Thursday, February 15, 2007

லக்கி(லுக்) பார்வைக்கு...

கொஞ்ச நாளைக்கு முன்னால் லக்கிலுக்கின் இந்தப் பதிவில் என் பெயரில் சில பின்னூட்டங்கள் இருப்பதைத் தெரிந்து கொண்டேன். அவை நானிட்ட  பின்னூட்டங்கள் இல்லை என்பதனை உறுதி செய்து கொண்டு லக்கிலுக் அவர்களின் அதே பதிவில் அவற்றை நீக்குமாறு பின்னூட்டம் மூலம் வேண்டுகோள் விடுத்தேன். அந்தப் பின்னூட்டங்கள் பிரசுரமாகவே கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் ஆயின. சரி இதுதான் இப்படி என்றால், போலி மதுசூதனின் பின்னூட்டம் தனை நீக்கக் கோறி நான் இட்ட பின்னூட்டங்களுக்கு எந்த ஒரு பதிலும் இப்போது வரை இல்லை!

சரி பதில் சொல்லாவிட்டாலும் பரவாயில்லை அந்தப் போலியின் பின்னூட்டங்களை நீக்கியிருந்தால் போதும் என்று பார்த்தால், அதையும் அவர் செய்வது போல் இல்லை. போலி எனத் தெரிந்தும் அவர் அதற்கெல்லாம் மாய்ந்து மாய்ந்து பதில் சொல்லிஇப்படிச் செய்வதன் மூலம் அவர் போலிகளை ஆதரிப்பது போல் ஒரு தோற்றம் உருவாகுகிறது. லக்கிலுக் அவர்கள் சமூக பொருப்புள்ள ஒரு பதிவர் என எண்ணியிருந்தேன். ஆனால் இப்போது அவர் நடவடிக்கைகள் அந்த எண்ணத்தினை தவிடு பொடியாக்கிவிடும் போல உள்ளது. குறந்த பட்சம் இந்தப் பதிவினை பார்த்தபின்பாவது அவர் பதிவில் உள்ள போலியின் பின்னூட்டங்களை அவர் நீக்கினார் எனில் நான் அவருக்கு நண்றி சொல்ல கடமை பட்டவராவேன்.

லக்கி....நீக்கி விடுங்களேன் அந்தப் பின்னூட்டங்களை...

31 comments:

Anonymous said...

ஏன் கெஞ்சிக்கூத்தாடுகிறீர் ? அதை நீக்கும் வசதிதான் உங்களுக்கே இருக்கிறதே ? நீங்களே நீக்கி விடலாமே

Anonymous said...

பூத் ஏஜென்டு லக்கியே பல போலிகளை உருவாக்கியவர் என்பது உங்களுக்கு தெரியாமல் இருக்கும் என்று நினைக்கிறேன். திமுக-வை ஆதரித்து பேசினால் தான் உங்கள் பெயரில் உள்ள போலியின் பின்னூட்டங்கள் நீக்கப்படும் என்பது தான் லக்கி விசயத்தில் நிஜம்.

யாராவது திமுகவின் தவறுகளையோ அதன் தலைவர் கருனாநிதியின் தவறான நிலைப்பாடுகளையோ சுட்டிக்காட்டினால் அவரின் பெயரில் போலி உருவாக்குவதுதான் லக்கியாரின் வேலை. போலி பெயரில் அவரே பின்னூட்டம் இட்டு, அதற்கு அவரே பதிலும் சொல்லுவார்.
எனவே அவரிடம் நீங்கள் இதுபோன்ற சமூக பொறுப்புகளை எதிர்பார்ப்பது வீண்.

மதுசூதனன் said...

//ஏன் கெஞ்சிக்கூத்தாடுகிறீர் ? அதை நீக்கும் வசதிதான் உங்களுக்கே இருக்கிறதே ? நீங்களே நீக்கி விடலாமே//

நம்ம போட்ட பின்னூட்டத்தை தான் நாம நீக்க முடியும். மத்தவங்க பின்னூட்டத்தை நாம நீக்க முடியாது அனானி.

