Thursday, October 02, 2008

எங்கே அந்த மதச்சார்பற்றவர்கள்

குஜராத் கலவரங்கள் குறித்து விசாரிக்க அமைக்கப் பட்ட நாணாவதி கமிஷன் மோடி மற்றும் அவரின் கட்சியினருக்கும் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்று தனது அறிக்கையில் கூறியுள்ளது. மேலும் இச்சம்பவம் மவுலான உமர்ஜி, ரஜாக் குர்குர் மற்றும் சலிம் பான்வாலா மற்றும் சிலரால் திட்டமிட்டு நடத்த பட்ட ஒன்று என்றும் கமிஷன் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் கூறியுள்ளது.

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தினை தொடர்ந்து குஜராத் முழுதும் இந்து முஸ்லிம் கலவரங்கள் வெடித்ததும் அதில் பல நூறு பேர் உயிரிழந்ததும் யாவரும் அறிந்ததே. இச்சம்பவம் நடை பெற்ற பொழுது மோடியும் அவரும் அரசும் தான் இந்த கலவரத்திற்கு மூல காரணம் என்று காங்கிரஸ் உள்ளிட்ட பல் வேறு கட்சியினரும் அடித்துக் கூறினர். அது மட்டுமின்றி ஊடகங்களும் அவ்வாறான செய்திகளே வெளியிடப் பட்டன. இதனை அடுத்து இந்த கலவரங்களை குறித்து விசாரணை செய்ய மோடியின் அரசு குஜராத் உயர்நீதி மன்ற நீதிபதி ஒருவரைக் கொண்ட ஒரு விசாரணை கமிஷனை அமைத்தது. அந்த நீதிபதி பாஜவுக்கு ஆதரவானவர் என்று அதிலும் அரசியல் கட்சிகளும் அவர்களைச் சார்ந்த ஊடகங்களும் சர்ச்சையை கிளப்பின. இதைத் தொடர்ந்து தில்லியில் நடைபெற்ற சீக்கியர்கள் படுகொலைகளை விசாரித்த நீதிபதி நாணாவதியின் தலைமையில் வேறொரு கமிஷன் நிறுவப்பட்டது. ஆறு ஆண்டுகளாக விசாரணை நடத்திய இந்தக் கமிஷன் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாட்சியங்களை விசாரித்து, அதன் அடிப்படையில் மோடி மற்றும் அவரின் அரசுக்கும் நடந்த சம்பவங்களுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்று தனது விசாரணை அரிக்கையில் தெரிவித்துள்ளது.

இனி மோடியை மரண வியாபரி என்றும் இந்து மத மதவெறியன் என்று வர்ணித்த மதச்சார்பற்றவர்கள் எந்த முகத்தினை மக்களுக்கு காட்டுவார்கள் என்று தெரியவில்லை. சரி இவர்களாவது தங்களின் அரசியல் ஆதாயத்திற்காக மக்களை ஏமற்றும் வித்தத்தில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் பல்வேறு திரிப்புக்களை வெளியிட்ட வண்ணம் உள்ளனர். ஆனால் நம் மக்களுக்கு என்னாயிற்று? அதிலும் குறிப்பய் வலையுலகில் சிலர் இந்துக்களால் தான் குண்டு வெடிக்கிறது. இந்துக்கள் தான் குஜராத்தில் முஸ்லிம்களை கொன்று குவித்தனர் என்றும் பல் வேறு விதமாக கதை பேசி வருகின்றனர். விட்டால் ஒசாமா பின் லாடான் அமெரிக்காவை தாக்குவதற்கும் இந்து மதத்தினர் தான் காரணம் என்று சொல்வார்கள் போலும்.

