Sunday, April 08, 2007

இது ஆரோக்கியமான ஒன்றா ?

  • இந்திய செயற்கைக் கோள் ஒன்று நடுக்கடலில் விழுந்த போது எழாத ஒரு சோகம்
  • இந்திய வீரர்கள் பலர் தீவிரவாதிகள் சிலரின் குண்டுகளுக்கு தினமும் இரையாகிக் கொண்டிருக்கும் போது எழாத ஒரு சோகம்
  • யுத்தங்கள் சிலவற்றில் கொத்து கொத்தாய் வீரர்களில் இழந்தபோது எழாத சோகம்
  • தரமற்ற அரசியல்வாதிகளின் கையில் தேசம் சிக்கித் தவிக்கையில் எழாத ஒரு சோகம்

இந்தியாவின் கிரிக்கெட் அணி உலகக் கோப்பயின் முதல் சுற்றில் வெளியேறியதில் ஏற்பட்டுள்ளது.  நாடெங்கும் கோடானு கோடி கிரிக்கெட் ரசிகர்கள் நம் அணியினரை கூச்சமின்றி அத்தனை மொழிகளிலும் திட்டித் தீர்க்கின்றனர். கிரிக்கெட் வீரர்களின் உருவ பொம்மைகளை எரிப்பதில் தொடங்கி வீடுகளை உடைப்பது வரை நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.

இது போதாது என்று அணி வீரர்களின் தாய்மார்கள் வேறு இந்தியா உலகக் கோப்பையின் அடுத்த சுற்றிற்கு செல்லும் என ஆரூடம் வேறு. யார் அழுதார்கள் இவர்கள் எல்லாம் தொலைக்காட்ச்சியில் தோன்றவில்லை என? நம் தொலைக்காட்ச்சி நிறுவனக்களுக்கும் வேறு வேலை தான் இல்லையா? நாட்டில் முக்கியமான பிரச்சினைகள் டன் கணக்கில் குமிந்து கிடக்க இந்த பாழாய் போன கிரிக்கெட் தான் எல்லாவற்றிலும் வரவேண்டுமா?

ஒரு காலத்தில் "Gentlemen's Game" என்று வர்னிக்கப் பெற்ற இந்த கிரிக்கெட் இன்று சூதாட்டத்தில் துவங்கி கொலை வரை வந்து முடிந்துள்ளது. எங்கு செல்கிறது நமது இந்தியா ? எந்த அளவிற்கு நியாயமானது மக்களின் இந்தக் கோபம் ? இந்தக் கோபத்தினை ஒசிகளை வாரித்தந்து வரிப்பணத்தினன அழிக்கும் அரசுகளைக் கண்டு ஏன் எழுவதில்லை ? பல கோடிகளை சுருட்டி வளர்ர்பு மகனின் திருமணத்தை நடத்துகையில் ஏன் வரவில்லை ? குட்ரோச்சி போன்ற சதிகாரர்களை விடுவிக்க நினைக்கும் நம் அரசியல் மேதாவிகளின் மேல் இத்தகைய கோபம் வரவில்லை. பாராளுமன்றத்தினை தாக்கிய தீவிரவாதிக்கு மரண தண்டனை கூடாது என்று கூறி தீவிரவாத்திற்கு கூஜா தூக்கும் அரசியல்வாதிகளைக் கண்டு ஏன் இத்தகைய கோபம் வரவில்லை?

இந்தக் கோபம் எந்த அளவிற்கு ஆரோக்கியமான ஒன்று ?

3 comments:

dondu(#11168674346665545885) said...

நாம் ரொம்பத்தான் எதிர்ப் பார்த்துள்ளோம் நம் கிரிக்கெட் வீரர்களிடம். அவ்வாறான நிலைமையில் ஏமாற்றமும் அதிகமாக இருக்கும்தானே.

அது சரி, டெண்டுல்கர் மொத்தம் எத்தனை கோல் போட்டார்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

johan said...

பொழுது போக்கு இப்போ பைத்தியமாகியதால் வந்த கோளாறு!!
ஊழல் அரசியல் வாதிக்கு மீண்டும் வாக்குப் போடுவதுபோல; இதிலிருந்து ம (மா)க்கள் மீள்வார்கள்
போல் தெரியவில்லை.

மதுசூதனன் said...

//பொழுது போக்கு இப்போ பைத்தியமாகியதால் வந்த கோளாறு!!//

என்ன பண்றது சொல்லுங்க. நம்ம ஊடகங்களும், பல நிறுவனங்களும் செய்த வேலை இது. பைக் விக்க தோனி, பெப்சி விக்க டெண்டுல்கர் இப்படி எல்லாத்துக்கும் கிரிக்கெட் காரனையும் சினிமாக் காரனையும் கூப்பிடுவதால் வந்த வினை.