Monday, May 28, 2007

மத அடிப்படையில் இட ஒதுக்கீடு தேவையா?

பல முறை பேசிவிட்ட விஷயம் தான் எனினும், இடஒதுக்கீடு இன்றும் சூடு குறையாது இருப்பது என்னவோ நிஜம் தான். இதற்கான நன்றியை நாம் நம் அரசியல்வாதிகளுக்கு கூறித்தான் ஆகவேண்டும். என்னதான் மறந்துவிட்டு அடுத்த வேலையை பார்க்கப் போகலாம் என்றாலும், அடிக்கடி இந்த விஷய்த்தினை கிளறிவிட்டு அந்த அனலில் குளிர் காய்கின்றனர் பலர். இது சம்பந்தமாய் நான் எழுதிய இன்ன பிற பதிவுகளின் சுட்டிகள் இதோ கிழே:

அப்படி என்னதான்யா வேணும் ?
இட ஒதுக்கீடு - இன்னொரு கேலிக் கூத்து...


இந்த வரிசையில் சமீபத்தில் பெரும் சர்ச்சையினை கிளப்பி இருக்கும் விஷயம், முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு என்பதுதான். அதிலும் சமீபத்தில் நம் முதல்வர் கருணாநிதி அவர்கள், முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அண்டை மாநிலங்களில் அமுல் படுத்தப்பட்டால் தமிழகத்திலும் கொண்டுவருவோம் என்று பரபரப்பான ஒரு அறிக்கையினை வெளிட்டார். அது மட்டுமின்றி "கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்கப் பட்டிருப்பது உண்மையானால், தமிழகத்திலும் விரைவில் கொண்டு வர முயற்சிப்பேன்" என்று புது தில்லியில் நேற்று அவர் இன்னொரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

யார் யாருக்கோ கொடுக்கிறார்கள் இவர்களுக்கும் கொடுத்தால் என்ன என்று யோசித்து விட்டு விடுவதா, இல்லை தனியொரு மதத்திற்கு இட ஒதுக்கீடு தவறு என்று கொடிபிடிப்பதா என்பதே இன்று பலரது குழப்பம். ஒரு பேச்சுக்கு முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு தருவதாய் வைத்துக் கொள்வோம், மிச்சமுள்ள மதத்தவர்களும் கேட்ப்பார்களே, அப்போது அவர்களுக்கு என்ன பதில் சொல்வது? நம் நாட்டில் தான் ஊருக்கொரூ மதமும் வீதிக்கொரு சாதிச் சங்கமும் உள்ளதே. சும்மா விடுவார்களா அவர்கள்? கிறித்தவர்கள் எனக்கும் குடு என்பார்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், பெளத்தர்கள் என்று அனைவரும் கொடி பிடிக்கத் துவங்குவர்.

முஸ்லிம்களுக்கு மட்டும் இட ஒதுக்கிடு வழங்க என்ன காரணம் கூறுகின்றனர் நம் தலைவர்கள் என்று பார்த்தால்; "அவர்கள் சிறுபான்மையினர்" எனும் ஒரு விஷயம் தான் வெளியில் வருகிறது. அவர்கள் சிறுபான்மையினராய் இருப்பதால் அவர்கள் வாழ்வின் எல்லா அடிப்படை விஷயங்களிலும் பின் தங்கி இருக்கின்றனர் என்று கூறப்படுகிறது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தான் இப்போதைய கேள்வி. அது மட்டுமின்றி முஸ்லிம்கள் உண்மையிலேயே சிறுபான்மை இனத்தவரா என்பதும் மிக முக்கியமான ஒரு கேள்வி. என்னைக் அபிப்பிராயப் படி "இல்லை" என்பதே பதில். உதாரணத்திற்கு; உத்திர பிரதேச மாநில உயர் நீதி மன்றம் ஒன்றில் இருந்த வழக்கில், முஸ்லிம்களின் தற்போதைய ஜனத்தொகை கிட்டத் தட்ட 18.5% ஆகும். இத்தகைய எண்ணிக்கையை கருத்தில கொண்டு அவர்களை "மைனாரிட்டி கம்யூனிடி" / "சிறுபான்மை இனத்தவர்" என்று பிரிக்க முடியாது என்று கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி தீர்ப்பளிக்கப் பட்டது. இந்த வழக்கு பற்றிய அதிக விபரங்களுக்கு இங்கே சொடுக்கவும். இதன்படி, சிறுபான்மை இனத்தவர் என்று சொல்லிக் கொண்டு பெருமளவிலான வசதிகளை அவர்கள் அனுபவிக்க இயலாது எனும் நிலை ஏற்பட்டுள்ளது. அதற்காக தமிழகத்தில் அவர்கள் குறைந்த எண்ணிக்கையில் தான் உள்ளனர் என்று கூறிவிட முடியுமா எனில் அது நிச்சயம் முடியாது. ஆனால் நம் முதல்வரோ வெகு தாரளமாய் வாக்குறிதிகளை அள்ளி வீசுகிறார்.

ஒரு வேளை அவர் இப்படிக் கூட நினைத்திருக்கலாம்:

1) இந்த இட ஒதுக்கீடு பிடிக்காத எவராவது நீதி மன்றத்தில் தடை உத்தரவு பெறலாம். அதைக் காரணம் காட்டி நாம் ஜாலியாய் உட்க்கார்ந்துவிடலாம்.

2) ஏதாவது கட்சிகள் போராட்டத்தில் குதிக்கலாம், அதைக் காரணம் காட்டி, பார் நான் உங்களுக்காக செய்ய நினைத்தேன், ஆனால் அவர்கள் விடவில்லை என்று சால்ஜாப்பு சொல்லலாம்.

இந்த விஷயத்தில் இவர்களை அனைவரையும் விட மாயாவதியின் கருத்து மிகவும் ஏற்புடையது என எண்ணுகிறேன். பொருளாதார வசதியின் அடிப்படையில் அனைவருக்கும் இட ஒதுக்கீடு குடுக்கலாம் எனும் அவரின் கருத்தானது நிச்சயம் நாட்டிற்கு வளமை பயக்கும். சம்பந்தப் பட்டவர்கள் இதைப் பற்றி யோசித்தால் சற்று நலமாய் இருக்கும்.எது எப்படியோ நொண்டிக் குதிரைக்கு சறுக்கியது சாக்கு. இந்த மத அடிப்படையிலான இட ஒதுக்கீடு தேவையா என்பதைப் பற்றி தங்கள் கருத்துக்களை சொல்லுங்களேன்.

51 comments:

கோவி.கண்ணன் said...

//உத்திர பிரதேச மாநில உயர் நீதி மன்றம் ஒன்றில் இருந்த வழக்கில், முஸ்லிம்களின் தற்போதைய ஜனத்தொகை கிட்டத் தட்ட 18.5% ஆகும். இத்தகைய எண்ணிக்கையை கருத்தில கொண்டு அவர்களை "மைனாரிட்டி கம்யூனிடி" / "சிறுபான்மை இனத்தவர்" என்று பிரிக்க முடியாது என்று கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி தீர்ப்பளிக்கப் பட்டது.//

மது,

இந்த பிரச்சனை நடப்பது தமிழ்நாட்டில், நீங்க உத்திரபிரதேசத்துக்கு பதில் உகாண்டாவை காட்டினால் சிறப்பாக இருக்கும்.

dondu(#11168674346665545885) said...

//இந்த மத அடிப்படையிலான இட ஒதுக்கீடு தேவையா என்பதைப் பற்றி தங்கள் கருத்துக்களை சொல்லுங்களேன்.//

அரசியல் சட்டத்தில் அதற்கு இடம் இல்லை. மேலும் இருக்கும் இட ஒதுக்கீடுகளும் குறிப்பிட்ட காலத்துக்கு மட்டும் கொடுக்கப்பட்டன என்பதையும் மறக்கக் கூடாது. இப்படியே போனால் ராமதாசுவின் பேத்திகள், மாறன் / கருணாநிதி வீட்டுக் குழந்தைகள், மற்றும் எல்லோருக்குமே என்று விரிவாக்கிக் கொண்டே போவார்கள். இதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.

சோம்பேறிகளை வளர்க்கத்தான் மேலும் இட ஒதுக்கீடுகளை விரிவாக்குவது செய்யும்.

அப்படி மைனாரிட்டிகளுக்கு தர வேண்டுமென்றால், பார்ப்பனர்களும் தகுதி பெறுவர்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

கோவி.கண்ணன் said...

//இந்த மத அடிப்படையிலான இட ஒதுக்கீடு தேவையா என்பதைப் பற்றி தங்கள் கருத்துக்களை சொல்லுங்களேன்.
//

மத அடிப்படையும், கூடவே சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடும் அவசியம். அப்போதுதான் மற்றவர்களுக்கு கிடைக்கவேண்டியதையும் சிலரே கபலீகரம் செய்யும் அவலம் இருக்காது !

பொருளாதாரத்தில் பின் தங்கி இருக்கிறார்களா என்று ஒரு பட்டியலை அந்தந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் சாதியை சேர்ந்தவர்களைப் பற்றி அறிக்கையை மதக்காப்பாளர்களும், சாதி சங்கங்களும் கொடுக்க வேண்டும். அதன்படி இட ஒதுக்கீடு கொடுக்கவேண்டும்.

இல்லையென்றால் 50 ரூபாய் கொடுத்து மாதம் 300 ரூபாய் வருமானம் என்ற பொய் சான்றிதழை கொடுத்து ஏமாற்றிவிடுவார்கள்.

மதுசூதனன் / Madhusudhanan said...

