Friday, September 28, 2007

ரொம்ப நாளைக்கு அப்புறம்...

அதைச் சொல்லி, இதைச் சொல்லி மாசம் தள்ளி வருஷம் தள்ளி கடைசியா இனிமே சொல்ல புது பொய் கிடைக்காததால நானும் கல்யாணம் பண்ணிக் கிட்டேன். அது என்னவொ தெரியலை என்ன மாயமோ தெரியலை சொல்லி வெச்சா மாதிரி கல்யாணம் பண்ணிக்க லீவு கேக்க போகும்போது ஹனிமூனுக்கு தனியா ஒரு வாரம் சிகாகோ போய்ட்டுவாடான்னு டிக்கெட் குடுத்தார் என் பாஸ்.

சரி அதோட நம்ம கதை முடிஞ்சதுடா சாமினு நினைச்சிகிட்டே கல்யாணம் பண்ணினேன். போடி போ கல்யாணத்துக்கு முன்னாடியே உனக்கு டைவர்ஸ் ஆகப்போவுதுனு பல பேர் வாழ்த்தி வழியனுப்பினாங்க. ஆனா கடைசில பேபி என்னடான்னா மணாளனே மங்கையின் பாக்கியம் அஞ்சலிதேவி மாதிரி, வேலைன்னா அப்படித்தான் இருக்கும். கொஞ்ச நாள் தான போய்ட்டு சீக்கிரம் வந்திடுங்கனு அனுப்பி வெச்சிட்டா. நம்மளும் சரி "நோ தங்கமணி எஞ்சாய்.... நோ பேபி எஞ்சாய்னு சொல்லிகிட்டே கிளம்பினேன்" ஹைதராபாத்திலிருந்து மும்பை வந்த எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி. என்னோட மாமியார் தயவில் என் தரை டிக்கெட் பென்ச்சி டிக்கெட்டாக மாறி இருந்தது. (எகனாமி எக்ஸிகியூட்டிவ் கிளாசாய் மாறியதைத் தானுங்க சொன்னேன்). என் மாமியார் ஏர் இண்டியாவில் துணை மேலாளர். அதனால அவங்க புண்ணியத்துல இது நடந்தது. இப்ப வரை ஹேண்ட் பேக்கேஜில் எக்ஸிக்யூட்டிவ் கிளாஸ்னு போட்ட டேகை இன்னும் கழட்டலைல... :-D

போதாத குறைக்கு கையில ஒரு பையைக் குடுத்து வுட்டாக. என்னடான்னு பார்த்தா எல்லாம் திங்கிற சமாச்சாரம். அதை அமெரிக்கா கஸ்டம்ஸைத் தாண்டி கொண்டாரத்துக்குள்ள எனக்கு நாக்கு தள்ளிப் போச்சு. ஆசையா மேத்தி ரொட்டி (வெந்திய கீரை போட்ட ரொட்டி) செஞ்சு குடுத்திருந்தாங்க என் மாமியார். கஸ்டம்ஸ்ல மேத்திக்கு இங்கிலீஷ்ல என்னான்னு என்னை ஒரு கேள்வி கேட்டான் பாருங்க........ சரி கதை முடிஞ்சுபோச்சுடா மகனேன்னு நினைச்சேன். அப்புறம் அது ஸ்பினாச் மாதிரி ஒரு கீரைனு எனக்கு தெரிஞ்ச இங்கிலீஷ்ல புளுத்திட்டு வெளில வர்ரதுக்குள்ள போதும்டா சாமினு ஆயிடிச்சி.

நம்மளை ஒரு காலேஜுல வேலை பாக்கச் சொல்லி அனுப்பினாங்க ஆபீஸ்ல. அடப்பாவமே அந்தக் காலேஜ் என்ன கஷ்டப் படப் போகுதோன்னு நானும் இங்க வந்தேன். வந்தப்புறம் பாத்தா.... இந்த ஊர்ல அந்த பாழாய் போன காலேஜை தவிர வேற ஒரு புண்ணாக்கும் இல்லை. அட சும்மானாச்சியும் நம்ம ஆயுத எழுத்து சித்தார்த் மாதிரி (ஒண்டியாத் தாங்க) பஸ்ல ஏறி இந்தக் கடைசிக்கும் அந்தக் கடைசிக்கும் சுத்தலாம்னு பாத்தா இந்த ஊர்ல பஸ் கூட கிடையாதாம். நம்ம ஊர் வீராணம் ஏரி மாதிரி (ஆனா இதுல நிறைய தண்ணி இருக்கு) இங்கன ஒரு ஏரி இருக்கு. அதை ஒரு ரவுண்டு வந்தேன். அதுக்கு பேரு கேட்டீங்கன்னா செம காமெடியா இருக்கும். ஓக்கொபோஜி னு பேர். (நான் தான் அப்பவே சொன்னேல)இதுல இன்ரெஸ்டிங்க் விசயம் என்னான்னா இந்த ஏரி x-files கதைல ஒரு எபிசோட்ல வரும். சரி அதையாச்சியும் பார்த்தோமேன்னு மனசை தேத்திகிட்டு இங்கேர்ந்து கெளம்பப் இருந்தேன். இன்னையோட இந்த காலேஜ் வேலை முடியப்போது, நாளைக்கு திரும்பவும் கெளம்பி சிகாகோ போரேன். அங்கேர்ந்து அடுத்த பஸ்ஸை பிடிச்சு ஜூப்ளி ஹில்ஸ் செக்போஸ்டுல எறங்கி வீட்டுக்குப் போலாம்னு பார்த்தா இன்னைக்கு வந்து நியு ஜெர்சிக்குப் போடான்னு இன்னொரு டிக்கெட்டைத் தாராங்க. இந்தக் கார்ல ஜிபிஸ் வேற இல்லை.... பாடிகாட் முனீஸ்வரா என்னை ஒழுங்கா திரும்ப டேவன்போர்டுல கொண்டுபோய் சேர்த்துடுப்பான்னு வேண்டிகிட்டே வண்டிய ஸ்டார்ட் பண்றேன்....

