Saturday, July 26, 2008

தீவிரவாதத்தை ஒழிப்போம் வாருங்கள் !!!

பெங்களூர் மற்றும் அகமதாபத் நகரில் நடந்த குண்டு வெடிப்புகள் மிகவும் கவலையளிக்கத் துவங்கியுள்ளது. ஒரு மணி நேரத்திற்கும் குறைவான பொழுதில் பெங்களூரில் 8 இடங்களிலும் அகமதாபத்தில் 16 இடங்களிலும் குண்டு வெடிப்புகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.

என்ன சாதிக்க நினைக்கின்றனர் இந்த தீவிரவாதிகள்? பிற உயிர்களைக் கொல்வது ஒரு தொழிலா? வெட்க்கித் தலை குனிய வேண்டும் அவர்கள். ஆயுதமற்ற அப்பாவிகள் மீது போர் தொடுப்பது எந்த வகையிலும் நியாயமற்ற ஒரு செயல்.

எப்பொழுதும் போல் வன்மையாக கண்டிப்பதோடு இல்லாமல் இம்முறையேனும் அரசு இது குறித்து ஏதாவது செய்ய வேண்டும். டிவி அல்லது வானொலியில் இந்த குண்டு வெடிப்புகள் பற்றிய செய்தி வரும்போது கவனித்திருப்பீர்கள்; அந்தச் செய்தியைத் தொடர்ந்து உடனடியாக நஷ்ட ஈடு பற்றிய செய்தியும் உடனே வெளியாகும். பாதிக்கப் பட்டவர்களுகு அநேரத்தில் தேவையானது ஆறுதல் தானே தவிர நஷ்ட ஈடி அல்ல என்பதை அரசியல் வாதிகள் உணர வேண்டும்.

ஒரு சில லட்சங்களை நஷ்ட ஈடாக குடுப்பதால் எந்த ஒரு பலனும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. நஷ்ட ஈடு குடுப்பதில் உள்ள அக்கறை கூட குற்றங்களை களைவதில் நம் அரசாங்கம் காட்டவில்லை அல்லது காட்ட மறுக்கிறது என்பது வேதனைக்குரிய ஒரு விஷயம். உதாரணமாக நம் காவல் துறை தலைவர் அவர்கள் தமிழகத்தில் விடுதலை புலைகளோ அல்லது நக்சல்களோ இல்லை என்று பகிரங்கமாக அறிக்க்கை வெளியிட்டார், ஆனால் அடுத்த சில நாட்க்களுக்குள் சில புலிகளும் நக்சல்களும் கைது செய்யப் பட்டனர். அரசாங்கம் எந்த அளவிற்கு மக்களை ஏமாற்றி வருகிறது என்பதற்கு இது ஒரு சான்று.

அமெரிக்கா இதற்கு முன் ஒரு சமயத்தில் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் இந்தியாவிற்கு உதவ விரும்புவதாகத் தெரிவித்தது. நாம் அதை நமக்குச் சாதகமாய் பயன் படுத்திக் கொள்ள வேண்டும். அவர்களுடைய புலனாய்வுத் திறன் மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சியை நாம் உபயோகித்துக் கொள்ளல் வேண்டும்.

அமெரிக்காவின் நட்பு இஸ்லாமியர்களுக்கு எதிரான ஒன்று என்ற ஒரு பிரச்சாரம் கடந்த சில காலமாய் நம் நாட்டில் துவங்கியுள்ளது. உதாரணமாய் இந்தப் பிரச்சாரம் இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தத்திற்கு எதிராக எழுப்பப் பட்டது அனைவருகும் தெரிந்தது. இப்படியே போனால் தாலிபான்கள் இஸ்லாமியர்கள் அதனால் அவர்கள் எது செய்தாலும் பொருத்துக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு எதிராக எடுக்கும் எந்த ஒரு நடவடிக்கையும் இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்பது போன்ற கருத்துக்கள் உருவானாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. இது போன்ற பிரச்சாரங்களும் கருதுக்களும் ஓட்டு வங்கிகளை பலப்படுத்தும் ஒரு முயற்ச்சியே தவிர, நாட்டிற்கு இதனால் எந்த ஒரு லாபமும் இல்லை என்பதை புரிந்து கொள்ளல் வேண்டும். எதிரிக்கு எதிரி நண்பன் என்பதை மனதில் கொண்டு உலகின் அனைத்து நாடுகளும் தீவிரவாதத்துக்கு எதிராய் ஒன்று கூட வேண்டும்.

ஒருவர் தீவிரவாதி என்பது தீர விசாரித்த பின் நிரூபிக்கப் பட்டால் அவருக்கு எந்தவித தயவு தாட்ச்சன்யம் இன்றி மரண தண்டனை வழங்க வேண்டும். அப்சல்குருவிற்கு தந்த மரண தண்டனை போல அது இருக்கக் கூடாது. தண்டனைகள் உடனுக்குடன் நிறைவேற்றப் படவேண்டும். புனிதப் போர் எனும் போர்வையில் தீவிரவாதம் செய்யும் தீய சக்திகளை அழிக்க வேண்டும்.

