Thursday, October 30, 2008

கலைஞரின் கொள்கை சங்கிலி - சில செய்திகள்

தமிழக மாநில முதல்வர் திரு. கருணாநிதி அவர்கள் கேட்டுக் கொண்டதின் பேரில் நடைபெற்ற மனிதச் சங்கிலி குறித்து ஏடுகளில் வெளியான சில செய்திகளின் தொக்குப்பு.

மழையானாலும் நடக்கும்
நாளைய தினம் பணியை முடிப்பத்ற்கு இன்று போல மழை வந்தாலும், அந்த மழையையும் சமாளித்து, மழையில் நனைந்து நம் கடமையை நிறைவேற்றுவோம் என்று சொல்கிறேன்.
-கலைஞர் பேச்சு (முரசொலி - 21-10-2008)

மழையினால் கிடையாது
21-10-2008 அன்று மாலை நடைபெறுவதாக அறிவிக்கப் பட்டிருந்த மாபெரும் மனிதச் சங்கிலி அணிவகுப்பு, நேற்றிரவு முதல் கடும் கன மழை பெய்து வருவதின் காரணமாக 24-10-2008 வெள்ளிக் கிழமை மாலை 3 மணிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது.
-தி.மு.க தலைமைக் கழக அறிக்கை (முரசொலி 22-10-2008)

நிர்பந்தம்
சென்னை நகரத்திலிருந்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் வெள்ளிக் கிழமையன்று கொட்டும் மழையில் அரசியல் கட்சிகள் இலங்கை தமிழருக்காக நடத்திய மனிதச் சங்கிலியில் நிர்பந்தப் படுத்தி நிறுத்தி வைக்கப்பட்டனர்.

மனிதச் சங்கிலி பல இடங்களில் பிளவுபட்டிருந்தது. பள்ளி, கல்லூரி மாணவிகள் சங்கிலி இணைப்பாக நின்றிருந்தனர். அண்ணா சாலையில் மழையினாலும், மனிதச் சங்கிலியால் ஏற்பட்ட போக்குவரத்து நெருக்கடியினாலும் ஒரே குழப்பமாக இருந்தது. நந்தனம் கலைக் கல்லூரி, ராணி மேரி கல்லூரி, காயிதே மில்லத் கல்லூரி, அண்ணா பல்கலைக் கழகம் போன்ற அரசுக் கல்லூரிகளும், எஸ்.ஐ.இ.டி, ஒய்.எம்.சி.ஏ போன்ற கல்வி நிறுவங்களின் ஆசிரியர்களும் மாணவர்களைக் கல்லூரியை விட்டு வெளியே வரச் செய்து, 2:30 மணிக்கே சாலையில் நிறுத்தினர். கொட்டும் மழையில் மாணவர்களும், மாணவிகளும் நனைந்து நடுங்கிக் கொண்டு நின்றனர். கருணாநிதி ஐந்து மணிக்குத் தான் வந்தார். அதுவரை மாணவ மாணவிகள் மழையில் நடுங்கியவாறு நின்று கொண்டிருந்தனர்.ஆசிரியர்கள் மாணவர்களுக்குப் பின்னால் குடைகளுடன் நின்று கொண்டிருந்ததால் எந்த மாணவரும் வெளியேற அனுமதிக்கப் படவில்லை. பத்ற்றத்துடன் காணப் பட்ட ஆசிரியர்கள் மாணவர்களை மரத்தடியில் நிற்கக் கூட அனுமதிக்க மறுத்தனர். முதல்வர் செல்லும்போது எந்த மாணவரும் இடத்தை விட்டு அகன்று விடுவதை அவர்கள் விரும்பவில்லை.

- செய்தி (டைம்ஸ் ஆஃ இந்தியா - 25-10-2008)

ஏன் என்று தெரியாது
சுமார் 16 வயதுள்ள ஒரு சிறுமி, பள்ளீ யூனிஃபார்முடன் மழையில் நனைந்து நடுங்கிக் கொண்டிருந்தாள். அவளிடம் 'ஏன் நிற்கிறாய்?' என்று கேட்டபோது, 'எனக்குத் தெரியாது. எங்களை நிற்கச் சொன்னார்கள்' என்று கூறினாள். பக்கத்தில் நின்றிருந்த அவளது நண்பர்கள் அவளை இடித்த பிறகு, அவள், ‘இலங்கைக்காக நிற்கிறோம், எங்களுக்கு இலங்கை வேண்டும்' என்றாள். அடுத்த கேள்வி கேட்பதற்கு முன், சிலர் வந்து நிருபரை விரட்டி அடித்தனர்.