//இந்த பிரச்சனை நடப்பது தமிழ்நாட்டில், நீங்க உத்திரபிரதேசத்துக்கு பதில் உகாண்டாவை காட்டினால் சிறப்பாக இருக்கும்.//

இந்த உதாரணம் தரப்பட்டது எந்த அடிப்படையில் முஸ்லிம்கள் சிறுபான்மை இனத்தவரல்ல என்பதை எடுத்துரைக்கத் தான். அதைப் புரிந்து கொள்ளுங்கள் கண்ணன் அவர்களே.

மேலும் உங்கள் இன்னொரு பின்னூட்டத்தில் நீங்கள் கூறியுள்ள

//மத அடிப்படையும், கூடவே சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடும் அவசியம். அப்போதுதான் மற்றவர்களுக்கு கிடைக்கவேண்டியதையும் சிலரே கபலீகரம் செய்யும் அவலம் இருக்காது !
//

இது கொஞ்சம் நெருடலாகத் தான் உள்ளது.

மதுசூதனன் / Madhusudhanan said...

//இப்படியே போனால் ராமதாசுவின் பேத்திகள், மாறன் / கருணாநிதி வீட்டுக் குழந்தைகள், மற்றும் எல்லோருக்குமே என்று விரிவாக்கிக் கொண்டே போவார்கள்.//

நம்ம அதிமுக மக்களை விட்டுடீங்களே. அவங்களும் ஒண்ணும் லேசு பட்ட ஆளுங்க இல்லை. இப்ப ஆட்சில இல்லை அதனால் ரொம்ப சத்தமில்லை. இல்லைனா அவங்க பண்னாத காமெடியும் உண்டா என்ன?

Anonymous said...

//அவர்கள் சிறுபான்மையினராய் இருப்பதால் அவர்கள் வாழ்வின் எல்லா அடிப்படை விஷயங்களிலும் பின் தங்கி இருக்கின்றனர் என்று கூறப்படுகிறது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தான் இப்போதைய கேள்வி.//

சமீபத்தில் வெளியான சச்சார் கமிட்டி ரிப்போர்ட்டை (கூகிளில்) தேடிப் படிக்கவும்.. முஸ்லீம்கள் ( வெகு சிறிய சதவீதத்தினர் தவிற) மிகவும் பின் தங்கியே உள்ளனர்..

//மைனாரிட்டிகளுக்கு தர வேண்டுமென்றால், பார்ப்பனர்களும் தகுதி பெறுவர்.//

பார்ப்பனர்கள் தனி மதம் என்று ஒப்புக் கொண்ட டோண்டுவுக்கு நன்றி! தரலாம்.. ஒட்டுமொத்த மக்கள் தொகையில் உங்கள் என்னிக்கை என்னவோ அந்த அளவுக்கு தரலாம் ( ஒரு இரண்டு மூன்று சதவீதம் தேறுவீர்களா?)


//நம்ம அதிமுக மக்களை விட்டுடீங்களே. அவங்களும் ஒண்ணும் லேசு பட்ட ஆளுங்க இல்லை. இப்ப ஆட்சில இல்லை அதனால் ரொம்ப சத்தமில்லை. இல்லைனா அவங்க பண்னாத காமெடியும் உண்டா என்ன?//

மாமியார் உடைத்தாலும் அது பொன் குடம் தான் என்று பார்க்கும் உங்களுக்கு பாராட்டுக்கள் மது!

வெங்காயம் said...

பார்ப்பனர்களுக்கும் இட ஒதுக்கீடு வேண்டும் என்று சதுர்வேதி என்பவர் பதிவு போட்டு இருக்கிறார்.

இதோ சுட்டி.

டோண்டு பயலும் மதுசூதனன் பயலும் கூட்டி நின்னு கும்மி அடிச்சுக்கலாம்.

Anonymous said...

பாப்பார பரதேசிப் பய மகன்கள் ஏந்தான் இப்படி குரூஉரமா சிந்திக்கிறானுங்களோ!!!

ஒண்ட வந்த நாய்கள் அப்படியே கைபர் போலன் கண்வாய்க்கு ஓட வேண்டியதுதானே?

இண்டியன் said...

//அப்படி மைனாரிட்டிகளுக்கு தர வேண்டுமென்றால், பார்ப்பனர்களும் தகுதி பெறுவர்.
//

அப்போ இந்து வேறு பாப்பான் வேறா? விளக்குவானா கிழட்டு கம்னாட்டி பரதேசி?

சட்னிவடை said...

மதத்துக்கு எல்லாம் இட ஒதுக்கீடு கேட்பது மதம் பிடித்தோரின் செயல்.

மகேந்திரன்.பெ said...

உகாண்டாவை உதாரணம் காட்டச் சொல்லும் கோவிக்கு கண்டனம். துபாயில் இடஒதுக்கீடு கோரி உகாண்டா வாயர்கள் போராட கோவியார் ஐடியா கொடுக்கிறாரா

மகேந்திரன்.பெ said...

//ராமதாசுவின் பேத்திகள், மாறன் / கருணாநிதி வீட்டுக் குழந்தைகள், மற்றும் எல்லோருக்குமே என்று விரிவாக்கிக் கொண்டே போவார்கள்//

ஏன் இதை இப்படியும் வச்சுக்கலாம் " இப்படியே போனால் ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரி, சசிகலாவின் அண்ணன் பேரன் மன்னார் குடி பன்னையில் மாடு மேய்ப்பவன் என எல்லோரும் இட ஒதுக்கீடு கோருவார்கள் அப்புறம் கோயிலுக்குள் வந்தது போல திராவிட திம்மிகள் இடஒதுக்கீட்டிலும் வெற்றி பெருவார்கள் நாம் கடைசிவரை தர்பைபுல்லை நம்பியே காலம் தள்ள வேண்டியதுதான்

மகேந்திரன்.பெ said...

//இல்லையென்றால் 50 ரூபாய் கொடுத்து மாதம் 300 ரூபாய் வருமானம் என்ற பொய் சான்றிதழை கொடுத்து ஏமாற்றிவிடுவார்கள். //

இதை நான் வன்மையாக ஆதரிக்கிறேன் ஆனால் அதிலும் சோகம் 300 ரூபாய் வருமானம் என பொய்சொல்ல 50 ரூபாய்தான் லஞ்சமா அதிகாரிகள் குடும்பம் நஷ்டப்பட இந்த சமூகம் ஆசைப்படுகிறதா?

மகேந்திரன்.பெ said...

//சோம்பேறிகளை வளர்க்கத்தான் மேலும் இட ஒதுக்கீடுகளை விரிவாக்குவது செய்யும்.//

ஆமா ஆமா இப்போவே உங்காளுங்க அதிகமா இருக்காங்க :)

மகேந்திரன்.பெ said...

//அப்போ இந்து வேறு பாப்பான் வேறா//

-இந்து என்றால் திருடன் என அய்யா சொல்லியிருக்கிறார் :)

மகேந்திரன்.பெ said...

//மைனாரிட்டிகளுக்கு தர வேண்டுமென்றால், பார்ப்பனர்களும் தகுதி பெறுவர்.//

பார்ப்பனர்கள் மைனாரிட்டி என்றால் கலைஞர் பார்ப்பனரா ? பின்ன ஏன் இது மைனாரிட்டி அரசாங்கம்னு அம்மா சொல்றாங்க?

மகேந்திரன்.பெ said...

//அவர்கள் சிறுபான்மையினராய் இருப்பதால் அவர்கள் வாழ்வின் எல்லா அடிப்படை விஷயங்களிலும் பின் தங்கி இருக்கின்றனர் என்று கூறப்படுகிறது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தான் இப்போதைய கேள்வி//

சரியான கேள்வி பின்னே மைனாரிட்டி பார்ப்பனர்கள் பின் தங்கியா இருக்கிறார்கள் இல்லையே

மதுசூதனன் / Madhusudhanan said...

//இப்படியே போனால் ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரி, சசிகலாவின் அண்ணன் பேரன் மன்னார் குடி பன்னையில் மாடு மேய்ப்பவன் என எல்லோரும் இட ஒதுக்கீடு கோருவார்கள் அப்புறம் கோயிலுக்குள் வந்தது போல திராவிட திம்மிகள் இடஒதுக்கீட்டிலும் வெற்றி பெருவார்கள் நாம் கடைசிவரை தர்பைபுல்லை நம்பியே காலம் தள்ள வேண்டியதுதான்//

அதைத் தான் என்னுடைய பின்னூட்டத்திலும் சொல்லியுள்ளேனே. பிறகென்ன?

//பார்ப்பனர்கள் மைனாரிட்டி என்றால் கலைஞர் பார்ப்பனரா ? பின்ன ஏன் இது மைனாரிட்டி அரசாங்கம்னு அம்மா சொல்றாங்க?//

மைனாரிட்டி எனும் சொல்லிற்கு அர்த்தம் தெரியலைனா நல்ல ஆங்கில அகராதியில் தேடிப் பாருங்கள் ஐயா.

//சரியான கேள்வி பின்னே மைனாரிட்டி பார்ப்பனர்கள் பின் தங்கியா இருக்கிறார்கள் இல்லையே//

நிறைய பேர் இருக்காங்க. அது உங்களுக்கும் தெரியும்.

Anonymous said...

//அப்படி மைனாரிட்டிகளுக்கு தர வேண்டுமென்றால், பார்ப்பனர்களும் தகுதி பெறுவர்.//

பார்ப்பனர்களுக்கு இடஒதுக்கீடு கொடுத்தால் தற்பொழுது வேலையில் இருக்கும் பலரும் தனது வேலையை இழக்க வேண்டிவரும். உதாரணத்திற்கு அவர்களின் மக்கள் தொகை சதவிகிதத்தில் 3 என்றால் அவர்கள் அரசு வேலையில் இருப்பதோ இரண்டு இலக்க சதவிகிதத்தில். சொல்றத கவனமா சொல்லுங்க அப்பு, இல்லன்னா சொந்த செலவுல நீங்களே உங்களுக்கு வெச்சிக்குவிங்க ஆப்பு.

