Thursday, September 25, 2008

சத்திய மார்கத்தின் பார்வையில் தீவிரவாதம்

சமீபத்தில் சத்தியமார்கம் எனும் ஓர் இணைய தளத்தில் “வெடித்த குண்டுகளும் தீவிரவாதமும் நாமும்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை படிக்க நேர்ந்த்தது. அந்த கட்டுரையானது, இந்தியாவில் தீவிரவாதிகளால் ஏற்படும் அட்டூழியங்களுக்கு காரணம் இந்துக்கள் தான் என்றும், குறிப்பாக சங்பரிவார் போன்ற அமைப்புகள் தான் என்றும் காரணம் கற்பிக்கின்றனர். அது மட்டுமின்றி குண்டு வைப்பவர்களுக்கு நிறைய அறிவுத் திறனும் மன உறுதியும் உள்ளது என்று வேறு புகழாரம் சூட்டுகின்றனர்.

”உண்மையில் குண்டு வைப்பதற்கு இரும்பு மனம் கொண்ட நபர்கள், அதுவும் உயிரைப் பணயம் வைக்கும் துணிச்சலுடன், பிடிபட்டால் போலீசின் சித்திரவதைக்கும், நீதிமன்றத்தின் மரணதண்டனைக்கும் பயப்படாத நெஞ்சுரத்துடன் வேண்டும். இந்த மன உறுதியை வைத்து இவர்கள் வாழ்க்கை முழுவதும் கொள்கைக்காக களமிறங்குபவர்கள் என்று பொருளல்ல. ”


என்ன ஒரு அபத்தம்! கொள்கை எத்தகையது? அது நேர்மையானதா, நியாயமானத என்பது பற்றிய எந்த ஒரு கவலையும் கிடையாது. ஆனால் இவர்களின் கூற்றுப் படி கொள்கைக்காக குண்டு வைப்பதும் அப்பாவிகளை கொலை செய்வதும் தவறில்லை. கொள்கை உள்ளது என்று சொல்லிக் கொண்டால் மட்டும் போதும் என்பது இவர்களுடைய கூற்று.

மேலும் இவர்களின் கூற்றுப்படி பாரதீய ஜனதா ஆளும் மாநிலங்களில் தான் குண்டுகள் வெடிக்கின்றனவாம். என்ன வேடிக்கை பாருங்கள். தில்லியில் ஆளுவது பாஜ இல்லையே. பின்னர் ஏன் அங்கே குண்டுகள் வெடித்தன? ஹைதராபாத்தில் பாஜவின் ஆட்சி இல்லையே. அங்கு ஏன் குண்டுகள் வெடித்தன? அதுவும் அங்கே வெடித்த குண்டுகளில் ஒன்று இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தும் மசூதிக்குள்ளேயே குண்டு வெடித்தது என்பது குறிப்பிடத் தக்கது. அங்கே குண்டு வைத்ததற்காக தேடப்பட்டு வரும் நபரும் இஸ்லாமியர் தானே தவிர ஒரு இந்து அல்ல என்பதை சத்தியமார்கம் இணைய தளத்திற்கும் இதே போன்ற கருத்துக்களை பரப்பும் மற்றவருக்கும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். வார்த்தைகளைக் கொண்டு கட்டுரை எழுதி விட்டால் போதாது. ஒரு குண்டுவெடிப்பில் மயிரிழையில் உயிர் தப்பிய என் போன்றோருக்கு அதன் கோரம் தெரியும். ஹைதராபாத் லும்பினி பார்க் குண்டு வெடிப்பில் சில நிமிட இடைவெளியில் உயிர் பிழைத்தவன் நான்.

”நாடாளுமன்றத் தாக்குதலுக்காகத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட அப்பாவி அப்சல்குருவை இன்னும் தூக்கில் போடாதது தீவிரவாதிகளுக்கு குளிர் விடச்செய்திருக்கிறது என்கிறார் ஒரு தலைவர். உதட்டளவிலோ, அரசியல் ஆதாயத்திற்காகவோ, உள்ளத்தில் இருக்கும் சிறுபான்மை மக்கள் மீதான வெறுப்பினாலோ பேசப்படும் இந்த போதனைகளால் குண்டுகள் அழிந்துவிடுமா?”

நாடாளுமன்றம் தாக்கப்பட்ட வழக்கில் அப்ஸல்குரு குற்றவாளி என்று தீர்பளிக்கப் பட்டார். ஆனால் அவரை இன்னும் தூக்கிலிடவில்லை. தீவிரவாதி ஒருவனின் குற்றம் நிரூபிக்கப் பட்டு அவன் தூக்கிலடப்படுவதை பல்வேறு ஓட்டு வங்கி காரணங்களுக்காக தள்ளிப் போட்டு வரும் சிலர் பேரில் தவறு சொல்லாமல் சிறுபான்மையினருக்கு எதிராக செயல்படுவதாய் ஓலமிடுகின்றனர். ஆனால் இவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. தீவிரவாதிகளை கடுமையாய் பேசினால் இஸ்லாமியர்கள் கோவித்துக் கொள்வார்கள் என்று கருதுபவர்கள் நாட்டை ஆட்சி செய்தால் இத்தகைய விஷமிகள் இப்படித் தான் பேசுவர்.

” அண்ணாசாலையில் தொழிலாளி ஊர்வலம் சென்றால் அதைப் போக்குவரத்திற்கு இடையூறு என்று இந்து பேப்பருக்கு வாசகர் கடிதம் எழுதும் நடுத்தரவர்க்க அறிவாளிகள் போல குண்டுவெடிப்பைத் தடுப்பதற்கு பலரும் ஆலோசனைகளை இலவசமாக வழங்குகின்றனர். போலீசின் அலட்சியம், உளவுத்துறையின் குறைபாடு, பலவீனமான மத்திய அரசு, குண்டு வைப்பவர்கள் மீது இரக்கமின்றி நடவடிக்கை எடுக்காதது, பாக்கிஸ்தான் ஐ.எஸ்.ஐயின் சதிகளை முறியடிக்காதது என்று நீளும் இந்தப்பட்டியல் ஆத்திச்சூடி அறஞ்செய விரும்பு போல மக்களிடம் மனப்பாடமாய் இறக்கப்பட்டிருக்கிறது.”

மேலே உள்ள வாசகங்கள் சத்திய மார்கத்தின் கட்டுரையில் உதிர்க்க பட்டுள்ள உள்ள இன்னொரு முத்து. பாக்கிஸ்தானின் உளவுப் பிரிவுக்கும் இந்தியாவில் அரங்கேறும் தீவிரவாதத்திற்கும் யாதொரும் தொடர்பும் இல்லை என்பது போல் உள்ளது இவர்களின் பேச்சு. இவற்றை பார்க்கையில் இவர்களே ஏன் பாக் உளவுப் பிரிவின் கைக்கூலிகளாய் இருக்க கூடாது எனும் சந்தேகம் கூட எழுகிறது. ஒருவேளை பாக் ஐ.எஸ்.ஐ அமைப்பு சீரிய முறையில் சமூகத் தொண்டு செய்யும் ஒரு நிறுவனம் என்று சொன்னால் இவர்களுக்கு சந்தோஷமாக இருக்கும் போல.

உண்மையில் இஸ்லாமியர்கள் சிறுபான்மையினாரா என்று ஆராய்ந்து பார்க்காமல் வெறுமே ஆதாயங்களை அள்ளிப் பருகுவதற்காக மட்டுமே சிறுபான்மை தோலை போர்த்திக் கொள்கின்றனர். இந்திய ஜனத்தொகையில் கிட்டத்தட்ட 14-15% இஸ்லாமியர்கள் உள்ளனர். இது, முழுதும் இஸ்லாமியர்கள் வாழும் பல நாடுகளின் ஜனத்தொகையைக் காட்டிலும் பன் மடங்க்கு அதிகம் என்பதை அறிவார்களா இவர்கள் ?

”ஆனாலும் சங்கபரிவாரங்களால் அடுத்த பிரதமராக முன்னிறுத்தப்படும் அத்வானி இரும்புக் கரம் கொண்டு குண்டுகளை அடக்கமுடியுமென வன்மையாக எடுத்துரைக்கிறார். அதன்படி குண்டுகளை அடக்க முடியுமா?”

தீவிரவாதத்தை இரும்புக் கரம் கொண்டு அடக்காது வேறென்ன செய்ய வேண்டும் என நினைக்கிறார்கள் இவர்கள்? சமீபத்தில் தமிழக முதல்வரின் மாபெரும் கருணையால் 1405 பேர் விடுதலை ஆனார்களே. அதைப் போல நம் நாட்டின் சிறையில் உள்ள அனைத்து தீவிரவாதிகள் மற்றும் அவருக்கு உதவியவர்களையும் நிபந்தனையின்றி விடுவித்து விட்டால் நின்று போகுமா தீவிரவாதம்?

”அத்வானி உள்துறை அமைச்சராக இருந்த காலத்திலேயே பொடா சட்டமும், அதில் அப்பாவி முசுலீம்கள் ஆயிரக்கணக்கில் கைது செய்யப்படுவதும், வங்கதேச ஏழை அகதிகளை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தி விரட்டப்படுதும், இசுலாமிய அமைப்புகள் பல தடைசெய்யப்பட்டதும் என ஐந்தாண்டு ஆட்சிக்காலத்தில் எத்தனையோ செய்து பார்த்தும் குண்டுகள் மறையவில்லையே!“

பொடா நடைமுறையில் இருந்த காலத்தில் தீவிரவாதிகளுக்கு துணை போக பலர் அஞ்சினர் என்பதே நிஜம். இதை அச்சட்டதை ரத்து செய்தவர்கள் கூட மறுக்க முடியாது. ஆனால் ரத்து செய்தவர்களுக்கோ தேவை அரசியல் விளம்பரம் மற்று இன்ன பிற ஆதாயம். அதனால் மக்கள் எக்கேடும் கெட்டுப் போகட்டும் எனும் வகையில் நடந்து கொள்கின்றனர். மேலே குறிப்பிட்டுள்ள சத்திய மார்கத்தின் கட்டுரை வரிகளில் “என்ன செய்தாலும் உங்களால் தீவிரவாதிகளை ஒன்றும் செய்ய முடியாது” எனும் கொக்கரிப்பே தெரிகிறதே தவிர நம் நாடு அவதியுறுகிறதே, அப்பாவி மக்கள் மடிகின்றனரே என்ற சோகம் கடுகளவும் இல்லை.

