Tuesday, December 04, 2007

விடுதலையடைந்து விட்டதா இந்தியா ?

நம்மைச் சுற்றி நடக்கும் பல்வேறு நிகழ்வுகளை வைத்துப் பார்க்கையில் நம் இந்தியா விடுதலையடைந்து விட்டது என்று பலரால் துளியும் நம்ப முடியவில்லை. அப்படி என்னைய்யா கெட்டுவிட்டது இந்தியாவில் ? நீ இப்படி உன் இஷ்டத்துக்கு எழுதித் தள்ளுவதே பெரிய சுதந்திரம் இல்லையா என்று கேள்வி கேட்ப்பவர்கள் மேற்கொண்டு படிக்கவும். படித்துவிட்டு உங்கள் கருத்தினை பின்னூட்டமிடவும்.


ஆங்கிலேயர்களை என்னவோ விரட்டியாயிற்று ஆனாலும் சுதந்திரம் வந்துவிட்டதாய் தெரியவில்லை. இன்னமும் நாம் பலதரப்பட்ட அடிமை விலங்குகளால் கட்டுண்டுதான் இருக்கிறோம். அதற்கு சில உதாரணங்களை தரும் முயற்சிதான் இப்பதிவு.

மதம்

எல்லா விலங்குகளிலும் மிகவும் ஆபத்தானதும் மிகவும் போதையைத் தருவதுமான விலங்கு மதம் தான் என்றால் மிகையாகாது. சிறந்த ஒரு உதாரணம் - தம்மம்பட்டியில் இந்து முஸ்லிம் இடையேஎ ஏற்பட்ட பதட்டம். சரி மக்களில் சிலர் மதத்தின் பெயரால் இலாபம் தேடுகின்றனர் என்றால் அவருள் மிக முக்கியமானவர் நம் அரசியல்வாதிகள். இந்தப் பதட்டம் எதனால் ஏற்பட்டது, அதற்கு காரணம் யார், இந்த நிகழ்வு குறித்து எந்த அரசியல் தலைவர்கள் என்ன கருத்து சொன்னார்கள் என்பதெல்லாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. முது பெரும் அரசியல்வாதி சொன்ன ஒரு கருத்து - "மசூதி முன்பு மேளம் போன்ற வாத்தியங்களை வாசிப்பது மரபுக்கு விரோதம்". இப்போது இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் என இரு பிரிவினரின் மரபினை கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. ஒரு மதத்தின் மரபானது இன்னொரு மதத்திற்கு எதிராய் அமைகையில் என்ன செய்வது என்ற ஒரு தொலை நோக்கு இல்லாமல் ஓட்டு வாங்குவதற்காக மட்டும் ஏதாவது பேசுவ்தை பலர் இன்றளவும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இந்த மதம் குறித்த பிரச்சினைக்கு இன்னொரு உதாரணம் - பாபர் மசூதி இடிப்பு. புதுசாய் சொல்ல இதில் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. இந்த விஷயத்தில் என் கருத்து - "ராமர் கோயில் கட்டுகிறேன் என்று சொல்லிக்கொண்டு ஒரு மசூதியை இந்த வித்ததில் இடிப்பது நிச்சயம் சரியான ஒரு செயல் அல்ல. இதை சற்றே விவேகமாய் கையாண்டிருக்க வேண்டும்" வாழ்க நம் அரசியல் தலைவர்கள். ஏதோ அவர்களால் முடிந்தது.

லஞ்சம்

மதத்திற்கு அடுத்ததாய் லஞ்சத்தினை தவிற வேறு எதையும் அதிக பாதிப்புள்ளதாய் என்னால் வேறு எதையும் நினைக்கமுடியவில்லை. அதற்கு சில உதாரணங்கள்:

1. அரசு வேலை வாய்புக்கள்
2. இடமாற்ற உத்தரவுகள்
3. பத்திரப் பதிவு / வட்டார போக்குவரத்து அலுவலகங்கள்
4. கல்லூரிகள் / பள்ளிகளில் நன்கொடை எனும் பெயரில் நடக்கும் வசூல்
5. காவல் துறை
6. பொதுப்பணித் துறை

இப்படி நாட்டில் உள்ள அனைத்து துறைகளையும் அடுக்கிக் கொண்டே பொகலாம். நம் நட்டின் அரசு சாலைகள் மற்றும் பொதுப்பணித் துறை கட்டுமானங்களை எவ்வாறு கையாள்கிறது என்பதற்கு ஒரு சிறு உதாரணம்:

உலகின் மிக உயர்ந்த கட்டிடங்களில் ஒன்று நியு யார்க் நகரில் உள்ள எம்பையர் ஸ்டேட் கட்டிடம். இந்தக் கட்டிடத்தை சுமார் 3600 தொழிலாளர்கள் 13 மாதங்களில் கட்டி முடிக்கப் பட்டது. நம் சென்னை கத்திபாரா சந்திப்பில் கட்டப் பட்டு வரும் பாலம் எவ்வளவு காலமாய் நடைபெருகிறது என்பது எல்லோருக்கும் தெரிந்ததே.

அரசியல் ஒழுங்கு

எந்தக் கட்சியும் யாருடனும் எப்படி வேண்டுமானாலும் கூட்டு வைத்துக் கொள்ளலாம். கட்சிகள் வருமானக் கணக்குகள் வைத்திருக்கத் தேவையில்லை. முடிந்த வரை எல்லா வழிகளிலும் சட்டத்தினை மீறுகின்றனர். அடிக்கடி போராட்டம் எனும் பெயரில் வன்முறை தன்னை தூண்டுகின்றனர். மதச் சண்டை மற்றும் சாதிச் சண்டைகள் ஆகியவற்றை முடிந்தவரை தங்கள் சுய லாபத்திற்காக பயன்படுத்திக் கொள்கின்றனர். இவர்களைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் எத்தனை பதிவு எழுதினாலும் போதாது.

ஊடகங்கள்

ஒரு நாட்டின் வளர்ச்சியில் மிக முக்கிய பங்கு வகிப்பது ஊடகம். ஆனால் நம் நாட்டில் பெரும்பாலான ஊடகங்கள் மத அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் கைகளில் உள்ளது. கட்சிக்கு ஒரு கொள்கை இருக்கிறதோ இல்லையோ அவசியம் ஒரு டிவி சானல் இருக்கிறது. என்னதை சொல்ல ?


நம்முடைய இந்தக்கால அரசியல்வாதிகளை விட வெள்ளையர்கள் கால ஆட்சி நன்றாக இருந்ததாகவே பல வயதானவர்கள் கூறக் கேட்டுள்ளேன். சில சமயங்களில் அது நிஜமோ என்று கூட நினைக்கத் தோன்றுகிறது.

இப்போ சொல்லுங்க மக்களே. இந்தியா விடுதலையடைந்து விட்டதா இல்லையா?

No comments: