Friday, June 13, 2008

இல்லாத திராவிடமும் அதைக் காக்கும் கழகங்களும்

சின்ன வயசுல பள்ளிக்கூடத்துல படிக்கும்போது, ஆரியர்கள் எல்லாம் ஐரோப்பாவிலேர்ந்து கைபர் கனவாய் வழியா இந்தியாவுக்கு வந்தாங்க. வந்ததோட சும்மா இல்லாம அங்க இருந்த நிஜமான இந்தியரகளை எல்லாம் விரட்டிவிட்டாய்ங்கனு சொல்லிக் குடுத்தாங்க. அப்ப நமக்கு அதெல்லாம் ஒரு எழவும் புரியலை. இப்போ என்னடான்னா, நம்ம ஊர் கழக கண்மணிகள் எல்லாரும் ஒண்ணாச் சேந்த்து, பார்ப்பனன் எல்லாரும் ஆரியன், அவங்க எல்லாம் வந்தேறி, புண்ணாக்குனு ஏதோ கதை பண்ணி அரசியல் ஆதாயம் தேடிகிட்டிருக்காங்க. சரி இது நிஜத்துல என்ன விஷ்யம்னு பார்க்கலாம்னு கொஞ்சம் தோண்டினா...


பல பேர் (வெளிநாட்டுக்காரங்க தாம்பா) மேக்ஸ் முல்லர் கொண்டு வந்த இந்த ஆரியர்கள் கதை பெரும் கட்டுக் கதை அப்படினு பலவித ஆதாரங்களின் மூலமா அடிச்சி சொல்றாங்க. அதுல கொஞ்சத்தை நாம இங்க பாக்கலாம்.

முதலில் இந்த வந்தேறி கதை என்னானு பாக்கலாம். இந்தக் கத்தைப் படி:

1. வேதங்கள் உருவான கால கட்டத்தில் வாழ்ந்த மக்கள் தான் ஆரியர்கள்
2. ஆரியர்கள் ஐரோப்பாவைச் சேர்ந்த ஒரு பழங்குடியினர்
3. சுமார் கிமு 1500ல் இவர்கள் கைபர் கணவாய் வழியாய் இந்தியாவிற்குள் ”வந்தேறினர்”
4. அவ்வாறு வந்தவர்கள் அங்கு மண்ணின் மைந்தர்களாய் வாழ்ந்து வந்த திராவிடர்களை அடித்து விரட்டிவிட்டதால் திராவிடர்கள் அனைவரும் தென் இந்தியாவில் குடியேறி விட்டனர்
5. வேதங்கள் அந்தைத்தும் ஆரியர்களால் எழுதப் பெற்றது

மேற்கூறிய 5 விஷயங்கள் தான் ”ஆரியன் இன்வேஷன் தியரி” என்பதன் சாரம். இனி இந்த கிமு கிபி இதெல்லாம் இவங்களுக்கு எங்கிருந்து கிடைச்சதுன்னு பார்க்கலாம்.

புத்தர் இயேசுவிற்கு முன்பே வாழ்ந்தவர் என்பது உலகமறிந்த ஒன்று. புத்தரின் காலம் இயேசுவிற்கு சுமார் 400 ஆண்டுகள் முந்தையது. அதாவது கிமு 400. அன்று வாழ்ந்த சில அறிவாளிகள் பைபிள் படி உலகம் 4000 ஆண்டுகள் முன்னர் தோன்றியது என்று கணக்கிட்டனர். மேலும் நோவாவால் உண்டாக்கப் பெற்ற வெள்ளம் கிமு 2500ல் என்றும் கணக்கிட்டனர். ஆகையால் ஆரியர்கள் இந்தியாவில் குடியேறியது இந்த வெள்ளத்திற்குப் பின் மற்றும் புத்தருக்கு முன் என்று கணக்கிட்டு சுமார் கிமு 1500ல் ஆரியர்கள் இந்தியாவிற்குள் நுழைந்தனர் என்று கணித்தனர். இவை அனைத்தும் எவ்வளவு அழகானதொரு கற்பனை என்று படித்த பலருக்கு தோன்றிவிடும் வாய்ப்புகள் மிகவும் அதிகம். இதை ஒரு விஞ்ஞானப் பூர்வமான விஷயம் என்பதை எப்படி நம் பகுத்தறிவுக் குஞ்சுகள் ஏற்றன என்பது இன்னொரு புறம்.

