Sunday, March 11, 2007

கல்யாண கலாட்டா - 1

எப்போதும் போல வாயில பேஸ்ட் நுறை வழிய காலங்கார்த்தால 9 மணிக்கே லேப்டாப்பை திறந்ததும் கண்ணில் பட்டது மேட்ரிமோனியல் ஸைட்டிலிருந்து வந்த மெயில். திறந்து பார்த்தால் பெண்ணைப் பெற்ற புண்ணியவான் ஒருத்தர் தன் மகள் பத்தின சில சமாச்சாரங்களைச் சொல்லி... ரெண்டு பேரும் பேசிப்பாருங்க, புடிச்சா மேறுகொண்டு பேசுவோம்னு சொல்லியிருந்தார்.
சரி எப்பவும் போல இதுக்கும் "நோ" தான் சொல்லப்போறேன்னு இருந்தேன். ஆனா எடுத்ததும் முடியாதுனு சொல்லிட்டா நல்லா இருக்காதுனு அந்தப் பிள்ளைக்கு ஒரு மெயில் எழுதினேன். அதுல ஒரு சின்ன கன்பிசன் ஆய்போச்சு, பொண்ணு பேருக்கு மெயில் எழுதாத அம்மா பேருக்கு மெயில் எழுதி அது என்னமோ வடிவேலு விவேக் ரேஞ்சுக்கு காமெடியாயிப் போச்சு. (இதெல்லாம் அந்தப் பிள்ளையோட பெசினப்புறம் தான் தெரியும்)
ஒரு முகூர்த்தம் குறிச்சி ரெண்டு பேரும் சாட்டில் பேச ஆரமிச்சோம். முதல் நாள் ரொம்ப அளவா பேசிட்டு விட்டாச்சு. ரெண்டாவது நாள் என்னடான்னா காலை 10 மணிலேர்ந்து சாயந்திரம் 7 மணி வரை விடாது கடலை போட்டிருக்கும்னு சாயந்திரம் என்னோட PM வந்து வேலை சம்பந்தமா எதையோ கேக்கும்போது தான் உரைச்சது. சரி.... நானும் மாட்டிகிட்டேன்னு நினைக்கயில அந்தப் புள்ள திடீர்னு "எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்குனு" மேட்டரை போட்டு உடைச்சிட்டா...... அப்புறமென்ன நமக்கும் கொஞ்ச நேரம் தல கால் புரியலை. இருந்தாலும் நம்ம உடனே வழிஞ்சிகிட்டு அப்படி ஒத்துக்க முடியாதில்ல... ? அதனால நான் இன்னைக்கு நைட் உனக்கு தொலைபேசறேன். அப்ப இது பத்தி மேற்கொண்டு பேசலாம்னு சொல்லிட்டு வீட்டுக்கு கிளம்பினேன்.
நாலு ரிங் தான் போயிருக்கும்.... அதுக்குள்ள பொறுமை போச்சு. போனை எடுத்ததும் போனை எடுக்க எவ்வளவு நேரம்னு அம்மாவை சிடுசிடுத்தேன். ஏண்டா கத்தற விஷயத்தைச் சொல்லுனு அம்மா சொன்னாள்.
அம்மா அம்மா.......இந்த மாதிரி இந்த மாதிரி.... இந்த மாதிரி இந்த மாதிரி ஆயிப்போச்சுமா என்ன பண்ணட்டும்னு கேட்டேன். எல்லாத்தையும் பொறுமையா கேட்ட அம்மா சிரிச்சுகிட்டே... சரி மேற்கொண்டு உன் இஷ்டம் தான். உனக்கு பிடிச்சிருந்தா நம்ம அவங்க வீட்ல பேசலாம்னு சொன்னாங்க.
வீட்ல பேசி பர்மிஷன் வாங்கின தைரியத்துல நம்மளும் அந்தப் புள்ளைகிட்ட போன்ல இன்னும் ரெண்டு மணி நேரம் கடலை போட்டப்புறம் எனக்கும் உன்னை பிடிச்சிருக்குனு சொன்னேன். அப்புறமென்ன.... ரெண்டு பேருக்கும் ஒரே ட்ரீம் தான். ஒரே நாளில் ஏகப்பட்ட பேச்சு. எக்கச் சக்கமாப் போச்சு. மறு நாளும் இது தொடர்ந்தது. ஆபிஸில் சாட். வீட்டுக்குப் போனது போன். இரண்டு முழு நாளும் இதுவே வேலையா திரிஞ்சோம் ரெண்டு பேரும். எங்களுக்கென்னவோ கல்யாணமே முடிஞ்சிட்டாப்போல ஒரு உணர்வு. அப்படி ஒரு கெமிஸ்ட்ரி.
இப்படி கனவுலையே இருக்கையில அந்தப் புள்ளைக்கு அவங்க அம்மா போனைப் போட்டு அவ தலையில் ஒரு குண்டைப் போட்டாங்க.

