Monday, February 19, 2007

இஸ்லாத்தும் கருத்து சுதந்திரமும்

நேற்று நல்லடியார் எழுதிய "தஞ்சை முஸ்லிம்களைக் குறிவைக்கும் சங் பரிவாரங்கள்" எனும் பதிவை படிக்க நேர்ந்தது. அதில் அவர் சங் பரிவார் போன்ற அமைப்புகள் இஸ்லாமியர்களின் (குறிப்பாக தஞ்சையில் வாழுவோர்) கருத்து சுதந்திரத்தைப் முடக்குகின்றனர் எனக் குற்றம் சாட்டினார். இங்கே "சங் பரிவார்" எனும் அமைப்பினை நான் ஆதரிக்கப் போவதில்லை என்பதை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். ஆயின் அவர் ஹிந்துக்களை மொத்தமாய் குற்றம் சொல்வதை என்னால் ஏற்க முடியவில்லை.

அவரின் பதிவில் பின்னூட்டமிட எண்ணி எழுத ஆரம்பித்தது அது ஒரு பின்னூட்டத்தை விட மிகவும் பெரிதாகப் போனதால் தனியொரு பதிவாக இங்கெ இடுகிறேன்.

இஸ்லாமியர்களின் சுதந்திரத்தை ஹிந்துக்கள் முடக்குவதாய் கூக்குரல் எழுப்பும் இவர் இஸ்லாமியர்களே இஸ்லாமியர்களுக்கு விதிக்கும் தடைகளைப் பற்றி ஏன் பேசவில்லை? உட்கட்சி பூசல் போல் இதை உள் மத விவகாரம், இதில் வேற்று மதத்தவர் தலையிட வேண்டாம் என்பாரா..?

சமீபத்தில் புதுவை சரவணன் அவர்களின் "எல்லாமே ஜமாத்" எனும் பதிவை படித்தேன். முதலில் என்னால் நம்ப முடியவில்லை. ஆனால் உண்மையில் இப்படித் தான் நடக்கிறது என்பதை நான் என் நம்பிக்கைக் உரியவர்கள் மூலம் உறுதிப் படுத்திக் கொண்டேன். நான் மேற்சொன்ன பதிவில் இருந்து சில வரிகள் இதோ...

************************************************************

இங்கு எல்லா வசதிகளும் இருக்கிறது. போலீஸ் ஸ்டேஷன் மட்டும் இல்லையே. ஏன்?

மேல்விஷாரத்தைப் பொறுத்தவரை எல்லாம் ஜமாத் தான் முடிவு செய்யும். யாரும் ஜமாத்திற்கு தெரியாமல் போலீஸ் ஸ்டேஷன் செல்லமாட்டார்கள்.

நீங்கள் யாருக்கு வாக்களிக்கப் போகிறீர்கள்..

ஜமாத் யாருக்கு ஓட்டுப் போட கட்டளை பிறப்பிக்கிறதோ அவர்களுக்குத்தான் ஓட்டுப் போடுவோம்

************************************************************

இது மட்டுமா... அரபி மொழியில் கடைகளுக்கும் இன்ன பிற வர்த்தக நிறுவங்களுக்கும் பெயர் பலகை நிச்சயம் உருது மொழியில் இருக்க வேண்டும் என்று நிபந்தனை வேறு. இது ரொம்பவும் சிறிய விஷயம் தான். பாரத ஸ்டேட் வங்கி கூட இதற்கு விதி விலக்கல்ல என்பதற்கு கீழேயுள்ள படமே சாட்சி.

படம்: புதுவை சரவணன் அவர்களின் பதிவிலிருந்து பெறப்பட்டது.

மேலும் சரவணன் அவர்கள் பதிவில் கண்ட இன்னொரு  திடுக்கிடும் விஷயம் மேல்விஷாரம் நகராட்சியில் தீர்மானங்கள் உருது மொழியில் நிறைவேற்றப் படுவதாகும்.  அனைத்து தமிழக அரசு அலுவலங்களிலும் ஆட்சி மொழி தமிழ் என்பதை சட்டமாக்கியபின் இவர்கள் எப்படி உருது மொழியில் தீர்மானங்களை நிரைவேற்றலாம் ? அது சட்டத்துக்கு புரம்பான ஒரு காரியமல்லவா ?

