Monday, October 22, 2007

உம்மாச்சி கண்ணைக் குத்திடும்...


நம்ம தமிழ்நாடு அரசுக்கும் அரசால் நடத்தப்படும் பல்வேறு நிறுவனங்களுக்கும் நேரம் சரி இல்லைன்னு தான் சொல்லணும். இல்லைன்னா இப்படி சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுப்பாங்களா :) ?

சமீபத்துல மதுரை காமராஜ் பல்கலையின் தொலை தூர கல்வியகம் வெளியிட்ட ஒரு பாடப் புத்தகத்தில் ராமாயணம், பாரதம், ராமர், கிருஷ்ணர், வினாயகர் எல்லாரும் உடான்ஸ் மக்கள்னு சொல்ற மாதிரி கருத்து சொல்லி இருக்காம். நல்லா பாடம் நடத்துறாய்ங்கப்பா. சும்மா சொல்லக் கூடாது. நம்ம பல்கலையோட முயற்சியை பாராட்ட ஒரு வாய் போதாது. பயலுகளுக்க்கு சாமி கதை எல்லாம் சொன்னா தான பிரச்சினை அதேல்லாம் சும்மனாங்காட்டியும்...... லுலலுலாய்க்காக சொன்னது அப்படினு சின்னதுலேர்ந்து சொல்லிக் குடுத்து வளர்த்துட்டா இன்னைக்கு இருக்கிற பல பிரச்சினைகள் இருக்காது பாரு. இவங்க பேசாம ஒண்ணு பண்ணி இருக்கலாம் இந்த பாடத்தை எல்லாம் பல்கலை லெவெலில் ஆரமிக்காம பால்வாடி லெவெலில் ஆரமிச்சா இன்னும் நல்லா இருக்கும்னு நெனைக்கிறேன்.

எல்லாரும் பார்த்துப் பேசுங்கப்பா இல்லைன்னா "உம்மாச்சி கண்ணைக் குத்திடும்..."

நான் மேல சொன்ன விஷயம் வெளியானது இன்னைய தினமலரில்.


11 comments:

வடுவூர் குமார் said...

ஏங்க! இதுக்கு பயந்தா இவ்வளவு நாள் இந்த பக்கம் வரலை?? :-))

Anonymous said...

பால்வாடி பசங்களுக்கு பாப்பான் கண்ணை குத்துர விச யம் புரியாது மதுசார். அதான் பல்கலை லெவலில்.
:-)

வாயைக் கொடுத்து...

மதுசூதனன் / Madhusudhanan said...

//ஏங்க! இதுக்கு பயந்தா இவ்வளவு நாள் இந்த பக்கம் வரலை?? //

நீங்க எதைச் சொல்றீங்க குமார்?

மதுசூதனன் / Madhusudhanan said...

//பால்வாடி பசங்களுக்கு பாப்பான் கண்ணை குத்துர விச யம் புரியாது மதுசார். அதான் பல்கலை லெவலில்.//

பேசலாம்ங்கிறதுக்காக எதை வேணும்னாலும்........ :)) அப்படி எந்த பிராமணன் உங்க கண்ணைக் குத்தினான் அனானி?

ஜெயம் said...