குஜராத் நிகழ்வுகளுக்கு காரணம் என்று கூறப்படுபவர்கள் எவரும் இந்துக்கள் என்று தோன்றவில்லை. ஒன்று ஏதாவது ஒரு அரசியல் கட்சி மோடியின் செல்வாக்கை குறைக்க வேண்டி இந்து முஸ்லிம் கலவரங்களை உண்டாக்கி இருக்கலாம். அல்லது இது பாக் / வங்காள தேச தீவிரவாதிகளின் சதியாக இருக்கலாம். இதில் அதிர்ச்சியளிக்கும் ஒரு விஷயம் என்னவென்றால் இதில் ஒரு மவுலவி சம்பந்தப் பட்டிருப்பது தான். கடைசியில் பேசுவது சமாதானம் பொழுதுபோக்கு தீவிரவாதம் என்றே வாழ்ந்து வந்துள்ளார் இந்த மவுலவி. இந்த கமிஷனின் தீர்ப்பு இறுதியில் புதிதாய் எதுவும் சொல்லவில்லை. இஸ்லாமியர்கள் சிலர் தொடர்ந்து தங்கள் சுய லாபத்துக்காக தீவிரவாதத்திற்கு துணை போகின்றனர் எனும் ஒரு விஷய்த்தை தான் மறுபடியும் உலகுக்கு உணர்த்தியுள்ளது.

அது சரி... இப்போது எங்கே போயினர் அந்த ”மதச்சார்பற்றவர்கள்”?

27 comments:

Anonymous said...

கமிஷன் அமைக்கப்படும் போதே அதன் முடிவும் தீர்மானிக்கப்பட்டுவிடுகிறது. இது கூட தெரியாமலா மோடி முதல்வரா இருக்கார். ரொம்ப நல்லவன் மாதிரி நடிக்காதே அம்பி

Madhusudhanan Ramanujam said...

//கமிஷன் அமைக்கப்படும் போதே அதன் முடிவும் தீர்மானிக்கப்பட்டுவிடுகிறது.//

அதெப்படிங்க? உங்களுக்கு எப்படி வசதியோ அப்படி அப்பப்ப மாத்திக்கறீங்க. இதுல நாங்க நல்லவர் மாதிரி நடிக்கிறோம்னு நக்கல் வேற. நான் ரொம்ப நல்லவன், அப்படின்னு எப்பவாவது சொன்னேனா? நீங்களே நல்லவரா இருங்க.

Anonymous said...

முட்டாள்களை திருத்தலாம், முட்டாள் ஆக்க நினைப்பவர்களை திருத்த முடியாது. 100 வருடதிற்கு பிறகு அனைவரும் முட்டாள்தான், அதற்குள் நாம் செத்துப்போவோம் என சந்தோசப்படுவோம்

Anonymous said...

ஆமாம் குஜராத் கலவரத்துக்கு காரணம் மோடி இல்லை, ராஜிவ் காந்தி கொலைக்கு வி.பு காரணம் இல்லை.

நல்லா இருங்கடே

Madhusudhanan Ramanujam said...

//ராஜிவ் காந்தி கொலைக்கு வி.பு காரணம் இல்லை. நல்லா இருங்கடே//

மத்தவங்களை கெடுத்து, சோம்பேறியாக்கி அதில நான் வாழ நினைக்கவில்லை. அதனால் நான் நிச்சயம் நிச்சயம் நன்றாக இருப்பேன்.

Raja Mohamed said...

கைப்புன்னுக்கு கண்ணாடியா ? உலகுக்கே தெரியுமையா .... உமக்கு தெரியாதா ? முலுப் பூசனிக்காயை சோற்றில் மறைக்க முடியுமா ?

Madhusudhanan Ramanujam said...

//கைப்புன்னுக்கு கண்ணாடியா ? உலகுக்கே தெரியுமையா .... உமக்கு தெரியாதா ? முலுப் பூசனிக்காயை சோற்றில் மறைக்க முடியுமா //

அப்போ குற்றவாளிகள் பட்டியல் ஒண்ணு வெளியிட்டிருக்காங்களே. அதுக்கு என்ன பதில்?

Raja Mohamed said...

அவர்களும் குற்றவாளிகளாக இருக்கலாம் ! அதற்காக மோடி குற்றம் அற்றவன் என்பது பொய்......

Madhusudhanan Ramanujam said...