//மதத்துக்கு எல்லாம் இட ஒதுக்கீடு கேட்பது மதம் பிடித்தோரின் செயல்.//

மதத்திற்கு இடஒதுக்கீடு கேட்கவில்லை, மனிதர்களுக்குத்தான் கேட்கிறோம். மற்றவர்களை போல் நாங்களும் படிக்க வேண்டும் என்று கேட்கிறோம். மற்றவர்களைப்போல் நாங்களும் அரசு அலுவலகங்களில் பணிபுரிய வேண்டும் என்று கேட்கிறோம், மற்றவர்களுக்கு அளிப்பது போல் சமஉரிமை எங்களுக்கும் வழங்க வேண்டும் என்று கேட்கிறோம்.

அபிவிருத்தி

மதுசூதனன் / Madhusudhanan said...

//பார்ப்பனர்களுக்கு இடஒதுக்கீடு கொடுத்தால் தற்பொழுது வேலையில் இருக்கும் பலரும் தனது வேலையை இழக்க வேண்டிவரும். உதாரணத்திற்கு அவர்களின் மக்கள் தொகை சதவிகிதத்தில் 3 என்றால் அவர்கள் அரசு வேலையில் இருப்பதோ இரண்டு இலக்க சதவிகிதத்தில். சொல்றத கவனமா சொல்லுங்க அப்பு, இல்லன்னா சொந்த செலவுல நீங்களே உங்களுக்கு வெச்சிக்குவிங்க ஆப்பு.//

நீங்கள் குறிப்பிடும் அரசுப் பணிகளில் உள்ள பிராமணர்கள் யாவரும் பல ஆண்டுகளுக்கு முன்னால் தகுதி அடிப்படையில் பணியில் அமர்த்தப் பட்டவர்கள் என்பதை நினைவில் கொள்ளவும் நண்பரே. வீணாய் அடுக்கு மொழியில் பேசி காமெடி பண்ணாதீர்கள் :). நீங்களும் பேசுவதற்கு முன் கொஞ்சமேனும் மேல் மாடியை உபயோகிக்கவும்.

கவி said...

சச்சார் கமிட்டி ரிப்போர்ட்டை எவ்வித சாய்வும், முன்முடிவுமின்றி படித்தால் முஸ்லிம் மக்களுக்கு இடஒதுக்கீடு வேண்ண்டும் தான் என்பதை நேர்மையுள்ளவர்கள் - பிராமணர்களாகவே இருந்தாலும்-ஏற்றுக்கொள்வர்.

இனப்பற்று ஒன்றினால் மட்டும் இருதரப்பிலும் வாதங்களில் ஈடுபடுவோர் சச்சார் கமிட்டி அறிக்கை போன்ற 'உண்மை' நிலையை அதிகம் அறிந்தவர்களில்லை என்பது தான் நிதர்சனம்.

Anonymous said...

//நீங்கள் குறிப்பிடும் அரசுப் பணிகளில் உள்ள பிராமணர்கள் யாவரும் பல ஆண்டுகளுக்கு முன்னால் தகுதி அடிப்படையில் பணியில் அமர்த்தப் பட்டவர்கள் என்பதை நினைவில் கொள்ளவும் நண்பரே. வீணாய் அடுக்கு மொழியில் பேசி காமெடி பண்ணாதீர்கள் :). நீங்களும் பேசுவதற்கு முன் கொஞ்சமேனும் மேல் மாடியை உபயோகிக்கவும்//

அப்ப 'தகுதி' அடிப்படையில் ஏற்கனவே ஏகப்பட்ட இடத்தை அடைச்சுக்குவீங்க... அப்புறம் இருக்க 3 சதவீத முட்டாளுகளுக்கு இட ஒதுக்கீடு கேட்பீங்களா? கொஞ்சம் பிரியறா மாதிரி சொல்லுங்களேன்?

ஆமா இந்த தகுதி தகுதின்னு சொல்றீங்களே அத எப்படிங்ணா தீர்மானிக்கறீங்க? நூற்றுக்கு 95.1 மார்க் எடுத்தவன் தகுதியுள்ளவன் 95.0 மார்க் எடுத்தவன் தகுதியில்லாதவனா? அந்த .1 கேப்பில் கட்டிய பாலம் எங்கியாவது உடைஞ்சிறுக்கா? இல்ல .1 கேப்பில் போட்ட ஊசியால யாராவது செத்திருக்காங்களா?

என்னமோ போங்க சார்..

(நான் அபிவிருத்தியல்ல)

Anonymous said...

http://ravisrinivas.blogspot.com/2006/04/blog-post_23.html

இஸ்லாமியர் இட ஒதுக்கீடும், வீரமணியின் கருத்துக்களும்

பேட்டியில் வீரமணி பல கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார். அவை இட ஒதுக்கீடு குறித்து தவறான தகவல்களைத் தருகின்றன. மேலும் அவர் சிலவற்றை சொல்லாமல் விட்டிருக்கிறார். அவை மிகவும் முக்கியமானவை. இந்தப் பேட்டியினைப் படிப்பவர்கள் அவர் இட ஒதுக்கீடு குறித்து தெளிவாக கூறியுள்ளார் என்று கருதக்கூடும். ஆனால் இப்பிரச்சினையில் உள்ள சிக்கல்களை அவர் கூறவில்லை.

முன்னர் இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு இருந்தது. ஆனால் இந்திய அரசியல் சட்டத்தினைஉருவாக்கியவர்கள் மதரீதியான இட ஒதுக்கீட்டிற்கு இந்திய அரசியல் சட்டத்தில் இடம் தரவில்லை.(1) இதற்கு ஒரு காரணம் அவ்வாறு செய்வது மத ரீதியாக பாகுபாடு காட்டுவது என்பதாகும். ஒரு மதச்சார்பற்ற அரசு தன் குடிமக்களில் சிலருக்கு அவர்கள் ஒரு குறிப்பிட்ட மதத்தினை சார்ந்தவர்கள் என்பதற்காக இட ஒதுக்கீடு செய்வது மதச்சார்பின்மை என்பதற்கு விரோதமாகும். அரசியல் சட்டத்தில் பிற்பட்ட சமூகங்கள் என்பதன் அடிப்படையிலே இட ஒதுக்கீடு செய்ய வழி உண்டு. மத ரீதியாக அல்ல.அதாவது பிற்பட்ட பிரிவினர் அல்லது வகுப்பார் எந்த மதத்தினை சேர்ந்தவர்களாக இருந்தாலும் இட ஒதுக்கீடு தர இடமுண்டு, ஆனால் ஒரு மதத்தினைச் சேர்ந்தவர்கள் என்பதற்காக ஒரு சமூகத்தினை பிற்பட்ட சமூகமாக ஏற்க இடமில்லை.எனவே வீரமணியின் வாதம் சரியல்ல. மேலும் அன்று இருந்தது, அதை இன்று கேட்கிறார்கள் என்ற வாதம் பொருந்தாது. இட ஒதுக்கீட்டினைப் பொறுத்த வரை அரசியல் சட்டம் அமுல் செய்யப்பட்ட பின் அரசியல் சட்டமே வழிகாட்டும் நெறியே அன்றி ஆங்கிலேயர் ஆட்சி கடைப்பிடித்த கொள்கைகள் அல்ல.

பிற்பட்டோர் இட ஒதுக்கீட்டினைப் பற்றி ஆராய, ஆய்வு செய்து பரிந்துரைக்க ஒரு கமிஷன் அமைக்க வேண்டும். அதன் பரிந்துரையில் அடிப்படையில் அரசு முடிவெடுக்கலாம். உச்ச நீதிமன்றம் மத்திய அரசில் பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீடு குறித்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்ட பின் இதுதான் நடைமுறை. அக்கமிஷன் சிறுபான்மையினர் நலக்கமிஷன் அல்ல, பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீடு குறித்த கமிஷன். அரசு தன்னிச்சையாக இட ஒதுக்கீடு செய்ய முடியாது. மேலும் அரசுத்துறை மூலம் ஆய்வு செய்து ஒரு சமூகத்தினை பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்க முடியாது, இட ஒதுக்கீடு அளிக்க முடியாது. ஆந்திர அரசு இது போன்ற ஒரு முயற்சியை செய்து இட ஒதுக்கீட்டினை இஸ்லாமியருக்கு அளித்தது அதை நீதிமன்றம் ஏற்கவில்லை. எனவே பிற்பட்டோர் கமிஷன் ஆய்வு செய்து பரிந்துரை செய்த பின்னரே அரசு மீண்டும் இட ஒதுக்கீட்டினை அளித்தது. அதை ஆ.பி. உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத் தீர்ப்பிறகு இடைக்காலத் தடை இல்லை.