மேலும், மாநகரிலுள்ள பல்வேறு கல்லூரி மாணவர்களும், மனிதச் சங்கிலியில் கலந்துகொள்ள குற்ப்பிட்ட இடங்களில் ஆஜராகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். பிரெஸிடென்சி கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள் ‘எங்களுடைய பேராசிரியர்கள் வரச் சொன்னார்கள்' என்றனர். அவர்கள் மழைக்குத் தயாராக வரவில்லை. அந்த இடத்தை விட்டு நகர முடியாமல், மிகுந்த சங்கடத்துடன் நின்றுகொண்டிருந்தனர்.

-செய்தி (இந்தியன் எக்ஸ்பிரஸ் - 25-10-2008)

நன்றி - துக்ளக் (30/10/2008)

19 comments:

நல்லதந்தி said...

ஐய்யய்யோ கலைஞர் மாத்தி மாத்தி பேசியதைப் போட்டா ஆயிரம் இடுகைகளுக்கு மேல் ஆகுமே?.என்ன செய்யப் போறீங்க?

dondu(#11168674346665545885) said...

தன் சுயநலனுக்காக குழந்தைகளை மழையில் நிற்க வைத்த கலைஞரின் தியாகம் மெய்சிலிர்க்க வைக்கிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Madhusudhanan Ramanujam said...

//ஐய்யய்யோ கலைஞர் மாத்தி மாத்தி பேசியதைப் போட்டா ஆயிரம் இடுகைகளுக்கு மேல் ஆகுமே?.என்ன செய்யப் போறீங்க?//

வாங்க நல்லதந்தி... ஆயிரம் போதுமா? சரியா யோசிச்சி தான் சொல்றீங்களா?

//தன் சுயநலனுக்காக குழந்தைகளை மழையில் நிற்க வைத்த கலைஞரின் தியாகம் மெய்சிலிர்க்க வைக்கிறது.//

அவருக்கும் அவரது குடும்பத்துக்கும் பணம் கிடைக்குமானால் எது வேண்டுமானாலும் செய்வார். இதில் புதிதாய் என்ன உள்ளது டோண்டு அவர்களே. உங்கள் அனுபவத்தில் நீங்கள் அவரை பார்க்காததா, இன்று புதிதாய் கண்டு விட்டீர்கள்?

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

//ஆயிரம் இடுகைகளுக்கு மேல் ஆகுமே?//

அவ்வளவு தானா ? மீதி ?

Anonymous said...

கலைஞர் அவர்களின் செல்வாக்கு வெகுவாய் பெருகுவது கண்டு பொறாமைப்படும் ஒரு சில ஆதிக்க சக்திகளின் அடிவருடி பத்திரிக்கைகள் சொலவதை சான்று காட்டி தமிழினத் தலைவரை வசை பாடும் நண்பர்களே உங்களுக்கு ஒரு தகவல் ஆயிரம் கைகள் மறத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை.மதவாதிகளின் ஆசை நிராசையாய் போகப்போவது உண்மை.

தமிழ்ர் நலன் காக்கும் அவரது வேள்வியை கேலிபேசுவது இனப் படுகொலைக்கு சமம்.

தலைவர் திரட்டும் நிதிக்கு கோடிக்கணக்கில் கொட்டி கொடுக்கிறது தமிழ்ர் இனம்.

வாழ்க கலைஞர்
வெல்க தமிழ்

இளஞ்செழியன்

உடன் பிறப்பு said...

கலைஞரை விமர்சிக்கும் தகுதி இங்கே யாருக்குமில்லை.

தெருவோரம் நிற்கும் நாய் , நிலவைப்பார்த்துக்குரைப்பது போல் இருக்கிறது உங்கள் பதிவு.

இதற்கு தானே கேள்விகேட்டு , தானே அதற்கொரு பார்ப்பனப்பதிலைச் சொல்லும் விளம்பர விரும்பி டோண்டு என்னும் பூநூலின் புணுகுப்பூச்சு வேறு.

அச்சத்தில் புலம்பித்தள்ளும் உங்களின் உண்மை அடையாளம் கிழியும் நாள் வெகுதொலைவிலில்லை.

r.selvakkumar said...

//ஏன் என்று தெரியாது
சுமார் 16 வயதுள்ள ஒரு சிறுமி, பள்ளீ யூனிஃபார்முடன் மழையில் நனைந்து நடுங்கிக் கொண்டிருந்தாள். அவளிடம் 'ஏன் நிற்கிறாய்?' என்று கேட்டபோது, 'எனக்குத் தெரியாது. எங்களை நிற்கச் சொன்னார்கள்' என்று கூறினாள்.//

தினமும் டிஸ்கோ கிளப்புகளுக்குச் சென்று கிளு கிளு படமெடுத்து பக்கங்களை நிரப்பும் டைம்ஸ் ஆஃப் இந்தியா, டெக்கான் கிரானிகல் போன்ற பத்திரிகைகள் தமிழக இளைஞர்களை தினமும் மூளைச் சலவை செய்து கொண்டிருக்கிறார்கள்.