நல்லடியாரின் பதிவில் நான் இட்ட ஒரு பின்னூட்டமும் அதற்கு அவரின் பதிலும்..

************************************************************

//நீதித்துறையின் உயர்ந்த இடத்தில் இருந்த ஒருவர் கூறியிருக்கும் இவ்வாசகங்கள் இந்தியாவில் இந்துத்துவ ஃபாஸிஸ்டுகளின் வளர்ச்சியைத் தெளிவாக உணர்த்துகிறது.//


இந்துத்வா ஃபாசிஸ்டுகள் அப்படினு நீதிபதி சொன்னாரோ? ஏன்ங்க சும்மா சாதிச் சண்டையையும் மதச்சண்டையையும் வளர்க்கறீங்க? நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை என்றே வைத்துக் கொள்வோம். எனது ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள்.

உலகின் பல்வேறு பகுதிகளில் பரவி வரும் தீவிரவாதமும் தீவிரவாதிகளும் பெரும்பாலும் இஸ்லாமியர்களாக மட்டுமே இருப்பது ஏன்?
டிஸ்கி: எல்லா இஸ்லாமியர்களும் தீவிரவாதிகள் என்று நான் கூறவில்லை. எனக்கும் நல்ல இஸ்லாமிய நண்பர்கள் உள்ளனர்.

//நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை என்றே வைத்துக் கொள்வோம். எனது ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள்.
உலகின் பல்வேறு பகுதிகளில் பரவி வரும் தீவிரவாதமும் தீவிரவாதிகளும் பெரும்பாலும் இஸ்லாமியர்களாக மட்டுமே இருப்பது ஏன்?//

மதுசூதனன்,

உலகில் இஸ்லாத்தின் தொடக்கம் ஆதம்-ஹவ்வாவிலிருந்தும் இறுதியாக முழுமைப்படுத்தப்பட்டது முஹம்மது நபியின் மூலமும் என்பது இஸ்லாமியர்கள் நம்பிக்கை. வரலாற்றுக் குறிப்புகளில் இஸ்லாம் கடந்த 1428 ஆண்டுகளாக அறியப்பட்டு வருகிறது. இஸ்லாத்தின் பால் ஈர்க்கப்பட்டவர்களில் அடிமைகள் முதன் மாமன்னர்கள்வரை அடங்குவர். வரலாறு இவ்வாறிருக்க, 'இஸ்லாமியத் தீவிரவாதம்' என்ற சொல்லாடல் இஸ்லாத்துடன் எத்தனை நூற்றாண்டுகளாக பிரபலப்படுத்தப் பட்டுள்ளது என்று உலக வரலாற்றைப் சற்று புரட்டிப் பார்த்தால், தீவிரவாதிகள், தீவிரவாதம் என்பதற்கான உண்மையான அர்த்தம் விளங்கும்.
சிலமாதங்களுக்கு முன் தமிழ் வானொலி செய்தியில் பாலஸ்தீனர்கள் இஸ்ரேலிய ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தியதையும், விடுதலைப் புலிகள் இலங்கை ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தியதையும் சொன்னார்கள். பாலஸ்தீனர்களை தீவிரவாதிகள் என்றும் புலிகளை தமிழ் போராளிகள் என்றும் ஒரேநேரத்தில் செய்தியில் சொன்னார்கள். இலங்கைத் தமிழர்களும், பாலஸ்தீனர்களும் உரிமைகளுக்காகவே போராடி வருகிறார்கள் எனும்போது ஒருசாரார் தீவிரவாதியாகவும் இன்னொரு சாரார் போராளியாகவும் சொல்லப்படுவது ஏன்? இந்திய சுதந்திரப்போராளிகளைப் பற்றி பிரிட்டீஸ் ஆவணங்களில் தேடினால், இந்திய தீவிரவாதிகள் என்றே சொல்லப்பட்டிருப்பர். நம் நாட்டு சுதந்திரத்திற்காக போராடியவர்கள் நாம் தியாகிகள் என்று போற்றுகிறோம்!
இந்த வேறுபாடுகளைப் புரிந்து கொண்டால் உங்கள் கேள்விக்கான விடை தெளிவாகும் என்று நம்புகிறேன்.

