Wednesday, August 27, 2008

பாயிண்ட் பரமசிவம் (3)

செய்தி: உயர் நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் அதற்கு எதிராக செயல்படும் குமரி மாவட்ட கலெக்டர்

ஆற்காட்டார் மாதிரியான மந்திரிகள் பேச்சும் அதை ஆமோதிக்கும் முதல்வரும் இருக்கும் ஆட்சியில் நீதிமன்ற தீர்ப்பை மதிக்காத கலெக்டர் இருப்பதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்?

செய்தி: விலைவாசி உயர்ந்து விட்டது என நான் கூறினால் கட்டுப் படுத்த நீயே வழி சொல் என்று அறிக்கை விடுகிறார் முதல்வர் – விஜயகாந்த்.

விஜயகாந்த் சரித்திரத்தை சரிவர பார்ப்பதில்லைனு நினைக்கிறேன். காவிரி பிரச்சினை குறித்த பேட்டி ஒன்றில் ஒரு பத்திரிக்கை நிருபரிடம் வா ரெண்டு பேரும் அணையிலிருந்து குதித்து தற்கொலை பண்ணிக்கலாம்னு சொன்னார். இதுவும் அதைப் போல ஒண்ணுதான். அவரால அவ்வளவுதாங்க முடியும்.

செய்தி: தென் சென்னை புறநகரில் காலை நேரங்களில் ஏற்படும் மின்வெட்டால் ஒருங்கிணைந்த நீதி மன்ற வளாகப் பணிகள் பாதிக்கபடுவதாக கூறி வக்கீல்கள் திடீர் சாலை மறியலில் ஈடு பட்டனர்.

நீதிபதிகளுக்கே மணி கட்டணும்னு சொன்னவர் ஆற்காட்டார். எதுவா இருந்தாலும் பார்த்து பக்குவமா அவருக்கு தெரியாம செங்க மக்கா…

குறிப்பு: சட்ட வல்லுனர்களான வக்கீல்கள் சாலை மறியலில் ஈடுபடுவதற்கு பதில் மின்சார நிறுவனம் அல்லது அது சார்ந்த துறையின் செயல்பாடுகளில் உள்ள குறைகளை சுட்டிக் காட்டி ஒரு பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்யலாம். மின் வினியோகம் செய்பவர்கள் வசூலிக்கும் பணம் மின்சாரத்திற்கு மட்டும் அல்ல. அது தங்கு தடையின்றி சரியாக வினியோகிக்கும் பொருப்பும் அவர்களுக்கு உண்டு என்பதை ஏன் நம் வக்கீல்கள் உணரவில்லை என்பது வியப்பாக உள்ளது.

செய்தி: திமுக அதிமுக என போலீசில் இரு பிரிவுகள் உள்ளதாகவும் இந்திலை மாறினால் தான் தமிழகம் நன்றாக இருக்கும் – விஜயகாந்த்.

அதனால என்ன? தேமுதிக போலீஸ் ஒண்ணு ஏற்பாடு பண்ணிட வேண்டியது தான ?

செய்தி: ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அபினவ் பிந்த்ராவுக்கு சென்னையைச் சேர்ந்த எஸ்.ஆர்.எம் பல்கலை கவுரவ டாக்டர் பட்டம் வழங்குகிறது.

அடக் கடவுளே. இவங்க கிட்ட மாட்டிக்கிட்டு இந்த டாக்டர் பட்டம் பாடு இருக்கே……. அடங்கப்பா…. சொல்லி மாளலை

3 comments:

prasi said...

விஜயகாந்த் மற்றும் கருணாநிதி பற்றி நீ சொன்னது மிகவும் சரியானதே. வரவர எல்லாரும் வார்த்தைகளை அள்ளி கொட்டுகிரார்கள். அதற்கு பின் தான் சொன்னதையே மறந்து மற்றவனை பார்த்து குரைப்பது வழக்கமாகிவிட்டது. Politicians will be politicians where ever you go, whatever you do.

மணிக்கழுத‌ said...

இந்தியாவுல இந்த டாக்டரு பட்டம் யாருக்காவது கொடுக்கனும்னா, அது இந்த கையால மலம் அள்ற கீழ்நிலை மக்களுக்கு மட்டுமாத்தாங்க இருக்க முடியும். யாருமே செய்ய முடியாத ஒரு அதிபயங்கர தொழில அவங்களால மட்டும்தாங்க செய்ய முடியுது. மத்தவனுங்க எல்லாம் கேணைப் பசங்க, நம்ம பார்ப்பன ஜால்ரா கலாமையும் சேத்தே சொல்றங்க.

Madhusudhanan Ramanujam said...

//இந்தியாவுல இந்த டாக்டரு பட்டம் யாருக்காவது கொடுக்கனும்னா, அது இந்த கையால மலம் அள்ற கீழ்நிலை மக்களுக்கு மட்டுமாத்தாங்க இருக்க முடியும்.....//

நீங்க சொல்றமாதிரி நான் யாரையும் கீழ் நிலை மேல் நிலை அப்படின்னு நான் யாரையும் பாகுபடுத்தி பார்க்க விரும்பவில்லை. மேலும் நீங்கள் குறிப்பிடும் சாதிக்கும் இந்தக் கருத்துக்கும் என்ன சம்பந்தம்?