Sunday, December 23, 2007

மோடியின் சாதனை!

உலகத்திலேயே அதிக பட்ச பாவம் செய்த மனிதன் நரேந்திர மோடி தான் என்பது போல் பல ஊடகங்களும் அதிக பட்ச அரசியல்வாதிகளும் பிரச்சாரம் செய்து வந்தனர். ஆனால் அவை எல்லாவற்றையும் மூன்றாவதுவது முறையாக தொடர்ந்து தேர்தலில் வெற்றி பெற்று பொய் என நிரூபித்து விட்டார் நரேந்திர மோடி.


காங்கிரஸ் அதன் பங்கிற்கு எதிர்ப்பு அலை புயல் என்று மாய்ந்து மாய்ந்து பிரச்சாரம் செய்தது. இன்னொரு புறம் சிறுபான்மையினருக்கு எதிராய் செயலபடுகிறார் மோடி என்று நம் சிகப்பு துண்டு கட்சி இன்னொருபுறம் வேப்பிலை அடித்தது. ஹிட்லர், முஷாரப் போன்றவர்களோடு ஒப்பிட்டு கடுமையாய் விமர்சிக்கப் பட்டார் மோடி. கலர் டிவி தருகிறோம் என்று காங்கிரஸ் ஒரு தேர்தல் வாக்குறுதி அளித்தது. (ஒரு வேளை நம்ம மஞ்சள் துண்டு போட்ட ஐயா குடுத்த ஐடியாவா இருக்குமோ ?!?!?). ஆனா ஒண்ணும் பாச்சா பலிக்கலை.

மோடியின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக அமைந்தது இரண்டு விஷயங்கள். ஒன்று தொழில் வளர்ச்சியில் குஜராத்திற்கு கிடைத்துள்ள முதல் இடம், மற்றொன்று இடது சாரிகள் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஒன்று சேர்ந்து சிறுபான்மையினத்தவரை கவர்கிறோம் என்று கூறி வாக்குறுதிகளை அள்ளி வீசியது. இது அங்குள்ள இந்துக்களை ஒரு அணியில் ஒன்று சேர்த்துள்ளது. பின்ன எத்தனை நாளைக்குத் தான் சிறுபான்மை பருப்பு வேகும் சொல்லுங்க. நம்ம ஊர் காரங்களும் அந்த ஊர் மக்களை பார்த்து கொஞ்சம் பாடம் கத்துகிட்டா தேவலை. இப்பவாவது பெரும்பான்மையானவர்கள் ஒன்று சேர்ந்து இந்த திராவிட கட்சி, தமிழன் கட்சி, சிங்க கட்சி, நரி கட்சி எல்லாத்தையும் ஓரம் கட்டிவிட்டு யாராவது சில நல்லவர்களை ஆட்சியில் அமர்த்தினால் நாமும் நல்ல வளர்ச்சி அடையலாம். செய்வார்களா நம் மக்கள் ????

46 comments:

Arul said...

//////////////
உலகத்திலேயே அதிக பட்ச பாவம் செய்த மனிதன் நரேந்திர மோடி தான் என்பது போல் பல ஊடகங்களும் அதிக பட்ச அரசியல்வாதிகளும் பிரச்சாரம் செய்து வந்தனர்.
///////////////////
இது உண்மைதான், அவர் ஜெயித்துவிட்டார் என்பதால் அவர் செய்த குற்றங்கள் எல்லாம் நல்லவையாக மாறிவிடாது..............
மோடி போன்றவர்கள் ஜெயிப்பதுகூட இந்திய ஜன நாயகத்திற்க்கு கிடைத்த மி்கப்பெரிய தோல்விதான்.....................

மதுசூதனன் / Madhusudhanan said...

//இது உண்மைதான், அவர் ஜெயித்துவிட்டார் என்பதால் அவர் செய்த குற்றங்கள் எல்லாம் நல்லவையாக மாறிவிடாது..............
மோடி போன்றவர்கள் ஜெயிப்பதுகூட இந்திய ஜன நாயகத்திற்க்கு கிடைத்த மி்கப்பெரிய தோல்விதான்.....................//

என்னங்க பன்றது? ஜனநாயகம் என்னவோ ஆள்ரவங்களுக்குத் தான் சொந்தம்ங்கிற மாதிரி நம்ம அரசியல் வாதிகள் நடந்துக்கும்போது இந்த மாதிரி சில ஆட்களும் தேவைப்படத் தான் செய்கின்றனர்.

இன்னைக்கு குஜாரத்தில் உள்ள பெரும்பாலான அரசு அலுவலகங்கள் மிகக் குறைந்த அளவிலான ஊழலில் திளைக்கிறது. ஜனநாயமிக்க நம்ம தமிழ் நாட்டில் ? தெரியாமதான் கேக்கறேன் உங்க பாஷைல ஜனநாயகத்துக்கு என்னதான் அர்த்தம் ?

Anonymous said...

அருள் அவர்களே அருமை

நன்றி

bala said...

//தெரியாமதான் கேக்கறேன் உங்க பாஷைல ஜனநாயகத்துக்கு என்னதான் அர்த்தம் ? //

மதுசூதனன் அய்யா,

அருள் அய்யா பாஷையில ஜனநாயகம்னா "திராவிடத்துவா","சாதி வெறித்துவா"ன்னு அர்த்தம்.தாடிக்கார தீவிரவாதத்துவான்னும் அர்த்தம்.

