Monday, October 06, 2008

தமிழ் இனத் தலைவர் - வாய் சொல்லில் வீரர் தானே இவர்!

சமீபத்தில் சென்னையில் இலங்கைத் தமிழர் குறித்த ஒரு மாநாட்டில் தமிழக முதல்வர் கருணாநிதி பேசிய பேச்சு எரிகிறி தீயில் எண்ணை ஊற்றுவது போலத்தான் அமைந்துள்ளது. அதுமட்டுமின்றி, அவரின் பேச்சில் தான் எவ்வளவு வார்த்தை ஜாலமும் ஏமாற்று வேலையும் உள்ளது என்பதை காண தொடர்ந்து படியுங்கள்.

கீழே அவர் பேசியதை படமாக வெளியிட்டுள்ளேன். இது தினமலரில் செய்தியாக வந்ததிலிருந்து எடுக்கப் பட்டது.


”இலங்கை தமிழர்களுக்கு இப்போது ஏற்பட்டுள்ள நிலையிலிருந்து காப்பாற்ற வேண்டுமென்ற அபாய அறிவிப்பை நேற்று மத்திய அரசுக்கு தெரிவித்தோம்.”

“இந்த எச்சரிக்கை மீறப்பட்டால் அதற்குப் பிறகு இந்த அரசு எங்களுக்கு தேவையா என்ற கேள்விக்கு விடை காண வேண்டி வரும்”

யாருக்கு அபாயம் இங்கே? என்ன சொல்ல வருகிறார் முதல்வர்? அதில் ஒரு விந்தையை பாருங்கள், எப்போதெல்லாம் ஆட்சிக் காலம் முடியும் தருவாயில் உள்ளதோ, அப்போதெல்லாம் கருணாநிதிக்கு வீரம் வந்துவிடுகிறது. மத்தியில் ஆட்சி முடிய இன்னும் அரை ஆண்டு மட்டுமே இருப்பதால் முன்னர் ஒரு முறை ஆட்சியை துறந்தார்களே, அதே போல மீண்டும் ஆட்சியை துறப்போம் என்கிறாரா?

”1956 இல் சிதம்பரத்தில் கூடிய திமுக பொதுக்குழுவில், இலங்கை பிரச்சினை குறித்த தீர்மானத்தை நான் தான் முன்மொழிந்தேன். நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்கள் சிலர், இப்போது கூச்சல் எழுப்புகின்றனர்.”

என்ன ஒரு அபாரமான பிதற்றல் பாருங்கள்! பிரச்சினையை முன்மொழித்தால் எல்லாம் முடிந்து விடுமா? 1974ல் இந்திராகாந்தி இந்திய பிரதமராக இருந்த போது கச்சத் தீவை இலங்கைக்கு தாரைவார்த்தார். தமிழகத்தில் அப்போது கருணாநிதி தான் முதல்வர். அப்போது என்ன செய்து கொண்டிருந்தார் நம் மான்புமிகு முதல்வர்? இதில் நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்கள் என்று இன்று இன்னொருவரை பார்த்து எகத்தாளம் வேறு. என்னை “கருணாநிதி” என பெயர் சொல்லி அழைக்கின்றனரே என்று வருந்திய அவருக்கு சபை நாகரீகம் என்றால் என்னவென்று துளியும் தெரியவில்லை என்பது வருந்தத் தக்கது. இத்தகை மூத்த அரசியல்வாதிகளும் இப்படிப் பேசுவது தமிழகத்தின் துரதிர்ஷ்டம் என்று சொல்லாமல் வேறென்ன சொல்வது?

”என்று இலங்கை பிரச்சினை உருவானதோ அன்று முதல் தமிழர்களின் உரிமையை காக்கும் கடமையை திமுக செய்து வருகிறது.”

எது கடமை? கச்சத்தீவு தாரை வார்க்கப் படும்பொழுது அதை இந்திராவின் வலியுறுத்தலால் வெறுமே அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, கச்சத்தீவை இலங்கைக்கு தந்ததையே நான் ஊடகங்களின் வாயிலாகத்தான் தெரிந்து கொண்டேன் என்று நாடகமாடியதா?

“பிரதமருக்கு நேற்று அனுப்பிய தீர்மானத்திற்கு இன்று பலன் கிடைத்துள்ளது. பாலுவை பிரதமர் அழைத்து, அவரிடம் நிலைமையைக் கேட்டு அறிந்துள்ளார். உரிய நடவடிக்கை எடுப்பதாகக் உறுதியளித்துள்ளார்.”

அமெரிக்கர்களை தள்ளி வைக்க இலங்கையில் வெறும் தட்டிகளைக் கொண்டு போராடிய மக்களின் கையில் ஆயுதம் தந்து போரட வைத்து, உலக அரங்கில் அதனால் தலைக் குனிவு ஏற்படும் தறுவாயில் இந்திய ராணுவத்தினை அமைதிப்படை எனும் பெயரில் அங்கு அனுப்பி, அவர்களையும் அவர்களின் வேலை செய்ய விடாமல் தடுத்து, கடைசியில் அதன் பலனாய் தமிழக மண்ணில் செத்து விழுந்தார் ராஜீவ் காந்தி. சபாஷ் மிக நன்றாக கடமையாற்றி உள்ளது மத்திய அரசு.

”பிரதமருடன் தொலைபேசியில் பேசியபோது, நான்கு கோரிக்கைகளை வலியுறுத்தினேன்.
1. நிராயுதபாணியாக உள்ள இலங்கை தமிழர்களைக் கொல்லும் செயலைக் கண்டிக்க வேண்டும்.
2. ராணுவ நடவடிக்கைகளால் இனப்படுகொலை நடத்துவதை முடிவுக்கு கொண்டு வரவேண்டும்.
3. இலங்கை அரசு அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும்.
4. இலங்கை கடற் படையால் தமிழக மீனவர்கள் தாக்குதலுக்கு மீண்டும் ஆளாகக் கூடாது”

முதலாவது விஷயமாக வர வேண்டிய தமிழக மீனவர்களின் தாக்குதலை நிறுத்தும்படியான கோரிக்கை கடைசியில் தான் வந்துள்ளது. இது ஒன்று போதும், நம் தமிழினத் தலைவருக்கு தான் ஆளும் தமிழ் மக்களின் மீதுள்ள பற்று எவ்வளவு என்று தெரிந்து கொள்ள.

”இவற்றை பிரதமர் நிறைவேற்ற முடியாது போனால், தமிழர்கள் கை கால்களை கட்டி உட்கார முடியாது”

இது நாள் வரை அதைத் தானே செய்து வந்துள்ளோம்! மேலும், இவரின் இந்த வீர வசனம் ஒன்றும் புதிதல்லவே. இவர் ஆட்சியில் இருந்தால் இது தான் வசனம். இவர் எதிர் கட்சியில் இருந்தால் “தமிழன் சோற்றால் அடித்த பிண்டமாகிவிட்டான்” என்று அதற்கு இன்னொரு வசனம்.

"30 ஆண்டுகளாக இலங்கையில் நடந்து வரும் போராட்டத்தில் செல்வா, அமிர்தலிங்கம் போன்ற இலங்கை தமிழர்கள் கொல்லப் பட்டுள்ளனர். அவர்கள் விதைத்துச் சென்ற விடுதலை உணர்வு இன்னும் போகவில்லை.”

