Wednesday, February 14, 2007

என்ன நினைக்கிறார் முதல்வர் ?

சமீபத்தில் முதல்வர் திரு. கருணாநிதி அவர்கள் முல்லை பெரியாறு மற்றும் காவிரி பிரச்சினைகளில் தெரிவித்துள்ள கருத்துக்கள் மிகவும் குழப்பமளிக்கும் வகையில் அமைந்துள்ளன. அவர் சொன்ன கருத்துக்களை சேர்த்துப் பார்த்தால் சற்று பைத்தியக்காரத் தனமாகக் கூடத் தெரிகிறது.

காவிரி பிரச்சினை

காவிரி நதி நீர் தீர்ப்பாயம் தந்த தீர்ப்பில் தமிழகத்துக்கு சாதகம், பாதகம் இரண்டும் உள்ளது எனக் குறிப்பிட்டார். மறு நாள் அவர் அளித்த இன்னொரு பேட்டியில் அதே தீர்ப்பானது தமிழகத்துக்கு ஆருதலாய் உள்ளது என்றும் அதை ஏற்றுக் கொள்ளலாமென்றும் கூறினார்.

முல்லை பெரியாறு பிரச்சினை

இந்த சிக்கலை நீதி மன்றத்துக்கு வெளியில் தீர்த்துக் கொள்ள முடியும் என்றார். ஆனால் உச்ச நீதி மன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்துள்ளது தமிழக அரசு. வெளியில் பேசித் தீர்க்கலாமெனில் எதற்காக வழக்கு? எதிர் கட்சிகள் மற்றும் பொது மக்களின் கண்களில் மண் தூவவா?

மேற் சொன்ன இரண்டு அதி முக்கியமான பிரச்சினைகளைல் இவரது உண்மையான நிலைப்பாடு தான் என்ன?  யாரை பைத்தியமாக்கப் பார்க்கிறார் முதல்வர்? ஒரு கட்டத்தில் பெரியாறு விவகாரத்தில் பேச்சு வார்த்தை பலனளிக்காது என்று கூறி வந்தவர், தீடீரென பேச்சு வார்த்தை நடத்தலாம் என்று கூறினால் என்ன அர்த்தம்?

இது எல்லாவற்றுக்கும் மேலான ஒரு நகைச்சுவை என்னவெனில்; தமிழக அரசு விவசாயிகளிற்கான ஒரு நலத் திட்டத்தை பிப்ரவரி 22ஆம் முதல் செயல் படுத்த உள்ளதாய் தெர்வித்துள்ளது. எப்படி நன்மை செய்யப் போறாங்கனு பொருத்திருந்து தான் பார்க்கணும். குறைந்த பட்ச தேவையான பாசன நீரையே பெற்றுத் தர இயலாத (விரும்பாத ?) இவங்களுக்கு ஓட்டு போட்ட பாவத்துக்கு மக்கள் இன்னும் என்னவெல்லாம் அனுபவிக்க வேண்டும் என்று தெரியவில்லை.

இங்க உள்ள விஷய்ங்களுக்கு நம்ம திமுக ரரக்கள் யாரவது விளக்கம் குடுப்பாங்களா?

31 comments:

சிறில் அலெக்ஸ் said...

"முதல்வர் பதவி ஒரு முள் கிரீடம்" - ஜெயலலிதா

மதுசூதனன் said...

என்ன சொல்ல வறீங்க சிறில்? ஒண்ணும் வெளங்கலையே.

Anonymous said...

குழப்பம் அவர் கூறியதில் இல்லை,
வெளியே பேசி தீர்க்க Opponent Party (Kerala) சம்மதிக்க வேண்டும். ஆனால் Kerala பேச்சுவார்த்தைக்கு சம்மதிக்காவிட்டால் Court க்கு செல்ல வேண்டிய நிலை, அதனால் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. "கருணாநிதி என்ன சொன்னாலும்/செய்தாலும் எதிர்ப்பது" என்னும் வெறுப்புக் கண்ணாடியை கழற்றி விட்டு படித்தால் புரியும்.

- TN Vasi

மதுசூதனன் said...

