Monday, May 14, 2007

தயாநிதி Vs திமுக - மோதல் முற்றுகிறதா?

தயாநிதிக்கும் திமுகவுக்கும் (கலைஞர் ?) இடயில் நடக்கும் யுத்தத்தின் உக்கிரமானது மெல்ல மெல்ல குறைந்துவிடும் என்று நினைப்போரின் எண்ணங்களைத் தவிடு பொடியாக்கும் வகையில் சம்பவங்கள் இப்போது நடைபெற்று வருகிறது. கலைஞரால் பெட்டிக்குள் அடக்கப்பட்ட பூதமான கேபிள் டிவி மசோதாவானது மீண்டும் தலை தூக்கி உள்ளது.

கேபிள் நிறுவனங்களை அரசுடமையாக்கும் மசோதா முதலில் ஜெயலலிதாவால் (சன் டிவியை அடக்க ?) அறிமுகப்படுத்தப் பட்டது. ஆனால் இதனால் பதட்டமடைந்த கலைஞர் அன்றைய ஆளுனரைச் சந்தித்து இந்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கக் கூடாது எனக் கேட்டுக் கொண்டார் (பேரனின் வியாபாரத்தைக் காப்பாற்ற ?). அது மட்டுமின்றி கேபிள் டிவியை அரசுடமையாக்க அரசுக்கு அதிகாரமில்லை என்று சொல்லி அந்தச் சட்டத்தினை ஆட்சிக்கு வந்ததும் அவர் ரத்தும் செய்தார். ஆனால் இன்று திரும்பவும் அவரே (கலைஞரே) அதைக் கையில் எடுத்திருக்கிறார். ஆனால் இன்று அவரே இலவச தொலைக் காட்சிப் பெட்டிகளால் பிரயோஜனம் இல்லாது போய்விடும் போல இருக்கிறது என்று சொல்லி மறுபடியும் அந்த பூதத்தினை பெட்டிக்குளிருந்து வெளியே கொண்டுவர (மாறன்களை அடக்க ?) நினைக்கிறார் கலைஞர். எது எப்படியோ, ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் தானே.

4 comments:

dondu(#11168674346665545885) said...

எது எப்படியோ, தயாநிதி மாறனுக்கு முதலிலிருந்தே தகவல் தொடர்பு மந்திரி பதவி கொடுத்திருக்கவே கூடாது. இதை conflict of interest என்று வகைப் படுத்துவார்கள். அதை பிடித்து கொண்டு ராஜ், ஜயா இன்னும் சில சேனல்களுக்கு தொல்லைகள் தரப்பட்டன. சன் டிவிக்கு அபரிதமான சலுகைகள் கொடுக்கப்பட்டன. சன் டிவி கலாநிதி மாறனுடையது மட்டுமே அதற்கு தயாநிதி எப்படி பொறுப்பாவார் என்று கூற நினைப்பவர்களுக்கு, நெருங்கிய உறவினரும் இந்த conflict of interest ல் அடங்குவர் என்பதை நினைவுபடுத்துகிறேன்.

ஆக, தயாநிதி இப்பதவியிலிருந்து விலகியது நல்லதே.

//ஆனால் இன்று திரும்பவும் அவரே (கலைஞரே) அதைக் கையில் எடுத்திருக்கிறார். ஆனால் இன்று அவரே இலவச தொலைக் காட்சிப் பெட்டிகளால் பிரயோஜனம் இல்லாது போய்விடும் போல இருக்கிறது என்று சொல்லி மறுபடியும் அந்த பூதத்தினை பெட்டிக்குளிருந்து வெளியே கொண்டுவர (மாறன்களை அடக்க ?) நினைக்கிறார் கலைஞர்.//
தலைவலியும் திருகுவலியும் அவரவருக்கு வந்தால்தான் தெரியும் என்ற சொலவடையை தமிழ்ப்பற்றுள்ள டாக்டர் சாணக்யர் உலகமகா கவிஞர் மனுநீதிச் சோழ கலைஞர் கருணாநிதி அவர்கள் நிரூபித்து விட்டார்.

அது சரி, அழகிரி கைது எப்போ? சி.பி.ஐ. அதிகாரிகள் வந்தாங்களாமா? இல்லை ரயில் டிக்கெட் ரிசர்வேஷனில் ஆர்.ஏ.சி. யில் இருக்காங்களாமா?

சி.பி.ஐ.யின் வேலையில் தமிழகப் போலீசார் செய்தது, போலீஸ் மந்திரியின் கையறு நிலை எல்லாவற்றையும் விசாரிப்பதும் அடங்குமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

வால்டர் வெற்றிவேல் said...

