Friday, May 11, 2007

திமுகவுடன் ஓராண்டு - ஓர் அலசல்

வெகு நாட்க்களாயிற்று தமிழ்மணம் பக்கம் வந்து. இன்று முதல் எழுத ஆரமிப்பது என்று ஏற்கென்னவே எடுத்திருந்த முடிவுக்கு ஏற்ப என்ன எழுதுவது என்று யோசிக்கையில் கண்ணில் பட்டது தமிழ்மண விவாதக் களத்திலுள்ள திமுக ஓராண்டு கால ஆட்சி! - எடை போடுங்களேன்! பதிவுதான் பளிச்சென்று கண்ணில் பட்டது. சரி இதையே மைய்யமாய்க் கொண்டு நாமும் ஒரு அலசலை ஆரமிப்போம் எனத்துவங்கினேன்.

மொத்தமாய் வந்து கருத்துச் சொல்லுங்கள் என லக்கி சொன்னது போல் அல்லாது ஒரு விஷயத்தினைப் பற்றிய எனது கருத்தைக் கூறி அதே விஷயத்தினைப் பற்றி மற்றவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என அறிந்துகொள்ள ஆவலாய் உள்ளது.

டிஸ்கி: எதற்கெடுத்தாலும் திமுக செய்யவில்லை என்று வசைபாடுகிறாயே. அதிமுக பற்றி எதுவும் சொல்ல மாட்டாயா என்று கேட்க்கவேண்டாம். அவர்கள் செய்யும் தவறுகளும் நிச்சயம் கண்டிக்கத் தக்கவையே. ஆனால் இங்கே அது பற்றிய பேச்சு வேண்டாமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

உறுதிமொழிகளில்

உறுதிமொழி 1: விவசாயக் கடன் தள்ளுபடி

என்னைப் பொருத்தமட்டில் இது கலைஞர் ஸ்பெஷல் என்று கூறமுடியாது. இவர் விவசாயக் கடன்களை ரத்து செய்வார், இன்னொருவர் வட்டி வேண்டாம் அசல் மட்டும் தா என்பார். ஆனால் இந்த விஷயத்தில் மிகப்பெரும் காமெடி என்னவெனில் கூட்டுறுவு வாரியங்களில் உள்ள கடன் மட்டுமே ரத்து செய்யப் பட்டுள்ளது. தேசியமயமாக்கப் பட்ட வங்கிகளில் கடன் வாங்கிய விவசாயிகளுக்கு இந்தச் சலுகை இல்லை. ஏன் அவர்கள் மட்டும் என்ன பாவம் செய்தனர்? மேலோட்டமாய்ப் பார்க்கையில் இது இந்தக் கடன் தள்ளுபடியயனது நல்லதொரு விஷயமாக இருப்பினும், உள்ளூர இதனால் கூட்டுறவு வங்கிகளுக்கு ஏற்படக்கூடிய இழப்பைப் பற்றி சற்றே சிந்தித்துப் பார்க்கவேண்டும். இந்தகைய அறிவிப்பினால் இன்றளவும் பல கூட்டுறவு ஊழியர்கட்க்கு சம்பளம் நிலுவையில் உள்ளதாய் கேள்வி. இதை சரி செய்ய அரசு மேலும் கடன்கள் வாங்க வேண்டும். அந்தக் கடன்கள் அனைத்தையும் அடைப்பதற்கு புதிய வரிகளை விதிக்கவோ அல்லது புழக்கத்திலுள்ள வரிகளின் விகிதங்களைக் கூட்டவோ வேண்டும். இது மீண்டும் சாமானிய மக்களின் தலையில் தான் விடியும் என்பது ஏன் நமக்குப் புரிவதில்லை?

உறுதிமொழி 2: இலவச வண்ணத் தொலைக்காட்ச்சி

மாடு என்னவோ ஓசியில் கொடுத்தாயிற்று, தாம்புக் கயிற்றை ஓசி கொடுத்ததாய் எங்கும் செய்தி வரவில்லையே!?! ஆகக்கூடி இந்த ஐடியா; அரசாங்க பணத்தினைப் பயன்படுத்தி குடும்பத்துக்கு சொத்து சேர்க்கும் ஒரு முயற்ச்சியே என்பது என் கருத்து. ஒரு பெட்டிக்கு 2500? என்று கணக்கு வைத்தால் மொத்தம்....... யப்பா சாமி தலை சுற்றுகிறது. இதிலிருந்து எஸ்சிவி (சன் குழுமம்) பெறப் போகும் கேபிள் டிவி வருமானம் எவ்வளவு எனக் கொஞ்சம் யோசித்துப் பாருங்களேன். சோற்றுக்கே வழியில்லாத மக்களுக்கு கலர் டிவி எதற்கைய்யா? சித்தியும் அத்தையும் பார்த்து வீட்டில் சோம்பேறித்தனமாய் முடங்கவா? சற்றே சிந்தியுங்கள் மக்களே.

