Tuesday, March 04, 2008

கலைஞர் ஆட்சியில் எண்ண எண்ண இனித்திடும் சாதனைகள்

ரொம்ப நாளாவே இதைப் பத்தி எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் வேலைப் பளு அதிகமிருந்ததால் இரண்டு மாதமாய் இந்த ப்ளாகர் பக்கம் தலை வைட்த்துக் கூட படுக்க முடியவில்லை. கொஞ்ச நாளைக்கு முன்பு அனேகம் பத்திரிக்கைகளில் முழுப் பக்கம் அல்லது இரண்டு பக்க விளம்பரமாய் இந்த விஷயம் வந்திருந்தது. இதுல திமுக தரப்பில் சொல்லிக் கொள்ளும் ஒவ்வொரு சாதனையும் (?) மிகவும் மோசமான முறைகளில் நடந்திருப்பதாகவே நான் நினைக்கிறேன். இந்தச் சாதனைகள் பற்றிய ஒரு தொகுப்பு தான் இந்தப் பதிவு.


கிலோ அரிசி இரண்டு ரூபாய் (ஒரு கோடியே 78 இலட்சத்து 240 குடும்பங்களுக்கு மாதந்தோறும் 20 கிலோ அரிசி).

பெருமளவு அரிசியை கடத்தி பலர் பெரிய அளவிலான ஆதாயம் கண்டு வருகின்றனர். ஆனால் ஆளும் திமுக என்னவென்றால் இதற்கு முந்தைய ஆட்சியை குறை கூறுகின்றனர். என்ன சம்பந்தம் என்று ஒன்றும் புரியவில்லை.

விவசாயிகள் துயர்தீர 7000 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி (22 இலட்சத்து 40 ஆயிரத்து 739 விவசாயக் குடும்பங்களுக்கு).

எவன் அப்பன் வீட்டு சொத்து? அப்போ கஷ்டப் பட்டு கடனை திருப்பிக் கட்டினவன் எல்லாம்?

நிலமற்ற ஏழை விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு பண்படுத்தப் ப்ட்ட இலவச நிலம். (ஒரு இலட்சத்து 37 ஆயிரத்து 995 குடும்பங்களுக்கு)

மொதல்ல ரெண்டு ஏக்கர் தரோம்னு சொன்னார் முக. அப்புறம் அது ஒரு ஏக்கர் ஆச்சு. அதுக்கப்புறம் அது இன்னும் சுருங்கி கடைசில உள்ளங்கை அளவுக்கு வந்திருக்கு. அதுவும் நடக்கின்ற கதை இல்லை என்பதால் பதவி தராதவர்களுக்கு முக எப்படி இதயத்தில் இடம் தருகிறாரோ அதே போல் நிலமற்றவருக்கும் அவர் இதயத்தில் இடம் தருவார்.

குழந்தைகளுக்கு வாரம் மூன்று முட்டைகள் (71 இலட்சம் குழந்தைகளுக்கு)

நல்ல விஷயம் தான். பாராட்டுக்கள்

ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு 15 ஆயிரம் ரூபாய் நிதி உதவி (இதுவரை ஒரு இலட்சத்து 22 ஆயிரத்து 611 ஏழைப் பெண்களுக்கு 183 கோடியே 81 இலட்சத்து 65 ஆயிரம் ரூபாய் நிதியுதவி)

184 கோடி. இதுக்கெல்லாம் என்ன கணக்கு வழக்கு? யாராவது எதையாவது கேளுங்களேன்...

வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் இல்லாத ஏழைத் தாய்மார்கள் மன்ம் மகிழ இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் (இதுவரை 25 இலட்சத்து 30 ஆயிரம் குடும்பங்களுக்கு: 2008 - 2009ஆம் ஆண்டில் 34 இலட்சத்து 25 ஆயிரம் குடும்பங்களுக்கு).

சென்ற ஆண்டின் மிகப் பெரிய காமெடிகளில் ஒன்று. வருங்காலத்தில் மிகப் பெரிய ஊழலாகப் போகும் ஒன்று.

எரிவாயு இணைப்புடன் கூடிய இலவச எரிவாயு அடுப்புகள் (இதுவரை 3 இலட்சத்து 3 ஆயிரத்து 716 குடும்பங்களுக்கு: 2008 - 2009ஆம் ஆண்டில் 8 இலட்சம் குடும்பங்களுக்கு).

காசு கொடுத்து வாங்குபவர்கள் அனைவரையும் முட்டாளாக்கும் ஒரு விஷயம்.

