Friday, November 07, 2008

பாயிண்ட் பரமசிவம் (6)

முரசொலியின் கட்டுரை: "கடந்த 50 ஆண்டுகளாக இந்த நாட்டுக்குப் பணியாற்றும் பெருமை எனக்குக் கிடைத்து இருக்கிறது. நாட்டின் மிக உயர்ந்த பதவிக்கான வேட்பாளராக இருந்தேன். இன்றிரவு இந்த நாட்டின் சேவகனாகத் தொடர்கிறேன். இதைவிட ஒருவருக்கு என்ன பாக்கியம் வேண்டும்? என்னை எதிர்த்துப் போட்டியிட்டவர், நாளை எனக்கு அதிபராக இருக்கப் போகிறார். அவருக்கு நாம் உறுதுணையாக இருக்க வேண்டும்"

- என்று பேசி எதிர்க்கட்சித் தலைவர்கள் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதற்கு உதாரணம் படைத்திருக்கிறார் ஜான் மெக்கெய்ன்.

அவரது பேச்சைப் படிக்கும் எவருக்கும் - நமது தமிழக எதிர்க்கட்சிகளின் சில தலைவர்கள் நாள்தோறும் முதல்வரின் நன்முயற்சிகள் அனைத்திற்கும்; ‘கட்டிய வீட்டிற்கு நொட்டாரம் சொல்வதுபோல’ - எதிரிக் கட்சித் தலைவர் களாகவே செயல்பட்டு ஜனநாயகத்திற்கே களங்கமும் மாசும் கற்பித்து வருவதுதான் நினைவுக்கு வரும்! அமெரிக்காவில் அப்படி; தமிழகத்தில் இப்படி!


அது சரி... நம்ம கலைஞர் எதிர்கட்சியில் இருக்கும்போது என்ன கதை? அதைப் பத்தியும் கொஞ்சம் எழுதறது.

கருணாநிதி: போர் நிறுத்தம் என்பது போரில் ஈடுபட்டுள்ள இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டியது. தமிழகத்தில் உள்ள அனைவரும், இலங்கை அரசு போர் நிறுத்தம் செய்யக் கோரி, அதைச் செய்யச் சொல்லி இதிய அரசை வலியுறுத்தி வருகிறோம். இரு தரப்பினரின் நிலை தெரியாமல் ஒரு தரப்பை மட்டும் போர் நிறுத்தம் செய்ய வேண்டுமென்று கேட்பது எந்த அளவிற்குச் சாத்தியம் என்று தெரியவில்லை. அதனால் தான் இலங்கை பிரச்சினை பற்றி பேசும்போதே, முரண்பட்ட கருத்துக்கள் எதிரொலிக்கின்றன. எனவே, இரு தரப்பினரும் இன்று ஈடுபட்டுள்ள சண்டை ஒத்திவைக்கப்பட்டு, நடுநிலை நாடுகளுடன் இந்தியாவும் ஒப்புக்கொள்ளக் கூடிய சமரசப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அதன் இறுதிக் கட்டமாக நிரந்தப் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்பது தான் என் கருத்து.

அப்போ அனைத்து கட்சி கூட்டம், ராஜினாமா கடிதம், கொட்டும் மழையில் மனிதச் சங்கிலி இத்யாதி இத்யாதி எல்லாம் எதுக்குங்க?

கருணாநிதி: விடுதலைப் புலிகள் பற்றி தமிழகத்தில் உள்ள கட்சிகளிடையே ஒவ்வொரு கட்டத்திலும் முரண்பாடான கருத்துக்கள் உண்டு. தி.மு.க வைப் பொறுத்தவரை விடுதலைப் புலிகள் பற்றி ராஜிவ் மறைவுக்கு முன், மறைவுக்குப் பின் என்ற இருவேறு விதமான கருத்துக்கள் உண்டு என்பதை சட்ட சபையிலேயே குறிப்பிட்டுள்ளேன்.

உங்களுக்கு எந்த விஷயத்துலதான் முரண்பாடு இல்லை சாமி...(தப்பு தப்பு).. பகுத்தறிவாளரே. எந்த விஷயங்களில் உங்களுக்கு முரண்பாடான கருத்து உண்டு என்பதற்கு பதில், எதில் இல்லை என்று சொன்னால் உலகத் தமிழினத்திற்கே பெரும் உதவியாக இருக்கும்.