இதே தலைப்பில் எழுதப் பட்ட என் ஆங்கிலப் பதிவு

9 comments:

Anonymous said...

நல்ல பதிவு.நன்றி.

Hariharan # 03985177737685368452 said...

பாரத பாராளுமன்றத்தைத் தாக்கிய இசுலாமியத் தீவிரவாதி அஃப்சல் குருவிற்கு அன்னை சோனியா காந்தி தன் பொற்கரங்களால் பாரதரத்னா வழங்க வேண்டும் என்பதால் உள்துறை சிவராஜ் பாட்டீலும் (அ)சிங்கம் மன்மோகனும் மத நல்லிணக்கம் காட்ட உச்சநீதிமன்றம் தந்த தண்டனையை இன்னும் நிறைவேற்றாமல் இருக்கிறார்கள்!

இசுலாமிய தீவிர வாதத்தை ஒழித்த அன்னை சோனியாவின் காங்கிரஸ் அரசு வாழ்க!

Madhusudhanan Ramanujam said...

//பாரத பாராளுமன்றத்தைத் தாக்கிய இசுலாமியத் தீவிரவாதி அஃப்சல் குருவிற்கு அன்னை சோனியா காந்தி தன் பொற்கரங்களால் பாரதரத்னா வழங்க வேண்டும் என்பதால் உள்துறை சிவராஜ் பாட்டீலும் (அ)சிங்கம் மன்மோகனும் மத நல்லிணக்கம் காட்ட உச்சநீதிமன்றம் தந்த தண்டனையை இன்னும் நிறைவேற்றாமல் இருக்கிறார்கள்...//

நீங்கள் சொல்வதை ஏற்கிறேன், ஒன்றை தவிர. மன்மோகன் திறமையான மனிதர்தான், ஆயின் அவர் சூழ்நிலை கைதி என்பதே நிஜம். அணு ஆயுத ஒப்பந்த விவகாரத்தில் அவர் காண்பித்த துணிவை அனைத்து விஷயங்களிலும் அவர் காண்பித்திருக்க வேண்டும்.

Madhusudhanan Ramanujam said...

//இசுலாமிய தீவிர வாதத்தை ஒழித்த அன்னை சோனியாவின் காங்கிரஸ் அரசு வாழ்க!//

இப்படிச் சொல்ல்வதை விட மத அடிப்படைவாதிகள் என்பது சரியாக இருக்கும் என்று எண்ணுகிறேன். இஸ்லாமியர் அனைவரும் தீவிரவாதிகள் என்று கூறுவது சரி இல்லை என்பது என் கருத்து. அவர்களில் பலரை தவறான வழிக்கு இட்டுச் செல்லப் படுகின்றனர் என்பதே இந்த நிலைக்கு காரணம்.

karikalan said...

உங்கள் கருத்தோடு நான் மிகவும் ஒத்துபோகிறேன்.

இந்த குண்டு வெடிப்பு பற்றி நானும்
ஒரு இடுகை இட்டிருக்கின்றேன்.தங்களுக்கு நேரமிருப்பின் வந்து படித்து கருத்து சொன்னால் மகிழ்ச்சி அடைவேன்.
நன்றி!

http://karikalan-karuthu.blogspot.com/2008/07/blog-post.html

Naina said...

ஐயா!
தீவிரவாதத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் ஒழிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். நீங்கள் சரியாக கூறியுள்ளது போல //எப்பொழுதும் போல் வன்மையாக கண்டிப்பதோடு இல்லாமல் இம்முறையேனும் அரசு இது குறித்து ஏதாவது செய்ய வேண்டும்// இது தான் மனித குலத்திற்கு எதிராக நடத்தப்பட்ட ஒவ்வொரு குண்டு வெடிப்பிலும் அரசியல் வியாதிகள் கூறுகின்றனர்.

இந்த கோரங்களுக்கு விடிவு காண வேண்டுமென்றால் முதலில் திறந்த மனத்தோடு நடுநிலையோடு விசாரணையை தொடர வேண்டும். ஆனால் துரதிஷ்டவசமாக ஒவ்வொரு குண்டு வெடிப்பின் போதும் நமது காவல்துறையினர் யார் என்பதை துடிவு செய்துவிட்டு அதன் பிறகு தான் விசாரணையை தொடங்குகிறார்கள். அதிலாவது ஒருவனை நீதிமன்றத்தின் முன் கொண்டு வந்து நிறுத்தி தண்டனை கொடுக்கப்பட்டுள்ளதா? பதில் இல்லை என்பதே வேதனைக்குரிய உண்மையாகும்.

