Sunday, July 27, 2008

திரும்பிக் கூட பார்க்க மாட்டோம் - செம காமெடி!வரவர நம்ம மருத்துவரோட காமெடிக்கு அளவே இல்லாம போச்சு. இன்னைய தினமலரில் பாமகவின் 20ஆம் ஆண்டு விழாவை ஒட்டி சைதையில் நடந்த ஒரு கூட்டம் பத்தி ஒரு செய்தி பார்த்தேன். வழக்கம் போல ஆரம்பத்துல என்னவோ அரசையும் திமுகவையும் வண்ணமா வசை பாடியிருந்தாரு. அந்தச் செய்தியின் கடைசியில் ஒரு காமெடி பண்ணியிருக்காரு பாருங்க, அதை என்னானு சொல்ல...

முதல்ல வன்னியர்களை பாதுகாக்க ஏதோ ஒரு இயக்கம்னு சொன்னாங்க. அப்புறம் மெல்ல அது ஒரு அரசியல் கட்சியா வந்தது. அப்ப என்ன சொன்னாரு நம்ம மருத்துவர்......?
“என் குடும்பத்திலிருந்து யாராவது பதவிக்கு வந்தா செருப்பால அடிங்க” அப்படின்னு சொன்னதாக ஒரு சின்ன ஞாபகம். அன்புமணி யாருன்னு கொஞ்சம் விசாரிங்கப்பா...

இப்ப என்னடான்னா திமுக காரங்க கூப்பிட்டாலும் திரும்பிக் கூட பார்க்க மாட்டோம்னு சொல்றாரு. இப்ப இந்தப் பேச்சு என்ன ஆகும்னு தெரியலை. ”குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்ச்சு” அப்படிங்கிற பழமொழி தான் எனக்கு ஞாபகம் வருது.

16 comments:

rapp said...

கலக்கலான பன்ச், இவர் இம்சை தாங்க முடியல

ச்சின்னப் பையன் said...

ஹிஹி. இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா!!!

மாயவரத்தான்... said...

'ஆற்காடு வீராசாமிக்கு கேட்காது' என்று ராமதாஸ் பேசியிருப்பதில் உள்குத்து ஒன்றும் இருக்கிறது. அமைச்சருக்கு காது சரியாக கேட்காது. அதை தான் மறைமுகமாக இப்படி குறிப்பிட்டுள்ளார் ராமதாஸ். ஏற்கனவே இப்படி ஒரு முறை கூறி வாங்கிக் கட்டிக் கொண்டவர் தான் இந்த டாக்டர் ஐயையோ.

அடுத்தவரின் உடல் ஊனத்தை எல்லாம் இப்படி பொதிவில் பழிப்பவருக்கெல்லாம் டாக்டர் பட்டத்தை கொடுத்தவனை உதைக்கணும்.

Madhusudhanan Ramanujam said...

//அடுத்தவரின் உடல் ஊனத்தை எல்லாம் இப்படி பொதிவில் பழிப்பவருக்கெல்லாம் டாக்டர் பட்டத்தை கொடுத்தவனை உதைக்கணும்.//

என்ன பண்றது? இந்த மாதிரி கொஞ்சம் கூட சபை நாகரீகம் தெரியாத ஆளுங்களுக்கு தான நாம ஓட்டு போடறோம். மொதல்ல நம்மளை சொல்லணும்.

மாயவரத்தான்... said...

ஹலோ, நான் இந்த மாதிரி ஆட்களுக்கெல்லாம் ஒரு தபா கூட ஓட்டு போட்டதில்லை. நீங்க போட்டிருக்கீங்களோ?!

Madhusudhanan Ramanujam said...

//ஹலோ, நான் இந்த மாதிரி ஆட்களுக்கெல்லாம் ஒரு தபா கூட ஓட்டு போட்டதில்லை. நீங்க போட்டிருக்கீங்களோ?!//

”நாம்” அப்படின்னா நம்ம மக்கள் அப்படின்னு இங்க அர்த்தம்.

Anonymous said...

இதே மாதிரி "இனிமே அ தி மு க வோட கூட்டு வச்சுக்கறது பெத்த தாயோட உறவு வச்சுக்குற மாதிரி"ன்னு சொன்ன ஞாபகம். இந்த தேர்தல்ல அ தி மு க வோட கூட்டணி வச்சுக்குற மாதிரி வந்தா குடிதாங்கி ஐயா என்ன சப்பைக் கட்டு கட்டுவாரோ? அரசியல்ல இந்த மாதிரி சொல்றது செய்யாம இருக்குறது எல்லாமே சகஜம்னு போக வேண்டியதுதான்.

rangudu said...

அண்ணே, மருத்துவர் தன்னை வச்சு காமெடி பண்ணலேண்ணே. அவருக்கும், அவரது
கட்சி ஆட்களுக்கும் ஓட்டுப் போட்ட மக்களை வச்சு காமெடி பண்ணறார்.

