Monday, October 20, 2008

அரசியல் சட்டத்தினை கேலிக் கூத்தாக்கும் தனி மனிதன்!

சமீப காலமாக மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனா (எம்.என்.எஸ்) கட்சியினரை பல்வேறு வன்முறை சம்பவங்களை நடத்த அக்கட்சியின் தலைவர் ராஜ் தாக்ரே (ராதா) தூண்டி வருகிறார். ஆனால் இதையும் நம் அரசாங்கம் வேடிக்கை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறதே தவிர வேறொன்றும் செய்யவில்லை.

ராதா கொஞ்ச காலமாகவே மகாராஷ்டிர மானிந்லத்தில் அனைவரும் மராட்டியில் தான் பேச வேண்டும், பிற மொழி பேசுவோருக்கு இங்கு இடமில்லை என்று ஒரு அபத்தமான கருத்தினை வலியுறுத்தி வந்துள்ளார். இந்நிலையில் சிறிது காலத்திற்கு முன் ஜெயா பச்சன் உடனான இவரின் சச்சரவை பார்க்கலாம். இது சிறிய விஷயமாகவே கருதப்பட்டாலும் என் பார்வையில் இதை ஒரு முக்கியமான ஒன்று என்றே கூறுவேன். அரசியல் சட்டம் தனை எந்த அளவிற்கு ஒரு தனி மனிதன் கேலிக் கூத்தாக்குகிறான் என்பதற்கு இது ஒன்றே சான்று.

ஜெயா பச்சன் தான் பங்கேற்ற ஒரு விழாவில் ”நாங்கள் உபி மாநிலத்தை சேர்ந்தவர்கள், அதனால் ஹிந்தியில் தான் பேசுவோம்... நீங்கள் கொஞ்சம் சகித்துக் கொள்ள வேண்டும் என்று கூற, ராதாவுக்கு ஏகப்பட்ட கோபம். அது அமிதாபின் திரைப் படங்கள் மீது திரும்பி விடக்கூடும் என்பதால் அமிதாப் ராதாவிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க்க வேண்டி வந்தது.

நம் இந்திய நாட்டின் அரசியலமைப்பு சட்டமானது ஒரு இந்திய பிரஜை எந்த ஒரு மாநிலத்திலும் வாழ்வதற்கும் எந்த ஒரு மொழியை பேசுவதற்கும் உரிமை அளிக்கிறது. இது அடிப்படை உரிமைகளில் ஒன்றாகக் கருதப்படும் ஒன்றும் கூட. அப்படி இருக்கையில் ஒரு இந்தியப் பிரஜையின் அடிப்படை உரிமை தனை பறிக்கும் வகையில் நடந்து கொள்வது என்பது சட்டப் படி தண்டிக்க தக்க ஒரு குற்றமாகும். அதுவும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள சட்டத்தில் இடமுள்ளது. ஆனால் மத்திய அரசோ அல்லது மாநில அரசோ இவரின் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது வருந்தத் தக்கது.

அது மட்டுமின்றி சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற இரயில்வே தேர்வு மையங்கள் மற்றும் தேர்வில் பங்கேற்ற வட இந்தியர்கள் மீதும் ராதாவின் கட்சியினை சேர்ந்தவர்கள் மூர்கமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இதை அடுத்து ராதா மீது ஜாமீனில் வெளி வர முடியாத பிடி வாரண்ட் பிறப்பிக்கப் பட்டுள்ளது. இதற்கு பதிலளிக்கும் வகையில், “முடிந்தால் என்னை கைது செய்து பார்க்கட்டும். மகாராஷ்டிரமே பற்றி எரியும்” என்று முழங்கி இருக்கிறார் ராதா. எப்படியும் இவரை கைது செய்கையில் நிச்சயம் பெரிய கலகம் ஏற்படும் என்று தெரிகிறது. இவர் போன்றவர்கள் மேன்மேலும் வளராது இருக்க வேண்டுமெனில் ராதா போன்றவர்கள் கடுமையாக தண்டிக்கப் படவேண்டும். இது தான் வன்முறையால் எதையும் சாதிக்கலாம் என்போருக்கு பாடமாய் அமையும்.

3 comments:

dondu(#11168674346665545885) said...

கைது செஞ்சாச்சு, பதற்றமும் ஆரம்பமாச்சு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Madhusudhanan Ramanujam said...

//கைது செஞ்சாச்சு, பதற்றமும் ஆரம்பமாச்சு.//

இனி என்னென்ன அரசியல் அபத்தங்கள் நடக்கிறதென்று பொருத்துத் தான் பார்க்க வேண்டும்!

Anonymous said...

//Madhusudhanan Ramanujam said...

//கைது செஞ்சாச்சு, பதற்றமும் ஆரம்பமாச்சு.//

இனி என்னென்ன அரசியல் அபத்தங்கள் நடக்கிறதென்று பொருத்துத் தான் பார்க்க வேண்டும்!//


aduththa aappu to congress by bombay wallahs

nimmathiyaa aatchi seyya vidamaaddaangka polirukku