலி. போலி டோண்டு உருவானான். உருவாகி அவரது பெயரில் பல இடங்களில் போலி பின்னூட்டம் போடத் தொடங்கினான்.

இவர் அவனை சாதாரனமாக கருதி ஒதுக்கி இருந்தால் பிரச்சினையே இல்லை. ஆனால் இவரோ அவனுடன் சரிக்கு சமமாக மல்லுக்கு நின்றார்.

உங்களது வீட்டிற்கு வந்து ஒரு நாய் மலம் கழிக்கிறது என்றால் அதை அடுத்த நாள் சுத்தம் செய்து விட்டு போய்கொண்டே இருப்பது தான் புத்திசாலித்தனம். ஆனால் இவரோ 24 நான்கு மணி நேரமும் காவலில் நின்றார். இங்கு நாம் ஒன்றை பார்க்க வேண்டும். முதலில் அந்த நாய் இவரது பெயரில் சென்று எல்லா இடத்திலும் மலம் கழித்தது. அதனால் பலர் அவரை தவறாக நினைத்தனர். ஆனால் நாளடைவில் அனைவருக்கும் பின்னூட்டத்தின் தன்மையை பொருத்தே எது உண்மையான டோண்டு எது போலி டோண்டு என்று தெரிந்து விட்டது. அந்நிலையில் இவர் போலிக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்தி இருக்கலாம். ஆனால் இவரோ நிறுத்தவில்லை. பின்னூட்டங்களுக்கு ஆசைப்பட்டோ இல்லை வேறு காரனத்தினாலோ இவர் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அவனையே முன்னிலைப்படுத்தி வந்தார். அவரது பதிவுகளில் சென்று போலி என்று தேடினால் குறைந்த பட்சம் அரை டசன் பதிவுகளாவது கிடைக்கும்.

போலி டோண்டு - டோண்டு யுத்தமானது இப்பொழுது ஒரு புண் போல பரவி தமிழ்மணம் முழுவதையும் விரைவில் அழித்து விடும் நிலையில் உள்ளது. இந்த சூழ்நிலையால் மனம் வெறுத்து வலை பதிவதையே விட்டவர்கள் பலர்.

ஆனால் பலர் இங்கே கூறியது போன்று பார்பனர்கள் எல்லோரும் டோண்டுவிற்கும், பார்பனீய எதிர்பாளர்கள் எல்லோரும் போலி டோண்டுவிற்கும் ஆதரவானவர்கள் என்ற கருத்து தவறானது. டோண்டுவின் கருத்துக்களை ஏற்காத பார்பனர்கள் பலர். அதே போன்று போலி டோண்டுவின் மலங்களை நக்க விரும்பாத பார்பனீய எதிர்பாளர்கள் பலர் இருக்கத் தான் செய்கிறார்கள். நானே அதற்கு ஒரு நல்ல உதாரணம். என்னைவிடவும் குழலி போன்றோர் பகிரங்கமாக போலியின் பதிவில் சென்று எதிர்ப்பை காட்டினர்.

இதற்கு மேலும் ஒன்றை நான் கூறிகொள்கிறேன்.

டோண்டுவின் கற்பு பற்றிய கருத்தாகட்டும், ஜாதி பற்றிய கருத்தாகட்டும், கார் தேவை இல்லை என்ற கருத்தாகட்டும், கலப்பு திருமணம் பற்றிய கருத்தாகட்டும் அவற்றில் ஒன்றில் கூட நான் அவருடன் ஒத்து போகவில்லை. ஆனாலும் அவரது எழுத்துக்கள் ஆபாசம் இல்லாத கண்ணிய குறைவில்லாத எழுத்துக்கள். இங்கே பலரும் அவரது எழுத்துக்களில் கருத்தியல் ஆபாசம் கலந்து இருப்பதாக குற்றம் சுமத்துகின்றனர்.
மேலும் அவர்கள் இதனாலேயே போலி டோண்டு வடிவில் எதிர்வினை வருகிறது என்றும் கூறுகின்றனர்.

அவர்களுக்கு நான் ஒன்றை கூறிக் கொள்கிறேன். உங்களால் டோண்டுவின் எழுத்துக்களை அதில் எவ்வளவு கருத்தியல் ஆபாசம் கலந்து இருந்தாலும் கூட அதை உங்கள் பெற்றோரிடமும், குடும்பத்தினரிடமும் காட்டி கருத்து கேட்க முடியும். ஆனால் போலி டோண்டுவின் எழுத்துக்களை காட்ட முடியுமா? காட்டி கருத்து கேட்க முடியுமா?