இந்து மதத்தை இவ்வளவு தரக்குறைவாக பேசும் இவர்களுக்கு ஒரு விஷயம் முற்றிலும் புரியவில்லை. இந்துக்கள் சகிப்புத் தன்மையுடன் இருந்திராவிடில் இவர்கள் இந்தியாவுக்குள் நுழைந்தும் இருக்க முடியாது. இவர்களை அன்று சகித்துக் கொண்டோம், இன்றும் கொள்கிறோம். இஸ்லாமியர்கள் அனைவரும் தீவிரவாதிகள் இல்லை. அவ்வாறு எண்ணுதல் தவறு என்று நான் என் பதிவில் பல முறை சொல்லியுள்ளேன். ஆனால் இத்தகைய விஷமிகளால் தான் மற்றவருக்கு அவ்வாறு நினைக்கத் தோன்றுகிறது. உண்மையில் இவர்களது வெறுப்பு அத்வானி மீதோ அல்லது இன்ன பிற தலைவர்கள் மீதோ இல்லை. அப்படி இவர்கள் வெறுப்பு சில சங்பரிவார் தலைவர்கள் மீது எனில் ஏன் அப்பாவி மக்களை கொல்ல வேண்டும்?

என்ன செய்தாவது இஸ்லாமின் பெயரால் தீவிரவாதத்தினை பயிர் செய்து உலகை பிணக் காடாக்க வேண்டும் என்பதே இத்தகைய விஷமிகளின் நோக்கம். இந்து மற்றும் இஸ்லாமியர்களின் இடையே பிரிவினை நெருப்பை வளர்த்து அதில் குளிர் காய்வது மட்டுமே நோக்கமாகக் கொண்டு இத்தகைய கட்டுரைகள் பிரசுரிக்க படுகின்றன. குண்டு வைத்து மக்களைக் கொல்லும் தீவிரவாதிகளுக்கும் இத்தகைய வெறுப்பை வளர்க்கும் இன்ன பிறருக்கும் என் மட்டில் எந்த ஒரு வித்யாசமும் இல்லை. முதலில் இனம் கண்டுகொள்ள வேண்டியது இத்தகையோரைத்தான்! இத்தகைய விஷமிகளால் பாதிக்கப்படும் உண்மையான, அற வழி நடக்கும் இஸ்லாமியர்களுக்காக நான் பரிதாபப் படுகிறேன்.

டிஸ்கி: ”சத்திய மார்கம்” என்று நான் குறிப்பிட்டுள்லது சத்திய மார்கம் இணைய தளத்தினை மட்டுமே குறிக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
சாய்வான நீல நிற எழுத்துக்களில் உள்ளன யாவும் சத்திய மார்கம் இணைய தளத்திலிருந்து பிரதி எடுக்கப் பட்டவை.

51 comments:

ஜமீல் said...

ஐயா மதுசூதனன் ராமானுஜம்,

தாங்கள் இங்குப் போட்டுத் தாக்கியிருக்கும் பதிவு, வேறொரு தளத்திலிருந்து எடுத்துப் போடப் பட்ட ஒரு மீள்பதிவாகும்.

ஒருஜினல் பதிவின் சுட்டி:http://vinavu.wordpress.com/2008/07/29/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF/

சத்திய மார்க்கம்.காம் பதிவில் இறுதியில் நன்றி போட்டிருந்தார்களே, நீங்கள் படிக்கவில்லையா?

Anonymous said...

Muslims = Terrorism, its a known fact.

Just take a list of countries hit by terrorism, either they were muslim nations or countries(where human rights are exists) where muslim lives.

Eg...You can't find terrorism in China which is a non muslim country and have dictatorship rule with no humanrights.

India need iron man like Adwani and requires severe laws including death penalty to handle muslim terrorism.

Sekar, Singapore

Madhusudhanan Ramanujam said...

//தாங்கள் இங்குப் போட்டுத் தாக்கியிருக்கும் பதிவு, வேறொரு தளத்திலிருந்து எடுத்துப் போடப் பட்ட ஒரு மீள்பதிவாகும்.//

நான் இந்தப் பதிவை படிக்கவில்லை.

Anonymous said...

//சத்திய மார்க்கம்.காம் பதிவில் இறுதியில் நன்றி போட்டிருந்தார்களே, நீங்கள் படிக்கவில்லையா?//

ஒரு இனத்தின் மீது அதீத வெறுப்பு இருந்தால் இப்படி தான் கண்ணு தெரியாம போகும்

Madhusudhanan Ramanujam said...

//ஒரு இனத்தின் மீது அதீத வெறுப்பு இருந்தால் இப்படி தான் கண்ணு தெரியாம போகும்//

நன்றி. எனக்குள் இருப்பது இஸ்லாமியர்கள் மீது வெறுப்பா இல்லை அப்பாவி மக்களின் மீதுள்ள அக்கறையா என்பது எனக்குத் தெரியும். பதிவை நடு நிலையுடன் படிப்பவருக்கும் புரியும்.

Anonymous said...

உங்கள் கொண்டையும் நன்றாகவே தெரியிது

Madhusudhanan Ramanujam said...

//உங்கள் கொண்டையும் நன்றாகவே தெரியிது//

ரொம்ப சந்தோஷமுங்க. நீங்க வந்து பின்னி பூ வைங்க.

Robin said...

குண்டுகள் வைத்து மக்களை கொல்பவர்களை தீவிரவாதிகள் என்றும் அவர்கள் அழிக்கப்படவேண்டும் என்றும நினைக்கிறோம். நல்லது. ஆனால் கலவரம் என்ற பெயரில் பெண்களையும் குழந்தைகளையும் உயிரோடு கொளுத்தும் காவிகளை மட்டும் தீவிரவாதிகள் என்று அழைக்காதது ஏன்? ஒருவேளை தீவிரவாதிகளை விட பயங்கரமானவர்கள் என்பதால் சரியான் அர்த்தத்தை தரும் வேறு பெயர் அகராதியில் இல்லையோ என்னவோ.

Robin said...

தீவிரவாதிகளை வேட்டையாடும் மத்திய மாநில அரசுகள் காவிகளை மட்டும் விட்டு வைத்திருப்பது ஏன்? இந்துக்கள் என்பதாலா? இதைத் தான் போலி மதசார்பின்மை என்கிறார்களோ?

Anonymous said...

ரொம்ப சந்தோஷமுங்க. நீங்க வந்து பின்னி பூ வைங்க

Good answer

You can't find terrorism in China

It started there too and there was plots during olympics- Wanna know who are the culprits-
http://en.wikipedia.org/wiki/Terrorism_in_China

Anonymous said...

//உங்கள் கொண்டையும் நன்றாகவே தெரியிது//

ரொம்ப சந்தோஷமுங்க. நீங்க வந்து பின்னி பூ வைங்க////

மதுசூதனன் ராமானுஜம் அய்யா,

ஆமாங்கய்யா.வேலையில்லாத தமிழ் நாட்டு கருப்பு சட்டை வெறி நாய்களுக்கு இந்த மாதிரி வேலையெல்லாம போட்டுக் கொடுத்தால்தான் குரைக்காம,கடிக்காம இருப்பாங்க.

Madhusudhanan Ramanujam said...

//தீவிரவாதிகளை வேட்டையாடும் மத்திய மாநில அரசுகள் காவிகளை மட்டும் விட்டு வைத்திருப்பது ஏன்? இந்துக்கள் என்பதாலா? இதைத் தான் போலி மதசார்பின்மை என்கிறார்களோ?//

நீங்க எந்த அரசை பத்தி சொல்றீங்க? ஏன்னா இப்ப உள்ள மத்திய அரசும் சரி மாநில அரசும் சரி தீவிரவாதிகளால் மக்கள் உயிரிழப்பதைப் பற்றி சிறிதும் கவலைப் படவில்லை.

Anonymous said...

//நான் இந்தப் பதிவை படிக்கவில்லை.//

இதுதான் நடுநிலையோடு படிப்பதா?

Madhusudhanan Ramanujam said...

//இதுதான் நடுநிலையோடு படிப்பதா?//

கொஞ்சம் யோசிச்சு பேசுங்க அனானி. நான் படிச்ச கட்டுரை சத்திய மார்கத்தில் வெளிவந்தது. அதே கட்டுரையை இன்னொருவர் பதிவிலிருந்து அவர்கள் வெளியிட்டுள்ளனர். மொத்தத்தில் இரண்டு இடங்களிலும் உள்ள விஷயம் என்னவோ ஒன்று தான். இதில் என்ன நடுநிலை இல்லாமல் போனது? ஏதாவது சொல்ல வேண்டும் என்பதற்காக வேண்டி உளறாது உருப்படியாய் ஏதாவது சொல்லும் ஐயா.

Madhusudhanan Ramanujam said...

