Thursday, March 06, 2008

பட்ஜெட் என்ற சட்ட பூர்வமான ஊழல்

நாட்டின் பொருளாதாரமா இல்லை ஓட்டு வங்கி அரசியலா என்ற போட்டியில் எதைவிடவும் ஓட்டு வங்கியை காப்பதே முக்கியம் என்ற நம் அரசியல்வாதிகளின் போக்கு மறுபடியும் நிரூபிக்கப் பட்டுள்ளது. சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் தான் இதற்கு மிக நல்லதொரு உதாரணம்.


1. வருமான வரியில் பலருக்கு சலுகை
2. வாகன உற்பத்திக்கு வரிச் சலுகை
3. பலதரப்பட்ட பிரிவினருக்கு (பெண்கள், முதியோர், மைனாரிட்டி) வித்விதமான நிதி ஒதுக்கீட்டுக் கொள்கைகள்

மேற் கூறிய யாவும் முக்கிய அம்சங்களாய் பட்ஜெட்டில இடம் பெற்றுள்ளன. இதை யாவையும் தூக்கிச் சாப்பிடும் வகையில் உள்ள மிகப்பெரிய ஒரு விஷயம் விவசாயிகளுக்கு அளிக்கப் பட்ட 60 ஆயிரம் கோடி தள்ளுபடி! இந்த தள்ளுபடியால் ஏற்படும் சுமையை வங்கிகளும் கூட்டுறவு சங்கங்களும் பிரித்துக் கொள்ள வேண்டுமாம். அது என்னவோ தெரியலை அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் எப்போதும் சுருட்டிய பணத்தைப் பிரித்துக் கொள்கின்றனர் ஆனால் இந்தப் பாவபட்ட வங்கிகள் மட்டும் எப்போதும் கடன் சுமையை பிரித்துக் கொள்ள வேண்டியுள்ளாது. ஏற்கென்னவே பல்வேறு கூட்டுறவு வங்கிகள் சம்பளம் கூட குடுக்க இயலாத பரிதாப நிலைக்கு தள்ள பட்டுள்ளன. இந்த லட்சணத்தில் இப்படி வேறு ஒரு அறிவிப்பு. இதே நிலையில் போனால் இந்திய பொருளாதாரத்தை சீர் செய்ய பல ஆண்டுகள் பிடிக்கும்.

இந்தக் கடன் தள்ளுபடியில் மிகப் பெரிய நகைச்சுவை என்னவென்றால் அரசு இந்த 60 ஆயிரம் கோடி ரூபாயையும் வங்கிகளுக்கு திரும்பத் தருமாம். எப்படி என்பது தான் தெரியவில்லை. அதை விடக் கொடுமை இந்தப் பணம் எப்போது திரும்பத் தரப்படும் என்பதற்கோ அல்லது எப்படி அந்த பணம் ஏற்பாடு செய்யப் படும் என்பதற்கோ எந்த ஒரு பதிலும் தரப்பவில்லை.

துக்ளகில் வெளியான ஒரு குறிப்பு:

12 comments:

dondu(#11168674346665545885) said...

ஒரே செயலில் பல தீமைகள்.
1. வங்கிகளில் பணப்புழக்கத்துக்கு வேட்டு
2. பொறுப்பற்று இருப்பதற்கு ஆதரவு தருவதற்கான சமிக்ஞை
3. கடனை முதலிலேயே ஒழுங்காக திருப்பித் தந்தவனுக்கு இளிச்சவாயன் என்ற அரிய பட்டம்.

இன்னும் சொல்லலா, மனமில்லை மேலும் பட்டியலிட.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Madhusudhanan Ramanujam said...

//இன்னும் சொல்லலா, மனமில்லை மேலும் பட்டியலிட.//

வயிற்றெறிச்சல் தான் மிச்சம்

samurai said...

madhusudhanan,
you have described the budget to be a pattai naamam,
can you explain what that means,
does a pattai naamam have something to do with fraud?

Madhusudhanan Ramanujam said...

//you have described the budget to be a pattai naamam,
can you explain what that means,
does a pattai naamam have something to do with fraud?//

சட்டப்படி நம்முடைய இந்த நிதி ஆண்டின் பட்ஜெட்டை 420 விவகாரம் எனக் கூற முடியாது. ஆனால், இந்த பட்ஜெட்டினால் ஒரு சாதாரண குடிமகன் காணும் பயன் என்ன? இத்தகைய பொருப்பற்ற பட்ஜெட்டினால் விளையும் லாபம் தான் என்ன? இவற்றின் அடிப்படையில் தான் “இந்திய மக்களுக்கு சாத்திய பட்டை நாமம்” தான் இந்த பட்ஜெட் என்பது என் கருத்து.