//அவர்களும் குற்றவாளிகளாக இருக்கலாம் ! அதற்காக மோடி குற்றம் அற்றவன் என்பது பொய்//

அதெப்படிங்க அது?
குற்றவாளி ஒரு இஸ்லாமியர் அப்படின்னா, ”அவர் குற்றவாளியா இருக்கலாம்” அதே அவர் ஒரு இந்துவா இருந்தா “அவர் நிரபராதிங்கிறது பொய்”.
என்ன கணக்கு இது. அப்படி நீங்கள் சொல்வது மட்டும் தான் நிஜமெனில் நாட்டில் நீதிமன்றங்களும் விசாரணைகளும் எதற்கு? விட்டால் விசாரணைகளே வேண்டாம், இந்து என்றால் தண்டித்துவிடலாம், இஸ்லாமியர் என்றால் விடுதலை செய்துவிடலாம் என்று உங்களை போன்றவர்கள் கூறினாலும் ஆச்சரிய படுவதற்கில்லை.

அது சரி... அப்சல் குற்றவாளி இல்லை என்று பைத்தியகார தனமாய் வாதாடுபவர்கள் இருக்கும் நாடு தானே நம் நாடு...இது நடப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

Raja Mohamed said...

நீங்கள் மதங்களை மறந்து விட்டு ஒரு மனிதனாக சிந்தியுங்கள் ! நான் சொல்வது புரியும். என்னை வேற்று மதத்தவன் என்று வெருப்போடு பார்ப்பதால்தான் உங்களுக்கு விளங்க வில்லை .தப்பு செய்தது யாராக இருந்தாளும் தண்டிக்க வேண்டும் அதுதான் சரி ! மோடி மட்டும் தப்பிப்பானா ?

நமக்கு மேலே ஒருவன் இருக்கிறான் ! அவன் பார்த்துக்கொல்வான் !

Anonymous said...

இது ஏதோ வார்த்தை விளையாட்டு மாதிரி இருக்குது.. மோடி கலவரத்துக்குக் காரணமில்லை ஆனா மோடி சிறுபான்மையினரை காப்பாற்றாமல் போனது உண்மையா இல்லையா?

யார் கலவரம் செய்தவங்கண்ணு கமிஷன் சொல்லியிருக்குமே?

Madhusudhanan Ramanujam said...

//யார் கலவரம் செய்தவங்கண்ணு கமிஷன் சொல்லியிருக்குமே?//

நிச்சயமாக சொல்லியுள்ளது. முக்கிய குற்றவாளிகளின் பெயர்களை என் பதிவிலும் வெளியிட்டுள்ளேன். நீங்கள் நினைப்பது போல் மோடி சிறுபான்மையினரை காக்க முயலவில்லை என்பது அப்பட்டமான பொய் என்பதற்கு கலவரம் நடந்த பகுதிகளில் குவிக்கப் பட்ட போலீஸ் படைகளும் மேலும் அவர் மத்திய ரிசர்வு படைகள் வேண்டி மத்திய அரசிடம் வேண்டியதும் ஆவனங்களுடன் என்றைக்கோ நிரூபணம் ஆன ஒன்று. இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் மத்திய அரசு ரிசர்வ் படையை அனுப்ப சற்று தாமதித்தது என்பதே உண்மை.

Madhusudhanan Ramanujam said...

//நீங்கள் மதங்களை மறந்து விட்டு ஒரு மனிதனாக சிந்தியுங்கள் !//
நான் அப்படியும் சிந்திக்கிறேன்.

// நான் சொல்வது புரியும். என்னை வேற்று மதத்தவன் என்று வெருப்போடு பார்ப்பதால்தான் உங்களுக்கு விளங்க வில்லை .//

இஸ்லாமியர்கள் மீது எனக்கு வெறுப்பில்லை. அதற்கு என் இஸ்லாமிய நண்பர்களே சான்று. இஸ்லாமியர்களுள் பலருக்குத் தான் இந்துக்கள் மீது வெறுப்புள்ளது. சரித்திரமே இதன் சான்று.

//தப்பு செய்தது யாராக இருந்தாளும் தண்டிக்க வேண்டும் அதுதான் சரி ! //

நிச்சயம் ஒப்புக் கொள்கிறேன். இதில் எனக்கும் உங்களுக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை.

Naina said...

சரி நானாவதி அறிக்கையை நம்பும் நீங்கள் தெஹல்காவின் தோலுரிப்பிற்கு பதில் என்ன சொல்வீர்கள். பால்தாக்ரேயை குற்றவாளியாக காட்டிய கிருஷ்ணா அறிக்கைக்கு என்ன பதில் சொல்ல போகிறீர்கள்.