//குண்டுகள் வைத்து மக்களை கொல்பவர்களை தீவிரவாதிகள் என்றும் அவர்கள் அழிக்கப்படவேண்டும் என்றும நினைக்கிறோம். நல்லது. ஆனால் கலவரம் என்ற பெயரில் பெண்களையும் குழந்தைகளையும் உயிரோடு கொளுத்தும் காவிகளை மட்டும் தீவிரவாதிகள் என்று அழைக்காதது ஏன்? ஒருவேளை தீவிரவாதிகளை விட பயங்கரமானவர்கள் என்பதால் சரியான் அர்த்தத்தை தரும் வேறு பெயர் அகராதியில் இல்லையோ என்னவோ.//

உங்கள் கருத்துப்படி காவி கட்டிய அனைவரும் கலகக் காரர்கள் எனில் குல்லா வைத்தவர் அனைவரும் தீவிரவாதிகள் தான். நீங்கள் பேசுவது விதண்டாவதமே தவிர வேறு எதுவும் இல்லை. நான் கூறிய எந்த ஒரு குற்றச்சாட்டுக்கும் நியாயமான ஒரு எதிர்வாதத்தினை உங்களால் முன் வைக்க முடியவில்லை. பிறகு எதற்க்கு வெட்டிப் பேச்சு ?!?

நான் ஏற்கென்னவே எழுதியுள்ளது போல் எல்லோரும் கெட்டவர்கள் எனும் கண்ணோட்டம் மிகவும் தவறானது.

Robin said...

//நீங்க எந்த அரசை பத்தி சொல்றீங்க? ஏன்னா இப்ப உள்ள மத்திய அரசும் சரி மாநில அரசும் சரி தீவிரவாதிகளால் மக்கள் உயிரிழப்பதைப் பற்றி சிறிதும் கவலைப் படவில்லை. //
தினமும் தீவிரவாதிகள் கைது செய்யப்படுவதும் அல்லது கொல்லப்படுவதும் நாளிதழ்களில் செய்திகளாக வந்து கொண்டுதானே இருக்கிறது. அந்த செய்திகள் எல்லாம் பொய்யா?

Robin said...

//உங்கள் கருத்துப்படி காவி கட்டிய அனைவரும் கலகக் காரர்கள் எனில் குல்லா வைத்தவர் அனைவரும் தீவிரவாதிகள் தான்.// காவிகள் என்று அழைக்கப்படுபவர்கள் சங் பரிவரிவார் என்று அழைக்கப்படும் பயங்கரவாதிகள் என்பது சிறு பிள்ளைக்குக் கூட தெரியும். உங்களுக்குத் தெரியாதது ஆச்சரியமே.

Robin said...

//நீங்கள் பேசுவது விதண்டாவதமே தவிர வேறு எதுவும் இல்லை.// நான் பேசுவது விதண்டாவாதமாக தெரிவது உங்களுக்கு ஜால்ரா அடிக்காததால் என்று நினைக்கிறேன். தீவிரவாதிகள் தண்டிக்கப்படவேண்டும் என்பதில் எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. ஆனால் வன்முறையால் மக்களை கொல்பவர்கள் அனைவரும் தீவிரவாதிகளே என்று கருதும் நிலை வரவேண்டும். மற்றபடி முஸ்லிம்களில் சிலர் வன்முறையால் ஈடுபட்டால் மட்டும் அது தீவிரவாதம், இந்துக்கள் வன்முறையால் ஈடுபட்டால் அது கலவரம் என்று சொல்லும் பித்தலாட்டம் நிறுத்தப்படவேண்டும். குண்டு வெடித்தாலும் திரிசூலம் குத்தினாலும் உயிர் போகும் என்பதை மனித குணம் படைத்த மனிதர்கள் அனைவரும் அறிவார்கள்.

Madhusudhanan Ramanujam said...

//குண்டுகள் வைத்து மக்களை கொல்பவர்களை தீவிரவாதிகள் என்றும் அவர்கள் அழிக்கப்படவேண்டும் என்றும நினைக்கிறோம். நல்லது. ஆனால் கலவரம் என்ற பெயரில் பெண்களையும் குழந்தைகளையும் உயிரோடு கொளுத்தும் காவிகளை மட்டும் தீவிரவாதிகள் என்று அழைக்காதது ஏன்? ஒருவேளை தீவிரவாதிகளை விட பயங்கரமானவர்கள் என்பதால் சரியான் அர்த்தத்தை தரும் வேறு பெயர் அகராதியில் இல்லையோ என்னவோ.//

நீங்கள் சொன்ன படி, வெடிகுண்டோ திரிசூலமோ இரண்டும் உயிர் பறிக்கும் என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன்.

நீங்கள் குறிப்பிடும் கலவரங்கள் பலவும் அரசியல் லாபங்களுக்காக தூண்டிவிடப் படுபவை. உதாரணமாக ஹைதராபாத் மெக்கா மஸ்ஜித்தில் நடை பெற்ற ஒரு குண்டு வெடிப்பு. இதை நடத்தியது ஒரு தீவிரவாத இயக்கம் தான் என்றாலும் அதன் பின் விளைவுகள் என்ன என்பது முக்கியம். ஒரு மசூதியில் குண்டு வெடிப்பு என்றதும் உடனே சில இஸ்லாமியர்கள் இது இந்துக்களின் வேலை என நினைப்பர். இதை ஊதிப் பெரிது படுத்த பலர் எப்போதும் தயாராய் இருப்பர். அதன் பின் நீங்கள் குறிப்பிடும் கலவரம் செவ்வனே நடந்தேறும். இப்போது ஒரு தரப்பினர் இன்னொரு தரப்பால் தாக்கப் படும் போது இது பெரும் கலவரத்தில் முடிவது எப்போதும் நடக்கும் ஒன்று.

சாதரணமாக இந்துக்களோ அல்லது இஸ்லாமியர்களோ எவரும் அத்தகைய செயல்களில் ஈடு படுவதில்லை. நீங்கள் குறிப்பிடும் கலவரங்கள் நடைபெறாது இருக்க வேண்டுமெனில் மெக்கா மஸ்ஜித், அக்ஷர்தம் போன்ற குண்டு வெடிப்புகள் நிகழாது இருத்தல் வேண்டும்.

Robin said...

//நீங்கள் குறிப்பிடும் கலவரங்கள் நடைபெறாது இருக்க வேண்டுமெனில் மெக்கா மஸ்ஜித், அக்ஷர்தம் போன்ற குண்டு வெடிப்புகள் நிகழாது இருத்தல் வேண்டும்// உங்கள் கருத்து உங்களுக்கும நீங்கள் குறைகூறும் இணையதளத்துக்கும் உள்ள இடைவெளியை குறைத்துவிட்டது. குண்டு வெடிப்புகளால் கலவரம் வருகிறது என்று நீங்கள் சொல்லும்போது, கலவரத்தால்தான் குண்டு வெடிக்கிறது என்றும் சொல்லாமே. உண்மையில் நீங்கள் சொல்வதுபோல் பெரும்பாலான கலவரங்கள் தானாக நடப்பதில்லை: திட்டமிட்டே நடக்கின்றன. வன்முறைக்கு நியாயம் கற்பிப்பது அந்த வன்முறையை போலவே தவறான செயல்.

Anonymous said...

//கொஞ்சம் யோசிச்சு பேசுங்க அனானி. நான் படிச்ச கட்டுரை சத்திய மார்கத்தில் வெளிவந்தது. அதே கட்டுரையை இன்னொருவர் பதிவிலிருந்து அவர்கள் வெளியிட்டுள்ளனர். மொத்தத்தில் இரண்டு இடங்களிலும் உள்ள விஷயம் என்னவோ ஒன்று தான். இதில் என்ன நடுநிலை இல்லாமல் போனது? ஏதாவது சொல்ல வேண்டும் என்பதற்காக வேண்டி உளறாது உருப்படியாய் ஏதாவது சொல்லும் ஐயா. //

ஐயே உங்கள என்ன சொல்றதுனே புரியல. பதிவோட தலைப்பு
"சத்திய மார்கத்தின் பார்வையில் தீவிரவாதம்"-னு திரிச்சி எழுதிட்டு நடுநிலை எஙகே இல்லனு வேற கேட்குறீங்க.
இதுல "டிஸ்கி" னு வேற போட்டு
//”சத்திய மார்கம்” என்று நான் குறிப்பிட்டுள்லது சத்திய மார்கம் இணைய தளத்தினை மட்டுமே குறிக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.//
இதெல்லாம் எழுதிட்டு நடுநிலைய பத்தி பேசறீங்க நல்லாகீது உங்க நியாயம்(???)

Madhusudhanan Ramanujam said...

//ஐயே உங்கள என்ன சொல்றதுனே புரியல. பதிவோட தலைப்பு
"சத்திய மார்கத்தின் பார்வையில் தீவிரவாதம்"-னு திரிச்சி எழுதிட்டு நடுநிலை எஙகே இல்லனு வேற கேட்குறீங்க.
இதுல "டிஸ்கி" னு வேற போட்டு...//

நான் எழுதின விஷயத்துல எது திரிச்சு எழுதி இருக்கு? சத்திய மார்கம் இணைய தளத்தில் நான் குறிப்பிட்டுள்ள கட்டுரை இருப்பதென்னவோ உண்மை. அக்கட்டுரையில் எழுதி இருப்பதை மறுத்து என் கருத்தை நான் முன் வைத்துள்ளேன். இந்தியாவில் நடைபெறும் குண்டு வெடிப்புகளில் பாக்கிஸ்தான் தீவிரவாதிகளுக்கும் ஐஎஸ்ஐ போன்ற அமைப்புகளுக்கும் தொடர்பு உள்ளது என்று எழுதியுள்ளேன். அதில் என்ன திரிப்பை கண்டீர் நீர்?

தமிழில் இஸ்லாமை “சத்திய மார்கம்” எனக் குறிப்பிடும் வழக்கம் உள்ளது. அதனால் தான் என் தலைப்பு இணைய தளத்தை குறிக்கிறது என்னும் டிஸ்கி.

Anonymous said...

யோவ் ராபின் குண்டு வெடிச்சா இந்து மட்டுமில்ல உன்னைப் போல் கிறுத்தவனும்தான் சாவான். அவுங்க தொழுகை நேரத்தில் மதியம்/சாயங்காலம் குண்டு வைக்குறாங்க தெரியுமில்லை!!!