//கருணாநிதி என்ன சொன்னாலும்/செய்தாலும் எதிர்ப்பது" என்னும் வெறுப்புக் கண்ணாடியை கழற்றி விட்டு படித்தால் புரியும்//

ஒரு வாதத்துக்கு நீங்க சொன்னது சரினு எடுத்துகிட்டாலும் நடைமுறை பிரச்சினைக்கு இது தீர்வா? மேலும் பெரியறு விஷத்துல்ல உங்க கருத்தை சொன்ன நீங்க காவேரி விஷயத்துல வாயை திறக்கவே இல்லையே ?!?!

Anonymous said...

//ஒரு வாதத்துக்கு நீங்க சொன்னது சரினு எடுத்துகிட்டாலும் நடைமுறை பிரச்சினைக்கு இது தீர்வா?//

உங்களுடைய இந்தக் கேள்விக்கு என்ன அர்த்தம்????
The ball is now in Kerala's side to decide whether to solve by dialogue or by Supreme Court. If they choose the path of dialogue, then we should e ready to take up dialogue. Or, we have to go to court to get our right share of water. உங்கள் கேள்வி Kerala விடம் கேட்க வேண்டிய கேள்வி.

//காவிரி நதி நீர் தீர்ப்பாயம் தந்த தீர்ப்பில் தமிழகத்துக்கு சாதகம், பாதகம் இரண்டும் உள்ளது எனக் குறிப்பிட்டார்.//
எனக்கு இந்த தீர்ப்பில் சாதகம் மட்டுமே உள்ளதாக தெரிகிறது. பாதகமென்பது 60 TMC தமிழகம் பக்கது மாநிலத்திடம் இழக்கின்றதே (அதுவும் Water resource rich Kerala விடம்) என்பதைக் குறிப்பிட்டிருக்கலாம்.

//மறு நாள் அவர் அளித்த இன்னொரு பேட்டியில் அதே தீர்ப்பானது தமிழகத்துக்கு ஆருதலாய் உள்ளது //

இதில் பதிலில் என்ன தவறு இருக்கிறது?
16 வருடம் கழித்து நமக்கு சாதகமாக வந்த தீர்ப்பு ஆறுதல் தானே!

- TN Vasi

மதுசூதனன் said...

/இதில் பதிலில் என்ன தவறு இருக்கிறது?
16 வருடம் கழித்து நமக்கு சாதகமாக வந்த தீர்ப்பு ஆறுதல் தானே!//

சபாஷ்! சரியான பதில்.. அனானி, முதற்கண் இதை 16 ஆண்டு காலம் இழுத்து அரசியலாக்கியது. இரண்டாவது நேற்றைக்கு ஒன்று இன்றைக்கு ஒன்று எனக் குறிப்பிடுவது. இப்போது இருக்கும் நிலையைப் பார்த்தால் கர்நாடகத்திலிருந்து தண்ணீர் வருமா என்பதே கேள்விக் குறி. இதிலென்ன ஆறுதல் புடலங்காயைக் கண்டீர் நீர்? இதைப் போன்ற தீர்ப்புகள் பல பார்த்தாயிற்று. ஆயின் இவற்றில் எத்துனை தீர்ப்புகள் செயல் வடிவம் பெற்றன என்பது தான் கேள்வி.

26 முறை பேச்சுவார்த்தை நடத்தி தோவி கண்டோம் காவிரியில். முல்லை பெரியாற்றுக்கும் அதே நிலை தானே ? அது எப்படி ஐயா முதல்வரின் பக்கம் தவறே இல்லை கேரளத்தின் பக்கம் தான் மொத்த தவறும் என்று உம்மால் வாதாட முடிகிறது ? ஒரு விஷயம் புரிந்து கொள்ளுங்கள்.. பந்து எவர் பக்கம் இருப்பினும், பசியும் பட்டினியும் நம்மக்குத் தான்.

dondu(#11168674346665545885) said...