************************************************************

கடந்த சில ஆண்டுகளாகத்தான் "இஸ்லாமிய தீவிரவாதிகள்" எனும் சொல்லாடல் புழக்கத்தில் இருப்பதாய்க் கூறும் அவர் கத்தி முனையில் எத்தனை பேற் இஸ்லாத்துக்கு மதமாற்றம் செய்ய நிர்பந்திக்கப் பட்டனர் என்பதை என்னைப் பார்க்கச் சொன்ன அதே வரலாற்றை புரட்டிப் பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் நல்லடியார் அவர்கள் இஸ்லாமியத் தீவிரவாதிகள் அனைவரும் போராளிகளேயொழிய தீவிரவாதிகள் இல்லை என்று பரைசாற்றுகிறார். போராளிகள் பொதுமக்களைக் கொல்வதில்லை. தீவிரவாதிகள் தாம் அதைச் செய்கின்றனர். 9/11, ப்ரிட்டிஷ் ரயில் மற்றும் பஸ்களில் குண்டு வெடிப்பு எல்லாவற்றுக்கும் மேல் நம் நாட்டில் நேற்று நடந்த சம்ஜௌதா விரைவு ரயிலில் நடந்த குண்டு வெடிப்பு. இவற்றை எல்லாம் போராட்டம் என சித்தரிக்க நினைப்பது எவ்வளவு தூரம் கீழ்த்தரமானது என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை.

தனியொரு மதம் சாரா மனிதனாயும் சரி, ஒரு ஹிந்துவாகவும் சரி மதம் எனும் பெயரில் வன்முறையையும் பிற மதத்தினர் மீது ஆதிக்கம் செலுத்த எத்தனிப்பதையும் எந்தச் சூழ்நிலையிலும் நான் ஆதரிக்க மாட்டேன்.  மாறாய் அதை நான் வன்மையாகக் கண்டிப்பேன்.

19 comments:

Anonymous said...

//எல்லாவற்றுக்கும் மேல் நம் நாட்டில் நேற்று நடந்த சம்ஜௌதா விரைவு ரயிலில் நடந்த குண்டு வெடிப்பு. //

இது நாட்டில் இருக்கும் இந்து தீவிரவாதிகளின் சதி.
இல்லேன்னா நம்ம மாடு மேய்க்க கூட தகுதி இல்லாத ரயில்வே மினிஸ்டர் கிட்ட சொன்னா, அவரு ஒடனே ஒரு விசாரணை கமிஷன் போட்டு, அதனோட அறிக்கையில், 67 பேரும் தங்கள் மேலேயே மண்ணெண்ணெய் ஊத்தி கொளுத்திகிட்டு தற்கொலை பண்ணிக்கிடாங்கோ - ன்னுட்டு ஒரு ஸ்கார்ட்லாண்ட்யார்டுத் தனமான கண்டுபிடிப்பை அவுத்து வுட்டா - நீதி நிலைநாட்டப்படும். அதோட பொது சொத்தை சேதப் படுத்தியதற்காக செத்து போன எல்லார் பேருலயும் ஒரு பொது நல வழக்கு உச்ச நீதிமன்றத்துலயும் போட்டா - பிரச்சினை தீர்ந்தது :-) நாட்டுல நடக்குறதுக்குப் பேரு ஆட்சியா?

- நாட்டு நடப்பைப் பார்த்து நொந்து போன அனானி...

dondu(#11168674346665545885) said...

//'இஸ்லாமியத் தீவிரவாதம்' என்ற சொல்லாடல் இஸ்லாத்துடன் எத்தனை நூற்றாண்டுகளாக பிரபலப்படுத்தப் பட்டுள்ளது என்று உலக வரலாற்றைப் சற்று புரட்டிப் பார்த்தால், தீவிரவாதிகள், தீவிரவாதம் என்பதற்கான உண்மையான அர்த்தம் விளங்கும்.//

சரி, சரித்திரத்தையே பார்ப்போம். assassination, assassin என்னும் வார்த்தைகளை எல்லோரும் சரளமாகவே பாவிக்கிறோம். அது பற்றி இவ்வாறு விக்கிபீடியா சொல்கிறது. பார்க்க:http://en.wikipedia.org/wiki/Assassination

