Wednesday, June 06, 2007

'ஜெ' யின் அரசியல் எதிர்காலம் ?

தினமலரில் இன்று வெளியாகியுள்ள செய்தியின் படி:

ஜெ இனி தேர்தல்களில் போட்டியிட முடியாது போக வாய்ப்புள்ளது. அது மட்டுமின்றி, இப்போது அவர் பெற்ற வெற்றியானது செல்லாது போகவும் வாய்ப்புள்ளது என்று முதல்வர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்த திடீர் பூதம் கிளம்புவதற்கு பின்னணி என்ன என்று பார்த்தால்; ஜெவிற்கு சொந்த்தமானது என்று சொல்லபடும் கொடைநாடு எஸ்டேட் வீடு விவகாரம் தான் இதற்கு காரணம் என்று தெரிகிறது. ஜெ என்னவொ தனக்கும் அந்த இடத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்று கூறி வருகிறார். ஆனால் கருணாநிதியோ அதை பொய் என்று கூறுவதோடு மட்டும் நின்று விடாமல் அந்த வீட்டிற்கு சம்பந்த பட்ட ஒரு நிறுவனத்தின் கணக்குகளில் ஜெ, சசி இருவருக்கும் தலா ஒரு கோடியே எண்பது லட்சம் ரூபாய் முதலீடூ உள்ளது என்று தகவல் கூறுகிறார்.

மேற் சொன்ன விஷயங்கள் உண்மை எனும் பட்சத்தில் தேர்தல் ஆணையம் நினைத்தால் ஜெவின் அரசியல் எதிர் காலத்தை நிச்சயம் பூஜ்ஜியமாக்க முடியும் என்றே தோன்றுகிறது. ஒரு நிலையிலிருந்து பார்த்தால் ஊழல் புரியும் அரசியல்வாதிகளுக்கு எதிராய் இது நிச்சயம் நல்லதொரு ஆரம்பம் என்றே சொல்லுவேன். இது ஜெயோடு நின்று விடாமல் இருக்கவேண்டும் என்பதே என் ஆசை. இதிலுள்ள ஒரே ஒரு பிரச்சினை என்னவெனில்; இது தொடருமானால் இந்தியாவின் அரசியல்வாதிகள் 99% பேர் இனிவரும் தேர்தல்களில் போட்டியிடும் தகுதியை இழப்பார்கள். அது மட்டுமின்றி இன்று வெற்றி பெற்று வெறியாட்டம் போடும் பலரும் இதில் அடக்கம். அதனால் இது நடப்பதை எந்த ஒரு அரசியல்வதியும் விரும்பப் போவதில்லை என்பதே உண்மை. இன்று நாம் எதிர் கட்சி காரனுக்குச் செய்தால் நாளை அவன் திருப்பிச் செய்வான் என்பது அவர்களுக்குத் தெரியாதா என்ன ? காலம் காலமாய் நடந்து வரும் ஒரு விஷயம் தானே இது.

12 comments:

dondu(#11168674346665545885) said...

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

Dont forget that the people who do all these are in charge for making he rules also.

So they cannot make rules that will put themselves in trouble. Either nothing will be done to these people or the rule will be modified....

Anonymous said...

மதுசூதனன்,

//இது தொடருமானால் இந்தியாவின் அரசியல்வாதிகள் 99% பேர் இனிவரும் தேர்தல்களில் போட்டியிடும் தகுதியை இழப்பார்கள்//

அப்படி ஒரு நிலை வந்தால் அதற்குப் பின் நம் நாட்டு அரசியல் எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

உதாரணமாக...
இப்போது தேர்தலில் போட்டியிடும் எல்லா எம்.எல்.ஏ / எம்.பி / மந்திரிகள் / முதலமைச்சர்கள் / மத்திய அமைச்சர்கள்.... இப்படி எல்லாரும் தூக்கி எறியப்பட்டு விட்டால் அடுத்து என்ன?

அந்தந்த கட்சிகளில் உள்ள மற்றவர்கள் வரட்டுமே என்று சொல்லிவிடாதீர்கள்... ஏனென்றால் அவனும் இப்படி புழுத்துப் போன ஒரு அமைப்பில் இருந்து வருவதால் அவனும் இப்படி சீர்கெட்டழிய 99% வாய்ப்பு இருக்கிறதல்லவா?

மதுசூதனன் / Madhusudhanan said...