கேராளாவில் இஸ்லாமியருக்கு இட ஒதுக்கீடு உள்ளது.ஆனால் மொத்த இட ஒதுக்கீடு 50% என்ற வரம்பினை மீறாமல் 50% ஆக உள்ளது. மேலும் கேரளத்தில் இட ஒதுக்கீடு என்பது சில நிபந்தனைக்குட்பட்டது.பிற்பட்டோரில் முற்பட்டோர் (creamy layer) என்று வரையறை செய்யப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடையாது. எனவே கேரளத்தில் உள்ள நிலை வேறு , தமிழ்நாட்டில் உள்ள நிலை வேறு என்பதை கவனிக்க வேண்டும். பிற்பட்டோரில் முற்பட்டோருக்கு இட ஒதுக்கீடு தரக்கூடாது என்பதை திராவிடர் கழகம் ஏற்கவில்லை. தமிழ்நாட்டில் இந்த்க கோட்பாடு மாநில அரசின் இட ஒதுக்கீட்டில் அமுலில் இல்லை. எனவே கேரளாவைப் பார் என்பவர் அங்கு என்ன இருக்கிறது, இல்லை என்பதையும் சேர்த்துக் குறிப்பிடவில்லை.

இங்கு இன்னொரு அம்சத்தினையும் குறிப்பிட வேண்டும். தேசிய பிற்பட்ட வகுப்பினருக்கான கமிஷன் கேரளத்தில் உள்ள அனைத்து முஸ்லீம்களையும் பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்கவில்லை. Other Muslims excluding (I) Bohra (ii) Cutchi Menmon (iii) Navayat (iv) Turukkan (v) Dakhani Muslim என்று தெளிவாகக் குறிப்பிடுகிறது. அதே போல் கர்நாடாகாவை பொறுத்த வரை இக்கமிஷன் முஸ்லீம்களில் சில பிரிவினரை பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்கவில்லை.Other Muslims excluding (i) Cutchi Memon (ii) Navayat (iii) Bohra or Bhora or Borah (iv) Sayyid (v) Sheik (vi) Pathan (vii) Mughal (viii) Mahdivia/Mahdavi (ix) Konkani or Jamayati Muslims

இட ஒதுக்கீடு தமிழ்நாட்டில் 69% உள்ள போது அது தவிர இஸ்லாமியருக்காக 5% கொடுத்தால் அது 74% ஆகிவிடும். இது உச்ச நீதிமன்றம் நிர்யணம் செய்த 50% என்பதை விட மிக அதிகம் . 69% இட ஒதுக்கீடு குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருக்கும் போது தமிழக அரசு இன்னும் 5% அதிக ஒதுக்கீடு செய்வது இன்னொரு வழக்கிற்கே வழிவகுக்கும். அரசு இட ஒதுக்கீடு தரும் பட்சத்தில் இருக்கின்ற இட ஒதுக்கீட்டில் 5% இஸ்லாமியர்களுக்கு என்று உள் இட ஒதுக்கீடு செய்வது இயலும்.ஆனால் இது பிற்பட்டோர் இட ஒதுக்கீட்டில் இஸ்லாமியர் அல்லோதார் இட ஒதுக்கீட்டினை குறைக்கும் என்பதால் எதிர்ப்பு எழக்கூடும்.மேலும் இப்போது பிற்பட்டோர் பட்டியலில் இஸ்லாமியர்களில் உள்ள பல பிரிவுகள் இருக்கின்றன. நாளை ஒட்டுமொத்த இஸ்லாமியர்களையும் பிற்பட்டோர் என்று அறிவித்தால் பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர், இஸ்லாமியர் என்று மூன்று பிரிவுகளாக இட ஒதுக்கீட்டினை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழலாம். அப்படியானால்,இட ஒதுக்கீடு 5% என்றால் அதை எதிலிருந்து பிரிப்பது என்ற கேள்வியும் எழும்.

ஆந்திராவில் இஸ்லாமியருக்கு இட ஒதுக்கீடு அளித்த போது மொத்த இட ஒதுக்கீடு 51 % ஆனது, அதாவது 46%+5%. இதை உயர் நீதிமன்றம் ஏற்க வில்லை. 50% என்பதற்கு மேல் இட ஒதுக்கீடு தரக்கூடிய விசேஷ சூழல் அல்லது காரணங்கள் இல்லை என்று தீர்ப்பளித்தது. மேலும் 1% என்பது சிறியது என்று கருதி நீதிமன்றம் அதை கருத்தில் கொள்ள வேண்டாம் என்ற வாதத்தினையும் ஏற்கவில்லை. எனவே இட ஒதுக்கீடு கொடுத்தாலும் அதை எங்கு வகைப்படுத்துவது என்பது பிரச்சினையாகும். இது 1% என்றாலும் கூட பிரச்சினையாகும்.

மத்திய அரசு அமைத்துள்ளவை குழுக்கள், கமிஷன்கள்.இவை தேசிய பிற்பட்ட வகுப்புகளுக்கான கமிஷன் செய்யும் பணியை செய்வதற்காக அமைக்கப்படவில்லை. இவை இட ஒதுக்கீடு குறித்தும் கருத்துத் தெரிவிக்கலாம். இட ஒதுக்கீட்டினை இவை பரிந்துரைத்தாலும் அரசு அதை ஏற்றாலும், அப்போதும் கூட தேசிய பிற்பட்ட வகுப்புகளுக்கான கமிஷன்தான் பிற்பட்ட வகுப்பினர் பட்டியலை இறுதி செய்யும்.இக்கமிஷன் ஏன் அமைக்கப்பட்டது என்பதைப் புரிந்து கொண்டால் ராஜிந்த்ர் சர்ச்சார் கமிட்டியின் பணி வேறு, இக்கமிஷனின் பணி வேறு என்பதை அறிய முடியும்.

ஒரு வேளை மத்திய அரசு மத ரீதியான சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு கொடுத்தால், அகில இந்திய அளவில் மாநில அரசுகள் அடிப்படையாகக் கொள்கின்ற பிற்பட்ட வகுப்பினர் பட்டியல்களை பயன்படுத்துவதா இல்லை கமிஷன் தயாரித்துள்ள பட்டியலை பயன்படுத்துவா இல்லை இரண்டையும் சேர்த்து பயன்படுத்துவதா என்ற கேள்வி எழும்.அதே போல் பிற்பட்டோரில் முற்பட்டோருக்கு இட ஒதுக்கீடு உண்டா, கிடையாதா என்ற கேள்வியும் எழும். எனவே மத்திய அரசு இட ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் அளித்தாலும் சில கேள்விகள் இருக்கின்றன.இது போன்ற விஷயங்களை வீரமணியும் சுட்டிக்காட்டவில்லை, கேள்வி கேட்டவர்களும் அவற்றை எழுப்பவில்லை.

கருணாநிதி பரிந்துரைத்துள்ள தீர்வு அரசியல் சட்டத்தில் மாற்றம் கொண்டுவருவது, மாநிலங்கள் எத்தனை சதவீதம் இட ஒதுக்கீடு கொடுப்பது என்பதை முடிவு செய்யும் உரிமை பெறுவது. அப்படி ஒரு சட்டதிருத்தம் கொண்டு வரப்பட்டால் அதை உச்சநீதிமன்றத்தில் கேள்விக்குட்டபடுத்த முடியும். மேலும் 50% என்பதை விட அதிகமாக இட ஒதுக்கீடு தரும் அதிகாரத்தினை மாநில அரசுகளுக்கு தர முதலில் நாடாளுமன்றத்திக்கு அதிகாரம் உண்டா என்பதை கேள்விக்குட்படுத்த முடியும். தமிழ்நாட்டில் உள்ள 69% இட ஒதுக்கீடு செல்லுமா என்பது குறித்த வழக்கே உச்ச நீதிமன்ற விசாரணையில் இருக்கும் போது ஒரு சட்டத்திருத்தம் மூலம் பல பிரச்சினைகளை தீர்த்துவிட முடியும், நினைத்த அளவு இட ஒதுக்கீடு பெற்றுத் தர முடியும் என்பது ஏமாற்று வேலை.

இப்போதுள்ள நிலையில் மாநில அரசு தன்னால் எதைச் செய்ய முடியுமோ, எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்திருக்கிறது.

சிறுபான்மையினருக்கான கமிஷன் வேறு, பிற்பட்டோருக்கான கமிஷன் வேறு. தேசிய அளவில் சிறுபான்மையினர் கமிஷனும் இருக்கிறது, பிற்பட்டோர் கமிஷனும் இருக்கிறது. மாநிலங்களில் இட ஒதுக்கீட்டினை குறித்து பரிந்துரைக்க பிற்பட்டோர் கமிஷனை அரசு ஏற்படுத்தலாம். அக்கமிஷனிடம் சிறுபான்மையினரும் இட ஒதுக்கீடு வேண்டுமென்று கோரலாம். பிற்பட்ட வகுப்புகளைச் சார்ந்தவர்களும் தத்தம் வகுப்புகளுக்கு இட ஒதுக்கீடு கோரலாம். இட ஒதுக்கீட்டினைப் பொறுத்த வரை பிற்பட்டோர் கமிஷனே பொருத்தமான, சரியான அமைப்பாகும். அக்கமிஷன் உச்ச நீதிமன்ற தீர்ப்புகள், நடைமுறையில் உள்ள சட்டங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும். பிற மாநிலங்களில் பிற்பட்டோர் இட ஒதுக்கீடு குறித்து இக்கமிஷன்கள் பரிந்துரை செய்துள்ளன. மேலும் கமிஷன் கோரிக்கைகளை பரிசீலித்து,ஆய்வு செய்து பரிந்துரைத்தால்தான் அரசு இட ஒதுக்கீடு குறித்து ஆணைப் பிறப்பிக்க முடியும். கோரிக்கைகளைப் பரிசீலித்து ஆய்வு செய்யாமல் ஒரு வகுப்பு பிற்பட்ட வகுப்பு என்று அரசு கருதுகிற ஒரே காரணத்தினால்தன்னிச்சையாக இட ஒதுக்கீடு வழங்க முடியாது.