பாலா

Anonymous said...

"சாதி வெறித்துவா" பற்றிப் பேச பாலா தகுதி அற்றவர்

வெ. ஜெயகணபதி said...

/*
பெரும்பான்மையானவர்கள் ஒன்று சேர்ந்து இந்த திராவிட கட்சி, தமிழன் கட்சி, சிங்க கட்சி, நரி கட்சி எல்லாத்தையும் ஓரம் கட்டிவிட்டு யாராவது சில நல்லவர்களை ஆட்சியில் அமர்த்தினால் நாமும் நல்ல வளர்ச்சி அடையலாம்.
*/

நீங்கள் சொல்லும் நல்லவர் உங்கள் அபிமான முன்னால் நடிகை செல்வி ஜெ. ஜெயலலிதா அம்மையாரோ... ?? ( அவரின் அ.தி.மு.க. வை திராவிட கட்சி என்று சொல்லாதீர்கள்..) அதற்கு இனிமேல் வாய்பில்லை நண்பரே...!

மதுசூதனன் / Madhusudhanan said...

//நீங்கள் சொல்லும் நல்லவர் உங்கள் அபிமான முன்னால் நடிகை செல்வி ஜெ. ஜெயலலிதா அம்மையாரோ... ?? ( அவரின் அ.தி.மு.க. வை திராவிட கட்சி என்று சொல்லாதீர்கள்..) அதற்கு இனிமேல் வாய்பில்லை நண்பரே...! //

நிச்சயமா அவங்களையும் சேர்த்துத் தாங்க சொன்னேன். அவங்களும் பாவம் எவ்வளவு தான் கஷ்டப் படுவாங்க. இவங்க எல்லாரும் சேர்ந்து நாட்டை எங்கேர்ந்து எங்க கொண்டு வந்துட்டாங்க பாருங்க. எல்லாருக்கும் ரிட்டையர்மெண்ட் கொடுத்து வீட்டுக்கு அனுப்புவோம்.

Arul said...

ஜன நாயகத்திற்க்கு என்னுடைய மொழியில அர்த்தம் எதோ இருத்துட்டு போகட்டும்............
ஆனா உங்களுடைய மொழியிலோ அல்லது மோடியோட மொழியிலோ இருக்கின்ற மாதிரி......
ஒரு இனத்தை குறி வைத்து அழித்து, மனித தன்மையற்ற செயல்களை செய்து மனிதாபிமானத்தை நசுக்கி கொடுங்கோள் ஆட்சி புரிவதல்ல எனறுமட்டும் கண்ண்டிப்பாக என்னால் சொல்லமுடியும்................
ஊழல் எங்கு பார்த்தாலும் மலிந்துதான் கிடகின்றது................ஆனால் தமி்ழ் நாட்ல மோடி மாதிரி கொலைவெறி பிடிச்சவுங்க யாரும் இல்லன்னு சந்தோசபட்டுக்கலாம்.......

dondu(#11168674346665545885) said...

எனது இது சம்பந்தமான பதிவு பார்க்கவும் http://dondu.blogspot.com/2007/12/blog-post_23.html

மோதி அவர்கள் தலைமை தேர்தல் ஆணையரையும் மீறி வெற்றி பெற வேண்டியிருந்தது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

//ஆனா உங்களுடைய மொழியிலோ அல்லது மோடியோட மொழியிலோ இருக்கின்ற மாதிரி......
ஒரு இனத்தை குறி வைத்து அழித்து, மனித தன்மையற்ற செயல்களை செய்து மனிதாபிமானத்தை நசுக்கி கொடுங்கோள் ஆட்சி புரிவதல்ல எனறுமட்டும் கண்ண்டிப்பாக என்னால் சொல்லமுடியும்................//
அப்படீன்னா 1984-லே சீக்கியர்களை கொன்று குவித்து விட்டு, அதற்கு பின்னால் வந்த தேர்தலில் தீவிரவாதியாக சர்தார்ஜிகளை சித்தரித்து போஸ்டர் போட்டு ஜெயித்த ராஜீவ் காந்தி பற்றி உங்கள் கருத்து என்ன?

இன்னும் அந்த சீக்கியர்களுக்கு நீதி கிடைக்காது, ஜக்தீஷ் டைட்லர், பகத் ஆகியோர் மந்திரிகளாக்கப்பட்டு அழகு பார்த்ததை என்ன ஜனநாயகம் என்று கூறுவீர்கள்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

மதுசூதனன் / Madhusudhanan said...

//ஆனால் தமி்ழ் நாட்ல மோடி மாதிரி கொலைவெறி பிடிச்சவுங்க யாரும் இல்லன்னு சந்தோசபட்டுக்கலாம்//

சும்மா இந்தக் கதை எல்லாம் பண்ணாதீங்க அருள். நம்ம ஊர்ல நடக்காத சாதிச் சண்டைய மதச் சண்டையா? இங்கேயும் பெரிய அளவிலான மதக் கலவரங்கள் யாரால் நடந்ததா நீங்க நினைக்கறீங்க ? இவ்வளவு பேசும் நீங்கள் குஜராத்தில் நடந்தது என்னனு கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன்.

sri said...