5 இலட்சத்து 5 ஆயிரத்து 928 கர்ப்பிணிப் பெண்கள் ஒவ்வொருவருக்கும் 6 ஆயிரம் வீதம் இதுவரை 300 கோடி ரூபாய் நிதியுதவி.

நல்ல தமாஷ்! ஏற்கென்னவே இந்திய ஜனத்தொகை கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டுள்ளது என்பதை ஏன் புரிந்து கொள்ளவில்லை?

அரசுத் துறைகளில் இதுவரை 2 இலட்சத்து 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய நியமனங்கள்; 11 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் புதிய தொழிற்சாலைகள் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - இவற்றின் மூலம் சுமார் ஒரு இலட்சத்து 25 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள்.

எத்தனை கோடிகள் லஞ்சமாய் புரண்டதோ ?!?!???

வேலை வாய்ப்பற்ற படித்த இளைஞர்களுக்கு மாதந்தோறும் உதவித் தொகைகள்.

இளைஞர்களை சோம்பேறிகளாய் மாற்றும் ஓர் அற்புதமான விஷயம்.

அடிப்படை வசதிகளைப் பெற அனைத்துக் கிராம மற்றும் அனைத்துப் பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சித் திட்டங்கள்.

பாராட்டுக்குரிய விஷயம். ஆனால் என்ன வசதிகள் செய்யப் பட்டது என்று தான் தெரியவில்லை.

நாடு நகரம் எங்கும் சாலை வேலைகள் - பாலப் பணிகள் - பாதாள சாக்கடைத் திட்டங்கள் - குடிநீர்த் திட்டங்கள்.

இவற்றில் எந்த ஒரு திட்டமும் சரிவர செயல் படுத்தப் படவில்லை என்பது என் கருத்து.

மருத்துவ முகாம்கள் மூலம் வருமுன் காத்திடும் மருத்துவ உதவிகள்; தமிழக அரசும் தனியார் மருத்துவமனைகளுக்கு இணைந்து நடத்தும் இளம் இதய அறுவை சிகிச்சைத் திட்டங்களுக்கு நிதியுதவி.

வரவேறற்க தக்க ஒன்று!

இலட்சக் கணக்கான அமைப்பு சாராத் தொழிலாளர் நலன் காத்திட தனித்தனி வாரியங்கள்.

உள்ள வாரியத்துக்கே ஒரு பிரயோஜனமும் இருப்பதாய் தெரியவில்லை. இதில் புதிய வாரியங்கள் வேறா ?

ஒரு இலட்சத்து 97 ஆயிரத்து 970 விவசாயக் குடும்பங்களுக்கு விவசாயி - விவசாயத் தொழிலாளர் சமூகப் பாதுகாப்பு நல உதவித் திட்டத்தின் கீழ் இதுவரை 99 கோடியே 8 இலட்சத்து 85 ஆயிரத்து ரூபாய் உதவித் தொகை.

யாரை இவை சென்றடைந்தது என்பது தான் கேள்வி!

13 இலட்சத்து 5 ஆயிரத்து 912 முதியோர், ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு உதவித்தொகை மாதம் 200 என்பது 400 ரூபாயாக உயர்வு.

400 ரூபாய்... நல்ல விஷயம் தான் ஆனால் செய்ல்பாடுகளில் ஒரு தெளிவு இருப்பதாகத் தெரியவில்லை.

400 கோடியே 77 இலட்ச்சம் ரூபாய் செலவில் 5 நகராட்சிகள், 23 பேரூராட்சிகள் 2 ஆயிரத்து 146 குடியிருப்புகளில் வாழும் 24 இலட்சம் மக்கள் பயன் பெற 63 கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள்.

இன்னொரு பெரிய ஊழல் அரங்கேற ஓர் வாய்ப்பு.

அரசு புறம்போக்கு நிலங்களில் வீடுகள் கட்டி குடியிருப்போருக்கு வீட்டுமனைப் பட்டா - 2008 மார்ச் மாதத்திற்குள் 3 இலட்சம் மனைப்பட்டாக்கள் வழங்கிட திட்டமிடப்பட்டு இதுவரை 2 இலட்சத்து 97 ஆயிரம் பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.

அப்போ கஷ்டப் பட்டு வீடு கட்றவன் எல்லாம் ?

பெருமழையினால் சேதமடைந்த பகுதிகளுக்கு உடனடி நிவாரணமாகப் பணிகள் தொடன்ங்கிட 200 கோடி ரூபாய்.