அக்கமிஷன் இட ஒதுக்கீடு தர பரிந்துரைத்தாலும் அதை அரசு ஏற்றாலும் அவை நீதிமன்றங்களின் பரிசீலனைக்கு உட்பட்டவையே. அதாவது அவற்றை எதிர்த்து வழக்கு தொடர முடியும். கமிஷன் மேற்கொண்ட ஆய்வு முறை, அதன் பரிந்துரைகளை அடிப்படைகளை நீதிமன்றம் பரிசீலிக்க முடியும். கமிஷன் கூறும் பரிந்துரையை நீதிமன்றம் நிராகரிக்க முடியும். அதன் அடிப்படையில் அமைந்த அரசு ஆணையும் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்படலாம். ஆந்திராவில் நீதிமன்றம் இவை அனைத்தையும் பரிசீலித்து, வழக்கு விசாரணையில் தரப்பட்ட தகவல்கள், புள்ளி விபரங்கள் அடிப்படையில் அரசு ஆணையை செல்லத்தக்கது அல்ல என்றது.

வீரமணி இந்த அடிப்படை விஷயங்களைப் பேசவில்லை. ஆந்திராவில் உயர்நீதிமன்றம் இஸ்லாமியருக்கான இட ஒதுக்கீடு குறித்து என்ன கூறியது, என்ன காரணங்களை முன் வைத்தது இட ஒதுக்கீடு குறித்த ஆணையை செல்லத்தக்கது அல்ல என்று கூறியதை விளக்கவில்லை.இதையெல்லாம் பேசினால் பிரச்சினை எப்படிப்பட்டது என்பதை புரிந்துகொள்வார்கள், அப்புறம் நாம் விடும் கட்டுக்கதையினை நம்பமாட்டார்கள் என்பது அவருக்குத் தெரியும்.

இஸ்லாமியருக்கான இட ஒதுக்கீடு என்பது அகில இந்திய அளவிலும் சரி, தமிழ்நாட்டிலும் சரி சிலர்நினைப்பது போல் அரசு நினைத்த உடன் தருகிற ஒன்றல்ல. இதில் பல சட்டப்பிரச்சினைகள் இருக்கின்றன. மண்டல் கமிஷன் பரிந்துரைகளை ஏற்று அரசு பிறப்பித்த இட ஒதுக்கீடு குறித்த ஆணை குறித்த வழக்குகள் (குறிப்பாக Indra Sawhney v. Union of India) , 2006ல் ஆ.பி. உயர்நீதிமன்றம் இஸ்லாமியருக்கான இட ஒதுக்கீடு குறித்த வழக்கில் (B. Archana Reddy and Ors. Vs. State of A.P., rep. by its Secretary, Law (Legislative Affairs and Justice) Department and Ors.அளித்த தீர்ப்பு - இவைகளைப் படித்தால் இட ஒதுக்கீடு குறித்து சட்டம் என்ன சொல்கிறது,நீதிமன்றங்கள் இதை எப்படி அணுகியுள்ளன என்பது குறித்த ஒரு புரிதல் கிடைக்கும்.

இந்த சந்தர்ப்பத்தில் சில அடிப்படைகளைத் தெளிவாக்கிவிடுவது நல்லது. தமிழ்நாட்டில் இஸ்லாமியர்களில் உள்ள பல பிரிவினருக்கு பிற்பட்டோர் பட்டியலில் இடம் உள்ளதால் இட ஒதுக்கீடு இருக்கிறது. அனைத்து இஸ்லாமியர்களுக்கும் இல்லை. பெரும்பான்மையினருக்கு இருக்கிறது என்று சொன்னால் அது மிகையில்லை என்று நினைக்கிறேன். அதாவது இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடே இல்லை என்று ஒட்டு மொத்தமாக கூறிவிட முடியாது. இது வேறு சில மாநிலங்களுக்கும் பொருந்தும். மண்டல் கமிஷன் இட ஒதுக்கீடு தரவேண்டும் என்று பரிந்துரைத்த ஜாதி/பிரிவுகளின் பட்டியலில் பல முஸ்லீம் பிரிவுகளுக்கு இடம் இருந்தது. மாநிலங்களில் முஸ்லீம்களில் பல பிரிவினருக்கு இட ஒதுக்கீடு தரப்பட்டுள்ளது.(2)

அ என்கிற மாநிலத்தில் ஆ என்ற ஜாதி/பிரிவு பிற்பட்டோர் பட்டியலில் இருந்து, இட ஒதுக்கீடு பெற்றிருந்தாலும், இ என்கிற மாநிலத்தில் அந்த ஜாதி பிற்பட்டோர் பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. அதே போல் அந்த ஜாதி அந்த மாநிலத்திற்கு உரிய மத்திய பிற்பட்டோர் கமிஷன் பயன்படுத்தும் பிற்பட்டோர் பட்டியலில் இடம் பெறாமலும் போகலாம். உதாரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு ஜாதி தமிழ்நாட்டில் உள்ள பிற்பட்டோர் பட்டியலில் இடம் பெற்றிருந்தாலும் அதே ஜாதி கேரள அரசின் பிற்பட்டோர் பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

1950களிலிருந்து இட ஒதுக்கீடு குறித்து உயர் நீதிமன்றங்களும், உச்ச நீதிமன்றமும் பல்வேறு வழக்குகளில் பல்வேறு தீர்ப்புகளைக் கூறியிருக்கின்றன. மண்டல் கமிஷன் பரிந்துரை அமுல் செய்யப்படும் வரை மத்திய அரசில் பிற்பட்டோருக்கு இடம் இல்லை. எனவே மத்திய அரசின் ஆணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு வழங்கும் போது உச்ச நீதிமன்ற பெஞ்ச் பிற்பட்டோர் இட ஒதுக்கீடு குறித்த ஒரு மிக விரிவான தீர்ப்பினை அளித்தது. இன்று வரை அத்தீர்ப்பில் கூறப்பட்ட வழிகாட்டும் நெறிகளை உச்ச நீதிமன்றம் வேறு வழக்கு/வழக்குகளில் நிராகரிக்கவில்லை. எனவே அத்தீர்ப்பு இட ஒதுக்கீட்டினைப் பொறுத்த வரை வேதம் என்று கருதப்படுகிறது. சில மாநிலங்களில் சாத்தியமான சில பின்னர் வேறு மாநிலங்களில் சாத்தியமாகாமல் போகலாம். அதற்குக் ஒரு முக்கிய காரணம் இவ்வழக்கில்உச்ச நீதிமன்றம் சில வழிகாட்டு நெறிகளைக் கொடுத்ததே. எனவே 1960 களில் 1970 களில்அந்த மாநிலத்தில் செய்ததை 2006ல் இங்கு ஏன் செய்யக்கூடாது என்று கேட்பது பொருத்தமானகேள்வி அல்ல.

போதுமான பிரதிநிதித்துவம் என்பது விகிதாச்சார பிரதிநிதித்துவம் அல்ல. உதாரணமாக ஒரு ஜாதி மக்கள் தொகையில் 5% என்று இருந்தால் அம் மாநிலத்தில் உள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகளில் 5% கூட அந்த ஜாதியை சேர்ந்தவர்கள் இல்லை என்றால் அதை பிற்படுத்த ஜாதி என்று கூறிவிடலாம் என்பது சரியல்ல.

பிற்பட்ட என்பதை நிர்யணம் செய்ய பல அளவுகோல்கள் உள்ளன. எனவே ஒரு சில தகவல்களைஅல்லது புள்ளிவிபரங்களை வைத்துக் கொண்டு ஒரு ஜாதி அல்லது பிரிவு பிற்பட்டது என்ற முடிவிற்கு வர முடியாது.பிற்பட்ட வகுப்பினருக்கான கமிஷன் இந்த விஷயத்தில் கவனமாக ஆய்வு செய்த பின்னரே பரிந்துரைக்க வேண்டும். ஆந்திர உயர் நீதிமன்றம் தன் தீர்ப்பில் இந்த அம்சத்தினை மிகத் தெளிவாக எடுத்துரைத்துள்ளது.

சிலர் ஆந்திரா உயர்நீதி மன்றம் சில 'டெக்னிகல்' காரணங்களுக்காக இட ஒதுக்கீடு குறித்த ஆணையை செல்லாது என்று தீர்ப்பளித்துவிட்டது, எனவே இப்போதே இன்னொரு ஆணை மூலம் இட ஒதுக்கீட்டினை அரசு கொடுக்க முடியும் என்று கருதுகிறார்கள். உண்மை வேறு. நீதிமன்றத்தின் தீர்ப்பில் இதற்கு முந்தைய முயற்சிகள், வழக்குகள் குறித்த மிக விரிவான அலசல் இருக்கிறது. அதைப்படித்தால் சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீடு என்பது எவ்வளவு சிக்கலான விஷயம் என்பதை அறிய முடியும்.

சுருக்கமாகச் சொன்னால் வீரமணி இப்பேட்டியில் கூறியிருக்கும் கருத்துக்கள் இஸ்லாமியரைத் திருப்திப்படுத்த, ஜெயலலிதா மீது வெறுப்பு ஏற்படுத்துவதற்காக கூறியிருக்கும் கருத்துக்கள். உண்மை இதிலிருந்து வேறானது. அதைத் தெரிந்து கொண்டால் வீரமணி இப்பிரச்சினையில் அரசியல் ஆதாயம் தேட முயல்கிறார் என்பது தெள்ளத் தெளிவாகப் புரியும். அவருக்கு உண்மையான அக்கறை இருந்தால் உள்ள நிலையை எடுத்துக் கூறி எது சாத்தியம், எது சாத்தியமில்லை என்பதை விளக்கியிருப்பார்.