சலீம் said...

//தீவிரவாதிகளை வேட்டையாடும் மத்திய மாநில அரசுகள் காவிகளை மட்டும் விட்டு வைத்திருப்பது ஏன்? //

அதை நீங்கதான் சொல்லனும். உங்க ரோமாபுரி ஆட்சிதானே டில்லில நடக்குது.

ஒரு வேளை இஸ்லாமிற்கு எதிரான உலக அளவிலான கிறுத்துவ யூத இந்து மதங்களின் சதியாக இருக்கும்!

Madhusudhanan Ramanujam said...

//யோவ் ராபின் குண்டு வெடிச்சா இந்து மட்டுமில்ல உன்னைப் போல் கிறுத்தவனும்தான் சாவான். அவுங்க தொழுகை நேரத்தில் மதியம்/சாயங்காலம் குண்டு வைக்குறாங்க தெரியுமில்லை!!! //

ராபின் ஆரம்பத்திலிருந்தே ஒரு மார்க்கமாத் தான் பேசறாரு. நீங்க அவர் கிறித்தவர் அப்படினு சொல்லி இருக்கீங்க. அப்படி அவர் ஒரு வேளை கிறித்தவரா இருந்தா அவரின் பேச்சிற்கான காரணம் இது தான்:
கிறித்தவர்கள் சிலருக்கு, உலகம் முழுதும் கிறித்தவம் தான் இருக்க வேண்டும் என்ற வெறி உள்ளது. அதற்காக பணத்தை தண்ணீராய் செலவழிக்கிறார்கள் அவர்கள். எதிரிக்கு எதிரி நண்பன் என்பது அவரின் மனோபாவம். இஸ்லாமியரில் சிலருக்கு இந்துவைக் கண்டால் ஆகவில்லை; இவர்களில் சிலருக்கும் இந்துக்களை கண்டால் ஆகவில்லை. அதனால் அவருக்கு இவர் ஜால்ட்ரா. வேறெப்பெடி நாட்டை வளர்ப்பது ?

Madhusudhanan Ramanujam said...

//ஒரு வேளை இஸ்லாமிற்கு எதிரான உலக அளவிலான கிறுத்துவ யூத இந்து மதங்களின் சதியாக இருக்கும்!//

என்னங்க காமெடியா இருக்கு. நீங்கல்லாம் சிறுபான்மை இனத்தவர் உங்களை பாதுகாப்போம்னு சொல்லி, குல்லா போட்டு கஞ்சியெல்லாம் குடிக்கிறாங்க தலைவருங்க. நீங்க என்னடான்ன ஆட்சியாளர்கள் உங்களுக்கு எதிரா சதி பண்றதா சொல்றீங்க. அப்போ நேது கருணாநிதியும் இன்னைக்கு ஸ்டாலினும் போட்ட குல்லா உங்களுக்கு தானா ?!?!

jo said...

//யோவ் ராபின் குண்டு வெடிச்சா இந்து மட்டுமில்ல உன்னைப் போல் கிறுத்தவனும்தான் சாவான். அவுங்க தொழுகை நேரத்தில் மதியம்/சாயங்காலம் குண்டு வைக்குறாங்க தெரியுமில்லை!!! //

ராபின் குல்லா வைத்தவர் he is not a christian

Madhusudhanan Ramanujam said...

//ராபின் குல்லா வைத்தவர் he is not a christian //

அதெப்படி உங்களுக்கு தெரியும் ?

Anonymous said...

//ராபின் ஆரம்பத்திலிருந்தே ஒரு மார்க்கமாத் தான் பேசறாரு. நீங்க அவர் கிறித்தவர் அப்படினு சொல்லி இருக்கீங்க. அப்படி அவர் ஒரு வேளை கிறித்தவரா இருந்தா//

அவர் பல பதிவுகளில் கிறுத்துவ மதத்திற்கு ஆதரவான கருத்துக்கள் சொல்லியுள்ளார். ஆனால் jo அவர்கள் சொன்னா மாதிரி இசுலாமியராகவும் இருக்க வாய்ப்பு உண்டு. ஏன்னெனில் அவர் கிறுத்துவ மதத்தை ஆதரிப்பதோடு இசுலாமிய தீவிரவாததை defend செய்கிறார்.

ஆனால் எனது தனிப்பட்ட கருத்து கிறுத்துமும் இந்து மதமும் சண்டை போடாமல் தங்களுக்குள் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். இல்லாவிடின் உலகம் தழுவிய இந்த ஜிகாதிற்கெதிரான போர் வெல்ல இயலாதது.

இறை நேசன் said...

பதிவு முழுக்க "சத்தியமார்கம் தளத்தினர் கட்டுரையில் எழுதியுள்ளனர்" என்ற வாசகத்தைப் பயன்படுத்தியதிலிருந்து கட்டுரையின் இறுதிவரை நீங்கள் அந்தக் கட்டுரையை படிக்கவில்லை என்பது தெளிவாகிறது.

இறுதியில் போடப்பட்டுள்ள "நன்றி"யை பார்ப்பவர்கள் எவருக்கு அது சத்தியமார்க்கம் தளத்தினர் எழுதிய கட்டுரை அல்ல என்பது தெரியும். அதனைச் சுட்டிக்காட்டியப் பின்னரும் உங்கள் பதிவில், "சத்தியமார்க்கம் தளத்தினர் எழுதியது" போன்று பயனபடுத்தியிருக்கும் வாசகங்களை நீக்கிக் கட்டுரையாளரான "வினவைக்" குறிப்பிடாததன் மர்மம் என்ன?

இறை நேசன் said...

பதிவு முழுக்க "சத்தியமார்கம் தளத்தினர் கட்டுரையில் எழுதியுள்ளனர்" என்ற வாசகத்தைப் பயன்படுத்தியதிலிருந்து கட்டுரையின் இறுதிவரை நீங்கள் அந்தக் கட்டுரையை படிக்கவில்லை என்பது தெளிவாகிறது.

இறுதியில் போடப்பட்டுள்ள "நன்றி"யை பார்ப்பவர்கள் எவருக்கும் அது சத்தியமார்க்கம் தளத்தினர் எழுதிய கட்டுரை அல்ல என்பது தெரியும். அதனைச் சுட்டிக்காட்டியப் பின்னரும் உங்கள் பதிவில், "சத்தியமார்க்கம் தளத்தினர் எழுதியது" போன்று பயனபடுத்தியிருக்கும் வாசகங்களை நீக்கிக் கட்டுரையாளரான "வினவைக்" குறிப்பிடாததன் மர்மம் என்ன?

Anonymous said...

இந்துக்கள் சகிப்புத் தன்மையுடன் இருந்திராவிடில் இவர்கள் இந்தியாவுக்குள் நுழைந்தும் இருக்க முடியாது. இவர்களை அன்று சகித்துக் கொண்டோம், இன்றும் கொள்கிறோம்.

அவ்வாறெனில் உங்கள் கருத்துப்படி இன்று இந்தியாவில் வாழும் 14-15 சதவீத, கிட்டத்தட்ட 20 கோடி முஸ்லிம்கள் இந்தியாவில் "வந்து நுழைந்தவர்கள்". அபாரம் உங்களின் கண்டுபிடிப்பும் நடுநிலையும்!

குடுமி தெரியுது. மறைச்சுக்கோங்க.

- இந்து என்றப் போர்வையில் வந்தேறி சனாதன பார்ப்பனப் பரதேசிகளால் அடக்கி ஒடுக்கி வைக்கப்பட்டிருந்தத் தாழ்த்தப்பட்டவர்களின் பரம்பரையில் உதித்த இறை நேசன்.

Madhusudhanan Ramanujam said...

//அவ்வாறெனில் உங்கள் கருத்துப்படி இன்று இந்தியாவில் வாழும் 14-15 சதவீத, கிட்டத்தட்ட 20 கோடி முஸ்லிம்கள் இந்தியாவில் "வந்து நுழைந்தவர்கள்". அபாரம் உங்களின் கண்டுபிடிப்பும் நடுநிலையும்!//

இஸ்லாமும் சரி கிறித்தவமும் சரி இந்தியாவில் தோண்றியது இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும். நான் கூறி இருப்பதற்கு 20 கோடி பேர் வந்து நுழைந்தவர்கள் என்று அர்த்தமில்லை. உங்களுக்கு அதுவும் புரியவில்லை எனில் நான் என்ன செய்ய சொல்லுங்கள்?

//குடுமி தெரியுது. மறைச்சுக்கோங்க.//
எதற்காக மறைக்க வேண்டும். இருப்பது தெரிகிறது. தெரிந்தால் தெரிந்துவிட்டு போகட்டும். நான் என் அடையாளங்களை மறைக்கவோ அல்லது மாற்றவோ வேண்டிய தேவை எனக்கில்லை.

//இந்து என்றப் போர்வையில் வந்தேறி சனாதன பார்ப்பனப் பரதேசிகளால்//

நீங்கள் குறிப்பிடும் இந்த ஆரிய வந்தேறிகள் கதையும் பெரும் புரட்டு என்பது இன்று உலகறியும் :). எனவே வேறு ஏதாவது முயற்சி செய்யுங்களேன்.

Anonymous said...

//இவர்களை அன்று சகித்துக் கொண்டோம், இன்றும் கொள்கிறோம்.
//

என்னே கருணை!

மதுசூதனன் சார்,

கைபர் போலன் வழியாக ஆடுமாடுகளை ஓட்டிக் கொண்டு வந்த சிலர் அறிமுகப்படுத்தியது தான் இந்து என்ற ஒரு இல்லாத மதம்.