சபாஷ்! தடை செய்யப்பட்ட ஒரு தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த ஒரு தலைவர் இறந்ததற்கு இவர் இங்கே கவிதையெல்லாம் எழுதி கண்ணீர் விட்டார். இதை பார்க்கையில் விடுதலை புலிகளுக்கு இவரே உதவி செய்கிறார் என்று தான் தோன்றுகிறது. இது நிஜமாக இருப்பினும் அதில் எந்த ஒரு வியப்பும் இருக்காது. எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதே கிட்டத்தட்ட அனைத்து அரசியல்வாதிகளிகளின் குறிக்கோளாகிவிட்ட பின், அது எங்கிருந்து வந்தால் என்ன? நாய் விற்ற காசு குரைக்கவா போகிறது? நியாயமாக பார்த்தால், ஒரு இந்திய மாநிலத்தின் முதல்வராக இருந்தும் கூட, இந்தியாவில் தடை செய்யப் பட்டுள்ள ஒரு தீவிரத இயக்கத்தைச் சார்ந்த ஒருவரை இவர் பகிரங்கமாக ஆதரித்துப் பேசியமைக்கு இவரின் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால் யாருக்கு உள்ளது நம் நாட்டில் அவ்வளவு தைரியம்?!?

அது சரி....நம் தமிழினத் தலைவர் வெறும் வாய்ச் சொல்லில் வீரர் தானே!

34 comments:

dondu(#11168674346665545885) said...

//"30 ஆண்டுகளாக இலங்கையில் நடந்து வரும் போராட்டத்தில் செல்வா, அமிர்தலிங்கம் போன்ற இலங்கை தமிழர்கள் கொல்லப் பட்டுள்ளனர். அவர்கள் விதைத்துச் சென்ற விடுதலை உணர்வு இன்னும் போகவில்லை.”//

அப்படீங்களா? அமிர்தலிங்கத்தை கொன்றது யாராம்?

பேச்சு வார்த்தைக்கு வருவதுபோல புலிகள் ஆயுதங்களை மறைத்து எடுத்து வர, அவர்களை முழுமையாக நம்பிய அமிர்தலிங்கம் அவர்களை உடல் சோதனை செய்யாது உள்ளே அனுமதித்து அவர்கள் கையால் நயவஞ்சக முறையில் கொலையுண்டார். அத்தகைய புலிகளின் தலைவர் இறந்ததற்கு மாண்பு மிகு கலைஞர் இரங்கற்பா பாடுகிறார். பேஷ்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Madhusudhanan Ramanujam said...

//அத்தகைய புலிகளின் தலைவர் இறந்ததற்கு மாண்பு மிகு கலைஞர் இரங்கற்பா பாடுகிறார். பேஷ்.//

இதையெல்லாம் தெரிஞ்சும் நம்ம நாட்ல ஒரு கூட்டம் இவங்க துதி பாட தயாரா இருக்கு. சரி படிக்காதவங்கதான் அப்படி இருக்காங்களானு பார்த்தால், இல்லை! நல்ல படிச்சவங்களும் இப்படித்தான் இருக்காங்க.

Ŝ₤Ω..™ said...

என்னங்க நீங்க.. முதல்வரைவச்சி காமெடி ஒன்னும் பண்ணலியே??
அவரு எவ்வளவு உருக்கமா, நா தழுதழுக்க பேசி இருக்காரு, இப்படி சொல்லிபோட்டீயலெ..

அருள் said...

1. நிராயுதபாணியாக உள்ள இலங்கை தமிழர்களைக் கொல்லும் செயலைக் கண்டிக்க வேண்டும்.
2. ராணுவ நடவடிக்கைகளால் இனப்படுகொலை நடத்துவதை முடிவுக்கு கொண்டு வரவேண்டும்.
3. இலங்கை அரசு அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும்.
4. இலங்கை கடற் படையால் தமிழக மீனவர்கள் தாக்குதலுக்கு மீண்டும் ஆளாகக் கூடாது”
//////////////

அவ‌ர் ஈழ‌த்த‌மிழ‌ர் பிர‌ச்ச‌னையோட‌ மீன‌வ‌ர்க‌ள் பிர‌ச்ச‌னையையும் சேர்த்து சொல்லி இருக்காரு.......
அத‌னால் இந்த‌ வ‌ரிசையில‌ ஒன்னும் த‌ப்பு இல்லிங்கோ...........

Madhusudhanan Ramanujam said...

//இந்த‌ வ‌ரிசையில‌ ஒன்னும் த‌ப்பு இல்லிங்கோ//

நம் நாட்டைச் சேர்ந்த ஒருவர், அதிலும் ஒரு மாநிலத்தின் முதல்வர், முதலில் உள் நாட்டில் உள்ள விஷயங்களில் கவனம் செலுத்தட்டும். அப்புறம் இலங்கை, சிங்கப்பூர், மலேசியாவெல்லாம் சென்று யாரை வேண்டுமானாலும் காக்கட்டும்மே. யார் வேண்டாம் என்றது.

அருள் said...

சபாஷ்! தடை செய்யப்பட்ட ஒரு தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த ஒரு தலைவர் இறந்ததற்கு இவர் இங்கே கவிதையெல்லாம் எழுதி கண்ணீர் விட்டார். இதை பார்க்கையில் விடுதலை புலிகளுக்கு இவரே உதவி செய்கிறார் என்று தான் தோன்றுகிறது
///////////

அப்ப‌டி செய்தால் ம‌கிழ்ச்சிதானே........செய்ய‌ மாட்டேங்குறாரே அதான் பிர‌ச்ச‌னை....அப்ப‌டி ம‌ட்டும் செய்தால் த‌மிழின‌மே இவ‌ரை த‌லையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆடும்.......ஆனால் த‌மிழ‌ன் அழிந்தால் ச‌ந்தோஷ‌ப் ப‌டுகின்ற‌ சில‌ருக்கு வேண்டுமானால் எரிச்ச‌லா இருக்கும்.........

Madhusudhanan Ramanujam said...

//அப்ப‌டி செய்தால் ம‌கிழ்ச்சிதானே........செய்ய‌ மாட்டேங்குறாரே அதான் பிர‌ச்ச‌னை....அப்ப‌டி ம‌ட்டும் செய்தால் த‌மிழின‌மே இவ‌ரை த‌லையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆடும்.......ஆனால் த‌மிழ‌ன் அழிந்தால் ச‌ந்தோஷ‌ப் ப‌டுகின்ற‌ சில‌ருக்கு வேண்டுமானால் எரிச்ச‌லா இருக்கும்.........//

சரியா போச்சு போங்க. இப்படியெல்லாம் பேசினா கலைஞரை வேணா உள்ள வெக்காம இருப்பாங்க. ஆனா உங்களை பிடிச்சு உள்ள வெச்சிடுவாங்கப்பூ. அதென்ன தமிழன் அழிந்தால் சந்தோஷப்படும் சிலர்? விளக்கெண்ணை தனமாய் ஒரு பேச்சு! அங்கே விடுதலைப் போராட்டம் எனும் பெயரில் விடுதலை புலிகள் தமிழனையும் சேர்த்துத் தானையா கொல்கின்றனர்.

Anonymous said...

ஓ ! நீங்க தான் அந்த அல்பமா?

நான் சொல்லலெ , ஜோ சொல்ரார்.

அதான் யாருனு பாக்க வந்தேன். வர்ட்டா!
ஜோ / Joe said...
//மேலும் இப்போது ஈழதமிழர் ஆதரவு என்ற போர்வையில் கலைஞர் எதிர்ப்பு என்பது ஒரே கல்லில் பல மாங்காய் அடிக்கும் யுக்தி. அதற்கு உங்களைப் போன்றோர் பலிகடா ஆவதுதான் கொடுமை.//

உண்மை சேவியர்!

உதாரணத்திற்கு ஒரு அற்பன் போட்ட இந்த பதிவையும் ,அதில் வந்து தேசிய கும்மியடிக்கும் ஜந்துகளையும் பார்த்து தெரிந்து கொள்ளலாம்

http://puthuyugam.blogspot.com/2008/10/blog-post_5969.html
Tue Oct 07, 01:20:00 PM SGT

Naina said...