(வீரமணி கூறியுள்ள வேறு பல கருத்துக்கள் மீது எனக்கு விமர்சனங்கள் உண்டு. அவற்றை இன்னொரு கட்டுரையில் எழுத உத்தேசம்)

(1) மேலும் அறிய Bajpai, Rochana (2000): ‘Constituent Assembly Debates and Minority Rights’, Economic and Political Weekly, May 27

(2) Reservation for Muslims- zoya hassan -Seminar-No.549-2005

மதுசூதனன் / Madhusudhanan said...

//இனப்பற்று ஒன்றினால் மட்டும் இருதரப்பிலும் வாதங்களில் ஈடுபடுவோர் சச்சார் கமிட்டி அறிக்கை போன்ற 'உண்மை' நிலையை அதிகம் அறிந்தவர்களில்லை என்பது தான் நிதர்சனம். //

இங்கே நான் கேட்க்கும் கேள்வியானது, மதத்தின் அடிப்படையில் ஒதுக்கீடு வேண்டாம். ஏனெனில் அது "மதச் சார்பற்ற நாடு" எனும் கருத்திற்கு எதிராகப் போய்விடும். அது மட்டுமின்றி அதற்கு அரசியல் சாஸனத்தில் இடமில்லை. பழைய காலமாய் இருந்தாலாவது ஏதோ ஒரு சட்டத்தினை இயற்றி அதை ஷெட்யூல் 9ல் சேர்த்து விடலாம். இப்போது அந்தப் பருப்பும் வேகாது. இஸ்லாமியர்களில் பின் தங்கிய வகுப்பினர் எவர் என்பதை அடையாளம் கண்டு, அவர்களுக்கு கொடுங்களேன். யார் வேண்டாம் என்றார்கள். மேலும் என் கருத்து என்னவெனில், பொருளாதாரா ரீதியாய் இட ஒதுக்கீடு தாருங்கள், சாதி மத அடிப்படையில் வேண்டாம் என்கிறேன். இதில் என்ன தவறு உள்ளது என்பதை விளக்குங்களேன்.

கவி said...

//இங்கே நான் கேட்க்கும் கேள்வியானது, மதத்தின் அடிப்படையில் ஒதுக்கீடு வேண்டாம். ஏனெனில் அது "மதச் சார்பற்ற நாடு" எனும் கருத்திற்கு எதிராகப் போய்விடும். //

ஹ..ஹா, நல்லா ஜோக் பண்றீங்க சார்.

அரசாங்க அலுவல்கள், கட்டிடங்கள் ஆரம்பிக்கும்போது குறிப்பிட்ட பெரும்பான்மை மதத்தின் பூசைகளை மட்டும் செய்யும் போது "மதச்சார்பற்ற நாடு' என்ற கருத்திற்கு எதிராகப் போகவில்லையா?

காலுக்கடியில் கெடக்குறவன் அப்படியே இருந்தாலும் பரவாயில்லை, இந்த விஷயத்துல மட்டும் நம்மாளுங்களுக்கு 'மதச்சார்பற்ற நாடு'ங்கற பிம்பம் தான் முக்கியம், இல்லீங்களா..?

மதுசூதனன் / Madhusudhanan said...

//அரசாங்க அலுவல்கள், கட்டிடங்கள் ஆரம்பிக்கும்போது குறிப்பிட்ட பெரும்பான்மை மதத்தின் பூசைகளை மட்டும் செய்யும் போது "மதச்சார்பற்ற நாடு' என்ற கருத்திற்கு எதிராகப் போகவில்லையா ? //

இது யாருடைய தவறு என்று நினைக்கிறீர்கள்? என்னைக் கேட்டால் அன்றைய தேதிக்கு ஆட்சியில் இருப்பவர்களே இதற்கு பொருப்பேற்க வேண்டும். அதை விடுத்து, அனைவரையும் குறை கூறுவது ரசிக்கவில்லை கவி. கேளுங்களேன் உங்கள் மதச்சார்பற்ற தலைவர்களை. என்ன பதில் வருகிறதென்று பார்ப்போம்.

கவி said...

கேள்வி: //அரசாங்க அலுவல்கள், கட்டிடங்கள் ஆரம்பிக்கும்போது குறிப்பிட்ட பெரும்பான்மை மதத்தின் பூசைகளை மட்டும் செய்யும் போது "மதச்சார்பற்ற நாடு' என்ற கருத்திற்கு எதிராகப் போகவில்லையா ? //

பதில்:
//இது யாருடைய தவறு என்று நினைக்கிறீர்கள்? என்னைக் கேட்டால் அன்றைய தேதிக்கு ஆட்சியில் இருப்பவர்களே இதற்கு பொருப்பேற்க வேண்டும். //

உங்களுடைய தவறு என்றும் நானும் சொல்லலீங்களே..!

பசியால் மெலிந்திருக்கின்ற தம்பிக்கு குறைந்த அளவு ரொட்டியும் கொடுக்ககூடாது என்று 98% சதவீத உணவு உண்பவர்கள் சொல்கையில் அதற்கு ஆதரவாக பதிவு போடத்தெரிந்த உங்களுக்கு.....

ம்.. மல்லுகட்டி பிரயோசனமில்லை!
மற்றவர்களின் தூக்கத்தை கெடுப்பதற்காகவேனும் தானும் தூங்குவதாக நடிப்பவர்கள் எல்லா தளங்களிலும் உண்டு.

வேண்டாம், நீங்கள் ஒத்துக்கொள்ளப்போவதில்லை :-))

மதுசூதனன் / Madhusudhanan said...

//உங்களுடைய தவறு என்றும் நானும் சொல்லலீங்களே..!//

அப்ப இந்த விஷயத்தை பத்தி இங்க பேசியே இருக்க வேண்டாமே ? எந்த விஷயங்கள்னால மதச்சாரிபின்மை கெடுகிறது என்று தெரிந்து, அவற்றை சாடுங்கள். அதற்க்கு காரணமானவர்களை சாடுங்கள்.

//ம்.. மல்லுகட்டி பிரயோசனமில்லை!
மற்றவர்களின் தூக்கத்தை கெடுப்பதற்காகவேனும் தானும் தூங்குவதாக நடிப்பவர்கள் எல்லா தளங்களிலும் உண்டு.

வேண்டாம், நீங்கள் ஒத்துக்கொள்ளப்போவதில்லை :-)) //

என்னங்க? சரக்கு தீர்ந்து போச்சா? உங்களுக்கு பேசவராம போன உடனே எங்களுக்கு புரியாது, ஒதுக்கமாட்டோம் அது இதுனு எத்தனை பம்மாது???

கவி said...

சரக்கு தீர்ந்து போகவில்லை என்பதை வசதியாக நீங்கள் கழற்றி விட்ட என் பின்னூட்ட பத்தி சான்றளித்துகொண்டிருக்கையில்...!

தூரமாவதன் பொருள் நான் சொன்னது போல் பிடிவாதத்திற்கு மருந்தில்லை என்பதால் தானே தவிர......

மதுசூதனன் / Madhusudhanan said...

//தூரமாவதன் பொருள் நான் சொன்னது போல் பிடிவாதத்திற்கு மருந்தில்லை என்பதால் தானே தவிர...... //

உங்கள் பதில் சரியானதாக இல்லையே கவி. என்ன செய்யட்டும் சொல்லுங்கள்? இன்னொரு பதிலைத் தாருங்கள் மேலும் கருத்தாடலாம்.

Anonymous said...

மத அடிப்படையில் இடஒதுக்கீடு கிடைத்தால் வந்தேறி பார்ப்பான்கள் உடனே இடஒதுக்கீடு கிடைக்கும் மதத்துக்கு மாறிவிடுவான்கள். கிடைச்சதை சுரண்டி தின்னும் கும்பல் தானே அது?

Anonymous said...

//அப்படி மைனாரிட்டிகளுக்கு தர வேண்டுமென்றால், பார்ப்பனர்களும் தகுதி பெறுவர்.//

யோவ் நோண்டு,

ஒன்ன பாத்தாலே பாப்பான் மாதிரி இல்லே. பாப்பானுக்கு ஏன்யா கேக்குற எட ஒதுக்கீடு?

Anonymous said...

//பசியால் மெலிந்திருக்கின்ற தம்பிக்கு குறைந்த அளவு ரொட்டியும் கொடுக்ககூடாது என்று 98% சதவீத உணவு உண்பவர்கள் சொல்கையில் அதற்கு ஆதரவாக பதிவு போடத்தெரிந்த உங்களுக்கு.....//

யாரு பசியால மெலிந்து இருக்கிறார்கள் என்று சிறிது தெளிவு படுத்திவிடுங்களேன்?.
பூனை கண்ணைமூடுவதால் உலகம் இருண்டு விடாது கவி அவர்களே.

அபிவிருத்தி said...

//நீங்கள் குறிப்பிடும் அரசுப் பணிகளில் உள்ள பிராமணர்கள் யாவரும் பல ஆண்டுகளுக்கு முன்னால் தகுதி அடிப்படையில் பணியில் அமர்த்தப் பட்டவர்கள் என்பதை நினைவில் கொள்ளவும் நண்பரே. வீணாய் அடுக்கு மொழியில் பேசி காமெடி பண்ணாதீர்கள் :). நீங்களும் பேசுவதற்கு முன் கொஞ்சமேனும் மேல் மாடியை உபயோகிக்கவும்.//

இடஒதுக்கீடு எனும் நடைமுறை செயல்பாடுகளை உணர்ந்திருந்தால் தாங்கள் இப்படி காமெடி செய்திருக்க மாட்டீர்கள் சகோதரரே. இடஒதுக்கீடு என்பது 2 விதமான வடிவம் கொண்டது என்று நான் நம்புகிறேன்.