எல்லா இனத்தவரும் அதை வெவ்வேறு தருணங்களில் பயன்படுத்தியுள்ளனர். ஆனால் assassin தன்வேலையை செவ்வனே முடிப்பதற்காக கீழே குறிப்பிடப்பட்டுள்ளவர்களுக்கு சுவனத்தில் பெரு மார்புடன் கூடிய கன்னியர் கிடைப்பர் என்றும் ஒரு ஆசை காட்டப்பட்டுள்ளது. இங்குதான் இவர்களை ரெக்ரூட் செய்பவர்களது சுயநலமின்மை தெரிகிறது. அதாவது அம்மாதிரியான பெருமுலைக் கன்னியர் தமக்கு வேண்டாம், மற்றவருக்கே வரட்டும் என பெரிய மனதுடன் தீர்மானித்து இவ்வுலகிலேயே தங்கி மற்றவரை அனுப்பி வைக்கின்றனர். அது வேறு கதை, பிறகு பார்ப்போம்.

The term 'Assassin' is thought to be derived from its connections to the Hashshashin, a militant religious sect of Ismaili Muslims, thought to be active in the Middle East in the 8th to 14th centuries. This mystic secret society killed members of the Abbasid elite for political or religious motivations.

It was said that they were drugged during their murders, often with materials such as hashish and opium. The name assassin is derived from either hasishin for the supposed influence of the drugs, and disregard for their own lives in the process, or hassansin for their leader, Hassan-i-Sabah. The above, however, relies heavily on second-hand information from crusader-authored histories which have been traditionally very unreliable for information about native cultures.

Today, it is known that hashishinnya was an offensive term used to depict this cult by its Muslim and Mongolian detractors; the extreme zeal and cold preparation to murder makes it unlikely they ever used drugs. As far as is known they only used daggers, rarely survived their attacks, even when successful (unlike in many tales, where they are silent, invisible killers) and it seems that they rarely acted against westerners during the Crusades, partly because the crusading orders were not as affected by losing individual leaders as were the autocratic local regimes of the time.[1]

மேலும் இரு பக்கத்திலிருந்தும் விவாதிக்க விஷயங்கள் உள்ளன. வாருங்கள் விவாதிக்கலாம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

மதுசூதனன் said...

//இல்லேன்னா நம்ம மாடு மேய்க்க கூட தகுதி இல்லாத ரயில்வே மினிஸ்டர் //

உங்க கருத்து தவறானது அனானி. மாடு மேய்க்கக் கூட லாயக்கில்லைனு நீங்க சொல்ற மனுஷன் தான் நட்டத்தில் இருந்த ரயில்வே துறையினை இன்று லாபத்தில் இயங்க வைத்துள்ளார்.

Anonymous said...

//மாடு மேய்க்கக் கூட லாயக்கில்லைனு நீங்க சொல்ற மனுஷன் தான் நட்டத்தில் இருந்த ரயில்வே துறையினை இன்று லாபத்தில் இயங்க வைத்துள்ளார்.//

absolute nonsense. இவரிடம் இத்தகைய திறமை இருந்திருந்தால், பீஹார் இன்று இருக்கும் நிலமையை அடைந்திருக்காது. நிதீஷ்குமார் மற்றும் முந்தைய அமைச்சரவை செய்த விதைகளை இவர் அறுவடை செய்கிறார். நிறைய படிக்க வேண்டும் நீங்கள் இது விஷயத்தில் - ndtv சொல்வது, சோனியா சொல்ல நினைப்பது என்பதிலும் clarity வேண்டும். Profit tables are not turned positively overnight sir - only the reverse is possible. பொருளாதாரத்தின் அடிப்படைகளை ignore செய்ய முடியாது. அது சரி, இவர் IIM-ல் பிதற்றியது என்ன என்பது தெரியுமா?

-- நா.ந.பா.நொ.போ. அனானி

மதுசூதனன் said...

//Profit tables are not turned positively overnight sir - only the reverse is possible.//

நிச்சயம் ஒப்புக் கொள்கிறேன் அனானி. அவர் மட்டுமே இதற்கு காரணமில்லை என்பதை நிச்சயம் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் அவர் ஒரு துரும்பைக் கூட அசைக்கவில்லை என்பது சற்று சர்ச்சைக்குரிய விஷயமே. இந்த லாலு கதையை இங்கேயே நிறுத்திவிட்டு இனி பதிவு சம்பந்தமான மற்ற விஷயங்களைப் பற்றி பேசலாம் அனானி. வருகைக்கு நன்றி.