மோடி நடுநிலையான ஆட்சியாளர் என்று நடுநிலையாக சிந்தித்து கூறுகிறீர்களா?

நட்புடன்
நெய்னா முஹம்மது

Dharan said...

உங்கள் மதச்சார்பற்ற பதிவிற்கான பதில் இந்த வீடியோவில் இருக்கிறது,

இந்தியில்தான் இருக்கிறது. கண்டிப்பாக உங்களுக்கு இந்தி தெரியும் என்று நம்புகிறேன். இல்லையென்றாலும் ஆங்கில மொழிபெயர்பு இணையங்களில் கிடைக்கும்.

எம்மதமும் சம்மதம் இல்லாதவன் நான். இந்து மற்றும் கிறித்துவ மதத்தின் மூட நம்பிக்கை கதைகள், இஸ்லாமின் பென்ணடிமைத்தனம் என எல்லா மதமும் ஏதாவது ஒரு நோயோடுதான் இருக்கிற்து..

சாவது இந்துவா, முஸ்லீமா அல்லது கிறித்துவனா என்று பார்க்கும் முன்

மனிதனா என்று பாருங்கள். மதம் ஒழிப்போம் மனிதம் வளர்ப்போம்http://manamay.blogspot.com/2007/11/truth-gujarat-2002-bharat-bhatt-part-1.htmlhttp://manamay.blogspot.com/2007/11/truth-gujarat-2002-babu-bajrangi-part-2.html

Anonymous said...

//உலகுக்கே தெரியுமையா .... உமக்கு தெரியாதா ? //
Repeat..

Please don't claim that Modi is Mr. Saint, just because of this report.

The whole world knows about him.

Madhusudhanan Ramanujam said...

//மனிதனா என்று பாருங்கள். மதம் ஒழிப்போம் மனிதம் வளர்ப்போம்//

வேண்டாம்னு யாருங்க சொன்னது. என்னுடைய எந்தப் பதிவிலும் இன்னொரு மதத்தினை சேர்ந்தவரை அவமதிக்கவில்லை. எந்த ஒரு இடத்திலும் மதத்தின் பெயரால் நடக்கும் தவறுகளை ஆதரிக்கவில்லை. ஆனால் நம் நாட்டில் எல்லாமே மதம் சார்ந்து தான் நடக்கிறது என்பது தான் பிரச்சினை.

Madhusudhanan Ramanujam said...

//பால்தாக்ரேயை குற்றவாளியாக காட்டிய கிருஷ்ணா அறிக்கைக்கு என்ன பதில் சொல்ல போகிறீர்கள்//

நான் எங்காவது ஒரு இடத்திலாவது பால் தாக்ரே செய்வது சரி என்று சொல்லி இருக்கிறேனா? இந்த தாக்ரேக்களின் அட்டகாசம் நிச்சயம் எல்லை மீறித்தான் போய்க்கொண்டுள்ளது. தாக்ரே குற்றவாளி என்று நீதி விசாரணை கூறுகிறது எனில் அவருக்கு தண்டனை தாருங்கள். அதை விடுத்து, நான் என்னவோ பால் தாக்ரேவுக்கு ஆதரவாக வாதாடுவதை போல் ஏன் பேசுகிறீர்கள்?

Madhusudhanan Ramanujam said...

//Please don't claim that Modi is Mr. Saint, just because of this report.//

எதுவுமே தெரியாதபோதே எல்லாம் தெரிந்தது போல ஒரு விஷயத்திற்கு கண் மூக்கு காது வைத்து எவ்வளவு அழகாய் ஜோடனை செய்கிறீர்கள். நீங்கள் சொல்வதை பார்த்தால் நம் நாட்டில் நடக்கும் அனைத்து நீதி விசாரணைகளும் பொய் என்று கூறுவது போலுள்ளது. இன்னமும் நம் நாட்டின் பல நீதிமன்றங்களில் நேர்மையான நீதிபதிகள் நிறையவே உள்ளனர்.

Raja Mohamed said...

