Monday, July 09, 2007

மூக்கு கண்ணாடி :)

சிறு வயசுல பள்ளிக் கூடத்துல ஆறாங்கிளாஸ் படிக்கையில என்னோட வகுப்பில இருந்த நல்லா படிக்கிற புள்ளைங்க எல்லாரும் கண்ணாடி போட்டிருந்தாங்க. அதனாலயே நமக்கும் அதும் பேர்ல ஒரு காதல் வந்திட்டது. கண்ணாடி போட்ட நலலா படிப்பு வரும் அப்படினு எனக்கு ஒரு எண்ணம். என்ன போட்டாலும் எனக்கு படிப்பு வராதுங்கிறது அப்புறம் சில வருஷம் கழித்து புரிந்து கொண்டது வேற கதை.


வீட்ல போய் எனக்கு கண்ணாடி வாங்கித்தான்னு சொன்னா ஒண்ணும் எடுபடாதுன்னு எனக்குத் தெரியும். அதனால மெள்ள ஒரு மாஸ்டர் ப்ளான் போட்டேன். போர்டுல டீச்சர் எழுதறது எதுவும் சரியா தெரியலைனு மெல்ல மெல்ல பிட்டை போட்டு பில்டப் பண்ண ஆரமிச்சேன். அப்புறம் என் புடுங்கல் தாங்க மாட்டாம அப்பா என்னை ஒரு கண் டாக்டர் கிட்ட கூட்டிப் போனார். நமக்கு புதுசா இன்னொரு பயம வேற வந்திட்டது. ஒரு வேளை டாக்டருக்கு உண்மை தெரிஞ்சிட்டா என்னாகும் நம்ம நிலை அப்படினு ஒரு கவலை வேற. சரி இருந்தாலும் சமாளிப்போம்னு மனசுல ஒரு தைரியத்தை வரவழைச்சிகிட்டு போய் உக்காந்தேன். அங்க ஒரு நர்சம்மா என் கண்ணுல விளக்கெண்ணை மாதிரி ஒரு ஐட்டத்தைக் கொட்டிட்டு 2 மணி நேரம் கழிச்சு தான் கண்ணை டெஸ்ட் பண்ண முடியும். அதுவரை கண்ணை திறக்கக் கூடாதுனு உத்தரவு போட்டுட்டு போய்ட்டாங்க. நமக்கா உலக மகா எரிச்சல். அப்போதான் எனக்கு ஒண்ணுக்கு, ரெண்டுக்கு, பசி எல்லாம் ஒண்ணா சேர்ந்து வந்தது. ஒரு வழியா ரெண்டு மணி நேராம் போனப்புறம் டாக்டர் என்னைக் கூப்பிட்டு கண்ணை நல்ல கழுவிட்டு ஒரு போர்டில் உள்ள எழுத்துக்களை காமிச்சி படிக்கச் சொன்னார். எல்லாத்தையும் சரியா படிச்சா நம்ம குட்டு உடைஞ்சிடுமேன்னு சின்ன எழுத்தை எல்லாம் கொஞ்சம் கஷ்டப் பட்டு படிக்கிற மாதிரி என்னால முடிஞ்ச வரை ஆக்ட் குடுத்தேன். ஒரு வேளை தேவர் மகன் சிவாஜி மாதிரி நடிச்சிருந்தால் பிரச்சினை வந்திருக்காது ஆனால் அப்ப தேவர் மகன் படம் ரிலீஸ் ஆகலையே :( அதனால வியட்நாம் வீடு பிரஸ்டஜ் பத்மநாபன் ரேஞ்சில நடிச்சித் தொலைச்சிட்டேன். அந்த டாக்டர் வேற வேற கண்ணாடியை எடுத்து என் ஃப்ரேமில் சொருகி இப்ப படி இப்ப படினு என் உயிரை வாங்கினார்.

எங்க தப்பு பண்ணினேன்னு எனக்குத் தெரியலை அந்த பாழாய் போன டாக்டருக்கு சந்தேகம் வந்திருச்சி. அப்புறம் கடைசியா ஒரு முறை ஃப்ரேமில் வேறு எதோ ஒரு கண்ணாடியை போட்டு இப்ப படினு சொன்னபோது ரொம்ப அற்புதமா எல்லாத்தையும் படிச்சித் தொலைச்சிட்டேன். அப்புறமாத்தான் ஃபிரேமில் விரலை விட்டுப் பார்த்தால் அதில் கண்ணாடியே இல்லை ! ஆகா கவுத்துட்டாங்களே அப்படினு நினைச்சிகிட்டே எங்கப்பாவை பார்த்தா அவரும் பழைய ஈஸ்ட்மென் கலர் தமிழ் படத்தில் எம்ஜியாரை முறைக்கிற நம்பியார் போல என்னை முறைச்சுப் பார்த்துகிட்டிருந்தார். சரிடி இன்னிக்கு உனக்கு டின்னுதான் போ அப்படினு நினைச்சிகிட்டே விட்டுக்குப் போய்..... ஹ்ம்ம் அந்தக் கதையெல்லாம் இங்கன சொன்னா மிச்சமிருக்கிற மானமும் போய்டும் மக்கா.

6 comments:

சிநேகிதன்.. said...

\\அப்புறம் கடைசியா ஒரு முறை ஃப்ரேமில் வேறு எதோ ஒரு கண்ணாடியை போட்டு இப்ப படினு சொன்னபோது ரொம்ப அற்புதமா எல்லாத்தையும் படிச்சித் தொலைச்சிட்டேன். அப்புறமாத்தான் ஃபிரேமில் விரலை விட்டுப் பார்த்தால் அதில் கண்ணாடியே இல்லை ! \\
என்ன கொடுமை சார்.. சரியான காமெடி!!

வடுவூர் குமார் said...

நல்லா இருக்கு,உங்க சின்ன வயது நடிப்பு.

மதுசூதனன் / Madhusudhanan said...

//நல்லா இருக்கு,உங்க சின்ன வயது நடிப்பு.//

வாங்க குமார். என்ன ரொம்ப நாளா உங்களை காணும்? நீங்க என்னோட இன்னொரு பதிவுல (தமிழ் வாருப்புரு சம்பந்தபட்டது)கேட்ட கேள்விக்கு நான் இன்னும் பதில் சொல்லலை. உங்க மின்னஞ்சலை ஒரு பின்னூட்டத்தில் குடுங்கள். அதை பிரசுரிக்காது நாம் அது வழியே பேசலாம்.

dondu(#11168674346665545885) said...

ஐயோ பாவம் எம்ஜியார். ஆமாம், அது என்ன தேவர் மகன் சிவாஜியின் மேற்கோள்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

மதுசூதனன் / Madhusudhanan said...

//அது என்ன தேவர் மகன் சிவாஜியின் மேற்கோள்?//

ஒரு சின்ன தட்டச்சு பிழை. சீர் செய்தாயிற்று. இன்னொரு முறை பார்க்கவும் ராகவன் அவர்களே.

Anonymous said...

http://mkannadi.blogspot.com/2005_07_01_archive.html
similar article written long back...