உறுதிமொழி 3: இரண்டு ரூபாய் அரிசி

இரண்டு ரூபாய் அரிசி. இது அடுத்த மகா பெரிய அயோக்கியத்தனம். இதனால் மாநில அரசுக்குக் கூடுதல் செலவாம். அதை என்ன திமுகவின் கட்ச்சியா தரப்போகிறது? நாங்கள் தான சாமி குடுக்கணும்? அப்புறம் என்னவோ உங்க பாட்டன் சொத்தை எங்களுக்கு சும்மாக் குடுத்த மாதிரி........ தன் சொத்து முழுவதையும் விட்டு சுதேசிக் கப்பல் விட்ட சிதம்பரம் பிறந்த ஊரில் இப்படியும் சிலர். அட இது போதாது என்று, இதெல்லாம் சாத்தியமே என சான்று கொடுக்க இன்னொரு சிதம்பரம் வேறு.

உறுதிமொழி 4: இரண்டு ஏக்கர் நிலம்

முதலில் அது இரண்டு ஏக்கர். எல்லாரும் மிகவும் குடைந்தவுடன் அது ஒரு ஏக்கர் ஆனது. அப்புறம் ஏதாவது கொடுப்போம் என்றார் அப்புறம் கையளவாவது கொடுப்போம் என்றார். அதையெல்லாம் வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தான் புரியவில்லை. எதற்க்குப் பிரயோஜனப்படும் அந்த கையளவு இடம்? அட மனுஷன் அந்த இடத்துல அவசரத்துக்குக் கூட ஒதுங்க முடியாதே.

கூட்டணிக் கட்சிகளுடனான உறவுகளில்
திமுக + காங்கிரஸ் + பாமக

இதுலையும் ஒண்ணும் சொல்லிக்கொள்ளும் படியான உறவு எதுவும் இல்லை. இவங்க எம்பிக்கள் இல்லைனா வண்டி ஓடாதுனு சோனியா அம்ம கலைஞருக்கு விசிறிகிட்டே இருக்காங்க. இதனால தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் காரங்க எல்லாரும் செம எரிச்சலா இருக்காங்க. ஆனா இது இப்படியே எத்தனை நாளைக்கு நடக்கும்னு பொறுத்திருந்து தான் பார்க்கணும். இந்தப்பக்கம் நம்ம டாக்டர் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் ஏதாவது அறிக்கை விட்டு டென்ஷனை ஏத்திகிட்டே போறார். இதெல்லாம் போதாதுனு சமீபத்துல வந்த எந்த மந்திரி சிறந்தவர் அப்படிங்கிற ஒரு கருத்துக் கணிப்பு வேற. இதல்லாம் கலைஞருக்குத் தேவையா? இன்னைக்கு என்னடான்னா மாறனுக்கு பதவி போனாலும் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லைனு செய்தி.

உட்கட்சி விவகாரங்களில்

ஸ்டாலின் Vs அழகிரி Vs மாறன்

இப்படி எழுதின பிறகு இந்தக் கேலிக் கூத்தைப் பத்தி வேற என்ன எழுதறதுன்னு தெரியாததால அடுத்த விஷயத்துக்குப் போகலாம்.

சமூக நலன் மற்றும் ஆட்சி முறைகளில்

பெரிய பொதுநலத் திட்டங்கள் எதுவும் நடக்கிறதா தெரியலை. ஒரு சின்ன உதாரணம் பல்லவபுரம் நகராட்சியில GST ரோட்டில் கட்டப் பட்டுக் கொண்டிருக்க்கும் மேம்பாலம். அது இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆகும் என்று கடவுளுக்கே வெளிச்சம். போன வாரம் பார்த்தேன். முழுப் பாலத்திலும் ஒரே ஒரு ஆள் தான் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். போகிற போக்கைப் பார்த்தால் மிகவும் மெள்ளமாய் ஒரு பாலம் கட்டுவது எப்படி என்று டிஸ்கவரியில் இதைக் காட்டுவார்கள் போல உள்ளது.

மொத்தத்தில் திமுக

பெருங்காய டப்பா...


மேற்சொன்ன அனைத்தும் எனது கருத்துக்கள். இனி இவற்றினைப் பற்றி விவாதிக்கலாம் வாருங்கள்.

19 comments:

dondu(#11168674346665545885) said...