தமிழக அரசியல் தனி மனித விரோதத்தில் ஆழ்ந்துள்ளது. காவிரி விஷயத்தில் கர்னாடகாவில் எல்ல கட்சியினரும் யார் சமகால முதல்வராக இருந்தாலும் அவர் பின்னாலேயே நிற்கிறார்கள். அவற்றில் அதிமுகவின் கர்னாடக கிளையும் அடங்கும். இதை நான் ஒரு பத்திரிகையில் படித்தேன். அங்குள்ள திமுகவினரும் அதே நிலையைத்தான் எடுத்திருப்பார்கள் என்பதில் கிட்டத்தட்ட உறுதியாக உள்ளேன்.

தில்லியில் ஜனாதிபதியை சந்திக்கப் போகும்போது கூட கர்னாடகாவினர் ஒன்றாகவே செல்வர்.

ஆனால் நம்மவர்கள்? சொல்லவே வருத்தமாயிருக்கு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

லக்கிலுக் said...

//முதற்கண் இதை 16 ஆண்டு காலம் இழுத்து அரசியலாக்கியது. //

இதை லூசுத்தனம் என்பதா? வேறு ஏதாவது வார்த்தை இருக்கிறதா தெரியவில்லை.

நடுவர்மன்றம் விசாரணை செய்து தீர்ப்பளிக்க 16 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது. விசாரணை ஆரம்பித்தவுடன் இடைக்கால தீர்ப்பு ஒன்று வழங்கப்பட்டு ஆண்டுக்கு 205 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்துக்கு கிடைக்க வழிவகையும் செய்யப்பட்டிருந்தது. இதற்குள் என்னய்யா அரசியல் இருக்கிறது? கருணாநிதி சீக்கிரமாக தீர்ப்பு தாருங்கள் என்று நடுவர்மன்றம் மீது கேசு போட்டிருக்க வேண்டுமா?

நடுவர்மன்ற விசாரணை நடந்துவந்த 16 ஆண்டுகளில் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தவர் ஜெயலலிதா என்பது குறிப்பிடத்தக்கது.

மதுசூதனன் said...

//இதை லூசுத்தனம் என்பதா? வேறு ஏதாவது வார்த்தை இருக்கிறதா தெரியவில்லை.//

நல்லா யோசிங்க லக்கி. பதில் தெரியவரும்.

//நடுவர்மன்றம் விசாரணை செய்து தீர்ப்பளிக்க 16 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது.//

இதற்கு பெயர் சோம்பேறித்தனம் அல்லாது வேறென்ன? நடுவர் மன்றம் பல இடைக்கால தீர்ப்புகளைத் தந்தது என்னவோ நிஜமே. ஆனால் அது வெறும் தீர்ப்பாய் காகிதத்தில் மட்டுமே இருந்து வந்துள்ளது என்பதை உங்களால் மறுக்க முடியுமா லக்கி?

//நடுவர்மன்ற விசாரணை நடந்துவந்த 16 ஆண்டுகளில் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தவர் ஜெயலலிதா என்பது குறிப்பிடத்தக்கது. //

மறுக்கவில்லை. இந்த விஷய்த்தில் அவரும் மெத்தனமாய் இருந்ததும் இதை வைத்து அரசியல் செய்ததும் அப்பட்டமான நிஜம். நான் ஒரு போதும் அதை மறுக்க மாட்டேன். ஆனால் நீங்கள் தான் இந்த விஷயம் அரசியல் ஆதாயம் கருதி பயன்படுத்தப்படுவதை மறுக்கிறீர்கள்.

கொஞ்சம் தெளிந்த மனதோடு யோசனை செய்து பாருங்கள். இந்த விஷயத்துக்கு 16 வருடங்கள் தேவையா ? சரி, தீர்ப்பென்னவோ வந்து விட்டது. ஆனால் தீர்ப்பு செயலாகுமா ? பதில் சொல்லுங்கள் லக்கியாரே...

மதுசூதனன் said...

//ஆனால் நம்மவர்கள்? சொல்லவே வருத்தமாயிருக்கு....//

கூட மத்தவங்களை கூட்டிப் போனா புதிய கொள்(ளை)கைகள் பத்தி வெளிப்படையா பேச முடியாதில்ல.!