ஏனுங்க மது நீங்க சொல்லுறதப்பாத்தா ஊசி எடுத்து கண்ணை குத்தினால் தான் என்று இல்லை வள்ளுவர் என்ன கூறுகிறார் கற்றொர் எல்லாம் கண்ணுடையார் கல்லாதோர் முகத்திலிரண்டு புன் உடையோர் என்கிறார் கற்றல் என்பது தெளிவு பெருவது சிந்திப்பது
அடுத்து இதைப்பாருங்க யார் யார்வாய் எப்பொருள் கேட்ப்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.
ஒருவனை அறிவுபெறாமல் அவனை தெளிவடையவிடாமல் தடுப்பதே கண்ணை குத்துவது தானே. நமது நாட்டில் குழந்தைகள் சிந்திக்கும் திறன் அன்றி இருப்பதற்க்கும் பழைய கல்வி முறையே காரணம் அவர்களை சிந்திக்க விடாமல் பாழாக்கும் மொழிப்பாடங்கள். ராமாயனம்,மகாபாரதம், சீதாயனம் என்று தமிழ் புத்தகத்தில் கொடுத்துவிட்டு அடுத்த வகுப்புக்குவரும் புவியியல் ஆசிரியார் நடத்தும் பூகோளப்பாடமும் வரலாற்றுப்பாடமும்,மற்றும் அறிவியல் பாடமும் ஒன்றுக்கொன்று முரன்பட்டு இருக்க்கிறது. இதனாலேயே புரிந்து படிக்கவேண்டிய மானவர்கள் புரியாமலே மனதில் உருஏற்றவைக்கப்படுகிறார்கள் பின் எப்படி சிந்திக்கும் திறன் வளரும். இன்று தனியார் பள்ளிகளில் அபாகஸ் கற்றுக்கொடுத்தாலும் ஒன்றும் பயனளிக்காது அது கணிதத்தை தவிர வேறு எந்த்த அறிவையும் வளர்க்காது.

இவன்

http://sinthikkatherinthamanithan.blogspot.com

மதுசூதனன் / Madhusudhanan said...

//நாட்டில் குழந்தைகள் சிந்திக்கும் திறன் அன்றி இருப்பதற்க்கும் பழைய கல்வி முறையே காரணம்//

கல்வி முறைக்கும் இன்றைய பிராமணனுக்கும் என்னங்க சம்பந்தம்? எதுக்காக மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு?

காசில்லாதவன் படிக்க முடியலை. அது தான் இன்னைய நிலை. அதை விட்டு நீங்க ராமாயணம் சொல்லிக் குடுத்தீங்க அதனால தான் எனக்கு அறிவு வளரலைங்கிறது சுத்த பேத்தல்.

//அவர்களை சிந்திக்க விடாமல் பாழாக்கும் மொழிப்பாடங்கள். ராமாயனம்,மகாபாரதம், சீதாயனம் என்று தமிழ் புத்தகத்தில் கொடுத்துவிட்டு அடுத்த வகுப்புக்குவரும் புவியியல் ஆசிரியார் நடத்தும் பூகோளப்பாடமும் வரலாற்றுப்பாடமும்,மற்றும் அறிவியல் பாடமும் ஒன்றுக்கொன்று முரன்பட்டு இருக்க்கிறது.//

ராமயணத்துக்கும் புவி இயலுக்கும் (geography) முரண்பாடு இருக்கிறதா நீங்க சொல்றது எனக்குப் புரியலை. இல்லை நீங்க இந்த புவி ஈர்ப்பு விசை பத்தி ஏதாவது சொல்ல வறீங்களா?

dondu(#11168674346665545885) said...

மதுரைப் பல்கலைக் கழகம் செய்வது துரதிர்ஷ்டவசமானது. வேறு என்ன சொல்ல?

அன்புடன்,
டோண்டு ராகவன்

ஜெயம் said...

ஆம் கண்டிப்பாக சம்பந்தம் உள்ளது ராமாயணம் நடந்ததாக் சொல்லப்படும் ஆண்டுக்கும் பூமி உண்டானதாக அறிவியலார்கூறும் ஆண்டுகளுக்கும் ராமாயணத்தில் மலையை பெயர்த்து ஹனுமன் தன் கையில் எடுத்துச்சென்றதாக கூறப்படுகிறதே அது புவியியலுக்கு சம்பந்தம் இல்லை மலை என்ன ராமன் வீட்டு பூஜை அறையிலா இருந்தது பெயர்த்தால் அப்படியே வருவதர்க்கௌ அது என்ன உருளைக்கிழங்கா?. அப்போதே ராவணன் புஷ்ப்பவிமானத்தில் வந்து சீதையை கடத்தியதாக கூறப்படுகிறதே அப்படியாணால் 4 லட்ச்சம் ஆண்டுகளுக்கு முன் விமானம் கண்டுபிடித்தானே அந்த டெக்னாலஜி எங்கே தொலைந்து போயிற்று அடுத்து வந்தவனெல்லாம் அதை பயன் படுத்தவில்லை அப்படியான முட்டாள்கள் ஆனார்கள் ராவணன் புஷ்ப்ப விமானத்தில் வரும்போது ராமன் மட்டும் கடலிலேகல்லைபோட்டுபோக அறிவும் ஆற்றலும் குறைந்தவனா.