//1: விவசாயக் கடன் தள்ளுபடி//
இது பற்றி நான் எனது பதிவு ஒன்றில் ஏற்கனவே எழுதியது இதோ:
"இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால் கடன் வாங்குவது/அளிப்பது, அதற்கான வட்டி தருவது/பெறுவது ஆகிய அனைத்துமே ஒரு நாட்டின் பொருளாதாரத்தின் தூண்கள். இதில் அரசு தேவைக்கு மேல் தலையிடாமல் இருப்பதே நல்லது. அரசியல் காரணங்களுக்காக திடீரென ஒரு சாராரின் அத்தனைக் கடன்களையும் தள்ளுபடி செய்வதன் மூலம் பல தவறான சமிக்ஞைகளே மக்களிடம் செல்லுகின்றன. கடன் தள்ளுபடியால் சிலர் சந்தோஷப்படலாம். ஆனால் அக்கடனை முதலிலேயே ஒழுங்காகக் கட்டியவன் ஏமாளியாகவல்லவா ஆகிறான். அடுத்த முறை அவன் கடனை ஒழுங்காகக் கட்ட விரும்புவானா? அதே நேரத்தில் பேங்குகளும் சம்பத்தப்பட்டப் பிரிவினருக்குக் கடன் வழங்க முன்வருமா? இப்படியே போனால் "கடன் அளித்தார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன்" என்றுதான் மாற்றி எழுத வேண்டியிருக்கும். இந்த அழகில் முன்னாள் மந்திரி ஒருவரின் கடனும் இம்மாதிரி குருட்டுத்தனமாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்பதை படித்த போது எங்கு அடித்துக் கொள்வது என்றே தெரியவில்லை". பார்க்க: http://dondu.blogspot.com/2006/08/blog-post_31.html
//2: இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகள்// யார் வீட்டுப் பணத்தில் இதெல்லாம் தருகிறார்களாம்?
//3: இரண்டு ரூபாய் அரிசி// நீங்கள் சொன்னது மாதிரியே இதுவும் அயோக்கியத்தனமே.
4: இரண்டு ஏக்கர் நிலம். அப்புறம்தான் தெரிந்ததாம் ஜெ அரசின் அறிக்கையை இவர்கள் நம்பினார்களாம்.

பாமக இவருக்கு ஆதரவு தருவதே அன்புமணிக்காகத்தான். இல்லாவிட்டால் எப்போதோ கூட்டு முறிந்திருக்கும்.

//மொத்தத்தில் திமுக பெருங்காய டப்பா...//
காலி டப்பா, ஆனால் அதில் விஷங்களும் கலந்து விட்டன. இப்போதைக்கு சாதனை அழகிரியால் நடந்ததுதான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

மகேந்திரன்.பெ said...

அவசரமாக ஒரு பெரிய மூக்கு கண்ணாடியும் ஒரு லாரி நிறைய அரசு ஆவணங்களும் அனுப்ப வேண்டும் அட்ரஸ் கிடைக்குமா ? :))

மகேந்திரன்.பெ said...

//இரண்டு ஏக்கர் நிலம். அப்புறம்தான் தெரிந்ததாம் ஜெ அரசின் அறிக்கையை இவர்கள் நம்பினார்களாம்.//

ஏதோ தப்பு நடந்து போச்சிங்க அந்தம்மா இப்ப்டி இல்லாததும் பொல்லாததையும் அரசாங்க ஆணைல கூட போடுவாங்கன்னு எங்களுக்கு தெரியாதுங்க ஆனா ஒன்னு நிச்சயம் சப்போர்ட் பன்றதா நினைச்சி சேம்சைட் கோல் போட்டுட்டீங்களே அய்யா

மதுசூதனன் said...

//சப்போர்ட் பன்றதா நினைச்சி சேம்சைட் கோல் போட்டுட்டீங்களே அய்யா //

தவறு செய்தவர் எனும் பட்ச்சத்தில் அவருக்கு (தெளிவாகச் சொல்லவேண்டுமெனில் ஜெவுக்கு) ஜே போட முடியாது மகேந்திரன். மத்தபடி விவாதிக்க வேண்டிய விஷயத்தை கோட்டை விட்டுட்டீங்களே... ?

மதுசூதனன் said...

//கடன் வாங்குவது/அளிப்பது, அதற்கான வட்டி தருவது/பெறுவது ஆகிய அனைத்துமே ஒரு நாட்டின் பொருளாதாரத்தின் தூண்கள்.//

நாட்டைப் பத்தியே கவலைப் படாத நம்ம அரசியல் தலைவர்களுக்கு நாலு தூன் உடைஞ்சிடுமேங்கிற கவலை வருமா என்ன?