லக்கிலுக் said...

வணக்கம் நண்பரே!

எவையெல்லாம் போலி பின்னூட்டம் என அறியத் தந்தீர்களேயானால் நன்றியுடையவன் ஆவேன்..

ஏனென்றால் போலிக்கும், உங்களுக்கும் போட்டோ, எழுத்து நடை என்று எந்த வித்தியாசமும் இல்லை.

ஆபாசமாக போலி பின்னூட்டம் இட்டிருந்தால் அவற்றை உடனடியாக அடையாளம் கண்டு ரிஜக்ட் செய்திருப்பேன். அதுபோல இல்லாமல் தந்திரமாக உங்களை போலவே பின்னூட்டம் இட்டிருப்பதால் ஏமாந்து விட்டேன்....

மதுசூதனன் என்ற பெயரில் இடப்பட்ட பின்னூட்டங்கள் அத்தனையுமே போலியா என்று அறியத்தரவும். அப்படியிருப்பின் எல்லாவற்றையுமே கொஞ்சம் நேரம் ஒதுக்கி சிரமம் பாராமல் நீக்கி விடுகிறேன்.


//அவர் போலிகளை ஆதரிப்பது போல் ஒரு தோற்றம் உருவாகுகிறது.//

முரளி மனோஹர் என்ற போலிக்கு ஆதரவாக களமிறங்கிய நீங்களா இப்படி பேசுவது?

எப்படியிருந்தாலும் போலிகளால் நமக்கு தொல்லை தான் என்பதை உணர்ந்திருக்கிறேன் என்பது தான் எனது நிலை.

அன்புடன்
லக்கிலுக்

குறிப்பு : என்னால் இங்கே லாகின் செய்யமுடியவில்லை என்பதால் அதர் ஆப்ஷன் பயன்படுத்தியிருக்கிறேன்.

மேலே அனானியாக என்னை பூத் ஏஜெண்டு என்று வர்ணித்து பின்னூட்டம் இட்ட பண்டாரத்தின் பின்னூட்டத்தை வெளியிட்டு உங்கள் நாகரிகத்தை நிலைநாட்டியிருக்கிறீர்கள்.

மதுசூதனன் said...

//முரளி மனோஹர் என்ற போலிக்கு ஆதரவாக களமிறங்கிய நீங்களா இப்படி பேசுவது?//

இரண்டு பெயர்களில் ஒருவர் எழுதுவதற்கும் உங்களின் பெயர் மற்றும் உங்கள் பெயர் மற்றும் புகைப்படம் தனை களவாடி தனதாக்கிக் கொண்டு எழுதினால் நீங்கள் இவற்றில் எதைப் போலி என குறிப்பிடுவீர்?

//மேலே அனானியாக என்னை பூத் ஏஜெண்டு என்று வர்ணித்து பின்னூட்டம் இட்ட பண்டாரத்தின் பின்னூட்டத்தை வெளியிட்டு உங்கள் நாகரிகத்தை நிலைநாட்டியிருக்கிறீர்கள்.//

ஒரே ஒரு பின்னூட்டத்துக்கே உங்களுக்கு இவ்வளவு வலித்தால் என் நிலையை எண்ணிப் பாருங்கள் லக்கி!

//எவையெல்லாம் போலி பின்னூட்டம் என அறியத் தந்தீர்களேயானால் நன்றியுடையவன் ஆவேன்..//

என்னுடைய ப்ரொபைல்


மேலே குடுத்துள்ள சுட்டிகளை வைத்து போலியை அடையாளம் காணுங்கள் லக்கி.

லக்கிலுக் said...