இது தலைப்புக்கு சம்பந்தமில்லாத பின்னூட்டமாக இருந்தாலும். உங்களுக்கு உபயேகமான தகவலாக இருக்கும் என்பதாலும், இந்த பின்னூட்டத்திற்கான தலைப்பு மிகவும் பின்னால் உள்ளதால் இதன் தகவல் அறிவதற்கும் வாய்ப்பு இல்லாமல் போகும் என்று கருதி தற்போதைய பதிவில் பின்னூட்டதாக பதிக்கிறேன்.

JUSTICE NANAVATI SHAH COMMISSION REPORT ON GODHRA 27 September, 2008 THE CONTEXT The Justice Nanavati Shah Commission submitted the first part of its report on Godhra to Chief Minister Narendra Mdi on 18 September, 2008. A week later, the report was tabled in the assembly on 25 September, 2008. Among its findings, the report states ‐ 1) that the burning of the Sabarmati Express on February 27, 2002 was a pre‐planned conspiracy, not a spontaneous act of mob fury 2) that Godhra‐based Maulvi Umarji had hatched the conspiracy and, 3) that 140 litres of petrol was procured by three of the accused – Jabir Behra, Rajjak Kurkur and Salim Panwala ‐‐ from a local petrol pump the day before the tragedy and taken away in containers. This was then used to burn Coach S‐6. The Commission also gives a clean chit to Narendra Modi and his administration saying there is no evidence “of an lapse in providing protection, relief and rehabilitation to victims of the communal riots…” TEHELKA’S INVESTIGATION Tehelka had conducted an exhaustive investigation in 2007 on the Godhra incident and the communal pogrom that followed. While its findings on the State’s collusion with the pogrom are well known, its painstaking investigation on the Godhra incident is equally damning and completely demolishes four of the police’s key witesses. It also pieces together in great detail the way in which the police manufactured evidence to prove a Muslim conspiracy.
Tehelka’s investigation raises extremely serious questions about the Nanavati Report. In fact, many of the government and police witnesses caught on its camera ‐‐ including BJP corporators and the Gujarat State counsel Arvind Pandya ‐‐ contradicts the report in very significant ways. THE BUYING OF 140 LITRES OF PETROL What the Nanavati Report claims: ‐ The Sabarmati Express was burned with 140 litres of petrol procured by Jabir Bahera, Rajjak Kurkur and Salim Panwala from a local petrol pump the day before the tragedy and taken away in containers. It cites their police confession to further state that this petrol was used to burn Coach 6. What Tehelka found: ‐‐ Jabir Bahera, the police witness who named Maulvi Umarji as the main mastermind and claimed to have bought 140 litres of petrol with other hwkers on February 26, 2002 later retracted his statement. ‐‐ Sikandar Siddik, another police witness, had corroborated Jabir Bahera’s statement. He had also named another religious head Yakub Punjabi for inciting the mob at Godhra. It turned out that Punjabi was not even in the country on that day. ‐‐ Even more damning: The police case relied heavily on the testimonies of two prime witnesses ‐‐ petrol pump salesmen, Ranjitsingh Patel and Prabhatsingh Patel. At first, they had said they did not sell any loose petrol either on the day of the tragedy or the evening before. Later, they changed their statement and said they had sold 140 litres to Muslim hawkers. They now live under 24/7 police vigil. Shockingly, Tehelka caught Ranjitsingh Patel on sting camera admitting that the chief investigating officer Noel Parmar had paid both him nd Prabhatsingh Patel Rs 50,000 each to change their statement and falsely identify some Muslims as conspirators. Ranjitsingh said to Tehelka: “Noel Saheb gave me fifty thousand, showed me a photograph and said I had to identify him” (Full transcript attached)
PRE‐PLANNED CONSPIRACY What the Nanavati Report claims: ‐ The Sabarmati Express was burned as the result of a pre‐planned Muslim conspiracy What Tehelka found: A) MALAFIDE COLLUSION ‐‐ The police case and conspiracy argument is built on the testimonies of nine BJP “eye‐witnesses”, some of them important party functionaries. Between them, these nine men jointly “identified” 41 Muslims from Godhra town as being part of the mob. They also claimed to have seen the assembling of the mob, the sharp‐edged weapons and inflammable material it was carrying, and the actual setting of the fire itself. Curiously, all nine statements were absolutely identical. ‐‐ Among these nine BJP “eye‐witnesses” were Kakul Pathak and Murli Mulchandani. At the time of the investigation, Kakul Pathak was the convenor of the media cell in Godhra and its Taluka Pancjayat delegate. Murli Mulchandani was the Vice‐President of the Godhra Municipal Council.) ‐‐ In shocking disclosures that completely damn the police’s case, Tehelka caught both Kakul Pathak and Murli Mulchandani on camera admitting that far from being eye‐witnesses, they were not even at the station that morning. ‐‐ What Kakul Pathak told Tehelka: None of the nine BJP men were present that morning: In fact Pathak did not even know the police had made him a witness and put out a statement in his name. But when he did get to know, he backed them and identified two people in a police parade whom he knew to be innocent, saying, “Yeh Hindutva ka kaam hai. Joh party bolegi who karne ka ha.” According to him, “The police gave all the names,” he said, “None of the eye witnesses wrote their statements. The police did.” (Transcript attached) ‐‐ What Murli Mulchandani to Tehelka: “I wasn’t at the station that morning, I was sleeping at home. But the police put my name among the eye witnesses.” He too said that he went along with this lie happily because he could not betray the Hindutva cause. In fact, he complained bitterly about Dilip Dasadiya, one of the other BJP men who had later retracted his statement. (Transcript attached)
B) COERCION ‐‐ The police case also relied on the accounts of two Muslim hawkers – Illias Hussain and Anwar Kalandar, who claimed they had turned the discs and stopped the Sabarmati Express from inside to abet the arson. Both have since retracted their statements by filing affidavits in the Supreme Court. ‐‐ Illias also told Tehelka that they were illegally detained for two weeks and tortured by chief investigating officer, Noel Parmar. “Every night the cops would come and put a log of wood on my legs and then walk over it”. Kalandhar said, “I was given electric shocks on my genitals.” Both claim they were made to memorise statements handed to them by the police. C) FABRICATION ‐‐ The first forensic report had effectively demolished the police and State’s contention that Coach S‐6 was burnt by inflammable liquid either thrown in through broken windows or sprinkled outside the coach. A second theory was later floated that the coach was burnt because of petrol thrown along its floor. This was based on the statement of three karsevaks. ‐‐ Significantly, in their first statements, these three karsevaks – Nitinbhai Patel, Dineshbhai Patel and Rambhai Patel – had said they had seen nothing because they had fainted due to the smoke. Three months later, in an astonishing volteface, they said they saw petrol being poured on the floor of the coach from the Godhra side. Needless to say, all three statements were identically phrased. MAULVI UMARJI – ALLEGED MASTERMIND What the Nanavati Report claims: ‐‐ Going along with the police and Gujarat government theory, the Nanavati Report claims Maulvi Umarji, a highly regarded religious figure in Godhra, was the key mastermind behind the Sabarmati Express fire. What Tehelka found: ‐‐ The allegations against Maulvi Umarji rest on two statements by Jabir bin Bahera and Sikandar Siddik. ‐‐ Maulvi Umarji was not present at the site during the incident. ‐‐ Significantly, Bahera later retracted his statement against Umarji. ‐‐ Siddik too proved himself to be entirely unreliable. He had named Maulvi Umarji as well as Maulvi Yakub Punjabi as men who incited the mob. It turned out Punjabi wasn’t even in the country on that day.
CREDIBILITY OF JUSTICE NANAVATI CAST INTO DOUBT BY GUJARAT STATE COUNSEL Arvind Pandya, the special public prosecutor appointed by the Narendra Modi government to defend it before the Nanavati–Shah Commission, was caught on hidden camera, boasting about Narendra Modi’s collusion in the riots, as well as other judges’ sympathy towards the riot accused he was defending. Among other things, Pandya told Tehleka that during the riots Modi had given oral instructions to the police “to be with Hindus.” (This has been corroborated by several affidavits filed by ADGP, Intelligence, RB Sreekumar in the Nanavati Commission itself. Several other BJP / VHP / Bajrang Dal functionaries also spoke openly to the Tehelka undercover reporter about the Chief Minister, police and state’s collusion in the riots.) Pandya goes on to say he personally believed the mass killing of Muslims in Gujarat should be celebrated every year as “victory day”. That apart, he made a damning statement about both Justice Nanavati Shah and Justice KG Shah, which should honourably should have led to their resignations. Excerpt from the conversation: Tehelka: So is Nanavati absolutely against you people? Pandya: Nanavati is a clever man… He wants money… Of the two judges, KG Shah is intelligent – who apna wala hai (he is our man)… he is sympathetic to us… Nanavati is after money…