கனிமொழி: இங்குள்ள தமிழர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு மத்திய அரசு, இலங்கையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்த வேண்டும்.

ஆகா….. என்ன குழப்பமான குடும்பம்டா. அப்பா என்னடான்னா போர் நிறுத்தம் இருதரப்பு சம்பந்தப் பட்ட விஷயம் அப்படின்னு அறிக்கை விடுறார் பொண்ணு என்னடான்னா இன்னொரு விதமா பேசறாங்க. அப்பவை பாக்காம அவசரத்துல பேசிட்டாங்க போல கவிஞர்.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் அமைச்சர் ராஜா: முறைகேடு நிரூபணமானால் ராஜினாமா செய்யத் தயார்.
கருணாநிதி: ராஜாவை சிலருக்குப் பிடிக்கவில்லை (முதல்வர் கருணாநிதி விளக்கம்)


எப்படி? உங்களுக்கு தயாநிதியை பிடிக்காமல் போனதே. அப்படியா?

கருணாநிதி: "இந்திய நாட்டின் ஒற்றுமைக்கு - ஒருமைப் பாட்டுக்கு விரோதமாக - எதுவும் பேசுவோம் - எங்களுக்கு வேண்டியது இலங்கையில் தமிழ் ஈழம் தான்" என்கிற அவர்களின் பேச்சும் எழுத்தும் எனக்குப் புரிகிறது. ஆனால் இங்குள்ள அரசியல் கட்சிகளுக்கிடையே அலைமோதும் எதிர் விமர்சனங்களையும் ஓர் அரசு; சிந்தித்துச் செயல்பட வேண்டியிருக்கிறதல்லவா? அவற்றை அலட்சியப் படுத்த முடியாதல்லவா?

அப்போ, விமர்சனங்களும் எதிர்ப்பும் இல்லாம இருந்தா, இந்தியாவுக்கு எதிரா என்ன வேணாலும் பேசலாமா? சபாஷ்! நல்ல முதல்வர். வாழ்க ஜனநாயகம்.

15 comments:

dondu(#11168674346665545885) said...

// நமது தமிழக எதிர்க்கட்சிகளின் சில தலைவர்கள் நாள்தோறும் முதல்வரின் நன்முயற்சிகள் அனைத்திற்கும்; ‘கட்டிய வீட்டிற்கு நொட்டாரம் சொல்வதுபோல’ - எதிரிக் கட்சித் தலைவர் களாகவே செயல்பட்டு ஜனநாயகத்திற்கே களங்கமும் மாசும் கற்பித்து வருவதுதான் நினைவுக்கு வரும்! அமெரிக்காவில் அப்படி; தமிழகத்தில் இப்படி!//
இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் பரவாயில்லை என்றுதான் கூற வேண்டும். காவேரி பிரச்சினை என்றால் கர்நாடகாவிலுள்ள அத்தனை கட்சிக்காரர்களும் ஒருமுனையாகச் செயலாற்றுகின்றனர். சோனியா காந்தி வீட்டு விசேஷம் என்றால் அத்வானி, வாஜ்பேயி ஆகியவர்களும் வருகின்றனர். வாழ்த்து கூறுகின்றனர்.

எம்.ஜி.ஆர் மற்றும் கருணாநிதி வந்ததிலிருந்துதான் இந்த அநாகரிகப் போக்கு தொடங்கியது. இன்னும் தொடர்கிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Madhusudhanan Ramanujam said...

//எம்.ஜி.ஆர் மற்றும் கருணாநிதி வந்ததிலிருந்துதான் இந்த அநாகரிகப் போக்கு தொடங்கியது. இன்னும் தொடர்கிறது.//

கல்வெட்டுல தான் பொறிச்சு வெக்கணும் இவங்களோட செய்கைய.

வாக்காளன் said...

துக்க்ளக் கட்டுரைய அப்படியே வரிக்கு வரி எடுத்துப்போட்டு சிலாகிப்பு..
முரசொலி கட்டுரைனா... சிகப்பு கலர்ல கமெண்ட்ஸ்.... இதுல என்ன ஜாதி பத்தி பேசுறேள்னு ஒரு கேள்வி.. நல்லா இருக்குடா உங்க நியாயம்..

மொதல் கமென்ட் எதிர்பார்த்த மாதிரி ஒருத்தர் வந்து போட்டுடார்...
அம்பிகளா, பனியனுக்குள்ளே ஒளிச்சு வையுங்க.. வெளியே நெளியப்படாது....