Anonymous said...

உன் அப்பனை ஒரு மாசம் ஆட்சி செய்யச் சொன்னால், அப்போது அவன் செய்யும் எல்லாமே நல்லது என்பாய்.

கருணாநிதி பாப்பான் இல்லை என்பதால் உனக்கு எல்லாத்திலும் குத்தம் கண்டு பிடிக்கத் தோனும்!

மதுசூதனன் said...

//உன் அப்பனை ஒரு மாசம் ஆட்சி செய்யச் சொன்னால், அப்போது அவன் செய்யும் எல்லாமே நல்லது என்பாய்.//

நிச்சயம் மாட்டேன் ஐயா. என் அப்பன் நாட்டுக்காக உழைத்த ராணுவ வீரன். மக்கள் ரத்ததினை உறிஞ்சும் அரசியல் வாதியல்ல.

//கருணாநிதி பாப்பான் இல்லை என்பதால் உனக்கு எல்லாத்திலும் குத்தம் கண்டு பிடிக்கத் தோனும்! //

இன்றும் என் குடும்பத்தினர் எமது நிலங்களில் விவசாயம் செய்து வருகின்றனர். இந்தக் காவிரி பிரச்சினையில் நேரடியாய் பாதிக்கப் படாவர்களில் நானும் ஒருவன் எனும் அடிப்படையில் எழுந்தது இந்தக் கேள்விகள். முடிந்தால் பதில் கூறும் இல்லையேல் சாதியின் பெயரால் சிண்டு முடியாது சும்மா இருக்கவும்.

Anonymous said...

//26 முறை பேச்சுவார்த்தை நடத்தி தோவி கண்டோம் காவிரியில். முல்லை பெரியாற்றுக்கும் அதே நிலை தானே ? அது எப்படி ஐயா முதல்வரின் பக்கம் தவறே இல்லை கேரளத்தின் பக்கம் தான் மொத்த தவறும் என்று உம்மால் வாதாட முடிகிறது ? ஒரு விஷயம் புரிந்து கொள்ளுங்கள்.. பந்து எவர் பக்கம் இருப்பினும், பசியும் பட்டினியும் நம்மக்குத் தான். //

உங்கள் வாதம் வெறும் விதண்டாவாதம்...
ஒன்று பேசி தீர்க்க வேண்டும். அதற்கு இரு தரப்பு ஒத்துழைப்பு அவசியம்.
இரு தரப்பும் ஒத்துழைக்காவிட்டால் நீதிமன்றம் போக வேண்டும். நீதிமன்றதில் கர்நாடகம் (கேரளாவும் ) வாய்தா வாங்கி 16 வருடம் இழுத்தடித்தால் அதற்கு கருணாநிதி எப்படி பொறுப்பாவார்? ஏன் இடையில் வந்து 10 வருடங்கள் ஆட்சி புரிந்த JJ உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா?

நீதி/தீர்ப்பு தாமதமாக வந்தால் நீதிமன்றதின் செயல்பாட்டை குறை கூறுங்கள், அல்லது வாய்தா வாங்கும் வழிமுறைகளைக் குறை கூறுங்கள்.//இப்போது இருக்கும் நிலையைப் பார்த்தால் கர்நாடகத்திலிருந்து தண்ணீர் வருமா என்பதே கேள்விக் குறி. இதிலென்ன ஆறுதல் புடலங்காயைக் கண்டீர் நீர்? //

அணையின் சாவி அவர்கள் கையில் இருக்கும் வரை தமிழகத்திற்கு தண்ணீர் வராது. ஆனால் அணையின் சாவி மாநில அரசிடமிருந்து மத்திய அரசிற்கு செல்ல SCன் தீர்ப்பு உதவும். இதுதான் ஆறுதல். புரிந்ததா?

//அது எப்படி ஐயா முதல்வரின் பக்கம் தவறே இல்லை கேரளத்தின் பக்கம் தான் மொத்த தவறும் என்று உம்மால் வாதாட முடிகிறது ? //

கருணாநிதி மேல் என்ன தவறு?
அவர் கூறும் சொற்களில் Reading between the lines செய்யாமல்,
அவர் செய்ய தவறியது என்ன என்று கூறுங்களேன்?