மதுசூதனன் said...

//அவசரமாக ஒரு பெரிய மூக்கு கண்ணாடியும் ஒரு லாரி நிறைய அரசு ஆவணங்களும் அனுப்ப வேண்டும் அட்ரஸ் கிடைக்குமா ?//

தபெ. எண் 600028, ஹைதராபாத் எனும் முகவரிக்கு அனுப்பவும் மகேந்திரன்.

வால்டர் வெற்றிவேல் said...

//ஆனால் இங்கே அது பற்றிய பேச்சு வேண்டாமெனக் கேட்டுக் கொள்கிறேன்.
//

பாப்பான்களுக்கு ஜெயலலிதா மற்றும் பாஜக செய்யும் தவறுகள் ஏன் தெரிய வருவதில்லை? செலக்டிவ் அம்னீசியாவா? பாஜக சிடி தயாரித்து செருப்படி பட்டது பாப்பார பசங்களுக்கு தெரியவே தெரியாதா?

மதுசூதனன் said...

//பாப்பான்களுக்கு ஜெயலலிதா மற்றும் பாஜக செய்யும் தவறுகள் ஏன் தெரிய வருவதில்லை? செலக்டிவ் அம்னீசியாவா?//

பதிவையே படிக்காம அரை எதையாவது எழுதாம, படித்துவிட்டு அது சம்பந்தமாய் எழுதலாமே.

வெந்தவாயன் said...

//பதிவையே படிக்காம அரை எதையாவது எழுதாம, படித்துவிட்டு அது சம்பந்தமாய் எழுதலாமே.///

ஜெயலலிதா தப்பு செய்தபோது எழுதவில்லை.

பாஜக புளு சிடி வெளியிட்டபோது நீ அதைப்பற்றி எழுதவில்லை.

ஜெயராமன் ஒரு பெண்பதிவர் பெயரில் ஆபாசத் தளம் தொடங்கியபோது எழுதவில்லை.

இப்போ கலைஞர் என்றதும் உனக்கு கோவணத்துக்குள் வேர்க்குது!

மதுசூதனன் said...

//ஜெயலலிதா தப்பு செய்தபோது எழுதவில்லை.//

அப்போது நான் பதிவு எழுதவே ஆரமிக்கவில்ல.

//பாஜக புளு சிடி வெளியிட்டபோது நீ அதைப்பற்றி எழுதவில்லை.

ஜெயராமன் ஒரு பெண்பதிவர் பெயரில் ஆபாசத் தளம் தொடங்கியபோது எழுதவில்லை.//

இரண்டு மாதம் பதிவுகள் பக்கம் வரவில்லை என பதிவின் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டேனே. அதையும் படிக்கலை போல. என்னைப் பொறுத்தவரை நான் கண்ட தவறினைப் பற்றி எழுதுகிறேன். முடிந்தால் மறுத்து கருத்துச் சொல்லவும். அரைவேக்காட்டுத் தனமான நாகரீகமற்ற வார்த்தைகள் வேண்டாமே.

dondu(#11168674346665545885) said...

//ஒண்ணு நிச்சயம், சப்போர்ட் பண்ணறதா நினைச்சி சேம்சைட் கோல் போட்டுட்டீங்களே அய்யா//
இதுல இன்னும் டீப்பா போய் பாத்தீங்கன்னா அந்த புள்ளிவிவரங்கள் தி.மு.க. ஆட்சியில் இருந்த காலக் கட்டமான 1996-2001-ல் வெளியானதுவை.

அடுத்த 5 ஆண்டுகளான அரசியல் வனவாசத்திலிருந்து கலைஞர் புலம்பலோடு தான் இருந்திருந்தால் அந்த நிலமெல்லாம் கொடுத்திருப்பார் என்று புலம்பினார். ஆக இங்கயும் திமுக தான் நாறுது.

மத்தப்படி 2001 தேர்தல்லே நான் தில்லியிலே இருந்தேன். அப்போ ஜெ வரக்கூடாது என்றுதான் நானும் ஆசைப்பட்டேன். இப்போது வேறு நிலை. அவ்வளவே. ஆகவே இதுல சேம் சைட் கோல் எல்லாம் கிடையாது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

மதுசூதனன் said...

//அடுத்த 5 ஆண்டுகளான அரசியல் வனவாசத்திலிருந்து கலைஞர் புலம்பலோடு ....//

சரியாச் சொன்னீங்க ராகவன். இவங்களுக்கெல்லாம் ப்ராமணனை திட்டணும் அவளவுதான். மத்தபடி கொஞ்சமும் யோசிக்கிறது இல்லை. இவங்கல்லாம் மத்தவங்களை அழிக்கச் செலவு செய்யும் மூளையில் 100ல் ஒரு 5% சதவிகிதம் நல்ல வழிக்கு செலவழித்தால் நாடு உருப்பட்டுவிடும்.