நன்றி தெஹல்கா

நட்புடன்
நெய்னா முஹம்மது

Madhusudhanan Ramanujam said...

//ஓ ! நீங்க தான் அந்த அல்பமா?

நான் சொல்லலெ , ஜோ சொல்ரார்.

அதான் யாருனு பாக்க வந்தேன். வர்ட்டா!
//

சொல்லப்பட்டுள்ள எந்த குற்றசாட்டுக்கும் பதில் இல்லை. ஆனால் எகத்தாள பேச்சுக்கு மட்டும் ஒரு குறைவும் இல்லை. அது சரி, அந்த வீரமிகு தலைவரின் சேனைகள் தானே நீங்கள். அரசன் எவ்வழியோ குடிகளும் அவ்வழியே! உங்களைச் சொல்லி குத்தமில்லை. அதென்ன புண்ணாக்கு joe? தமிழ் வியாபரம் செய்யும் உங்களுக்கு மட்டும் என்னைய்யா ஒரேடியாக பீட்டர் பெயர்கள்? இது மட்டும் ரொம்ப தமிழோ? அவர் சொன்னாராம் இவர் வந்தாராம். சிரிப்புத்தான் வருகிறது உங்களைப் பார்த்து.

அருள் said...

விளக்கெண்ணை தனமாய் ஒரு பேச்சு! அங்கே விடுதலைப் போராட்டம் எனும் பெயரில் விடுதலை புலிகள் தமிழனையும் சேர்த்துத் தானையா கொல்கின்றனர்.
////////
விள‌க்கெண்ணை என்று என்னை புக‌ழ்ந்திருக்கும் ந‌ண்ப‌ரே வ‌ண‌க்க‌ம்.........
ஒரு க‌ருத்து விள‌க்கெண்ணை க‌ருத்தா இல்லையா என்ப‌தை அத‌ற்க்கு வைக்க‌ப்ப‌டும் எதிர் வாத‌ம் காட்டும்..........வெரும் விள‌க்கெண்ணை என்ற‌ வார்த்தை இல்லை.........

அதே ச‌ம‌ய‌த்தில் நான் கூறிய‌ ///த‌மிழ‌ன் அழிந்தால் ச‌ந்தோஷ‌ப் ப‌டுகின்ற‌ சில‌ருக்கு வேண்டுமானால் எரிச்ச‌லா இருக்கும்........./// என்ற‌ வ‌ரி உண்ம‌யாக‌வே த‌மிழ‌ர்க‌ளை அழிக்கும் சிங்க‌ள‌ர்க‌ளுக்கு பொருந்தும் ம‌ற்றும் சில‌ த‌மிழின‌ விரோதிக‌ளுக்குப் பொருந்த்தும்.........இந்த‌ வ‌ரி உங்க‌ளை குறிக்கிற‌து என்று நான் நினைக்க‌வில்லை......நீங்க‌ளும் அப்ப‌டி நினைத்திருக்க‌ மாட்டீர்க‌ள் என்று நின‌க்கின்றேன்.......
நீங்க‌ள் எங்கோ இருக்கின்றீர் நான் எங்கோ இருகின்றேன்.....உள்ள‌ங்க‌ள் புண்ப‌டாம‌ல் இருக்க‌ ப‌ண்ப‌ட்ட‌ வார்த்தைக‌ளை ப‌ய‌ன்ப‌டுத்துவ‌து ந‌ல்ல‌து..........

வாக்காளன் said...

காழ்ப்பு , வன்மம், குறை சொல்ல மட்டுமே எழுதப்பட்டுள்ள பதிவு.. நல்ல எழுத்துநடை

Anonymous said...

sutha mudura pu....

Anonymous said...

வணக்கம் அன்பர்களே,

இங்கும் எல்லாம் இரண்டு விதமாகத்தான் பார்க்கபடுகிறது, ஒன்று ஈழதமிழர் படும் வேதனைகளை சகோதரர்கள் ஆகிய நாம், நம்முடைய அரசாங்கம் மூலமாகத்தான் குறைக்க முடியும். ஆனால் நாம் என்றுமே நம்முடைய அரசாங்கம் என்பது ஒன்று திமுக கம்பெனி இல்லேன்னா அதிமுக கம்பெனி, இப்படி இரண்டு நிறுவனம் அட்சி செய்தால் எப்படி இருக்குமோ அப்படித்தான் நிறுவன ஆட்சி நடக்கிறது. நிறுவனத்தின் முதலாளிகள் என்றுமே தங்கள் லாபங்களைதன்தான் பார்பார்கள். பிறகுதான், என்சகோதரர்கள், உயிர் முச்சு, கண்களில் ரத்தம், இதயத்தில் முள், நெஞ்சில் வலி மற்றும் இன்னபிற டயலாக் விடுவார்கள். இவர்கள் இப்படித்தான்.

நாம்தான் அய்யா பழ.நெடுமாறன் போன்றோர் உணவு , உடை சேகரித்தபோது உதவி இருக்க வேண்டும். கண்டிப்பாக அய்யா அவர்கள் புலிகள் உடை சேகரித்து இருக்க மாட்டார்.


இரண்டாவது அங்கு நம் சகோதரர்களின் பொது எதிரியான சிங்கள ஆட்சியாளர்களை நல்வழிப்படுத்த மத்திய அரசு மூலமாகத்தான் முடியும். ஆனால் மத்திய அரசோ ராஜீவ்காந்தி கொல்யுண்டதை வைத்தே இதை பார்க்கிறது...


இரண்டும் மாறினால் ஒழிய இங்கே நாம் என்ன கூப்பாடு போட்டாலும் வேஸ்ட் வேஸ்ட் வேஸ்ட்.... வேணும் என்றல் நீங்களும் நானும் திரு.கருணாநிதி மற்றும் செல்வி.ஜெயலலிதா அவர்களை நல்லா கேள்வி கேக்கலாம். இதுதான் உண்மை.

விமர்சகன்.

Anonymous said...

டோண்டு ராகவன் என்ற பார்பனுக்கு அமிர்தலிங்கம் செய்த துரோகங்கள் தெரிந்திருக்க நியாயமில்லை. இந்த பார்ப்பன்களை அழித்தால்தான் இந்தியா முன்னேறும்

Anonymous said...

இந்த வலையின் உரிமையாளரும் பார்ப்பன் தான். கொண்டை தெரிகின்றது

Madhusudhanan Ramanujam said...