ஆரிய வந்தேறிகள் புராணம் என்பதே ஒரு பெரும் பொய்:

வேதங்களில் சரஸ்வதி என்று ஒரு நதி பல இடங்களில் குறிப்பிடப் பட்டுள்ளது பலருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் நவீன இந்தியாவில் அந்த நதியை எங்கும் காணவில்லை (ஆத்தை கானோமின்னு வடிவேலு பாணியில் போலீசில் புகார் பண்ணலாமா ?!?) என்னாயிற்று இந்த நதிக்கு? வேதங்களில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்றும் மிக முக்கியமான புனித நதிகளாய் போற்றப் பட்டுள்ளன. தற்காலத்தில் அந்த நதி இல்லை என்பதால் வேதங்களின் பல விஷயங்கள் இது போல் பொய்யானவை தான் என்று பல விஷமிகளும் பகுத்தறிவாளர்களும் இன்றளவும் கதை பரப்பி வருகின்றனர். ஆனால் நாசா மற்றும் இஸ்ரோவின் ஆய்வுகளின் மூலம் அந்த நதி இருந்தற்கான அடையாளங்கள் தெள்ளத் தெளிவாய் நிரூபிக்கப் பட்டுள்ளது. இந்த ந்தியானது சுமார் 6000 ஆண்டுகளுக்கு முன்னர் வறண்டு போனதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கிறது. இந்த ஆறு வறண்டதற்கான காரணம்:

இந்தோஆசிய டெக்டானிக் தட்டுகளுக்கும் யுரேசிய டெக்டானிக் தட்டுகளுக்கும் இடையான உறாய்வினால் சரஸ்வதி நதியின் நீர் வரத்துக்கு ஆதாரமாய் விளங்ங்கிய யமுனை மற்றும் சட்லெஜ் நதிகளின் பாதை சற்று மாறியதன் காரணத்தால் சரஸ்வதி நதி வறண்டு போனது ஆதாரப் பூர்வமாய் நிரூபிக்கப் பட்டுள்ளது.

ஒருவேளை ஆரியர்கள் தான் வேதங்களை உருவாக்கினர் என்ற்றால் அவர்கள் 6000 ஆண்டுகளுக்கு முன்னதாய் இந்தியாவுக்கு வந்ததாக கதை சொல்லி இருக்க வேண்டும். இப்படி அபத்தமாய் ஒரு கதையைச் சொல்லி அதனால் எவ்வளவு தலை வலி பாருங்கள். இது மூலம் நாம் தெரிந்து கொள்வது என்னவெனில் பண்டைய இந்தியாவில் ஆரியர்கள் எங்கிருந்தும் வந்தேறவில்லை. ஆரியர்கள் என்பதை தனியொரு இனமாய் சித்தரித்துள்ளனர். அவர்களுக்கும் திராவிடர்களுக்கும் சண்டை இத்யாதி இத்யாதி எல்லாம் பெரும் கட்டுக் கதை.

ஆரியர்கள் மற்றும் திராவிடர்கள் என்பதே கட்டுக் கதை என்றான பின், இல்லாத திராவிடத்தைக் காக்க எதற்கு இவ்வளவு கழகங்கள். பேசாமல் நம்மூர் திராவிடக் கழகங்கள் எல்லாம் பெயரை மாற்றி வைத்துக் கொள்ளலாம்.

எது எப்படியோ, ஆண்டாண்டு காலமாய் பொய்களையும் புரட்டுகளையும் மட்டுமே கையில வைத்துக் கொண்டு பல்லாயிரம் கோடிகளை சுருட்டிவிட்டனர் நம் அரசியல் வாதிகள். வாழ்க ஜனநாயம் !!!