கருணாநிதி வழக்குதான் தொடரமுடியும்,
அண்டை மாநிலத்தின் மேல் படையா எடுக்க முடியும்? இதே கேள்விகளை ஏன் JJவை நோக்கி நீங்கள் கேட்பதில்லை?

TNV

dondu(#11168674346665545885) said...

சற்று சரித்திரத்தை பார்ப்போம்.

1924 ஒப்பந்தம் ஐம்பது ஆண்டுகளுக்கு போடப்பட்டது. 1974-ல் புதுப்பிக்க வேண்டும். அப்போது இருந்தது தி.மு.க. அரசு. மத்தியிலும் கர்னாடகாவிலும் அவருக்கு நட்பாக இருந்த காங்கிரஸ் கட்சிதான் அரசு செலுத்தியது. 1972-லேயே அதற்கான பூர்வாங்க வேலைகளை ஆரம்பித்திருக்க வேண்டும். அப்போது ஏன் செய்யவில்லை என பிற்காலத்தில் துக்ளக் பேட்டியொன்றில் நாஞ்சில் மனோகரனை கேட்டபோது அவர் மென்று விழுங்கினார். தங்களை இந்திரா காந்தி அரசியல் சங்கடம் வராமலிருக்க பிரச்சினைகளை கிளப்ப வேண்டாமென்றும், தானே ஆவது செய்வதாகவும் கூறினார் என்று முணுமுணுத்தார்..

பிறகு நெருக்கடி நிலை, திமுக அரசு டிஸ்மிஸ், சர்வாதிகாரி இந்திராவின் பேயாட்டம். ஆக காவிரி பிரச்சினை அமுங்கி விட்டது. சந்தடி சாக்கில் கர்னாடகா அரசு தனது விளைநிலங்களை தன்னிச்சையாக அதிகரித்து கொண்டது. அதெல்லாம் இரு மானில அரசுகளும் சேர்ந்து பேசி செய்திருக்க வேண்டிய விஷயம்.

பிறகு வந்த எம்.ஜி.ஆர். அரசும் தனது கடமையிலிருந்து தவறியது. இடியாப்பச் சிக்கல் அதிகரித்து கொண்டே போனது.

தன் பேரனுக்கு தகவல் துறை போஸ்ட் பயமுறுத்தி வாங்கத் தெரிந்த கருணாநிதி காவேரி என்றால் மட்டும் அப்படியே வாயை இறுக்க மூடிக் கொண்டார். ஜெயலலிதாவின் ரெக்கார்டும் சொல்லிக் கொள்கிறாப்போல இல்லை.

நான் ஏற்கனவே சொன்ன மாதிரி தமிழக ஆளுங்கட்சிக்கு நல்ல பெயர் வந்து விடப்போகிறதே என்று அப்போதைய எதிர்க்கட்சி பயப்படுகிறாப் போல ஒரு தோற்றமே வந்து விட்டது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

மதுசூதனன் said...

//........ கருணாநிதி வழக்குதான் தொடரமுடியும்,
அண்டை மாநிலத்தின் மேல் படையா எடுக்க முடியும்? இதே கேள்விகளை ஏன் JJவை நோக்கி நீங்கள் கேட்பதில்லை? ... //

என்ன தமிழ்நாடு வாசி.... பதிலை பார்த்தீங்களா ?!?

Anonymous said...

