Wednesday, June 18, 2008

பா.ம.க வின் எதிர்காலம்

சமீபத்தில் இரண்டு நாட்க்களுக்கு முன்னர் பா.ம.க உடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாய் அறிவித்தது திமுக. மேலும் மத்தியில் உள்ள கூட்டணியிலிருந்து பா.ம வை வெளியேற்றக் கோரப்போவதில்லை (?) என்றும் அறிவித்துள்ளது.

இதை தொடர்ந்து பா.ம.க வின் எதிர்கால அரசியல் எப்படி இருக்கும் என்பதன் ஒரு அலசல் தான் இந்தப் பதிவு. அரசியலில் எவரும் நிரந்தர எதிரிகளும் இல்லை, நிரந்தர நண்பர்களும் இல்லை என்பது மேலும் ஒரு முறை நிரூபிக்கப்பட உள்ளது என்றே நான் கருதுகிறேன்.

1. பா.ம.க அதிமுகவுடன் சேர்தல்

முதலாவதாய் சொன்ன விஷயம் நடக்க நிறைய வாய்ப்புள்ளதாகவே நான் கருதுகிறேன். என்ன தான் கலைஞர் இவர்களை மத்திய கூட்டணியிலிருந்து விலக்கப் போவதில்லை என்று தெரிவித்திருந்தாலும், அவர் சும்மா இருப்பார் என்பதில் நம்பிக்கை இல்லை. கூடிய சீக்கிரம் அன்புமணிக்கு இதயத்தில் இடம் தந்து விடுவார் என்றே தோன்றுகிறது. இன்னொரு புறம் அதிமுகவானது இந்த அறிவிப்பு வெளியாகி 2 நாட்க்கள் ஆனபின்பும் மவுனம் சாதித்து வருவது பலருக்கும் வியப்பளிக்கலாம். ஆனால் மத்திய கூட்டணியில் என்ன நடக்கிறது என்பதனை வேடிக்கை பார்க்கும் பொருட்டு அதிமுக எதுவும் சொல்லாது இருப்பதாகவே நான் கருதுகிறேன். ஒரு வேளை கருணாநிதி சொன்னது போல் நடந்து கொண்டால் மத்தியில் பா.ம.க அனுபவித்து வரும் பதவிகள் இன்னும் சில காலத்துக்கு தப்பும் என்று அதிமுக கணக்கு போடலாம். இந்த பதவிகள் அதிமுகவுக்கு நிச்சயம் சிறிதளவாவது பயன் படும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் கருணாநிதியும் ஒன்றும் லேசு பட்டவர் இல்லை. என்ன செய்ய வேண்டும் என்பதை அவர் இந்நேரம் தீர்மானிது இருப்பார். பா.ம.கவின் பதவிகள் தப்பும் நிலையில் ஒரு மாதிரியும் மற்றொரு நிலையில் வேறு மாதிரியும் பேரம் நடத்தவே அதிமுக மவுன விரதம் இருக்கிறது.

2. பா.ம.க மீண்டும் திமுகவுடன் கூட்டணி அமைத்தல்

உடனடி சமாதானம் என்பது திமுகவுக்கு சற்றே அவமானமாய் தான் அமையும். எனவே கருணாநிதி அதை விரும்புவார் என்று சொல்வதற்கில்லை. அதனால் இந்த விஷயம் உடனடியாக நடப்பதற்கு கிட்டத்தட்ட வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன்.

3. பா.ம.க தனித்து இருத்தல்
என்னதான் பாமகவிற்கு ஓரளவுக்கு செல்வாக்கு உண்டு என்றாலும் அது சில தொகுதிகளில் மட்டுமே உள்ளது. அதற்கு தேமுதிக அளவுக்கு கூட மாநில அளவிலான ஆதரவு இருப்பதாய் எனக்கு தோன்றவில்லை. ஆனால் நிச்சயம் அவர்களுக்கு ஆதரவு இருக்கும் தொகுதிகளில் அவர்கள் இன்னும் சில காலம் தாக்கு பிடிக்க முடியும் என்றே கருதுகிறேன். ராமதாஸ் தனித்து இருந்து போட்டியிட்டு ஆட்சியை பிடிப்பதெல்லாம் விஜயகாந்த் நாம் அடுத்த முறை ஆட்சி அமைப்போம் என்று சொல்வது போல்தான். ஒருவேளை இவர்கள் இருவரும் கூட்டணி வைத்தால் விஜயகாந்திற்கு ஓரளவு அதனால் லாபம் ஏற்படும். அதைத் தவிர வேறென்றும் நடக்காது.

எனவே முதலாவதாகக் கூறப்பட்ட விஷயம் தான் நடக்கப் போவது என்று நம்புவோம்.

12 comments:

Anonymous said...

பார்ப்பானா டாஸ்மாக்கில் வந்து குடிக்கிறான்? என்று காடுவெட்டி பேசியது பற்றி என்ன சொல்கிறீர்கள் மது?

சீனி

Madhusudhanan Ramanujam said...

//பார்ப்பானா டாஸ்மாக்கில் வந்து குடிக்கிறான்? என்று காடுவெட்டி பேசியது பற்றி என்ன சொல்கிறீர்கள் மது?//

அவருக்கு நேரம் சரியில்லைன்னு சொல்லலாம். இல்லைன்னா இப்படி கன்னா பின்னானு பேசி இருக்கிற உறவை கெடுப்பானேன்? ஒரு வேளை அவரும் டாஸ்மாக் போயிட்டு வந்து பேசியிருப்பாரோ? யார் கண்டது!!!

ஜயராமன் said...

பாமகாவின் எதிர்காலம் கிடக்கட்டும் ஐயா, நம் மஞ்சள் துண்டு கழகத்தின் எதிர்காலம் எப்படி - கொஞ்சம் குறி பாத்து சொல்லுங்க சாமீ!