//டோண்டு ராகவன் என்ற பார்பனுக்கு அமிர்தலிங்கம் செய்த துரோகங்கள் தெரிந்திருக்க நியாயமில்லை. இந்த பார்ப்பன்களை அழித்தால்தான் இந்தியா முன்னேறும்//

சுத்தம். அமிர்தலிங்கம் பெரிய விடுதலை போராட்ட தியாகின்னு உங்க தலைவர் தானையா சொல்றாரு.

Madhusudhanan Ramanujam said...

//காழ்ப்பு , வன்மம், குறை சொல்ல மட்டுமே எழுதப்பட்டுள்ள பதிவு.. //

குறை சொல்ல முயலவில்லை. வேதனைதனை கூற முயன்றுள்ளேன். தமிழகத்தில் நம் மக்கள் இவ்விரு கழகங்களால் மாறி மாறி ஏமாற்றப்படுவதை எடுத்துக் கூற முயன்றுள்ளேன். அவ்வளவே.

//நல்ல எழுத்துநடை//
மிக்க நன்றீ

யாழ்/Yazh said...

"அமெரிக்கர்களை தள்ளி வைக்க இலங்கையில் வெறும் தட்டிகளைக் கொண்டு போராடிய மக்களின் கையில் ஆயுதம் தந்து போரட வைத்து, உலக அரங்கில் அதனால் தலைக் குனிவு ஏற்படும் தறுவாயில் இந்திய ராணுவத்தினை அமைதிப்படை எனும் பெயரில் அங்கு அனுப்பி, அவர்களையும் அவர்களின் வேலை செய்ய விடாமல் தடுத்து, கடைசியில் அதன் பலனாய் தமிழக மண்ணில் செத்து விழுந்தார் ராஜீவ் காந்தி. சபாஷ் மிக நன்றாக கடமையாற்றி உள்ளது மத்திய அரசு"

இதிலிருந்து என்னா தெரியுதுன்னா...தமிழனை கிள்ளு கீரையாக பயண்படுத்த நினைத்த டெல்லி அடி வருடிகளுக்கு தகுந்த பாடம் கொடுக்கபட்டிருக்கிறது

வாழ்க தமிழன்! வெல்க தமிழிழம்!!

உண்மையாளன் said...

இந்த பார்ப்பன்களை அழித்தால்தான் இந்தியா முன்னேறும்//

இந்தியா மட்டுமில்ல, உலகமே முன்னேறும். இந்த ராமானுஜன் இப்போ புதுசா ஓரு கதய வேற விடுறாரு. பார்பனர்கள் இந்திய மண்ணுக்கு சொந்தக்காரர்களாம். வந்தேறி இல்லையாம்.

Anonymous said...

//பார்பனர்கள் இந்திய மண்ணுக்கு சொந்தக்காரர்களாம். வந்தேறி இல்லையாம்//

ஆரியன் திராவிடன் எல்லா பன்னாடை நாய்களும் வந்தேறிகள்தான். மனித இனம் ஆப்பிரிக்காவில் தோன்றிய பின்பு திராவிட பரதேசிகள் ஆஸ்திரேலியா போகும் வழியில் இங்கு தங்கினார்கள். ஆரிய கம்முனாட்டிகள் ஐரோப்ப போய்விட்டு பின்னர் இங்கு வந்தார்கள்.இவுனுக வந்த பின்தான் எல்லா சண்டையும் ஆரம்பித்தது. பத்தாததிற்கு 7-ம் நூற்றாண்டில் அரேபியாவிலிருந்து முஸ்லிம் குருப் வேறு வந்து விட்டது. இவுனுக எல்லாரும் சேர்ந்துதான் இந்த துணைகண்டத்தை நாறடிகிறார்கள். இந்த எல்லா குருப்பும் இப்ப பதிவு என்ற பெயரில் சண்டை போட்டு இன்டர்நெட்டையும் நாறடித்து வருகிறார்கள்.

பிகு: துவச உணர்வு போதுமா?

Madhusudhanan Ramanujam said...

//இந்தியா மட்டுமில்ல, உலகமே முன்னேறும். இந்த ராமானுஜன் இப்போ புதுசா ஓரு கதய வேற விடுறாரு. பார்பனர்கள் இந்திய மண்ணுக்கு சொந்தக்காரர்களாம். வந்தேறி இல்லையாம்.//

கொஞ்சம் இணையத்தை அலசித்தான் பாருங்களேன். நான் சொல்வது பொய் இல்லை என்றும் விளங்கும். முன்னொரு காலத்தில் நம்மை பிரித்தாள பெரிதும் உதவியது இந்தக் கதை, அதன் பின்னர் நம் கழகங்கள் ஆட்சி செய்ய இன்று உதவுகிறது.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
தமிழ் விரும்பி said...

//.........
Madhusudhanan Ramanujam said...
நம் நாட்டைச் சேர்ந்த ஒருவர், அதிலும் ஒரு மாநிலத்தின் முதல்வர், முதலில் உள் நாட்டில் உள்ள விஷயங்களில் கவனம் செலுத்தட்டும்............/

நிச்சயமாக உங்கள் தமிழக மீனவர்களைக் காப்பாற்ற சொல்லுங்கள். மத்திய அரசு ஆயதம் கொடுத்து மாநில மக்களுக்கு ஆப்பு சொருகும் நாடு உலகில் இந்தியாதான்.

டோண்டு, எப்படி கொன்றார்கள் என்று தெரிந்த உங்களுக்கு ஏன் அமிர்தலிங்கம் செய்த துரோகங்கள் தெரியாது.


//........அங்கே விடுதலைப் போராட்டம் எனும் பெயரில் விடுதலை புலிகள் தமிழனையும் சேர்த்துத் தானையா கொல்கின்றனர்....../

என்னத்தை இந்த அறிவிலிகளுக்கு விளங்கப்படுத்த.......

Peter ka Matter said...

மது சூது அண்ணா,
உங்களவா வீரம் உலக பிரசித்தமாயிற்றே!.
கலைஞர் வீரத்தப் பற்றி நன்னா சொன்னேள் போங்கோ!!
கலைஞர் இதுவரைக்கும் காட்டிக் கொடுக்கிறதும் கூட்டிக் கொடுக்குறதும் தான் உண்மையான வீரம்னு தெரியாம இருக்காரு பாருங்க.

Anonymous said...

கலைஞர் இதுவரைக்கும் காட்டிக் கொடுக்கிறதும் கூட்டிக் கொடுக்குறதும் தான் உண்மையான வீரம்னு தெரியாம இருக்காரு பாருங்க.//

அடேங்கப்பா!
முழுப்பூசனிக்காவே திராவிட சோற்றில் ஸாரி சேற்றில் மறைக்க பாக்குறீரே.

உங்க மூத்தகுடி தலைவர், வளர்ப்புமகளை கல்யாணம் செய்துண்டு சேட்டிஸ்பை பண்ணமுடியாதுண்ணு சிஷ்ய பிள்ளைகிட்ட கூட்டிவிட்டவர்தானே, அந்தப் பரம்பரைதானே கலைஞர்.

கலைஞர் லட்சணம் மட்டும் தெரியாதா? ஒரு எக்ஸாம்பிள் லட்சிய நடிகர்கருக்கு தனது மனைவிய விட்டு கொடுத்தவர்தானே இவர்.மீதி கதய எம்ஜியார் ரசிகர்களிடையே கேட்டுபாரும்.

Madhusudhanan Ramanujam said...

