Tuesday, August 26, 2008

பாயிண்ட் பரமசிவம் (2)

செய்தி: 2011ஆம் ஆண்டு பாமக ஆட்சிக்கு வந்தால் மூன்று மாதங்களில் பூரண மதுவிலக்கை அமல் செய்வோம் – ராமதாஸ்.

2011ஆம் ஆண்டு நீங்க ஆட்சிக்கு வருவது இருக்கட்டும் வரப் போற தேர்தல்ல உங்க கூட கூட்டு சேரக் கூட யாரும் ரெடிய இருக்கிற மாதிரி தெரியலையே…

செய்தி: அரசியல் உள் நோக்கங்களுக்காக கர்நாடகாவில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். பிரச்சினை செய்கின்றனர். தமிழகத்தில் இந்தத் திட்டம் திட்டமிட்டபடி செயல் படுத்தப் படும். அதில் எந்த வித மாறுதலும் இல்லை - ஸ்டாலின்

அடங்கப்பா சாமி…. இவங்க இம்சை தாங்க முடியலைடா. பல பேர் அடுத்த ஆட்சி வரும் வரை பொறுமையா இருப்பது நல்லதுன்னு சொன்னபோது; எலும்பை நொறுக்கினாலும் இந்த திட்டத்தினை நிறைவேறுவோம்னு சவால் எல்லாம் விட்டு, காங்கிரஸ் நிலை மோசமா இருக்குன்னு அடுத்த ஆட்சி வரும் வரை பொறுமை காப்போம்னு அடுக்கு மொழியில கலைஞர் ஒரு மெகா பல்டி அடித்தார். கர்நாடகத்தில காங்கிரஸ் ஜெயித்திருந்தால் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டே இருந்திருப்பீர்கள், இப்ப அங்க இருக்கிறது பாஜகங்கிறதால மறுபடியும் கதை வசனமெல்லாம் ஆரம்பமாயிடிச்சு போல!

செய்தி: எல்லையில் சண்டை நிறுத்தத்தினை மீறி பாக் ராணுவத்தினர் தொடர்ந்து தாக்குதல்கள் பலவற்றை நடத்தி வருகின்றனர். பயங்கரவாதிகளை இந்தியாவிற்குள் ஊடுருவச் செய்யும் முயற்சிகள் பலவும் நடந்து வருகின்றது. இது குறித்து கவலை தெரிவித்த ராணுவ அமைச்சர் அந்தோனி, தொடர்ந்து சண்டை நிறுத்தம் தொடரும் என்று தெரிவித்தார்.

தாரளமா சண்டை நிறுத்தம் தொடர வேண்டியதுதான். அப்பத்தான இந்தியாவின் பல நகரங்களில் தீவிரவாதிகள் தொடர்ந்து நிறைய குண்டு வெக்க முடியும். இதுக்கு பேசாம ராணுவத்தை சேர்ந்த எல்லாரையும் விவசாயம் பார்க்க சொல்லி வீட்டுக்கு அனுப்பிடலாம். நல்ல கொள்கை தான்.

செய்தி: காலியாக உள்ள உள்ளாட்சி இடங்களுக்கு தேர்தல் நடத்தவிருப்பதாக மாநில தேர்தல் ஆணையர் சந்திரசேகரன் அவர்க்ள் நிருபர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

கொஞ்ச நாளைக்கு முன்ன நடந்த உள்ளாட்சி தேர்தல்களுக்கும் இதுக்கும் என்ன வித்யாசம்னு யாரவது அவரைக் கொஞ்சம் கேட்டு சொல்லுங்களேன் ப்ளீஸ்…

செய்தி: பெரம்பலூரில் தனியார் மருத்துவ முகாமில் பங்கேற்று கண் அறுவை சிசிச்சை செய்து பார்வை பறிபோனவர்களுக்கு தமிழக அரசு சார்பில் நிதியுதவி அளிக்கப் படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.

சபாஷ்!!! கடை தேங்காயை எடுத்து வழி பிள்ளையாருக்கு உடைப்பதில் இவருக்கு நிகர் இவர்தான். வேணும்னா அந்த தனியார் மருத்துவ முகாமை நடத்தியவர்களிடமிருந்து வசூல் செய்து பார்வை இழந்தவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கட்டும். இதற்கும் அரசு தான் பொருப்பேற்கவேண்டும் என்றால் எப்படி? ஒரு வேளை அந்த தனியார் மருத்துவ நிறுவனம் ஏதாவது உடன் பிறப்புக்கு சொந்தமானதோ?

1 comment:

kumky said...

நல்லாத்தான் கிண்டறீங்க...லொல்லுங்க.. ரஜிக்கிரோம்