அதனால் அந்த பள்ளி மாணவிக்கு இலங்கைப் பிரச்சனை பற்றி தெரியாமல் போனதற்கு காரணம், டைம்ஸ் ஆஃப் இந்தியா போன்ற பொறுப்பற்ற பத்திரிகைகள்தான்.

Anonymous said...

மனிதரால் ஆக்கப்பட்ட
மகாசக்தி வாய்ந்த மனிதசங்கிலியை
தமிழ்த்தாய்க்கு அணிவித்த
கலைஞர் அவர்களுக்கு
மேலும் தமிழர்க்கு நல்லது செய்யும் வல்லமையை
அந்த மகாசக்தி அருளட்டும்.

நல்லதந்தி said...

//கலைஞர் அவர்களின் செல்வாக்கு வெகுவாய் பெருகுவது கண்டு பொறாமைப்படும் ஒரு சில ஆதிக்க சக்திகளின் அடிவருடி பத்திரிக்கைகள் சொலவதை சான்று காட்டி தமிழினத் தலைவரை வசை பாடும் நண்பர்களே உங்களுக்கு ஒரு தகவல் ஆயிரம் கைகள் மறத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை.மதவாதிகளின் ஆசை நிராசையாய் போகப்போவது உண்மை.//

ஒரே தமாஷூ!

நல்லதந்தி said...

//மனிதரால் ஆக்கப்பட்ட
மகாசக்தி வாய்ந்த மனிதசங்கிலியை
தமிழ்த்தாய்க்கு அணிவித்த
கலைஞர் அவர்களுக்கு
மேலும் தமிழர்க்கு நல்லது செய்யும் வல்லமையை
அந்த மகாசக்தி அருளட்டும்//

மனிதசங்கிலியில் இந்த கலைஞர் கருணாநிதி மட்டும் நிற்காமல் வேடிக்கை பார்த்தக் காரணம் தமிழர்களுக்கு அந்த மகாசக்தி அருளக்கூடாது என்பதுதானா? என்னே கலைஞரின் கடவுள் பக்தி!

நல்லதந்தி said...

// அருப்புக்கோட்டை பாஸ்கர் said...
//ஆயிரம் இடுகைகளுக்கு மேல் ஆகுமே?//

அவ்வளவு தானா ? மீதி ?//

கூக்ளி(லி யா! ளி யா!) ஒத்துகொண்டு நிறைய GB களைக் கொடுத்தால் நிறைய 25 வருடங்களுக்குப் போடலாம்!. கலைஞரின் கதை வசனம் 25வருடங்களுக்குக் கூட வருமா?வரதா? :)

நல்லதந்தி said...

மதுசூதனன் சாருக்காக பதில நானே போட்டுட்டேன் போலிருக்கு!.அவ்வளவுதான் சாமி வேற ஒண்ணுமில்லை!.உடனே மதுசூதனந்தான் நல்லதந்தி என்று ஆரம்பித்து விடாதீங்க! :))

நல்லதந்தி said...

//தானே அதற்கொரு பார்ப்பனப்பதிலைச் சொல்லும் விளம்பர விரும்பி டோண்டு என்னும் பூநூலின் புணுகுப்பூச்சு வேறு.//

தானே கேள்விதானே பதில் ஸ்பெஷலிஸ்ட்,கலைஞர்தானே உடன் பிறப்பு! அவருதான் பார்ப்பன குஞ்சுவா?. ஓ ,...இருந்தாலும் இருக்கலாம்!.குறிப்பிட்ட பேரனின் மனைவி பிராமிணாக இருப்பதால் அவரும் பிராமிணாக மாறியிருக்கலாம்.அவரு எப்பவுமே இப்படித்தானே நான் தாழ்த்தப் பட்ட ஜாதியில் பெண் எடுத்து இருப்பதால் நானே தாழ்த்தப் பட்டவன் தானே என்ற அவருடைய நிஜ மேடை வசனத்தைக் கேட்டதில்லையா? என்ன உடன்பொறப்பு நீங்க!.வசனமே கலிஞ்சர்!.கலிஞ்சரே வசனம்!

Anonymous said...

//நல்லதந்தி said...

மதுசூதனன் சாருக்காக பதில நானே போட்டுட்டேன் போலிருக்கு!.அவ்வளவுதான் சாமி வேற ஒண்ணுமில்லை!.உடனே மதுசூதனந்தான் நல்லதந்தி என்று ஆரம்பித்து விடாதீங்க! :))//

நல்லதந்தி=மதுசூதனன்=???????