Madhu Keep it up buddy. Your messages are great
Ravi

bala said...

//சாதி வெறித்துவா" பற்றிப் பேச பாலா தகுதி அற்றவர் //

ஏன் பேசக்கூடாது என்று கேட்கிறோம்?தீவிரவாதத்துவா போதித்த தாடிக்காரனோட சிஷ்ய கேடிகள் சாதிவெறித்துவா பிடித்து அலைந்து அழிச்சட்டியம் பண்ணுவதை தமிழ் கூறும் நல்லுலகம் மட்டுமென்ன,எல்லா மொழி கூறும் நல்லுலகமும் பழிக்கிறதே.அப்படியிருக்க, அந்தமான் வழியா வந்தேறிய பிரியாணி திராவிடத்துவா குஞ்சுகளுக்கு "சாதி வெறி பிடித்து அலைபவா" என்று சொன்னா ஏன் கோபம் வருகிறது?இதை திராவிட அயோக்யத்தனத்துவாவின் வெளிப்பாடு அல்லாமல் வேறு என்ன என்று கேட்கிறோம்?

பாலா

மதுசூதனன் / Madhusudhanan said...

//அந்தமான் வழியா வந்தேறிய பிரியாணி திராவிடத்துவா குஞ்சுகளுக்கு "சாதி வெறி பிடித்து அலைபவா" என்று சொன்னா ஏன் கோபம் வருகிறது?//

ஹ்ம்ம்.....ஏதோ சொல்றீங்க. என்ன சொல்றீங்கனு தான் புரியலை. ஆமா அது ஏங்க நம்மாளுங்க மட்டும் இன்னும் உருப்படாம திராவிடம் வெங்காயம்னு கட்டி அழுதிட்டிருக்காங்க ? திராவிட நாடுங்கிறதூ மொத்த தென் இந்தியாவையும் குறிக்கிறது தான். ஆனா நம்ம தமிழ்நாட்டைத் தவிர வேற எந்த மாநிலத்திலாவது திராவிடம்ங்கிற வார்த்தையை உங்களால் கேக்ட்க்க முடிகிறதா? சரி, திராவிடம் பேசி, திராவிடம் தின்று, திராவிடம் குடித்து, திராவிடம் தின்று........என்னத்தை கண்டீங்க நீங்க ? இல்ல உங்க so called தலைவர்களும் தலைவிகளும் தான் என்ன செஞ்சாங்க?

எல்லாருக்கும் தெரிவ்வது, பெரிய வெள்ளைப் பலகையில் ஒரு சிறிய கருப்புப் புள்ளிதானெ தவிர மற்ற எதுவுமில்லை. அதற்கு நீங்களும் விலக்கிலை என்பதற்கு நீங்களே சான்று.

Anonymous said...

////ஆனால் தமி்ழ் நாட்ல மோடி மாதிரி கொலைவெறி பிடிச்சவுங்க யாரும் இல்லன்னு சந்தோசபட்டுக்கலாம்//

இதை விட காமெடி உலகில் எதுவும் இல்லை. வரப்பு வெட்டுவதிலிருந்து, விடுதலைப் புலி சகவாசம், தமிழர்களை குண்டு வைத்து கொத்து கொத்தாக கொலை செய்த மதானி போற்றுதல், தன்னை எதிர்த்த தன் கட்சிக்காரர்களைப் போட்டுத் தள்ளுதல், பேப்பரில் எழுதியதற்கு கூண்டோடு அந்த பேப்பரில் வேலை பார்த்தவர்ளைக் கொல்லுவது வரை கொலைவெறி பிடித்த மஞ்சள் துண்டாரின் கோவணத்தைப் பிடித்து தொங்கியே உருப்படாமல் போயிருக்கும் சமூகம் நம் தமிழன். ஆமாம் - நீங்க எந்தூருங்கோ? எந்த எழவுக்குங்கோ நீங்க சந்தோசப் படுறீங்கோ? கருப்பு கண்ணாடிய கழட்டிட்டு சுத்தி என்னா நடக்குதுன்னு பாருங்கையா. குஜராத் மக்கள் ஒண்ணும் நம்மள மாதிரி மாக்கானில்லை. அவனுக்கு அறிவிருக்கு - பொழக்கிற வழியப் பாக்குறான். நீங்க இன்னும் செல வக்கிறதுலயும், பிச்ச போடுறத வாங்குறதையுமே தாண்டலை. வெக்கமா இல்லை உங்களுக்கு?

நிலவு நண்பன் said...

//இந்த மாதிரி சில ஆட்களும் தேவைப்படத் தான் செய்கின்றனர்.//

ஆமாங்க நீங்க சொல்றது உண்மைதான்.. இந்த மாதிரி சில சிசுக்கொலைகள் செய்கிற காட்டுமிராண்டிகள் நம்ம மக்களுக்கு தேவைதான்..

இதுமாதிரி பல பெண்களை கும்பல் கும்பலாக கற்பழிக்கின்ற கூட்டங்களை, ஆதரிக்கின்ற , தூண்டிவிடுகின்ற, மகாத்மாக்கள் தேவைதான்..
பின்னே எல்லாப் பெண்களும் கற்போடு இந்த ஜனநாயக நாட்டில் நடமாடலாமா..? தனக்குன்னு நடக்குற வரைக்கும் எல்லாமே வேடிக்கையாகத்தான் இருக்கும்..