பின்குறிப்பு:
வட இந்தியர்கள் எல்லோரும் ஆரியர்கள் தான் என்றால் அவர்களுடன் கூட்டணி வைப்பானேன்? ஆரியர்களால் திராவிடர்களுக்கு எவ்வளவு இடர்கள் விளைந்துள்ளன? அதை எல்லாம் சற்று எண்ணிப் பார்க்கலாமே.

இன்று பா. ஜ மதவாதிகள் என்று கூறுவோர் எதற்கு அவர்களோடு 4 ஆண்டுகள் கூட்டு வைத்திருந்தனர்? ஒரு வேளை அவர்கள் அன்று மதவாதிகளாய் இல்லையோ?


25 comments:

Anonymous said...

You are going to get tremendous response. It is going to be great education for you - I mean, from the feedbackers - how the other half thinks.

Great going. I shall pitch in at the last!

dondu(#11168674346665545885) said...

இது செவிடன் காதில் ஊதிய சங்காகத்தான் போகப்போகிறது. வேறு ஏதாவது நல்ல வேலை இருந்தால் பார்க்கவும்.

தசாவதாரம் பார்த்தாயிற்றா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

Madhusudhanan Ramanujam said...

//இது செவிடன் காதில் ஊதிய சங்காகத்தான் போகப்போகிறது. வேறு ஏதாவது நல்ல வேலை இருந்தால் பார்க்கவும்.

தசாவதாரம் பார்த்தாயிற்றா?//

என்ன பண்றது ராகவன்? விட முடியலையே. திராவிடத்தின் பெயரால் விளையும் பிரச்சினைகள் அப்படி.

இன்னும் தசாவதாரம் பார்க்கவில்லை. எங்க ஊர்ல தெலுங்கில் வந்துள்ளது. நான் அதை தமிழில் தான் பார்க்கவேண்டும் என்று உள்ளேன்.

Anonymous said...

Good concept actually..do you have any proof of the reserach conducted on Saraswathy river...
Not to question you..but to understand better.

Pudhu Anony!

Madhusudhanan Ramanujam said...

//Good concept actually..do you have any proof of the reserach conducted on Saraswathy river...
Not to question you..but to understand better.//

கொஞ்சம் மெனக்கெட்டால் போதும் அனானி. கூகிள் தயவில் உங்களுக்கு அனைத்துத் தகவல்களும் கிடைக்கும். நேரமிருந்தால் நானும் சில சுட்டிகளை இங்கு தருகிறேன்.

வடுவூர் குமார் said...

ரொம்ப நாளாக எங்க இந்த பக்கமே காணவில்லை.
செம விஷயத்தோட தான் வந்திருக்கீர்கள்.

அறிவன்#11802717200764379909 said...

ரொம்பவும் மேம்போக்காக எழுதி இருக்கிறீர்கள்.
முதல் அனானி சொன்னது போல உங்களுக்கு ஒரு புதிய அனுபவம் காத்திருக்கிறது.
நானும் கடைசியில் வருகிறேன்.

Madhusudhanan Ramanujam said...

//ரொம்ப நாளாக எங்க இந்த பக்கமே காணவில்லை.
செம விஷயத்தோட தான் வந்திருக்கீர்கள்.//

ரொம்ப அலைச்சல். ஒரு 7 மாசமா அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் ரோடு போட்டுக் கொண்டிருந்தேன். அதான் இந்தப்பக்கம் வர முடியவில்லை.

என்ன விஷயமோ எப்படியோ நீங்க போடும் பின்னூட்டங்களில் தான் உள்ளது விஷயத்தின் வீரியம்.

Madhusudhanan Ramanujam said...

//ரொம்பவும் மேம்போக்காக எழுதி இருக்கிறீர்கள்.
முதல் அனானி சொன்னது போல உங்களுக்கு ஒரு புதிய அனுபவம் காத்திருக்கிறது.//

ஒப்புக் கொள்கிறேன். சற்று மேலோட்டமான ஒன்று தான். ஆனால் மிகவும் ஆழ்ந்த முறையில் எழுத வேண்டுமெனில் ஒரு புத்தகம் தான் வெளியிட வேண்டும். அவ்வளவு நேரமில்லை. அது மட்டுமின்றி இந்த அனுபவம் ஒன்றும் புதிதல்ல அனானி... கொஞ்ச காலம் இந்தப் பக்கம் வரவில்லை அவ்வளவே. என் பழைய பதிவுகளை படித்தால் உங்களுக்கு இது புரியும்.

senthil said...