இங்கிருக்கும் கிறிஸ்தவர்களாகட்டும், இஸ்லாமியர்களாகட்டும் எல்லாரும் உங்கள் முன்னோர்களின் கொடுமை தாங்க முடியாமல் மதம் மாற்றிக் கொண்டு தங்கள் சுயம்ரியாதையைக் காப்பாற்றிக் கொண்டவர்கள்.

உங்களை இன்றும் எம்மைப் போன்ற சிந்திக்கும் சிலர் சகித்துக் கொள்வதினால் தான் உங்களால் இன்னும் சனாதனத் திமிர் பேச்சு பேச முடிகிறது.

Madhusudhanan Ramanujam said...

//இறுதியில் போடப்பட்டுள்ள "நன்றி"யை பார்ப்பவர்கள் எவருக்கு அது சத்தியமார்க்கம் தளத்தினர் எழுதிய கட்டுரை அல்ல என்பது தெரியும். அதனைச் சுட்டிக்காட்டியப் பின்னரும் உங்கள் பதிவில், "சத்தியமார்க்கம் தளத்தினர் எழுதியது" போன்று பயனபடுத்தியிருக்கும் வாசகங்களை நீக்கிக் கட்டுரையாளரான "வினவைக்" குறிப்பிடாததன் மர்மம் என்ன?//

நான் எழுதிய ஒரு கட்டுரையை ஒரு தினசரியோ அல்லது வார பத்திரிக்கையோ பிரசுரிக்குமாயின், அதில் என் பெயர் இருந்தாலும் கூட, பிரசுரித்த பத்திரிக்கைகும் அதில் பங்கு உண்டு என்று தானே பொருள்?

தினம் தினமலர் இதழில் வெளியான நபிகள் நாயகம் குறித்த கேலி சித்திரம் அந்த வகையைச் சார்ந்த ஒன்றுதானே? எழுதியது தனியொரு பதிவராக இருப்பினும் அதை பிரசுரித்த சத்ய மார்கத்துக்கும் இந்தக் கருத்தில் உடன்பாடு உண்டு என்று தான் பொருள். ஒரு வேளை சத்திய மார்கம் இது தன் சொந்த கருத்தல்ல என்று கூறி இருந்தால், நீங்கள் சொல்வதை நான் ஏற்க முடியும்.

Anonymous said...

//இந்து என்றப் போர்வையில் வந்தேறி சனாதன பார்ப்பனப் பரதேசிகளால் அடக்கி ஒடுக்கி வைக்கப்பட்டிருந்தத் தாழ்த்தப்பட்டவர்களின் பரம்பரையில் உதித்த இறை நேசன்.//

1.அப்படியே ஆரியர் படையெடுப்பு உன்மை எனிலும் அதற்கு முன்பே திராவிடர்கள் கடைபிடித்த மதம் இந்து மதம். இதற்கு ஆதாரம் ஸ்கூல் புஸ்தகம்: சிந்து சம்வெளி மக்கள் பசுபதி எனும் சிவனை வழிபட்டுள்ளனர்.

2. ஆரிய திராவிடப் பிரிவினை ஆங்கிலேயர்களால் அவர்களீன் அடிவருடிகளான நீதி கட்சி மூலம் வளர்க்கப்பட்டது. இதற்கு ஆப்படித்தவர்தான் 'மாயாவதி'. தலித்-பிராமண கூட்டணி மூலம் ஆட்சிக்கு வந்துள்ளார்.

3. ஆனால் முஸ்லிம் மதத்தினை பரப்ப வந்த அரேபிய குரூப் காட்டிமிராண்டி குரூப்பாகும். இன்னமும் அந்த குரூப் 8-ம் நூற்றாண்டை விட்டு வரவில்லை. கல்லாலடித்து கொல்வது, இரண்டு குதிரைகளில் (தற்போது காரில்) கையை கட்டி வேறு திசைகளில் விரட்டி கையை பிய்த்து கொல்வது என அப்படியே இருக்கின்றார்கள்.

Anonymous said...

//நான் எழுதிய ஒரு கட்டுரையை ஒரு தினசரியோ அல்லது வார பத்திரிக்கையோ பிரசுரிக்குமாயின், அதில் என் பெயர் இருந்தாலும் கூட, பிரசுரித்த பத்திரிக்கைகும் அதில் பங்கு உண்டு என்று தானே பொருள்?

தினம் தினமலர் இதழில் வெளியான நபிகள் நாயகம் குறித்த கேலி சித்திரம் அந்த வகையைச் சார்ந்த ஒன்றுதானே? //

நச் கேள்வி!!!

தினமலர் செய்தால் மத துவேசம்... அப்ப இது????

Anonymous said...

/நான் எழுதிய ஒரு கட்டுரையை ஒரு தினசரியோ அல்லது வார பத்திரிக்கையோ பிரசுரிக்குமாயின், அதில் என் பெயர் இருந்தாலும் கூட, பிரசுரித்த பத்திரிக்கைகும் அதில் பங்கு உண்டு என்று தானே பொருள்?
//

நல்லா சப்பைக் கட்டுறீங்க சார்! ரொம்ப சிரமப் பட வேண்டாம். உங்கள் சார்பு நிலை நல்லாவே தெரியும்.

Anonymous said...

//நான் எழுதிய ஒரு கட்டுரையை ஒரு தினசரியோ அல்லது வார பத்திரிக்கையோ பிரசுரிக்குமாயின், அதில் என் பெயர் இருந்தாலும் கூட, பிரசுரித்த பத்திரிக்கைகும் அதில் பங்கு உண்டு என்று தானே பொருள்?
//

நல்லா சப்பைக் கட்டுறீங்க சார்! ரொம்ப சிரமப் பட வேண்டாம். உங்கள் சார்பு நிலை நல்லாவே தெரியும்

Madhusudhanan Ramanujam said...

//நச் கேள்வி!!!

தினமலர் செய்தால் மத துவேசம்... அப்ப இது????
//

தினமலரில் நபிகளை கேலி செய்து சித்திரம் ஒன்று வெளியானது. ஆனால் நான் இங்கு எந்த மதத்தினரையும் கண்டிக்கவில்லை. மதம் சொல்வதாய் கூறிக் கொண்டு கொலை பாதகம் செய்பவரை தான் கண்டிக்கிறேன். என் இந்தப் பதிவிலோ அல்லது வேறு ஏதாவது ஒரு பதிவிலோ ஏதாவது ஒரு மதத்தினைச் சார்ந்தவரையோ அல்லது சாதியின் அடிப்படையிலோ ஒரு நபரை கேலி செய்திருந்தால் நீங்கள் பேசுவது முற்றிலும் சரி. ஆனால் நான் அவ்வாறு எதுவும் செய்யவில்லை.

என் கருத்து இஸ்லாமியர்கள் கெட்டவர்கள் என்பது அல்ல. சிலர் இஸ்லாமின் போர்வையில் செய்யும் அட்டூழியங்களை மட்டுமே நான் கடிந்து கொள்கிறேன். இது தெரிந்தும் கூட சொல்பவன் பிராமணன் அதனால் நான் கேட்க்க மாட்டேன் என்பது உங்கள் விதண்டாவதம் புரியும் இயல்பையும் அறியாமையையும் மட்டுமே பரைசாற்றுகிறது.

Madhusudhanan Ramanujam said...

//நல்லா சப்பைக் கட்டுறீங்க சார்! ரொம்ப சிரமப் பட வேண்டாம். உங்கள் சார்பு நிலை நல்லாவே தெரியும்//

மிக்க நன்றி அனானி.

வந்தியத்தேவன் said...

நீங்கள் குறிப்பிடும் இந்த ஆரிய வந்தேறிகள் கதையும் பெரும் புரட்டு என்பது இன்று உலகறியும் :)
//

இப்படி சொல்லிவிட்டு ஓரு ஸ்மைலி போட்டு நீங்கள் வாயால் சிரித்து இருக்கின்றீர்கள். உங்களின் இந்தப் புரட்டை கேட்பன் சூத்தால் சிரிப்பான்.
தெரியாமலா முன்னோர்கள் சொன்னார்கள் அய்யன் புழுகை அணை போட்டுத்தான் தடுக்கனும்னு

Madhusudhanan Ramanujam said...

//இப்படி சொல்லிவிட்டு ஓரு ஸ்மைலி போட்டு நீங்கள் வாயால் சிரித்து இருக்கின்றீர்கள். உங்களின் இந்தப் புரட்டை கேட்பன் சூத்தால் சிரிப்பான்.
தெரியாமலா முன்னோர்கள் சொன்னார்கள் அய்யன் புழுகை அணை போட்டுத்தான் தடுக்கனும்னு//

வெறுமே அடுக்கு மொழி பேசி இல்லாததை இருக்குனு நிரூபிக்க பார்காதீர்கள். ஆரியர்கள் கைபர் கணவாய் வழியாக வந்தவர்கள் எனும் வாதத்தினை முன் வைத்தவரே அதை தவறு என பின்னாளில் ஒப்புக் கொண்டார். இன்றும் அதைப் பிடித்துக் கொண்டு அழுவது நீங்கள் மட்டும் தான். ஏனெனில் உங்களுக்கு அது திராவிட அரசியலுக்காக தேவைப் படுகிறது.

Anonymous said...

Vinau's arguments have been challenged in his blog. Satyamargam is a site that supports
islamic fundamentalism.Many of the tamil muslim bloggers are also like that. Some like Nalladiyar support Taliban. These fellows wont say anything against Pakistan
or anyy other muslim country.Maoists and muslims are coming together.Satyamargam accepts that.It does not publish anything with which it disagrees.
It indirectly supports islamic terrorism.Such sites should be banned.

dondu(#11168674346665545885) said...

குற்றச்சாட்டு எதிர் குற்றசாட்டு என்று இப்படித்தான் போய்க்கொண்டே இருக்கும்.

என்ன செய்வது. அரசு கையாலாகாமல் இசுலாமியர் ஓட்டுக்காக பொறுக்கி அரசியல் செய்யும்வரை இப்படித்தான் இர்க்கும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வந்தியத்தேவன் said...