வைரமுத்து சொன்ன மாதிரி
"கூரையில் எரிகின்ற தீ
சட்டையில் பற்றும் வரை எவனுமே சப்தமிடுவதில்லை..."

Anonymous said...

///////////
இதை விட காமெடி உலகில் எதுவும் இல்லை. வரப்பு வெட்டுவதிலிருந்து, விடுதலைப் புலி சகவாசம், தமிழர்களை குண்டு வைத்து கொத்து கொத்தாக கொலை செய்த மதானி போற்றுதல், தன்னை எதிர்த்த தன் கட்சிக்காரர்களைப் போட்டுத் தள்ளுதல், பேப்பரில் எழுதியதற்கு கூண்டோடு அந்த பேப்பரில் வேலை பார்த்தவர்ளைக் கொல்லுவது வரை கொலைவெறி பிடித்த மஞ்சள் துண்டாரின் கோவணத்தைப் பிடித்து தொங்கியே உருப்படாமல் போயிருக்கும் சமூகம் நம் தமிழன். ஆமாம் - நீங்க எந்தூருங்கோ? எந்த எழவுக்குங்கோ நீங்க சந்தோசப் படுறீங்கோ? கருப்பு கண்ணாடிய கழட்டிட்டு சுத்தி என்னா நடக்குதுன்னு பாருங்கையா. குஜராத் மக்கள் ஒண்ணும் நம்மள மாதிரி மாக்கானில்லை. அவனுக்கு அறிவிருக்கு - பொழக்கிற வழியப் பாக்குறான். நீங்க இன்னும் செல வக்கிறதுலயும், பிச்ச போடுறத வாங்குறதையுமே தாண்டலை. வெக்கமா இல்லை உங்களுக்கு?
/////////////
அனானி,
சூப்பர் ஆப்புப்பா......லக்கிலுக் படிச்சாரான்னு தெரியலை........

Arul said...

ஜாதிச் சண்டையும், மதச்சண்டையும் நம்ம ஊருக்கோ, நாட்டுக்கோ புதிதல்ல, அது குஜராத்ல மட்டும் அல்ல நிறைய இடங்களிலும் நடந்தேறியுள்ளது......ஆனால் குஜராத்துல நடந்த மாதிரி ஒரு அரசாங்கமோ அல்லது அரசாங்கத்தின் பிரிவோ ஒரு சமூகத்தை மட்டும் குறிவைத்து அழிக்கவில்லை..........அது குஜராத்தில் மட்டுமே நடந்த சாதனை...நீங்கள் கூறிய மாதிரி மோடியின் சாதனை என்றுகூட சொல்லலாம்.............மோடி என்னமோ குஜராத்தை சாதனை மாநிலம மாத்திட்டாருங்குறிங்க?? அப்படியே மாத்தனதாகவே இருக்கட்டுமே!!...அதற்க்காக தீவிரவாதின்கன்ற பேர்ல அப்பாவி மக்களை கொன்றுகுவித்ததை எந்த வகைல நியாயமுன்னு சொல்றிங்கன்னு எனக்கு தெரியவில்லை.......அதுக்கு தமிழ்நாட்ல நடக்கலையான்னு கேக்குறிங்க?? மனித உயிர் எங்கே போனாலும் அது உயிர்தான், அதை யார் செய்தாலும் நியாய்ப்படுத்த முடியாது.........
டோண்டு ராகவண் அவர்களே! பஞ்சாப்ல காங்கிரசுகாரங்க செய்தால், மோடி குஜராத்ல செய்ரது சரியாயிடுமா?? தவறான செயல்கள் என்றுமே முன்னுதாரனமாகாது....காங்கிரசோ, தி.மு.க வோ விமர்சனத்துக்கு அப்பார்பட்ட கட்சி அல்ல......மோடியின் ஆதரவாலர்களே குஜராத்தில் நடந்தேறிய மனித உரிமை மீறல்களுக்கு பதில் சொல்லுங்கள்....வீனாக எனக்கு சாயம் பூசுவதை நிறுத்திவிட்டு..........மதுசூதனன் அவர்களே உங்களுக்கு உண்மையிலெயே குஜராத்தில நடந்தது எதும் தெரியாதா?? பத்திரிக்கை செய்தியாக வந்தவை தமிழ்மணத்திலேயே நிறைய இருக்கின்றன்.....தேடிபிடித்தி அனுப்புகின்றேன்..........

Anonymous said...

அனானி,
சூப்பர் ஆப்புப்பா......லக்கிலுக் படிச்சாரான்னு தெரியலை........
-
-அனானி

கொலைகாரன் மோடிக்கு - 'கோவன'மாய் விள்ங்கும் - அனானி கேவலங்களை பிடித்து - குஜராத்துக்கு அனுப்பவேண்டும் - குஜராத்காரன் திறமையானவன் அனானிகளின் 'ஜாதி'க்கு தக்கவாறு - எவன் எவனின் பீயை அள்ளுவது என்று மோடி சொல்லுவான்!


லக்கிலுக்நேசன்

மதுசூதனன் / Madhusudhanan said...