வெற்றிவேல் said...

கலைஞர் அரசு மிக மிக தரமாக நடந்து வருகிறது என்று என்னால் முடிந்த சில விசயங்களை கோடிட்டு காண்பிக்க விரும்பிகிறேன்.

01. தமிழ் உணர்வு, தமிழ் மொழி, தமிழர் நலன் காக்கும் அரசு. தமிழ் தமிழ் என்றாலே
சிறையில் தள்ளும் அரசு அல்ல.
02. போடோவை ஒழித்த அரசு. நெடுமாறன், பேராசிரியர் சுப வீ மற்றும் பலரை விடுவித்த அரசு.
03. தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தும், தமிழ் ஆராய்ச்சிக்கு சென்னையில் நிறுவ உதவிய அரசு.
04. பாப்பாபட்டி, கீரீப்பட்டியில் நல்லபடியாக தேர்தலை நடத்தி தலித் மக்கள் தலைவர்களை பதவியில் அமர்த்திய அரசு.
05. வேலை வாய்ப்பு மீண்டும் புதுப்பிக்க ஆகஸ்டு 2007 வரை இடம் கொடுத்த அரசு.
06. நாட்டுப் புற கலைகளை ஊக்குவிக்கும் அரசு.
07. தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப் பட்ட மாணவர்களுக்கு மிகவும் தொந்தரவாக இருந்த “நுழைவு தேர்வை” ரத்து செய்ய சாதனை மிகப் பெரிய சாதனை.
08.இட ஓதுக்கீடில் மற்றும் காவேரியில் மனம் தளராமல் போராடுகின்ற அரசு.
09.தந்தை பெரியார் கனவுகளை நிறைவேற்றுகின்ற அரசு.
10.கடைக் கோடியில் பிறந்த நம் தலித் சகோதரர்கள் “அர்ச்சகர்” ஆகலாம் என்ற சட்டத்தை கொண்டு வந்த அரசு.
11. நீதிமன்றத்தில் “தமிழ் ஒலிக்கும்” என்ற சட்டத்தை கொண்டு வந்த அரசு.
12. கல்வி வசதிக்காக “அண்ணா பல்கலைகழகம்” மூன்று ஆக்கியது.
13. மாணவர்களுக்கு பேருந்து சலுகை, சத்துணவில் வாரம் இருமுறை முட்டை தருகின்ற அரசு.
14. புத்தக விழாவில் “பதிப்பாளர்களுக்கு” ஒரு கோடி பரிசு கொடுத்த கலைஞர்.
15. பன்னாட்டு நிறுவனங்கள் பல தொழில் தொடங்க முறையாக உதவுகின்ற அரசு.
16. நியாயவிலை கடைகளில் அரசி ரூபாய் 2 மட்டும் அல்ல பாமாயில் தருகின்ற அரசு.
17. கிராம முன்னேற்றத்திற்காக உள்ளாட்சிகளை பலபடுத்தி வரும் அரசு.
18. செல்பேசி (கைப் பேசி) கடைக் கோடி தமிழனும் உபயோகிக்க மாறன் மூலம் சாதனைப் படைத்த அரசு.
19. நாம் சோற்றில் கைவைக்க சேற்றில் கைவைக்கும் நம் உழவர்களுக்கு கடன் தள்ளுபடி மற்றும் தரமான “உழவர் சந்தை” திட்டம்…

இன்னும் இப்படி என்னால் பலவற்றை அடுக்க மற்றும் சொல்ல முடியும்….

நம் தமிழ்ர்களுக்கு எப்பொழுதும் குறைச் சொல்லிதானே வழக்கம். மனம் திறந்து
பாராட்ட என்ன தயக்கம்? காரணம் கலைஞர் அல்லாவா?

இதே அம்மா ஜெ என்றால் போட்டி பொட்டுக் கொண்டு தன் “குல /சாதி” பின் புலத்தோடு பாராட்ட ஓர் படையே காத்து இருக்கும் என்பதை வலைப் பூ மக்கள் நன்கு அறிவார்கள்…

எதிர்ப்பில் வளர்ந்த இயக்கம் திமுக இயக்கம், இன்னும் ஆலமரம் போல் மேலும் வளரும்…

வெற்றிவேல் said...