//அந்தந்த கட்சிகளில் உள்ள மற்றவர்கள் வரட்டுமே என்று சொல்லிவிடாதீர்கள்... ஏனென்றால் அவனும் இப்படி புழுத்துப் போன ஒரு அமைப்பில் இருந்து வருவதால் அவனும் இப்படி சீர்கெட்டழிய 99% வாய்ப்பு இருக்கிறதல்லவா?//

குறைந்த பட்சம் புதியவர்கள் நிறைய வர வாய்ப்புள்ளது. அவர்கள் மக்களின் மத்தியில் தங்களின் பெயர்களை நிலை நிறுத்த கொஞ்ச காலம் பிடிக்கும். அது வரை இந்த ஊழல்கள் சற்றே குறைய வாய்ப்புள்ளதே.

Anonymous said...

1.80 கோடி பணம் இருப்பதால் அவர் தேர்தலில் போட்டியிட முடியாதா ?

அவரது தொழில்களில் அவருக்கு இந்த வருமானம் வர வாய்ப்பில்லையா என்ன ?

அப்படி பார்த்தால் வெறும் 2 லட்சம் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்டு ஊடக ஏகாதிபத்தியத்தின் மூலமாக 8000 கோடியை தொட்டு நிற்கும் நடக்க முடியாத கிழவனின் மாமன் மச்சான் பேரன் பேத்தி குடும்பம் என்ன பிச்சை எடுத்தா அதை சம்பாதித்தார்கள் ?

அந்த குடும்பத்தில் இருந்து என்ன பிச்சசக்காரனா மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சராக இரண்டு வருடம் குப்பை கொட்டினான் ?

இம்சை said...

நல்லது நடந்தா சரி. Let us wait and see what is going to happen. Tamilnadu has seen a lot of cases against the politicians in the past but did anyone has really got punishment. Let us hope atleast this time something happens.

Anonymous said...

//முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்?

அன்புடன்,
டோண்டு ராகவன் //

ஜெயலலிதா கெலிச்சு வந்து கருணாநிதி மேல கேஸ்போடுவான்னு சொல்ல வறானா இந்த பாப்பார கெழட்டு பரதேசி?

dondu(#11168674346665545885) said...

//ஜெயலலிதா கெலிச்சு வந்து கருணாநிதி மேல கேஸ்போடுவான்னு சொல்ல வறானா இந்த பாப்பார கெழட்டு பரதேசி?//
ஆமாங்கறான் இந்த 61 வயது வாலிபன்.

மேலும், நான் முதல்லே சொன்னது எல்லோருக்குமே பொருந்தும். 2001-லே கருணாநிதியை நடுராத்திரிலே அரஸ்ட் பண்ணாங்க, ஸ்டாலின் மேயர் பதவியை பறிச்சாங்க, இப்ப கருணாநிதி முறை, அவர் செய்யுறாரு. அவ்ளோதான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

Madhusuthanan,

What is your email ID?

மதுசூதனன் / Madhusudhanan said...

//What is your email ID?//

You can reach me @ puthuyugam@gmail.com

Anonymous said...

ஜெ பொய் பேசமாட்டார் என நம்புவதற்கு இன்னும் ஒரு முட்டாள்கூட்டம்
இருக்கிறது. முதலில் அவர்களது ஓட்டுப்போடும் உரிமையை ரத்துப்பண்ண வேண்டும். அதற்கு ஏதாவது வழியிருக்கா?

புள்ளிராஜா

மதுசூதனன் / Madhusudhanan said...

//ஜெ பொய் பேசமாட்டார் என நம்புவதற்கு இன்னும் ஒரு முட்டாள்கூட்டம்
இருக்கிறது. முதலில் அவர்களது ஓட்டுப்போடும் உரிமையை ரத்துப்பண்ண வேண்டும். அதற்கு ஏதாவது வழியிருக்கா?//

வாக்களிக்கும் உரிமை என்பது அடிப்படை உரிமைகளில் ஒன்று. அதில் கை வைப்பது என்பது நடக்காது. ஆனால் இப்படிச் செய்யலாம். கிரிமினல் குற்றம் நிரூபிக்கப் பட்டவர்கள், லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் ஆகியோரின் ஓட்டுரிமையை ரத்து செய்யலாம். அது மட்டுமின்றி ஊழல் புகார்கள் மற்றும் கிரிமினல் வழக்குகளில் சிக்கிய அரசியல்வாதிகள் தேர்தலில் நிற்க தடைவிதித்து அதை உறுதியுடன் பின்பற்றுதல் நல்லது.