//வீனாக எனக்கு சாயம் பூசுவதை நிறுத்திவிட்டு..........மதுசூதனன் அவர்களே உங்களுக்கு உண்மையிலெயே குஜராத்தில நடந்தது எதும் தெரியாதா?? பத்திரிக்கை செய்தியாக வந்தவை தமிழ்மணத்திலேயே நிறைய இருக்கின்றன்.....தேடிபிடித்தி அனுப்புகின்றேன்.. //

அருள்,
உங்களுக்கு சாயம் பூசுவதில் எனக்கு காலணா லாபம் உண்டா. ஒரு குறள் இருக்கு... நீங்களும் படிச்சிருப்பீங்க.

"எப்பொருள் யார்யார் வாய் கேட்ப்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு"

நான் சொல்ல வந்த முக்கியமான கருத்து என்ன ? தமிழக மக்கள் சாதிக்கு ஒரு ஓட்டு என்று போடாமல் மக்களை ஏமாற்றுபவர்களை ஓரம் கட்டிவிட்டு நல்லவர்களை ஆட்சிக்க்கு கொண்டுவர வேண்டும் என்பது. என்வரையில் மோடி நல்லவர். ஏனென்றால் பத்து பேருக்கு கெடுதல் செய்தாலும் ஆயிரம் பேருக்கு நல்லது செய்தவர் என்பதையும் இங்கே வாதிடும் யாராலும் மறுக்க முடியாது. நீங்கள் பேப்பரில் படித்ததை மட்டுமே கொண்டு பேசுகிறீர்கள், நான் அங்கேயே சில காலம் தங்கி அங்கு நடந்த பல விஷயங்களை பார்த்தும் விசாரித்தும் அறிந்தவன். நீங்கள் செய்யும் வேலைக்குத் என்ன பெயர் சொல்லலாம் அன்பரே ?

dondu(#11168674346665545885) said...

//ஆனால் குஜராத்துல நடந்த மாதிரி ஒரு அரசாங்கமோ அல்லது அரசாங்கத்தின் பிரிவோ ஒரு சமூகத்தை மட்டும் குறிவைத்து அழிக்கவில்லை..........அது குஜராத்தில் மட்டுமே நடந்த சாதனை...நீங்கள் கூறிய மாதிரி மோடியின் சாதனை என்றுகூட சொல்லலாம்.............//
அப்ப ராஜீவ் காந்தி மகாத்மாவா? வாதத்துக்காக மோதியை குற்றம் கூறுவதை ஒத்துக் கொண்டாலும், ராஜீவ் காந்தி பற்றி நான் கேட்ட கேள்விக்கு பதிலளிக்காது இது என்ன நழுவல்?

மற்றப்படி கடந்த 5 ஆண்டுகளில் குஜராத்தில் ஓர் இடத்திலும் கலவரம் இல்லை என்பதாகவும் படித்தேனே. அதற்கு என்ன கூறுவீர்கள்?

அதை காங்கிரசே அடக்கித்தானே வாசித்தது? டெஹல்கா டேப்புகளை வைத்து ஏன் ஆக்சன் எடுக்கவில்லை? அவை திருத்தப்பட்ட டேப்புகள் என்பதால் இருக்குமோ? அல்லது, அதில் அடையாளம் காட்டப்பட்டவர்களுக்கு காங்கிரஸ் டிக்கெட் கொடுத்ததே காரணமாக இருந்திருக்குமோ?

மோதி சம்பந்தமாக ஒரு நிதி ஊழலை உங்களால் காட்ட இயலுமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

சமீபத்தில் தில்லியில் 1984-ல் நடந்ததை நான் நேரிலேயே பார்த்தவன் என்பதையும் இங்கே கூறிவிடுகிறேன்.

அப்பிரச்சினை நடந்த பிறகு 2002 தேர்தலில் அதைப் பற்றி நிறைய பேசி மோதியை திட்டியாகி விட்டது. அப்போதே அது எடுபடவில்லை. ஏனெனில் குஜராத் மக்கள் கோதராவை மறக்கவில்லை.

இப்போது இரண்டாம் முறையாகக் கூறுவது, அதுவும் தேர்தல் சமயத்தில் வேண்டுமென்றே டேப்புகளை வெளியிடுவது மூலம் என்ன சாதிக்க நினைத்தார்கள்? அப்படியென்றால் தேர்தலுக்கு தேர்தல் 1984 பற்றியும் கூறலாமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

//பஞ்சாப்ல காங்கிரசுகாரங்க செய்தால், மோடி குஜராத்ல செய்ரது சரியாயிடுமா??//
அப்படீன்னா இப்போ லோக் சபா தேர்தல் வந்தால் அதையும் கூறுவீர்கள் என எதிர்பார்க்கலாமா?

அல்லது தேர்தல் தலைமை ஆணையர் மாதிரி ஒரு தலைபட்சமாகத்தான் இருப்பீர்களா?

