Friday, September 12, 2008

பாயிண்ட் பரமசிவம் (5)

செய்தி: முதல் மனைவி நானிருக்க, இரண்டாவது திருமணம் நடத்தியது தவறு. என்னை என் கணவனுடன் வாழவிடுங்கள் - முதல் மனைவி.
காதல் கணவரை பிரித்தால் தற்கொலை செய்துகொள்வே - இரண்டாவது மனைவி

சின்ன புள்ளை தனமால்ல இருக்கு. நம்ம முதல்வர் வீட்டை பாருங்க. இப்படியா அடிச்சிக்கறாங்க. அரசனை பார்த்து குடிகள் வாழக் கற்றுக் கொள்ள வேண்டாமோ?

நாடு முழுவதிலும் பொது இடங்களில் புகை பிடிக்க தடை. முதல் கட்டமாக தடையை மீறுபவர்களுக்கு ரூ.200 அபராதம். இது ரூ. 1000 மாக விரைவில் உயர்த்தப் படும். - அன்புமணி

அப்பத்தான பைன் போட்டா ரூ.200 நம்மளை தனியா கவனிச்சா 100 போதும்னு பேரம் பேச முடியும். வாழ்க அன்புமணி. வளர்க அவரின் சேவை.

மாயாவதியின் தலைமயிலான மூன்றாவது அணியில் இணைந்துள்ள மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரும் தேர்தல்களில் அபார வெறிறி காணும்.

இது நாள் வரை காங்கிரஸ் கட்சி அனுபவித்த சணி முடிந்தது. இனி பகுஜன் சமாஜுக்கு சணி ஆரம்பமாகிறது.

நாட்டின் மேம்பாட்டிற்கு தடையாக இருக்கும் பயங்கரவாதம் மற்றும் மத வெறுப்புக்கு இங்கு இடமில்லை என்று ஜனாதிபதி பிரதீபா பாட்டில் கூறியுள்ளார்.

நீங்க ஒருத்தர் தான் எதுவும் சொல்லாம இருந்தீங்க. நீங்க சொல்லிட்டாப்புல ஏதாவது மாறிடப் போகுதா என்ன?

செய்தி: அரசு நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக வேளான் அமைச்சர் மீது புகார் கிளப்பிய மனித உரிமை இயக்க நிர்வாகி மாயம். கண்டுபிடித்து தரும்படி காவல் துறையில் புகார் அளித்தார் மனைவி.

”வேளான் துறை அமைச்சர் சிறு வயது முதல் திராவிட கோட்பாடுகளில் ஈடுபாடு கொண்டவர். அதனால் அவர் இத்தகைய குற்றங்களை செய்திருக்க வாய்ப்பில்லை” அப்படினு முதல்வர் எப்படியும் சொல்லிட போறாரு. அப்புறம் என்ன?

செய்தி: மடிப்பாக்கத்தில் கோவில் உண்டியலை உடைத்து திருடும் நால்வர் கொண்ட கும்பலை தனிப்படை போலீசார் வளைத்துப் பிடித்தனர்.

நம்ம துண்டு போட்ட அண்ணாசிங்க கஜானாவையே காலி பண்ணிகிட்டிருக்காங்க. இவங்க என்னடான்னா உண்டியல் திருடனுக்கெல்லாம் தனிப்படை அமைச்சு தேடிகிட்டிருக்காங்க.

2 comments:

Udhayakumar said...

//மாயாவதியின் தலைமயிலான மூன்றாவது அணியில் இணைந்துள்ள மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரும் தேர்தல்களில் அபார வெறிறி காணும்.

இது நாள் வரை காங்கிரஸ் கட்சி அனுபவித்த சணி முடிந்தது. இனி சமாஜ்வாதியினருக்கு சணி ஆரம்பமாகிறது.//

உங்க அரசியல் அறிவு பிரமாதம்!!! புல்லரிக்குதுங்க!!!

Madhusudhanan Ramanujam said...

உதயகுமார். கருத்திற்கு நன்றி. ஏதோ ஒரு நியாபகத்தில் தவறு நேர்ந்துவிட்டது. பதிவில் திருத்தி விட்டேன்.