ஆரியர்கள் கைபர் கணவாய் வழியாக வந்தவர்கள் எனும் வாதத்தினை முன் வைத்தவரே அதை தவறு என பின்னாளில் ஒப்புக் கொண்டார்.
//

முன்வைத்தவர் யாரு? எப்ப ஓத்துகிட்டாரு? சொல்லுங்க பார்ப்போம்

Madhusudhanan Ramanujam said...

//முன்வைத்தவர் யாரு? எப்ப ஓத்துகிட்டாரு? சொல்லுங்க பார்ப்போம்//

ப்ரெட்ரிக் மாக்ஸ் முல்லர். பின்னாளில் அவரி எழுத்த்துகளிலேயே அது தவறு என்றும் அவர் ஒப்புக் கொண்டுள்ளார். அவர் மட்டுமின்றி இன்னும் பல்வேறு வரலாற்று நிபுணர்களும் அது தவறு என்பதை நிரூபித்துள்ளனர்.

மேலும் வேதங்கள் ஆரியர்களால் உருவாக்கப் பட்டவை என்பது உலகறியும். இந்த வேதங்களில் குறிப்பிடப் பட்டுள்ள பல நிகழ்வுகள் ஆரியர்கள் இந்தியாவிறுகுள் நுழைந்ததாக கூறப்படும் கிமு 1500க்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த விஷயங்கள். உதாரணமாக இந்து மதம் என்பது ஆரியர்களால் உருவானது என்பதும் ஒரு கருத்து. ஆனால் ஆரியர்கள் இந்தியாவுக்குள் நுழைந்ததாக கூறப்படும் காலத்திற்கு முன்பே சிவன் விஷ்னு ஆகிய கடவுள்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பல் வேறு பெயர்களில் வணங்கப் பட்டு வந்ததற்கு விஞ்ஞான பூர்வமான ஆதாரங்கள் உள்ளன. நீங்களும் கொஞ்சம் இணையத்தில் தேடினால் உங்களுக்கும் இந்த விஷயங்கள் புரிபடும்.

வந்தமைக்கு நன்றி :).
"History is not what happened, its what we think about it..." எனும் வார்தைகள் ஆரியர் கதைக்கு மிகவும் பொருத்தமானது.

வந்தியத்தேவன் said...

ப்ரெட்ரிக் மாக்ஸ் முல்லர். பின்னாளில் அவரி எழுத்த்துகளிலேயே அது தவறு என்றும் அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.

//

ஆமா,,ஆமா,, அமெரிக்கால மைக்கேல் ஜாக்ஸன் சொன்னாக, ஜப்பான்ல ஜாக்கிசான் சொன்னாக இப்படி ஏதாவது போற போக்குல போட்டுவுட்டு போய்க்கிட்டே இருங்க. போய் சொல்லன்னே கோயபல்ஸ அமைச்சரா வச்சு இருந்த ஹிட்லரோட ரத்தம் தானே நீங்கல்லாம்....

Madhusudhanan Ramanujam said...

//போய் சொல்லன்னே கோயபல்ஸ அமைச்சரா வச்சு இருந்த ஹிட்லரோட ரத்தம் தானே நீங்கல்லாம்....//

ரொம்ப நன்றி வந்தியதேவன் அவர்களே. பொதுவா சில பேர் “நான் புடிச்ச முயலுக்கு மூணே கால்னு சொல்லுவாங்க. ஆனா நீங்க... என்னடான்னா “நா புடிச்ச முயலுக்கு மட்டும் தான் நாலு கால்னு சொல்றீங்க” ஆனா விஷயம் என்னவோ ஒண்ணு தான். உங்களுக்கு தேவையான விதத்தில் விஷயங்களை வளைத்துக் கொள்கிறீர்கள். வாழ்க திராவிடமும் திராவிட அரசியலும்.

Anonymous said...

அதிரவைக்கும் இந்து தீவிரவாதிகள்...'வெடிகுண்டு' சாமியாரிணி!

புதன், 05 நவம்பர் 2008

குண்டுவெடிப்பு என்றாலே, 'ஹிஸ்புல் முஜாகிதீன், லஷ்கர்-இ-தொய்பா, சிமி மற்றும் இந்தியன் முஜாகிதீன்' என பட்டியலிட ஆரம்பித்துவிடுவார்கள், நம்முடைய அரசியல்வாதிகளும் புலனாய்வுத் துறை அதிகாரிகளும். ஆனால், கடந்த செப்டம்பரில் மாலேகாவ்ன் மற்றும் மொடாசா ஆகிய இடங்களில் நடந்த குண்டுவெடிப்புக் குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டவர்களின்பட்டியலைப் பார்த்து, இந்தியாவே இடிந்துவிழும் அளவுக்கு அதிர்ச்சி பரவிக் கொண்டிருக்கிறது!
பி.ஜே.பி-யை சேர்ந்த பெண் சாமியார் மற்றும் முன்னாள் ராணுவ அதிகாரி உட்பட ஐந்து பேர் வெடிகுண்டு வழக்குகளில் கைதாகி, 'இந்து தீவிரவாதிகள்' என்ற வார்த்தையை நாடு முழுவதும் உச்சரிக்க வைத்துள்ளனர்.

கடந்த செப்டம்பர் 29-ல் குஜராத்தின் சபர்கந்தா மாவட்டத்தில் உள்ள மொடாசாவில் இரவு ஒரு குண்டு வெடித்தது. இதில் ஒரு சிறுவன் பலியாகி, பத்துப் பேர் காயமடைந்தனர். அடுத்த பத்தாவது நிமிடத்தில், மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டம், மாலேகாவ்ன் நகரின் நூராணி மசூதியின் முன்பு ஒரு பைக்கில் குண்டு வெடித்தது. இதில் நான்கு பேர் பலியானதோடு, சுமார் 70 பேர் காயம் அடைந்தனர்.

வழக்கம்போல சிமி அல்லது இந்தியன் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்தவர்கள்

செய்திருக்கலாம் என்றே செய்திகள் வெளியாக, இந்த வழக்கை மும்பை தீவிரவாதத் தடுப்புப் படையினர் விசாரிக்க ஆரம்பித்தனர். அதற்குப் பிறகுதான் 'இந்து தீவிரவாதிகள்' பற்றிய அதிர்ச்சித் தகவல்கள் அணிவகுத்தன.

குண்டுவெடிப்பு தொடர்பாக கடந்த மாதம் 24-ம் தேதி, சூரத்தில் ஆசிரமம் நடத்தும் பெண்சாமியார் பிரக்யா சிங் தாக்கூர், இந்தூரைச் சேர்ந்த ஷியாம் லால் சாவ் மற்றும் ஷிவ்நாராயண் சிங் ஆகிய மூவர் முதலில் கைது செய்யப்பட்டனர். இந்த மூவரையும் முக்கியமாகக் கொண்டு நடந்த விசாரணையின் தொடர்ச்சியாக கடந்த மூன்றாம் தேதி அஜய் ராஹில்கர், ராக்கேஷ் தாவ்ரே, ஜக்தீஷ் மாத்ரே ஆகிய மூவரையும் அடுத்தடுத்து போலீஸார் கைது செய்திருக்கிறார்கள்.

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பிரக்யா, பி.ஜே.பி-யின் மாணவ அமைப்பான அகில பாரதிய வித்யா பரிஷத், வி.ஹெச்.பி-யின் மகளிர் அமைப்பான துர்கா வாஹினி போன்ற அமைப்புகளில் பணியாற் றியவர். தற்போது குஜராத் மாநிலம் சூரத்தில் ஒரு ஆசிரமம் நடத்தி வருகிறார். பிரக்யாவுக்கு மோட்டார் பைக் சவாரி பிடிக்குமாம். சில ஆண்டுகளுக்கு முன் சந்நியாசம் பூண்டு, தன் பெயரை 'சாத்வி பூர்ண சித்தானந்த் கிரி' என்று மாற்றிக்கொண்டார். முப்பத்தெட்டு வயதாகும் இவருக்கு, நம்ம ஊர் பேச்சாளர்கள் தீப்பொறி ஆறுமுகம், வெற்றிகொண்டான் ஆகியோரின் வேகத்தில் இந்துத்துவா எதிரி களைத் தாக்குவது வாய்வந்த கலை!

அவருடன் கைதான ஷியாம் மற்றும் ஷிவ்நாராயண் ஆகிய இருவரும் வி.ஹெச்.பி. போன்ற அமைப்புகளில் இருந்து தற்போது தனி அமைப்புகள் நடத்திவருகிறார்கள்.

இவர்களிடம் நடத்திய விசாரணையில் அடுத்தகட்ட அதிர்ச்சி காத்திருந்தது. கைதான இவர்களுக்கு புனேயில் வெடிகுண்டு செய்யும் பயிற்சி அளித்ததாக போபாலை சேர்ந்த சமீர் குல்கர்னி மற்றும் ரமேஷ்சந்த் உபாத்யாயா ஆகிய இருவர் பற்றி தகவல் கிடைத்தது. அவர்களையும் போலீஸார் கைது செய்தனர். இவர்களில் ரமேஷ், இந்திய ராணுவத்தின் உளவுப்பிரிவில் மேஜராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தீவிரவாதிகளை எதிர்க்கப் பயிற்சி அளிக்கும் 'அபினவ் பாரத்' எனும் அமைப்பின் தலைவராகவும் இருந்து வருகிறார். குல்கர்னியும் இளம் வயதில் ஏ.பி.வி.பி-யில் இருந்தவர். ரமேஷ் நாக்பூரில் உள்ள ராணுவப் பள்ளியில் பணியாற்றியவர். இந்தப் பள்ளி, காந்தியைக் கொலை செய்தவர்களோடு தொடர்புடைய டாக்டர் பி.எஸ்.மூஞ்சே என்பவரால் உருவாக்கப்பட்டதாம். மேலும், இந்த வழக்கில் விசாரணைக்காக நாசிக்கில் உள்ள போன்ஸ்லா ராணுவப் பள்ளியின் கமாண்டன்ட் பதவியில் உள்ள கர்னல் பிரசாத் புரோஹித், அங்கு பணியாற்றி ஓய்வு பெற்ற கர்னல் ரெய்கர் ஆகியோரையும் வளைத்துள்ளனர்.