நல்ல வேளையாக உங்களை மாதிரியெல்லாம் சிந்திக்காது குஜராத்தியர் நன்றாக செயல்படும் அரசையே தேர்ந்தெடுத்துள்ளனர். ஓசி டி.வி.க்கெல்லாம் மயங்கவில்லை. அவர்களைத்தான் நாமும் முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும் என்பேன் நான்

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//தீவிரவாதின்கன்ற பேர்ல அப்பாவி மக்களை கொன்றுகுவித்ததை எந்த வகைல நியாயமுன்னு சொல்றிங்கன்னு எனக்கு தெரியவில்லை//

இதற்கு என்ன ஆதாரம்? அப்படீன்னா ரயிலை எரித்தவர்களுக்கு சட்டப்படி தண்டனை வாங்கிக் கொடுக்க முடியுமா உங்களால்? இல்லை லாலு கோமாளி மாதிரி உள்ள இருந்தவங்களே கொழுத்திட்டு செத்துப் போயிட்டாங்கன்னுட்டு ஒரு அறிக்க விட்டா பிரச்சினை தீர்ந்துடுமா? இந்துக்களை குஜராத்தில் அடிச்சா அது மாதிரி நூறு மடங்கு தங்கள் சமூகத்தில் இழப்பு இருக்கும் என்ற பாடத்தினால் தான் குஜராத் கடந்த ஐந்து வருடங்களில் நிம்மதியாக இருக்கிறது. தீவிரவாதிகளை ஊக்குவிக்கும் சக்திகள் இன்று குஜராத்தில் இல்லை. தீவிரவாதிகள் வந்து இருந்து தங்கள் திட்டங்களை நிறைவேற்ற உதவிடும் தேச துரோக இஸ்லாமிய சக்திகள் இன்று குஜராத்தில் இல்லை. அந்த கேடு கெட்டவர்கள் மாண்டதினால்தான் இன்று அமைதி. ஒரு பெரும் களையெடுப்பு நிகழும் போது, சில அப்பாவிகளும் மாண்டு போயிருக்கலாம். ஆனால் நாட்டு மக்களுக்காக இன்றும் எல்லையில் உயிர் விடும் எண்ணற்ற ஹிந்து வீரர்களுக்கு என்ன மதிப்பு கொடுக்கிறது இந்த சமுதாயம். போர் கைதிகளாக்ப் பிடிபட்டவர்களின் கண்களையும், இன்ன பிற உறுப்புகளையும் சித்ரவதை செய்து பெட்டியில் வைத்து அனுப்பினார்களே இஸ்லாமிய கயவர்கள்? அப்போது எங்கே போயிற்று இந்த வேதனை? இன்றும் தமிழகத்தில் டிச.6 அன்று பதட்டம், கோவை குண்டு வெடிப்பன்று பதட்டம், விநாயகர் ஊர்வலத்தன்று பதட்டம் - ஏன் இந்த அவலம்? இங்கே தீவிரவாதிகளுக்கு புகலிடம் அளிப்பவர்கள் தான் ஆட்சியிலேயே இருக்கிறார்கள். மஞ்சத் துண்டார் ஒரு குறிப்பிட்ட சமூகத்தையே குறி வைத்து 60 ஆண்டுகளாக அரசியல் நடத்துராரே - அவரைக் கேட்க முடியுமா உங்களால்? கேட்டால் 2000 வருட புருடா விடுவீர்கள். சிந்தியுங்கள், திருந்துங்கள். மோடிக்கு ஓட்டுப் போட்ட குஜராத் மக்கள் முட்டாள்களானால், இங்கு நடக்கும் அவல கயமைத் தனத்திற்கு (ஆட்சி எங்கே நடக்கிறது?) ஓட்டு போட்ட தமிழர்களை என்ன சொல்லி அழைப்பீர்கள்? நாம் சோற்றாலடித்த பிண்டங்கள் என்பதில் சந்தேகமே இல்லை - உங்களைப் போன்ற பிறவிகள் இருக்கும் வரை.

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

மோடி (எதிர்பார்த்தப்டி) வெற்றி பெற்றது சாதனைதான்.அவர்மேல் உள்ள 'அப்பாவி மக்கள் கொலை'தான் கரும்புள்ளி.அது மட்டும் இல்லாவிடில் யாராலும்((All partie,media,etc)) எதுவும் பேச முடியாது.

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

<===
நீங்கள் பேப்பரில் படித்ததை மட்டுமே கொண்டு பேசுகிறீர்கள், நான் அங்கேயே சில காலம் தங்கி அங்கு நடந்த பல விஷயங்களை பார்த்தும் விசாரித்தும் அறிந்தவன். ==>
எல்லோருக்கும் செய்தித்தாள்களில், தொலைக்காட்சியில் படித்த/பார்த்த செய்திகள்தான் தெரியும்.அப்போது உண்மையில் குஜராத்தில் என்ன நடந்தது என்பதை நீங்கள் ஏன் தனிப்பதிவாகப் போடக்கூடாது?

Anonymous said...

Madhu,
Keep up your good work.
If arul blames modi for targetting minorities,
what about MK's target towards minority brahmins in TN
if Modi is a merchant of death
MK is a whole sale merchant of Death.
Munusami

மதுசூதனன் / Madhusudhanan said...

//எல்லோருக்கும் செய்தித்தாள்களில், தொலைக்காட்சியில் படித்த/பார்த்த செய்திகள்தான் தெரியும்.அப்போது உண்மையில் குஜராத்தில் என்ன நடந்தது என்பதை நீங்கள் ஏன் தனிப்பதிவாகப் போடக்கூடாது?//

நிச்சயம் போடலாம் நண்பரே. நேரமின்மை தான் ரொம்ப பெரிய பிரச்சினை. இப்ப கூட சிகாகோவில் இருந்து மும்பை வரும் என் விமானம் 12 மணி நேரம் தாமதமானதால் வெளி வந்தது தான் இந்தப் பதிவு. இல்லையே இதுவும்மில்லை. :) நிச்சயம் ஒரு நாள் எழுதுகிறேன்.