இதற்கு பதிலாய் அவர்களுக்கு காப்பீடு நிறுவனங்கள் மூலம் பாலிசிகள் பெற்றுத் தரலாம். எல்லாருக்கும் ஓசியில் கொடுப்பதென்றால் எங்கே போவது?

மொத்ததில் சாதனைகள் எல்லாம் வெறும் பெருங்காய டப்பா தான் :)))

17 comments:

தீலிபன் said...

அப்படியே கொஞ்சம் அம்மா செய்த சாதனைகளை போட வேண்டியது தானே உதாரணம் : மத மாற்ற சட்டம் வாபஸ், இலவச சைக்கிள், ஆடு கோழி வெட்ட போட பட்ட தடி வாபஸ் என்று அம்மா செய்த "சாதனை" நிறைய இருக்கே போட மனசு இல்லையா இல்லே மறந்து விட்டதா? ஏன் தேர்தல் அறிக்கையில் அம்மா அறிவித்த அரிசி விலை மறந்து விட்டதா ?

கருப்பன்/Karuppan said...

//
அரசுத் துறைகளில் இதுவரை 2 இலட்சத்து 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய நியமனங்கள்; 11 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் புதிய தொழிற்சாலைகள் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - இவற்றின் மூலம் சுமார் ஒரு இலட்சத்து 25 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள்.

எத்தனை கோடிகள் லஞ்சமாய் புரண்டதோ ?!?!???
//
லஞ்சம் புரளும் என்பதற்காக, தொழில்துறை வளர்ச்சியை தடுக்க முடியுமா. நெல்லுக்கு பாய்வதில் சிறிது நீர் புல்லுக்கும் பாயும் தடுக்க நினைத்தீர் என்றால் நெல்தான் காயும் :-)))

//

400 கோடியே 77 இலட்ச்சம் ரூபாய் செலவில் 5 நகராட்சிகள், 23 பேரூராட்சிகள் 2 ஆயிரத்து 146 குடியிருப்புகளில் வாழும் 24 இலட்சம் மக்கள் பயன் பெற 63 கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள்.

இன்னொரு பெரிய ஊழல் அரங்கேற ஓர் வாய்ப்பு.
//
என்ன சார் செல்லுறீங்க ஊழல் அரங்கேற வாய்ப்பு உள்ளது என்பதற்காக மக்கள் எல்லாரும் உப்புத்தண்ணி குடிச்சு வாழனுமா?? எங்க ஊர்ல கூட இப்ப நல்ல குடிதண்ணி கிடைக்கிறது. இது இந்த ஆட்சில் துவங்கப்பட்டதா என்பதெல்லாம் எனக்கு தெரியாது, இருப்பினும் குடிநீர் இன்றியமையாத் தேவையாகும் அதைப்பற்றி தாங்கள் அறிந்திருக்காதது வருந்தத்தக்கது!

இலவசங்கள் விஷயத்தில் நான் உங்கள் கருத்துக்களை ஆமோதிக்கிறேன். நான் விவசாய குடும்பத்திலிருந்து வருபவன், கடனை முழுவதுமாக செழுத்திய எனது சொந்தக்காரர்கள் இனிமேல் வாங்கும் கடன்களை கட்டப்போவதில்லை என சூடம் அணைத்து சபதம் எடுத்துள்ளனர். விவசாய கடன் கட்டாமல் இழுத்தடித்தவர்கள் குதூகலத்தில் இருக்கின்றனர்.

Madhusudhanan Ramanujam said...

//அப்படியே கொஞ்சம் அம்மா செய்த சாதனைகளை போட வேண்டியது தானே உதாரணம்...//

எதுவும் மறக்கலை திலீபன். எந்த பத்திரிக்கையிலும் இன்றைய செய்தி என்னவோ அதைத்தான் வெளியிடுவாங்களே தவிர சில வருஷம் முன்ன நடந்த ஒரு நிகழ்வை செய்தியா வெளியிட மாட்டாங்க. அது போலதான் இதுவும். நான் திமுக விற்கு எதிரா எழுதினதும், "இவன் ஜெ வின் அபிமானி" அப்படினு சொல்றது சரி இல்லை. என்னோட சில பழைய பதிவுகளை படிச்சால் நான் இவங்க ரெண்டு பேர் பக்கமும் இல்லை அப்படிங்கிறது உங்களுக்கு புரியும்.

Madhusudhanan Ramanujam said...