11 comments:

மாசிலா said...

வணக்கம் மதுசூதனன்,

சரியான அலைச்சல் பிழைப்புதான் போலிருக்கிறது.

பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

மதுசூதனன் / Madhusudhanan said...

என்னங்க பண்றது. நாய் வேஷம் போட்டாச்சு. குறைக்காம இருந்தா கல்லடி விழுமே.....

மாசிலா said...

//நாய் வேஷம் போட்டாச்சு. குறைக்காம இருந்தா கல்லடி விழுமே.....//

உங்கள் உணர்வுகளை நன்றாகவே புரிந்து கொள்ள முடிகிறது.

பெற்றோர்கள் மற்றும் நம்மை சுற்றி இருக்கும் சமூகத்தை திருப்தி படுத்த பல சமயங்களில் நமது துன்பங்களை மறைத்து வெளி வேசத்திற்கு மகிழ்ச்சியாக இருப்பது போல் நடித்து நம்மையே நாம் ஏமாற்றிக்கொண்டு பொய் வாழ்க்கை வாழ்ந்து வருவது கடைசியாக மன உளைச்சலில்தான் போய் முடியும். தாய் நாடு, மண், சமூகம், கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம் அனைத்தையும் தூக்கி பரணில் செருகி விட்டு அந்நியனாக காலந்தள்ள உந்தப்படுகிறோம்.

கடினமான வாழ்க்கை! ஆனால் கடைசி வாழ்க்கை அல்ல. வேறு மாதிரியான எளிய உயர்ந்த வாழ்க்கைகளும் உண்டென்பதில் நம்பிக்கை இழக்க கூடாது.

ILA(a)இளா said...

முதல்ல வாழ்த்துக்களை புடிங்க! நல்ல வேகமா போவுதே இந்தப் பதிவு..?

Anonymous said...

Methi - Fenugreek
Lot of westerners know that. Nice post.

Nakkiran said...

ENJOYYYYYYYYYYYYYY :)

மதுசூதனன் / Madhusudhanan said...

//Methi - Fenugreek//

அந்த சமயத்துக்கு நியாபகம் வரலியே.... அதான பிரச்சினை.

மதுசூதனன் / Madhusudhanan said...

//கடினமான வாழ்க்கை! ஆனால் கடைசி வாழ்க்கை அல்ல. வேறு மாதிரியான எளிய உயர்ந்த வாழ்க்கைகளும் உண்டென்பதில் நம்பிக்கை இழக்க கூடாது.//

நிச்சயமாய் மனதார இசைந்துதான் இந்த வாழ்க்கையில் நுழைந்துள்ளேன் தோழரே. அதனால பிரச்சினை இல்லை.

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

மது திரும்பி வந்தாச்சா..? வரணும்.. வரணும்.. புது மாப்பிள்ளையானதுக்கு எனது வாழ்த்துக்கள்..

//என்னங்க பண்றது. நாய் வேஷம் போட்டாச்சு. குறைக்காம இருந்தா கல்லடி விழுமே.....//

மது இதுவா நாய் வேஷம்..? இந்த வாய்ப்பு கிடைக்கலையேன்னு எத்தனை பேர் ஏங்கிட்டிருக்காங்க தெரியுமா..? ம்.. என்னத்த சொல்றது..?

மதுசூதனன் / Madhusudhanan said...

//மது இதுவா நாய் வேஷம்..? இந்த வாய்ப்பு கிடைக்கலையேன்னு எத்தனை பேர் ஏங்கிட்டிருக்காங்க தெரியுமா..? ம்.. என்னத்த சொல்றது..?//

நெசமாவா சொல்றீங்க ?!? என்னால நம்பவே முடியல போங்க. ஆமா உங்களுக்கு கல்யாணமாயிடிச்சா ;) ?

Madan said...

//நெசமாவா சொல்றீங்க ?!? என்னால நம்பவே முடியல போங்க. ஆமா உங்களுக்கு கல்யாணமாயிடிச்சா ;) ?///

Madhu, Excellent work, padikka nalla irruku. Kalyanamaki konja naal than akuthu, so you shouldn't be worrying. Enjoy the life.

"Don't cross your bridges before you get to them"