மதுசூதனன் / Madhusudhanan said...

அடுத்த 24 மணி நேரம் நான் முழுக்க முழுக்க பிரயாணத்தில் இருப்பேன் என்பதால் மாடரேஷன் வசதியை தற்காலீகமாய் நீக்கிவிட்டுப் போகிறேன்.

Harish Ranjan said...

+/ஆமாங்க நீங்க சொல்றது உண்மைதான்.. இந்த மாதிரி சில சிசுக்கொலைகள் செய்கிற காட்டுமிராண்டிகள் நம்ம மக்களுக்கு தேவைதான்..

இதுமாதிரி பல பெண்களை கும்பல் கும்பலாக கற்பழிக்கின்ற கூட்டங்களை, ஆதரிக்கின்ற , தூண்டிவிடுகின்ற, மகாத்மாக்கள் தேவைதான்..
பின்னே எல்லாப் பெண்களும் கற்போடு இந்த ஜனநாயக நாட்டில் நடமாடலாமா..? தனக்குன்னு நடக்குற வரைக்கும் எல்லாமே வேடிக்கையாகத்தான் இருக்கும்..

வைரமுத்து சொன்ன மாதிரி
"கூரையில் எரிகின்ற தீ
சட்டையில் பற்றும் வரை எவனுமே சப்தமிடுவதில்லை..."
+/


This is nothing compared with what happened in bangladesh and pakistan. Islam is responsible for wiping out millions of hindus,christians,budhists,bahais,parsis.

What should WE DO? WIPE OUT ISLAM?

Modi is nothing compared with mohamed, the mad founder of islam.

Jai Hind!

மதுசூதனன் / Madhusudhanan said...

//Modi is nothing compared with mohamed, the mad founder of islam.
//

இதைப் போடாம இருந்திருக்கலாமே நண்பரே.

Anonymous said...

மோதியின் வெற்றிக்குப் பின்னால் இருப்பவை மூன்று:

1. கலர் டிவிக்கு மயங்காத குஜராத் மக்களின் தெளிவு.

2. மோதியின் நிர்வாகத் திறமைக்கு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு அந்த மாநிலம் தந்த மரியாதை.

3. ஊழலற்ற அரசிற்கு கிடைத்த மகத்தான ஆதரவு.

இது மூன்றையும் சரியாகப் புரிந்து கொள்ளாத காங்கிரசின் பழுதுபட்ட தேர்தல் அணுகுமுறையை நாலாவது காரணமாக நீங்கள் சொன்னால் நான் மறுக்கப் போவதில்லை.

இப்படிக்கு
குஜராத் தமிழன்

மதுசூதனன் / Madhusudhanan said...

//இது மூன்றையும் சரியாகப் புரிந்து கொள்ளாத காங்கிரசின் பழுதுபட்ட தேர்தல் அணுகுமுறையை நாலாவது காரணமாக நீங்கள் சொன்னால் நான் மறுக்கப் போவதில்லை.//

சூப்பர் பாயிண்ட் போங்க :)

Arul said...

\\\\\\\\\\\
நீங்கள் செய்யும் வேலைக்குத் என்ன பெயர் சொல்லலாம் அன்பரே ?
////////////

இந்த கேள்வி எனக்கா மதுசூதனன்??
என்ன அர்த்தமுன்னு எனக்கு புரியவில்லை...........அப்படி பெயர் சொல்லமுடியாத எதையும் நான் செய்ய வில்லை...........
.....................உங்களுடைய காருத்து சிலவற்றை ஏற்றுகொண்டாலூம்....சிலவற்றை ஏற்றுகொள்ள இயலாது.......அது நான் முன்பே கூறியதூதான்........என்னுடைய கேள்விகளுக்கு பதிலளித்தமைக்கு நன்றி!!.........வாழ்த்துக்கள்........

Anonymous said...

//தமி்ழ் நாட்ல மோடி மாதிரி கொலைவெறி பிடிச்சவுங்க யாரும் இல்லன்னு //

Parties like DK /PMK /VS against other castes ? Who can forget Caste naming issues and people slain their friends in South Tamil nadu ?

I hate Modi for several reasons . but you have to give credit for his achivements to gujarat.

I read in IBNlive.com that muslim wants Modi to visit Dharguha ? why Modi should visit and practive pseodo secular ? this is the mindset to be removed .


Another kudos to Modi is he removed Caste based pokliticas in Gujarat and he is from OBC :-
)

Anonymous said...

சற்றுமுன் கிடைத்த செய்தி:

கடந்த சில மணி நேரங்களாக தமிழகத்தில் ஜெலுஸில் விற்பனை மிகத் துரிதமாக என்றும் இல்லாத அளவில் அதிகரித்திருக்கிறது. இது போன்ற திடீர் நிகழ்விற்கு என்ன காரணம் என்று விற்பனைத்துறை வல்லுனர்கள் உடனடியாக ஆராய்ந்து வருகிறார்கள். சமீபத்தில் வெளிவந்த குஜராத் தேர்தல் முடிவுகளுக்கும் இதற்கும் ஏதேனும் தொடர்பு இருக்கக் கூடுமா என்ற வகையிலும் விசாரணை முடுக்கி விடப்பட்டிருக்கிறது.

