Monday, September 01, 2008

மீண்டும் கற் காலம் தான்

உலக நாடுகள் முழுதும் எதிர்கால வளர்சிகளை எதிர்நோக்கி அதற்கு தக்கவாறு தகுந்த விரிவாக்க பணிகளை செய்துவருகின்றன. பொதுவாக அனைத்து நாடுகளிலும் பல் வேறு துறைகளைச் சார்ந்த அதிகாரிகள் ஒன்றாக செயல்பட்டு மக்கள், தொழில் ஆகியவற்றின் வளர்ச்சி விகிதம் மற்றும் இன்ன பிற தகவல்களை திரட்டி அதற்கு தக்கவாறு வளர்சிப் பணிகளை திட்டமிடுவர்.


ஆனால் நம்மூரில் உள்ள பல துறைகள் அவ்வாறான செயல்பாட்டில் சிறிதும் அக்கறை காண்பிப்பதாக தெரியவில்லை. இதற்கு முக்கியமாக அந்தந்த துறைகளைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளும் அத்துறை தனை நிர்வாகிக்கும் அமைச்சர்களுமே. அடிமட்டம் முதல் அமைச்சர் வரை எல்லா நிலைகளிலும் ஊழல் அமோகமாக நடைபெற்று வருகிறது. இந்த நாள் வரை தன் துறையில் உள்ள முறை கேடுகளுக்கோ மற்றும் ஊழல்களுக்கு பொருப்பேற்று பதவி விலகிய ஒரு அமைச்சர் அல்லது மூத்த அதிகாரி பற்றிய ஒரு செய்தி கூட வெளியானது இல்லை என்பதே இத்தகைய அதிகாரிகளுக்கும் அமைச்சர்களுக்கும் நாட்டின் முன்னேற்றத்தின் மீதுள்ள அக்கறையை தெளிவாகக் காண்பிக்கிறது.

குறிப்பிட்டு சொல்ல வேண்டுமெனில், சமீப காலமாக தமிழக்த்தில் நடந்து வரும் சில நிகழ்ச்சிகள் மேற்சொன்ன விஷயங்களுக்கு நல்லதொரு உதாரணமாக அமைகின்றது. நான் இங்கு குறிப்பிடும் இந்த உதாரணங்கள் அனைத்தும் தவறான ஆட்சிமுறைகளுக்கு சிறந்த உதாரணமாக அமைகின்றன. கடந்த இரு நாட்களாக மக்களிடையே பெரும் சர்ச்சையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ள அதிகாரப் பூர்வமான ஐந்து மணீ நேர மின் வெட்டு. சமீபத்திய மின் பற்றாகுறை தனை சமாளிக்க இத்தகைய நடவடிக்கைகள் தேவை என்று அரசு வாதிட்டாலும் அதன் பின் மறைந்த்துள்ள உண்மைகளையும் சற்று அலச வேண்டும். கடந்த ஆட்சியில் மின் தட்டுப்பாட்டினை சமாளிக்கும் வகையில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை என்று தான் தற்போது ஆட்சியில் உள்ள திமுகவினர் பரவலாக கூறி வருகின்றனர். அது உண்மை தான் என எடுத்துக் கொண்டாலும் கடந்த இரண்டாண்டு காலமாக இவர்கள் மட்டும் என்ன கிழித்து விட்டார்கள். கடந்த அதிமுக ஆட்சிக்கு முந்தைய ஆட்சி இவர்களுடையது தானே? அப்போது என்ன சாதித்துவிட்டனர்?

மொத்தத்தில் நாட்டின் வளர்ச்சி குறித்தும் மக்களின் தேவகள் குறித்தும் நம் ஆட்சியாளர்களுக்கும் பல அதிகாரிகளுக்கும் துளியும் கவலை இல்லை என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. இதே நிலை நீடித்தால் வரும் காலம் ஒளி இழந்து போகும். மீண்டும் கற் காலம் தான். வாழ்க நம் ஆட்சியாளர்கள். வாழ்க அவர்தம் ஆட்சி.

4 comments:

தாரணன் said...

"நச்".

Madhusudhanan Ramanujam said...

கருத்துக்கு நன்றி தாரணன்

வடுவூர் குமார் said...

நிஜமாகவே கற்காலம் தானா?:-(

Madhusudhanan Ramanujam said...

//நிஜமாகவே கற்காலம் தானா?//

போற போக்கை பார்த்தா அப்படித்தான் தெரியுது குமார். என்ன ரொம்ப நாளா ஆளைக் காணோம்? நலமா?