//லஞ்சம் புரளும் என்பதற்காக, தொழில்துறை வளர்ச்சியை தடுக்க முடியுமா. நெல்லுக்கு பாய்வதில் சிறிது நீர் புல்லுக்கும் பாயும் தடுக்க நினைத்தீர் என்றால் நெல்தான் காயும் :-)))//

உடனே தவறா எடுத்துக்கறீங்களே? என் கருத்து அதுவல்ல.தமிழக அரசியலில் 1975க்கு பிறகு லஞ்சம் அப்படிங்கிற ஒரு விஷயமில்லாம எந்த ஒரு திட்டமாவது நிறைவேறி இருக்கா சொல்லுங்க. எது ஒரு திட்டமும் இருன்க்கும்னு தோணலை. இது திமுக மட்டுமின்றி அதிமுக ஆட்சியிலும் நடந்திருக்கு. நம் மாநிலத்தில் பல சமயங்களில் பெரிய திட்டங்கள் வகுக்கப் படுவதே ஊழலுக்கு வழி வகுக்கத்தான் என்று சொல்லும் நிலைக்கு ஆளாக்கி விட்டனர் நம் அரசியல்வாதிகள்... என்னதை சொல்ல ?

dondu(#11168674346665545885) said...

//5 இலட்சத்து 5 ஆயிரத்து 928 கர்ப்பிணிப் பெண்கள் ஒவ்வொருவருக்கும் 6 ஆயிரம் வீதம் இதுவரை 300 கோடி ரூபாய் நிதியுதவி.

நல்ல தமாஷ்! ஏற்கென்னவே இந்திய ஜனத்தொகை கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டுள்ளது என்பதை ஏன் புரிந்து கொள்ளவில்லை//?

திட்டம் என்னவோ நல்ல திட்டம்தான். குஜராத்தில் மோடி செய்கிறார். பிரசவச் சாவுகளை தடுக்கும் நோக்கத்தில் அவர் செயல்பட்டு வருகிறார். கர்ப்பிணிகள் செத்தால்தான் ஜனத்தொகை கட்டுப்படுத்தப்படும் என்று யாருமே கூற மாட்டார்கள்.

ஆனால் இதில் ஒரு பெரிய சிக்கல். மோடி அரசு லஞ்ச ஊழல்கள் அற்ற அரசு. ஆனால் கலைஞர் அரசை அவ்வாறு கூற இயலாதே. அதுதான் யோசிக்க வேண்டியிருக்கிறது.

நானும் ஜெயலலிதாவுக்கு வக்காலத்து வாங்கவில்லை. ஆனால் அவர் செயல்படுத்திய மழை நீர் சேமிப்பு திட்டம் கண்டிப்பாக கலைஞர் ஆட்சியில் வந்திருக்காது என்று அடித்து கூறுவேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Madhusudhanan Ramanujam said...

வணக்கம் டோண்டு அவர்களே...

ரொம்ப நாளைக்கு பிறகு மறுபடி எழுதறேன் நீங்க வந்து கருத்து சொன்னதில் எனக்கு ரொம்ப சந்தோஷம்.

நீங்க சொல்ற கருத்தை நானும் ஆமோதிக்கிறேன். மோடி மேல ஒரு குற்றச்சாட்டும் சொல்ல முடியாதபடி அவர் வாழ்ந்து காட்டி இருக்கார். ஆனா என்ன கொடுமைன்னா மோடி மாதிரியான நல்ல தலைவர்கள் இருக்கிற அதே நாட்ல தான் நம்ம ஜெ மற்றும் முக மாதிரி ஆளுங்களும் இருக்காங்க. அட பணத்தை தான் மூட்டை மூட்டையா சம்பாதிதாயிற்றே இனியாவது இருக்கும் பதவிக்கு பொருந்தும் வகையில் மக்களுக்காக ஏதாவது செய்யக் கூடாதா என்ற ஒரு ஆதங்கம் தான் வருகிறது.

கருப்பன்/Karuppan said...