Senthil,
Hi madhu, i have some doubts on this..But people from brahmis only started to bring out the sources of these kind of theories .. they are PT Srinivasa iyengar , Iyravadam mahadevan and so many people.... here i have lot of confusion....can any one plz explain

Madhusudhanan Ramanujam said...

//i have some doubts on this..But people from brahmis only started to bring out the sources of these kind of theories .. they are PT Srinivasa iyengar , Iyravadam mahadevan and so many people.... here i have lot of confusion....can any one plz explain//

நீங்க சொல்ற விஷயத்தை நான் மறுக்கலை. ஆனால் நான் சொல்லும் விஷயம் நீங்கள் கூறியவர்கள் மட்டுமின்றி இன்னும் பலரின் கருத்தினை உள்ளடக்கியது. ஏற்கென்னவே இன்னொரு பின்னூட்டத்தில் சொன்னது போல் கொஞ்சம் நேரம் செலவழித்துத் தேடிப்பார்த்தால் உங்களுக்கே தெரியும் செந்தில்.

Anonymous said...

madhu,
history is what SOME people wrote, not what ACTUALLY happened....
unohoo

Anonymous said...

I am the first anonymous feed-backer Sir. A few feedbacks till now. Hope more will come in. Meantime, I have some comments to make here with your kind permission.

This issue of Aryan-Dravidian controversy, turned to political advantage, is not new. You appear to date it from just the birth of Kazagams, i.e the so-called Needhik katchi. It was often said, from time to time, by some people from ancient times, in Tamil naadu.

The fact that there is some ingress of Sanskrit speaking people into Tamil country, is confirmed by historians like Neelakanta Shastri. I am sure, you don’t have any animosity with such historians as they are non-political and have no personal axes to grind. He also said that the same Aryans encountered hostility and death in Deccan; and, after being killed in Deccan, the rest managed to reach the Tamil country. They did not come in droves; but, group after group. He cites the allegorical story of Agathiyar, an Aryan brahmanan, in Deccan. The Deccan king Vatapi started killing the Aryans, cunningly; and it was left to Agaththiyar, to cleverly kill the Kings. (If you don’t have any book, just see the Tamil film Agathiyar). It is an allegorical story, Shastri reminds us. Its message is that the Aryans faced hositity and were unwelcome in Deccan.

This Sanskirt speaking people were fair complexioned, since they came from colder parts of the North India. Don’t we see Kashmiris fairer than us? This fair complexion and their strange ways of life - in worship of gods, in social and private life etc. - had excited the curiosity of indigenous Tamils, as we see, a new attendance in a nursery class coming in a new gown, and all other old timer girls, trying to cultivate the friendship of the new girl (Read Swami and Friends for such a scene. How the new boy, Rajam was liked to be befriended by other students!)

The new comers and the indigenous inhabitants of Tamil country came face to face; and there was no hostility but only welcome with open arms. A desire to share one another's ways of life animated their lives. Thus, by gradual degrees, the Aryan i.e the Sanskrit speaking Northerners could be able to integrate their life with that of the indigenous people. The new comers also indulged in miscegenation (mixing of blood through women) but with only those people who were in priest craft. Maybe, due to professional reasons. And, now in TN, we have the amalgamation of this culture only today.

What went wrong down the line in social and religious history of Tamilnadu?

The Brahmins started to consider themselves as the inheritors of the legacy of the aforesaid Northerners, accepting the caste system and the unearned benefit of being first in caste by virtue of births. Together with this, they started dominating the social and political scene in Tamil nadu and began to look down upon others. This all happened long before the birth of critics of Brahmins, the so-called antibrahmins. It is possible for you to read and know about such history of Tamil nadu, instead of bothering to know who entered through Khyber pass.

Thus, the dissatisfaction with the Brahmins and with their domination began to have their germination and gestation. Finally, it came to open fully during the colonial period and thereafter. The birth of anti-brahminism of Kazagams is thus a logical corollary of history.