உப்புச் சப்பில்லாத விஷயத்திற்கு ஆதரவு வாபஸ் என நாடகம் ஆடத்தெரியும்.தான் 70-களில் ஆண்ட போது, காவிரி ஒப்பந்தத்தை ஒரு வழி செய்யத் தெரியும். தனக்கு வேண்டிய பதவிகளைக் கோரிப் பெறத் தெரியும். எதிர்கட்சியாக இருந்ததனால், மத்திய அரசின் மூலமாக, தமிழக நலத்திட்டங்களுக்கு 'சுற்றுப்புற' தடங்கல்கள் ஏற்படுத்தத்தெரியும். பச்சையை மஞ்சளாக்கத் தெரியும். உலக பணக்காரர்கள் வரிசையில் இடம் பெறத் தெரியும். இதே சுப்ரீம் கோர்ட் வாதத்தை JJ சொன்ன பொழுது, தானாக இருந்தால் பேசித் தீர்த்திருப்பேனென்றும், இம்மாதிரி மற்ற மாநில முதல்வர்களோடு மல்லுக்கு நிற்க மாட்டேனென்றும் சொல்லத்தெரியும். ஒரு சொம்பு தண்ணீரை தன் புதல்வன் கையால் வாங்க்கிக் கொண்டு கிருஷ்ணா நீர் வந்து விட்டது என்று புருடா விடத் தெரியும். உண்மையிலேயே ஒரு ஆன்மீகவாதி அதை நடத்திக் காட்டியதும், அவரையும் வீட்டிற்கு அழைத்து, ஆண்டியிடமும் பிச்சை கேட்டு, சுய விளம்பரப் படுத்தத் தெரியும். ரயில் ஓடாத தண்டாவாளத்தில் தலை வைத்து உயிரை விடப் போவதாக வீரம் காட்டத் தெரியும். ஆனால், தன் ஆதரவில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் அரசின் மூலமாகவும், கம்யூனிஸ்ட் வாதிகளிடமும், இதற்க்காக சம்பிரதாயமாக ஒரு கோரிக்கை வைக்கக் கூட வக்கில்லாத கருணாநிதியின் மேல் என்ன தப்பு என்று கேட்கும் குஞ்சுகளின் அறிவு மெய்சிலிர்க்க வைக்கிறது.

-- கருப்பு கண்ணாடி போட்ட குருட்டு அனானி,
கருப்பு பாசறை, சிங்கை

பாப்பான் said...

//இதே கேள்விகளை ஏன் JJவை நோக்கி நீங்கள் கேட்பதில்லை?
//

ஏன்னா அந்தம்மா பாப்பாத்தியாச்சே?

மதுசூதனன் said...

//ஏன்னா அந்தம்மா பாப்பாத்தியாச்சே? //

எதுக்கு பிரயோஜனம் இந்த சிண்டு முடியும் வேலை? ஜெ ஓண்ணும் உலக யோக்கியம் என்று நான் எங்கும் உரைக்கவில்லையே? அவருடைய செயலையும் தான் நான் கண்டித்துள்ளேன். அது ஏனைய்யா உங்களுக்கு புரியவில்லை?

நீங்க என்ன சொல்ல நினைக்கறீங்க ? பிராமணர் அல்லாதார் ஆட்சி செய்யும் பட்சத்துல அவங்க எது செஞ்சாலும் நியாயம்னா ?!?

A.V.Jawahar said...

Yes, when the CMs of Kerala and Karnataka can afford to take firm stand, why we are unable to do that is not undertood. Atlease on issues of river waters, tamil language, official language, sufferings of tamils abroad, developmental projects and such issues, we, tamils should take united , single stand. For this the initiative to carry along the different view holders, should necessarily come from the ruling benches." Veezhvathu namaha irunthalum, Vazhvadhu thamizhinamaga irukka vendum . "

ஐஸ்ப்ரூட் அய்யர் said...

//எதுக்கு பிரயோஜனம் இந்த சிண்டு முடியும் வேலை? ஜெ ஓண்ணும் உலக யோக்கியம் என்று நான் எங்கும் உரைக்கவில்லையே? //

ஆனாலும் யோக்கியம் இல்லைன்னும் எங்கும் நாங்க உரைக்கவில்லையே?

Anonymous said...

யோவ் நீ ஒரு பாப்பான்னு எல்லாருக்கும் தெரிஞ்சிடுச்சி. உன் பாப்பார குப்பைங்களை மூட்டை கட்டிட்டு கோயில்லே போயி மணி ஆட்டுற வேலைய பாரு.

மதுசூதனன் said...