//கலைஞர் லட்சணம் மட்டும் தெரியாதா? ஒரு எக்ஸாம்பிள் லட்சிய நடிகர்கருக்கு தனது மனைவிய விட்டு கொடுத்தவர்தானே இவர்.மீதி கதய எம்ஜியார் ரசிகர்களிடையே கேட்டுபாரும். //

இந்தப் பதிவில் இலங்கை பிரச்சினை குறித்து கருணாநிதியின் நிலையை மட்டுமே பேசிவருகிறோம். அப்படி இருக்க, அவரின் தனிப்பட்ட வாழ்கையை விமர்சிக்க வேண்டாம் என்பது என் கருத்து. எனவே பதிவிற்க்கு சம்பந்தமான கருத்தினை மட்டும் பின்னூட்டம் இடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

Anonymous said...

தமிழக தலைவர்களே! சினிமா வசனம் பேசி தமிழக மக்களை சோணகிரிகளாக்காதீர்கள்!!

தேசபந்து

தமிழ்நாட்டில் இலங்கை தமிழர் பிரச்சினை மீண்டும் ஒருமுறை சூடு பிடித்துள்ளது போன்ற மாதிரியான தோற்றப்பாடுகள் செய்திகளாக வெளிவந்தமுள்ளன. அங்கு விரைவில் தேர்தல் நடைபெறவிருப்பதாலும்,அதற்காக புதிய சந்தர்ப்பவாத அரசியல் கூட்டணிகள் அமையவிருப்பதாலுமே, இந்தசூடு சற்று அதிகமாகவே காணப்படுகின்றது போன்றுள்ளது. பிரதான கட்சிகளான கருணாநிதியைத் தலைமையாக்கொண்ட தி.மு.க மற்றும் ஜெயலலிதாவைத் தலைமையாக்கொண்ட அ.தி.மு.க என்பன ஏட்டிக்கு போட்டியாக அறிக்கைகளை விடுத்து வருவதால், ஏனைய சிறியகட்சிகளும் இதில் குளிர்காய்வதற்கு முண்டியடிக்கின்றன. ஆளும் கட்சியான காங்கிரஸ் கட்சியும், இலங்கை தமிழர் பிரச்சினையில் ஆரம்பம் முதலே ஒரளவிற்கேனும் சரியான நிதானமான கொள்கையை பின்பற்றி வரும் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட கட்சியும் மட்டுமே இலங்கைத்தமிழர் விவகாரத்தில் ஒரு நிதானமான போக்கை கடைப்படித்து வருகின்றன. இந்த அறிக்கைப் போர்வீரர்கள் தேர்தல் திருவிழா முடிந்த பின்னர் பெட்டிப்பாம்பாக அடங்கிவிடுவார்கள் என்பது, தமிழ்நாட்டு அரசியலை அறிந்த எல்லோரும் அறிந்த சங்கதிதான்! தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் ஆவேசம் கொள்ளும் அளவுக்கு இலங்கை தமிழர்களுக்கு அப்படி என்னதான் நடந்துவிட்டது?

வன்னியில் கடந்த 12 ஆண்டுகளாக புலிகளின் மரணப்பிடியில் சிக்கிக்கொண்டு, சொல்லொணா துயரங்களை அனுபவித்து வரும் ஏறத்தாள மூன்று இலட்சம் தமிழ் மக்களை விடுவிப்பதற்காகவும், அவர்களை இலங்கையின் ஏனையமக்கள் அனுபவித்து வரும் ஒரு சுதந்திர, ஜனநாயக வாழ்வை வாழவைப்பதற்காகவுமே இலங்கை அரசு புலிகள் மீது ஒரு தாக்குதலை ஆரம்பித்துள்ளது. இந்த போர்கூட இலங்கை அரசால் விரும்பி ஆரம்பிக்கப்பட்ட ஒன்றல்ல. இன்னும் சொல்லப்போனால் 1987 ஆண்டின் பின்னர், இலங்கையினது ஒட்டுமொத்தப்போருமே,புலிகளினால் திட்டமிட்டு ஆரம்பிக்கப்பட்ட ஒன்றே. ஒவ்வொரு தடைவையும் இந்தப்போர் தமிழ்மக்களுடைய விடுதலைக்கானது என பிரச்சாரம் செய்யப்பட்டு வருவதெல்லாம் சுத்த மோசடியே. புலிகள் நடாத்துவது தமிழ் மக்களுக்கான போராக இருந்தால்,கடந்த கால் நூற்றாண்டாக ஏனைய தமிழ் விடுதலை இயக்கங்களை எல்லாம் ஏன் அவர்கள் ஆயிரக்கணக்கில் கொன்றொழித்தார்கள்? அமிர்தலிங்கம் உட்பட,பல நூற்றுக்கணக்கான தமிழ் ஜனநாயக அரசியல் தலைவர்களை ஏன் கொலை செய்தார்கள்? தமிழ் கல்விமான்கள்,புத்திஜீவிகள்,மனித உரிமை ஆர்வலர்கள், மதகுருமார்கள்,முதியோர்கள்,பெண்கள், குழந்தைகள், அரச ஊழியர்கள் என ஏறத்தாள முப்பதாயிரம் தமிழர்களை ஏன் கொல் ல வேண்டும்? பள்ளிவாசல்களில் புகுந்து தொழுகையில் ஈடுபட்ட முஸ்லீம்களை சுட்டுக்கொல்வதும், வடபகுதியில் காலங்காலமாக வாழ்ந்த பல்லாயிரக்கணக்கான முஸ்லீம் மக்களை ஓரிரு மணித்தியாலங்களில் விரட்டியடித்து இனச்சுத்திகரிப்பு செய்வதும் தமிழின விடுதலைப் போராட்டமா? எனவே புலிகள் நடாத்துவது தமிழ்மக்களின் விடுதலைப்போர் என யாராவது நம்பினால்,அவர்கள் ஒன்றில் தம்மைத்தாமே ஏமாற்றிக் கொள்ளும் அப்பாவிகளாக இருக்க வேண்டும், அல்லது கபட நோக்கம் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.

பிரபாகரனும் அவரது கூட்டமும்,தமிழினத்தின் பெயரால் நடாத்தும் இந்த யுத்தத்தை, சிங்கள அரசின் பிடியிலிருந்து தமிழ் பிரதேசங்களை விடுவித்து, தமிழர்களின் ஆட்சியொன்றை நிறுவுவதை நோக்கமாக கொண்டது எனச் சொல்லி வருகின்றனர். ஆனால் உண்மையில் இந்த யுத்தம், தமது சர்வாதிகாரப்போக்கை எதிர்க்கும் தமிழர்களையும் கூட அழித்தொழித்து முழுக்கமுழுக்க கிட்லர் பாணியிலான ஒரு சர்வாதிகார அரசை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டதே! தமது சொந்த இனத்தினர்களின் ஆட்சியாக இருந்தாலும்,அது சர்வாதிகார ஆட்சியாக இருக்குமாக இருந்தால்,அதைவிட இப்போதைய சிங்களவர்கள் தலைமையிலான அரைகுறை ஜனநாயக ஆட்சியே மேலானது என்பதே, சுதந்திரத்தின் மகிமை தெரிந்த ஒவ்வொரு தமிழனினதும் எண்ணமாகும். இந்த வகையான ஒரு சர்வாதிகார அரசை தமிழர்களின் தலையில் கட்டிவிடவா, தமிழக தலைவர்கள் விரும்புகிறார்கள் என்பதை அவர்கள் ஈழத்தமிழர்களின் முன்னாலும் உலகின் முன்னாலும் தெளிவுபடுத்த வேண்டும். இவையெல்லாம் ஒரு புறமிருக்க, இலங்கை அரசாங்கம் எத்தனையோ தடவைகள் சமாதான பேச்சுவார்த்தைகளுக்கு அழைத்தும்,ஒவ்வொருமுறையும் ஏதாவது ஒரு சாக்குப்போக்கை சொல்லி இனப்பிரச்சனைக்கான தீர்வு முயற்சிகளை குழப்பிவிட்டு, யுத்தத்தை நோக்கி ஒவ்வொரு முறையும் சென்றவர்கள் புலிகளல்லவா?