இன்னமும் நம் நாட்டின் பல நீதிமன்றங்களில் நேர்மையான நீதிபதிகள் நிறையவே உள்ளனர்.

அனைத்து நீதிபதிகளுமா ?
இந்த நீதிபதி நேர்மையானவர் தானா?

Naina said...

மதுசூதனன் ஐயா! ஒவ்வொருவரின் கருத்துக்கும் வரிக்கு வரி விளக்கம் தரும் தாங்கள் தெஹல்காவை பற்றி கூறியதை வசதியாக மறந்தது ஏனோ?//சரி நானாவதி அறிக்கையை நம்பும் நீங்கள் தெஹல்காவின் தோலுரிப்பிற்கு பதில் என்ன சொல்வீர்கள்.//

தரன் ஐயா! .இஸ்லாம் பெண்ணடிமைத்தனம் செய்வதாக கூறுகிறீர்களே, சற்றே ஆதாரத்தோடு சொல்லுவீர்களா?

நட்புடன்
நெய்னா முஹம்மது

Dharan said...

//தரன் ஐயா! .இஸ்லாம் பெண்ணடிமைத்தனம் செய்வதாக கூறுகிறீர்களே, சற்றே ஆதாரத்தோடு சொல்லுவீர்களா?//

விவாதிப்பதினால் மாறிவிடப்போகிறதா?.

அனைத்து மதங்களும் ஒழிக்கப்படவேண்டும் என்பதே என் கருத்து.

Dharan said...

//எந்த ஒரு இடத்திலும் மதத்தின் பெயரால் நடக்கும் தவறுகளை ஆதரிக்கவில்லை. ஆனால் நம் நாட்டில் எல்லாமே மதம் சார்ந்து தான் நடக்கிறது என்பது தான் பிரச்சினை//

இந்திய அரசியல். ha ha

Madhusudhanan Ramanujam said...

//இந்த நீதிபதி நேர்மையானவர் தானா?//
நிச்சயமாக. அவர் இதற்கு முன் வேறு சில விசாரணை கமிஷன்களில் அளித்த தீர்புகள் பெரிதும் வரவேற்கப் பட்டவை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

//தரன் ஐயா! .இஸ்லாம் பெண்ணடிமைத்தனம் செய்வதாக கூறுகிறீர்களே, சற்றே ஆதாரத்தோடு சொல்லுவீர்களா?//

இஸ்லாம் பெண்ணடிமை தனத்தை வலியுறுத்துகிறது என்று சொல்வதை விட, இஸ்லாமியர்கள் சிலர் இஸ்லாமின் பெயரால் அதைச் செய்கின்றனர் என்று சொல்லலாம். காலத்திற்கு ஏற்ப சில விஷயங்கள் எல்லா மதத்திலும் மாறித்தான் ஆக வேண்டும்.

//தெஹல்காவை பற்றி கூறியதை வசதியாக மறந்தது ஏனோ//
மன்னிக்கவும் தெஹல்கா விவகாரம் எனக்கு சரியாக நினைவில்லை. என்னவென்று தெரியாத விஷயம் குறித்து என்னவென்று கருத்து சொல்வது? சற்று அவகாசம் எடுத்துக் கொண்டு இன்னொரு பின்னூட்டம் இடுகிறேன்.

மறுப்பது என்றால் எல்லாவற்றையும் மறுக்கலாமே, அது ஏன் நீங்கள் சொன்ன ஒரு விஷய்த்தை ஒப்புக்கொண்டு இன்னொண்றை மறுக்கவேண்டும்?

Anonymous said...

இங்கே போய் பாரு அம்பி, ஜெயலலிதா ஊழலற்றவர் என்று தீர்ப்பு வருவதும், மோடி குற்றமற்றவர் என்று தீர்ப்பு வருவதும் நம் ஜனநாயகத்தில் ஒன்றும் புதிதல்லவே

http://www.tehelka.com/story_main40.asp?filename=Ne111008coverstory.asp

Madhusudhanan Ramanujam said...