இதற்கு மேலும் போலியின் மலங்களை நக்க விரும்புவோர் தொடர்ந்து நக்கட்டும். நக்குவது மலம் என்று தெரிந்தே நக்கும் போது நாம் என்ன செய்ய முடியும்.

மதுசூதனன் said...

/இதெல்லாம் அரம்பித்தது 2004 ஆம் வருடம். உண்மையைக் கூறினால் இதன் ஆரம்பம் "ஒரு சப்பை மேட்டர்".
//

படித்தும் விசாரித்தும் நிறைய தெரிந்து கொண்டேன் சொர்ணாக்கா. என்ன செய்ய ? ஆனை போறதைப் பாக்க ஆளில்லை. பூனை போறதைத் தான் எல்லாரும் பார்க்கிறார்கள்! எது எப்படியாயினும் நான் சொல்லியுள்ளது போல் இன்னொரு சண்டை வாராது இருத்தல் நல்லது. ஆனால் சாதி, மதம் இவை யாவற்றையும் தாண்டி போலிகள் நிச்சயம் எதிர்க்கப்பட வேண்டியவர்களே எனும் என் கருத்தில் எப்போதும் மாற்றமில்லை.

Anonymous said...

என்னமோ எனக்கு ஒரு பெரிய சந்தேகம். ஐந்தில் வளையாதாது
அறுபதில் திருந்துமா? no, NEVER!!!

ஆசாமி வேறு பெயரில் குப்பைகளை மீண்டும் கொட்டாவிடாமல்
ஒரு கண் வைக்கணும்


புள்ளிராஜா

துளசி கோபால் said...

மனித வாழ்க்கைன்றது எவ்வளவு அநித்தியமானதுன்னு நம்ம பதிவர்கள் அனைவருக்கும்
கண்கூடாக நேத்து உணர்ந்திருப்பாங்க.

மனசுலெ அன்பை மட்டும் நிறுத்திக், காழ்ப்புணர்வு இல்லாம நட்போடு மாற்றுக் கருத்தையும்
மரியாதையோடு சொல்லணுமுன்றதுதான் என் விருப்பம்.

எல்லோரும் நல்லா இருங்க.

Anonymous said...

Sir you have another poli comment in luckey look's post. http://madippakkam.blogspot.com/2007/02/blog-post_09.html
Your poli comment

12:24 PM
மதுசூதனன் said...
நான் உங்களைப் பார்த்து கேட்கிறேன். நீங்கள் திருமணம் என்று வரும்போது ஜாதி பார்த்துதானே கல்யாணம் செய்கிறீர்? எனவே டோண்டு தன் ஜாதிப் பெருமையோடு இருப்பதில் தவறில்லை.

விக்ரமே அந்நியனாக அம்பியாக ரெமோவாக உலா வரும்போது எங்க டோண்டுசார் 15 வேடங்களில் உலா வந்தால் ஒன்றும் குறைந்து போய் விடாது!

12:25 PM

மதுசூதனன் said...

//ஆசாமி வேறு பெயரில் குப்பைகளை மீண்டும் கொட்டாவிடாமல்
ஒரு கண் வைக்கணும்..//

மன்னிப்பு கேக்க ஒரு தைரியம் வேணும். வேற பேர்ல நீங்க சொல்ற மாதிரி குப்பையை கொட்ட நினைக்கிறவர் இதைச் செய்ய்ய வேண்டிய அவசியமில்லை. இதே பதிவுல சொர்ணாக்க எழுதியிருக்கும் பின்னூட்டத்தைப் பாருங்க. அது தான் உங்களுக்கு பதில்.

மதுசூதனன் said...

//மனித வாழ்க்கைன்றது எவ்வளவு அநித்தியமானதுன்னு நம்ம பதிவர்கள் அனைவருக்கும்
கண்கூடாக நேத்து உணர்ந்திருப்பாங்க.//

உலகின் மிகப் பெரிய விசித்திரம் எது தெரியுமா? இறப்பு என்பதைப் பற்றி தெரிந்தும், பல மனிதர்கள் தான் என்னவோ எப்போதும் வாழப்போவதாய் நினைத்துக் கொண்டிருப்பது தான். மகாபாரத்தில் ஒரு கதை வரும் இது பற்றி. ஆகா! இதை வைத்து ஒரு பதிவு எழுதலாமே.

சந்தோஷ் aka Santhosh said...

அருமையான கருத்துக்கள் சொர்ணாக்கா :)) ரொம்ப நிஜமும் கூட.