வாக்காளன் said...

ஏண்டா அம்பி, பரமசிவத்துக்கு பாயின்ட் எடுக்க கருணாநிதி, பா ம க, திமுக ஆளுங்க பேச்சு மட்டும் தான் கிடைக்குமா.. ஏன்? ஜெயலலிதா, அத்வானி, சூப்புரமனிசாமி பேசினதுல எல்லாம் பாய்ண்ட் எடுக்க வராதா? இல்ல அவங்க பேசுறது எல்லா பக்கா பாயின்டா??

ஒரு இடத்துல "ரெண்டு பொண்டாட்டி பத்தி வந்தப்போ, கருணாநிதி பத்தி சொல்றானெ அந்த பரமசிவம்.. " விபச்சார வழக்கில் கைதுனு செய்தி வந்தப்போ, ஏன் எதிர்கட்சி தலைவிப்பத்தி பாயின்ட் சொல்லல.. போங்கடா.. போய் பனியின் உள்ளே வெச்சிகிட்டு வேலய பாருங்க..

Madhusudhanan Ramanujam said...

//துக்க்ளக் கட்டுரைய அப்படியே வரிக்கு வரி எடுத்துப்போட்டு சிலாகிப்பு..
முரசொலி கட்டுரைனா... சிகப்பு கலர்ல கமெண்ட்ஸ்.... இதுல என்ன ஜாதி பத்தி பேசுறேள்னு ஒரு கேள்வி.. நல்லா இருக்குடா உங்க நியாயம்..//

அட புத்திசாலி... பத்திரிக்கைல வந்த விஷயங்கள் எல்லாம் சிகப்புலையும், நான் சொன்ன நீல நிறத்திலையும் இருக்கு. முழுசா படிச்சிட்டு நியாயம் பேசணும். புரியுதோ?

//அம்பிகளா, பனியனுக்குள்ளே ஒளிச்சு வையுங்க.. வெளியே நெளியப்படாது....//

சொன்ன விஷயத்துக்கும் மறுப்பு / அல்லது உங்களின் கருத்தை சொல்ல தெரியவில்லை என்றால் பேசாது இருக்கலாம் தானே. அதை விடுத்து... என்ன வாக்காளரோ இவர்! ஒரு வேளை எப்போதும் கள்ள ஓட்டுத்தான் போடுவாரோ?

வாக்காளன் said...

அடங்கொக்கா மக்கா.. என்ன எழுதறப்போ சுயநினைவுல இல்லையா நீங்க?
பத்திர்க்கைல வந்தது நீலம், நீங்க எழுதியிருக்கறது சிகப்பு. .நன்னா பாருங்க ஓய்..

கலரும் மட்டும் பிடிச்சுக்கிட்டீங்க.. ஆனால் கேட்ட விசயத்துக்கு பதில் வரல.. இது தான் உங்க தந்திரமா..

பாய்ண்ட பரமசிவம் பத்தி கேட்டதுக்கும் பதிலில்லை.. வெறும் அந்த கலர பிடிச்சு தொங்கிட்டு போய்டீங்க.. அதுவும் தப்பு..

Madhusudhanan Ramanujam said...

//பாய்ண்ட பரமசிவம் பத்தி கேட்டதுக்கும் பதிலில்லை.. வெறும் அந்த கலர பிடிச்சு தொங்கிட்டு போய்டீங்க.. அதுவும் தப்பு..//

இன்னைக்கு யார் ஆட்சியில இருக்காங்களோ அவங்க கைல அதிகாரம் இருக்கு. அந்த அதிகாரத்தை வெச்சிகிட்டு பண்ற கேலிக் கூத்தை தான் இங்கே எழுதியுள்ளேன். எனக்கு கருணாநிதியும் ஒன்றுதான், ஜெயலலிதாவும் ஒன்றுதான். என்னுடைய முந்தைய பதிவுகளை படித்திருந்தால் அது உங்களுக்குத் தெரியும்.

என்ன செய்வது? அரசன் எவ்வழி, குடிகள் அவ்வழி. நீ செய்யவில்லை என்னை கேள்வி கேட்காதே என்பது தானே கலைஞர் ஸ்டைல்! அதே போலதான் நீங்களும் பேசுகிறீர்கள். உங்களுக்கு அவரை ஆதரிக்க எவ்வளவு உரிமை உண்டோ அதே உரிமை அவரை விமர்சிக்க எனக்கும் உண்டு.