1987 ஆண்டில் இந்திய அரசு இனப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வு காண்பதற்காக, ஜெயவர்த்தனவின் இலங்கை அரசை நிர்ப்பந்தித்து, அடிபணிய வைத்து,வடக்கு கிழக்கு இணைந்த மாகாணசபையை அமைத்து தமிழர்களுக்கென அரசொன்றை உருவாக்கினார்கள். சிங்கள இனவெறியன் பிரேமதாசாவ ுடன் சேர்ந்து, அந்த மாகாண அரசை கலைக்க வைத்ததுடன் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தியையும் படுகொலை செய்து, உதவவந்த இந்தியாவின் முதுகில் குத்திய புலிகளின் இரண்டக - ஈனச்செயலை இலகுவில் மறந்துவிட முடியுமா? இதையெல்லாம் இன்று தமது அரசியல் ஆதாயங்கள் கருதி, ஈழத்தமிழர்களுக்காக போலியாக நீலிக்கண்ணீர் வடிக்கும் கருணாநிதியும் ஜெயலலிதாவும் மற்றும் வை.கோபாலசாமியும் ராமதாசும், இந்த சந்தர்ப்பவாத கூட்டத்துடன் புதிதாக கரம்கோர்த்திருக்கும் போலிக்கம்யூனிஸ்ட் தா.பாண்டியனும் அறியாதவர்களா? புலிகள் எவ்விதமான வழிமுறைக்கும் வரமறுத்து,விடாப்பிடியாக யுத்தவழிமுறையை நாடியதின் காரணமாகவே, இலங்கை அரசாங்கம் தனது குடிமக்களான இலங்கைத் தமிழர்களை பாதுகாப்பதற்காக,புலிகள் மீது பதில் தாக்குதலை நடாத்தி வருகின்றது என்ற உண்மையை இந்த தமிழக தலைவர்கள் திட்டமிட்டு மறைத்துவிட்டு,இலங்கை இராணுவம் தமிழர்களை கொல்கிறது என்றும்,தமிழ் பெண்களை கற்பழிக்கின்றது என்றும், தமிழர்களை பட்டினி போட்டு கொல்கின்றது என்றும் பொய்ப்பிரச்சாரம் செய்வதின் நோக்கம் என்ன? யுத்தம் தொடங்கிய நாள் முதல் இன்றுவரை, புலிகளின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்த மக்களுக்கு உணவு, மருந்து, கல்வி, போக்குவரத்து மற்றும் ஏனைய வசதிகளையும்,அங்கு கடமையாற்றும் அரச ஊழியர்களுக்கான சம்பளங்களையும் இலங்கை அரசுதான் வழங்கி வருகின்றது என்ற உண்மை இந்த கூத்தாடி தமிழக அரசியல்வாதிகளுக்கு தெரியுமா?

கிழக்கு மாகாணம் புலிகளிடம் இருந்து அரசாங்கத்தால் விடுவிக்கப்பட்டு,அங்க ஜனநாயக தேர்தல்கள் நடாத்தப்பட்டு தமிழ் - முஸ்லீம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளால் ஆட்சி நடாத்தப்படுகின்றதே, அதனைப்பற்றி உங்கள் கருத்து என்ன? கிழக்கை புலிகளிடமிருந்து விடுவித்த இலங்கை அரசாங்கம், அங்குள்ள தமிழ்மக்களையெல்லாம் கொலைசெய்துவிட்டு, அங்குள்ள தமிழர்களின் நிலங்களில் சிங்கள மக்களையா குடியேற்றி வருகின்றது? ஏனையா தமிழக தலைவர்களே! கிழக்கைப்பற்றியும் கிழக்கு மாகாண மக்களைப்பற்றியும் நீங்கள் எல்லாம் ஏன் வாய் திறக்கிறீர்கள் இல்லை? கிழக்கு மாகாணத்தில் புலிகளுடன் இருந்த கருணாவும் பிள்ளையானும், பிரபாகரன் தலைமை சரியில்லையென்று தனியாகச் சென்று, கிழக்கு மக்களை ஜனநாயக பாதையில் வழிநடாத்திச் செல்வது உங்கள் புலன்களுக்குத் தெரியவில்லையா? அவர்கள் ஏன் அப்படி செய்தார்கள் என கொஞ்சமாவது சிந்தித்துப் பார்த்தீர்களா? இப்பொழுது புலிகளின் கடைசிப் புகலிடமான வன்னியும் பறிபோய்விட்டால், உங்களுக்கு புலிகள் மாதாந்தம் வீசியெறியும் பிச்சைக்காசு இல்லாமல் போய்விடும் என்றுதானே இவ்வளவு கூப்பாடு போடுகிறீர்கள்? நீங்கள் எவ்வளவுதான் கூப்பாடு போட்டாலும் இம்முறை உங்களால் புலிகளின் அழிவை தடுத்து நிறுத்திவிட முடியாது. ஏனெனில் இம்முறை இலங்கையில் வாழும் தமிழ் மக்களில் பெரும்பான்மையோரும் புலிகளின் பிடியிலிருந்து தம்மை விடுவிக்கக் கோரி நிற்கிறார்கள் என்ற உண்மையை நீங்கள் அறிய வேண்டும். இலங்கை கரையிலிருந்து வெறுமனே 20 மைல் தொலைவில் வாழுகின்ற நீங்கள், அங்கே நடக்கின்ற உண்மை நிலவரம் தெரியாதவர்கள் மாதிரி போடுகின்ற காட்டுக்கூச்சல், வழமைபோல அப்பாவி தமிழக மக்களை ஏமாற்றி, உங்கள் வாக்குப்பெட்டிகளை நிரப்ப உதவக்கூடும். ஆனால் யதார்த்தத்திற்கு ஒவ்வாத கதைகளுக்கு சினிமா வசனம் எழுதியும் பேசியும் பழகிப்போன உங்களது ‘சினிமாத்தனமான கிளிசறின் கண்ணீரை’பார்த்து, இலங்கை தமிழ் மக்கள் கைகொட்டிச் சிரிப்பார்களேயொழிய வேறொன்றும் செய்யமாட்டார்கள்!

Anonymous said...

நீங்களெல்லாம் இப்படியே வன்மம் பேசிக்கொண்டு இருங்கள். அதுதான் தமிழர்கள் வெறியுடன் செயல்பட்டு தொடர்ந்து முன்னேற வழிவகுக்கும்.

கும்மி தொடரட்டும்.

உண்மையாளன் said...

அப்படி இருக்க, அவரின் தனிப்பட்ட வாழ்கையை விமர்சிக்க வேண்டாம் என்பது என் கருத்து. எனவே பதிவிற்க்கு சம்பந்தமான கருத்தினை மட்டும் பின்னூட்டம் இடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
//

அய்யங்கார்வாள்! இவ்வளவு நாகரீகமா இருக்குறீரு. அப்புறம் எப்படி உங்களுக்கு ஹிந்துத்துவ துவேஷம் இருக்கு. மற்ற மதத்தையெல்லாம் விமர்சிக்குறீரு? ஆச்சரியமா இருக்கு !

Madhusudhanan Ramanujam said...

//அய்யங்கார்வாள்! இவ்வளவு நாகரீகமா இருக்குறீரு. அப்புறம் எப்படி உங்களுக்கு ஹிந்துத்துவ துவேஷம் இருக்கு. மற்ற மதத்தையெல்லாம் விமர்சிக்குறீரு? ஆச்சரியமா இருக்கு !//

கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் மதம் சாதி ஆகியவற்றின் பேரால் நடக்கும் மக்களுக்கு எதிரான விஷயத்தை மட்டும் தான் நான் எதிர்க்கிறேன் என்பது தெரியும். நான் எந்த ஒரு சூழ்நிலையிலும் இன்னொரு மதத்தையோ அல்லது அந்த மதத்தினரின் நம்பிக்கை தனையோ விமர்சிக்க மாட்டேன்.

