Monday, August 25, 2008

பாயிண்ட் பரமசிவம்

செய்தி: காங்கிரஸ் ஒரு மூழ்கும் கப்பல் எனும் கம்யூனிஸ்டுகளின் கருத்து தவறு. அவர்கள் மத்தியில் மீண்டும் ஆட்சி அமைப்பார்கள் - திரு. மு கருணாநிதி

அது சரி, இந்த விஷயம் அவங்களுக்கு தெரியுமா? சும்மா சொல்லக் கூடாது அவங்களை விட நீங்க ரொம்ப நம்பிக்கையா இருக்கீங்க. ஏன் ஊராட்சி தேர்தல் மாதிரியே பாராளுமன்ற தேர்தலையும் நடத்தும் திட்டம் ஏதாவது வெச்சிருக்கீங்களா? இல்லை எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் உங்களுக்கு பதவி உண்டுனு மறைமுகமா சொல்றீங்களா? ஏன்னா இப்பதான் பாஜ பத்தின நிலையை அப்படியே வெச்சிக்க போறமா இல்லை மாத்தப் போறமானு வேற உணர்ச்சி பொங்க கேள்வியெல்லாம் வேற கேட்டீங்க.


செய்தி: திமுக கொடி போட்ட காரில் சென்று லாரியை மடக்கி போலீஸ் துணிகரம். சமயோசிதமாக செயல்பட்ட ஆய்வாளர் மற்றும் அவர் சார்ந்த தனிப் படை போலீசாரை பாராட்டி கூடுதல் டிஎஸ்பி வெகுமதி வழங்கினார்.

போலீஸிடம் மக்களுக்கு உள்ள மரியாதையை நினைச்சு புல்லரிக்குது. கஷ்ட காலம், போலீஸ் நிலை அவ்வளவு மோசமா போச்சே?

செய்தி: பெட்ரோலிய பொருட்களின் தட்டுப்பாட்டை குறைக்க ஞாயிறு தோறும் எண்ணை விற்பனை நிலையங்களுக்கு விடுமுறை. மேலும் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே பெட்ரோல் \ டீசல் விற்பனை நடக்கும்.

வாழ்க ஆற்காட்டார். மின்சாரம் இல்லைன்னா ஜெனரேட்டர் உபயோகிங்கனு சொல்றார். அது என்ன தன்னீலயா ஓடும்? அதுக்கு டீசல் வேணும். ஆனா டீசலும் கிடைக்கலை. யாரோட அறிவாளித் தனமோ தெரியலை பெட்ரோல் பங்கை மூடினால் தட்டுப்பாடு குறையும்னு சொல்லி இனி பெட்ரோல் பங்கை எல்லாம் ராத்திரி சீக்கிரமா மூடப் போறாங்களாம். போதாததுக்கு ஞாயிறு வந்தா அதுவும் கிடையாது. ஆமா மத்த ஊர்ல எல்லாம் மின்சார தட்டுபாடு எதுவும் இல்லையா? இந்த மாதிரி பிரச்சினை எதுவுமில்லையா? அவங்க எல்லாம் என்ன பன்றாங்க? அது சரி எல்லா ஊருக்கும் ஆற்கட்டார்தான் மின்சார மந்திரியா என்ன?

செய்தி: சிபு சோரன் முதல்வர் ஆகிறார். லாலு உட்பட பலர் ஆதரவு.

பிரதீபா பாட்டில் இந்தியாவின் ஜனாதிபதி ஆகும்போது சிபு சோரன் முதல்வர் ஆனா என்ன கெட்டுப் போகும் ? இந்தியாவுக்கு வந்த நல்ல நேரம். வேறென்னத்தை சொல்ல ???

செய்தி: காங்கிரஸ் கூட்டணிக்கு வாருங்கள். தேமுதிக வுக்கு தங்கபாலு அழைப்பு.

என்னவோ காங்கிரஸ் கப்பல் மூழ்கவே மூழ்காது அது இதுனு ஒரு பக்கம் அறிக்கை விட்டுட்டு இப்ப இந்தப்பக்கம் வந்து கூட்டணிக்கு ஆள் சேக்கறாங்க. நல்ல வேளை காமராஜர் இப்ப உயிரோட இல்லை.

செய்தி: இந்தியாவை விட மனமில்லை. தஸ்லிமா உருக்கம்.

அது சரி உங்க ஊர்ல தான் உங்களை நாட்டாமை படம் ஸ்டைலில் ஒதுக்கி வெச்சிட்டாங்களே.

1 comment:

Madhusudhanan Ramanujam said...

ஒரு சிறு அச்சுப் பிழையால் சற்று முன் இந்த இடுகையை படிக்க இயலாத நிலை இருந்தது. தற்போது அது சரி செய்யப் பட்டு முழு இடுகை தனையும் படிய்ய இயலும்.