Wednesday, July 23, 2008

பாஜவுக்கு ஒரு நல்ல வாய்ப்பு !!!

தமிழகத்தில் பாஜ இன்று வரை தனியே போட்டியிடக் கூடிய ஒரு நிலையை அடையவே இல்லை. அதற்கு பல் வேறு காரணங்கள் உள்ளது. ஆனால் அந்த நிலையை சிறிது மாற்றக்கூடிய ஒரு வாய்ப்பு இப்போது அவர்களுக்கு கிட்டியுள்ளது.

தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் காவிரியால் தீராத பிரச்சினை. இப்போது கர்நாடகத்தில் ஆட்சி அமைத்திருப்பதென்னவோ பாஜ தான். தமிழக பாஜவும், கர்நாடக பாஜவும் கூட்டாகப் பேசி இரு தரப்பினரும் பயனடையும் வகையில் இந்தப் பிரச்சினை தீர ஒரு வழி காண முடியும் என்றால் அது பாஜவுக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகும். இந்த வெற்றி தமிழக மக்களுக்கு பாஜவைப் பற்றிய ஒரு புதிய பரிணாமத்தையும் அளிக்கும். இதன் மூலம் பாஜ தமிழகத்தில் வேறூன்ற நல்லதொரு வாய்ப்பும் கிடைக்கும்.

கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு இது ஒன்றும் எளிய வேலையாக இருக்கப் போவதில்லை. இருப்பினும் முடியாத ஒன்று இல்லை என்பது என் கருத்து. தமிழக மற்றும் கர்நாடக மாநில பாஜ அமைப்புகளுடன் மத்திய பாஜ அமைபைச் சேர்ந்தவர்கள் இவர்களுக்கு ஒரு பாலமாய் செயல் படுவதன் மூலம் அவர்களின் அரசியல் எதிர்காலம் இன்னும் சற்று பிரகாசமாகும் என்பதில் சந்தேகமில்லை.

2 comments:

MORURAN said...

பாஜக இதை விட நல்ல வாய்ப்பு கிடைத்தாலுமே பயன் படுத்திக் கொள்ள மாட்டார்கள்.

பாஜக என்பது காங்கிரஸைப் போலவே கோஷ்டிகளும்,மாநில நலனா? அல்லது தேசியமா? என்ற குழப்பங்களில் சிக்கித் தவிக்கும் கட்சியாகி விட்டது.

ஆர் எஸ் எஸ் ஸுடன் தொடர்பு எதுவும் கிடையாது என்பதைக் காட்டிக்
கொள்வதற்காகவே பல நல்ல கொள்கைகளைத் துறந்த கட்சியாகிவிட்டது.

சரியான வழிகாட்டலைத் தவிர்த்து பதவி ஒன்றே குறிக்கோளாய் ஜெயலலிதா, கருணாநிதி,மாயாவதி,ராமதாசு போன்றோருடன் சேரும்போதே அது
காங்கிரஸின் மறு உருவமாகத் தான் தன்னை அடயலம் காட்டிக் கொண்டுள்ளது.

Madhusudhanan Ramanujam said...

//பாஜக இதை விட நல்ல வாய்ப்பு கிடைத்தாலுமே பயன் படுத்திக் கொள்ள மாட்டார்கள்....//

ஒரு வகையில் நீங்கள் சொல்வது சரி தான். தற்போதைய சூழ்நிலையை மனதில் கொண்டு தொலை நோக்குடன் செயல் பட்டால் பாஜவுக்கு நல்லது.