குறிப்பாக தமிழ் பதிவர்கள் சிலர்தான் ஜெலுஸில் விற்பனை அதிகரிப்பிற்குக் காரணம் என்று பரவி வரும் வதந்திகளை நம்பவேண்டாம் என்றும் பதிவர்கள் மற்றும் பின்னூட்ட அனானிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

செய்தித்துறை

mathiyalagan said...

we need a modi for every state and district in india. then only our country would develop and become a super power.

Anonymous said...

'கட்டப்பஞ்சாயத்து செய்பவர்களைக் கூட யாரும் எதிர்த்து கேள்வி கேட்பதில்லை. அதனாலேயே, கட்டப்பஞ்சாயத்து செய்பவர்கள் எல்லாம் சிறந்த தலைவர்கள் என்று சொல்லிவிட முடியாது.'

மோடி வெற்றிபற்றி பதிவர் நன்பனின் அலசல் கட்டுரையை கீழ்கண்ட இணைப்பில் படிக்கலாம்..
http://nanbanshaji.blogspot.com/2007/12/blog-post_25.html

மதுசூதனன் / Madhusudhanan said...

//கடந்த சில மணி நேரங்களாக தமிழகத்தில் ஜெலுஸில் விற்பனை மிகத் துரிதமாக என்றும் இல்லாத அளவில் அதிகரித்திருக்கிறது. //

செம காமெடி பண்றீங்க? அதெப்படிங்க்க ?

Anonymous said...

மதுசூதன் சாமி,
எங்க பூத் ஏஜன்ட் சாமி,பீலா சாமி,வெளி சாமி,பிள்ளை மார் சாமி,செல்லாத சாமி,கொண்டை சாமி,குறியருக்கும் சாமி எல்லாம் "தமில்" இனத் தலைவரின் இலவச டெக்னிக்கை காபியடித்த காங். ஏன் பூட்டுகிடுச்சுன்னு ரொம்ப சீரியசா இருக்காங்க.குஜராத்திகளுக்கு சுய மரியாதை சாஸ்தியான்னு பிரியலை சாமி!!!
அன்புடன்
பொன்.பாண்டியன்

Anonymous said...

//'கட்டப்பஞ்சாயத்து செய்பவர்களைக் கூட யாரும் எதிர்த்து கேள்வி கேட்பதில்லை. அதனாலேயே, கட்டப்பஞ்சாயத்து செய்பவர்கள் எல்லாம் சிறந்த தலைவர்கள் என்று சொல்லிவிட முடியாது.'///

சொல்லாதீங்க..அவர் சிறந்த தலைவர் அப்படீன்னுட்டு தான அங்குள்ளவங்க ஓட்டு போட்டுருக்காங்க ? கட்டப் பஞ்சாயத்து பண்ணினார்...கழுதை மேச்சார் இதெல்லாம் ஒரு வாதமா ? அது ஜனங்களுக்கு ஏற்புடையதா இல்லையா என்பதே முக்கியம்

மதுசூதனன் / Madhusudhanan said...

//குஜராத்திகளுக்கு சுய மரியாதை சாஸ்தியான்னு பிரியலை சாமி!!!//

அதுக்காக தமிழ்நாட்டு காரங்களுக்கு சுய மரியாதை இல்லைன்னு சொல்றது முறை இல்லை. ஒரு சிலருக்கு இல்லை. பலருக்கு அறியாமை. அவ்வளவுதானே தவிர வேறெதுவுமில்லை. இந்த அறியாமையை போக்கினா போதும். எல்லாம் சரியா போய்டும். நம்ம அரசியல்வாதிங்க ஆட்டம் ரொம்ப நாளைக்கு செல்லாது.

Anonymous said...

மதுசூதன் சாமி,
எங்க "தமில்"இனத் தலைவரு சோத்தாலடித்த பிண்டங்கள்ன்னு திட்டுனாரு.அதே போல மோடி சாமி சொல்ல முடியுமா?!அங்கதாங்க தனிச்சு நிக்கிறான் தமிலன்!அறியாமையாம்,மரியாதையாம்,வெங்காயம்!!
அன்புடன்
பொன்.பாண்டியன்

மதுசூதனன் / Madhusudhanan said...

//சோத்தாலடித்த பிண்டங்கள்ன்னு திட்டுனாரு//

இதோட சுட்டி ஏதாவது இருந்தா குடுங்களேன்.

Hari said...
This comment has been removed by a blog administrator.
மதுசூதனன் / Madhusudhanan said...

ஹரி அவர்களுக்கு:

நீங்கள் கூறியபடி நான் ஐமேக்ஸ் திரையரங்கில் பில்லா படம் பார்க்க வந்திருந்த்தேன். என்னைத் தொடர்ப்பு கொள்ள விரும்பினால் உங்கள் மின்னன்ஞ்சல் முகவரி தனை பின்னூட்டத்தில் தரவும். பேசலாம். (உங்கள் மின்னஞ்சல் முகவரை தனை நான் பிரசுரிக்க மாட்டேன்)