அது சரி. காது கேளாத ஒருவன் ஒரு சாதாரண அரசு ஊழியனாக முடியுமா?
காது கேளாத ( நான் ஊனத்தைப் பழிக்க வில்லை)ஒருவர் அமைச்சராக
இருந்து என்ன சாதிக்க முடியும்? 65 வயதிற்கு மேல் அரசு உத்தியோகம்
பார்க்க முடியுமா?

அரை குறை ஆடைகளுடன் ஆடி நடித்தவர், முதல்வராக முடியுமா? அல்லது
ஒரு 80 வயது கிழம் முதல்வராக மக்களுக்கு சேவை செய்ய முடியுமா?
இவை எல்லாம் தமிழகத்தில் தான் நடக்கும்.

இவர்களெல்லாம் தமிழர்களை வைத்து கடந்த 50 வருடங்களாகக் காமெடி
செய்யும் போது, மருத்துவர் இந்த ஆட்டத்திற்கு கொஞ்சம் லேட்.

வரவேற்போம். வாழ்த்தளிப்போம்.

Madhusudhanan Ramanujam said...

//அரை குறை ஆடைகளுடன் ஆடி நடித்தவர், முதல்வராக முடியுமா? அல்லது
ஒரு 80 வயது கிழம் முதல்வராக மக்களுக்கு சேவை செய்ய முடியுமா?
இவை எல்லாம் தமிழகத்தில் தான் நடக்கும். //

:-) சரியாகச் சொன்னீர்கள். நடிகர்களும் வயோதிகர்களும் ஆளக்கூடாது என்பது என் கருத்தல்ல ஆனால் அவர்களில் ஒருவர் கூட நாட்டு / மக்கள் நலனை மனதில் கொள்ளவில்லை என்பது தான் வருத்தத்திற்குறிய விஷயம்.

//இவர்களெல்லாம் தமிழர்களை வைத்து கடந்த 50 வருடங்களாகக் காமெடி
செய்யும் போது, மருத்துவர் இந்த ஆட்டத்திற்கு கொஞ்சம் லேட்.

வரவேற்போம். வாழ்த்தளிப்போம்.//

அப்போ மருத்துவருக்கு ஒரு வாய்ப்பு குடுக்கணும்னு சொல்றீங்களா?!? ஏற்கென்னவே செஞ்ச தவறுகளிலிருந்து கொஞ்சமாவது கற்க வேண்டாமா?

karikalan said...

இதுக்கு முன்பு திமுக வுடன் கூட்டணியில் இருந்துவிட்டு வெளியில் வந்த போது அவர் கூறியது,"திமுக காரன் கிட்ட போனால் கோமணத்தையே உருவிடுவான் நல்ல வேளை எங்க வேட்டியை உருவுனதோட நாங்க முழுச்சிக்கிட்டு தப்பிச்சிட்டோம். இனி ஜென்மத்துக்கும் திமுகவுடன் கூட்டணி கிடையாது". ஆனால் இப்ப நடந்த கதைதான் நமக்கு தெரியுமே.

நடக்கட்டும், நடக்கட்டும்.
காமெடியன்கள் கலக்கட்டும், கலக்கட்டும்.

அதிஷா said...

அரசியல்வாதிகள்னாலே தியாகிகள் தான!!!

Bleachingpowder said...

சும்மா ஒரு ரெண்டு தேர்தல்ல திமுகவும்,அதிமுகவும் இவங்கள கண்டுக்காம விட்டாலே போதும், இவங்க கட்சி மதிமுக மாதிரி காணாம போயிடும்

Anonymous said...

//திரும்பிக் கூட பார்க்க மாட்டோம் //

ஒருவேளை ராமதாஸுக்கும் காது கேக்காதோ ?

Madhusudhanan Ramanujam said...

//ஒருவேளை ராமதாஸுக்கும் காது கேக்காதோ ?//

ஹிஹிஹி :))

Natty said...

என்ன கொடுமை சரவணன் ;))

ARUVAI BASKAR said...

//ஆற்காடு வீராசாமிக்கு கேட்காது' என்று ராமதாஸ் பேசியிருப்பதில் உள்குத்து ஒன்றும் இருக்கிறது.//
ஏங்க, கேட்காத காதைதானே சொன்னார் . அதற்க்கு ஏன் இவ்வளவு கோபம் !
இந்த நாட்டில் உண்மையை கூட சொல்ல கூடாதா ?
மின்வெட்டினால் இரண்டு வருடங்களாக அவஸ்தை படுகிறோம் .
அதை கூறினால் கூட காது கேட்கவில்லை என்ற அர்த்தத்தில் அவ்வாறு கூறி இருப்பார் .
இப்போதுதான் அதை சபையில் ஒத்துக்கொண்டு இருக்கிறார்கள் !
அந்த உண்மையை எப்போது ஒத்து கொள்வார்களோ ?