பார்ப்புகள் தயாநிதியை ஆதரிக்கக் காரணம் என்ன?

முரசொலி மாறன் - மல்லிகாவுக்கு பிறந்த தயாநிதி தன் பெயருக்குப் பின்னால் மாறன் என சேர்த்துக் கொண்டார். மாறனின் மறைவுக்குப் பின் எங்கிருந்தோ திடீரென கட்சிக்குள் வந்தார். முக்கியத்துவம் வாய்ந்த மத்திய அமைச்சர் ஆனார். இது எதிர்க்கட்சிகளுக்கு மாத்திரம் அல்ல. சொந்தக் கட்சியினருக்கே ஆச்சர்யம், பொறாமை, கோபம்.

காரணம் என்ன? தயாநிதியை விட எத்தனையோ மூத்த கட்சிப் பிரமுகர்கள் திமுகவில் இருக்கின்றனர். தன் பேரன் என்றதும் மத்திய அமைச்சர் ஆக்கி அழகு பார்த்தார் என்று சொன்னார்கள். அது உண்மை என்றுதான் சொல்ல வேண்டும். அதேபோல இறந்த முக்கிய பிரமுகருக்குப் பின் அவரின் மனைவி அல்லது வாரிசுகளுக்கு கட்சியில் இடம் கொடுப்பதை திமுக வழக்கமாக்கிக் கொண்டுள்ளது. அத்தோடு தயாநிதி ஹிந்தி மொழியும் படித்து இருப்பதால் மத்தியில் அனைவரோடும் நன்கு உரையாட முடியும், தமிழகத்துக்கு நிறைய பெற்றுத் தர முடியும் என்று கலைஞர் நம்பினார்.

கலைஞர் நினைத்தது சரிதான். தயாநிதி தமிழகத்துக்கு மட்டும் அல்ல. மொத்த இந்தியாவுக்குமே பல நல்ல செயல்களைச் செய்தார். தொலைத்தொடர்புத் துறையில் அவர் செய்த புரட்சியை நாடே அதிசயமாகப் பார்த்தது. பல நாடுகளுக்கும் சென்று வர்த்தக வாய்ப்புகளைக் கவர்ந்தார். மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் பிரத்தியேகமாகப் பேச்சு வார்த்தை நடத்தியது குறிப்பிடத் தகுந்தது!

அன்றைக்கு கலைஞரை எல்லா எதிர்க்கட்சிகளும் குற்றம் சாட்டின. அனைவரையும் தமிழ் படிக்கச் சொல்லிவிட்டு பேரனை ஹிந்தி படிக்க வைத்து விட்டார் என்றனர். தினமலர் போன்ற பார்ப்பனப் பத்திரிக்கைகளும் துக்ளக் போன்ற பார்ப்பன வார இதழ்களும் இதனை கேலிச் சித்திரங்களாகப் போட்டு தங்கள் மன அழுக்குகளை மக்கள் தலையில் எச்சிலாகத் துப்பினர்!

தயாநிதி மாறன் கலைஞருக்கு மகன் அல்ல. கலைஞரின் அக்கா பேரன். அக்கா பேரனை கலைஞர் எப்படி படிக்க வைக்க முடியும்? அவருக்கு தாய் தந்தை இல்லையா? அல்லது அநாதையா? தயாநிதி ஹிந்தி படித்ததற்கும் கலைஞரை குற்றம் சொன்னார்கள் பார்ப்பன கைக்கூலிகள்!

அன்றைக்கு தயாநிதி மாறனையும் கலைஞர் மு. கருணாநிதியையும் தொலைத் தொடர்புத் துறையில் ஏற்பட்ட ஒரு ரூபாய் புரட்சியையும் நக்கல், கேலி, கிண்டல் செய்து மகிழ்ந்த பார்ப்புகளும் பார்ப்பன பத்திரிக்கைகளும் அவர்களின் அல்லக் கைகளும் இன்றைக்கு தயாநிதியை மாறி மாறிப் புகழ்கின்றன!

இதற்கெல்லாம் என்ன காரணம்? ஒரு புண்ணாக்கு காரணமும் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக இல்லை. அவர்களின் மனமாற்றத்துக்கு ஒரே ஒரு சிறப்பு காரணம் உண்டு. அது தயாநிதி மாறனின் மனைவி ஒரு பாப்பாத்தி என்பது மட்டுமே! அதோடு பார்ப்புகளின் எதிரியான கருணாநிதிக்கு எதிரியாக உள்ள அனைவருமே பார்ப்பனர்களுக்கு நண்பர்தான்!