அது சரி said...

//
முதலாவது விஷயமாக வர வேண்டிய தமிழக மீனவர்களின் தாக்குதலை நிறுத்தும்படியான கோரிக்கை கடைசியில் தான் வந்துள்ளது. இது ஒன்று போதும், நம் தமிழினத் தலைவருக்கு தான் ஆளும் தமிழ் மக்களின் மீதுள்ள பற்று எவ்வளவு என்று தெரிந்து கொள்ள.
//

மதுசூதனன்,
வரிசை முக்கியமல்ல.. விஷயம் தான் முக்கியம். மீனவர் பிரச்சினையும் முக்கியம், இலங்கை தமிழர் பிரச்சினையும் முக்கியம். அவர்கள் தமிழர்கள் என்பதால் மட்டுமல்ல, இனப்படுகொலைகளை கண்டிக்காதவர்கள் மனிதனாக இருக்க முடியாது..

//
சபாஷ்! தடை செய்யப்பட்ட ஒரு தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த ஒரு தலைவர் இறந்ததற்கு இவர் இங்கே கவிதையெல்லாம் எழுதி கண்ணீர் விட்டார். இதை பார்க்கையில் விடுதலை புலிகளுக்கு இவரே உதவி செய்கிறார் என்று தான் தோன்றுகிறது. இது நிஜமாக இருப்பினும் அதில் எந்த ஒரு வியப்பும் இருக்காது. எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதே கிட்டத்தட்ட அனைத்து அரசியல்வாதிகளிகளின் குறிக்கோளாகிவிட்ட பின், அது எங்கிருந்து வந்தால் என்ன? நாய் விற்ற காசு குரைக்கவா போகிறது? நியாயமாக பார்த்தால், ஒரு இந்திய மாநிலத்தின் முதல்வராக இருந்தும் கூட, இந்தியாவில் தடை செய்யப் பட்டுள்ள ஒரு தீவிரத இயக்கத்தைச் சார்ந்த ஒருவரை இவர் பகிரங்கமாக ஆதரித்துப் பேசியமைக்கு இவரின் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால் யாருக்கு உள்ளது நம் நாட்டில் அவ்வளவு தைரியம்?!?

அது சரி....நம் தமிழினத் தலைவர் வெறும் வாய்ச் சொல்லில் வீரர் தானே!
//

தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கம்..அப்படி பார்த்தால், இந்திய ராணுவம் பற்றியும், இலங்கையில் அவர்கள் செய்த செயல்களையும் விசாரணைக்கு உட்படுத்தினால்.... ராஜீவை கொன்றதை யாரும் நியாயப்படுத்த முடியாது. அதே சமயம், இலங்கை ராணுவமும், இந்திய ராணுவமும் ஒருவரை அல்ல, பல லட்சம் பேரை கொன்று குவித்திருக்கிறார்கள்..அது தீவிரவாதமா இல்லையா? அப்பொழுது ஏன் இந்த இரண்டு ராணுவங்களை தடை செய்யவில்லை??

அமிர்த லிங்கத்தை புலிகள் கொலை செய்தார்கள் என்பதற்கு என்ன ஆதாரம்?? ஆனால் பிரபாகரனை டெல்லிக்கு பேச்சு வார்த்தைக்கு அழைத்து இந்திய அரசு கைது செய்ய முயன்றதற்கு ஆதாரம் இருக்கிறது... பிரபாகரனை இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்திற்கு பேச்சு வார்த்தைக்கு அழைத்து முதுகில் சுட்டுக்கொல்ல இந்திய தூதர் உத்தரவிட்டதாக ஒரு ராணுவ அதிகாரியே சமீபத்தில் பேட்டி அளித்திருந்தார்...

ஒரு பேச்சு வார்த்தையின் போது, பிரபாகரனிடம் "உன் குடும்பத்தை அழித்து விடுவோம்" என்ற ரீதியில் ஒரு இந்திய ராணுவ அதிகாரி சொல்கிறார். இதற்கு வீடியோ ஆதாரமே உள்ளது. "You Tube" ல் தேடிப்பாருங்கள்..

தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்க தலைவர் என்று நீங்கள் சொல்வது யார் என்று தெரிகிறது.. ஆனால், அவர் இந்தியாவிலோ இல்லை இலங்கையிலோ எந்த தீவிரவாதமும் செய்ததாக தெரியவில்லை.. அப்படிப்பட்டவரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்துவது தவறில்லை.

உங்கள் கூற்றின் படி பார்த்தால், ஆங்கில ஆட்சி காலத்தில் பகத்சிங், திலக், படேல், நேரு, சுபாஷ் சந்திர போஸ் ஏன் காந்தி கூட தீவிரவாதி தான். ஆனால், இன்றைக்கு இந்தியா முழுக்க அவர்களுக்கு விழா கொண்டாடுவது ஏன்??

உண்மையாளன் said...

பகத்சிங், திலக், படேல், நேரு, சுபாஷ் சந்திர போஸ் ஏன் காந்தி//

என்னண்ணா பேஷரேல். உம்ம லிஸ்ல எங்கவா நிறைய இருக்கா பாரும். அதுனால அவாள்ளாம் தியாகிகள்ணா. துப்பாக்கி எங்கவா தூக்கினா தியாகி மத்தவா தூக்கினா தீவிரவாதி. இந்த சிம்பிள் அண்டர்ஸ்டான்டிங் கூட நோக்கு புரியலையேண்ணா.

Madhusudhanan Ramanujam said...

//மதுசூதனன்,
வரிசை முக்கியமல்ல.. விஷயம் தான் முக்கியம். மீனவர் பிரச்சினையும் முக்கியம், இலங்கை தமிழர் பிரச்சினையும் முக்கியம்.
......................................................................................................
ஆனால், இன்றைக்கு இந்தியா முழுக்க அவர்களுக்கு விழா கொண்டாடுவது ஏன்??
//

அதெப்படிங்க, விடுதலை புலிகள் இந்தியாவில் எந்த விதமான தீவிரவாத செயலும் செய்யலைன்னு சொல்றீங்க? ராஜீவ் காந்தியை கொன்னது அவங்கதான். அப்படி நீங்க சொன்ன மாதிரி அதை தனியா வெச்சுகிட்டா கூட, ராஜீவோட சேர்ந்து செத்தவங்க, அதனால இன்னைக்கு அவங்க குடும்பங்கள் படும் கஷ்டம் இதெல்லாம் எதில் சேர்த்தி?

ஆங்கிலேயர்களை எதிர்த்து சுபாஷ் சந்திரபோஸ் பகத் சிங் ஆகியோர் செய்ததும் விடுதலை புலிகள் செய்வதும் ஒன்றுதான் என்று கூறினால், உங்களை என்னவென்று சொல்வது? விடுதலை புலிகளால் உயிரழந்த தமிழர்கள் குறித்து ஒருவரும் ஒன்றும் பேசுவதில்லையே! அது ஏன் என்று நீங்கள் சற்றாவது யோசித்ததுண்டா?

உங்களுடைய இந்தக் கூற்றை சரியென ஏற்றால் காஷ்மீர் மற்றும் இதர மாநிலங்களில் நடக்கும் தீவிரவாதத்தினையும் தியாகக் கண் கொண்டு பார்க்கவேண்டும் என்பதற்கு சமமாகிறது. இதை எவரும் ஒருக்காலும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.