//இங்கே போய் பாரு அம்பி, ஜெயலலிதா ஊழலற்றவர் என்று தீர்ப்பு வருவதும், மோடி குற்றமற்றவர் என்று தீர்ப்பு வருவதும் நம் ஜனநாயகத்தில் ஒன்றும் புதிதல்லவே//

நீங்க குடுத்த சுட்டியில் தெஹல்கா குறிப்பிடும் ஸ்டிங் ஆபரேஷனின் வீடியோ எதுவிம் இல்லை. எங்களிடம் அந்த வீடியோ இருக்கிறது என்று மட்டுமே அவர்கள் கூறியுள்ளார்கள். ஆனால் அதை எங்கு காண்பிக்கவில்லை! வெறும் கையில் முழம் போடா முடியாதுங்க. உங்க கிட்ட அந்த வீடியோ இருந்தா காமிங்களேன்.

Anonymous said...

குண்டுவெடிப்பு என்றாலே, 'ஹிஸ்புல் முஜாகிதீன், லஷ்கர்-இ-தொய்பா, சிமி மற்றும் இந்தியன் முஜாகிதீன்' என பட்டியலிட ஆரம்பித்துவிடுவார்கள், நம்முடைய அரசியல்வாதிகளும் புலனாய்வுத் துறை அதிகாரிகளும். ஆனால், கடந்த செப்டம்பரில் மாலேகாவ்ன் மற்றும் மொடாசா ஆகிய இடங்களில் நடந்த குண்டுவெடிப்புக் குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டவர்களின்பட்டியலைப் பார்த்து, இந்தியாவே இடிந்துவிழும் அளவுக்கு அதிர்ச்சி பரவிக் கொண்டிருக்கிறது!
பி.ஜே.பி-யை சேர்ந்த பெண் சாமியார் மற்றும் முன்னாள் ராணுவ அதிகாரி உட்பட ஐந்து பேர் வெடிகுண்டு வழக்குகளில் கைதாகி, 'இந்து தீவிரவாதிகள்' என்ற வார்த்தையை நாடு முழுவதும் உச்சரிக்க வைத்துள்ளனர்.

கடந்த செப்டம்பர் 29-ல் குஜராத்தின் சபர்கந்தா மாவட்டத்தில் உள்ள மொடாசாவில் இரவு ஒரு குண்டு வெடித்தது. இதில் ஒரு சிறுவன் பலியாகி, பத்துப் பேர் காயமடைந்தனர். அடுத்த பத்தாவது நிமிடத்தில், மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டம், மாலேகாவ்ன் நகரின் நூராணி மசூதியின் முன்பு ஒரு பைக்கில் குண்டு வெடித்தது. இதில் நான்கு பேர் பலியானதோடு, சுமார் 70 பேர் காயம் அடைந்தனர்.

வழக்கம்போல சிமி அல்லது இந்தியன் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்தவர்கள்

செய்திருக்கலாம் என்றே செய்திகள் வெளியாக, இந்த வழக்கை மும்பை தீவிரவாதத் தடுப்புப் படையினர் விசாரிக்க ஆரம்பித்தனர். அதற்குப் பிறகுதான் 'இந்து தீவிரவாதிகள்' பற்றிய அதிர்ச்சித் தகவல்கள் அணிவகுத்தன.

குண்டுவெடிப்பு தொடர்பாக கடந்த மாதம் 24-ம் தேதி, சூரத்தில் ஆசிரமம் நடத்தும் பெண்சாமியார் பிரக்யா சிங் தாக்கூர், இந்தூரைச் சேர்ந்த ஷியாம் லால் சாவ் மற்றும் ஷிவ்நாராயண் சிங் ஆகிய மூவர் முதலில் கைது செய்யப்பட்டனர். இந்த மூவரையும் முக்கியமாகக் கொண்டு நடந்த விசாரணையின் தொடர்ச்சியாக கடந்த மூன்றாம் தேதி அஜய் ராஹில்கர், ராக்கேஷ் தாவ்ரே, ஜக்தீஷ் மாத்ரே ஆகிய மூவரையும் அடுத்தடுத்து போலீஸார் கைது செய்திருக்கிறார்கள்.

