Saturday, February 17, 2007

நடத்துங்க சந்திரசேகர்..... நடத்துங்க !

இன்னைக்கு ராஜ் டிவில செய்திகள் பார்த்தேன். அதில் நாளை சென்னையில் இரண்டாம் முறையாய் நடக்கவிருக்கும் 98 வார்டுகளுக்கான தேர்தல் பற்றிய செய்தியில் நம்ம தலைமை தேர்தல் ஆணையர் திரு. சந்திரசேகர் பேசினார். அவர் சொன்னது என்னான்னா....

"மக்கள் எல்லாரும் நாளைக்கு நடக்கப் போற தேர்தலில் பயமின்றி வாக்களிக்கணும். எந்த வித அசம்பாவிதமும் நடக்காம பார்த்துக் கொள்வதற்காக சிறப்பு காவல் படை பிறிவைச் சேர்ந்த பலர் பணியில் அமர்த்தப் பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி நாங்கள் பறக்கும் படைகளையும் அமைத்துள்ளோம். இவர்களுடன் ஒரு ஸ்ட்ரைக்கிங் ஃபோர்சும் உண்டு; இதில் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் மூன்று காவலர்கள் துப்பாக்கியுடன் செல்வர்"

எனக்குத் தெரிஞ்சு இதெல்லாம் போன தடவை தேர்தல் நடந்த போதும் இருந்ததா நியாபகம். வழக்கம் போல காவல் துறையும் பாதுகாப்பு ஏற்பாடெல்லாம் நல்லாத்தான் சென்ஞ்சிருந்தாங்க. வழக்கம் போல அவங்க ஓட்டு போட்டவங்களுக்குதான் பாதுகாப்பு கொடுத்தாங்க. என்ன நாம (அதாங்க பொது மக்கள்) போனபோது நமக்கு ஓட்டே இல்லைனோ இல்லை ஓட்டுப் பதிவு முடிஞ்சு போச்சுன்னோ சொல்லி பத்திரமா வீட்டுக்குப் போகச் சொன்னாங்க. இந்த வாட்டியும் அதே கல்யாணம் தான ?!?! அப்புறம் தேர்தல் முடிஞதும் தேர்தல் எவ்வளவு அமைதியான முறையில் நடந்ததுனு நம்ம லத்திகா சரண் அவர்களும் தலைமை தேர்தல் ஆணையரும் சேர்ந்து பேட்டி குடுப்பாங்க, அதை பார்த்து நீங்கல்லாம் விஷயத்தை தெரிஞ்சிக்கோங்க.

நடத்துங்க சந்திரசேகர்..... நடத்துங்க !

ஒரு போனஸ் விஷயம். தேர்தலே இல்லாம பல வார்டுகளில் திமுக மற்றும் அவங்க கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த பலர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப் பட்டுள்ளனர். :)

2 comments:

dondu(#11168674346665545885) said...

//ஒரு போனஸ் விஷயம். தேர்தலே இல்லாம பல வார்டுகளில் திமுக மற்றும் அவங்க கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த பலர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப் பட்டுள்ளனர். :)//
அது ஜயலலிதா செய்த முட்டாள்தனம்
அன்புடன்,
டோண்டு ராகவன்

மதுசூதனன் said...

//அது ஜயலலிதா செய்த முட்டாள்தனம்//

ஆமாங்க. இவங்க என்னவோ வீரமா நடந்துக்கிறதா சொல்லிகிட்டு நம்ம பணத்தை வாரி இரைக்கிறாங்க. ஜெ செய்தது மன்னிக்க முடியாத தவறு.