விவேதா said...

நல்ல அருமையான சிந்தனை. அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும் என்பது சாத்தியப்படுமா?

தொடர்ந்து எழுதுங்கள். உலக அரசியலை தமிழக அரசியலுடன் எழுதுவது என்பது சாதாரண காரியமில்லை. wsws.org/tamil எனும் தளத்தில் அரசியல்-பொருளாதார நிகழ்வுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அந்த ஆய்வு கட்டுரைகள் குறித்தும் எழுதங்கள். இதே நடையில் எழுதினால் படிக்கவும் சுவாரசியமாக உள்ளது.

Madhusudhanan Ramanujam said...

//wsws.org/tamil எனும் தளத்தில் அரசியல்-பொருளாதார நிகழ்வுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அந்த ஆய்வு கட்டுரைகள் குறித்தும் எழுதங்கள்.//

சுட்டி தந்தமைக்கு நன்றி. படித்துப் பார்க்கிறேன். என்னால் தெளிவாய் எழுத முடியுமெனில், எழுதுகிறேன்.

Anonymous said...

தலைவர் கலைஞர் அவர்களின் 50 ஆண்டுகாலப் பொதுவாழ்க்கையில் சாதனைகள் ஏராளம்.
இன்று தாழ்த்தப்பட்ட பிற்பட்ட சமுகம் தலை நிமிர்ந்து நிற்பதற்கு அவரது பொற்கரங்களால் போடப் பட்ட அரசானைகள் தான் காரணம்,இதை நாடறியும்,ஊர் அறியும்,உலகறியும்.


அவர் சாதரணக் குடும்பத்தில் பிறந்த ஒரே பாவத்திற்காக அவரை வசைபாடுவோர் அதிகம்.


ஆனல் அவரைத் திட்ட திட்ட அவரது சதனைகள் தொடர்கிறது.


யார் தடுத்தாலும் அவரது ஆட்சி தொடர்வதற்கு ,2011க்குப் பிறகும் bright chance.

சாதனை ஒன்றா இரண்டா!

1.ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்
2.50 ருபாய்க்கு மளிகை சாமான்
3.1.5 கோடி இல்லங்களில் வண்ணத் தொலைக்காட்சி
4.மாணவர்கள்(10th,+1,=2)மகிழ்ச்சியுடன் துவிச்சக்கர வண்டியில்
5.இலவச மின்சாரம் குடிசைகளுக்கு
6.விவாசயக் கடன் தள்ளுபடி
7.மீனவருக்கு அளப்பரிய சலுகைகள்
8.இயற்கையின் சதியால் ஏற்பட்டுள்ள மின்வெட்டை திறமையாய் சாமாளிக்கும் ஆற்றல்
9.உலக்த் தமிழர் நலன் காக்கும் பேராண்மை
10.ராஜேந்திர சோழனை நம் கண் முன்னே காட்டும் தமிழ்ப் பற்றுஇப்படி சொல்லி கொண்டே போகலாம்

கல்வித்துறை,சமுகநலத்துறை,போக்குவரத்துத்துறை,சுகாரத்துறை,வரி வசூல் துறை,சாலை பராமரிப்புத்துறை, இன்னும் பிற அரசுத்துறைகளும்,பிற தனியார் துறைகளும்
தங்களது பொற்காலத்தில் இருப்பதை பார்க்கும் போது தமிழன்னை பேரானந்தம்,பெருமகிழ்ச்சி அடைகிறாள்

வாழ்க கலைஞர்
வெல்க தமிழர்
ஓங்குக கலைஞர் புகழ்

இளஞ்செழியன்

Madhusudhanan Ramanujam said...

//யார் தடுத்தாலும் அவரது ஆட்சி தொடர்வதற்கு ,2011க்குப் பிறகும் bright chance.//

ஐயா இளஞ்செழியரே,
உங்களுக்கு இருக்கும் இந்த நம்பிக்கை கலஞருக்கு இருக்கான்னு கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்களேன். உங்க காமெடிக்கு அளவே இல்லாம போச்சு.

Anonymous said...