தீவிரவாதத்தை அணுகுவதில் நமது உளவுத்துறையும் காவல்துறையும் இதுவரை தோல்வியை சந்தித்துள்ளது என்பதே எனது கருத்தாகும்.

திறந்த மனதோடு, நடுநிலை சிந்தனையோடு விசாரணைகள் என்று ஆரம்பிக்கபட போகிறதோ என்று தான் நாம் தீவிரவாதிகளுடைய அடித்தளத்தை வெட்டுகிறோம். அதுவரையில் இந்த மனித குல துரொகிகள் தங்களது கொடுஞ் செயலை தொடர தான் செய்வார்கள். அரசியல் வியாதிகளும் "வன்மையான கண்டணங்களை" தெரிவத்து கொண்டே தான் இருப்பார்கள். உளவுத்துறையும். காவல் துறையும், ISI சதி என்றும் லக்ஷரி தொய்பா என்றும் விசாரணையை மூடிவிட்டு குறட்டை விட்டு கொண்டே தான் இருப்பார்கள். அப்பாவி உயிர்கள் சில இலட்சத்திற்கு விலை போனதாக அரசாங்கம் கூறும்

அநியாயமாக கொல்லப்பட்ட சகோதர சகோதரிகளுடைய குடும்பத்தின் துயரில் பங்கெடுத்தவானாக வேதனையோடு விசும்பும்
நெய்னா முஹம்மது

Anonymous said...

நடந்த குண்டு வெடிப்புகளுக்கு பொறுப்பேற்று குஜராத்திலும் பெங்களுருவிலும் உள்ள அரசுகள் பதவி விலக வேண்டும்

chittoor.S.Murugeshan said...

குண்டு வெடிப்புகளுக்கு குண்டு வைக்கனும்னா அதுக்கு ஒரு வழி இருக்கு

1.வேலையில்லாத மூளை சாத்தானின் பட்டறை. எனவே நாட்டில் உள்ள இந்து முஸ்லீம் இளைஞர்கள் அனைவருக்கும் உடனடியாக வேலை தரவேண்டும். என்ன வேலை? நதிகளை இணைக்க கால்வாய் வெட்டும் வேலை.(வட நாட்டுல வெள்ளம்..தென்னாட்டுல குண்டி கழுவ தண்ணி கிடையாதுங்கோவ்)
2.இந்தியாவில் பொது இடங்களில் மதம்,மத நிகழ்ச்சிகளை தடை செய்துரனும். மதம் தனிப்பட்டவரின்,தனிப்பட்ட விஷயம். அந்தரங்கமா மலம் கழிக்கறாப்பல உடலுறவு கொள்வது போல மத நிகழ்ச்சிகள் நடை பெறணும். க்ரூப் செக்ஸுக்கு எப்படி அனுமதியில்லையோ அதே போல கூட்டு வழிபாடு,பொரியல் வழிபாட்டுக்கெல்லாம்தடை போட்டுரனும்(அப்பவாச்சும் உண்மையான ஆன்மீகம் தழைக்குதா பார்ப்போம்).

3.மதம் லங்கோடு மாதிரி. அது உள்ளத்தான் அணியப்படனும். அணியாட்டா விரை நசுங்கிரும். அதே நேரத்துல சூப்பர்மேன் பேண்டுக்கு மேல ஜட்டி அணியறாப்பல அலப்பறை பண்றாங்கப்பா..

4. பண்டிகைக்கு லீவு,தாடி வளர்ப்பு ,மொட்டை இத்யாதிக்கெல்லாம் தடை.(மண்டையில ஆப்பரேஷன்னா விதிவிலக்கு)

5.மனிதனை மனிதனா நினைச்சு ஆட்சி செய்யறாங்க(கொஞ்சமாச்சும்) அதனால தான் இந்த குண்டுவெடிப்பெல்லாம் நடந்துகிட்டே இருக்குது. மனிதன் மிருகம். என்னதான் பேண்ட்,சட்டை போட்டாலும் உள்ள மணி அடிச்சுட்டுதான் இருக்கு. உள்ளடக்கிவைக்கப்பட்ட செக்ஸ் தான் வன்முறையா வெடிக்குது. முதல்ல விபச்சாரத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்கனும், மாவட்டத்துக்கு ஒரு மண்டலத்தை அதுக்குன்னே ஒதுக்கிரனும் (அவிங்களுக்கு/அதாங்க அழகிகளுக்கு செக்ஸ் கல்வி,நோய் தடுப்பு,எய்ட்ஸ் பத்தியெல்லாம் நல்லா ட்ரெயினிங் கொடுத்து வுட்டுரனும்

Anonymous said...

//உள்ளடக்கிவைக்கப்பட்ட செக்ஸ் தான் வன்முறையா வெடிக்குது.//

sinthikka vendiya unmai.