Monday, September 01, 2008

பாயிண்ட் பரமசிவம் (4)

செய்தி: அரிசி விலையை ஏன் குறைக்க வேண்டுமென ராமதாஸ் கேள்வி.

ரெண்டு வருஷம் முன்ன அரிசி ரெண்டு ரூபாய்க்கு குடுப்போம்னு சொன்னபோது மூடிக்கிட்டு இருந்தீங்க. இப்ப என்ன வந்தது?

செய்தி: தவறு செய்வது இயற்கை. அந்தத் தவறை திருத்தி, நேரான பாதையில், நல்வழியில் நடப்பது அறிவார்ந்த விஷயம் – கருணாநிதி

அது சரி உபதேசமெல்லாம் ஊருக்குத் தானா?

செய்தி: அரசியலுக்கு வந்தபின் ஏன் இன்னும் நடிக்கிறான் என சிலர் கேட்கின்றனர் – விஜயகாந்த் பற்றி கலைஞர் கேட்டது.

முதலமைச்சர் ஆன பின்பும் சினிமாவுக்கு கதை எழுதலாம், ஆனா எம்.எல்.ஏ நடிக்க கூடாதா?

செய்தி: உ.பி முதல்வர் மாயாவதி பல்கலை வேந்தராகிறார்.

அப்போ அதுல படிக்கிறவன் எல்லாம் உறுப்பட்டா மாதிரிதான்.

செய்தி: புவி வெப்பமயமாவதை தடுக்க நாம் அனைவரும் முயல வேண்டும் என்று சென்னையில் தனியார் பள்ளியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் ஸ்டாலின் கூறினார்.

அப்போ முதலில் எங்க போனாலும் ஒரு ஐம்பது காரோட போறதை நீங்க நிப்பாட்டுங்க சாமி.

செய்தி: சேது சமுத்திர திட்டம் தொடர்பாக ‘பந்த்’ நடத்தக் கூடாது என தமிகழ அரசுக்கு உச்ச நீதிமன்றம் பிறப்பித்திருந்த உத்தரவை நான் மீறவில்லை. அதை அமல்படுத்தும்படிஏ உத்தரவிட்டேன் என உச்சநீதிமன்றத்திற்கு தாக்கல் செய்யப் பட்டுள்ள பதில் மனுவில் முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

நாங்க எல்லாரும் நம்பிட்டோம்பா. பூனை கண்ணை மூடிகிட்டு உலகம் இருண்டு போனதா நினைக்குமாம்.

செய்தி: ஒரிசா கந்தமால் கலவரத்தின் போது கிறித்தவர்கள் மற்றும் சர்ச்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை போப் விமர்சித்தது பற்றி கருத்து கூற பா.ஜ மறுத்துள்ளது.

என்னங்க பண்றது, பா.ஜ ஏதாவது சொன்னா உடனே மதவாதிகள் அது இதுன்னு கதை சொல்ல ஆரமிச்சிடுவாங்களே.

செய்தி: மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை சரியான எடையில் வழங்க தமிழகத்தில் மொத்தமுள்ள 29 ஆயிரத்து 760 பொது வினியோக மையங்களில் ஏறெகென்னவே 6160 மையங்களுக்கு (ரேஷன் கடைகள்) நவீன மின்னணு தராசுகள் வழங்கப்பட்டுள்ளன.

அது சரி அதுக்கு கரண்டுக்கு எங்க போறது? கூட ஒரு ஜெனரேட்டரும் சேர்த்துக் கொடுத்தா நல்லா இருக்கும்.

செய்தி: அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி, தமிழகம் முழுதும் ரேஷன் கடைகளில் கிலோ இரண்டு ரூபாய்க்கு வழங்கப்படும் 20 கிலோ அரிசியை கிலோ ஒரு ரூபாய்க்கு வழங்குமாறு முதல்வர் உத்தரவு.

ஏன் சும்மாவே குடுக்க வேண்டியது தான ? ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையேங்கிற மாதிரி இருக்கு. அது சரி எந்த பொண்டாட்டியோட கை?

செய்தி: ரேஷன் கடைகளில் அரிசியை கிலோ ஒன்றுக்கு ஒரு ரூபாய் வித்ததில் வழங்குவதால் அரசுக்கு கூடுதலாக ரூபாய் 352 கோடி செலவாகும்.

அது சரி, அவங்க அப்பன் வீட்டு சொத்தா கொள்ளை போகுது.

செய்தி: மாநகராட்சி வாகனங்களால் விபத்து ஏற்பட்டு உயிரழப்பு ஏற்பட்டால் அவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கப்படும். விபத்தில் இறந்தவருக்கு மாநகராட்சி சார்பாக நிதியுதவி வழங்குவது மாநகராட்சி வரலாற்றில் இதுவே முதல் முறை. நகராட்சி வாகனங்களால் உயிரழப்பு ஏற்பட்டால் இனி தொடர்ந்து நிதியுதவி வழங்கப்படும் – சென்னை மாநகராட்சி மேயர்.

அடப்பாவிகளா. உங்களுக்கெல்லாம் வெட்கம் மானம் சூடு சுரணை எதுவுமே இல்லையா. விபத்து ஏற்படாதவாறு பார்த்துக் கொள்வோம் என்று சொல்ல வக்கில்லை. அதை விட்டுட்டு நஷ்ட ஈடு குடுப்பேன்னு வாய் கிழிய வசனம் பேசராய்ங்க. நீங்க குடுக்கிற பணம் எங்க பணம் தான. என்னவோ உங்க சொந்த்த பணத்தை கொண்டு குடுக்கிற மாதிரி அறிக்கை விடுறீங்க?

2 comments:

dondu(#11168674346665545885) said...

//செய்தி: ரேஷன் கடைகளில் அரிசியை கிலோ ஒன்றுக்கு ஒரு ரூபாய் வித்ததில் வழங்குவதால் அரசுக்கு கூடுதலாக ரூபாய் 352 கோடி செலவாகும்.
அது சரி, அவங்க அப்பன் வீட்டு சொத்தா கொள்ளை போகுது.//

பார்க்க: http://dondu.blogspot.com/2008/08/blog-post_30.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

Madhusudhanan Ramanujam said...

வாங்க ராகவன். ரொம்ப நாளைக்கு பிறகு வந்திருக்கீங்க. உங்க பதிவை பார்த்தேன். சுட்டிக்கு நன்றி.