மதுசூதனன் / Madhusudhanan said...

//ஆம் கண்டிப்பாக சம்பந்தம் உள்ளது ராமாயணம் நடந்ததாக் சொல்லப்படும் ஆண்டுக்கும் பூமி உண்டானதாக அறிவியலார்கூறும் ஆண்டுகளுக்கும் ராமாயணத்தில்....//

உங்களுக்கு நிறைய சொல்ல வேண்டும் என ஆசை. ஆனால் இப்போது நேரமில்லை என்பதால் இதோ ஒரு சிறிய சுட்டி மட்டும் தருகிறேன். படித்துப் பாருங்களேன் :)

விமான சாஸ்திரம்

இது பற்றி மேலும் சில விவரங்களை சிறியதாய் இருப்பின் ஒரு பின்னூட்டமாகவோ அல்லது ஒரு தனி பதிவாகவோ வரும் வாரத்தில் எழுத முயற்சிக்கிறேன்.

ஜெயம் said...

நீங்கள் கொடுத்த சுட்டி மிகவும் பயனுள்ளதாக் இருந்தது நன்றி ஆனால் இதில் குறிப்பிட்டது ராமன் வாழ்ந்ததாக கூறப்படும் காலத்தில் அறிவியல் முன்னேற்றம் பெற்ற நிலையில் இருந்திருக்கிறது அதை ஏன் அப்படியே மாற்றிவிட்டார்கள் நீங்கள் கூறுவது கருனானிதிக்கும் எம்.ஜி.ஆர் க்கும் கோயில்கட்டி கும்பிடுங்கள் பின்னர் இவர் பரம்பரையில் வருவோருக்கெல்லாம் முன்னுரிமை கொடுங்கள் மற்றவரெல்லாம் அவர்களுக்கு அடிமையாய் இருங்கள் என்று கூறுவது போல் உள்ளது ஒரு விஷயத்தை ஒருவன் மற்றொருவனிடத்தில் க்கூறும்போது அவன் அடுத்தவனித்தில் அவனுக்கு சாதகமாக சற்று சேர்த்துகூறுவதே மனித இயல்பு இப்படிதான் இத்தனி நாட்க்களில் இப்படி மாரி வந்திருக்கிறது நான் விமான கட்டுறைகள் எப்படி உள்ளதோ அப்படி ராமாயன்மும் மகாபாரதமும் இப்போது நடைமுறையில் இருந்தால் அனைவருக்கும் தெலிவுபிறக்குமே இதற்க்காக பல்பு கண்டுபிடித்த எடிசனுக்கு கோவில்கட்டமுடியும்மா அவனைதான் கடவுளாக்க ஒப்புக்கொள்வீர்களா

மதுசூதனன் / Madhusudhanan said...

//நீங்கள் கொடுத்த சுட்டி மிகவும் பயனுள்ளதாக் இருந்தது நன்றி ஆனால் இதில் குறிப்பிட்டது ராமன் வாழ்ந்ததாக கூறப்படும் காலத்தில் அறிவியல் முன்னேற்றம் பெற்ற நிலையில்....//

தொடர்ந்து கருத்தாடுவதற்கு நன்றி ஜெயம் அவர்களே. அவசரமாய் நியுயார்க் செல்ல வேண்டிய கட்டாயம். அதனால் வேறு நிறைய வேலைகள். கொஞ்சம் நேரம் கொடுங்கள் என் கருத்தினை தெளிவு படுத்துகிறேன்.