This raking up of Aryan Dravidian issue became a handy tool when someone of the critics found that Max Muller said like that.

So, it is a tool, mind you. But the anti-branimism is not carved out with that tool only. Its part is so small but it appears so big to people like you.

Hopefully, you may read more in the direction I have shown i.e your journey needs to be within Tamilnadu. Not to the Sindhu valley in Pakistan.

Madhusudhanan Ramanujam said...

//I am the first anonymous feed-backer Sir. A few feedbacks till now. Hope more will come in. Meantime, I have some comments to make here with your kind permission...//

என் பதிவில் கருத்துக்களுக்கு என்றும் தடை இருந்ததில்லை. கருத்துக்களில் ஆபாசம் இல்லாத வரை பிரச்சினை இல்லை.

மேலும் உங்களுக்கு பதில் கூறவேண்டுமெனில், நீங்கள் சொல்வது ஒரு சிறு பகுதி. முன் காலத்திலும் இந்த ஆரிய திராவிட சர்ச்சைகள் இருந்து வந்ததென்னவோ நிஜம் தான். ஆனால் நீங்கள் கூறும் அதே அகத்தியர் படத்தில் அகத்தியர் ஒரு தமிழ் அறிஞர் என்று மட்டுமே உள்ளதே தவிர எந்த ஒரு இடத்திலும் ஆரிய / திராவிட என்று பேசவில்லை. வாதாபி அரசன் கதை தனை முழுதும் ஒரு முறை பார்க்கவும்.

மேலும் நீங்கள் சொல்வது போல் சில பிராமணர்கள் சாதியின் பெயரால் பெரும் அநீதிகளைச் செய்ததை நான் மறுக்கவில்லை. ஆயின் பிராமணர்கள் அனைவரும் கெட்டவர்கள் எனும் ஓர் மாயை, அவர்களை சமூகத்திலிரிந்து ஒதுக்கி வைக்கும் முயற்சிகள் அனைத்தும் திராவிடக் கட்சிகளின் காலத்தில் தான் பெரிய அளவில துவங்கின.

இதில் வேதனை அளிக்கும் விஷயம் என்னவெனில், திராவிட மற்றும் பகுத்தறிவுக் குஞ்சுகள் இந்த எதிர்ப்பை பணம் பண்ணும் ஒரு உத்தியாகவும், பதவி தரும் ஒரு சாதனமாகவும் மட்டுமே பயன்படுத்தி வந்துள்ளனர். அதைச் சாடுவதே என் நோக்கமாகும்.

பி.கு: என்னிடம் அகத்தியர் படம் ஒரிஜினல் சிடி இருக்குப்பா. திருட்டு விசிடி இல்லை :))

Anonymous said...

the post itself is a response to dravdianism so all ur points don't hold water

Anonymous said...

//பார்ப்பனன் எல்லாரும் ஆரியன், அவங்க எல்லாம் வந்தேறி//

நீங்கள் இக்கருத்தை மறுக்க ஆண்டுக்கணக்கு தப்பு என்ற வாததை முன்வைக்கின்றீர்கள். ஆண்டுக்கணக்கு வேண்டுமென்றால் தவறாக இருக்கலாம். ஆனால் பிராமணர்கள் வந்தேறிகள் என்பதுதான் உண்மை.

ஆனால் மற்ற எல்லா ஜாதியரும் வந்தேறிகள்தான். ஏன்னெனில், மனித இனம் தோன்றியது ஆப்ரிக்காவில். அங்கிருந்துதான் உலகமெல்லாம் பரவியதாக தற்போதைய மைட்டோகான்ரியல் மரபணு ஆய்வு மூலம் ஊகித்துள்ளார்கள். எனவே ஆல் இண்டியன்ஸ் வந்தேறிகள் தாம்!