ஜயராமன் said...

ஐயா,

//you have described the budget to be a pattai naamam, can you explain what that means, does a pattai naamam have something to do with fraud?//

இந்த அன்பர் சொல்வது சரிதான். நாமம் என்பது புனிதமானது. அது ஒரு சமயக்குறியீடு. அதை போற்றுவர்களும், பூசிப்பவர்களும் நிறைய உண்டு.

இதனால், நாமம் என்பதை ஒரு இளக்காரமான, கேலி செய்யும் வார்த்தையாக உபயோகிக்க வேண்டாம். நாமம் போடுவது என்ற வார்த்தையை ஏமாற்றுவது, திருடுவது என்ற பொருளில் உபயோகிக்க வேண்டாம்.

இதுவே அந்த அன்பர் சொல்ல வருவது. இதில் நானும் ஒப்புகிறேன்.

நன்றி

ஜயராமன்

Madhusudhanan Ramanujam said...

//இதனால், நாமம் என்பதை ஒரு இளக்காரமான, கேலி செய்யும் வார்த்தையாக உபயோகிக்க வேண்டாம். நாமம் போடுவது என்ற வார்த்தையை ஏமாற்றுவது, திருடுவது என்ற பொருளில் உபயோகிக்க வேண்டாம்.

இதுவே அந்த அன்பர் சொல்ல வருவது. இதில் நானும் ஒப்புகிறேன்.
//

ஒப்புக் கொள்கிறேன் ஜயராமன். ஆனால் என் நோக்கம் நாமத்தை கிண்டல் செய்வதல்ல. பேச்சு வழக்கில் உள்ள ஒரு விஷயத்தை நானும் அப்படியே உபயோகித்துள்ளேன். அவ்வளவே...

Anonymous said...

"ஒப்புக் கொள்கிறேன் ஜயராமன். ஆனால் என் நோக்கம் நாமத்தை கிண்டல் செய்வதல்ல. பேச்சு வழக்கில் உள்ள ஒரு விஷயத்தை நானும் அப்படியே உபயோகித்துள்ளேன். அவ்வளவே...
//

ஒப்புக்கொண்டுவிட்டு பின்னர் அவ்வளவே என்பது சரியில்லை.

மற்றவர் செய்கிறார்கள். எனவே நானும் என்பது தப்பு. இனி அப்படி செய்யாதீர்கள்.

Madhusudhanan Ramanujam said...

//மற்றவர் செய்கிறார்கள். எனவே நானும் என்பது தப்பு. இனி அப்படி செய்யாதீர்கள்.//

கருத்துக்கு நன்றி ஜயராமன். நீங்கள் சொன்னதை ஏற்று, பதிவின் தலைப்பை மாற்றிவிட்டேன். தொடர்ந்து வாருங்கள். உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.

ஜயராமன் said...

ஐயா,

/// மற்றவர் செய்கிறார்கள். எனவே நானும் என்பது தப்பு. இனி அப்படி செய்யாதீர்கள். ////

இது நான் பதிந்த கருத்து அல்ல. யாரோ ஒரு விஷமி. (அல்லது நலம்விரும்பி).

நீங்கள் தெளிந்துகொண்டதே எனக்குப்போதும்.

பின்னூட்ட கருத்துக்களை வெளியிடும்போது கவனமாக இருக்கவும்.

இப்போது தலைப்பை மாற்றிவிட்டால் இப்போது திரட்டிகளில் மீண்டும் வராது என்று தோன்றுகிறது.

நன்றி

ஜயராமன்

Madhusudhanan Ramanujam said...

நான் தான் தவறுதலாய் அனானியின் பின்னூட்டத்தினை உங்களுடையது என எண்ணிவிட்டேன்.

samurai said...

jayaraman,was the dravida movement responsible for developing this disparaging usage of the word "naamam"?

do you have some information about how this usage came about?

what makes you suspect the anonymous comment to be from a vishami?

Madhusudhanan Ramanujam said...

//was the dravida movement responsible for developing this disparaging usage of the word "naamam"?//

எனக்கு என்னவோ இது தேவையான ஒரு விஷயமாய் தோன்ற வில்லை. இன்றைய சூழ்நிலையில் சண்டை சச்சரவுகளை தவிர்த்து சுமுகமான ஒரு சூழலை ஏற்படுத்த விழைவதே நல்லது. அதை விடுத்து திராவிடன் செய்தான ஆரியன் செய்தானா என்பதெல்லாம் வேண்டாமெனக் கருதுகிறேன்.