உங்களை போன்றவர்களின் கண்மூடித்தனமான கருணாநிதி எதிர்ப்பால் தான் ஜெயலலிதா போன்ற சர்வாதிகாரிகள் உருவாக முடிகிறது. தமிழ்நாட்டை தமிழன் ஆண்டபோதெல்லாம் தமிழ்நாடு உயர்ந்தது என்பது வரலாறு.

கருணாநிதி சூத்திரர் என்ற ஒரே காரணத்துக்காக பூணூல் போட்டவர்கள் அவரை கண்மூடித்தனமாக எதிர்ப்பதும், ஜெயலலிதா பிராமணர் என்ற ஒரே காரணத்திற்காக அவரது அதிகாரதுஷ்பிரயோகங்களை கண்டும் காணாமல் போவதும் வழக்கமாக நடைபெறும் ஒன்று. அதற்கு நீங்களும் விதிவிலக்கல்ல.

சோ ராமசாமியை கருணாநிதி என்ன செய்தார்? அவர் வீட்டு பெண்களை கையை பிடித்தா இழுத்தார்?
சோ ராமசாமியின் எழுதுகோலில் மை தீரும்வரை கருணாநிதியை திட்டியே எழுதுவான். சோ ராமசாமியின் அதே மனநிலையை நா. ஜெயசங்கர் என்பவரின் எழுத்துக்களில் காணமுடிகிறது.

இதுபோன்றவர்கள் படித்து பட்டம் பெற்று என்ன பயன்? ஏட்டு சுரைக்காய் கறிக்குதவாது என்ற பழமொழி இவர்களுக்கு பொருந்தும்.

vijay said...

உறுதிமொழி 3: இரண்டு ரூபாய் அரிசி

இரண்டு ரூபாய் அரிசி. இது அடுத்த மகா பெரிய அயோக்கியத்தனம். இதனால் மாநில அரசுக்குக் கூடுதல் செலவாம். அதை என்ன திமுகவின் கட்ச்சியா தரப்போகிறது? நாங்கள் தான சாமி குடுக்கணும்? அப்புறம் என்னவோ உங்க பாட்டன் சொத்தை எங்களுக்கு சும்மாக் குடுத்த மாதிரி........

நல்லா சொன்னீங்க போங்க. இது என்ன அம்மையார் வளர்ப்பு மகன் திருமணமா சொந்த பணத்துல செலவு செய்ய?.
பாட்டன் சொத்துல செய்தால் மட்டும் நீங்கள் என்ன பாரட்டவா போகிறீர்கள். " அவர் பணத்திலா செய்தார்? பாட்டனார் பணத்தில் தானே என்று".
குடுத்ததுக்கு நன்றி சொல்லவில்லை என்றாலும், குறை சொல்லாதீர். அந்த அரிசியை உபயொகபடுத்துபர்களை கேளும் , அவர்கள் சொல்லுவர்.


மதுசூதனன் said...
//அடுத்த 5 ஆண்டுகளான அரசியல் வனவாசத்திலிருந்து கலைஞர் புலம்பலோடு ....//

சரியாச் சொன்னீங்க ராகவன். இவங்களுக்கெல்லாம் ப்ராமணனை திட்டணும் அவளவுதான். மத்தபடி கொஞ்சமும் யோசிக்கிறது இல்லை. இவங்கல்லாம் மத்தவங்களை அழிக்கச் செலவு செய்யும் மூளையில் 100ல் ஒரு 5% சதவிகிதம் நல்ல வழிக்கு செலவழித்தால் நாடு உருப்பட்டுவிடும்

நல்லா சொன்னீங்க, இப்படி எல்லாம் நாங்க யொசிச்சிருந்தா, அம்மையார் ஆட்சிக்கு வந்து இருப்பாங்களா? எங்க தப்புதான் வோய்.


//ஜெயலலிதா தப்பு செய்தபோது எழுதவில்லை.//

அப்போது நான் பதிவு எழுதவே ஆரமிக்கவில்ல.

//பாஜக புளு சிடி வெளியிட்டபோது நீ அதைப்பற்றி எழுதவில்லை.

ஜெயராமன் ஒரு பெண்பதிவர் பெயரில் ஆபாசத் தளம் தொடங்கியபோது எழுதவில்லை.//

இரண்டு மாதம் பதிவுகள் பக்கம் வரவில்லை என பதிவின் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டேனே. அதையும் படிக்கலை போல. என்னைப் பொறுத்தவரை நான் கண்ட தவறினைப் பற்றி எழுதுகிறேன். முடிந்தால் மறுத்து கருத்துச் சொல்லவும். அரைவேக்காட்டுத் தனமான நாகரீகமற்ற வார்த்தைகள் வேண்டாமே.