//மேலே குடுத்துள்ள சுட்டிகளை வைத்து போலியை அடையாளம் காணுங்கள் லக்கி.//

ஒவ்வொரு பின்னூட்டத்தையும் ரிலீஸ் செய்து விட்டு இதுமாதிரி சோதனை செய்து பார்த்தால் நடக்கிற காரியமா மது?

எனக்கெல்லாம் மிகச்சுலபமாக 100 பின்னூட்டங்கள் வரும். அவ்வளவையும் இந்த முறையில் சோதனை செய்து பார்த்தால் பதிவெழுதுவது மட்டுமல்ல... என்னுடைய மற்ற அலுவல்களையும் பார்த்த மாதிரி தான்...

எந்தப் பதிவில் குறிப்பாக உங்கள் இனிய போலியாரின் பின்னூட்டங்கள் இருக்கிறது என்று குறிப்பிடுங்கள். அங்கே மதுசூதனன் என்ற பெயரில் இருக்கும் எல்லா பின்னூட்டங்களையும் அழித்து விடுகிறேன்.

அன்புடன்
லக்கிலுக்

லக்கிலுக் said...

//ஒரே ஒரு பின்னூட்டத்துக்கே உங்களுக்கு இவ்வளவு வலித்தால் என் நிலையை எண்ணிப் பாருங்கள் லக்கி! //

நியாயமான கேள்வி. ஆனாலும் எனக்கு வலிக்கும் என்று தெரிந்து தான் பிரசுரித்தீர்கள் என்று நினைக்கும்போது உங்களைப் பற்றிய என் மதிப்பீடு எவரெஸ்ட்டு லெவலுக்கு உயருகிறது :-)))))

Anonymous said...

போலிகளின் பின்னூட்டங்களையும், அணானிமஸ் பண்டாரங்களின் பின்னூட்டங்களையும் லக்கியின் பதிவில் இருந்து நீக்கவேண்டுமென்றால் அவரின் பதிவில் பின்னூட்டங்களே இருக்காது என்பது தான் உலகறிந்த உண்மை.

Anonymous said...

அடுத்தவன் பெயரில் வந்து பின்னூட்டமிடுவதை விட அணானிமஸாக பின்னூட்டமிடுவதே மேல் என்பதை லக்கி உணரவேண்டும்.
அது சரி அவரே அவர் பெயரை சொல்ல கூசும் போது அவரிடம் எதிர்பார்ப்பது முறையல்ல

மதுசூதனன் said...

http://madippakkam.blogspot.com/2007/02/blog-post_09.html

இந்தப் பதிவில் பார்க்கவும்.

Anonymous said...

//எனக்கெல்லாம் மிகச்சுலபமாக 100 பின்னூட்டங்கள் வரும். //

என்ன போலியின் பின்னூட்டங்களா?
எனக்கு தெரிந்து உருப்படியா ஒரு பின்னூட்டம் கூட உங்கள் பதிவில் பார்த்ததில்லையே லக்கி!.

Anonymous said...

தமிழ்மணத்தில் உலாவரும் டீசண்டான சில போலிகள் லக்கிதான் என்பதை சில மாதங்களுக்கு முன்னரே கண்டுபுடித்துவிட்டேன். ஆனால் அவர் இப்போது ஆளும் கட்சியில் இருப்பதால் அவர் மீது நடவடிக்கை எடுப்பது வேஸ்ட் எனபதால் சரியான சந்தர்பத்திற்காக ஆதாரங்களுடன் காத்திருக்கிறேன்.

இவர் போலியாக வந்து ஆபாசமில்லாமல், ஆனால் உங்களைப்போல உங்கள் கருத்துக்கு எதிராக பின்னூட்டமிடுவதில் வல்லவர்.

--உங்களைப்போல லக்கியால் பாதிக்கப்பட்ட ஒருவன்

மதுசூதனன் said...