இன்னொரு விஷயம், இலங்கை தமிழர் நிலையும் தமிழக பிராமணர் நிலமையும் சற்றே ஒன்றுதான். இங்கு போலவே இலங்கையில் தமிழர் உயர்நிலையில் இருப்பது கண்டு பொறுக்காத சிங்கள பேரினவாதிகள், நியாமான முறையில் சிங்கள முன்னேற்றத்தினை ஊக்குவிக்காமல்,அப்பாவி சிங்கள மக்களை இலங்கை தமிழர்க்கு எதிராக தூண்டிவிட்டனர். இலங்கை தமிழன் வந்தேறி என முத்திரை குத்தப்பட்டான். அங்கு தமிழர் சிங்களவர் இருவருமே வந்தேறிகள்தானே.

இங்கே, இலங்கை தமிழர் விடயத்தில் ஒரு நியாயம், பிராமணன் விடயத்தில் ஒரு நியாயம்...ஒரு வேளை இதுதான் பகுத்தறிவா?

Madhusudhanan Ramanujam said...

//the post itself is a response to dravdianism so all ur points don't hold water//

நல்ல காமெடி போங்க. உங்களுக்கு தமிழ் படிக்கத் தெரியாதா இல்லை, திராவிடத்தின் பெயரால் நீங்களும் பிழைப்பு நடத்தி வருகிறீர்களா?

மாயவரத்தான்... said...

//Hi madhu, i have some doubts on this..But people from brahmis only started to bring out the sources of these kind of theories .. they are PT Srinivasa iyengar , Iyravadam mahadevan and so many people.... here i have lot of confusion....can any one plz explain //

வாவ்.. இவரின் இந்தப் பொன்னான கருத்துப்படி பார்த்தாலும், ஆரியர்கள் வந்தேறிகள் என்பதை ஒரு சில மொள்ள மாறிகள் மட்டுமே கூறுவதால் அதை மட்டும் எப்படி ஒப்புக் கொள்வதாம்? பிராமணர்கள் யாரும் நாங்கள் வந்தேறிகள் என்று சொல்லியிருக்கிறார்களா? அப்படியெனில் அந்தக் கருத்தை பேசுவோம். என்னங்க செந்தில், பதில் இருக்கா? அது சரின்னா இதுவும் சரிதான். இது தப்புன்னா அதுவும் தப்பு. எப்படீஈஈஈஈஈஈஈ?!

Madhusudhanan Ramanujam said...

//ஆரியர்கள் வந்தேறிகள் என்பதை ஒரு சில மொள்ள மாறிகள் மட்டுமே கூறுவதால் அதை மட்டும் எப்படி ஒப்புக் கொள்வதாம்?//

இந்த வாவெல்லாம் இருக்கட்டும். உங்களுக்கு தெரிந்த வரை அமைந்தகரை அமெரிக்காவில் தான் உள்ளது என்றால் அதனால் அமைந்தகரை அமெரிக்காவில் இருக்கிறது என்று அர்த்தமா. சும்மா இனிமேலும் ரீல் விடாமல் நீங்கள் அடிக்கடி வார்த்தையளவில் மட்டுமே பயன்படுத்தும் பகுத்தறிவை கொஞ்சம் வாழ்க்கையிலும் பயன் படுத்துங்களேன்.

Anonymous said...

Ramanujam!

I myself did not see the film. I thought the story was like that. So, just disregard my statement about the film; and kindly go to Oxford History of South India by Neelakanta Shastri. You will find there that Shastri is maintaining that the Sanskrit speaking people, when they entered the deccan, faced hostility. But, those who survived, entered Tamil speaking country i.e TN, and were welcomed with open arms.

So, could you leave the film out and go to the book please ?

He also says how the Sanskirt speaking Northerners could slowly be able to graft their culture on to the indigenous culture; which was accepted without demur.

So, it is historians who should be our meeting point; not films.

The film is for mass entertainment. It is based not on historical records; but on hearsay i.e unwritten records: oral tradition, legends, superstitions etc. That Agasthiyar wrote the first Tamil grammar and it was from him that Tamil originated, is a fabrication done by Brahmins, which was stoutly refuted by Tamil scholars. Where was the book? The Brahmins' reply was that it got lost in the mist of the past. But his student (that too, an unfounded theory) Tholkappian's grammar is still extanct.