இதுகுறித்துத் தீவிரவாதத் தடுப்புப் படை வட்டாரத்தில் பேசியபோது, ''குண்டு வெடிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட

எல்.எம்.எல். ஃப்ரீடம் பைக்கில், பிறை மற்றும் 786 எனும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது, விசா ரணையைத் திசைதிருப்புவதற்காக இருக்கலாம் என்ற சந்தேகம் ஆரம்பத்திலேயே எழுந்தது. இதனிடையில், பைக் இன்ஜினின் சேசிஸ் எண் சுரண்டி அழிக்கப்பட்டு, போலி நம்பர் பிளேட் பொருத்தப்பட்டிருந்தது. இன்ஜினை பெங்களூருவில் உள்ள லேப் பரிசோதனைக்கு அனுப்பி, அதன் மற்ற ஸ்பேர் பார்ட்ஸ§களை வைத்து சேசிஸ் எண்ணைக் கண்டுபிடித்தோம். அதில்தான் பைக்கின் சொந்தக்காரர் பிரக்யா எனத் தெரியவந்தது.

இதற்கு ஆதாரமாக, பதிவு செய்யப்பட்ட சில டெலி போன் பேச்சின் டேப் ஆதாரங்களும் கிடைத்தன. மேலும், குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட ஆர்.டி.எக்ஸ் (Royal Demolition Explosive) வெடிமருந்து, பாகிஸ்தான் மற்றும் இந்திய ராணுவங்களில் மட்டுமே கிடைக்கிறது. முஸ்லிம் தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் ராணுவத்தில் இருந்து கிடைக்கிறது. ஆனால், கைதாகி உள்ளவர்களுக்கு அவர்களுடன் தொடர்பிருக்க வாய்ப்பில்லை என்பதால் அது, இந்திய ராணுவத்தில் இருந்து திருடப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உறுதியாக எழுகிறது!'' என்கின்றனர்.

பிரக்யாவின் தந்தையும், ஆர்.எஸ்.எஸ். தொண்டருமான சந்திரபால் தாக்கூர், ''என் மகள் 99 சதவிகிதம் அப்பாவி. ஒரு சதவிகிதம் தவறு செய்திருக்க வாய்ப்பு உண்டு. தன்னுடைய மதத்தைக் காப்பதற்காக அவர் தன்னை இதில் ஈடுபடுத்திக்கொண்டு இருக்கிறார்''என்கிறார்.

பி.ஜே.பி-யின் தேசிய தலைவரான ராஜ்நாத்சிங், ம.பி. முதல்வர் சிவராஜ்சிங் சௌகான் ஆகியோருடன் ஒரு அஞ்சலிக் கூட்டத்தில் பிரக்யா இருந்த பழைய படங்கள் பத்திரிகைகளில் வெளியானதும் 'டர்'ராகி விட்ட பி.ஜே.பி-யினர், அதையும் சமாளித்தபடி...

''இந்தூரில் கடந்த பிப்ரவரி மாதம் விபத்தில் இறந்த பாரதிய ஜனதா எம்.எல்.ஏ-வின் இரங்கல் கூட்டத்தில் சௌகானும் ராஜ்நாத் சிங்கும் கலந்துகொண்டார்கள். அதில் சாத்வியும் கலந்துகொண்டது எதிர்பாராமல் நடந்த சம்பவம்!'' என்கிறார்கள்.

பி.ஜே.பி. தொண்டர்களோ, ''பிரக்யா தன் மோட்டார் பைக்கை நான்கு வருடங்களுக்கு முன்பே விற்றுவிட்டார். பெயர் மாற்றப்படாது இருந்ததால், அவருடைய பெயர் இதில் இழுக்கப்படுகிறது. டெல்லி ஜாமியா நகர் என்கவுன்ட்டர் விவகாரத்தில் காங்கிரஸ் மீது கோபத்தில் இருக்கும் முஸ்லிம்களைத் திருப்திப்படுத்தவே இந்த விவகாரத்தைப் பெரிது படுத்துகிறது காங்கிரஸ்...'' என்கிறார்கள்.

இதற்கிடையே, 'மொடாசா குண்டுவெடிப்பில் பிரக்யாவுக்கு எந்த சம்பந்தமும் இல்லை!' என போலீஸார் அறிவித்துள்ளனர். இதேபோல்... பிரக்யா, ரமேஷ் மற்றும் சமீர் ஆகிய மூவருக்கும் மும்பையில் நடத்தப்பட்ட உண்மை கண்டறியும் சோதனையில் உருப்படியான தகவல் எதுவும் கிடைக்கவில்லை. எனவே, இதே சோதனையை மீண்டும் நடத்தவும் தயாராகி வருகிறார்கள் போலீஸார். இதனால் உற்சாகமான சிவசேனா, பி.ஜே.பி. ஆகிய கட்சிகள் பிரக்யாவுக்கு வேண்டிய சட்ட உதவிகள் செய்வதில் தீவிரமாகி உள்ளன.

டெல்லி, ராஜஸ்தான் மற்றும் சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பெண்சாமியாரின் கைதுப் படலத்தை பி.ஜே.பி., காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுமே அரசியலுக்கு வசமான தீனியாகப் பேச ஆரம்பித்துவிட்டன!நன்றி- சரோஜ் கண்பத், ஆர்.ஷஃபி முன்னா(Junior Vikatan - 9-11-08)

Anonymous said...

ஆர்.எஸ்.எஸ். இன் சைவப்புலி வேடம் கலைந்தது


மகாராஷ்டிராவின் மலேகான் நகரிலுள்ள பிகூ சதுக்கத்தில் அமைந்துள்ள மசூதி அருகே கடந்த செப்டம்பர் 29ஆம் நாளன்று ஆர்.டி.எக்ஸ். வகைப்பட்ட குண்டுவெடித்து 5 பேர் கொல்லப்பட்டனர்; 80 பேர் படுகாயமடைந்தனர். அதேநாளில் குஜராத்திலுள்ள பனாஸ்கந்தா மாவட்டத்தின் மோடசா நகரின் சுகாபஜாரில் குண்டு வெடித்து ஒரு சிறுவன் கொல்லப்பட்டான்; 10 பேர் படுகாயமடைந்தனர்.


மலேகான் நகரில் குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்தில் ஒரு வெள்ளி நிற மோட்டார் சைக்கிள் சிதிலமடைந்து கிடந்தது. இரண்டு மர்ம நபர்கள் ஒரு பையை அந்த மோட்டார் சைக்கிளில் வைத்து விட்டுச் சென்றனர் என்றும் அவர்கள்தான் பயங்கரவாதிகள் என்றும் போலீசார் தமது முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டனர். ரம்ஜான் பண்டிகைக்கு இரு நாட்கள் முன்னதாக மசூதி அருகே இக்குண்டு வெடிப்பு நடந்ததால், முஸ்லீம்கள் ஆத்திரமடைந்து தங்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டி ஆர்ப்பாட்டம் நடத்தியதோடு, போலீசார் மீது கல்லெறிந்து தாக்கவும் செய்தனர்.


ஏற்கெனவே மலேகான் நகரில் 2006ஆம் ஆண்டில் முஸ்லீம்கள் மீது இந்துவெறியர்கள் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தியுள்ளதால், மீண்டும் அதுபோன்ற தாக்குதல்கள் நிகழாமலிருக்க சிறுபான்மை முஸ்லீம்கள் பயம் கலந்த எச்சரிக்கை உணர்வுடனேயே வாழ்ந்து வருகின்றனர். கடந்த செப்டம்பர் 29 அன்று, மசூதி அருகே வெற்றிலைபாக்கு கடையை நடத்தி வரும் அன்சாரி என்ற முதியவர், தனது கடை எதிரே அனாதையாக ஒரு மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டிருப்பதைக் கண்டு, அக்கம்பக்கக் கடைக்காரர்களிடம் விசாரித்துப் பார்த்து யாரும் அதற்கு உரிமை கொண்டாடாத நிலையில், சந்தேகத்திற்கிடமான அந்த மோட்டார் சைக்கிள் பற்றி போலீசாருக்குத் தொலைபேசியில் தகவல் கொடுத்தார். ஆனால் போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை. அந்த மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த குண்டுகள் வெடித்து ஐந்து பேர் கோரமாகக் கொல்லப்பட்டனர். இக்குண்டு வெடிப்பில் அன்சாரியும் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ.யின் இந்திய கைக்கூலிகள் இக்குண்டுவெடிப்பை நடத்தியிருக்கலாம் என்று தாம் சந்தேகிப்பதாக போலீசார் வழக்கம்போலவே கதை பரப்பினர். பார்ப்பன தேசிய பத்திரிகைகளோ இதற்கு கண்ணும் காதும் வைத்து இந்திய முஜாகிதீன் குழு, ""சிமி'' எனப்படும் இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கம் முதலான பாக். ஆதரவு பயங்கரவாதிகளே இக்குண்டு வெடிப்பை நிகழ்த்தியுள்ளனர் என்றும், சிறுபான்மை முஸ்லிம்களை அச்சுறுத்தி தமது தலைமையை ஏற்கச் செய்வதற்காகவே இப்பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுகின்றனர் என்றும் திரைக்கதை எழுதின.


