Thursday, March 15, 2007

மேல யாரும் இருக்கீங்களாப்பா ?!!?

மார்ச் மாசம் ஏழாம் தேதி சப்தர்ஜங் விமான நிலையத்தோட (ATC) ஏர் ட்ராஃபிக் கன்ட்ரோலில் உட்க்கார்ந்திருக்கும் ராடார் திரையில் இரண்டு அடையாளம் தெரியாத வெளிச்சப் புள்ளிகள் (யுஎஃஓ). அங்கு பணி புரியும் அனைவருக்கும் உடனே பீதி. அந்த வெளிச்சப் புள்ளிகள் இரண்டு பரக்கும் சமாச்சாரங்களைக் குறிக்கும் ஒரு விஷயம். ஏடிசியின் கருத்துப் படி அவை சாதாரண விமானங்கள அல்ல என்பது தெளிவாய்த் தெரிகிறது.

நம்ம ஏடிசியும் விமானப் படையும் இந்த யுஎஃஓக்கள் பத்தி எந்த ஒரு சரியான தகவலும் தர மறுக்கிறார்கள். இவங்களுக்கு ஒரு படி மேல போய் சிவில் ஏவியேஷன் அமைச்சகம் என்னடான்னா அப்படி ஒரு விஷயமே நடக்கலைனு கற்பூரம் அடிச்சு சத்தியம் பண்ணுது! அமெரிக்காவோட சேர்ந்து நம்ம மக்களும் ரொம்ப லொள்ளு பண்ண ஆரமிச்சிட்டாங்க.

இந்த யுஎஃஓ சமாச்சாரம் ஒண்ணும் புதுசில்லைனே சொல்லலாம். இங்கே அங்கேனு இந்த மாதிரியான நிகழ்வுகள் பத்தின செய்திகள் அப்பப வந்தபடி தான் இருக்கு. ரொம்ப வருஷம் முன்னாலேர்ந்து இந்த யுஎஃபோ விஷயங்கள் ரொம்பவே பிரபலமாத்தான் இருந்து வந்திருக்கு. உதாரணமா நம்ம நியு மெக்சிகோவைச் சேர்ந்த ராஸ்வெல் நகரில் நடந்த யுஎஃபோ க்ராஷ் இன்னும் மக்கள் மத்தியில் ரொம்ப பிரசித்தம். இது பத்தி மேல் விவரம் வேணும்னா இங்க போய் பாருங்க. சரி இந்த மாதிரி சமாச்சாரங்கள் 80களில் தான் ஆரமித்ததா என்றால் அது தான் இல்லை. ஊடகங்களில் இந்த விஷயங்கள் வர ஆரமிச்சது இரண்டாம் உலகப் போரின் ஆரம்பத்திற்கு முன்னிருந்தே இந்த விஷயங்கள் எல்லாம் ஆரமிச்சிருக்கு. வரலாற்றுப் பக்கங்களை இன்னும் கொஞ்சம் புரட்டிப் பார்த்தோமானா கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடிக்கும் தருவாயில் தனது கடல் பயண அனுபவங்களைப் பற்றிய குறிப்புகளை எழுதி வைத்துள்ளார். அதில் கூட இந்த யுஎஃஓ, பெர்மூடா ட்ரையாங்கிள் போன்ற பல சமாச்சாரங்கள் இருக்கு. இப்ப இவ்வளவுதான் எழுத முடிஞ்சது. நேரம் கிடைக்கும்போது இந்த விஷயங்கள் பத்தி இன்னும் நிறைய எழுதறேன்.

இந்த விஷயம் ரொம்ப சுவாரசியமா இருக்கிறதா நினைக்கிற மக்கள் நம்ம கூகிள் கிட்ட கேட்டு விஷயங்களை தெரிஞ்சிக்கோங்க. உங்க வசதிக்காக சில கூகிள் குறிச்சொற்கள் இதோ கீழே.

ராஸ்வெல் - நியு மெக்சிகோ

யுஎஃஓ - ஏரியா 51

ஜானட் - ஏரியா 51

இப்படி இன்னும் நிறைய குடுத்துகிட்டே போகலாம். ஆனா நேரமில்லை. அப்படியே இந்த மாதிரியான விஷயங்களை வெச்சு 1992ஆம் ஆண்டு வெளியான ஒரு சுவாரசியமான தொடர் X - Files. முடிஞ்சா அதோட 9 சீசன்களையும் பாருங்க. அருமையான ஒரு தொடர் அது.

4 comments:

விடாதுகருப்பு said...

இப்ப என்னதான் சொல்ல வறீங்க மிஸ்டர் பூணூல்?

மதுசூதனன் said...

//இப்ப என்னதான் சொல்ல வறீங்க மிஸ்டர் பூணூல்? //

என் பேர் பூணூல் இல்லைங்க. மதுசூதனன்.

Dubukku said...

தேசிபண்டிட்ல் இந்தப் பதிவை இணைத்துள்ளேன். நன்றி.

http://www.desipundit.com/2007/03/16/ufo/

மதுசூதனன் said...

//தேசிபண்டிட்ல் இந்தப் பதிவை இணைத்துள்ளேன்//

நன்றி டுபுக்கு!