//ஆனாலும் யோக்கியம் இல்லைன்னும் எங்கும் நாங்க உரைக்கவில்லையே? //

ரொம்ப கஷ்டப்பட்டு தேட வேண்டாம். என்னோட இந்தப் பதிவுல நான் இட்ட பின்னூட்டத்திலே கூட ஜெ இந்த பிரச்சினையை வைத்து அரசியல் ஆதாயம் தேட முயன்றார் என்றே கூறியுள்ளேன். தேடிப் பாரும் ஐயா...

மதுசூதனன் said...

//யோவ் நீ ஒரு பாப்பான்னு எல்லாருக்கும் தெரிஞ்சிடுச்சி. உன் பாப்பார குப்பைங்களை மூட்டை கட்டிட்டு கோயில்லே போயி மணி ஆட்டுற வேலைய பாரு. //

வார்த்தையில் உள்ள துணிவு நடத்தையிலும் வேண்டும். இவ்வளவு காட்டமாய் பார்பனன் என என்னை அழைக்கும் நீங்கள் உங்கள் பெயரைப் போட்டுக் கொள்ளக் கூட தைரியமற்றவர். நான் என்கு சென்று மணியாட்ட வேண்டுமென நீங்கள் சொல்ல வேண்டிய அவசியமில்லை அனானி.

ஏற்கென்னவே சொன்னபடி, இங்கு யாரும் உம்மை சாதி பேச அழைக்கவில்லை. அதை விடுத்து வேறு ஏதேனும் செய்யும் ஐயா.

அய்யர் தி கிரேட் said...

//தேடிப் பாரும் ஐயா...//

ஆமா இவரு பெரிய பைபிள் எழுதியிருக்காரு. அதுலே தேடி வேற பாக்கோணும். இதனால தான் பெரியவங்க சொன்னாங்க 'மொட்டை பாப்பாத்தி ரொட்டி சுட்டாளாம், உப்புமில்லே சப்புமில்லே எட்டி உதைச்சாளாம்'னு

மதுசூதனன் said...

//ஆமா இவரு பெரிய பைபிள் எழுதியிருக்காரு. அதுலே தேடி வேற பாக்கோணும்.//

இந்த பைபிள் கதையெல்லாம் வேண்டாம் அனானி. குறை சொல்வதை விடுத்து கேளிவிக்கு பதில் சொல்லப் பாருங்களேன். முடியவில்லை என்றால் முடியவில்லை என்று சொல்லிவிட்டு போய்விடுங்கள். சாதி சண்டை போட இது இடமில்லை.

Anonymous said...

டோண்டுவின் விளக்கத்திலிருந்து புரிந்தது என்னவென்றால்: இந்திரா காந்தியின் வாக்குறுதியை நம்பி DMK, 1974 ல் பிரச்சனை செய்யவில்லை. ஆனால் Emergency சூழ்நிலையில் DMK ஆட்சி முடிந்துவிட்டது. ஆட்சியில் இல்லாதபொழுது என்ன செய்ய முடியும், போராடுவதைத் தவிர?

கருணானிதியை பத்தி பத்தியாகத் திட்டிவிட்டு, JJ, MGR போனால் போகிறதென்று ஏதோ ஒரு வரி Comment சொல்கிறீர். நல்லது.

TNV

Anonymous said...

//சாதி சண்டை போட இது இடமில்லை.//

பாப்பார ஜாதியை பற்றி பாப்பானிடம் பேசாமல் பறையனிடமா பேச முடியும்?

Anonymous said...

தமிழ்மணத்தில் யாராவது கருனாநிதிக்கு எதிராகவோ , திமுக-விற்கு எதிராகவோ அல்லது அவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டியோ கூறினால் , கேள்விகளுக்கு முறையான பதில் கிடைக்காததோடுமட்டுமல்லாமல் அவர்களின் மேல் பார்ப்பணப் பட்டம் சூட்டப்படும். போலியோ அட்டாக் நடத்தப்படும்.

உடனே ஐஸ்ப்ரூட் அய்யர் போன்றவர்களெல்லாம் வந்து ஜல்லியடித்துவிட்டுப்போவர்.