பதிவுகள் பக்கம் தானே வர வில்லை. அவர்கள் குறிப்பிடட செய்திகள் தெரியும் தானே. நீங்கள் தான் கண்ணில் பட்ட தப்பைப்பற்றி எழுதும் நக்கிரர் ஆயிற்றே அதை பற்றி எழுத வேண்டியது தானே? அல்லது இங்கே சொன்னவுடன் ஒத்து கொள்ள வேண்டியது தானே? அதை விட்டு விட்டு , இரண்டு மாதமாக வலைக்கு வரவில்லை அதனான் தான் எழுதவில்லை என்று ஏன் சப்பை கட்டுகிறிர்கள்.

மகேந்திரன்.பெ said...

//இதுல இன்னும் டீப்பா போய் பாத்தீங்கன்னா அந்த புள்ளிவிவரங்கள் தி.மு.க. ஆட்சியில் இருந்த காலக் கட்டமான 1996-2001-ல் வெளியானதுவை. //

தரிசு நிலம் குறித்த அரசின் அறிவிப்பு இங்கே....
ஜெயலலிதா என்ன சொல்ல போகிறார்? more hit
http://www.tn.gov.in/gorders/agri-e-607-2003.htm

GOVERNMENT OF TAMIL NADU

ABSTRACT

Comprehensive waste Land Programme 2003 - 2004 – Participatory Watershed Development – Approval for Extending the Programme to 13 new Districts and Sanction of Funds – Orders Issued.


--------------------------------------------------------------------

AGRICULTURE (WLD) DEPARTMENT

G.O.MS.NO.437
Dated: 13.10.2003

READ:

1. G.O.Ms.No.338, Agri (WLD) Dept, dated, 27.11.2001

2. G.O.Ms.No.84, Agri (WLD) Dept, dated, 26.03.2002

3. G.O.Ms.No.97, Agri (WLD) Dept, dated, 28.03.2002

4. G.O.Ms.No.91, Agri (WLD) Dept, dated, 13.03.2003

5. G.O.Ms.No.389, Agri (WLD) Dept, dated, 18.08.2003

6. G.O.Ms.No.194, Agri (WLD) Dept. dated, 08.07.2002

7. From the M.D.TAWDEVA Letter No. 471 / TAWDEVA 2003, dated 21.8.03 and 9.9.2003.

ORDER

In the Government Orders 1st to 4th read above a sum of Rs.30.00 Crores was sanctioned to implement Comprehensive Wasteland Programme on a Pilot basis involving 29 Blocks and 360 Villages to cover an area of 55,000 ha in the 10 Pilot Districts viz., Vellore, Thiruvannamalai, Salem, Namakkal, Pudukottai, Tiruchirapalli, Dindigul, Theni, Tirunelveli and Ramanathapuram in the first phase.

2. In the G.O. 6th read above the Government approved the cost norms for planting activity.

3. During the review meeting held on 27.8.2003 Chaired by the Development Commissioner and Finance Secretary, the overall target for the year 2003-04 have been fixed as 50000 ha. The present target of 50000 ha. includes the left over area of 33229 ha. in 10 Pilot Districts and 16771 ha. in the 13 new additional Districts viz. Dharmapuri, Tiruvallur, Villupuram, Kancheepuram, Thoothukudi, Coimbatore, Erode, Sivaganga, Viruthunagar, Madurai, Perambalur, Karur & Cuddalore.

4. The M.D.TAWDEVA has now requested the Government for approval for taking up 50000 ha. Under CWP during 2003-2004 (including 33,229 ha. of previous year 2002-03) and 16771 ha. of coverage in 13 new additional districts. The M.D. has also requested to sanction for fund release to the tune of Rs.1.80 crores to enable procurement of the additional 15 lakhs seedlings from Forest and Horticulture Departments (at the approved rate of Rs.12 per seedling).

5. The Government after careful consideration approve for taking up planting activity in 50000 ha. during 2003-04 which includes the left over area of 33229 ha. in 10 Pilot Districts and 16771 ha. in 13 new additional Districts. The Government also approve for extending the implementation of the programme to 13 new additional Districts viz, Dharmapuri, Tiruvallur, Villupuram, Kancheepuram, Thoothukudi, Coimbatore, Erode, Sivaganga, Viruthunagar, Madurai, Perambalur, Karur & Cuddalore.

6. The Government accord sanction for the release of Rs.1.80 Crores (Rupees one Crore and Eighty Lakhs only) for obtaining the supply of 15 Lakhs seedlings from the Horticulture and Forest Departments, required for the 13 new additional Districts.