// Madhusudhanan Ramanujam said...
//யார் தடுத்தாலும் அவரது ஆட்சி தொடர்வதற்கு ,2011க்குப் பிறகும் bright chance.//

1.பாட்டாளிமக்கள் கட்சி மீண்டும் கழகக் கூட்டணியில்
2.விஜயகாந்த் அவர்கள் அ.தி,மு.கா.வாக்கு வங்கியை பிரிப்பதாக உள்ள தகவல்
3.கழக அரசின் நல்லாட்சியால் அதனுடைய வாக்கு வங்கி கூடியுள்ளதாக
பரவலான பேசப்படும் பேச்சு
4.தென் மாவாட்டங்களில் அதிமுக வாக்கு வங்கி பலவீனப்பட்டுள்ளதாக சொல்லப்படும் செய்தி
5.காங்கிரஸ் உடன் சுமுகமான உறவு
6.அரசின் நலத் திட்டங்களால் மக்க்ளிடம் உள்ள மன நிறைவு
7.மூன்றாவது அணி திமுக வின் எதிர்ப்பு வாக்கு வங்கியை பலவீனப்படுத்த உள்ள வாய்ப்பு -வரும் பத்திரிக்கை செய்திகள்
8.பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தல் நடக்கும் போதெல்லாம் தி,மு.க வூக்கே எப்போதும் வெற்றி முகாம்.
9.காலம் பதில் சொல்லும்

தமிழ்க மக்கள் இனியொருமுறை ஆதிக்க சக்திகளிடம் ஏமாறமாட்டார்கள்

சமதர்ம பூமியில்
சாமான்யனின்
வெற்றிப்பேரிகை தொடரும்.

பொற்கால ஆட்சியின் பொன்மனத் தலைவர் திரட்டும் இலங்கை தமிழர் பாதுகாப்பு நிதிக்கு தராளாமாய் நிதி அளிப்பீர் நண்பர்களே.

Anonymous said...

//மதுசூதன் ராமானுஜத்தின் மனசாட்சிக்கு சில கேள்விகள்
Posted by அருண்மொழி at 11/08/2008 07:27:00 PM | Saturday, November 8, 2008
மதுசூதன் ராமானுஜத்தின் மனசாட்சிக்கு 9 நறுக் கேள்விகளை கேட்டு பல நாட்களாகியும் இன்னமும் பதில் இல்லை

இப்பொழுது அவருக்கு மேலும் ஒரு கேள்வி

இலங்கையில் போர் நிறுத்தத்தை நீங்கள் ஆதரிக்கிறீர்களா, இல்லையா//

அருண்மொழி avrkaLin kELvikku pathlenne M.raamanujare

Anonymous said...

//உங்களுக்கு இருக்கும் இந்த நம்பிக்கை கலஞருக்கு இருக்கான்னு கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்களேன்//


தமிழினத்தலைவர் கலைஞர் அவ்ர்களின் சாதனை பாரீர்
//கேள்வி:

தி.மு.க. ஆட்சியின் மிக முக்கியமான சாதனைகள் என்ன?

கலைஞர்:

அண்ணா முதல்வராக இருந்த போது சென்னை ராஜ்யம் என்ற பெயரை விடுத்து தமிழ் நாடு என்று பெயர் சூட்டியது ஒரு பெருஞ்சாதனை!
அண்ணா காலத்தில்தான் சுயமரியாதைத் திருமணங்கள் சட்டப்படி செல்லுபடியாக்கப்பட்டன.
அண்ணா காலத்தில்தான் கழக ஆட்சியில் இந்தி மொழி ஆதிக்கம் அகற்றப்படவும் - தமிழ், ஆங்கிலம் என்ற இரு மொழித்திட்டம் அறிவிக்கப்படவுமான நிலை.

அண்ணா மறைவுக்குப் பின் நான் முதலமைச்சராகப் பொறுப்பேற்று ஆட்சி நடத்திடும் இந்தப் பதினாறு ஆண்டு காலத்தில்;

1. மனிதனை வைத்து மனிதன் இழுத்த கை ரிக்ஷாக்களை ஒழித்துவிட்டு, அவற்றுக்கு மாற்றாக அந்தத் தொழிலாளிகளுக்கு இலவச சைக்கிள் ரிக்ஷா வழங்கப்பட்ட திட்டம்.

2. பட்டிதொட்டி முதல் பட்டினக்கரை வரையில் பார்வை இழந்தோர்க்கு இலவசக் கண்ணொளி வழங்கும் திட்டம்.

3. பிச்சைக்காரர் மறுவாழ்வுத் திட்டம்.

4. விவசாயிகளுக்கு - நெசவாளர்களுக்கு - இலவச மின்சாரத் திட்டம்.