அதே சமயம் திமுகவை ஆதரித்து எழுதினால் எந்த "தேங்கா மட்டை தேவனும்", "மாங்காமடை மறவனும்","வெட்டி வெள்ளாலனும்","காட்டான் கவுண்டனும்","பன்னாடை பள்ளனும்", "வேகாத வன்னியனும்" வந்து பின்னூட்டம் போடமாட்டான்.

மதுசூதனன் said...

//பாப்பார ஜாதியை பற்றி பாப்பானிடம் பேசாமல் பறையனிடமா பேச முடியும்? //

பாப்பார சாதி பத்தி உங்க கிட்ட இப்ப யாராவது கருத்து கேட்டாங்களா என்ன ? :))

மதுசூதனன் said...

//... கருணானிதியை பத்தி பத்தியாகத் திட்டிவிட்டு, JJ, MGR போனால் போகிறதென்று ஏதோ ஒரு வரி Comment சொல்கிறீர். நல்லது.
//

அது அப்படியல்ல நண்பரே. எது எப்படியாயினும் இன்று பொருப்பில் உள்ளவர் அதைச் செவ்வனே செய்ய வேண்டும் என்கிறேன். நான் இந்தப் பதிவை எழுதும் கால கட்டத்தில் பதவியில் இருப்பது ஜெ அல்லது எம்ஜிஆர் எனில் இதே கேள்விகள் அவர்களுக்கும் உண்டு.

இவர்கள் இருவரும் எதிர்ரெதிர் பக்கத்தில் இருந்து கொண்டு தங்கள் சுய லாபத்திற்காக நாட்டைக் கெடுத்தது தான் மிச்சம். என்னைக் கேட்டால் இன்று பதவியில் உள்ள மற்றும் பதவிகளை பிடிக்க நினைக்கும் அரசியல் வாதிகளில் 99% பேர் கடைந்தெடுத்த அயோக்கியர்கள் என்றே கூறுவேன். இந்த வார்த்தை எவருக்கெல்லாம் பொருந்தும் என்பது உங்களுக்கே புரியும் என நினைக்கிறேன் அனானி.

Anonymous said...

தமிழ் OBC பட்டியல் இடம் பெரும் ‘தமிழர்கள்’ உண்மையாக தமிழர்களே கிடையாது. இந்தி தெலுங்கு கன்னடம் பேசுபவர் ஏராளம்.

கருணாநிதி வீட்டில் பேசும் மொழி எது? தமிழா? இல்லை தெலுங்கு!
வைகோ வீட்டில் பேசும் மொழி எது? தமிழா? இல்லை தெலுங்கு!
ராமதாஸ் வீட்டில் பேசும் மொழி எது? தமிழா? இல்லை தெலுங்கு!

நீங்கள் வெறுக்கும் ’பாப்பான்’கள் வீட்டில் என்ன மொழி பெசுபாவர்கள்? தமிழே!

சரி, விமானநிலையம் சென்றால் அங்கு இட ஒதுக்கீட்டில் வந்த ஊழியர்கள் எந்த மொழி பேசுவார்கள்? தமிழா? இல்லை இந்தி!!!

தி மு க தேர்தலில் என்ன தமிழுக்கு என்ன உறுதிமொழி அளித்தார்கள் ?
விமாங்களில் தமிழ் அறிக்கைகள் கொண்டுவருவது.

வந்ததா? இல்லை.

இன்னொரு உண்மை. கருணாநிதி அவர் வாழ்நாளில் சாடும் சமூகம் எது? தமிழ் பேசும் சமூகம் பெரும்பாலுமானோர்.

அவர் தலையில் தூக்கி போற்றும் பெரும்பாலும் யார்? இந்தி அரசியல் வாதிகள்.

சரி உத்தப்புரத்தில் பாப்பான் வந்தானா ? இல்லை
அம்பேத்கர் சட்டக்கல்லூரியில்? இல்லை..
கீரிப்பட்டியில் ? இல்லை …
ஏன்? எப்படி? தமிழ்நாட்டில் உள்ள தெலுங்கு அரசியல் வாதிகளுக்குத்தன் தெரியணும்…