7. The Expenditure sanctioned in para 6 above shall be debited to “2402-00 Soil and Water Conservation 103 – Land reclamation and Development - Schemes in the Tenth Five Year Plan – II State Plan – JE – Comprehensive Wasteland Development Programme – participatory approach – 09 Grants in aid – 02 Grants for capital Expenditure (DP CODE No.2402-00-103-JE-0925.”)

8. The Commissioner of Agriculture is authorised to draw the amount sanctioned in para 6 above. The amount shall not be paid in cash but shall be credited to the following Personal Deposit Account of Tamil Nadu Watershed Development Agency.(TAWDEVA)

“8443-00 Civil Deposits-800-Other Deposits-AE-Deposits of Government Companies, Corporations etc., 92 Deposits of Tamil Nadu Watershed Development Agency. (DP CODE 8443-00-800-AE-9201) (Receipt) 8443 00 800 AE. 9202 (outgo).

9.This Order issues with the concurrence of Finance Department –vide its U.O.No. 290/JS (TB) /03 dated 13.10.2003

(BY ORDER OF THE GOVERNOR)

T.S SRIDHAR
AGRICULTURAL PRODUCTION COMMISSIONER AND SECRETARY TO GOVERNMENT

To

The Managing Director, TAWDEVA, Chennai - 5

The Commissioner of Agriculture, Chennai-5.

The Director of Horticulture and Plantation Crops, Chennai-5.

The Principle Chief Conservator of Forest, Chennai-15.

The Chief Engineer (AE) Chennai-35.

The Collectors/Joint Directors of Agriculture of the Districts.

The Accountant General, Chennai-18.

The Accountant General, Chennai-18 (by name)

The Accountant General, Chennai-35.

The Accountant General, Chennai-35 (by name)

The Pay and Accounts Officer, Chennai-5.

The Finance Department, Chennai-9.

The Secretary –II to Chief Minister, Chennai - 9Copy to :

The P.A. to Minister for Agriculture, Chennai-9.

The P.S to APC & Secretary to Government, Agriculture Department, Chennai-9.

The Secretary, E & F/SWD, Chennai – 9.FORWARDED / BY ORDER

SECTION OFFICER

உடன்பிறப்பு said...

//இரண்டு மாதம் பதிவுகள் பக்கம் வரவில்லை என பதிவின் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டேனே//

சரியான நேரம் பார்த்து தான் ரீஎன்ட்ரி ஆனதாக் ஒத்துக் கொண்டதற்கு நன்றி கலைஞரை திட்ட மட்டும் தான் திரும்ப வருவீங்களோ

போ தம்பி போய் கோலி ஆடு

சிறில் அலெக்ஸ் said...

வெறும் மோசமானவைகளை மட்டுமே சொல்லியிருக்கீங்க? முழுமையான அலசலா தெரியலியே.

இலவசங்கள் பார்வையாள்ளர்களுக்கு மோசமானவையாகத்தெரியும் பெறுபவர்களுக்கு ஆறுதல்தான். நாம் செலுத்தும் வரிப்பணம் எல்லாம் நமக்கே செலாவானால் நல்லாயிருக்கும் எனத் தோணும்.. ஆனா ஜனநாயகத்தில் இது சாத்தியமில்லை. நம்ம அரசியல்வாதிகள் எல்லோருமே இலவசம், மானியம், கடன் விலக்கு அளித்தவர்கள்தானே. சென்னையில் வரிசையாய் நின்று இலவசம் வாங்கும்போது இறந்துபோனவர்களை மறந்திருப்போம்.


எனக்கு கலைஞர் ஆட்சியில் பிடித்தது சென்னையில் நடக்கும் தொழில்(சாலை) வளர்ச்சி. வேலைவாய்ப்பு வளர்கிறது. குறிப்பா என்னப் போல ஆட்களுக்கு. விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி எனக்கு வேலை வாய்ப்பு.

ஒட்டுமொத்தமா ஒண்ணுமே இல்லைஇன்னு சொல்றது சரியாத் தெரியல.

மதுசூதனன் said...

வாங்க சிறில்! தாமதமான பதிலுக்கு மன்னிக்கணும். 2 நாள் ஊரில் இல்லை.

நீங்க சொன்னபடி கடன் தள்ளுபடி நல்ல விஷயம்னு ஒரு பக்கம் பார்த்தாலும் அதோட இன்னொரு பக்கத்தையும் பாருங்களேன். தள்ளுபடி பண்ணின கடனுக்குப் பதிலா நாசிக்லேர்ந்து புதுசா நோட்டா அடிக்க முடியும்? அதையும் நம்ம தாங்க குடுக்கணும்.