உதாரணத்திற்கு.. ஒரு சமுதாயத்திற்கு 10 சதவிகிதம் இடஒதுக்கீடு என்று வைத்து கொண்டால் அந்த சதவிகித அடிப்படையில் அந்த சமுதாயத்தின் திறமையானவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பது ஒரு வடிவம்.

10 சதவிகிதத்திற்கும் அதிகமாக திறமையானவர்கள் இருந்தாலும் அந்த சதவிகிதத்திற்கு அதிகமாக அந்த சமுதாயத்திற்கு வாய்ப்பு அளிக்கப்படக் கூடாது என்பது மற்றொரு வடிவம்.

அப்படி அளிக்கப்பட்டால் அது பிற சமுதாயத்தினருடைய உரிமையை பறிக்கும் என்பது நிதர்சனம். அதை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இதுதான் நான் புரிந்து கொண்ட விதம்.

பார்ப்பனர்கள் இடஒதுக்கீடு கோரினால் என் புரிந்துணர்வின் அடிப்படையில் தனது சதவிகிதத்திற்கும் அதிகமாக அரசு பணிகளில் இருக்கும் பல பார்ப்பனர்கள் தங்கள் வேலையை இழக்க நேரிடும். ஆகையால் பார்ப்பனர்களின் இடஒதுக்கீடு கோரிக்கையை நான் வரவேற்கிறேன். அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் கோருகிறேன். பார்ப்பனர்களின் இடஒதுக்கீடு கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம், பேரணி போன்ற எதுவும் நடந்தால் அதில் நானும் கலந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்.

மற்றபடி பார்ப்பனர்களை விடவும் திறமையானவர்கள் மற்ற சமுதாயத்தில் மலிந்து இருக்கிறார்கள்.

ஒருவனிடம் ஒரு வாகனத்தை கொடுத்து ஒட்டச் சொல்லி விட்டு அதன்பிறகு அவன் எப்படி ஓட்டினான் என்று சொல்வது தான் அறிவு சார்ந்ததாக இருக்கும். ஒருவனுக்கு வாகனத்தையே கண்களில் காட்டாமல் அவன் திறமையில் சந்தேகம் எழுப்புவது போன்று பேசுவதுஃஎழுதுவது அறிவு சார்ந்ததா?

குறிப்பு: முடிந்தவரை இந்த மறுமொழியில் அடுக்குமொழி மற்றும் காமெடி இல்லாமல் எழுதியுள்ளேன்.

நான் அபிவிருத்தி

Anonymous said...

மதுசூதனன்,

சதுர்வேதி என்கிற பெயரில் எழுதுவது விடாதுகருப்பு என்கிற மனநிலை சரியில்லாத ஆசாமிதான்.

விடாதுகருப்புவை விடாது வைத்திருக்க தமிழின் மணத்திற்கு சொந்தம் கொண்டாடுபவர்கள் செய்யும் தகிடுதத்தங்களில் இதுவும் ஒன்று.

நீங்கள் போய் அந்தப் பதிவுகளில் போய் காமெண்ட் போடுவதால் உங்களுக்குத்தான் ஆபத்து.

சுல்தான் said...

//யாரு பசியால மெலிந்து இருக்கிறார்கள் என்று சிறிது தெளிவு படுத்திவிடுங்களேன்?///
அந்த பசியால் மெலிந்த தம்பியைப் பார்க்க சமீபத்திய சச்சார் கமிட்டி அறிக்கையைப் பார்வையிடுங்களேன்.

Anonymous said...

//நீங்கள் போய் அந்தப் பதிவுகளில் போய் காமெண்ட் போடுவதால் உங்களுக்குத்தான் ஆபத்து. //

இதென்னா புதுக்கதை? ஒரிஜினல் ஆபத்து டோண்டு பதிவில் பின்னூட்டம் போட்டால் தானே?

dondu(#11168674346665545885) said...

//10 சதவிகிதத்திற்கும் அதிகமாக திறமையானவர்கள் இருந்தாலும் அந்த சதவிகிதத்திற்கு அதிகமாக அந்த சமுதாயத்திற்கு வாய்ப்பு அளிக்கப்படக் கூடாது என்பது மற்றொரு வடிவம்.
அப்படி அளிக்கப்பட்டால் அது பிற சமுதாயத்தினருடைய உரிமையை பறிக்கும் என்பது நிதர்சனம். அதை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இதுதான் நான் புரிந்து கொண்ட விதம்.//
உங்கள் புரிதலில் தவறு இருக்கிறது. இட ஒதுக்கீடு என்பது இப்போதைய சட்ட நிலைப்படி 50 % தாண்டவியலாது. அந்த ஐம்பதுக்குள்தான் எல்லாரது இட ஒதுக்கீடும் வந்து விடும். மீதி உள்ள 50% திறந்த போட்டியைச் சார்ந்தது. ஆகவே அதில் யார் வேண்டுமானாலும் வரலாம். அவர்கள் உயர்சாதியினராகத்தான் இருக்க வேண்டுன் என்ற அவசியம் இல்லை. புரிந்ததா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

மதுசூதனன் / Madhusudhanan said...

//இடஒதுக்கீடு எனும் நடைமுறை செயல்பாடுகளை உணர்ந்திருந்தால் தாங்கள் இப்படி காமெடி செய்திருக்க மாட்டீர்கள் சகோதரரே.//

நான் ஓரளவிற்க்கு முட்டாள் தான் கவி. ஆனால் மகா மூடனல்ல. :) எனக்கும் இந்த விஷயங்கள் நிச்சயம் தெரியும்.

//10 சதவிகிதத்திற்கும் அதிகமாக திறமையானவர்கள் இருந்தாலும் அந்த சதவிகிதத்திற்கு அதிகமாக அந்த சமுதாயத்திற்கு வாய்ப்பு அளிக்கப்படக் கூடாது என்பது மற்றொரு வடிவம்.//

இதற்கு பொருள் இட ஒதுக்கீட்டின் படி ஒருவருக்கு சலுகை தரக்கூடாது என்பது தானே தவிர, அவர் தகுதி / திறமையின் அடிப்படையில் ஓப்பன் கோட்டாவிலும் வரக்கூடாது என்று மறுப்பது.... மிகவும் கேலிக்குரிய விஷயம். அந்த 10% மேற்பட்டோர் ஓப்பன் கோட்டாவில் வந்தால் உங்களுக்கு ஏனைய்யா கசக்கிறது? நான் என் முந்தையதொரு பின்னூட்டத்தில் கூறியபடி, இன்று அரசுப் பணிகளில் பணி புரியும் அனேக பிராமணர்கள் இப்படி ஓப்பன் கோட்டாவில் வந்தவர்களே என்பதை நீங்கள் மறுக்க இயலாது.

//பார்ப்பனர்கள் இடஒதுக்கீடு கோரினால் என் புரிந்துணர்வின் அடிப்படையில் தனது சதவிகிதத்திற்கும் அதிகமாக அரசு பணிகளில் இருக்கும் பல பார்ப்பனர்கள் தங்கள் வேலையை இழக்க நேரிடும்.//

இருப்பவர்களை வீட்டுக்கு அனுப்பவது என்பது இயாலாது ஐயா. என்ன சொல்லி அனுப்புவீர்கள்? புதியவருக்கு இட ஒதுக்கீட்டு சட்டத்தினை காட்டுவீர்கள். ஏற்கென்னவே பணியில் உள்ளவருக்கு?

dondu(#11168674346665545885) said...

அதே போல ஒரு மூத்தப் பதிவர், தங்கமணியோ, சுந்தரவடிவேலரோ அல்லது சுந்தர மூர்த்தியோ பத்திரிகைத் துறையில் பார்ப்பன ஆதிக்கத்தைப் பற்றி புலம்பினார். அவருக்கும் இதைத்தான் சொன்னேன், அவ்வாறு வந்த ஒரு பார்ப்பனரும் இட ஒதுக்கீட்டால் வரவில்லை என்று.

உண்மை கூறப்போனால் இதுவரை ஒருபார்ப்பனனும் அரசு வேலையில் இட ஒதுக்கீட்டால் வரவேயில்லை. நான் ஏற்கனவே பலவிடங்களில் கூறியது போல பார்ப்பனர்களின் முன்னேற்றத்தை எந்த வயிற்றெரிச்சல்காரனும் தடை செய்ய முடியாது. அரசு வேலையில்லையா, "போடா ஜாட்டான்" என்று எங்கு வேலை கிடைக்கிறதோ அங்கே போய்க் கொண்டேயிருபார்கள். நேரத்தின் மதிப்பை அறிந்தவர்கள் அவர்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

மதுசூதனன் / Madhusudhanan said...

//நீங்கள் போய் அந்தப் பதிவுகளில் போய் காமெண்ட் போடுவதால் உங்களுக்குத்தான் ஆபத்து. //

யார் மனதையும் புண் படுத்தும் எண்ணம் எனக்கில்லை. என்னை புண் படுத்த நினைப்பவர் செய்து பார்க்கட்டுமே.

மதுசூதனன் / Madhusudhanan said...

//உண்மை கூறப்போனால் இதுவரை ஒருபார்ப்பனனும் அரசு வேலையில் இட ஒதுக்கீட்டால் வரவேயில்லை.//

இது யாருக்கும் தெரியாது என்கிறீர்களா? அதென்னவோ இல்லை. ஆயினும் புலம்பிக் கொண்டே இருக்கின்றனர்.

மையகுண்டான் said...