//
தமிழக அரசியலில் 1975க்கு பிறகு லஞ்சம் அப்படிங்கிற ஒரு விஷயமில்லாம எந்த ஒரு திட்டமாவது நிறைவேறி இருக்கா சொல்லுங்க. எது ஒரு திட்டமும் இருன்க்கும்னு தோணலை. இது திமுக மட்டுமின்றி அதிமுக ஆட்சியிலும் நடந்திருக்கு. நம் மாநிலத்தில் பல சமயங்களில் பெரிய திட்டங்கள் வகுக்கப் படுவதே ஊழலுக்கு வழி வகுக்கத்தான் என்று சொல்லும் நிலைக்கு ஆளாக்கி விட்டனர் நம் அரசியல்வாதிகள்... என்னதை சொல்ல ?
//
கடந்த முப்பது ஆண்டுகளில் ஊழல் உப்பிப்போனதென்னவோ உண்மைதான். ஆனால் ஊழலை ஒழிக்கிறேன் பேர்வழி என்று நலத்திட்டங்களை கிடப்பில் போட முடியாதல்லவா? ரோடு போடுவதில் கூடத்தான் ஊழல் நடக்க வாய்ப்புள்ளது அதற்காக ரோடே போடாமலா இருக்க முடியும். எனினும் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும் போது அதில் நடக்கும் ஊழல்களை தடுக்க ஏதாவது செய்யலாம்!! என்ன செய்யலாம் என என்னை கேட்டீர்களென்றால் நான் அம்பேல்!!!

Madhusudhanan Ramanujam said...

//என்ன செய்யலாம் என என்னை கேட்டீர்களென்றால் நான் அம்பேல்!!!
//

:)))

குண்ணக்குடி வைத்யநாதன் said...

//ஆனால் இதில் ஒரு பெரிய சிக்கல். மோடி அரசு லஞ்ச ஊழல்கள் அற்ற அரசு. //

வந்துட்டாண்டா பாப்பார கிழட்டு கம்மனாட்டி! பாப்பானுக்கு வக்காலத்து வாங்க!

Anonymous said...

//
மோடி மேல ஒரு குற்றச்சாட்டும் சொல்ல முடியாதபடி அவர் வாழ்ந்து காட்டி இருக்கார்.
//

Good Joke.

dondu(#11168674346665545885) said...

குன்னக்குடி வைத்தியநாதன் பெயரில் வந்திருக்கும் அனானி,

உன்னை மாதிரி ஜாட்டானுக்கெல்லாம் பயப்பட வேறு ஆளை பாரு அப்பேன். டோண்டுவிடம் அது நடக்காது. நீ சொன்னததற்காகவே இன்னும் பின்னூட்டங்கள் போடுவேன்.

டோண்டு ராகவன்

Anonymous said...

dondu(#11168674346665545885) said...
//திட்டம் என்னவோ நல்ல திட்டம்தான். குஜராத்தில் மோடி செய்கிறார். பிரசவச் சாவுகளை தடுக்கும் நோக்கத்தில் அவர் செயல்பட்டு வருகிறார். கர்ப்பிணிகள் செத்தால்தான் ஜனத்தொகை கட்டுப்படுத்தப்படும் என்று யாருமே கூற மாட்டார்கள்.//


பிரசவச் சாவுகளை தடுக்கும் நோக்கத்தில் அதற்கு முன்பே வயிற்றைக்கிழித்து தாய்-சிசுவை கொல்லும் திட்டம்தான் அவர் ஆட்சியில் சிறப்பாக செயல்படுகிறதே!

அட்டகாசம் போங்கள்....

- குமரேசன்

Anonymous said...

மதுசூதன் சாமி,
இப்பத்தான் கோவி சாமிய அடிச்சு விரட்டுனாங்க.அப்புறம் சுஜாதா மரணத்துல சாதிச் சண்டை,நடுவுல "யோனி" சமாச்சாரம்.எங்க பூத் ஏஜன்ட் சாமி,செல்லா சாமி,பிளையிங் பிள்ளைமார் சாமி,கொண்டை சாமி,கன்ப்யூஸ்ட் சாமி,குறியருக்கும் சாமி அல்லாரும் இதுனால ரொம்ப டயர்டுங்க இப்ப நீங்க ப.அறிவுக்கு பொருத்தமில்லாம சாதனை அது இதுன்னுகிட்டு.எங்க சாமிகளையெல்லாம் டென்சனாக்ககூடாது.கோவமா வருவாங்க,உசாரு!
அன்புடன்
பொன்.பாண்டியன்

உறையூர்காரன் said...

//மோடி மாதிரியான நல்ல தலைவர்கள் //

"ஆயிரம் பேர கொன்னவன் அரை வைத்தியன்" இது பழமொழி
"இரண்டாயிரம் பேர கொன்னவன் நல்ல தலைவன் " இது உங்க புதுமொழியோ.

இத படிச்சுட்டு பதில் சொல்லும் ஓய்.