இனிமேல் தயாநிதியின் புகழை தினமலர் பாடும், துக்ளக் பாடும். வலைப்பதிவில் எல்லா பூணூல் போட்ட அய்ய, அய்யங்கார்களும் பாடுவார்கள். ஒரே இரவில் பார்ப்பன குலத்திற்கு நண்பனாகிவிட்ட தயாநிதி இனிமேல் சூத்திரன் இல்லை. அவர் இனிமேல் ஆரிய வகுப்பென இந்த அல்லக் கைகளால் கருதப்படுவார்!

ஒரு தாய் வயிற்றில் வந்த உடன்பிறப்பில்
முன்பு பிரிவு வந்தால் பின்பு உறவு வரும்
நல்ல மனிதருக்கும் நன்றி மறந்தவர்க்கும்
ஒரு உறவு வந்தால் பின்பு பிரிவு வரும்!

இது எங்கள் கவிஞனின் காலத்தால் அழியாத எக்காலத்திற்கும் பொருந்தும் பாடல். மாறனும் அழகிரியும் மாமன் மச்சான் சொந்தங்கள். இன்றைக்கு அடித்துக் கொள்ளும் அவர்கள் நாளைக்கே கூடிக் கொள்ளலாம். அதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஒருவேளை அப்படி அனைவரும் பகை மறந்து நட்பாகும் சூழ்நிலையில் இந்த பார்ப்புகளும் பார்ப்பனப் பத்திரிக்கைகளும் எங்கே தங்கள் முகத்தைக் கொண்டு போய் வைப்பார்கள்?

கலைஞர் மூன்று நான்கு முறை நேரடியாகவும் தொலைபேசியிலும் பேசி கருத்துக் கணிப்புகள் வேண்டாம் என்று அன்பாகக் கூறியும் அதனைப் பொருட்படுத்தாமல் தினகரனில் கணிப்புகள் போட்டு தமிழ்நாட்டிலும் கலைஞர் வீட்டிலும் குழப்பத்தை ஏற்படுத்தியது மாறன் சகோதரர்களின் தவறு. திமுக மட்டும் அல்ல. அதிமுகவின் அடுத்த தலைவர் யார் என்று போட்டதே தவறுதான். அடுத்தவன் கட்சிக்கு ஆரூடம் கூற இவர்கள் யார்? திமுகவின் கட்சித் தலைவர், முதலமைச்சர் சொன்னார் என்பதற்காக இல்லை என்றாலும் குடும்பத்தின் மூத்த தாத்தா சொல்கிறார் என்பதற்காகவாவது மதிப்பு அளித்து மாறன் சகோதரர்கள் இந்த கணிப்புகளை நிறுத்தி இருக்கலாம்.

தற்போது அப்பாவிப் பொதுமக்களின் மூன்று உயிர்கள் போய் விட்டன. அரசின் முக்கிய நிகழ்ச்சிகள் ராஜ் கைக்கு போகின்றன. திமுகவே ராஜ் டிவியை வாங்க இருப்பதாகவும் ஒரு செய்தி பரவுகிறது. இன்னும் ஓரிரு மாதங்களில் சன் அறிவாலயத்தை விட்டு வேறிடம் போகலாம். இதனால் யாருக்கு நஷ்டம்? திமுகவுக்கும் மாறன் குடும்பத்துக்கும் கலைஞர் குடும்பத்துக்கும்!

பார்ப்புகளின் எண்ணங்களில் இருந்த பொறாமை, ஆற்றாமைத் தீயானது தயாநிதி மாறனின் பார்ப்பன மனைவி மூலமாகக் கிளம்பி இப்போது தமிழ்நாட்டை மட்டுமல்லாது இந்திய அரசியலையே அசைத்துப் பார்த்து விட்டது! மக்கள் இதனை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//dondu(#11168674346665545885) said...
எது எப்படியோ, தயாநிதி மாறனுக்கு முதலிலிருந்தே தகவல் தொடர்பு மந்திரி பதவி கொடுத்திருக்கவே கூடாது. இதை conflict of interest என்று வகைப் படுத்துவார்கள். அதை பிடித்து கொண்டு ராஜ், ஜயா இன்னும் சில சேனல்களுக்கு தொல்லைகள் தரப்பட்டன.
//

சரியாக சொன்னீர்கள்.. டோண்டு சார்...
சத்தியமான வார்த்தைகள்..

மதுசூதனன் said...

//பார்ப்புகளின் எண்ணங்களில் இருந்த பொறாமை...//

இது நல்ல காமெடி! ஹிஹிஹி