//அரசு வேலையில்லையா, "போடா ஜாட்டான்" என்று எங்கு வ... //அரசு வேலையில்லையா, "போடா ஜாட்டான்" என்று எங்கு வேலை கிடைக்கிறதோ அங்கே போய்க் கொண்டேயிருபார்கள். நேரத்தின் மதிப்பை அறிந்தவர்கள் அவர்கள்.
//

இப்பவும் என்னடா மோசம் ஆச்சு? இட ஒதுக்கீடு வேண்டாம் என்று சொல்லிவிட்டு ஓப்பன் கோட்டாவில் வேலை வாங்க வேண்டியதுதானே? தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு என்றால் ஏன் எல்லா அய்யன், அய்யங்கார் பயலும் பன்னி மாதிரி குதிக்கிறீங்க?

மதுசூதனன் / Madhusudhanan said...

//இப்பவும் என்னடா மோசம் ஆச்சு? இட ஒதுக்கீடு வேண்டாம் என்று சொல்லிவிட்டு ஓப்பன் கோட்டாவில் வேலை வாங்க வேண்டியதுதானே? தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு என்றால் ஏன் எல்லா அய்யன், அய்யங்கார் பயலும் பன்னி மாதிரி குதிக்கிறீங்க?//

இப்போ பிரச்சினையே, எல்லாத்தையும் இட ஒதுக்கீடுங்கிற பேர்ல குடுத்து முடிக்கிறது தான். எல்லாத்தையும் இட ஒதுக்கீடுனு சொல்லி தாரை வார்த்துவிட்டால் அப்போ ஓப்பன் கோட்டாவில் வருபவன் கதி என்ன?

செந்தழல் ரவி said...

///நான் ஏற்கனவே பலவிடங்களில் கூறியது போல பார்ப்பனர்களின் முன்னேற்றத்தை எந்த வயிற்றெரிச்சல்காரனும் தடை செய்ய முடியாது. அரசு வேலையில்லையா, "போடா ஜாட்டான்" என்று எங்கு வேலை கிடைக்கிறதோ அங்கே போய்க் கொண்டேயிருபார்கள். நேரத்தின் மதிப்பை அறிந்தவர்கள் அவர்கள்.////

டோண்டு, உங்களது இந்த பதிலை ப்ரிண்ட் அவுட் எடுத்து எங்களது அறையில் ஒட்டப்போகிறேன்...காரணம் இது ஒரு பொய்யான தகவல்...

நேற்று நைட்டு அடித்த மப்பின் தாக்கத்தால் அலுவலம் செல்லாமல் அறையில் உறங்கும் என்னுடைய நன்பர் பிறப்பால் நீங்கள் மேற்ச்சொல்லும் சாதியை சேர்ந்தவர்...அவனுக்கு இது ஒரு சதவீதம் கூட பொருந்தவில்லையே அய்யா..

Anonymous said...

அலுவலகம் என்று இருக்கவேண்டும்.

மதுசூதனன் / Madhusudhanan said...

//டோண்டு, உங்களது இந்த பதிலை ப்ரிண்ட் அவுட் எடுத்து எங்களது அறையில் ஒட்டப்போகிறேன்...காரணம் இது ஒரு பொய்யான தகவல்...//

ஒரு நாட்டில் ஒருவன் சோம்பேறி என்பதால் எல்லோரும் சோம்பேறிகளாகி விடுவதில்லை ரவி. சாதி, மதம் ஆகியனவற்றை கடந்து மனிதனை ஏன் மனிதாய் உணருங்கள் நண்பரே.

Vajra said...

இடஒதுக்கீடும் சமுதாயத்தை சமன் செய்வதற்காக கொண்டுவரப்பட்டது என்ற அடிப்படையை மறந்து தலைமுறை தலைமுறையாக இடஒதுக்கீட்டை அனுபவிப்பவர்கள் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாகவும் இடஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்களை தூற்றுவதும் புரிந்துக் கொள்ளக் கூடியதுதான்.Robbing peter to pay paul என்ற அடிப்படையில் தான் இடஒதுக்கீடு இயக்கப்படவேண்டுமா?


ஆனால் இங்கு நடப்பதோ Robbing peter மட்டுமே, paul க்கு கொடுப்பது "பெப்பே" paul லோட அப்பனுக்கும் "பெப்பே!!".
இந்த loot களை அனுபவிக்கிறது இடஒதுக்கீட்டு ஆதரவுக்கூட்டத்தின் சந்ததியினர். அதை அனுபவித்துவிட்டு இடஒதுக்கீடு கேட்டு கொடி பிடிப்பார்கள்.

செந்தழல் ரவி said...

வஜ்ரா பின்னூட்டம் போட்டுட்டார்...

மேலும் பதிவு எழுதவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்...

Anonymous said...

Fatwas against caste quota attempts
21 Jun, 2007 l 0235 hrs IST l TNN

HYDERABAD: Even as the state government prepares to issue an ordinance giving four per cent reservation to the Muslim community by splitting it into more than a dozen castes, six leading Islamic seminaries in the city have come out with fatwas opposing such a move.

"Division of society into higher and lower castes is against the tenets of Islam which is based on equality" is the essence of what these seminaries have said.

The fatwas were sought by the United Muslim Action Committee (UMAC), a conglomeration of various political and cultural organisations that had campaigned for the Congress in the 2004 elections.

Majlis-e-Ittehadul Muslimeen is the leading partner in this grouping. One of the six authorities that issued the fatwas represents the Shias and the others belong to Sunni schools of thought. The United Muslim Action Committee sought fatwas from six seminaries at the same time to show the unanimity in the community against the government move.

The fatwas are in reaction to the report of ex-bureaucrat P S Krish who had been appointed by the state government to advise on how reservations could be given to the community without being rejected by the courts as it happened in the past. Krishnan, in his report that has been posted on the Internet, argued that caste system exists among Muslims and 13 of their groups could be extended reservation on the basis of their economic and social backwardness.

UMAC convener Maulana Hameeduddin Aquil told the media on Wednesday that the group had to resort to seeking fatwas since its efforts to dissuade chief minister Y S Rajasekhara Reddy from pursuing caste-based division in the community have failed. The move would do more damage than good if the government went ahead with its plans, he cautioned.

Maulana Aquil and MIM MP Asaduddin Owaisi urged the CM to reject the Krishnan report. "We want reservation for Muslims on the basis of their economic backwardness, not by dividing them into castes," Maulana Aquil pointed out.
M A Raheem Qureshi, president Majlis-e-Tameer-e-Millat, said that the D Subramaniam commission has already declared Muslims as backward. Therefore, it is advisable to accept that report rather than raking up controversies, he added.
Maulana Khalid Saifullah Rahmani, rector of Al-Mahad Al-Aali Al-Islami, in his fatwa asked Muslims to oppose the government proposal for caste-based reservations.

The other seminaries that gave fatwas are Jamia Nizamia, Darul Uloom, Darul Uloom Sabilus Salam, Darul Uloom Rehmania and Tanzeem-e-Jafari.

http://timesofindia.indiatimes.com/Cities/Fatwas_against_caste_quota_attempts/rssarticleshow/2137666.cms

Anonymous said...

Diktat against caste-based quotas in Andhra Pradesh

Islamic seminaries in Andhra Pradesh on Wednesday issued a 'fatwa' or edict against the state government's move to provide reservations to Muslims in education and employment on the basis of caste system.

Stating that all are equal among Muslims and there is no caste system in Islam, six famous seminaries issued a 'fatwa' against the government's proposal. They said this type of division was unacceptable in 'shariat'.

"Muslims all over the world are equal. There is no distinction of caste, colour or race among them. Therefore, creating distinction among them for reservations is improper under shariat," said a 'fatwa' issued by Jamia Nizamia, a 125-year-old Islamic university based in Hyderabad.

The copies of the diktat were released at a news conference here addressed by leaders of Muslim United Action Committee (MUAC), which comprises half a dozen religious, political and social organisations. The MUAC had sought opinion from the seminaries.

The Muslim leaders rejected the government's move and termed it as an attempt to create divisions among the community. They said reservations should be provided to Muslims, who are socially, economically and educationally backward, without dividing them on the basis of caste.

"Islam has no caste system and the government's move is nothing but an attempt to divide Muslims," said prominent religious scholar and MUAC convenor Moulana Hameeduddin Auqil Hussami.

Majlis-e-Ittehadul Muslimeen (MIM) MP Asaduddin Owaisi said backwardness should be the sole criterion for providing reservations to Muslims. "The Andhra Pradesh government should follow the Karnataka model where reservations were provided to Muslims without creating any such distinctions," he said.

MUAC leaders, who plan to meet Chief Minister YS Rajasekhara Reddy, warned that the move would have serious repercussions for the Congress government.

"Congress came to power with support from Muslim community and by taking this step it will lose their support," said Majlis-e-Tameer Millat president Abdur Rahim Qureshi, who is also the secretary of All India Muslim Personal Law Board.

"We are not demanding reservations for all those who profess Islam. We want reservations on the basis of backwardness by excluding the creamy layer," he said.

The Muslim leaders voiced their apprehension that the government could withdraw its appeal in the Supreme Court on five percent reservations to Muslims to issue a new order on caste-based reservations. The appeal was filed last year against a high court order, setting aside a legislation providing five percent quota in education and government jobs.

The government had issued an order in 2005 providing five percent reservations to Muslims. It brought a legislation in 2006 after the high court struck down the order. The legislation was also set aside by the court.

Muslims constitute about nine percent of 76 million population of Andhra Pradesh.
http://www.hindustantimes.com/StoryPage/Print.aspx?Id=461fda33-c9b2-4e7c-9831-74a6bf9675e1