Anonymous said...

மதுசூதனன்

நஷ்டத்தில் இருந்த ரயில்வேயை லாபத்துக்கு கொண்டு வந்தது எல்லாம் சும்மா டூப்பு, விபரமான ரயில்வே ஆசாமிகளைக் கேளுங்க உண்மை தெரியும்..உலகத்துலேயே மிகப் பெரிய கழிப்பறை நம்ம இந்திய ரெயில்கள்தான், அகண்ட இந்தியா முழுக்க வெட்ட வெளியில் மலத்தைக் கொட்டும் கேவலமான ரயில்வேத் துறை இந்திய ரயில்வே, அதை மாற்றுவதற்கு இந்த லாலுவுக்குத் துப்பிருக்கிறதா ? ஒண்ணும் வேண்டாம் காலைல ஒரு 5.30 மணிக்கு எக்மோர் முதல் ப்ளாட்ஃபாரத்துல போய் பாருங்க எவ்வள்வு பீ அந்தத் தண்டவாளத்துல கெடக்குதுன்னு, அதை கழுவ எல்லாம் முடியாது அடுத்த ரயில் வந்துடும். எக்மோர் உலகின் மிகப் பெரிய திறந்தவெளிக் கழிப்பிட்டங்களில் ஒன்று. இப்படி இந்தியா முழுக்க்க வியாதியைப் பரப்புற ரயில்வே லாபத்துல ஓடினா என்ன நாசமாகப் போனா என்ன ? முதல்ல உங்க லாலு கிட்ட சொல்லி அதைச் சரி பண்ணச் சொல்லுங்க அப்புறமா லாபம் பாக்கலாம். அந்த ஆளுக்கூம் அவருக்கு முன்னால் இருந்த ரயில் மந்திரிகளுக்கும் மாடு மேய்க்க்கத் தெரியுதோ இல்லியோ, இந்திய முழுக்க மலத்தால மொழுகத் தெரியுது. உலகத்தின் ஏழை நாடுகளில் கூடக் காணக் கிடைக்காத கேவலம் உலகத்தின் ஐ டி வல்லரசான இந்தியாவில் நாறிக் கிடக்கிறது.

இஸ்லாமியர்கள் ஜிஹாத்தின் பெயரில் மதத்தின் பெயரில் உயிர் கொலை செய்வதால் அந்தத் தீவீரவாதிகள் இஸ்லாமியத் தீவீரவாதிகள் என்று அழைக்கப் படுக்றார்கள். சொர்க்கத்தில் கன்னிகள் காத்திருக்கிறார்கள் என்ற நம்பிக்கையில் உலகத்தை நரகமாக்குக்கிறார்கள் இந்த இஸ்ஸாமிய மிருகங்கள். இவர்களை ஆதரிக்கும் இஸ்லாமியர்களும், இவர்களின் அக்கிரமங்களைக் கண்டு கொள்ளாமல் மொளனம் சாதிக்கும் முஸ்லிம்களும், தீவீரவாதிகளின் கோடூரங்களுக்கு காரணம் கற்பிக்கும் முஸ்லீம்களும் தீவீரவாதிகளை, நசுக்கப் பட வேண்டியவர்களே. ஒவ்வொரு முஸ்லீமும் அப்துல் கலாம் போலவும் ப்ரேம்ஜியைப் போலவும், பிஸ்மில்லா கான் போலவும் இருந்து விட்டால் உலகத்தில் பேரமைதி நிலவும் ஆனால் 90% முஸ்லீம்கள் பின்லாடன்களாகவும் அவனை ஆதரிப்பவர்களாகவும் உள்ளார்கள், அதற்கு காரணம் அவர்களின் புனித நூல் குரானேயாகும். அதூதான் உலகின் அனைத்து தீவீரவாதத்திற்கும் முழு முதற்காரணி

மதுசூதனன் said...

//90% முஸ்லீம்கள் பின்லாடன்களாகவும் அவனை ஆதரிப்பவர்களாகவும் உள்ளார்கள், அதற்கு காரணம் அவர்களின் புனித நூல் குரானேயாகும். அதூதான் உலகின் அனைத்து தீவீரவாதத்திற்கும் முழு முதற்காரணி //

இது இரண்டையும் நான் மறுக்கிறேன். 90% என்பது ஏற்க முடியாது ஒன்று என்றே எனக்குத் தோன்றுகிறது. மேலும் எல்லாவற்றுக்கும் குரானை குரை கூறுவதும் தவறு. எந்த ஒரு நல்ல மதமும் மற்ற மத்தினை மதிக்கவே சொல்லும் அவ்வழியில் ஹிந்து மதம் சொல்வதும் அதையே.