மலேகான் குண்டு வெடிப்பு பற்றி புலன் விசாரணை செய்துவந்த மகாராஷ்டிராவின் பயங்கரவாத எதிர்ப்பு அதிரடிப் படை போலீசார், நீண்ட முயற்சிக்குப் பிறகு, தற்போது மூன்று பேரைக் கைது செய்துள்ளனர். அவர்கள் இஸ்லாமிய பயங்கரவாதிகளோ, பாக். உளவாளிகளோ அல்ல. காவியுடை தரித்த பெண் சன்னியாசியும் அவரது கூட்டாளிகளான ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளுமான இந்து வெறியர்கள்தான் அவர்கள்!


கைது செய்யப்பட்டுள்ள பெண் சன்னியாசியான சாத்வி பிரக்யாசிங், சிவ் நாராயண் கோபால்சிங் கல்சங்ரா, ஷ்யாம் பவார்லால் சாகு ஆகிய மூவரும் தான் மலேகான் குண்டுவெடிப்பை நிகழ்த்திய பயங்கரவாதிகள் என்பது போலீசாரின் ஆரம்ப விசாரணையிலேயே நிரூபணமாகியுள்ளது. குண்டு வைக்கப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் சாத்வி பிரக்யாவினுடையது. குண்டு வெடிப்புக்குப் பிறகு அம்மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் பெயரை மாற்ற அவர் இரகசியமாக முயற்சித்துள்ளார். அதன் பதிவு எண் போலியானது. என்ஜின், சேசிஸ் எண்கள் தெரியாத வண்ணம் அதை அவர் சிதைத்துள்ளார்.


குண்டு வெடிப்புக்குப் பிறகு குஜராத்திலுள்ள சூரத் நகருக்குச் சென்ற இந்த பெண் சன்னியாசி, அங்கு பக்திநெறிப்படி வாழும் சன்னியாசியாக நாடகமாடியுள்ளார். 38 வயதாகும் இப்பெண் துறவி, "ஜெய் வந்தேமாதரம் ஜன் கல்யாண் சமிதி'' என்ற அமைப்பை நடத்தி வருவதாகக் காட்டிக் கொண்டு இரகசியமாகப் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டுள்ளார்.


கைது செய்யப்பட்ட மற்ற இருவரும் இந்திய இராணுவத்தில் ""மேஜர்'' பதவி வகித்து, ஓய்வு பெற்ற முன்னாள் இராணுவ அதிகாரிகள். இவர்கள் இந்துவெறி பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ்.இன் முன்னாள் இராணுவத்தினர் அணியைச் சேர்ந்தவர்கள். ஆர்.டி.எக்ஸ் வகை குண்டு தயாரிப்பதிலும் தொலைக்கட்டுப்பாட்டு தொழில்நுட்பத்தின் மூலம் குண்டுகளை வெடிக்கச் செய்வதிலும் இவர்கள் தேர்ச்சி பெற்றவர்கள்.


மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த இம்மூவரும் கூட்டுச் சேர்ந்து ""ராஷ்டிரிய ஜக்ரான் மன்ச்'' என்ற இந்துத்துவ அமைப்பை நிறுவிச் செயல்படுவதாகக் காட்டிக் கொண்டு, நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்று பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இரகசிய வலைப்பின்னலைக் கொண்டு இயங்கிவந்த இப்பயங்கரவாதிகளின் கூட்டாளிகள் பற்றியும் இவர்களுக்கும் ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களுக்கும் உள்ள உறவைப் பற்றியும் மகாராஷ்டிரா பயங்கர எதிர்ப்பு அதிரடிப் படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மலேகான் குண்டுவெடிப்பை நிகழ்த்திய இந்துவெறி பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டதும், பா.ஜ.க. தலைவர் வெங்கையா நாயுடு, "இவர்களுக்கும் இந்துத்துவ அமைப்புகளுக்கும் எவ்விதத் தொடர்புமில்லை; அப்படி ஏதேனும் தொடர்பிருப்பதாக விசாரணைக்குப் பின் நிரூபணமானால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்போம்'' என்று யோக்கிய சிகாமணியைப் போல பேசுகிறார். பா.ஜ.கவிலிருந்து பிரிந்து சென்று பாரதீய ஜனசக்தி கட்சியைத் தொடங்கியுள்ள உமாபாரதியோ, "சன்னியாசியாகிய சாத்வி பிரக்யா வன்முறையில் ஈடுபட எந்த அடிப்படையும் இல்லை; இது, இந்துத்துவ சக்திகளை இழிவுபடுத்தி அவமானப்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ள சதி'' என்று குதிக்கிறார்.


மலேகான் குண்டு வெடிப்பு மட்டுமல்ல; நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் குண்டு வெடிப்புகள் பலவற்றை இந்துவெறி பயங்கரவாதிகளே திட்டமிட்டு நடத்தியுள்ளனர் என்ற உண்மைகள் அடுத்தடுத்து அம்பலமாகி வருகின்றன. ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங் தள் குண்டர்கள் கையிலே தடியும் திரிசூலமும் வைத்திருப்பதால் மட்டும் அவர்களைப் பயங்கரவாதிகள் என்று கருதுவதாக சிலர் நினைக்கலாம். இந்த ஆயுதங்கள் தனிநபர்களை தாக்கிப் படுகொலை செய்வதற்குத்தான் பயன்படும். ஆனால், இந்துவெறி பயங்கரவாதிகள், பெருந்திரளான கொலைவெறியாட்டம் போடவும் பயங்கரவாதப் படுகொலைகளை நிகழ்த்தவும் கையெறி குண்டுகள், நேரங் குறித்து வெடிக்கும் குண்டுகள் முதல் குண்டு வீசித் தாக்கும் ஏவுகணைகள் வரை அதிநவீன ஆயுதங்களைத் தயாரிக்கவும் கையாளவும் கற்றுத் தரும் பயிற்சி முகாம்களை இரகசியமாக நடத்துமளவுக்கு முன்னேறியுள்ளார்கள்.


இந்துத்துவ அமைப்புகளோடு தொடர்பில்லாததைப்போல காட்டிக் கொள்ள பல்வேறு பினாமி பெயர்களில் புதிய அமைப்புகளை நிறுவி, இரகசிய வலைப்பின்னலைக் கட்டியமைத்து இயக்கி வருகின்றனர். மும்பை, குஜராத்தில் நடந்த இந்துவெறி பயங்கரவாதப் படுகொலைகளிலும், அதன்பிறகு நடந்த பல்வேறு குண்டு வெடிப்புகளிலும் இவை நிரூபணமாகியுள்ளன.


இந்து பார்ப்பன பயங்கரவாதிகள் "தெகல்கா'' வார ஏட்டுக்கு தமது சொந்த வார்த்தைகளில் அளித்த வாக்குமூலங்களே இவற்றுக்குச் சாட்சியமாக உள்ளன. மேலும், மகாராஷ்டிரா மாநிலத்தின் நாண்டெட் நகரில் ஏப்ரல் 2006 மற்றும் ஆகஸ்ட் 2007இல் நடந்த குண்டு வெடிப்புகளை பஜ்ரங் தள் குண்டர்களே நிகழ்த்தியுள்ளனர் என்பதை அம்மாநிலப் போலீசே ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளது.


இவ்வாண்டு ஆகஸ்டு 24ஆம் தேதியன்று கான்பூரிலுள்ள ஒரு தனியார் விடுதியில் இரகசியமாக குண்டு தயாரித்துக் கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் இருவர் மாண்டு போயினர். கான்பூர் நகர பஜ்ரங் தள் தலைவனான புபிந்தர் சிங்கும் அவனது கூட்டாளியுமே அவர்கள். இது பற்றி போலீசார் விசாரணை செய்து கொண்டிருந்த போது, விசாரணையைத் திசைதிருப்பும் நோக்கத்தோடு இந்துவெறியர்கள் ஒரு பீதியைக் கிளப்பினர்.


அதன்படி, தமிழக முதல்வர் கருணாநிதியின் தலையை வெட்டச் சொன்ன விசுவ இந்து பரிசத்தின் தலைவனும் முன்னாள் பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினருமான ராம் விலாஸ் வேதாந்தி, தனக்கு "சிமி'' மற்றும் அல்கய்தா பயங்கரவாதிகளிடமிருந்து தொலைபேசி மூலம் கொலைமிரட்டல் வந்துள்ளதாக அறிவித்தான். போலீசார் அத்தொலைபேசி எங்கிருந்து வந்துள்ளது என்பதை தொலைபேசித் துறையின் உதவியுடன் கண்டறிந்தனர். கத்ரா நகர பஜ்ரங் தள் தலைவன் ரமேஷ் திவாரி மற்றும் அவனது கூட்டாளிகளே இக்கொலை மிரட்டலை இஸ்லாமிய அமைப்புகளின் பெயரில் விடுத்துள்ளனர் என்பதைக் கண்டறிந்து அவர்களைக் கைது செய்துள்ளனர். கான்பூர் குண்டு வெடிப்பு விசாரணையைத் திசைதிருப்பவும், வேதாந்திக்குக் கூடுதல் பாதுகாப்பு தரவும் இப்படிச் செய்யுமாறு மேலிடத் தலைவர்கள் தமக்குக் கட்டளையிட்டதாக அவர்கள் விசாரணையில் உண்மையைக் கக்கியுள்ளனர்.


பயங்கரவாதிகளால் நாட்டுக்குப் பேராபத்து ஏற்பட்டுள்ளது என்று ஓயாமல் அலறுகிறது இந்திய அரசு. ஆம்; பேராபத்து ஏற்பட்டுள்ளது! அதுவும் காவியுடை தரித்த இந்துவெறி பயங்கரவாதிகளால் ஏற்பட்டுள்ளது என்பதையே அடுத்தடுத்து அம்பலமாகும் உண்மைகள் உணர்த்துகின்றன.

இரணியன

Thanks to Tamilcircle.net