//ஆனாலும் எனக்கு வலிக்கும் என்று தெரிந்து தான் பிரசுரித்தீர்கள் என்று நினைக்கும்போது உங்களைப் பற்றிய என் மதிப்பீடு எவரெஸ்ட்டு லெவலுக்கு உயருகிறது :-)))))//

உங்களுக்கு வலப்பதற்காக அல்ல. உங்களுக்கு புரிவதற்காக.

மதுசூதனன் said...

//தமிழ்மணத்தில் உலாவரும் டீசண்டான சில போலிகள் லக்கிதான் என்பதை சில மாதங்களுக்கு முன்னரே கண்டுபுடித்துவிட்டேன்.//

நீங்க சொல்றதது உண்மைங்கிற பட்சத்ததில தமிழ்மணத்தில் அந்த ஆதரங்களை வெளியிடுங்க. அவர் தவறு செய்தவராயின் மத்த பதிவர்கள் அதை தெரிந்துகொள்வதே அவருக்குப் பெரிய தண்டனை.

Anonymous said...

//நீங்க சொல்றதது உண்மைங்கிற பட்சத்ததில தமிழ்மணத்தில் அந்த ஆதரங்களை வெளியிடுங்க. அவர் தவறு செய்தவராயின் மத்த பதிவர்கள் அதை தெரிந்துகொள்வதே அவருக்குப் பெரிய தண்டனை.//

இங்கு வெளியிடுவதால் எந்த பிரயோஜனமும் இல்லை, மாறாக தாக்குதலுக்கு தான் ஆளாக நேரிடும். எனவே இதை சட்ட ரீதியாக தகுந்த தருணத்தில் வெளியிடுவது தான் புத்திசாலித்தனமானது.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
மதுசூதனன் said...

//இங்கு வெளியிடுவதால் எந்த பிரயோஜனமும் இல்லை, மாறாக தாக்குதலுக்கு தான் ஆளாக நேரிடும்.//

ஒரு முறை தமிழ்மணத்தில் வெளியிட்டால் ஆதாரம் செல்லாது போய்விடுமா என்ன?

Anonymous said...

//ஒரு முறை தமிழ்மணத்தில் வெளியிட்டால் ஆதாரம் செல்லாது போய்விடுமா என்ன?//

செல்லாமல் போய்விடாது. ஆனால் வெளியிட்ட பிறகு வரும் ஆபாசத்தாக்குதல்களையும், மிரட்டல்களையும் சந்திக்க நான் இப்போது தயாராக இல்லை.

பெரும்புள்ளிகளையே மிரட்டிய இவர்களுக்கு நாமெல்லாம் எம்மாத்திரம்.

bala said...

மதுசூதனன் அய்யா,

டோண்டு அய்யாவை கேட்டுப்பாருங்க.அவர் சொல்லுவாரு.லக்கி ஒரு குழந்தை.30 வருஷத்துல அவர் வேகமா வளர்ந்து,இப்பதான், லாக்டொஜென் லெவெல்லேந்து,செரிலாக் லெவலுக்கு வந்துருக்காரு.அவரைப்போய் இப்படி பேசாதீங்க.

பாலா

மதுசூதனன் said...

//30 வருஷத்துல அவர் வேகமா வளர்ந்து,இப்பதான், லாக்டொஜென் லெவெல்லேந்து,செரிலாக் லெவலுக்கு வந்துருக்காரு.அவரைப்போய் இப்படி பேசாதீங்க.//

ஹிஹிஹி :))) நா கூட எங்கேயோ படிச்சேன்... டோண்டு சார்...நீங்க வந்து தான் "சமீபத்துல" எப்ப எங்க அந்தப் பின்னூட்டத்தை போட்டிங்கனு சொல்லணும் :)

மதுசூதனன் said...

//பெரும்புள்ளிகளையே மிரட்டிய இவர்களுக்கு நாமெல்லாம் எம்மாத்திரம். //

நிறைய பார்த்துவிட்டேன் அனானி. உங்களுக்கு ஆட்சேபனை இல்லையெனில் என்னிடம் குடுங்கள். அவை உண்மையாய் இருக்கும் பட்ச்சத்தில் நான் அவற்றை வெளியிடுகிறேன்.