மதுசூதனன் said...

//நஷ்டத்தில் இருந்த ரயில்வேயை லாபத்துக்கு கொண்டு வந்தது எல்லாம் சும்மா டூப்பு...//

முழுவதுமாக டூப்பு இல்லை. ஏதோ மிகச்சிறிய அளவில் செய்துள்ளார். மேலும் நீங்க ரயில்வே - கழிப்பிடம் சம்பந்தமா சொன்ன எல்லாத்தையும் ஆமோதிக்கிறேன்.நாம் இன்னும் நிறை விஷயங்களை மாற்றத்தான் வேண்டியுள்ளது.

Anonymous said...

ஏன் இந்த பதிவு இவ்வளவு நாறுகிறது மது ? டோண்டு சார், அனானிகள் எல்லாம் சாக்கடையில் பிரண்டு வந்தார்களா?

'சாராய'சூதனன் said...

அடங்கமாட்டியா அம்பி?

உனக்கேன் இந்தெ வேண்டாத வேலெ??

ஆப்பீஸூ போனோமா... தண்டமா பொழுத போக்குனமா.... மத்தியானம் தயிர் சாதம் தின்னோமான்னு இருக்க வேண்டாமோடா அம்பி.????????

Anonymous said...

எப்படிப்பட்ட பின்னூட்டம் வந்தாலும் ஆபாசம் இல்லாமல் இருந்தால் ரிலீஸ் செய்யும் உங்கள் 'தில்'லை மிகவும் ரசிக்கிறேன் மது.

மதுசூதனன் said...

//எப்படிப்பட்ட பின்னூட்டம் வந்தாலும்//

கருத்து சொல்வது அவர் உரிமை. அதை மறுப்பதும் ஏற்பதும் என் உரிமை. கருத்துக்களால் போரிடவேண்டுமெனில் அது நிச்சயம் போற்றப்பட வேண்டிய ஒன்று. அதுவே கையெறி குண்டுகள் எனில் அது கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று.

Anonymous said...

பதிவுலகம் ஜெயராமனையும், ம்யூஸையும் இழந்து தவிக்கும் இவ்வேளையில் நீங்கள் அதற்கு சரியான மாற்றாக வந்துள்ளீர்கள்.

dondu(#11168674346665545885) said...

//ஆப்பீஸூ போனோமா... தண்டமா பொழுத போக்குனமா.... மத்தியானம் தயிர் சாதம் தின்னோமான்னு இருக்க வேண்டாமோடா அம்பி.????????//

மதுவாவது ஆஃபீசுக்கு எல்லாம் போய் வேலை செய்து நல்ல பேர் வாங்கி கொண்டு தனது நேர மேலாண்மைத் திறமையால் உங்களை போன்ற அசத்துகளையெல்லாம் சமாளித்து பொறுமையுடன் உமது உளறல்களையெல்லாம் போடுகிறார்.

நீங்கள் வேலையில்லாது வீட்டில் வெறுமே பெஞ்சு தேய்க்கிறீர்கள் என்றுதான் எனக்கு படுகிறது.

அவர் என்ன செய்ய வேண்டும் என்று நாட்டாமை செய்ய உமக்கு யார் உரிமை கொடுத்தது?

அன்புடன்,
டோண்டு ராகவன்

மதுசூதனன் said...

//இப்படி இந்தியா முழுக்க்க வியாதியைப் பரப்புற ரயில்வே லாபத்துல ஓடினா என்ன நாசமாகப் போனா என்ன ? முதல்ல உங்க லாலு கிட்ட சொல்லி அதைச் சரி பண்ணச் சொல்லுங்க அப்புறமா லாபம் பாக்கலாம்.//

அதென்ன உங்க லாலு ?
எல்லாரும் சேர்ந்து ஓட்டு போட்டுத் தாங்க அவர் இன்னைக்கு மந்திரி. நீங்களும் சேர்ந்து வாங்க கேட்ப்போம்.

போளி விற்பவன் said...