I dont say I am correct. All that I want you is to not take any such stories depicted in films as true. That the existence of a person called Agasthian may or may not be true but that he is a Tamil scholar is not established. I am sorry I have misguided you to the film.

But Brhamins of TN believe that he was their first Brahmin ancestor for them. We have nothing to do with such belief. Because, everyone wants an illustrious forefather to be proud of. But remember, in taking Agasthiyan as their original forefather, the Brahmins want us to believe that they came from North. Agasthiyan was a Northerner.

Ramanujam, more words from me on certain behaviour pattern of Brahmins. Your acceptance that Brahmins of the past indulged in social excesses using caste hierarchy and Hindu religion etc. is gracious on your part.

And, I agree with your last para about Dravidian parties, who, when a golden opportunity fell to them, seized upon it to chase brahmins to no end. But it is a political act finally. Once they got into power, the antibrahminism was no longer needed. Now, as you can see, anti-brahminism has become unpopular. It is not a political issue. It is raked up, off and on, to titilate the old timers among the parties. This generation of anti-brahmins have already put one foot in grave; and time is not far off when they put their next also. We must concern ourselves with the next generation and see what they think. I find there is an obvious change in their thinking. None of the wives of dravidian politicians is anti-brahmin, nice to record it here!

But what about Brahmins themselves? Your attack on the theory that they came from Khyber pass is all good, from a general point of view. But as Senthil has pointed out, there are Brahmins in TN who still believe that they are anniyans; they came from North; their mother-tongue is Sanskrit; and their first forefather was Agasthiyan.

They believed in the same foreignness in the past, which led to the xenophobia, that we call, anti-brahminism. If there were no such xenophobia, dear Ramanujam, do you think, the Tamil Brahmins would have had a change of heart? It is to Periyaar and his followers that the credit should go of making Tamil Brahmins to undergo the change of heart.

Coming to the present times, I would requst you to subscribe to religious magazines edited by Tamil Brahmins and circulated only among the community. There are some. You can also read their monthly magazine Tambras. I subscribe to many an unknown such religious magazines whose ciruclations run to a few hundreds or a few thousands. I also regularly read the monthly magazine coming from Tambras (Tamilnadu Brahmin Association). There, one comes across, now and then, articles extolling the virtues of ancient brahmins and how they came from North and taught everything to Tamils.

To sum up, your point that all brahmins are not bad, is truly acceptable: you and the young brigade is a shining example for that. But it is also true that there are still some people in your community, maybe, from the earlier generations, who are confirmed in the view that they and the non-brahmin Tamils are not from the same stock. They mislead the young generations of Brahmins. They stoutly resist any attempt to any changes in the existing system given to them by their forefathers.

Your first anonymous feedbacker.

Anonymous said...

//That Agasthiyar wrote the first Tamil grammar and it was from him that Tamil originated//

Dear Anony Feedbacker(funny name),

Fine.The dravidian mind cannot accept the fact.But then how do dravidian tamils, proclaim there is one Tamil father and two tamil mothers ,all of whom are non tamils.Strange isnt it?

Madhusudhanan Ramanujam said...

// myself did not see the film. I thought the story was like that. So, just disregard my statement about the film; and kindly go to Oxford History of South India....//

I certainly agree. I'm not trying to make a movie as a proof for what I've written here. But you've to understand that Max Muller was highered by the british for quite a sum. Also I don't denie that there was certain degree of agression between south & north indians as you've said based on your reference. I'd say that this aggression is very much visible even now in very low levels.

Now we've to consider various sources instead of coining our idea based on just one book. Again needless to say that the book that you've quoted is from the Oxford Press :) and its very obvious that they had a vested interest in achieving this seperatism. Because they wanted to "Divide & Rule" !

Anonymous said...

http://thamizachi.blogspot.com/2008/06/blog-post_16.html

Anonymous said...

//a new attendance in a nursery class coming in a new gown, and all other old timer girls, trying to cultivate the friendship of the new girl//
The attraction was because of the colour of the skin. The reasons may be biological, but the practice still continues:-)

Anonymous said...

http://thamizachi.blogspot.com/2008/06/blog-post_16.html

Why escaped from there??