Anonymous said...

மது,

5 நிமிஷம், கொஞ்சமே யோசிச்சு பாருங்க...ஏன் இந்த பிரச்சினையில் வீணா தலையை கொடுத்து மாட்டிக்கிட்டிருக்கீங்க ?

டோண்டுவோட ஜாதிவெறியை எதிர்த்து இந்த போராட்டம் ஒரு ஆண்டா நடந்துக்கிட்டிருக்கு. திடீர்னு வார் பீல்டுல நீங்க தலையை கொடுத்து மாட்டிக்கிட்டு முழிக்கறீங்க் ?

உங்களுக்கு என்ன நடந்தது என்றே தெரியாது என்பது தான் உண்மை. நீங்க மோதிக்கிட்டிருக்கறது ஒரு தனி ஆள் கிடையாது. இருவது முப்பது பேர் கொண்ட கூட்டம். கண்டிப்பா உங்கள் மன உளைச்சல் மிகவும் அதிகமாகும்.

உடனடியா இந்த இரண்டு பதிவுகளை நீக்கிவிட்டு doondu@gmail.com என்ற முகவரிக்கு மடல் அனுப்புங்க. உங்கள் போலிப்பதிவு 24 மணி நேரத்தில் நீக்கப்பட்டு உங்களிடம் மன்னிப்பும் கேப்பாங்க.

அதை விட்டுட்டு அந்த இத்துப்போன கிழவனுக்கு ஆதரவா கிளம்பிங்கிட்டிருந்தீங்கன்னா ஒரு கட்டத்தில் அலுத்துப்போய் வலையுலகத்தை விட்டே போகவேண்டிவரும்.

அழகான நடை உங்களது. நல்லா எழுதறீங்க. ஏன் மன உளைச்சலுக்கு ஆளாகறீங்க ?

உங்கள் அன்பு நன்பன் : அனானி

Anonymous said...

http://dondu.blogspot.com/2007/01/37.html

17th January, 9.35 PM

This to show how much naive and foolish can this Dondu get.

Do read further and see how that Luckylook responded to Dondu's gesture.

Anonymous said...

//உங்களுக்கு என்ன நடந்தது என்றே தெரியாது என்பது தான் உண்மை. நீங்க மோதிக்கிட்டிருக்கறது ஒரு தனி ஆள் கிடையாது. இருவது முப்பது பேர் கொண்ட கூட்டம். கண்டிப்பா உங்கள் மன உளைச்சல் மிகவும் அதிகமாகும்.//

he is alone but supported by few psyches in thamizmanam circle.

மதுசூதனன் said...

//5 நிமிஷம், கொஞ்சமே யோசிச்சு பாருங்க...//

6 நிமிஷம் யோசிச்சேங்க... அட நெசமாத்தான் சொல்றேன். ஆனாலும் இந்த போலிகளின் செயலில் ஒரு நியாயமும் இருப்பதாகத் தெரியலை.

//உங்களுக்கு என்ன நடந்தது என்றே தெரியாது என்பது தான் உண்மை.//

இல்லைங்க. இதுல நீங்க சொல்லியிருப்பது தான் பொய். எது நிஜம், அது எங்க ஆரம்பமானது, எப்படி ஆரம்பமானது இதெல்லாம் எனக்குத் தெரியும் :).

//உடனடியா இந்த இரண்டு பதிவுகளை நீக்கிவிட்டு doondu@gmail.com என்ற முகவரிக்கு மடல் அனுப்புங்க.//

இந்த வேலை செய்ய என்னால முடியாது அனானி. நான் செய்வதில் தவறுள்ளதாய் எனக்குப் படவில்லை. நான் சாதி வெறியனில்லை. ஆனால் அவ்வாறு முத்திரை குத்தப் படுவதை நான் நிச்சயம் எதிர்ப்பேன். அவ்வாறு என் மீது முத்திரை குத்த முயலுபவர்கள் தங்கள் சுயலாபத்திற்காகத் தான் இதைச் செய்கின்றனர்.