//பதிவுலகம் ஜெயராமனையும், ம்யூஸையும் இழந்து தவிக்கும் இவ்வேளையில் நீங்கள் அதற்கு சரியான மாற்றாக வந்துள்ளீர்கள்.//

ஆனாலும் உங்க அலும்புக்கு ஒரு அளவே இல்லையா சாமிகளா..

ஜெயராமன் ஒரு புத்திசாலி. மூசு ஒரு அதி புத்திசாலி.. அதுக்கு இவரு மாத்தாம்.

பை த பை மூசையும், செயராமனையும் "இழந்து தவிக்கும்" உங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

அப்புறம் நம்ம முரளி மனோகர் சாரு,

//மதுவாவது ஆஃபீசுக்கு எல்லாம் போய் வேலை செய்து நல்ல பேர் வாங்கி கொண்டு தனது நேர மேலாண்மைத் திறமையால் உங்களை போன்ற அசத்துகளையெல்லாம் சமாளித்து பொறுமையுடன் உமது உளறல்களையெல்லாம் போடுகிறார்//

என்னது.....!!!!!????? நல்ல பேரா.... பாத்தீங்களா மது.. இத்தனை நாள் நீங்க சேத்து வச்ச ரெப்பூட்டேஷனை நம்ம முரளி மனோகர் சார் ஒரு ஷணத்தில போட்டு ஒடச்சிட்டாரு..

அமா அது இன்னாது தல 'அசத்து'? நாங்க அசத்தறதை சொல்றீரா?

//நீங்கள் வேலையில்லாது வீட்டில் வெறுமே பெஞ்சு தேய்க்கிறீர்கள் என்றுதான் எனக்கு படுகிறது//

ஐயா டோண்டு ஐயா... நான் சும்மா இருக்கவில்லை ஐயா.. நான் நல்ல முறையில் தயாரிக்கப்பட்ட, சுவையான போளி விற்கும் ஒரு தொழில் செய்கிறேன் என்று பணிவுடன் சொல்லிக் கொள்கிறேன் ஐயா..


//அதென்ன உங்க லாலு ?
எல்லாரும் சேர்ந்து ஓட்டு போட்டுத் தாங்க அவர் இன்னைக்கு மந்திரி. நீங்களும் சேர்ந்து வாங்க கேட்ப்போம்.//

அப்பிடியே போகும் போது எனக்கும் சேர்த்து ஒரு டிக்கெட் புக் பண்ணி விடுமாறு கேட்டுக் கொள்கிறேன்..

அப்புறம் கடைசியா....

//எப்படிப்பட்ட பின்னூட்டம் வந்தாலும் ஆபாசம் இல்லாமல் இருந்தால் ரிலீஸ் செய்யும் உங்கள் 'தில்'லை மிகவும் ரசிக்கிறேன் மது.//

இதுக்கு ஒரு ரிப்பீட்டு சொல்லிட்டு அப்பீட்டு ஆயிடறேன்..

வர்ட்டா மாமு..

Anonymous said...

எந்த மதமும் தீமையை போதிக்கவில்லை. அந்தந்த மதத்தில் உள்ளா பதவி / அதிகார வெறியர்கள்தான் மற்றவர்களை தூண்டி தங்களின் ஆசைகளை பூர்த்தி செய்து கொள்கிறார்கள். அவர்களை இனம் கண்டு அழித்தால் எல்லாம் சரியாகிவிடும்

முத்துவாப்பா said...

டோண்டு ஐயா..!

ஜிகாதுக்கு ஆயிரம் பேர் ஆயிரம் முறை விளக்கம் சொன்னாலும் யாரும் ஒத்துக் கொள்வதாயில்லை. அதனால் அதைவிட்டு விட்டு சுவனக்கன்னியர் பற்றி..

பெரிய கண்களையுடைய (ஹுருல் ஐன் - கண்ணழகிகள்) என்றுதானே சொல்லப்பட்டிருக்கிறது. உறுப்பு மாற்று யார் செய்தது?

மதுசூதனன் said...

//பெரிய கண்களையுடைய (ஹுருல் ஐன் - கண்ணழகிகள்) என்றுதானே சொல்லப்பட்டிருக்கிறது. உறுப்பு மாற்று யார் செய்தது? //

நம்ம டோண்டு தான் பதில் சொல்லணும் இதுக்கு!