.)))))))))))))))))))))))))))))

Raman Eththani Ramandi
double act or ??? act

Anonymous said...

My Blogs

Team Members
தந்தி
Blogs I Follow
IdlyVadai - இட்லிவடை
அருப்புக்கோட்டை பாஸ்கர்
மாயவரத்தானின் வலைப்பூ....
வால் பையன்

.)))புது யுகம்???

நல்லதந்தி said...

//My Blogs

Team Members
தந்தி
Blogs I Follow
IdlyVadai - இட்லிவடை
அருப்புக்கோட்டை பாஸ்கர்
மாயவரத்தானின் வலைப்பூ....
வால் பையன்

.)))புது யுகம்???//

ஆமாம் சாமி மறந்துட்டேன்!.இப்ப வெச்சிடறேன்!.

Madhusudhanan Ramanujam said...

நல்லதந்தி நீங்க வந்து இந்த பீன்னூட்டத்துக்கெல்லாம் பதில் சொன்னதுக்கு ரொம்ப நன்றி. பல சமயம் சாமக் கோடாங்கி போல ராத்திரி எல்லாம் உக்காந்து பின்னூட்டம் போடுறவங்களுக்கு பதில் எழுதுவேன். ஆனா இப்பல்லாம் அப்படி செய்யிறதில்லை.

நல்லதந்தி = மதுசூதனன் அப்படின்னு புரளிய கெளப்புறவங்களுக்கு ஒண்ணு சொல்றேன். நான் அவரில்லை!... நான் நாந்தான். ரொம்ப வருஷமா போட்டோ கூட போட்டு வெச்சிருந்தேன் ஐயா. வேணும்னா சொல்லுங்க மறுபடி போட்டோவொட சேர்த்து என் அட்ரஸும் போன் நம்பரும் கூடத் தரேன்.

நல்லதந்தி said...

//நல்லதந்தி = மதுசூதனன் அப்படின்னு புரளிய கெளப்புறவங்களுக்கு ஒண்ணு சொல்றேன். நான் அவரில்லை!... நான் நாந்தான்.//

ஐய்யய்யோ நானும் நாந்தான்!.சும்மா சொன்னத்துக்கு பின்றீங்களே சாமி!

Anonymous said...

/நல்லதந்தி said...

//My Blogs

Team Members
தந்தி
Blogs I Follow
IdlyVadai - இட்லிவடை
அருப்புக்கோட்டை பாஸ்கர்
மாயவரத்தானின் வலைப்பூ....
வால் பையன்

.)))புது யுகம்???//

ஆமாம் சாமி மறந்துட்டேன்!.இப்ப வெச்சிடறேன்!.

October 31, 2008 9:10 AM
Blogger Madhusudhanan Ramanujam said...

நல்லதந்தி நீங்க வந்து இந்த பீன்னூட்டத்துக்கெல்லாம் பதில் சொன்னதுக்கு ரொம்ப நன்றி. பல சமயம் சாமக் கோடாங்கி போல ராத்திரி எல்லாம் உக்காந்து பின்னூட்டம் போடுறவங்களுக்கு பதில் எழுதுவேன். ஆனா இப்பல்லாம் அப்படி செய்யிறதில்லை.

நல்லதந்தி = மதுசூதனன் அப்படின்னு புரளிய கெளப்புறவங்களுக்கு ஒண்ணு சொல்றேன். நான் அவரில்லை!... நான் நாந்தான். ரொம்ப வருஷமா போட்டோ கூட போட்டு வெச்சிருந்தேன் ஐயா. வேணும்னா சொல்லுங்க மறுபடி போட்டோவொட சேர்த்து என் அட்ரஸும் போன் நம்பரும் கூடத் தரேன்.

October 31, 2008 9:42 AM
Blogger நல்லதந்தி said...

//நல்லதந்தி = மதுசூதனன் அப்படின்னு புரளிய கெளப்புறவங்களுக்கு ஒண்ணு சொல்றேன். நான் அவரில்லை!... நான் நாந்தான்.//

ஐய்யய்யோ நானும் நாந்தான்!.சும்மா சொன்னத்துக்கு பின்றீங்களே சாமி!//

நீங்க
((அபூர்வ சகோதரர்கள்(நீரும் நெருப்பும்),குடியிருந்த கோவில்,பட்டிகாட்டு பொன்னையா, உலகம் சுற்றும் வாலிபன்,நினைத்ததை முடிப்பவன்,சிரித்து வாழவேண்டும்,நாடோடி மன்னன்,மாட்டுக்கார வேலன்,நாளை நமதே)-
ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லவங்கா!