//உங்கள் போலிப்பதிவு 24 மணி நேரத்தில் நீக்கப்பட்டு உங்களிடம் மன்னிப்பும் கேப்பாங்க//

அப்படின்னா அவங்க பண்றது தான தப்பு? இதுக்கு நான் ஏன் வருந்தவேண்டும். தவறு செய்பவர் வருந்தட்டுமே..

Anonymous said...

210.211.184.251 - இந்த ஐபியில் இருந்து எனக்கு அசிங்க அசிங்கமாக மடல் வருகிறது. உன்னால் என்ன நடவடிக்கை எடுக்க முடியும்?

மதுசூதனன் said...

//உன்னால் என்ன நடவடிக்கை எடுக்க முடியும்?//

இது என்னால் நடப்பதெனில் மேலும் விவரங்கள் தரவும் என்ன செய்வது என யோசிக்கலாம். இல்லையெனில் "நாம் என்ன செய்யலாம்" எனக் கேளுங்கள் பதில் சொல்கிறேன்.

புரைபலை சரிபார்ப்பவன் said...

போலியின் புரைபல் கொடுங்க இனிமேல் உங்கள் பின்னூட்டங்களை சரிபார்த்து போட சரியா இருக்கும்

மதுசூதனன் said...

//போலியின் புரைபல் கொடுங்க இனிமேல் உங்கள் பின்னூட்டங்களை சரிபார்த்து போட சரியா இருக்கும்//

ஹிஹிஹி...... தேடுங்க ஐயா.

Anonymous said...

கட்சிக்காக நன்கொடை வாங்கும் போது அரசியல் வாதிகள் அது வெள்ளையா , கருப்பா என்று பார்ப்பதில்லை. பணம் கிடைத்தால் சரி என்று வாங்கி சுருட்டிக்கொள்கின்றனர். லஞ்சம் வாங்கிகொண்டு என்ன எழுதியுள்ளதென்று பார்க்காமலேயே
ஜனாதிபதிக்கு அரஸ்ட் வாரண்ட் கொடுத்த நீதிபதிகள் இல்லையா? அதே போலத்தான் இதுவும். பின்னூட்டம் வந்தால் போதும். அது உண்மையானவரிடம் இருந்து வந்துள்ளதா என்றெல்லாம் பார்ப்பதில்லை. கணக்கில் ஒன்று கூடவேண்டும் அதுதான் இவர்களுக்கு முக்கியம். இவரும் ஒரு அரசியல் வாதி தானே!

உதாரணமாக "கலைஞரை நம்பிய தமிழத்திற்கு அபாயம் ஒருபோதுமில்லை, உபாயமே!" என்று எழுதுவதிற்கு பதிலாக

"கலைஞரை நம்பிய தமிழத்திற்கு அபாயம், ஒருபோதுமில்லை உபாயமே!" என்று எழுதினால் கூட வெளியிட்டு விடுவார் இந்த பதிவர்.

எனவே அவரிடம் மன்றாடி ஒன்றும் ஆகப்போவதில்லை.

மதுசூதனன் said...

//உதாரணமாக "கலைஞரை நம்பிய தமிழத்திற்கு அபாயம் ஒருபோதுமில்லை, உபாயமே!" என்று எழுதுவதிற்கு பதிலாக

"கலைஞரை நம்பிய தமிழத்திற்கு அபாயம், ஒருபோதுமில்லை உபாயமே!" என்று எழுதினால் கூட வெளியிட்டு விடுவார் இந்த பதிவர்.
//

கொஞ்சம் உத்து பார்த்தா மட்டுமே இது ரெண்டுலையும் உள்ள வித்யாசம் புரியும்!