ஜயராமன்

Anonymous said...

மதுசூதனா தினமலர் தலைப்பு செய்தியை அப்படியே உல்டா அடிச்சி எழுதியிருக்காய்

ஜயராமன் said...

//// பார்ப்பானா டாஸ்மாக்கில் வந்து குடிக்கிறான்? என்று காடுவெட்டி பேசியது பற்றி என்ன சொல்கிறீர்கள் மது? ///

பார்ப்பான் தன் குடும்பத்தையும் தன்னையும் கெடுத்துக்கொள்ள மாட்டான் என்று எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது. அவர்களை பார்த்து கொஞ்சமாவது நல்லது கத்துக்கிங்க என்று குரு சொல்கிறார்.

ஜயராமன்

Madhusudhanan Ramanujam said...

//மதுசூதனா தினமலர் தலைப்பு செய்தியை அப்படியே உல்டா அடிச்சி எழுதியிருக்காய்//

மன்னிக்கணும். நான் அதைப் படிக்கவில்லை. இது ஏதோ என் சிறு மூளயில் தோன்றிய விஷயம் தான். இருவேறு மனிதர்களுக்கு ஒரே கருத்து இருப்பது ஒன்றும் தவறில்லையே. மேலும் இந்த விஷயம் தினமலரில் வெளியாகி இருந்தாலும், இது ஒன்றும் கற்பனை அல்லை, திருடி விட்டேன் என்று கூற... வெறும் ஒரு பகுப்பாய்வு தானே.

Madhusudhanan Ramanujam said...

//பாமகாவின் எதிர்காலம் கிடக்கட்டும் ஐயா, நம் மஞ்சள் துண்டு கழகத்தின் எதிர்காலம் எப்படி - கொஞ்சம் குறி பாத்து சொல்லுங்க சாமீ!//

என்ன பெரிய எதிர்காலம். திமுகவில் கலைஞருக்குப் பிறகு யார் என்று இன்று மறைமுகமாய் நடக்கும் போராட்டங்கள் நாளை வெளிப்படையாய் நடக்கும். ஏற்கென்னவே ஸ்டாலின் திமுக, அழகிரி திமுக என்று பல்வேறு திமுகக்கள் அங்கே இருக்கின்றனவே. மொத்ததில் சொல்லப்போனால், திமிக இன்று இருக்கும் நிலையில் கலைஞருக்குப் பின்னால் இருக்கும் என்பதற்கு எந்தவித உத்திரவாதமும் இல்லை.

ஜயராமன் said...

/// ஏற்கென்னவே ஸ்டாலின் திமுக, அழகிரி திமுக என்று பல்வேறு திமுகக்கள் அங்கே இருக்கின்றனவே. ///

என்னங்க நீங்க, நம்ப கவிஜ கனிமொழி அம்மாவின் திமுகவை நீங்க கண்டுக்கல. செகண்டு என்பதால மட்டமா ஒதுக்கிடாதீங்க. அவுங்களுக்கும் ஏதாவது பாத்து கொடுங்க.

ஸ்டாலின் பய சினிமா படம் எடுத்தாரு. இப்போ அழகிரியே படம் எடுக்கிறாராம். கலைஞர் தயவால ஏற்கனவே பலப்பல குத்தாட்ட விழாக்கள் எல்லாம் தடையில்லாம கிடைக்குது. இப்படியே இவிங்க பல்லாண்டு ஆட்சி பண்ணினா தமிழகத்துக்கு எத்தனை குத்தாட்டம் கிடைக்கும், கொஞ்சம் நினைச்சுப் பாருங்க. டண்டனக்கா, டண்டனக்கா! தமிழனுக்கு வேறு என்னங்க வேணும். வாழ்க மஞ்சள் மகான்.

நன்றி

ஜயராமன்

Madhusudhanan Ramanujam said...

//என்னங்க நீங்க, நம்ப கவிஜ கனிமொழி அம்மாவின் திமுகவை நீங்க கண்டுக்கல. செகண்டு என்பதால மட்டமா ஒதுக்கிடாதீங்க. அவுங்களுக்கும் ஏதாவது பாத்து கொடுங்க.//

நான் என்னத்தை குடுக்கிறது. அதான் அவங்க லேசா அழகிரி திமுக பக்கம் சாய்ஞ்சிட்டாங்க போலருக்கே.

வாழ்க கழகங்கள். வாழ்க திமுக. வாழ்க ஜனநாயகம். ஒழிக மக்களாகிய நாம்.

ச்சின்னப் பையன் said...

//கூடிய சீக்கிரம் அன்புமணிக்கு இதயத்தில் இடம் தந்து விடுவார் என்றே தோன்றுகிறது.//

ஹாஹா.. இது சூப்பர்!!!

ச்சின்னப் பையன் said...

//எனவே முதலாவதாகக் கூறப்பட்ட விஷயம் தான் நடக்கப் போவது என்று நம்புவோம்//

கண்டிப்பாக.. கொஞ்சம் லேட்டானாலும், அதுதான் நடக்கும்... அத்தையின் அருளால் மறுபடியும் சின்ன மருத்துவர் அதே பதவியில் இருப்பார் என்று நம்புவோம்... (மருத்துவருக்கு அம்மா சகோதரியென்றால், சின்ன மருத்துவருக்கு அத்தைதானே)!!!

Anonymous said...

//மன்னிக்கணும். நான் அதைப் படிக்கவில்லை. இது ஏதோ என் சிறு மூளயில் தோன்றிய விஷயம் தான். இருவேறு மனிதர்களுக்கு ஒரே கருத்து இருப்பது ஒன்றும் தவறில்லையே//

பாம்பின் கால் பாம்பறியும்