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பிரக்யா, பி.ஜே.பி-யின் மாணவ அமைப்பான அகில பாரதிய வித்யா பரிஷத், வி.ஹெச்.பி-யின் மகளிர் அமைப்பான துர்கா வாஹினி போன்ற அமைப்புகளில் பணியாற் றியவர். தற்போது குஜராத் மாநிலம் சூரத்தில் ஒரு ஆசிரமம் நடத்தி வருகிறார். பிரக்யாவுக்கு மோட்டார் பைக் சவாரி பிடிக்குமாம். சில ஆண்டுகளுக்கு முன் சந்நியாசம் பூண்டு, தன் பெயரை 'சாத்வி பூர்ண சித்தானந்த் கிரி' என்று மாற்றிக்கொண்டார். முப்பத்தெட்டு வயதாகும் இவருக்கு, நம்ம ஊர் பேச்சாளர்கள் தீப்பொறி ஆறுமுகம், வெற்றிகொண்டான் ஆகியோரின் வேகத்தில் இந்துத்துவா எதிரி களைத் தாக்குவது வாய்வந்த கலை!

அவருடன் கைதான ஷியாம் மற்றும் ஷிவ்நாராயண் ஆகிய இருவரும் வி.ஹெச்.பி. போன்ற அமைப்புகளில் இருந்து தற்போது தனி அமைப்புகள் நடத்திவருகிறார்கள்.

இவர்களிடம் நடத்திய விசாரணையில் அடுத்தகட்ட அதிர்ச்சி காத்திருந்தது. கைதான இவர்களுக்கு புனேயில் வெடிகுண்டு செய்யும் பயிற்சி அளித்ததாக போபாலை சேர்ந்த சமீர் குல்கர்னி மற்றும் ரமேஷ்சந்த் உபாத்யாயா ஆகிய இருவர் பற்றி தகவல் கிடைத்தது. அவர்களையும் போலீஸார் கைது செய்தனர். இவர்களில் ரமேஷ், இந்திய ராணுவத்தின் உளவுப்பிரிவில் மேஜராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தீவிரவாதிகளை எதிர்க்கப் பயிற்சி அளிக்கும் 'அபினவ் பாரத்' எனும் அமைப்பின் தலைவராகவும் இருந்து வருகிறார். குல்கர்னியும் இளம் வயதில் ஏ.பி.வி.பி-யில் இருந்தவர். ரமேஷ் நாக்பூரில் உள்ள ராணுவப் பள்ளியில் பணியாற்றியவர். இந்தப் பள்ளி, காந்தியைக் கொலை செய்தவர்களோடு தொடர்புடைய டாக்டர் பி.எஸ்.மூஞ்சே என்பவரால் உருவாக்கப்பட்டதாம். மேலும், இந்த வழக்கில் விசாரணைக்காக நாசிக்கில் உள்ள போன்ஸ்லா ராணுவப் பள்ளியின் கமாண்டன்ட் பதவியில் உள்ள கர்னல் பிரசாத் புரோஹித், அங்கு பணியாற்றி ஓய்வு பெற்ற கர்னல் ரெய்கர் ஆகியோரையும் வளைத்துள்ளனர்.

இதுகுறித்துத் தீவிரவாதத் தடுப்புப் படை வட்டாரத்தில் பேசியபோது, ''குண்டு வெடிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட

எல்.எம்.எல். ஃப்ரீடம் பைக்கில், பிறை மற்றும் 786 எனும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது, விசா ரணையைத் திசைதிருப்புவதற்காக இருக்கலாம் என்ற சந்தேகம் ஆரம்பத்திலேயே எழுந்தது. இதனிடையில், பைக் இன்ஜினின் சேசிஸ் எண் சுரண்டி அழிக்கப்பட்டு, போலி நம்பர் பிளேட் பொருத்தப்பட்டிருந்தது. இன்ஜினை பெங்களூருவில் உள்ள லேப் பரிசோதனைக்கு அனுப்பி, அதன் மற்ற ஸ்பேர் பார்ட்ஸ§களை வைத்து சேசிஸ் எண்ணைக் கண்டுபிடித்தோம். அதில்தான் பைக்கின் சொந்தக்காரர் பிரக்யா எனத் தெரியவந்தது.

