Monday, October 29, 2007

யாராவது பதில் சொல்லுங்களேன்....ப்ளீஸ்

என்ன பண்றதுனு தெரியாம எதையாவது பண்ணிட்டு அப்புறம் அதையே யோசிச்சு குழப்பமாகறதுல உலகத்துலையே எனக்குத் தான் முதல் இடம்னு நினைக்கிறேன். இப்ப இங்க பேசப் போற விஷயம் என்னவோ ஒண்ணும் ரொம்ப புதுசில்லை. ஆனா இதை வெச்சு சினிமா எடுக்குற அளவுக்கு இந்த விஷயம் பூதாகரமாப் போனதை நினைச்சுதான் இங்க இதை எழுதறேன்.

இன்னைக்கு காலைல ஒரு நாலு மணிக்கு தூக்கம் வராம காதை குடையும்போது, நேத்து டவுன்லோட் பண்ணிவெச்ச ஒரு படம் கண்ணுல பட்டது. "கற்றது தமிழ்" அப்படிங்கிறது தான் படத்தோட பேர். ஜீவா நடிச்சு ராம் இயக்கிய அந்தப் படத்தை பார்த்ததுலேர்ந்து குழப்பம் ஜாஸ்தியானதுதான் மிச்சம். அந்தப் படத்துல கடைசில என்னடான்னா பொட்டி (நம்ம கம்ப்யூட்டர் தாங்க)தட்றவனால விலை வாசி எல்லாம் அதிகமா போச்சு, அதனால ரொம்ப பெரிய பிரச்சினை எல்லாம் வருது. சட்டம் ஒழுங்கு கெட்டுப் போக நிறைய வாய்ப்பிருக்கு இப்படி பல குற்றச்சாட்டுகளை அடுக்கறாங்க. விலைவாசி ஏற்றத்துக்கு காரணம் ஒரு குறிப்பிட்ட தொழில்துறையோட முன்னேற்றம்தான் என்பதை என்னால் ஏனோ ஏற்க முடியவில்லை. அந்தப் படத்தைப் பார்த்தவங்க யாராவது இருந்தாலோ அல்லது நான் சொல்லும் கருத்தினைப் பற்றி விவாதிக்க விரும்பினாலோ உங்க பின்னூட்டத்துல கருத்தாடலாம். எனக்கு இதுக்கு பதில் தெரிஞ்சே ஆகணும். யாராவது பதில் சொல்லுங்களேன்.... ப்ளீஸ்.

5 comments:

dondu(#11168674346665545885) said...

ஏதாவது ஒரு துறையில் திடீரென பெரிய முன்னேற்றம் வந்து அதில் வேலை செய்பபர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டால் அதில் வேலை செய்பவர்களை அதிக சம்பளம் கொடுத்துத்தான் அமர்த்துவார்கள். உதாரணத்துக்கு அமெரிக்காவில் வீட்டு வேலைகள் செய்ய ஆள் கிடைப்பது குதிரைக் கொம்பே. ஆகவே அவ்வாறு வேலைக்கு வருபவர்களுக்கு அதிக சம்பளம். அதே போல ப்ளம்பர்களுக்கு நல்ல கிராக்கி. அவர்கள் வருவாய் பல சமயங்களில் கல்லூரி பேராசிரியரின் சம்பளத்தையும் மிஞ்சி விடும். இது பற்றி பாதி நகைச்சுவையாகவும் பாதி வயிற்றெரிச்சலாகவும் அங்கு பலர் எழுதி விட்டனர்.

இப்போது இங்கே பொட்டி தட்டும் வேலைக்கு வருவோம். நமது மதிப்பு நமக்கு தெரியவில்லை என்பதே நிஜம். நமக்கு இயற்கையாகவே லாஜிக்கில் திறமை உண்டு. அத்துடன் ஆங்கில அறிவையும் சேர்த்து கொள்ளுங்கள். ஆகவேதான் அவுட்சோர்சிங்கிற்கு இந்தியாவை தேர்ந்தெடுக்கின்றனர். நல்ல சம்பளம் தரவும் தயாராக உள்ளனர். வெளிநாட்டு கம்பெனிகளில் உள்ள ரொட்டீன் வேலைகளுக்கெல்லம் அவுட்சோர்சிங் வந்து கொண்டிருப்பதால் இப்போதைக்கு இந்த நிலை அப்படியே இருக்கும் வாய்ப்பு உண்டு.

ஆக சம்பளம் கூடக்கூட வசதிகளை பெருக்கி கொள்கின்றனர். அதற்கான விலையையும் தரத் தயாராக உள்ளதால் பல சேவைகளின் விலைவாசிகள் கூடுகின்றன என்பது ஓரளவுக்கு உண்மையே. அதற்கு என்ன செய்ய முடியும்?

இது பற்றி தனிப்பதிவு போடும் எண்ணம் வருகிறது. அங்கு இன்னும் விரிவாக எழுதுகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வடுவூர் குமார் said...

இன்னும் படம் பார்க்கவில்லை.நீங்கள் சொல்லியுள்ள மாதிரி பாதிப்பு இருக்க மதிப்பீடு உண்டு என்றால் அதை வைத்து விவாதம் நடத்தமுடியும்.
மேம்போக்காக பார்த்தால் நிஜம் என்றே தோன்றுகிறது.

மதுசூதனன் / Madhusudhanan said...

அதுமட்டுமில்லாம, இந்த மாதிரி முன்னேறிய துரைகளில் இல்லாதவர்கள் பலர் வன்முறையாளர்களாய் மாறிவிடுவதாகவும் சித்தரிக்கிறது அந்தப் படம். இது இப்படியே போனால் இதன் விளைவு என்னவாக இருக்கும் ? இது ஆரோக்கியமான ஒன்றா ?

Anonymous said...

திருட்டுத்தனமா படம் டவுன்லோட் செய்து பாக்குறதே சட்டப்படி குற்றம். அப்படி செய்துவிட்டு நீர் தமிழை ஆதரிக்கும் படத்தை திட்டுகிறீரே அய்யா?

மதுசூதனன் / Madhusudhanan said...

//திருட்டுத்தனமா படம் டவுன்லோட் செய்து பாக்குறதே சட்டப்படி குற்றம். அப்படி செய்துவிட்டு நீர் தமிழை ஆதரிக்கும் படத்தை திட்டுகிறீரே அய்யா?//

ஒத்துக்கறேன். ஒரு வேளை பக்கது தெருவிலயோ இல்லை பக்கத்து ஊர்லயோ படம் ஓடும்போது அதை திருட்டுத்தனமா பாத்தா அது தப்பு. இந்த ஊர்ல தமிழ்படத்தை திரையில் பார்க்க வாய்பே இல்லை. அப்படி இருக்க நாங்க என்ன செய்ய சொல்லுங்க? பக்கத்து தியேட்டர்ல படம் ஓடும்போதே குடும்பத்தோட திருட்டு சிடி பார்க்கிறவனை எல்லாம் விட்ருங்க. வேற வழியே இல்லாம இங்க உக்காந்து பார்க்குறவனை குத்தம் சொல்லுங்க.

ரெண்டாவது விஷயம். நான் தமிழை எதிர்க்கலை. தமிழை எதிர்ப்பதுதான் என் எண்ணம்னா.... இங்க வந்து தமிழ்ல ஏன் வலைப்பூ கத்திரிக்காய் எல்லாம் வெக்கணும். எழுதினது புரியலைன்னா கேட்டு தெரிஞ்சிக்கோங்க. அதை விட்டு....... என்னவோ போங்க.