14 comments:

நாமக்கல் சிபி said...

//இப்படி கனவுலையே இருக்கையில அந்தப் புள்ளைக்கு அவங்க அம்மா போனைப் போட்டு அவ தலையில் ஒரு குண்டைப் போட்டாங்க.//

!?
அடப் பாவமே!

dondu(#11168674346665545885) said...

//இப்படி கனவுலையே இருக்கையில அந்தப் புள்ளைக்கு அவங்க அம்மா போனைப் போட்டு அவ தலையில் ஒரு குண்டைப் போட்டாங்க.//

ஏன் ஏதேனும் உண்மை தெரிஞ்சு போச்சாமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

மாசிலா said...

கடைசியிலே கொஞ்சம் விளங்களையே!
?

மதுசூதனன் said...

//கடைசியிலே கொஞ்சம் விளங்களையே!
? //

நா இன்னம் விஷயத்தை முடிக்கவே இல்லையே :)

மதுசூதனன் said...

//ஏன் ஏதேனும் உண்மை தெரிஞ்சு போச்சாமா?//

சும்மா சொல்லக் கூடாது ராகவன்.... நல்லா கற்பனை பண்றீங்க.

Anonymous said...

This is for your good only. Don't let Dondu pollute your posts.

மதுசூதனன் said...

//This is for your good only. Don't let Dondu pollute your posts.//

முகமற்றவர்கள் முகமுடையவர்களை பற்றி புகார் செய்ய்ய வேண்டாம் என்று வேண்டிக் கொள்கிறேன்.

இலவசக்கொத்தனார் said...

ஏம்ப்பா, அது அனுபவம் அப்ப்டின்னு வேற வகைப்படுத்தி இருக்கீங்க. இது என்ன, சொந்தக் கதையா?

மதுசூதனன் said...

//ஏம்ப்பா, அது அனுபவம் அப்ப்டின்னு வேற வகைப்படுத்தி இருக்கீங்க. இது என்ன, சொந்தக் கதையா? //

இடுகையை சேர்க்கும்போது தப்பு பண்ணிட்டேனுங்க. இது கதை தான்.

Gopalakrishnudu(#07148244463938149692) said...

//முகமற்றவர்கள் முகமுடையவர்களை பற்றி புகார் செய்ய வேண்டாம் என்று வேண்டிக் கொள்கிறேன்.//
Sorry. I couldn't log in at that time. Sorry also for the word "pollute".

What I meant was, dont allow Dondu to advise you. With the mess he made for himself, surely his advice is bound to be of no good for you.

GK

மதுசூதனன் said...

//What I meant was, dont allow Dondu to advise you. With the mess he made for himself, surely his advice is bound to be of no good for you.//

உங்க அக்கறைக்கு நன்றி. அவர் எனக்கு எந்த விஷயத்துலையும் அறிவுரை சொல்லவில்லை. சொல்லுமாறு நான் கேட்க்கவுமில்லை. அதனால் கவலைப் படாது இருக்கவும் :)

Anonymous said...

இந்த பதிவை பாத்தீங்களா?

Kaushikha said...

adhukapuram ennachu??

மதுசூதனன் / Madhusudhanan said...

//adhukapuram ennachu?? //

எழுதணும்.... நேரம்தான் கிடைக்கலை.