5. பெண்களுக்கு சொத்துரிமைச் சட்டம் - வேலையில் 30 சதவிகித ஒதுக்கீடு.

6. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகச் சட்டம்.

7. குடிசை மாற்று வாரியம்.

8. குடிநீர் வாரியம்.

9. ஆதி திராவிடர்க்கு இந்தியாவிலேயே முன் மாதிரியான இலவச வீடுகள் வழங்கும் திட்டம்.

10. மலம் சுமக்கும் துப்புரவுத் தொழிலாளர் மறுவாழ்வுக்கு மாற்றுத் திட்டம்.

11. பேருந்துகள் நாட்டுடைமையாக்கப்பட்டு - அரசு போக்குவரத்துக் கழகங்கள் அமைப்பு; பேருந்துகள் கிராமங்களுக்கெல்லாம் செல்ல வழிவகை காணப் பட்டது.

12. உடல் ஊனமுற்றோருக்கு உதவி வழங்கும் பல்வேறு திட்டங்கள்.

13. விவசாயிகளுக்கு 7000 கோடி ரூபாய் கடன் ரத்து திட்டம் - வட்டி 9 சதவிகிதத்திலிருந்து 4 சதவிகிதமாக் குறைப்பு.

14. கிலோ அரிசி இரண்டு ரூபாய் என்றாக்கி, தற்போது ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்த்
திட்டம்.

15. விலைவாசியைக் கட்டுப்படுத்திட குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருட்கள் - 50 ரூபாய்க்கு 75 ரூபாய் பெறுமானமுள்ள மளிகைப் பொருள்கள்.

16. காமராஜர் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாள் என்று சட்டம் - மாணவர்களின் கல்விக் கட்டணங்கள் அனைத்தும் ரத்து.

17. சத்துணவில் வாரம் மூன்று முட்டைகள் - வாழைப்பழம் வழங்கும் திட்டம்.

18. புதிய புதிய பல்கலைக்கழகங்கள் - பொறியியல் கல்லூரிகள் - மருத்துவக்கல்லூரிகள் - கலை அறிவியல் கல்லூரிகள்.

19. பள்ளி மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் இலவச பேருந்து பாஸ்.

20. ஏழை மகளிருக்கு முதுகலைப் பட்டப் படிப்பு வரை இலவசக் கல்வி.

21. சத்துணவு ஊழியர்களுக்கும் காலமுறை ஊதியம்.

22. பள்ளிகளில் தமிழ் கட்டாயப் பாடம் எனச் சட்டம்.

23. பரிதிமாற் கலைஞரின் கனவு நனவாகி தமிழ் செம்மொழி என அறிவிப்பு.

24. தைத் திங்கள் முதல் நாள் - தமிழ்ப் புத்தாண்டு எனச் சட்டம்.

25. மே தினத்திற்கு ஊதியத்தோடு கூடிய விடுமுறை.

26. ஏழைப் பெண்களின் திருமண உதவிக்கு 20 ஆயிரம் ரூபாய் நிதி உதவி.

27. கர்ப்பிணிப் பெண்களுக்கு 6000 ரூபாய் நிதி உதவி

28. அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 25 நல வாரியங்கள்.

29. 50 வயதாகியும் திருமணம் ஆகாத ஏழை மகளிருக்கு மாதம் 400 ரூபாய் வழங்கும் திட்டம்.

30. மகளிர் சுய உதவிக் குழுக்கள் - சுழல் நிதி உதவிகள்.

31. அதைப் போலவே இளைஞர்களுக்கும், விவசாயிகளுக்கும் சுய உதவிக் குழுக்கள்.

32. தொலைக் காட்சிப் பெட்டிகள் இல்லா வீடுகளுக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள்.

33. எரிவாயு இணைப்புடன் கூடிய இலவச எரிவாயு அடுப்புகள்.

34. பெரியார் நினைவு சமத்துவபுரத் திட்டம்.

35. அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்.

36. நமக்கு நாமே திட்டம்.

37. ராமநாதபுரம், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள்.

38. திருச்சியில் உய்யகொண்டான் - சேலத்தில் திருமணிமுத்தாறு சீரமைப்புத் திட்டங்கள்.
39. மாநிலத்திற்குள் நதிகளை இணைக்கும் மாபெரும் திட்டம்.

40. நகராட்சிகள் அனைத்திலும் பாதாளச் சாக்கடைத் திட்டம்.