மோடி Vs ஹிட்லர் - ஒரு ஒப்பீடு

வளர்ச்சி எனப்படுவது யாதெனின்....

Madhusudhanan Ramanujam said...

உறையூர்காரரே,

உங்கள் "வளர்ச்சி என்பது யாதெனில்" பதிவைப் படித்தேன். புள்ளி விவரங்கள் யாவும் நன்றாகவே உள்ளது. ஆனால் பல விவரங்கள் சற்றே பழையதாய் உள்ளது. புதிய விவரங்களைத் தாருங்களேன் அதைக் கொண்டு இன்றைய நிலை என்ன என்பதைப் புரிந்து கொள்ளலாம். ஒரு வேளை நீங்கள் சொல்வது உண்மை எனில் என் பதிவிற்கு மன்னிப்பும் நான் கேட்ப்பேன். எனக்கு வேண்டியது உண்மைகள் தானே தவிர சாதியம் குறித்த சண்டை அன்று.

பொடியாழ்வார் said...

//நீங்கள் சொன்னது போல் மோடி பல்லாயிரக் கணக்கான இஸ்லாமியர்களை கொன்றது நிஜம் எனில் அவரால் முஸ்லிம்கள் பெரும்பான்மையாய் காணப்படும் தொகுதிகளில் எப்படி வெற்றி காண முடிந்தது என்பதற்கு பதில் சொல்லுங்கள்.//

உயிர்பயம் ஐயா! உயிர்பயம்!

தம்சகோதரர்கள் ஆயிரக்கணக்கோர் கொலையுண்டதை வேடிக்கை பார்த்த ஒருவனை 'நாட்டின் வளர்ச்சி' என்று (சிங்கப்பூர் ஆயிருச்சாமில்ல!) எந்த முஸ்லிமாவது தேர்வு செய்யவானா என உங்கள் மனசாட்சியை கேளுங்கள். பிறகு உண்மையைத் தேடலாம்.

Madhusudhanan Ramanujam said...

//"ஆயிரம் பேர கொன்னவன் அரை வைத்தியன்" இது பழமொழி
"இரண்டாயிரம் பேர கொன்னவன் நல்ல தலைவன் " இது உங்க புதுமொழியோ.//

உறையூர்காரரே,
உங்கள் பதிவில் நீங்கள் ஜெர்மனியின் வளர்ச்சி பற்றி எழுதி இருந்ததை படித்தேன். நீங்கள் சொல்லும் ஹிட்லர் உலக யுத்தம் ஆரமிக்க ஓர் காரணமாய் இல்லாது இருப்பின் அவரை நல்லவர் வல்லவர் என புகழ்ந்திருப்போம். ஆனால் சரித்திரம் அதுவன்று.

இப்போது நம் குஜராத் விஷயத்தை எடுத்துக் கொண்டால் குஜாராத் வளர்ச்சிப் பாதையில் மிகவும் நல்ல முறையில் போய்க்கொண்டிருக்கிறது. அது மறுக்க முடியாத உண்மை. நீங்கள் சொன்னது போல் மோடி பல்லாயிரக் கணக்கான இஸ்லாமியர்களை கொன்றது நிஜம் எனில் அவரால் முஸ்லிம்கள் பெரும்பான்மையாய் காணப்படும் தொகுதிகளில் எப்படி வெற்றி காண முடிந்தது என்பதற்கு பதில் சொல்லுங்கள்.

போதும் போதாதற்கு மோடியை திட்டினால் பிராமணனுக்கு கோபம் வரும், புண்ணாக்கிற்கு கோபம் வரும் என்று வேறுஆரமித்துவிடும். உண்மையில் மோடி மிகவும் பின் தங்கிய ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் என்பது தான் உண்மை. ஆனால் அவர் எந்த ஒரு மேடையிலும் போய் நான் பின் தங்கிய வகுப்பைச் சேர்ந்தவன் அதனால் தான் என்னை எல்லாரும் குறை சொல்கின்றனர் என்று மேடைக்கு மேடை முழங்கவில்லை. சாதிப் பெயர் சொல்லி ஓட்டு போடவ்வ்ல்லை, இலவசங்களை காட்டி ஓட்டு கேட்க்கவில்லை. சொந்த தொழில்களை வளர்க்க அரசு கஜானாவை காலி செய்யவில்லை. இப்படி பல விஷயங்களை அடுக்கலாம். இது போல் ஏதாவது ஒன்று சொல்லுங்களேன் நம்முடைய இந்நாள் தமிழக தலைவர்கள் பற்றி.