இதற்கு ஆதாரமாக, பதிவு செய்யப்பட்ட சில டெலி போன் பேச்சின் டேப் ஆதாரங்களும் கிடைத்தன. மேலும், குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட ஆர்.டி.எக்ஸ் (Royal Demolition Explosive) வெடிமருந்து, பாகிஸ்தான் மற்றும் இந்திய ராணுவங்களில் மட்டுமே கிடைக்கிறது. முஸ்லிம் தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் ராணுவத்தில் இருந்து கிடைக்கிறது. ஆனால், கைதாகி உள்ளவர்களுக்கு அவர்களுடன் தொடர்பிருக்க வாய்ப்பில்லை என்பதால் அது, இந்திய ராணுவத்தில் இருந்து திருடப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உறுதியாக எழுகிறது!'' என்கின்றனர்.

பிரக்யாவின் தந்தையும், ஆர்.எஸ்.எஸ். தொண்டருமான சந்திரபால் தாக்கூர், ''என் மகள் 99 சதவிகிதம் அப்பாவி. ஒரு சதவிகிதம் தவறு செய்திருக்க வாய்ப்பு உண்டு. தன்னுடைய மதத்தைக் காப்பதற்காக அவர் தன்னை இதில் ஈடுபடுத்திக்கொண்டு இருக்கிறார்''என்கிறார்.

பி.ஜே.பி-யின் தேசிய தலைவரான ராஜ்நாத்சிங், ம.பி. முதல்வர் சிவராஜ்சிங் சௌகான் ஆகியோருடன் ஒரு அஞ்சலிக் கூட்டத்தில் பிரக்யா இருந்த பழைய படங்கள் பத்திரிகைகளில் வெளியானதும் 'டர்'ராகி விட்ட பி.ஜே.பி-யினர், அதையும் சமாளித்தபடி...

''இந்தூரில் கடந்த பிப்ரவரி மாதம் விபத்தில் இறந்த பாரதிய ஜனதா எம்.எல்.ஏ-வின் இரங்கல் கூட்டத்தில் சௌகானும் ராஜ்நாத் சிங்கும் கலந்துகொண்டார்கள். அதில் சாத்வியும் கலந்துகொண்டது எதிர்பாராமல் நடந்த சம்பவம்!'' என்கிறார்கள்.

பி.ஜே.பி. தொண்டர்களோ, ''பிரக்யா தன் மோட்டார் பைக்கை நான்கு வருடங்களுக்கு முன்பே விற்றுவிட்டார். பெயர் மாற்றப்படாது இருந்ததால், அவருடைய பெயர் இதில் இழுக்கப்படுகிறது. டெல்லி ஜாமியா நகர் என்கவுன்ட்டர் விவகாரத்தில் காங்கிரஸ் மீது கோபத்தில் இருக்கும் முஸ்லிம்களைத் திருப்திப்படுத்தவே இந்த விவகாரத்தைப் பெரிது படுத்துகிறது காங்கிரஸ்...'' என்கிறார்கள்.

இதற்கிடையே, 'மொடாசா குண்டுவெடிப்பில் பிரக்யாவுக்கு எந்த சம்பந்தமும் இல்லை!' என போலீஸார் அறிவித்துள்ளனர். இதேபோல்... பிரக்யா, ரமேஷ் மற்றும் சமீர் ஆகிய மூவருக்கும் மும்பையில் நடத்தப்பட்ட உண்மை கண்டறியும் சோதனையில் உருப்படியான தகவல் எதுவும் கிடைக்கவில்லை. எனவே, இதே சோதனையை மீண்டும் நடத்தவும் தயாராகி வருகிறார்கள் போலீஸார். இதனால் உற்சாகமான சிவசேனா, பி.ஜே.பி. ஆகிய கட்சிகள் பிரக்யாவுக்கு வேண்டிய சட்ட உதவிகள் செய்வதில் தீவிரமாகி உள்ளன.

டெல்லி, ராஜஸ்தான் மற்றும் சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பெண்சாமியாரின் கைதுப் படலத்தை பி.ஜே.பி., காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுமே அரசியலுக்கு வசமான தீனியாகப் பேச ஆரம்பித்துவிட்டன!நன்றி- சரோஜ் கண்பத், ஆர்.ஷஃபி முன்னா(Junior Vikatan - 9-11-08)