41. சென்னை மாநகருக்கு மெட்ரோ ரயில் திட்டம்.

42. சென்னை மாநகரில் விளம்பரப் பலகைகளை அகற்றி சிங்காரச் சென்னையாக்கிய திட்டம்.

43. கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம்.

44. கட்டணத்தை உயர்த்தாமல் பத்தாயிரம் புதிய பேருந்துகள்.

45. புதிய சட்டமன்ற வளாகம் - தலைமைச் செயலகம்.

46. உலகத் தரத்தில் அரசு நவீன நூலகம்.

47. உழவர் சந்தைத் திட்டம்.

48. வேலை நியமனத் தடைச் சட்டம் நீக்கப்பட்டு அரசுத் துறைகளில் புதிதாக 3 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு.

50. 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய காவலர்கள் நியமனம்.

51. இந்தியாவிலேயே முன்னோடியாக மூன்று காவல் ஆணையங்கள் (போலீஸ் கமிஷன்கள்).

52. வருமுன் காப்போம் திட்டம்.

53. ஏழைச் சிறார் இதய நோய்த்தீர்க்கும் திட்டம்.

54. நிலமற்ற ஏழைகளுக்கு இலவச நிலம்.;

55. புறம்போக்கு நிலங்களில் வீடு கட்டி வாழ்வோருக்கு வீட்டு மனைப்பட்டா.

56. இஸ்லாமியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு.

57. கட்டாய மத மாற்றத் தடைச் சட்டம் ரத்து.

58. மிகப் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு.

59. பழங்குடியினருக்கு புதிதாக ஒரு சதவிகித இட ஒதுக்கீடு.

60. அரசு அலுவலர்களுக்கு மத்திய அரசு அலுவலர்களுக்கு இணையான ஊதியம்.

61. அரசு அலுவலர் இறந்தால் குடும்பப் பாதுகாப்பு நிதி.

62. விடுதலை வீரர்களுக்கும், தியாகிகளுக்கும் நினைவகங்கள் - குடும்பங்களுக்கு நிதி உதவிகள்.

63. சென்னையில் வள்ளுவர் கோட்டமும், குமரி முனையில் 133 அடி உயரத்தில் வள்ளுவருக்கு சிலை.


---------------------------- "முரசொலி" 8.11.2008

-------------------------------

மறுக்க முடிந்தால் மறுக்கவும் மதுசூதனார் அவர்களே


அறிஞர் அண்ணா காட்டிய வழியில் மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என ஓய்வாரியாச் சூரியனாய்,ஓங்கு புகழ் காவலானாய் ,அன்னைத் தமிழை உலகரங்கில் ஒரு உன்னத் இடத்தில் வைத்து அழகு பார்க்கும் வாழும் வள்ளுவனாம்,நவீன தொலகாப்பியனாம்,கரிகால் பெருவழத்தானம்,மனுநிதிச் சோழனின் ம்றுபிறவியாம் கலைஞர் அவர்களின் நல் ஆட்சி தொடரும் .நாடும் நாமும் நலாமோடு வாழ்வோம்.

Madhusudhanan Ramanujam said...

//மறுக்க முடிந்தால் மறுக்கவும் மதுசூதனார் அவர்களே//

கருணாநிதி மட்டுமல்ல, இந்தியாவில் கிட்டத்தட்ட அனைத்து அரசியல்வாதிகளும் தங்கள் அன்றாட வேலைகளைக் கூட சாதனையாகத் தான் சித்தரிக்கின்றனர். நீங்கள் பட்டியலிட்ட விஷயங்களில் பெரும்பாலானவை ஒரு அரசின் கடமை. அதனை சாதனை என்று கூறிக் கொள்வது தற்பெருமை அடித்துக் கொள்வதைத் தவிர வேறென்னவாக இருக்க முடியும்? குடிநீர் வழங்கினோம், கால்வாய் அமைத்தல், மின்சார வினியோகம், பிற்படுத்தப் பட்டோருக்கான முன்னேற்ற திட்டங்கள் இவை எல்லாம் ஒரு அரசாங்கத்தின் கடமைகள் இல்லாது வேறென்னவாக அமைய முடியும்? கேள்வி கேட்க்கும் முன்னர் கொஞ்சம் யோசியுங்கள் ஐயா. கருணாநிதிதான் இப்படி என்றால் படித்த பண்பான உங்களைப் போன்றவர்களுமா?